Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மற்றும் 5... 20

ZAKIR HUSSAIN | December 01, 2014 | , ,

திரையில் சிறை


நவீன இளைஞர்களின் இப்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த கட்டுப்பாடுகளிலும் அடங்காதது. இருப்பினும் எதையும் பழமை என்று ஒதுக்கிவிட்டாலும் கர்ம விதி என்பது பிரபஞ்சம் அழியும் வரை தன்னை இந்த நவீன இளைஞர்களுக்காகவோ அல்லது இளைஞிகளுக்காகவோ மாற்றிக் கொள்ளாது. அது அதன் பாதையில் சரியாக பயணம் செய்யும்.

எப்போதோ ஒருவன் தொட்ட நெருப்பு சுட்டதால்தான் இப்போதைக்கும் நாம் நெருப்பின் பக்கம் நெருங்காமல் இருக்க கற்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் சுட்டுதான் 'பட' வேண்டும் என்று இருந்தால் நிறைய பேர் இன்னேரம் கரியாய் போயிருப்போம்.

இரண்டு பாராக்ராஃப் இப்படியெல்லாம் எழுதிதான் உங்களை பயமுறுத்த வேண்டும் என்ற அறிவு தாகத்தில் யாரும் இப்போது இல்லை. எதையும் ஸ்க்ரோல் செய்து , மவுசை நகர்த்தி தெரிந்து கொள்ளும் சமூகம் இப்போது இருப்பது என்னவோ ஒன்று ஸ்மார்ட் போன் திரையில் அல்லது டெலிவிசன் திரையில். இந்த இரண்டு எல் சி டி & எல் இ டியும் வருங்கால சந்ததிக்கு அடுத்த அத்யாயத்தை  காண்பிக்குமா என்றால் ஒன்று "எஸ்' மற்றொன்று ' "நோ' என்பதே என் நிலைப்பாடு.

சமீபத்தில் ஒரு தகப்பனார் தன் மகன் சொல் கேட்காமல் தானாகவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை கேட்டு நொந்துபோய் என்னிடம் சொன்னது ' அது ஒன்னுமில்லே...கையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் காண்பிப்பது போலவே உலகம் இருக்கும் என்று நம்பி அவன் அப்படி செய்து விட்டான்'…தகப்பனின் தியாகம் தெரியாமல் நடந்து கொள்ளும் பிள்ளைகளையும் தகப்பன் கள் திட்டுவதில்லை.

இந்த திரைகள் மனிதர்கள் மாதிரிதான். ஒழுங்காக நடத்தினால் நம் சொல் கேட்கலாம்...இல்லாவிட்டால் "போடா அல்லது போடி  வெண்ணெ...' என்று வேறு ஒரு உலகத்தில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

இந்த திரைகள் வீட்டில் உள்ள பெண்களையும் சரியாக வழி நடத்துமா என்பதை ஒரு மானிட்டர் மாதிரி குடும்பத்தின் கேப்டன் தான் கவனிக்க வேண்டும். தவறினால் ...கால ஓட்டத்தில் நீங்களே அவர்களுக்கு ஒரு 'நசல்". அல்லது ப்ராக்டிக்கலை விட்டு தாண்டிய ஒரு தொல்பொருள் காலத்து ஐட்டம் ஆகி விடுவீர்கள். [ இதை நீங்கள் கேட்க விரும்பவில்லை என்றால் கொஞ்சம் 'வழுவா' சம்பாதிக்கனும் ] 

இந்த திரைகளின் கர்ம் விதி என்ன?...சின்ன வயதில் தொடர்ந்து கேம் / ஃபேஸ் புக் / வாட்ஸப் எல்லாம் தலைய குனிந்தே இயக்கி கொண்டிருப்பதால் பின் கழுத்தில் அதிக அழுத்தம் எலும்பு வரை பாதிக்கலாம்.

கண்….சொல்ல வேண்டியதில்லை. நேரம் கடந்து இரவில் தூங்குவதில் உள்ள சுரப்பிகளின் ஸ்டரைக்..மற்றும் ஃபாஸ்ட் புட் எல்லாம் உடல் பருமனை தான் பரிசாக தரும். முதலில் உடற்பயிற்சி செய்யலாம் என்று நினைத்து அதை ஆரம்பிக்க பல வருடம் கடந்து விடுவதால்..பல பேருக்கு "பன்றி வாழ்க்கை பழகிடுச்சு" கதைதான்.

இந்த திரைகளை சரியாக பயன்படுத்துவது என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும். சிலர் சொல்வது போல் இந்த திரைகளை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் போன்ற வாதங்கள் என்னைப்பொருத்தவரை ப்ராக்டிக்கலாக தெரியவில்லை. இது ஒரு ஜெனரேசனுக்கும் , மற்றொரு ஜெனரேசனுக்கும் ஏற்பட்டிருக்கும் 'அறிவு மாற்றம்'.

3 பேர் ஒன்றாக நின்று போட்டோ எடுக்காதீர்கள் / பெரியவர்கள் சொல்லை அப்படியே கேட்டு நட போன்ற வசனங்களுக்கு இப்போது என்ன சிந்தனை மாற்றமோ அதே சிந்தனை மாற்றம்தான் இப்போது இருக்கும் திரையை மொத்தமாக ஒதுக்கி வை எனும் அறிவுரை.

புதிய சமுதாயம் மிக முக்கியமாக எப்படி உருப்படலாம் என்று தீவிரமாக சிந்திக்கும் கால கட்டத்தின் உச்சிக்கு இப்போது போட்டிகள் உருவாகி விட்டது. போட்டிகளில் தயாராக இருப்பதே மேல்...அதை விட்டு இன்னும் குறைகளை சொல்லிக்கொண்டிருந்தால் திரைகளில் செலவழிக்கும் நேரம் உங்களை விழுங்கி விடும்.

நான் முன்பு எழுதியதுதான் ' பொழுது உங்களைப்போக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்'.

ஏன் முரண்பாடு?

நமது ஊர் வலைததளங்களை முன்பு எனக்கு தெரிந்த ஹிந்து நண்பரிடம் காண்பித்து ஓய்வாக இருக்கும் போது படியுங்கள் என்று சொல்லி வைத்திருந்தேன்.


அவரும் அடிக்கடி நம் ஊர் வலைத்தளங்களை படித்து விட்டு பொதுவான விசயங்கள் இருந்தால் சொல்வார்.

நானும் இடை இடையே இஸ்லாத்தை பற்றியும் , அதில் சொல்லப்பட்ட சகோதரத்துவம் , ஞாயங்கள், அல்-குரான் / ஹதீஸ், நபிகள் பற்றியெல்லாம் எனக்கு தெரிந்த அளவு சொல்லியிருந்தேன்.
சமீபத்தில் நடந்த விவாத வீடியோக்களை அவர் பார்த்து விட்டு ஒரு கேள்வி கேட்டார்.

“எங்கள் ஹிந்து மதம் உங்களைப்போல் ஒரே குரான் / ஒரே நபி என்ற விசயங்களுக்குள் இல்லாமல் பல பிரிவுகளை கொண்டது...ஆனால் உங்கள் ஊரில் நடந்த விவாதத்தை பார்த்த போது ...ஒரே விசயங்களை நம்பும் இவர்களுக்குள் ஏன் இத்தனை பிரிவுகள்?..’

எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை...தெரிந்தவர்கள் சொல்லலாம்.

அதிராம்பட்டினம்.... வலைத்தளங்கள்

நான் சொல்லப்போகும் விசயத்தை பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொண்டால் பொதுவில் நன்மைதான்.

வலைத்தளங்களை சிலர் ஆர்வமாக ஆரம்பித்து விடுகிறார்கள். பிறகு பதிவுகள் போடுவது என்பது மனை போட்ட வீடு கட்டாமல் பல காலம் கிடப்பதுபோல் அது கவனிக்கப் படாமலேயே இருக்கிறது. சிலர் பதிந்த விசயங்கள் தலைப்பு கூட மாறாமல் அப்படியே இருக்கிறது. சிலர் சொன்ன வாழ்த்துக்களும் , பிரச்சினைகளும் இப்போதைக்கு அது சம்பந்தப்பட்டவர்களே மறந்து போயிருக்களாம்.

இன்னும் தளங்களில் எழுதும் விசயங்கள் ஒரு குறிப்பிட்ட ரேஞ்சில் மட்டும் எழுதுகிறார்கள் .  (B)பாய்கள் கட்டும் கைலியும் ஆக்கமும் ஒரே மாதிரித்தான் இருக்கு என்று சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை.

பல விசயங்களை எடுத்து வெளியிடும் காலத்துகுள் இப்போது நாம் இருக்கிறோம். இன்னும் ஒரே மாதிரியான விசயங்களை தொடர்ந்து எழுதும் போக்கிலிருந்து மாற்றிக்கொண்டால் இன்னும் கொஞ்சம் இன்ட்ர்ஸ்டிங் ஆக வலைத்தளங்கள் பரிணமிக்கும் [ அது என்ன பரிணமிக்கும் என்பது எனக்கு தெரியவில்லை...சின்ன புள்ளைலெ படிச்ச வார்த்தை ]
மெட்டா பிசிக்ஸ், பேய்கள் , செய்வினை , ராக்கெட் ,செவ்வாய் கிரகம் , நபிகள் பெருமானாரின் லீடர்ஷிப் க்வாலிட்டி, நாட்டில் அழிக்கப்பட்டிருக்கும் காட்டின் மொத்த தாக்கம்,  நதி இணைப்பில் நாட்டின் பொருளாதார மாற்றம், என்றைக்கோ ஏமாந்து போன விசயம், முதன் முதலில் வாங்கிய சைக்கிள், உருப்படியான தலைவர்களின் வாழ்க்கைமுறை, எதிர்பாராமல் கிடைத்த சந்தோசம் ...எங்கோ ஒரு சந்தோச தினத்தில் கேட்ட குரலின் மறு ஒலிபரப்பு, இளமையில் அதிசயமாய் தெரிந்தவர்களின் இன்றைய முதுமை...இப்படி எழுத எவ்வளவோ விசயம் இருந்தும் ஏன் இன்னும் நாம் ஜல்லியடிக்கிறோம் என்று யோசித்தது உண்டா?

ZAKIR HUSSAIN

20 Responses So Far:

Ebrahim Ansari said...

நியாயமான கேள்விகள்.

தமிழக முஸ்லிம்களுக்கென்று ஒரு உருப்படியான ஊடக பலம் இல்லை. இருக்கும் ஒரு சில ஊடகங்கள் தயாரித்து அளிக்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நாம் வாராவாரம் பள்ளியில் ஜும் ஆவில் கேட்ட அல்லது காலை பஜ்ர் முடிந்து படித்த தக்லீம் செய்திகளாகவே இருக்கின்றன.

இஸ்லாமிய நிகழ்ச்சி என்று டிவியைத் திறந்தால் அங்கும் ஒரு மவுலவி அமர்ந்து நாம் பலமுறை கேட்ட விஷயங்களையே பேசுகிறார். நிகழ்கால விஷயந்களை ஒப்பிட்டுப் பேசுபவர்கள் மிகவும் குறைவு. அல்லது இல்லை.

இன்று வீட்டில் இருக்கும் ஹவுஸ் ஓய்ப்களை டிவி கட்டிப் போட்டு வைத்திருப்பதை நாம் மறுக்க இயலாது. இந்த சீரியல் நோயைத் தடுக்க மாற்று மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

மார்க்கத்துக்கு மாறுபாடுகள் இல்லாமல் மார்க்க விஷயங்களையும் போதிக்கும் வகையில் சில கதைகளை சீரியல் வடிவில் படிப்பினைகளாக கேரளத்தில் தருவதுபோல் தர முயற்சித்தால் தமிழகம் கன்னியாகுமரி கடலில் மூழ்கிவிடுமா?

தயவு செய்து இதற்கும் விவாதம் வைத்து விட வேண்டாம். நவீன வசதிகளுடன் நாமும் ஒத்துப் போக வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தக் கருத்து.

sabeer.abushahruk said...

ஸார்,

மொதல்ல உங்களுக்கு ஒரு அட்வைஸ். (அட்வைஸ் என்றவுடன் தலதெறிக்க ஓட நீங்கள் ஒண்ணும் யூத் இல்ல. அதனால, நம்பி அட்வைஸ் பண்ணலாம்னுதான்...)

நீங்க இப்டி இவ்ளோ.....வ் கேப் வுட்டு எழுதற பழக்கத்த மாத்துங்க.

ப.க.மு. அடிக்கடி எழுதுனீங்க. ப.க.பி.தான் ரொம்ப கேப் உட்றிய.

இம்பூட்டு அருமையான எழுத்தை ருசிக்க நாங்க ரொம்ப ஏங்கிப்போற அளவுக்கு கேப் உட்றது நல்லால்லே,ஆமா!

ஏற்புரையில் காரணம் சொல்லாதிய, கடுப்பாயிடுவேன். சரிப்பா எழுதுறேன்னு மட்டும் சொல்லுங்க.

ஓக்கே?

sheikdawoodmohamedfarook said...

//பாய்கள்கட்டும்கைலியும்ஆக்கமும்ஒரேமாதிரியாகவேஇருக்கும்//இதைநான்ராத்திரிதான்கொஞ்சம்மாற்றியோசித்துபார்த்தேன்.கலர்கட்டம்போட்டபலையகாட்டுகைலியில்பைஜாமாபோட்டுஜூம்மாவுக்கு போனால் ரெஸ்பான்ஸ் எப்படிஇருக்கும்என்பதே!

sabeer.abushahruk said...

'திரையில் சிறை' தலைப்பல்ல; இக்காலச் சிறார் மற்றும் இளைஞர்களின் நிலை!

ஒரு ஒரு மணி நேரம் இணையம் துண்டிக்கப்பட்டாலோ தேவையானப் பக்கம் 'லோடிங்' என்று சுற்றினாலோ வீட்டை உண்டு இல்லை என்று ஆக்கி விட்றதுகள்.

இந்த அடிக்ஷன் அபாயகரமானது; கட்டுப்படுத்த கடினமானது என்பதால் அவேர்னஸ் ஏற்படுத்துவது ஒன்றுதான் தீர்வு.

ஒபிஸிட்டியின் பூர்வாங்கம் இந்த திரையில் சிறைதான் என்பது சொல்லாமலே விளங்கும்.

இடது கையில் டேப்லெட் பார்த்துக்கொண்டுதான் எங்க வீட்டு வாண்டு சாப்பிடறான். அட்வைஸ் பண்ணா "ஐ னோ" ன்றான்.

ம்ஹூம் !

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//இன்னும்எவ்வளவோவிசயங்களில்ஜல்லியடிக்கிறோம்//மருமகன்ஜாஹிர்சொல்லிவிசனப்பட்டது./நாம்மாறியவிசயங்களைபட்டியல்போட்டால்அ.நி.யில்தொடரேஎழுதலாம். அன்றுகருப்புகுஞ்சம்கட்டியதுருக்கிதொப்பியையும்ஜவ்வரிசிகஞ்சிபோட்ட பின்னல்தொப்பியையும்மாற்றிவிட்டோம்.பெருபாலும்இரண்டுபெருநாள் களிலும்கல்யாணம்சுன்னத்துகளிலும்இறைச்சிகறியேபார்த்தநாம் இப்பொழுது தெருவுக்கு இரண்டு மூன்று இறைச்சிகடைகளை நிறுவிகடைஒன்றுக்குஅஞ்சுஆடுஆறுஆடுஅறுக்கிறோம்.அத்திபூத்தாப்புலேயாரோஒருபணக்காரர்ஆடுஅறுத்துகுர்பான்குடுத்ததுபோகஇன்றுஓட்டகையைஅறுத்துகுர்பான்கொடுக்கிறார்கள்.அன்றுஓட்டகையைஉயுரோடுசர்கோசில்கூடபார்த்தவர்யாருமில்லை. இங்க்லீஷ்படிப்பது ஹராம் என்று சொல்லி கொண்டிருந்த நாம் இப்பொழுது இங்க்லீஷ்மீடியம் பள்ளிகூடத்தில் இடம்பிடிக்க குடைபிடித்து Qவரிசையில் நிற்கிறோம்.அன்றுநம்மூரில் இருந்த ஒரே ஜூம்மா பள்ளியில் பயான்செய்ததுஅரபுமொழியாதமிழ்மொழியாஎன்றமண்டைகுழப்பதில் இருந்தபோதுவீசியஇளந்தென்றல்காற்றில்கண்னயார்ந்துமோனநிலையில் கண்மயங்கிதுயில்கொண்டபோது''ஓய்மனிதர்களே!'' என்ற இமாமின் இடியோசைகேட்டுதிடுக்கிட்டுபதறிஎழுந்தகாலம்மாறிஇப்பொழுது அழகு தமிழில் பயான் கேட்க்கிறோம். ஆனாலும் இன்னும் பலஎளிதில்மாறவேண்டிய-மாற்றிக் கொள்ள வேண்டிய விசயங்களில் பிடிவாதமாகமாறாமலேஇருக்கிறோம்.

ZAKIR HUSSAIN said...

//சரிப்பா எழுதுறேன்னு மட்டும் சொல்லுங்க.
ஓக்கே?//

To Sabeer,

Ok பாஸ்
.........................................................

To Bro Ebrahim Ansari,

//மார்க்கத்துக்கு மாறுபாடுகள் இல்லாமல் மார்க்க விஷயங்களையும் //

இதைச்சொல்லக்கூட ஒரு இயக்கம் / ஒரு சங்கம் என்று மாறிப்போயிருக்கும் நமது ஊரில் அப்படி ஒன்றும் எதுவும் ஈசியாக செய்ய முடியாது.

முன்பெல்லாம்....' அதோ போரது யாரு மகன்?' என்ற காலம் மாறிப்போய்...'அதோ போரது எந்த இயக்கத்தை சார்ந்தவன் ? எனும் கேள்விகளே எஞ்சி நிற்கிறது.

..........................................................................

To அன்புமிக்க எஸ்.முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு...

நீங்கள் சொன்ன மாற்றங்களில் நல்லதும் ஊருக்கு நடந்திருக்கு,...கெட்டது,ம் நடந்திருக்கு [ உதாரணம்: ஆட்டுமூளை...நிறைய கார்டிப்ரின் மாத்திரை விற்க உதவியதால் மருந்து கடை வைத்திருப்பவர்கள் தென்னந்தோப்புகள் சீக்கிரம் வாங்க உதவியானது ]

ZAKIR HUSSAIN said...

//நீங்க இப்டி இவ்ளோ.....வ் கேப் வுட்டு எழுதற பழக்கத்த மாத்துங்க. //

To Sabeer & All our Friends


எனக்கு அப்படி ஒன்றும் இடைவெளியில் எழுத வேண்டும் என்ற ஆசை இல்லை.

இதே ஆக்கத்தை இதுவரை 186 பார்த்து 6 கமென்ட் எழுதி [ இதில் சரியாக 3 பேர்தான் ] இருந்தால் யாருக்கும் ஒரு ஆர்வம் இருக்குமா என்பது எனது கேள்வி.


படிப்பவர்கள் விமர்சித்தால்தான் எழுதவும் முடியும். என்னைப்பொருத்தவரை எல்லா விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்பவன் [ சன் டிவி மாதிரி 'அரைத்த மாவு" என்று சொன்னாலும் அது நல்ல விமர்சனம்தான் ] அப்போதுதான் புதிதாக ஏதாவது அரைக்க தோன்றும்.

மற்றும் படிப்பவர்களும் என்ன விதமாக எதிர் பார்க்கிறார்கள் என்பதும் தெரியும்.

இதற்கு காரணம் இருக்கிறது. அதிரை நிருபர் தொடங்கியதில் இருந்து ஒரு நல்ல தரமான / டீசன்டான விசயமே இந்தளத்தில் எழுதப்படுகிறது. அதற்கு காரணம் நான் நினைப்பது வாசகர்கள்தான்.

தமிழில் டைப் செய்வதை வாசகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்தால் "யோவ் என்னய்யா எழுதறே" என்று என்னைக்கூட திட்ட வசதியாக இருக்கும் .


ZAKIR HUSSAIN said...


இவர்கள்........ உடன் மேடைக்கு வரவும்..

ஜமீல் நானா, அதிரை அஹ்மது காக்கா , அண்ணன் N.A.S, சகோதரர் கிரவுன் தம்பி யாசிர் சகோதரர் கவிஞர் அபுல்கலாம்
சகோதரர்கள் நூருல் அமீன். அப்துல்வாஹித் அண்ணாவியார். அப்துக் ராஜிக், அப்துல் மாலிக் , எம் ஹெச் ஜஹபர் சாதிக், ZAEISA , Ara Ala , Naina [ AlKhobar ] B. Ahamed Ameen, Abu Bakar [ amazan ] Abdul Malik , Alaudeen S. uroovaasi , Ahamed Irshad, MSM Naina Mohamed [இவரின் எழுத்துக்கு நான் ரசிகன் ], புதுசுரபி, LMS AbooBakar , Mohamed Buhari, SS Syed Ibrahim.A [ Dubai], அன்புடன் புகாரி , Hidaayathullah, Adirai N.Safath, Noor Mohamed , Ashik Ahamed , N. fathhudeen, ஜாகிர் ஹுசைன் , நட்புடன் ஜமால் . Thajudeen. LMS

Shameed said...

// "பன்றி வாழ்க்கை பழகிடுச்சு" //

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கேட்ட கதை பசுமரத்து ஆணிபோல மனதில் பதிந்துவிட்டது

crown said...இந்த திரைகள் வீட்டில் உள்ள பெண்களையும் சரியாக வழி நடத்துமா என்பதை ஒரு மானிட்டர் மாதிரி குடும்பத்தின் கேப்டன் தான் கவனிக்க வேண்டும். தவறினால் ...கால ஓட்டத்தில் நீங்களே அவர்களுக்கு ஒரு 'நசல்". அல்லது ப்ராக்டிக்கலை விட்டு தாண்டிய ஒரு தொல்பொருள் காலத்து ஐட்டம் ஆகி விடுவீர்கள். [ இதை நீங்கள் கேட்க விரும்பவில்லை என்றால் கொஞ்சம் 'வழுவா' சம்பாதிக்கனும் ]
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்! வலு(ழு)வாய் நழுவிவிடாதவாறு சம்பாத்தியம் அவசியம்! நல்ல தொரு நிதர்சனத்தை சொல்லியுள்ளீர்கள்!

crown said...

எங்கள் ஹிந்து மதம் உங்களைப்போல் ஒரே குரான் / ஒரே நபி என்ற விசயங்களுக்குள் இல்லாமல் பல பிரிவுகளை கொண்டது...ஆனால் உங்கள் ஊரில் நடந்த விவாதத்தை பார்த்த போது ...ஒரே விசயங்களை நம்பும் இவர்களுக்குள் ஏன் இத்தனை பிரிவுகள்?..’

எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை...தெரிந்தவர்கள் சொல்லலாம்
-------------------------------------------------------------------------------------------------
எனக்கும் தெரியல! ரொம்ப கவலையா இருக்கு!

sheikdawoodmohamedfarook said...

//எல்லோரும்மேடைக்குவாங்க!// மருமகனே!கொடிமரமும்ஏத்திஹந்தூரியும்எடுத்தாச்சே! அப்புரம்ஏன்மேடைக்குகூப்புடுறிய?

Muhammad abubacker ( LMS ) said...

Assalamu alaikkum
Jahir kaka nalama?
Siraikku yeattra varththai kaithikal intha kaithikalai pidippatharkkuthan idaiveli polum. Wonder full article

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Zakir Hussain,

Its true that people are addicted to smartphones, tablets, and TVs. There are hundreds of Apps, news contents are exchanged. People use the smarphones starting from wake up moment till the sleeping moment.

There is a tendancy of more content consumption than content creation, because people become even mentally lazier nowadays.

I would like to request you not to provide yourself underestimating negative comment within your articles about your article (within brackets in your previous articles). Because the creator should not underestimate his/her creations as it projects the negativity in the readers' minds.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

//எங்கள் ஹிந்து மதம் உங்களைப்போல் ஒரே குரான் / ஒரே நபி என்ற விசயங்களுக்குள் இல்லாமல் பல பிரிவுகளை கொண்டது...ஆனால் உங்கள் ஊரில் நடந்த விவாதத்தை பார்த்த போது ...ஒரே விசயங்களை நம்பும் இவர்களுக்குள் ஏன் இத்தனை பிரிவுகள்?..’

எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை...தெரிந்தவர்கள் சொல்லலாம்//

Those all groups involved are having nothing else but pure personal political motives !!! Politics is politics seriously. There is no space for religion there. So it got forgotten. Hope brothers and sisters agree on my opinion. Do you have secondary opinions?

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

//There is no space for religion there. //

Here the religion is taken for their political advantages to sentimentally attracting innocent people to waste their time, energy, and money for their political purposes.

Here it seems the religion is abused !!! and people are attracted towards them, being abused and thrown away those who question rationally. Its pathetic and danger !!!

May Almighty Allah save us from abuses.

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk said...

Dear brother B.Ahamed Ameen,

I double your opinion. Those non Muslims who question on 'controversial verses or believes' are not really intending to know, but to tease only.

As you said, there is political motive behind it!

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

//இதே ஆக்கத்தை இதுவரை 186 பார்த்து 6 கமென்ட் எழுதி [ இதில் சரியாக 3 பேர்தான் ] இருந்தால் யாருக்கும் ஒரு ஆர்வம் இருக்குமா என்பது எனது கேள்வி.//
சரியான கேள்வி.

மேலும் தங்களின் மேடைக்கு வாங்க பட்டியலில் தம்பி தாஜுதீன் அவர்களின் பெயரும் இருப்பது புருவத்தை உயர வைக்கிறது.

ஆயினும் , நீங்கள் மேடைக்கு வாங்க என்று அழைத்த பிறகு நானும் அழைக்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், ஜாஹிர் காக்கா, இ.அ. காக்கா,

வாரத்தில் 6 நாட்கள் பணிச்சுமை, நாள் ஒன்றுக்கு காலை 90 நிமிடம் மாலை 120 நிமிடம் அலுவலகம் சென்று வர வாகனத்தில் அமர்ந்து செல்வதன் காரணமாக நேரம் ஒதுக்கி கருத்திடுவதில்லை, பதிவுகள் அனைத்தையும் வாசிக்கிறேன் காக்கா.

மேலும் இங்கு அமீரகத்தில் இஸ்லாமிக் தஃவா சேவை தமிழ் பிரிவில் என்னை ஈடுபடுத்துவதால், விடுமுறை நாட்களிலும் என்னுடைய நேரம் அதில் செல்கிறது.

கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் முகநூலில் அவ்வபோது கருத்திடுகிறேன், காரணம் ஒரு கூட்டம் என்னையும் உங்களைப் போன்றவர்களையும் முஷ்ரிக்குகளாக்கி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வழிகேட்டுக்கூட்டம் அவ்வாறு செய்வது நமக்கு ஒரு பெரிய பொருட்டல்ல என்றாலும், எல்லோரும் நமக்கேன் வம்பு என்று வாய்மூடிக்கொண்டிருப்பது போல் என்னால் இருக்க முடியவில்லை. நம் வருங்காலத்திற்கு வழிகேட்டு சிந்தனையாளர்களை அடையாளப்படுத்தியே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே தவிர வேறு எந்த பிரதிபலனும் இவ்வுலகில் இல்லை காக்கா.

இன்ஷா அல்லாஹ் இங்கு என்னை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் காக்கா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு