Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை சகோதரர்களின் சங்கமம் ! - நோன்புப் பெருநாள் அன்று... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2011 | , , ,


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் ! எதிர்வரும் நோன்புப் பெருநாள் அன்று துபை தேரா ஈத் முஸல்லாஹ் மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலிருக்கும் அதிரை சகோதரகள் சங்கமிக்கும் ஒர் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரை சகோதரர்கள் மட்டுமே ஏரத்தாழ 3000 பேருக்கும் அதிகமானோர் இருக்கக்கூடும். நமதூரைவிட சிறிய சிறிய ஊர்களின் மக்களெல்லாம் ஸஹர் /இஃப்தார் நிகழ்சிகள் மூலம் ஒன்று கூடுகின்றனர். இதுவரைக்கும் அதிரை சகோதரகளுக்குள் இத்தகைய ஒருமித்த முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2011) முதல் இதற்கான முயற்சியை நமதூர் தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். ஊர்மக்களை ஒன்றிணைக்கும் இந்த உன்னத முயற்சி வெற்றிபெற உங்கள் வருகையையும் உறுதி செய்வதோடு அதிரை நண்பர்களையும் அழைத்து வரவும்.

பிற அமீரகங்களிலிருந்து பெருநாளன்று துபைக்கு தொழுவதற்கு வரும் அதிரை சகோதரர்கள் தவறாமல் இந்த அரிய சந்திப்பில் கலந்து கொண்டு தமது உறவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டு பரஸ்பரம் முஸாபஹா செய்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

துபாய்-டேரா பகுதியில் பெருநாள் தொழுகை நடைபெறும் ஈத் முஸல்லா மைதானத்திற்கு வருவதற்கான வரைபடமும், மைதானத்தின் வலதுபுறம் பரஹாரோட்டில் சகோதரர்கள் கூடுமிடமும் இணைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகை முடிந்து அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் இந்த நல்ல சந்திப்பு நிகழ்வு நிறைவுறும் என்பதால் வேறு பள்ளிகளில் பெருநாள் தொழுதவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.


குறுகியகால அவகாசம் மட்டுமே இருப்பதால் இந்ததகவலை அனைத்து BLOG, FACEBOOK மற்றும் மின்னாடல்கள் தொடர்புகளுக்கும் அனுப்பி வைக்கவும் வேண்டப்படுகிறார்கள். இன்ஷா அல்லாஹ் இந்த சந்திப்பை காணொளி மற்றும் (வாய்ப்பிருந்தால்) நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் : Farook Ibrahim

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரை பைத்துல்மால் போல வேற்றுமைகளை களைந்து சாதிப்பதையே நோக்கமாகக் கருதி அமீரகத்து அதிரையர்கள் அனைவரும் ஒன்று கூடுவீர்.
அனைத்திலும் அதிரையர்கள் ஒன்று கூடுவது அமீரகத்தில் துவங்கட்டும்.
வாய்ப்பை பயன்படுத்தி பல மனங்கள் இணைந்து இன்புற வாழ்த்துக்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர்களே! நல்ல ஒரு முயற்சி.இதைதான் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும்.விரும்புகிறார்கள்.ஈத் காவில் சங்கமம் என்ற கலவையை கொண்டு.பிரிந்து கிடக்கும் மனித மனங்களை இணைக்க ஒற்றுமை என்ற பாலத்தை பலமாக கட்டுவதற்கு பொன்னான மாதத்தில் கலங்கமில்லா கடைசி பத்து நாட்களில் கண்கள் கலங்க இறைவனிடத்தில்.இரு கை ஏந்துவோமாக.

நட்புடன் ஜமால் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் ...

அப்துல்மாலிக் said...

இன்ஷா அல்லாஹ், சந்திப்போம்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு