Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொடரும் ஊடக தீவிரவாதம் - இந்திய ஊடகங்கள் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | June 11, 2013 | , , , , , ,

இந்திய ஊடகங்கள் எப்படியெல்லாம் காற்றைக் கல்லாக்கி, அதற்கு மாலை போட்டு திருவிழா கொண்டாடுவதில் வல்லவர்கள் என்பது உலகறிந்த உண்மை, ஊழல், லஞ்சம் இவைகளை எதிர்த்து குரல் கொடுக்கிறோம் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள், போலீஸ் விசாரனை நடந்து வரும் சில நிமிடங்களில் கிடைக்கும் செய்திகள் (according to our police sources என்று சொல்லும் செய்திகள்) எப்படி அவர்களுக்கு கிடைக்கிறது? என்பதில் நிச்சயம் நமக்கு சந்தேகம் இருக்கிறது என்பதைச் சென்ற பதிவில் கூறிப்பிட்டிருந்தோம். இலவசமாக இந்த மீடியாக்களில் sourceகளாக இருக்க நம்ம நாட்டு போலீஸ்காரர்கள் ஒன்னும் முட்டாள்கள் அல்ல என்பதை எடுத்துச் சொன்னோம் http://adirainirubar.blogspot.ae/2013/05/blog-post_3762.html.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக இந்திய செய்தி ஊடகங்கள் வேறு செய்திகளை பற்றி அக்கரை கொள்ளாமல், பொய்களையும், யூகங்களையும் மூலதனமாகக் கொண்டு செயல்படும் 24 மணிநேர வடநாட்டு ஆங்கில செய்தி ஊடகங்கள் நக்டைல் கொடிகட்டி பறக்கின்றன. தமிழ்நாட்டச் சேர்ந்த சீனிவாசனின் மருமகன் என்ற ஒரே காரணத்திற்காக மெய்யப்பனையும், மாமனார் சீனிவாசனையும் பற்றிய பரபரப்பு செய்திகள் நம்முடைய காதுகளைக் கிழிக்கிறது.

கடந்த இரண்டு வாரமாக இந்திய நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் நடந்து வருகிறது, இதில் அக்கரை செலுத்த வக்கில்லாத இந்திய ஊடகங்கள், கிரிக்கெட் வியாபாரிகளின் பிரச்சினை பற்றியே கடந்த இரு வாரமாக பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அத்துணை முன்னணி(!!!?) இந்திய ஊடகக்காரர்களுக்கும் ஆறாவது அறிவு என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

இங்கே பதிக்கப்பட்டிருக்கும் காணொளியைப் பாருங்கள், TIMES NOW என்ற ஆங்கிலச் சேனலில் நடக்கும் விவாதங்களைப் பாருங்கள். நாயை வைத்து விபச்சாரச் செய்தி சொல்லும் இந்திய ஊடகக்காரர்களின் வழியை பின்பற்றுபவர், நாயைப் போன்று குரைக்கும் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் தான் Arnaub goswaami. தயைகூர்ந்து 1:25 மணித்துளியை பாருங்கள் இவன் எப்படி why why why என்று நாயை மிஞ்சும் விதமாக கத்துகிறான் என்று பாருங்கள்.பொய் வழக்கில் ஜோடிக்கப்பட்டு ஒரு முஸ்லீமை போலீஸ் கைது செய்தால் அதை உலக அளவிலான தீவிரவாத செயல் புரிவோருடன் ஒப்பிட்டு வசைபாடுவார்கள் இந்த இந்திய ஊடக விபச்சார தீவிரவாதிகள். இது போன்ற சந்தர்பங்களின் இந்த அர்னாப் கோஸ்வாமியின் ஆட்டமிருக்கே, அது நடுநிலையனவர்களையும் கோபமடையச் செய்யும்.

கிரிக்கெட் ஊழல் பற்றி பரபரப்புடன் பேசும் செய்தி ஊடகங்கள், மினி உலகக் கோப்பை போட்டிகளை நேரலை செய்யும் ஸ்டார் ஸ்போட்ஸ் விளம்பரத்தை தங்களின் சேனல்களில் போடுவது இவர்கள் காசுக்காக மலம் தின்னும் இரட்டை நாக்குடையவர்கள் என்பது தெளிவாகிறது.


காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடந்து வரும் இமாலய ஊழல்களைப் பற்றி பேசிய இந்திய ஊடகங்கள், கங்கிரஸின் தற்போதைய மீடியா விளம்பரங்களைத் தங்களின் செய்தி ஊடகங்களில் விளம்பரமாக போட்டு, காசு கிடைக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளுக்கு ஊடக விபச்சாரம் செய்வோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.


மாதுபானங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடுவதற்கு இந்தியாவில் தடையுள்ளது, ஆனால் Royal stag, kingfisher போன்றவைகள் மாதுபானங்களின் விளம்பரங்கள் அவைகளின் பினாமி பிராண்டுகளை வைத்து (kingfisher water, royal stag cassette, CD bag) ஊடகங்கள் விளம்பரப்படுத்தப்படுகிறதே. காசுக்காக குடிகாரர்களை குளிர வைத்து ஊடக விபச்சாரம் செய்வோம் என்பதை ஒவ்வொரு நாளும் நிருபித்து வருகிறார்கள்.


பெண்களுக்கு பாதுகாப்பில்லை, இரவு நேரங்களில் பெண்கள் தனியாக சொல்ல முடியவில்லை, ஒரே கற்பழிப்பு என்று ஒப்பாரி ஒரு பக்கம். இரவு 12 மணிக்கெல்லாம் night out என்ற பெயரில் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு செய்தி ஊடகமும், பெண்களில் ஆபாச நடனங்களையும், இரவு விடுதிகளில் நடக்கும் அனாச்சாரங்களையும் காட்டி ஆண்களைத் தவறு செய்ய தூண்டுவது மற்றொரு பக்கம் என்று தங்களுடய ஊடக விபச்சார தீவிரவாதத்தைச் செய்து வருபவர்களை எவ்வளவு அசிங்கமாக திட்ட வேண்டும் என்று நடுநிலையானவர்களுக்கு தோன்றும் என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது.


சமூகப் பொறுபில்லாத இந்த ஊடக தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும்...

அதிரைநிருபர் பதிப்பகம்

8 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இந்திய ஊடகங்கள் பெரும்பாலும் மக்களுக்கு எதிரான பங்கையே ஆற்றுகின்றன - மார்கண்டேய கட்ஜூ

இந்நிலையில், ஊடகங்களுக்கு கடிவாளமிடும் "பிரஸ் கவுன்சில்' தலைவரே இத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருப்பதை கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், அச்சு ஊடகத்தில் தமிழிலும் ('தினகரன்' நாளேடு தவிர) ஆங்கிலத்திலும் வெளிவராத நிலையில், இந்நேர்காணல்

1.ஊடகங்கள், அக்கறையின்மை காரணமாகவோ, திட்டமிட்டோ ஒன்றுமறியா மக்களின் நன்மதிப்பில் களங்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆம். ஒரு செய்தியை பரபரப்பாக்குவதற்காக, சரியான விசாரணையின்றி நீங்கள் ஒன்றை வெளியிட நினைக்கிறீர்கள். இவற்றையெல்லாம் வெளியிடுவதற்கு முன் சரியான விசாரணையும் ஆய்வும் நடத்தப்பட வேண்டும்.

2.ஆக, ஊடகங்கள் எவ்வித ஆய்வையும் விசாரணையும் நடத்துவதில்லை என்கிறீர்கள்?

சில நேரங்களில் செய்யலாம். ஆனால், சில நேரங்களில் செய்வதில்லை. இந்நிகழ்வில் அவர்கள் செய்யவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

3.செய்தித் தொலைக்காட்சிகள் குறித்து கொஞ்சம் கவனம் செலுத்துவோம். தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களின் தரம் குறித்து பெரிதும் அக்கறை உள்ளது. அந்த விவாதங்களை நீங்கள் பாராட்டுகிறீர்களா அல்லது விமர்சிக்கிறீர்களா?

பெரும்பாலும் இந்த விவாதங்கள் மேலோட்டமாகவே உள்ளன. முதன்மையாக, எவ்விதக் கட்டுப்பாடும் அதில் இல்லை. விவாதத்தில் 4 பேர் பங்கேற்கிறார்கள் என்றால், அனைவரும் ஒரே நேரத்தில் பேசுகின்றனர். இதுதான் கட்டுப்பாடுள்ள மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையா? நீங்கள் பேசும் போது, நான் ஒரு போதும் குறுக்கிட மாட்டேன். ஆனால், நான் பேசும்போது நீங்கள் ஏன் குறுக்கிட வேண்டும்?

4.நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மரியாதையற்ற முறையில் குறுக்கிடுகிறார்கள் என நினைக்கிறீர்களா?

நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அல்லர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அந்த 4 பேர். ஒருவர் பேசும்போது, வேறொருவரும் அதே நேரத்தில் பேசத் தொடங்குகிறார். நீங்கள் யார் பேசுவதை கேட்பீர்கள்?

5.தொலைக்காட்சிகளில் வரும் விவாதங்கள் சூட்டை கிளப்புகின்றனவே ஒழிய வெளிச்சத்தைத் தருவதில்லை என்று மக்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உண்மையில் அவர்களின் பணி வெளிச்சத்தைத் தருவது.

இது பெரும்பாலும் சரிதான். இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிச்சத்தைத் தரவேண்டும். மக்களுக்கு அறிவூட்ட வேண்டும். அறிவுபூர்வமான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். வெறுமனே கூச்சலிடுவது அல்ல.

மேலும் தகவல் அறிய http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17712&Itemid=139

Unknown said...

சரியான நேரத்தில் தேவையான பதிப்பு
ஊடகத்துறை உள்ள பெரும்பாலான நிர்வாகங்கள் உயர் சாதியினாரால் நடத்த படுகின்றது.இவர்கள் பரபரப்புக்காக செய்திகளை மிகைப்படுத்தி வெளியீடுகிறார்கள்.ஜனநாயத்தின் நாலாவது தூண் என வர்ணிக்கப்பட்ட ஊடகம் இன்று பணம்,பாலியல் தூண்டுதல்,ஊழல் மற்றும் அடக்குமுறை போன்றவைகளால் செல்லரித்த தூணாகவே காட்சியளிகிறது.சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே பல ஊடங்கங்கள் செயல்படுகிறது என்பது தான் வேதனையின் உச்சம்.இன்றைக்கு மோடியை பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மோடி செய்த கொடூரங்கள்,படுகொலைகள்,அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயத்திற்கு அச்சுறுத்திய செயல்களை கண்டிக்க தவறிவிட்டது.ஊடகத்தின் செயல்பாடு விபச்சாரத்தை விட மோஷம்
----------------
இம்ரான்.M.யூஸுப்

Anonymous said...

ஊடகங்கள் நல்லதுக்கும் உதவுது,கெட்டதுக்கும் உதவுது ஊடகங்கள் மூலம் பல பல செய்திகளை பரப்புகின்றனர். ஒரு செய்தியை வெளிப்படுத்து முன் ஊடகங்கள் நன்கு ஆராய்ந்து,அலசி பார்த்து செய்தியை வெளியிடவும்.

sabeer.abushahruk said...

ஊடகமே ஒரு பித்தலாட்டம் என்றாகிப்போய்விட்டது.
நம்பகத்தன்மை பூஜ்ய சதவிகிதம் என்பதே நிலைபாடு.

காட்சிவழி ஊடகத்தால் மட்டுமே வெகுஜனங்களைச் சென்றடைய முடியும் என்பது சரியோ தவறோ எதார்த்தம் என்றாகிவிட்டபடியால், ஷாநவாஸ் போன்றவர்கள் நிறைய வரவேண்டும். சுவாரஸ்யமான ஆக்கங்களை உருவாக்கி நல்லக் கருத்துகளை மக்களிடம் திணிக்க வேண்டும்.

இல்லையேல், இந்த ஆதங்க ஆக்கம் இன்னும் ஆயிரமாயிரம் அத்தியாயங்கள் நீள்வதற்கான ஊடக தீவிரவாதமும் ஊடக விபச்சாரமும் நடந்துகொண்டேதான் இருக்கும்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//ஊடகமே ஒரு பித்தலாட்டம் என்றாகிப்போய்விட்டது.
நம்பகத்தன்மை பூஜ்ய சதவிகிதம் என்பதே நிலைபாடு.//


இறைவனுக்கு பயந்து நடத்தப்படுகின்ற ஒரு சில ஊடகங்களைத்தவிர.

அப்துல்மாலிக் said...

தன்னோட சேனலின் GRP RATE எகிர வேண்டும் எனபதற்காக என்னவேனும்னாலும் செய்வாங்க என்பதை நேற்று இன்றா பார்த்துக்கிட்டு வருகிறோம்?

சின்ன விசயத்தை பரபரப்பாக்குவதில் மீடியாவை விட்டால் வேறு நாதி யார் இருக்கா...

Ebrahim Ansari said...

பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பயனில்லே -அதை
மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆள் இல்லே.

- என்பது நாற்பது வருடங்களுக்கு முன்பே முழங்கியது இன்றும் தீவிரமாக வளர்ந்து விவாதம் அப்படி இப்படி என்று இருக்கிறது. ஊட்ட வேண்டிய தீமையை தேன் கலந்து ஊட்டுகிறார்கள். கவனப் படுத்த வேண்டிய பலவற்றின் மேல வைக்கோலை அள்ளிப் போட்டு மூடிவிடுகிரார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு