அதிரைநிருபரில் தொடர்ந்து வெளிவரும் சிறுவர்களுக்கான காணொளி அணிவகுப்பில், அதிரைச் சிறார்களின் தனித் திறமைகளை வெளிக் கொணர்வதில் மகிழ்வடைகிறோம்.
சிறார்களின் திறமைகள் தொலைக்காட்சியிலும், சீரழிக்கும் சினிமாக்களிலும் சிதறடிக்கப்படுவதை கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம், அவ்வகையில் இல்லாமல் நம்முடைய சிறார்கள் தங்களுக்கென்று இருக்கும் திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல கருத்துக்களையும், ஒழுக்க நெறிகளையும் போதிக்கும் வகையில் வெளிக்காட்டினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
ஏற்கனவே அதிரைநிருபரில் தனது இனிமையான குரலால் வாசகர்களின் உள்ளம் தொட்ட மாஸ்டர் A.முஸ்தகீமுடைய மற்றுமொரு பாடல் காணொளி உங்களனைவரின் பார்வைக்காக இதோ !
காணொளி பகிர்வு : லெ.மு.செ.அபுபக்கர்
அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் குழு
13 Responses So Far:
மாஷா அல்லாஹ் கம்பீரக்குரலில் இஸ்லாத்தை இனிமையாக சொல்லி இருக்கும் முஸ்தகீம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் துவாக்களும்
மாஷா அல்லாஹ் !
பெற்றோர்க்கு உகந்த பிள்ளையாக என்றும் இருந்து மேலும் மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
ஜஸாக்கலாஹ் LMS(A)
மாஷா அல்லாஹ்!
"கொல வெறியும்" "கூகுள் கூகுளும்" பிடித்து ஆட்டும் இக்காலப் பொடுசுகளுக்கு மத்தியில் இவன் ஒரு மிகப் பெரும் ஆறுதல்.
நாம் என்ன சொல்கிறோம் அன்கிற அறிவு அவசியமல்ல. நாம் சொல்லும் பெயர்களின் பின்னணி என்ன என்கிற புரிதலும் தேவையில்லை. இப்படி மனப்பாடமாக அறிந்து வைத்துக்கொண்ட பல விஷயங்கள் வளர வளர இவன்தன் வாழ்க்கையை செம்மையாக்கும்.
(தம்பி முஸ்தகீம், அப்படியே ராகம் போட்டு "நாங்கள்ல்லாம் இங்கேதான் இருக்கோம். உங்களப் அதிரை நிருபரில் பார்க்கத் தேட்டமா இருக்கோம்" என்று உங்க வாப்பா எல் எம் எஸ் காதில போட்டு வை. 'இந்தா வர்ரேன்' என்று கிளம்பி போன ஆள இன்னும் காணல.
பயிற்சியும் பலன் தரும் என்பதற்கான மிகச் சிறந்த முயற்சியை அன்பர் அபூபக்ரு அவர்கள் தன் புதல்வன் வழியாக நிரூபித்து விட்டார்கள்; நான் ஊரிலிருந்த போது, மாஸ்டர் முஸ்தகீமைச் சந்திக்க வேண்டும் மிகவும் ஆவலுடன் சென்றேன்; ஆனால், அத்தருணம் அவர் உடல்நிலைச் சரியில்லாமல் இருந்ததால் காண இயலவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்புக் கிட்டும் இன்ஷா அல்லாஹ்.
Masha Allah, excellent.. May the almighty blessed this boy
மாஷா அல்லாஹ் !
மேலும் மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
முஸ்தகீமை வளர்த்து நல்வழிப்படுத்திய வாப்பாவுக்கு வாழ்த்துக்கள்!
மாஷா அல்லாஹ்! அப்படியே வாரியணைத்து உச்சி முகரவேண்டுமேன்று தோன்றுகிறது. ஐந்திலேயே வளைத்து வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கு இது ஒரு உதாரணம்.
மற்றவர்களும் அவசியம் பின்பற்றத் தக்க செயல்.
இதை பார்க்கும்போது எனக்கு வேண்டாத வேறு ஒன்று நினைவுக்கு வந்தது. அதுவும் ஒரு சிறுமிதான் . மிகப் பெருமையோடு அதன் பெற்றோர்கள் விருந்தினர்களிடம் சொல்லச் சொன்னது வேண்டாம் ...திரைப்பட வசனங்கள். இப்படியும் பிள்ளைகளை பயிற்றுவிக்கிரார்கள்.தன் தலையில் தானே அள்ளிப்போட்டுக்கொள்வது தெரியாமல் .
கை கொடுங்கள் தம்பி அபூபக்கர்.
மாஷா அல்லாஹ் கம்பீரக்குரலில் இஸ்லாத்தை இனிமையாக சொல்லி இருக்கும் முஸ்தகீம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் துவாக்களும்
//மாஷா அல்லாஹ்! அப்படியே வாரியணைத்து உச்சி முகரவேண்டுமேன்று தோன்றுகிறது.//
டாக்டர் இ.அ. காக்கா அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், எனக்கும் அப்படிப்பட்ட ஓர் உணர்வின் உந்துததலால் “டிசைன்ஸ்”க்குச் சென்று முஸ்தகீமைப் பார்க்க வேண்டும்- அவனைக் கட்டியணைத்து என் அன்பு முத்தங்களைப் பரிசாகவும் கொடுத்து என் கண்ணிப்பாக்களை அவனின் இனிய குரலால் கண்டிப்பாகப் பாட வைக்க வேண்டும் என்று அவனை இந்த அளவுக்கு அருமையாக வளர்த்தெடுத்த அவனின் வாப்பா அபூபக்ரு அவர்களிடம் சொன்னேன். ஆனால், அத்தருணம் நம் அன்பிற்குரிய இளம் பாடகன் முஸ்தகீம் காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தேன்; இன்ஷா அல்லாஹ் மறுமுறை- விடுமுறையில், ஊரில்-நேரில் காண்பேன், நீங்கள் செய்ய எண்ணியதை அடியேன் செய்து அன்பை வெளிப்படுத்துவேன். அன்புச் சகோதரர் அபூபக்ரு அவர்கட்கு மீண்டும் வாழ்த்துகள்; என் சலாத்தையும் விசாரிப்பையும் உங்கள் அருந்தவப் புதல்வன் முஸ்தகீமிடம் சொல்ல வேண்டுகிறேன்.
கவியன்பன் அவர்களே!
நாளை மனு நீதி நூல் வெளியீட்டு விழா - இன்ஷா அல்லாஹ் அறிவிப்பு வர இருக்கிறது- விழாவுக்கு அபூபக்கர் அவர்கள் தங்களின் அருமை மகனாரை அழைத்து வந்தால் நான் நாளையே உச்சி முகர்ந்து விடுவேன்.
அன்பின் சகோ.டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் உள்ளத்தில் உதித்த கருத்துப் பெட்டகம்; அழகிய அச்சுருவில் புத்தகமாகி, இன்ஷா அல்லாஹ் நாளை உங்களின் இல்லத்திலிருந்து வெளியிடும் இத்தருணம் என் உளம்நிறைந்த வாழ்த்துகள்; மேன்மேலும் நூற்கள் வெளியிடும் ஆற்றலும் ஆரோக்கியமும் இறையருளால் கிட்டுமாக!
// நான் நாளையே உச்சி முகர்ந்து விடுவேன்.//
அப்படியே ஆகட்டும் ஆசிரியர் அவர்களே! என்னுடைய சலாத்தையும் மாஸ்டர் முஸ்தகீம் எனும் அவ்விளம் பாடகரிடம் கூறுக. என் அன்பைப் பெற்றுக் கொள்ள இன்ஷா அல்லாஹ் இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்கச் சொல்லுக.
உங்களின் நூல் வெளியீட்டு விழாவின் அறிவிப்பு இத்தளத்தில் வரும் முன்னரே, என் செவிகளில் அலைபேசியினூடே வந்து சேர்ந்து விட்டது.
மாஷா அல்லாஹ்!
Post a Comment