Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலையாய கடமை... ! (காணொளியா !!?) 13

அதிரைநிருபர் பதிப்பகம் | November 09, 2011 | , , , ,

"காண்க காணொளி கண்டதும் - சிலிர்க்க
கருத்திடுக அதற்குத் தக !"

- ஹைகூக்"குறள்"

ஆனாலும் தலையோடு இருப்பவைகள் என்ற இறுமாப்பு இருக்கும் அதுவே அங்கிருந்து அகன்றால் அதற்கு என்ன மரியாதை…!?

தலையையேச் சுற்றும் தலைப்பாக இருப்பதனால் தலையைச் சொறிந்து கொள்ள வேண்டாம், இது தலைக்கு மேலிருப்பதை எப்படியெல்லாம் திருத்தம் செய்கிறார்கள் என்பதைச் சொல்லத்தான் இந்த சுருக்கமான முகவுரை.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே, அதேபோல் தலை ஆடாவிட்டாலும் அதனைச் சுற்றியிருப்பவைகள் ஆடும் ஆட்டமிருக்கே அப்பப்பா, நடந்தாலும், குனிந்தாலும், நிமிர்ந்தாலும், அசைந்தாலும் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம்.

அட! வேற ஒன்னுமில்லைங்க, தலை முடியைத்தான் சொல்ல வந்தேன் அதனைச் சரி செய்யும் அல்லது அகற்றிடும் திறனாளிகளோடு இன்று நம்முடைய மூன்றாம் கண் ஒன்றும் உறையாடியது அதைத்தான் இங்கே காணொளியாக காண்கிறீர்கள்.. !


- அபுஇபுறாஹிம்

13 Responses So Far:

U.ABOOBACKER (MK) said...

தலைகனம் அகற்றும் நல்ல தொழில்!
தம்பி அபூ இபுறாஹிம் தலையில் பூந்து விளையாடுகிறார் தொழில் வல்லுனர்.

U.ABOOBACKER (MK) said...

அடக்கம் அமரருல் உய்க்கும் அடங்காமை மண்டையை பிய்க்கும்
- ஹைகூக்"குறள்"

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
ஒரு த்ரில்லர் ரேஞ்சுக்கு படப்பிடிப்பை அமைப்பதாக நெனப்பா? கடைசி வரை முகத்தைக் காட்டவே இல்லையே!

நானும் ஒரு எதிர்பார்ப்போடு மூன்று முறைப் பார்த்துவிட்டேன், ஒரு முறைகூட கேமர பக்கம் திரும்பவே இல்லையே நீங்க!

தலைமுடிவேற சாம்பலில் விழுந்த இடியாப்பம் மாதிரி கருப்பும் வெள்ளையுமாவ்ல இருக்கு!

முடி திருத்துவதைக்கூட
வடிவாக காட்ட முடிகிறதே!

sabeer.abushahruk said...

வழுக்கை விழுந்தவர் தலைபோல ஆங்கே
முழுக்க மழிப்பதாம் மொட்டை

ZAKIR HUSSAIN said...

இதை எழுத்தில் கொண்டு வந்தால் நவீன இலக்கியத்தோடு சேரும் என நினைக்கிறேன். இருப்பினும் வீடியொ பதிவும் , தமிழ்பிறழாமல் சொல்லும் அழகும் அருமை.

முடிவெட்டும் சகோதரர் செய்யும் மஸ்ஸாஜுக்காக துபாய்க்கு டிக்கட் போட்டாலும் தகும்.

முதலில் நீங்கள் காட்டும் அந்த கட்டிடம் ஏதோ தொழிற்சாலை மாதிரி இருக்கிறது. [ வித் புகைக்கூடு ].

மருந்துக்கு கூட ஒரு மரம் இல்லாத ஊரில் எப்படித்தான் காலத்தை ஓட்டுகிறீர்களோ ?

sabeer.abushahruk said...

//மருந்துக்கு கூட ஒரு மரம் இல்லாத ஊரில் எப்படித்தான் காலத்தை ஓட்டுகிறீர்களோ//


...அவைகளை வத்தனி (நேஷனலஸ்) என்று இனம் மாற்றிவிட்டார்கள் ஜாகிர் பாய்... உங்கூரு பூமிபுத்திரா போல.

Shameed said...

ஆடியோ வீடியோ படு கிளியர்
தலை மசாஜ் படு ஜோர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அழகான ஆண்குரல்
எதையும் இனிமையாக்கும் நுட்பம்
கடைக்கு கிடைத்த இலவச விளம்பரம்
அதற்கு வழிவகுத்தமைக்கு வாழ்நாள் இலவச சேவையுண்டோ
அதிரையில் தான் எல்லா திட்டங்களும் அம்மாவால் தான் என்கிறார்களாம்
அமீரகத்திலும் அம்மா என்ற வார்த்தைகளோடு தான் அவர்கள் பணி கடக்கிறதோ!

Yasir said...

மாத்திதான் யோசிச்சு வீடியோ எடுத்து இருக்கீங்க....நல்லாயிருக்கு

“வெட்டுவொரை தாங்கும் முடிபோல தன்தலை
மாசஜ்செய்வரையும் பொறுத்தல் நலம் “

ஹைக் “கூக்கூரல்”

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆடியோ வீடியோ படு கிளியர்
தலை மசாஜ் படு ஜோர்//

இது என்னா >? சவுண்டு குறள் ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மருந்துக்கு கூட ஒரு மரம் இல்லாத ஊரில் எப்படித்தான் காலத்தை ஓட்டுகிறீர்களோ ?//

அச்த்தல் காக்கா : இப்படியா உசுப்பேத்துறது, மரங்களோடு பேசனுமா ? அவ்வளாவுதானே ! :) !! ம்ம்ம் யோசிக்கலாமே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வழுக்கை விழுந்தவர் தலைபோல ஆங்கே
முழுக்க மழிப்பதாம் மொட்டை//

கவிக் காக்கா:

அப்ப்டினா அடுதது பதிவு ஹைக்-கூ-குறள் தானே ? :)

Unknown said...

கடுகைப் பிளந்து ஏழு கடலைப் புகுத்துவது போல், ஒரு சாதாரண மேட்டரை இப்படி அழகுறக் காட்டியது அருமை, மருமகனே! வெட்டிக்கொண்டிருக்கும் பொது சொட்டை சிறிதாக எட்டிப் பார்ப்பதையும் பார்த்தேன்.

ஆமா, கொத்துப் புராட்டா கொத்துவது போல் தலையை இப்படிக் கொத்துகிறார்களே! அம்மாடியோவ்! நம்ம தலையெல்லாம் இதுக்குத் தாங்காதும்மா! அதிலே 'சவுண்டு' வேறே. படு ஜோர்!

Good coverage!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு