Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆலடிக் குளக்கரையிலிருந்து ஆக்ரா வரை - பேசும்படம் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 07, 2012 | , , , ,


ஊடகங்களின் தாக்கம் இல்லாத ஊரே இல்லை, ஒவ்வொரு வீட்டிலும் அதன் தாக்கம் ஏதாவது ஒரு வகையில் சீண்டிக் கொண்டுதான் இருக்கிறது. அவைகள் செய்தித் தாள்களாக இருந்தாலும், தொலைக்காட்சிகளாகவும், இணைய வழி தேடலாகவும் தொடர்கின்றன. 

இந்திய நீதித்துறையும் சாட்சியங்களை அளிப்பவர்களிடமிருந்து நேரடி வாக்குமூலம், அதோடு மற்ற ஆதாரங்களாக எழுத்து வடிவிலான, அச்சு வடிவிலான, ஏன் நிழற்பட வடிவிலான ஆதாரங்களைத்தான் நம்புகின்றன. 

நம்முடைய வாழ்வில் நிகழ்ந்த, அன்றாடம் எதிர்கொண்ட நினைவுகளை உடனுக்குடன் மனதில் பதிந்தால் நீண்ட நாட்களுக்கு அவைகள் தொடர்வதில் மனிதனுக்கே உரிய மறதியால் சிக்கலே. ஆனால் அப்படியான வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் மூன்றாம் கண் கொண்டு (Cameraவை இப்படித்தான் அழைக்கனும்னு சொல்லிட்டாங்க) சேகரித்ததை சும்மா பூட்டி வைத்திருந்தால் பலன் என்ன ஆகவே, உங்களின் பார்வைக்கும் அதன் நினைவோட்டங்களாகப் பகிர்வதில் எனக்கு என்றுமே மகிழ்வே.

1. படித்துறைகளுக்கு வெள்ளை அடித்ததால் வெள்ளை வேட்டி துறைகளுக்கெல்லாம் விடுப்பா ?


2. டவலும் வேட்டியும் சுருட்டி வைக்கும் இந்த மரத்தடி செடியன்குளத்து மேடு நினைவில் நிற்கும் இடங்களில் இதுவும் ஒன்று 


3. செடியன் குளம் குளிர் நாட்களிலும் சூடாக இருக்கும் குளித்தால் கரை ஏற மனசு வராது ஆனா இப்போ குளத்தில் இறங்கவே மனசு வரலே! 


4  ஹனீஃப் பள்ளிவாசல் அருகில் C.M.P.வாய்க்கால் அந்த காலத்தில் பளபளன்னு நீரும் அதன் கூட மீன் குஞ்சுகளும் ஓடிய நாட்களை நினைத்து மணம் மீன் குஞ்சைப்போல் துள்ளி குதித்தது, அது ஒரு பொற்காலம். இப்போ சர்வசாதரனமாக ஓடும் சாக்கடைகளின் கலப்பு நாற்றம் மனதை உறுத்துகிறது.


5. விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டு மழைக்கும் கருவாட்டு ஆனத்திற்க்கும் ஏதும் சம்பந்தம் உண்டா ?


6. எங்களை கூண்டுக்கு உள்ளேயே அடைத்து வச்சிருங்கோ, வெளியே வந்தால் மசாலா குளியல்தான் என்பது எங்களுக்குத் தெரியும்.


7. ஊரில் என்ன விஷேசம் என்றாலும் நாங்கள் இங்கேதான் பொழுதையும் விடுமுறையையும் போக்கிட நிற்போம் (வேறு வழி?).


8. இந்த ஹோட்டல் அப்போ ரொம்ப பாப்புலருங்க ஆனாலும் பாருங்க ஊரில் இன்னும் இதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்குதுங்க! இந்த உணவகத்தை கண்டாலோ அல்லது அதன் பெயரைக் கேட்டாலோ பெரிசுலிருந்து சிறுசு வரை நாக்கில் சொட்டும் ஊற்றை உறிஞ்சுக் கொள்வர் (இது விளம்பரமல்ல அனால் அங்கிருக்கும் ருசிக்கு ரசிகனாக).


9. அந்த பூ தாங்க இந்த பூ அது கூட்டமா இருந்தது இது சிங்கம்போல சிங்கிலா இருக்கு.


10. இந்த புளியமரம் அதன் சுற்று வட்டாரம் பற்றி நான் எழுதுவதை விட சகோ ஜாகிர் எழுதுவதுதான் மிக பொருத்தமா இருக்கும். .


11. ஆக்ராவில் வீற்றிருக்கும் உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ் மஹால் அருகில் இருக்கும் கல்வெட்டினை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது அதனை அப்படியே கொட்ட கொட்ட பார்த்துக் கொண்டிருந்த நம் மூன்றாம் கண் சிமிட்டியதால் இங்கே உங்களின் பார்வைக்கு.


12. தாஜ் மஹாலில் மற்றுமொரு கோணம், சுற்றி சுற்றி வந்தாலும் எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரியான தோற்றம். முகலாயர்களின் கட்டிடக் கலையின் திறன் வியக்க வைக்கும் அதிசியமே !


13. இதுநாள் வரை அதிகமதிகம் தாஜ் மஹாலின் நேரடியான வண்ணப்படங்களைத்தான் பெரும்பாலும் பத்திரிக்கைகளிலும், மற்ற ஊடகங்களிலிலும் கண்டு வந்திருக்கிறோம். தாஜ் மஹாலே தன் கண்களால் சுற்றியிருப்பதை கண்டால் எப்படி இருக்கும் ?


14. தாஜ் மஹாலில் நுழைவாயிலும் கோட்டையின் முகப்பும் அதன் கம்பீரம் காண்பவர்கள் அனைவருக்கும் கைபிடித்த மனைவியைத் தேடும் காதலிக்க... !


15. அட இதென்ன இவ்வளவு சீக்கிரமா ஊருக்கு வந்துட்டோம்னு நினைக்கத் தூண்டும் ஒவ்வொரு இந்திய கிராமங்களின் நீர் நிலைகளை நினைவோட்டமாக கொண்டுவரும் அற்புதமான தாஜ் மஹாலின் மறுபக்கம் இது. அணைகளையும் தாண்டி அனைவரையும் கவரும் இதன் அழகு ரசிக்கத்தான், ஆனால் இங்கே ஓடும் நீரை ருசிக்க அல்ல !


சரிங்க, மடக்கி எழுதினா கவிதை, மடக்காம எழுதினா உரை நடைன்னு தெரிஞ்சு போச்சு. இப்படி படம் பார்த்து கண்டதை(யும்) சொல்லும் வழக்கத்திற்கு ஏதாவது வாதம் உண்டா ? நீங்களே தீர்மாணிச்சுடுங்க மக்களே...

இருந்தாலும் இது தொடரும் ....
- Sஹமீது

19 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா...

அதிரையிலிருந்து ஆக்ரா வரை இலவசமா சுற்றுலா போயிட்டு வந்த உணர்வு...

//6. எங்களை கூண்டுக்கு உள்ளேயே அடைத்து வச்சிருங்கோ, வெளியே வந்தால் மசாலா குளியல்தான் என்பது எங்களுக்குத் தெரியும்...///

காக்கா.. கோழியையும் பேச வைச்சுட்டியலே......

// செடியன் குளம் குளிர் நாட்களிலும் சூடாக இருக்கும் குளித்தால் கரை ஏற மனசு வராது ஆனா இப்போ குளத்தில் இறங்கவே மனசு வரலே! ///

மறந்து போன பழைய நினைவுகளை போட்டோ எடுத்து நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி...

ZAKIR HUSSAIN said...

ஆக்கம் முழுக்க பழைய நினைவுகள் கொட்டிக்கிடக்கு...
பழசெ நெனைக்கையிலெ புதுசா உடம்பிலெ சக்தி பிறக்குது..

காசு தேடும் பருவத்தில் நேரம் இருந்தது....

காசு கிடைச்ச பருவத்தில் நேரம் தொலைந்தது...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் சா.ஹமீது, பாராட்டுக்கள்.

மீண்டும் ஒரு பேசும்படத்தொகுப்பு.

இந்த முறை அந்த செடியன் குளத்தை பார்க்கும்போது இதயம் கனக்கிறது.

இன்றைய சுற்றுச்சூழலின் மாசுகளுக்கு உதாரணமாய் இந்த புகைப்படம் சான்று பகருகிரது.

பெற்ற தாயையும், பிறந்த ஊரையும், படித்த பள்ளியையும் , பழகிய நண்பரையும் எப்படி மறப்பது இயலாதோ!!

அப்படித்தான் கூட்டத்தோடு குதூகலித்து கும்மாளமிட்டு குளித்த இந்த குளத்தையும் மறக்க இயலவில்லை.

ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தை பார்த்து வருந்துவதுபோல் இப்போது இந்த குளத்தின் இன்றைய நிலையைப்பார்த்து வருந்துகிறோம்.

ஒருவேளை நாம் எல்லாம் சேர்ந்து கண்ணீர் வடித்தால் அந்த கண்ணீரால் இந்த குளம் நிரப்பப்படலாம்.

அதே போல் அந்த புளிய மரம். வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்று வகுப்பைவிட்டு வெளியே அனுப்பப்பட்டோருக்கு சரணாலயம்.

இடைவேளைகளில் கிடைக்கும் அந்த ஐந்து நிமிடங்களின் சொர்க்கவாசல். அந்த வயதிலேயே “தம்” அடிக்கும் சிலருக்கு இது ஒரு கன்ட்ரி கிளப்.

அந்த நாள் நினைவுகளை அள்ளித்தந்து விட்டு இன்னும் காய்க்காமலே நிற்கிறது இந்த புளிய மரம..

இந்த புளிய மரத்தின் அடி வேர்கள் சிலரின் வியர்வைததுளிகளை குடித்திருக்கின்றன.

இந்த புளிய மரத்தை பார்த்துவிட்டு அந்த தாஜ் மகாலை எல்லாம் பார்த்து எதுவும் எழுத தோன்றவில்லை எனக்கு.

காரணம் தாஜ் மஹாலிடம் ஒரு ஷாஜஹானுடைய கதை மட்டுமே இருக்கும்.

இந்த புளிய மரம பேசினால் பல ஷாஜஹான்களுடைய கதைகளை வெளியிடும்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

அப்துல்மாலிக் said...

ஒவ்வொன்றும் ஒருவிதம்.. மனதை கொள்ளையடிக்கும் பலவிதம்...

அதிரை டு ஆக்ரா......

செடியன் குளம் அதிரையின் நீச்சல் குளம், இப்போ காணும்போது ஒரு கனம் மனது வலிக்கிது..

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹமீது காக்கா காதலித்த படங்களை தாஜ்மஹால் படத்தோடு சுட்டிக் காட்டிய விதம் அருமை.

// 4 ஹனீஃப் பள்ளிவாசல் அருகில் C.M.P.வாய்க்கால் அந்த காலத்தில் பளபளன்னு நீரும் அதன் கூட மீன் குஞ்சுகளும் ஓடிய நாட்களை நினைத்து மணம் மீன் குஞ்சைப்போல் துள்ளி குதித்தது, அது ஒரு பொற்காலம். இப்போ சர்வசாதரனமாக ஓடும் சாக்கடைகளின் கலப்பு நாற்றம் மனதை உறுத்துகிறது.//

பளபளன்ற நீர்கள் பங்கரையாய் மாரியதால் அதில் ஓடிய மீன்கள் கருவாடாய் போய் துர்நாற்றங்கள் எடுத்து நம்மை தூக்கி வீசுகின்றன.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பள்ளிக்கூட வாசலிலே ஒரு புளிய மரம் நிற்கும்
அதைப்பார்க்கும் பொழுதெல்லாம் பள்ளிப்பருவத்தை ஞாபகப்படுத்தும்.

வ‌ய‌தான‌தால் த‌ன் மேனி தானாகவே சுருங்கி விட்ட‌ன‌ ஒவ்வொரு குள‌மும் ஒரு வ‌யோதிய‌க‌த்தாயைப்போல‌....

ந‌ல்ல‌தோர் ஆக்க‌ம் ப‌ட‌த்துட‌ன் வாழ்த்துக்க‌ள் சாஹூலாக்கா...

Muhammad abubacker ( LMS ) said...

ஜாகிர் காக்க சொன்னது:

// காசு தேடும் பருவத்தில் நேரம் இருந்தது....
காசு கிடைச்ச பருவத்தில் நேரம் தொலைந்தது...//

முச்சந்திக்கு முச்சந்தியில் நின்று வெட்டிபேச்சு,புறம் பேசும் நண்பர்களுக்கு இரண்டும் தொலைந்தது.

sabeer.abushahruk said...

//பெற்ற தாயையும், பிறந்த ஊரையும், படித்த பள்ளியையும் , பழகிய நண்பரையும் எப்படி மறப்பது இயலாதோ!!

அப்படித்தான் கூட்டத்தோடு குதூகலித்து கும்மாளமிட்டு குளித்த இந்த குளத்தையும் மறக்க இயலவில்லை//

படங்களைப் போலவே மனதைத் தொடுகிறது இந்த கருத்து.

அதுபோது
மீன்குஞ்சுகளுக்கு
அசைவ சாப்பாடு
நம் பாதங்கள்.

இப்ப அது ஒருவகை சிகிச்சையாமே ஹமீது, உண்மையா?

M.B.A.அஹமது said...

ஆரம்பித்த ஆலடிகுளத்திலிருந்து செடியன்குளம்,சிஎம்பி வாய்க்கால் புளியமரம் மனோரா தாஜ்மஹால் அனைத்துமே நேரடியாக முன் பார்த்த இருகண் பார்த்த அனுபவித்ததை மூன்றாம் கண்ணில் பதியப்பட்டதை பார்தததும் நம் நினவலைகளில் மீண்டும் ஒரு பரவசம் அது ஒரு கனாகாலம்

sabeer.abushahruk said...

அதிரையிலிருந்து ஆக்ராவரை
ஆலடிக்குளத்திலிருந்து யமுனைக்கரைவறை

ஆலடிக்குளம்:
தாமரை மிதக்காததால்
அமாவாசை வானமென
அழகற்றுப் போனதே...

செடியன்குளம்
செடியின்குளமாக...

மனோரா உச்சியிலிருந்து
மனமார ரசித்தவைகள்...

புளியமர கிளைகளில்
ஒளிய மர இலைகள்...

கட்டிக்காலங்களித்தவளுக்காக
கட்டிமுடிக்கப்பட்ட காதல்
தாஜ்மஹால்...

ம்ஹ்ம்ம்ம்ம்...
பின்குறிப்பு
இத்தனை அழகா
இவ்விடங்களெல்லாம்?
இப்படிப்பட்ட
படம்பிடிக்கப்பட்ட
கவிதைகளுக்கு
இடமுண்டா இஸ்லாத்தில்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பசுமையும் குளுமையும் நிறைந்த அத்தனை படங்களும் ரொம்பப் பிடிச்சிருக்கு.

9 -வது படம் அந்த பூ தாங்க! கணினியில் பார்க்கு முன் அதை இன்று நேரில் பார்த்து நினைத்தது உங்களை தாங்க!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என் கருத்து இங்கே பதியவில்லை என்றால் Sஹமீத் காக்கா ஒன்றுமே சொல்ல மாட்டாங்க'தானே'...

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அழகிய புகைப்படங்கள்!

Yasir said...

நல்லாயிருக்கு புகைப்படமும் அதற்க்கு நீங்கள் கொடுத்திருக்கும் கமெண்டும்......

KALAM SHAICK ABDUL KADER said...

டவலுக்குள் சுருட்டிய
சோப்பும் பேஸ்டும் பிரஸ்ஸும்
கக்குளில் வைத்துக் கொண்டு
காலார நடந்து செல்லும் பொழுது
“குளிக்கப் போறீகளா” என்ற கேள்வியும்
“யான்” ,”ஆமா” என்ற நல விசாரிப்பும்
முடிந்து,

அதோ, எனக்கு நீச்சல் கற்றுத் தந்த “நீச்சல் பயிற்சிக்கூடம்” செடியன் குளம். வாழ்வில் என்றுமே மறக்க முடியாத இடம்.

இவைகள் கற்பனைகள் இல்லை; அதனால் இங்கு எடுக்கப்பட்டுள்ளக் கேமராக் கவிதையும் நினைவு நாடாக்களைச் சுழற்றி விடும் எங்களின் விமர்சனக் கவிதையும் கற்பனைகள் இல்லை.

உளவியல் ரீதியான ஓர் உண்மை: கடந்த கால நினைவு நாடாக்களை “ரீவைண்ட்” செய்வதால் ஞாபக சக்தி பலப்படும்.

Shameed said...

("ஃபத்வா" ஏதும் கொடுக்காமல்) அழகிய கருத்துக்களை சொன்ன அனைவருக்கும் நன்றி

Meerashah Rafia said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

மிக அழகு.. மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தூக்கம் கண்ணை சொக்க, வேலை மண்டையை பிளக்க, எல்லாத்தையும் மறந்து புகைப்படத்தில் புதைந்து போனேன்..

தாஜ்மஹால் கண்களால் புகைத்து கொடுத்தது அருமை..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு