Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிப்பிக்குள் சூரியன் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2016 | , , , , , ,


கடலில்  அலைகள்  மிதக்கின்றன !
சிப்பிகளும்  கனவுகளோடு !
மாபெரும் கனவுகளோடு
எட்டும்  என நம்பிக்கையோடு மிதக்கின்றன !

***                ****               ***
கடல் உள்ளிருந்து  சூரியனை
நேசிக்கும்  சிப்பிகளுக்கு
எப்படியாயினும்  சூரியனை
கருவாய் கொள்ள
கோடி ஆசைகள் !

****              ****            ******
எப்படி  நடக்கும்  எனத்தெரியாது !
எந்த  வியுகமுமில்லை !
எப்படி சூரியனை  கருவாய் கொள்ளவது ?!
நம்பிக்கை மட்டுமே ஒற்றைப்பிடி !

******          *******        ***********
முதல் இலக்கு கடல்கறைக்கு !
நகர்தல்  தொடங்கின !
அலைகள்  மேல்  மிதந்தன !
அலை அடித்து ! !
கறைக்கு  வாசம் !
முதல் வெற்றி !

****       *****   ********
இருப்பதோ  ஒரு சூரியன் !
அதை கருவாய் கொள்ள
ஆயிரம்மாயிரம்  சிப்பிகள் !
ஆனாலும்  கோடி  நம்பிக்கைகள் !

*****        *****      *******
சந்தேக ஓலமிட்ட  சில
சிப்பிகள்  மீண்டும்
நகர்ந்தன  கடல் நோக்கி !
திடமாய்  நின்றவைகள் மட்டும்
கனவுகளை  மீண்டும்  மீண்டும்
புதுபித்து மீட்டிக்கொண்டிருந்தன !

*****         ******     *******
எல்லாக் காலப்பருவமும்
கடந்துப் போயின !
மழைக்காலப்  பருவத்தை  தவிர!
மாற்றங்கள்  நிகழவில்லை !
கனவுகளும் தடுமாறத்  தொடங்கின !

*****       ******       ********
அந்தப்பொழுது  ஒரு மாலை !
சூரியன்  மறையும்  பொழுது !
சிப்பிகள்  கிழக்கிலும் !
சூரியன் மேற்கிலும் !
சூரியனைக்  கருவாய்  கொள்ளும்
கனவு  முழுவதுமாய்  கரைய
தொடங்கிய  கணத்தில்
கிழக்கிற்கும் மேற்கிற்கும்
நடுவில்  மழை !!!!!!!!!!

*****      ******        ********
மழைத்  துளிகளில்
ஒற்றை  சூரியன்
ஆயிரமாயிரம்  சூரியனானது !
ஒவ்வொரு  மழைத்துளியும்
சூரியன் பிம்பம்மானது !
ஆனந்த  கொண்டாட்டம்
சிப்பிகளுக்கு !!
ஆவல்  தீர ஆயிரமாயிரம்
சிப்பிகள்  சூரியனை
கருவாய்  கொண்டது !!!!!!!!

&&&&&&      &&&&    &&&&
அந்தோ பரிதாபம் !
இந்த  உலகின்  கனவுகளும்
இயற்கையின்  நிஜமும்
வேறு வேறு என
நெற்றிலடித்து
  பூமியும் ,சூரியனும்
தங்களின் அடுத்தச்
சுற்றை  ஆரம்பிக்கத்  தொடங்கியது !!!!

----------------
ஹர்மிஸ்

7 Responses So Far:

crown said...

கடலில் அலைகள் மிதக்கின்றன !
சிப்பிகளும் கனவுகளோடு !
மாபெரும் கனவுகளோடு
எட்டும் என நம்பிக்கையோடு மிதக்கின்றன !
--------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.சிற்பியின் கற்பனையில் கற்பாரையும் அழகு சிற்பமாய் போகும்,இந்த கற்பனை செய்யும் கவிதை சிற்பிகுள் எழுந்த சிந்தனை சிப்பிக்கு சூரியன் கொண்டு கரு கொள்ள இங்கே ஆரம்பமே கவிதை முத்தாய் சொலிக்க ஆரம்பித்துவிட்டது,இது தமிழின் கழுத்தில் அணிய பட்ட ஆரம்!

crown said...

சிப்பிக்கு என்னே மிதப்பு? ! ஆனால் நடக்கும் என்கிற நம்பிக்கை சிறப்பு!

crown said...

எப்படி நடக்கும் எனத்தெரியாது !
எந்த வியுகமுமில்லை !
எப்படி சூரியனை கருவாய் கொள்ளவது ?!
நம்பிக்கை மட்டுமே ஒற்றைப்பிடி !
---------------------------------------------
ஒற்றைப்பிடியில் ஓராயிரம் கதிர்கள்!ஒவ்வொரு கதிரும் ஒவ்வொரு துளிகள்! ஒருத்துளியே கருவின் மூலம்! அதுதான் நம்பிக்கை கீற்று! பிரகாசமான வாழ்கைத்தொடக்கம்!

crown said...

சந்தேக ஓலமிட்ட சில
சிப்பிகள் மீண்டும்
நகர்ந்தன கடல் நோக்கி !
திடமாய் நின்றவைகள் மட்டும்
கனவுகளை மீண்டும் மீண்டும்
புதுபித்து மீட்டிக்கொண்டிருந்தன !
-------------------------------------
கடல் போல் பெரும் கனவு நாம் வாழ்வில் வழக்கு! இங்கே கடலில் ஒரு முத்து(கரு)பெறு(ரு)ம் கனவு கவிதை அழகியல் சிறப்பு!உந்தித்தள்ளும் கனவுகள் மட்டுமே நம்மை முன்னே உந்தித்தள்ளும்!

crown said...

அந்தோ பரிதாபம் !
இந்த உலகின் கனவுகளும்
இயற்கையின் நிஜமும்
வேறு வேறு என
நெற்றிலடித்து
பூமியும் ,சூரியனும்
தங்களின் அடுத்தச்
சுற்றை ஆரம்பிக்கத் தொடங்கியது
--------------------------------------------
நெற்றியில் அடித்து சொல்லும் உண்மை என்றாகும் தலைசுற்றி கிருகிருக்கவில்லை காரணம் உன்மையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று சொன்ன இயற்கையின் பாடமும்,அந்த இயற்கைவைத்து இயற்றபட்ட கவிதையும் நம்மை தாங்கிப்பிடிக்கின்றன! வெகு நாட்களுக்குப்பிறகு வெண்பொங்கள் சாப்பிட்ட சுவை! அடிக்கடி இப்படி ஏதாவது ஒரு சுவை படைத்தால் இனிமை,இளமை,கொஞ்சம் தம்மையே புதுப்பித்துக்கொள்ளும்!.

அதிரை.மெய்சா said...

தாங்களின் மாறுபட்ட சிந்தனையில் சிற்பிக்குள் சூரியனை அடைபட வைத்துவிட்டீர்கள். அருமை வாழ்த்துக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு