தர்க்க வாதி!
சமூக குதர்க்க வாதி!
ஓர் இறைக்கொள்கையை
தகர்க்கும் வியாதி!
இவர்கள்
இறை நேசிப்பாளருக்கும்
இறை மறுப்பாளருக்கும்
இடையே இருக்கும் மூடர்கள் !
இல்லாத ஆசிரியருக்கு சீடர்கள்!
அமைதிக்குச் சாமாதி கட்டுபவர்கள்!
அடக்கஸ்தலத்தின் மேல்
அபரீத அன்பு கொள்பவர்கள்!
அடங்காதவர்கள்!
சடங்கின் போது
மூர்ச்சை இழந்தாலும்!
அதையும்
நேர்ச்சை என
கட்(சி)சை கட்டுபவர்கள்!
உயிர் இழந்தவர்கள்
உயிருடன் இருப்பதாய் வாதிப்பவர்கள்!
உயிர் இழந்தவருக்காய்
உயிரை இழந்து சாதிப்பவர்கள்!
இவர்கள்
உயிர் ஜடங்கள்!
விளங்காத ஊமைப்படங்கள்!
மண்ணறைக்காய் இறை வழிபாடை
மண்ணுள் புதைத்தவர்கள் -நாளை
பாடையில்(சந்தூக்கு) போகப்போவது அந்த
மண்ணறை என்பதை மறந்த மடையர்கள்!
கல்லறைச் சிறையில்
சில்லறை அரசியல்
இவர்கள் மூலதனம்!
இவர்கள்
நல்லது விளங்காத
செவிட்டு இனம்!
CROWN
17 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் க்ரவ்ன்,
கவிதையில் ஞாயமான கோபம் தெறிக்கிறது; தர்ஹாவாதிகளின்மீதான எரிச்சல் கொப்பளிக்கிறது, இணை வைப்பிற்கு எதிரான ஆத்திரம் வெளிப்படுகிறது.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்; இந்த வியாதியஸ்தர்களுக்கு இடிமேல் இடியாய் இடிக்கிறோம் மாறுகிறார்களா என்று பார்ப்ப்போம்.
நச்சென்று ஒரு கவிதை!
வெளுத்து வாங்கியிருக்கிறீர்கள்.
இன்னும் நிறைய அவலங்கள் இருக்கின்றன. அடிக்கடி எழுத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணரவும்.
//இல்லாத ஆசிரியர்க்குச் சீடர்கள்//
அருமை...அருமை...அருமை!
படித்ததில் பிடித்தது என்று எடுத்துச் சொல்லவல்ல; உண்மையிலேயே இந்த வர்ணனை என்னை மிகவும் கவர்ந்தது.
இல்லாத ஆசிரியர்க்கு சீடர்கள்
எப்படியும் ஃபெயிலாகப் போவது உறுதி
/கல்லறைச் சிறையில்
சில்லறை அரசியல்
இவர்கள் மூலதனம்!//
ஒரு தேசக்கவியின் கோபம் தெரிக்கும் வார்த்தைகள்.
முன்னனி பத்திரிக்கைகளில் வெளியானால் இன்னும் நிறைய பேசப்படுவது உறுதி..
CROWN.வழக்கத்திற்கும் அதிகமான SUPERB
கிரவ்னுக்கு என்ன !
இருக்குமிடமெல்லம் கம்பீரம் தானே...
நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியதாலோ என்னவோ மீண்டும் மீண்டும் வாசிக் வைக்கிறது... ஜாலம் !
//ஓர் இறைக்கொள்கையை
தகர்க்கும் வியாதி!//
//இல்லாத ஆசிரியருக்கு சீடர்கள்!//
//மூர்ச்சை இழந்தாலும்!
அதையும்
நேர்ச்சை என
கட்(சி)சை கட்டுபவர்கள்! //
//சில்லறை அரசியல்
இவர்கள் மூலதனம்!//
கல்லறைக்குள் கல்லா கட்டுபவர்கள்
மண்ணறைக்குள் இல்லாததை கட்டுகிறார்கள்
கதை கதையாக !
//முன்னனி பத்திரிக்கைகளில் வெளியானால் இன்னும் நிறைய பேசப்படுவது உறுதி.. //
ஆமாம் சரிதான்.. நீங்கள் நினைக்கும் பத்திரிக்கைகள் ஏதாவது ஒன்றின் பின்னணியில் இருப்பதால்தான் முன்னனியில் இருப்பதில் இந்த கவிதை வந்திருக்கிறது ! :)
கிரவ்னின் சாட்டி சிலரது சூட்டை கிளப்பி விடும் !
அஸ்ஸலாமுஅலைக்கும். என்ன அசத்தல் காக்கா நலமா? இது வரை ஏதும் நேரம் எடுத்து எழுதுவதில்லை என்பதால் வரும் பிழைகள் மாற்றம் எல்லாம் கவிஞர் காக்காவிடம் சாட்டிவிடுவேன்!அவர்களுக்கு முழு உரிமையும் சாதாரணமாய் எழுதியதை சிறப்பாயும் ஆக்கும் கைவண்ணமே இந்த கவிதைகளும் சிறப்பு வரிகளும்!எல்லாப்புகழும் அல்லாஹுக்கே பாராட்டு கவிக்காக்கவுக்கும்,எடிட்டர் காக்காவுக்குமே நான் சும்மா கோடு போடுகிறேன் ,ரோடு போடுவது இருவருமே!
மையத்த்துபோட்டோபார்த்தேன்.மையத்தின்கால்கள்இரண்டும்ஒன்றோடு ஒன்றுசேராமல்அகன்று இருக்கிறது.வழக்கமாக மையத்தின் கால் பெருவிரல் இரண்டையும் ஒன்று சேர்த்து வெள்ளை துணியால் கட்டிவைப்பார்கள்.இந்தமையத்தைமட்டும்ஏன்இப்படிசெய்துவிட்டீர்கள்?.
க்ரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உங்கள் மூலக்கவிதையோடு இந்தப் பதிவை ஒப்பிட்டுப் பாருங்கள், நான் ஒன்றுமே செய்யவில்லை என்பதும் ஜஸ்ட் வார்த்தைகளை அடுக்கி மட்டுமே தந்துள்ளேன் என்பதும் விளங்கும்.
ஜாஹிரின் முழு பாராட்டும் உங்களையே சேரும்! இந்தத் தீப்பொறிச் சிந்தணை முழுக்க முழுக்க உங்களுடையதே.
வாழ்த்துகள்.
ஃபாரூக் மாமா,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னும் இந்த மைய்யத்து தயாராகவில்லை.
அல்லாஹ்வை மீறி ஒன்றும் செய்துவிடமுடியாத அவ்லியாக்களைப் போல, தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் உயிருள்ள ஆட்கள் வந்து கட்டும்வரைக் காத்திருக்கின்றன மைய்யத்தின் கால்கள்.
(அபு இபு, எப்புடீ சமாளிச்சேன் பார்த்தியலா)
sabeer.abushahruk சொன்னது…
க்ரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உங்கள் மூலக்கவிதையோடு இந்தப் பதிவை ஒப்பிட்டுப் பாருங்கள், நான் ஒன்றுமே செய்யவில்லை என்பதும் ஜஸ்ட் வார்த்தைகளை அடுக்கி மட்டுமே தந்துள்ளேன் என்பதும் விளங்கும்.
ஜாஹிரின் முழு பாராட்டும் உங்களையே சேரும்! இந்தத் தீப்பொறிச் சிந்தணை முழுக்க முழுக்க உங்களுடையதே.
வாழ்த்துகள்.
-----------------------------------------------------------
வலைக்குமுஸலாம்! என் முதுகில் பாராட்டினாலும் அது உங்களை பாராட்டுவது போலவே!
sabeer.abushahruk சொன்னது…
ஃபாரூக் மாமா,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னும் இந்த மைய்யத்து தயாராகவில்லை.
அல்லாஹ்வை மீறி ஒன்றும் செய்துவிடமுடியாத அவ்லியாக்களைப் போல, தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் உயிருள்ள ஆட்கள் வந்து கட்டும்வரைக் காத்திருக்கின்றன மைய்யத்தின் கால்கள்.
(அபு இபு, எப்புடீ சமாளிச்சேன் பார்த்தியலா)
--------------------------------------------------------------------------------
சபாஸ் "சரியான சமாளிப்பு
--------------------------------------------------------------------------------------
//சில்லறைஅரசியல்இவர்கள்மூலதனம்//தம்பிcrown சொன்னது. ஆமாம்உண்மைதான்.கத்தை-கத்தையாக நோட்டை அடித்து காஸு பார்த்தவர்கள் எல்லாம் காலமறிந்து மாறிவிட்டார்.இவர்கள்காலமறியாஅப்பாவிகள். 'அப்பன்வெட்டியகிணறு'என்பதற்காகஉப்புதண்ணீரைகுடிக்கிறார்கள். இன்னும்காலம்மாற-மாற நாம் சொல்லாமலேயே இவை யெல்லாம் மறைந்துவிடும். ''நான்குடிப்பேன்!எவண்டாஎன்னைகேட்பது?''என்றுபிராண்டிபாட்டிலை முகத்துக்குமுன்னாலேகுலுக்கிகாட்டியவன்எல்லாம்உட்க்காரும்போதும் எழுந்திருக்கும்போதும்''அல்லா!அல்லா!''என்றேசொல்லி,தொழுகிற பள்ளியிலேயேகாலம்கழித்ததைநான்கண்டேனே!அதுபோல்ஒருகாலம் வரும்எல்லாம்மாறும். இருந்தாலும் ஊதுறசங்கைஊதிவைப்போம்; விடியிறபோதுவிடியட்டும். [குறிப்பு;எழுதியதுஏற்ப்புடையதுஇல்லைஎன்றால்நீக்கிவிடுங்கள்.]
//அபுஇபுஎப்படிசமாளிச்சேன்பாத்தியளா//மருமகன்சபீர்அபுசாருக்சொன்னது. இப்போஎனக்குவிளங்குது.மையத்தைபாத்தாமையத்துமாதிரிதெரியலே! ஹன்டூரிபாக்கவந்தஎவனையேபுடிச்சுஇஸ்லாத்துலேகொன்னாந்து சுன்னத்து பண்ணி ஹாஜா ஒலிதர்காவுளே போட்டு புட்டு எங்கட்டே மையத்துண்டு பயம் காட்டுறிய! ஹாஜாஒலிதர்காவுலேதெக்கத்திகாத்துவேகமாவீசம்! வீசுறகாத்துலேபோத்துனதுணிபறந்தாஎன்னாகும்தெரியுமுல!
கொடிமரம் ஏற்றுகின்றார்கள்
மூளையை இறக்கி வைத்துவிட்டு
Shameed சொன்னது…
கொடிமரம் ஏற்றுகின்றார்கள்
மூளையை இறக்கி வைத்துவிட்டு
------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஹாஹாஹா... நல்லதொரு ஹைக்கூ"இங்கேதான் சாகுல்காக்காவின் கொடி பறக்குது!
நீண்ட நாட்களாக இந்த கவிதைக் கோரிக்கை இப்போது நிறைவேறி இருக்கிறது. தொடரட்டும் இந்த அமுதச் சொட்டுக்கள். .
Post a Comment