க்ளிக்.. கிளிக்… கிளிக்… முன்பெல்லாம் சுற்றுலா தளங்களில் ரொம்பப் பிரபலமாக கேட்கும் இந்த சத்தம், இப்போது எங்குபார்த்தாலும் கேட்க ஆரம்பித்து விட்டது. பொதுவான ஃபங்கஷனிலும் இந்தச் சத்தங்களை அடிக்கடி கேட்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களின் வருகையால் எங்கு பார்த்தாலும் (தனிமையில் இருப்பவர்களும் தங்களின் முகத்துப் பக்கம் திருப்பிக் கொண்டு) கிளிக் என்ற சத்தம் கேட்கிறது.
நம்ம எல்லோராலும் இலகுவாக புரிந்து கொள்கின்ற, ஒரு சப்த மொழிதான் இந்த கிளிக் கிளிக்குடன் கூடிய அந்த பளிச் என்ற வெண்பளீர் ஒளியும் சேர்ந்தால் கேமராவில் பதியும் படம் பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது. இந்த கிளிக்கும் பளிச்சும் கேமராவின் முகவரி என்றால் அது மிகையாகாது.
தற்போது கேமராவில் ‘க்ளிக்’ சத்தம் வந்த காலம் எல்லாம் மலை ஏறி போய் போய்விட்டது. இன்றைய கேமராக்கள் 100% டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு , சத்தமே இல்லாமல் நூற்றுக்கணக்கான புகைப்பட நகல்களை எடுத்து தள்ளி விடுகின்றன !
பிலிம் ரோல்
எந்தவகை கேமராவாக இருந்தாலும் நம் கண்ணில் படுகிற முதல் விஷயம் லென்ஸ்தான் (குவித் தகடு கண்ணாடி). அதுதான் கேமராவின் நெற்றிக்கண். ‘லென்ஸ்’ என்பது ஒரு வித்தியாசமான வடிவத்தில் தயாரிக்கப்படுகிற ஒரு வகை சிறப்புக் கண்ணாடிக் குவித் துண்டு. இதன் வேலை, ஒளியைக் குவித்து ஒரே இடத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதுதான்.
கடை மற்றும் அலுவலக வாசல்களில் பொருத்தப்படும் . பெரிய கண்ணாடி. வழியாக வெளிச்சம் கடைக்குள் ஊடுருவி வந்து பரவலாக விழுகிறது. இதுக்குக் காரணம், அந்தக் கடையில் இருக்கிற கண்ணாடி, தட்டையான வடிவத்தில் இருப்பதால் இப்படி வெளிச்சத்தை பரவலாக பிரதிபளிக்கின்றது. இதற்கு சமதள ஆடி என்று பெயர் (ஆடி மாத தள்ளுபடி உண்டா என்று கிண்டல் அடிக்க கூடாது ) அதனால், சூரிய ஒளி அதைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பரவலாக வெளிச்சத்தை பாய்ச்சுகின்றது.
அதே கண்ணாடியைக் கொஞ்சம் மாற்றி வேறு வடிவத்தில் தயாரித்து. நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெலிதாவும் கிட்டத்தட்ட, ஒரு மினி இட்டலி ரேஞ்சுக்கு வடிவமைத்து இந்த ஸ்பெஷல் கண்ணாடி வழியாகச் சூரிய வெளிச்சம் நுழையு ம்போது, அது லேசாக வளைந்து, திரும்பி தலைகீழாய் பரவலாக இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்படுகிறது. அதுதான் லென்ஸின் அடிப்படை நுட்பம்.
கேமராவுக்கு முன்னால் இருக்கிற லென்ஸும்(அதாங்க நெற்றிக்கண் ) கிட்டத்தட்ட இதே வேலையைத்தான் செய்கின்றது. நாம் எந்தப் பொருளைப் படம் எடுக்கின்றோமோ அந்த பொருளில் இருந்து வருகின்ற ஒளிக் கதிர்களை ஒரே இடத்தில், அதாவது கேமராவுக்குள்ளே இருக்கிற பின்பகுதியில் கொண்டு போய்க் குவிக்கின்றது.
அப்படி குவிக்கின்ற அந்த இடத்தில்தான் ஃபிலிம் ரோலின் ஒவ்வொரு பிரேமும் இருக்கும் அது ஒரு விசேஷமான பிளாஸ்டிக் தகடு. அதில் சிலரசாயனப் பொருள்கள் பூசப்பட்டிருக்கும். (அது பற்றி அண்ணன் NAS அவர்கள்தான் விவரம் தரணும்) இந்த ரசாயனங்களின் சிறப்பு அவற்றின் மேல் கொஞ்சம் வெளிச்சம் பட்டாலே போதும், அந்த வெளிச்சத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும் பட்சோந்தி தனம் அந்த ரசயனங்களுக்கு உண்டு.
இதனால் நாம் போட்டோ எடுக்கும் பொருளில் இருந்து வருகிற வெளிச்சம் லென்ஸ் வழியாக ஊடுருவி இந்த ரசாயனங்களின் மீது விழும்போது, அந்த காட்சி அப்படியே ஃபிலிம் ரோலின் ஒரு பகுதியில் பதிவாகி விடுகிறது. இதே மாதிரி அடுத்தடுத்து நாம் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவு ம் இச்சுருளில் வரிசையாகப் பதிவாகிக் கொண்டே வரும்.
போட்டோ எடுத்து முடித்ததும் கேமராவிலிருந்து ஃபிலிம் ரோலை வெளியோ எடுத்தால், வெளியோ இருக்கிற அதிக வெளிச்சம் முழுவதும் பிலிம் ரோலில் பட்டு , இதற்க்கு முன் நாம் எடுத்த அனைத்து படங்களும் அம்பேல்தான் இப்படி அம்போவான படங்களை எந்த சாப்ட் வேர் போட்டும் ரெக்கவர் பண்ண முடியாது.
அதனால், இதற்கென்று வடிவ மைக்கப்பட்ட டார்க் ரூம் அதாவது இருட்டு அறைகளில்தான் ஃபிலிம் ரோலைப் பிரித்து வெளியில் எடுப்பார்கள். சில விசேஷக் கெமிக்களில் முக்கி எடுத்து அந்த பிலிம் ரோலை டெவலப் என்று சொல்லக் கூடிய பணியை செய்வார்கள் அதன்மூலமாக நம் படங்கள் என்றும் அழியாத படிநெகடிவாக பாதுகாக்கப்படுகிறது.
அந்த ‘நெகட்டிவ்வை நாம் வெளிச்சத்தில் பார்த்தால், நமக்கு ஒன்றுமே புரியாது. தலை சுற்றும் (வாந்தி வருமா என்று கேட்கக் கூடாது ) அந்த ’நெகட்டிவ்வைச் சில விசேஷக் கருவிகளில் செலுத்தி, பாசிட்டிவாக மாற்றுவார்கள். அதாவது, கொஞ்சம் தடிமனான ஒரு காகிதத்தில் (இதில் இரு வகை காகிதங்கள் உண்டு ஒன்று கிளாசிக் இது
பளபளவென்று இருக்கும் மற்றொன்று மேட் பேப்பர் அது கொஞ்சம் சொரசொரப்பா இருக்கும் ) அழகாக அச்சடித்துத் தருவார்கள். அதைத்தான் நாம் போட்டோகிராஃப்’ புகைப்படம் என்று சொல்கிறோம்.
படச் சுருள் சுழலும்...
S.ஹமீது
31 Responses So Far:
120 ஃபிலிம் ரோலை பார்த்தவுடன் மனதுக்குள் மின்னியது...
# சக்தி வினாயகர் பஸ்
# கந்தசாமி டெய்லர் கடை
# ரோஸ்மில்க்
# அசோக் ஸ்டூடியோ
# வியர்வை வழிய வழிய பார்க்கும் பகல்காட்சி திரைப்படங்கள்
# ஈக்கள் மொய்க்கும் பழக்கடை
# கோர்ட் வாசலில் அழுக்காய்போன ரிமான்ட் கைதிகள்.
# ஊர் திரும்பும் பஸ்ஸில் ஸ்பீக்கர் தெரிக்க பாடும் கேசட் பாடல்
.....பதிவுக்கு பதில் பிறகு எழுதலாம் என்று...ஒரு small பிரேக் .
புதியன புகுந்தாலும் பழையன கழியாமல் புறப்பட்டு விட்டீர்களா சுட்டும் விழி சுடரே?
அஸ்ஸலாமுஅலைக்கும். சகோ. நலமா? ரமலான் கறீம். உங்களுக்குமட்டும் எப்படித்தான் இப்படி பட்ட விசயம் "கிளிக்""ஆகிறதோ? நீங்கள் நெகடிவ் எண்ணத்தையே பாசிட்டிவாக ஆக்கி நல்லதை டெவலப் செய்து உண்மையில் பிளிம் காட்டுபவர்!அவை எம் எண்ணத்திரையில் பதிந்துவிடும் படி அழகாய் பா(ப)டம் எடுப்பவர். வாழ்த்துக்கள்.
முதல் ஃபிலிம் ரோலையே அருமையாக ப்ராஸஸ் செய்திருக்கிறீர்கள். கிரவுனின் படப்பிடிப்பைக் கவனித்தீர்களா?
ட்டெக்னிக்கலா விஷயங்களை இலகுவாகச் சொல்லிச் செல்வதில் இந்த ஹமீதுக்கும் அந்த மரியாதைக்குரிய NAS ஹமீதுக்கும் நிகர் அவர்கள் மட்டுமே.
தொடர்ந்து க்ளிக்குங்கள்...சாரி...கலக்குங்கள்.
வாழ்த்துகள்.
(பி.கு.: குழி லென்ஸைப் பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் சொன்னால் குவி லென்சை விளங்க ஏதுவாகும். ஆடிக்கும் கண்ணாடிக்கும் வித்தியாசம் உண்டு. அதையும் சொல்லிவிடுங்கள்)
கிரவுன்(னு) அருமை ! நெகடிவ்வை பாஸிட்டீவாக மாற்றுவதில் இவரும் நிழற்படமும் ஒன்றுதான் !
நானும் அதிகமாக டார்க் ரூமில் இருந்திருக்கிறேன்... எப்படி சிவப்பு கறுப்பு பேப்பர் (!!?) வெளுக்கிறது அதன் பின்னர் நிழற்படமாக பதிகிறது என்று என்னோட சின்ன மாமாவோடு [தமிழ் ஒருங்குறி கொடையாளர் - தேனீ உமர் தம்பி அவர்கள்] அடிக்கடி பங்கேற்று இருக்கிறேன் (வேடிக்கைதான் பார்ப்பேன்) !!
//.....பதிவுக்கு பதில் பிறகு எழுதலாம் என்று...ஒரு small பிரேக் .//
ஸ்மால் பிரேக் இவ்வளவு நேரமா எடுக்கிறது !? சாமியப்பா, 12ம் நம்பர், பஸ்ஸெல்லாம் போயிடுமே !
m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
கிரவுன்(னு) அருமை ! நெகடிவ்வை பாஸிட்டீவாக மாற்றுவதில் இவரும் நிழற்படமும் ஒன்றுதான் !
நானும் அதிகமாக டார்க் ரூமில் இருந்திருக்கிறேன்... எப்படி சிவப்பு கறுப்பு பேப்பர் (!!?) வெளுக்கிறது அதன் பின்னர் நிழற்படமாக பதிகிறது என்று என்னோட சின்ன மாமாவோடு [தமிழ் ஒருங்குறி கொடையாளர் - தேனீ உமர் தம்பி அவர்கள்] அடிக்கடி பங்கேற்று இருக்கிறேன் (வேடிக்கைதான் பார்ப்பேன்)
----------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். காக்கா! டார்க்ரூமில் இருந்து படம் எப்படி பிராஸஸ் ஆகிறது என வெளிச்சம் போட்டு காட்டிய உமர்தம்பி மாமாவின் ஆகிரத்தும் வெளிச்சமாகட்டும் ஆமீன்,
Crown சொன்னது…
//உமர்தம்பி மாமாவின் ஆகிரத்தும் வெளிச்சமாகட்டும் ஆமீன்,//
ஆமீன் !
//உமர்தம்பி மாமாவின் ஆகிரத்தும் வெளிச்சமாகட்டும் ஆமீன்,//
இவர்கள் விட்டுச்சென்ற சுவடுகள் அழியாத ஒன்று.
தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி சொல்ல கடமைப்பட்ட ஒன்று.
அபு ஆசிப்.
நிழல் படம்...
நினைவுகளை சுமந்து
அரபுலகில் காலத்தை போக்கும்
எனக்கு.....
உன் பல நிழல் படம்தான்
ஆறுதல் கொடுக்குது என...
நிச்சயமாக சொல்கிறேன்...!!!
க்ரவுன் மச்சான்
யார் அந்த சுட்டும் விழிச்சுடர்
அவரே நிழல் படம் எடுப்பவர்
அவரை உன் விழிச்சுடரில் பிடித்து காட்டிருப்பது
அவரருக்கு வைத்திருந்த மோதிரம் உனக்கு
திரும்பிடும்போல் உள்ளது
திருனல்வேலிக்கே அல்வாவா
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாஇருக்கு உன் உவமை
நான் 83ல் தெஹ்ரான் அரம்கோ கேம்பில் கற்ற கலை அந்த தொழில் நுட்பம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறிக்கொண்டிருக்கின்றது
ஜாஹிரின் மலரும் நினைவுகள் பேசுது
அனால் என் முகம் ஜாஹிரின்
மலரும் நினைவுகளில்
இருக்கின்றதா தெரியவில்லை.
கலாம்.....கவியன்பன் கலாம்
நான்கு வரியானாலும்
நாசூக்கான வரியல்லவா
மறந்திட முடியுமா என்ன?
அல்கோபரின் மலரும் நினைவுகாளாக
என்றும் என் மனதில்
adiraimansoor சொன்னது…
க்ரவுன் மச்சான்
யார் அந்த சுட்டும் விழிச்சுடர்
அவரே நிழல் படம் எடுப்பவர்
அவரை உன் விழிச்சுடரில் பிடித்து காட்டிருப்பது
அவரருக்கு வைத்திருந்த மோதிரம் உனக்கு
திரும்பிடும்போல் உள்ளது.
-------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும் மச்சான்! மோதிரம் கல்லுவச்ச மோதிரமா?அதற்கு நானும் சகோ. சாகுலும் போட்டி இல்லாம மோதுரமா?
பாசிடிவ், நெகடிவ், என பிலிம் காட்டுறீங்க!
Informative article from a camera expert thanks for educating us kakka
Yasir சொன்னது…
Informative article from a camera expert thanks for educating us kakka
Reply செவ்வாய், ஜூலை 23, 2013 4:17:00 AM
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.யாசிர் ரமலான் கறீம். நலமா? வீட்டில் யாவரின் நலத்திற்கும் தூஆ செய்கிறேன். உடல் நலம் பேனிக்கொள்ளுங்கள்.
//மோதிரம் கல்லுவச்ச மோதிரமா?அதற்கு நானும் சகோ. சாகுலும் போட்டி இல்லாம மோதுரமா? //
அட கிரவ்னு !
மோதிரம் !
மோது(கி)றோமா !?
இதுக்குதானே எங்கே கிரவ்னுன்னு ஒரு கூட்டத்திற்கே தேட்டம் அதிகம் !
//நம்ம எல்லோராலும் இலகுவாக புரிந்து கொள்கின்ற, ஒரு சப்த மொழிதான் இந்த கிளிக் கிளிக்குடன் கூடிய அந்த பளிச் என்ற வெண்பளீர் ஒளியும் சேர்ந்தால் கேமராவில் பதியும் படம் பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது. இந்த கிளிக்கும் பளிச்சும் கேமராவின் முகவரி என்றால் அது மிகையாகாது.//
புரியாத போட்டோ மொழியை, புரியும் மொழியில் பிளந்து எடுத்து இருக்கிறாய். மனதில் படமாகப் பதிகிறது.
//ஜாஹிரின் மலரும் நினைவுகள் பேசுது
அனால் என் முகம் ஜாஹிரின்
மலரும் நினைவுகளில்
இருக்கின்றதா தெரியவில்லை.//
To Brother Adirai Mansoor,
நிச்சயம் இருக்கிறது.
அந்த ஸ்போர்ட்ஸ் மேன் மன்சூர்...பின்னாளில் ஒரு சிறிய கடை சீப்சைட் பக்கத்தில் நீங்கள் வைத்திருந்தது.
படம் எடுத்துக்கிட்டிருக்கும்போது யாராவ்து திறந்துவிட்டால் எல்லாமே பாழ் ஆகிடுவிம், இதெல்லாம் ஞாபகங்கள் அதற்காக மறுபடியுமா கல்யாணம் செய்ய முடியும் என்று எத்தனையோ தடவை சண்டைப்போட்ட காலம் அது....
அந்த வகை அழிந்துப்போனாலும் அதன் செயல்பாடுகளை காலம்சென்று கற்று கொள்வதில் மகிழ்ச்சி, நன்றி காக்கா...
பல பத்தாண்டு முன்பு கேமராவை என் மகன் தொட்டபோது'' தொடாதே! தொடாதே!" என்று விரட்டியது நான் தான். காரணம் அந்த கருவிக்கு Camera என்ற பெயர் கொடுத்தது தான். Camera என்ற Latin சொல்லுக்கு' இருட்டு அறை' என்று படித்த நினைவு. இருட்டில் 'பேய்-பிசாசு-ஜின்-பூதம்-செய்த்தான்' ஆகியவை நிற்க்கும் அல்லது இருக்கும்'' என்ற பயம் உண்டானதால் அதை 'தொடாதே'' என்றேன். இப்பொழுது அது'அது' அல்ல என்று தெரிந்து கொண்டேன்' .'ஆயிரம் வார்த்தைகளில் சொல்லும் ஒரு செய்தியை ஒரே ஒரு படம் விளக்கும். 'ஆதலால்' உருப்பதிவி' ஒரு உருப்படியான கருவியே!.
அதை கையாள்வோரின் கற்பனை-கலை-டெக்நிக்-திறமும் அதற்கு மெருகு சேர்க்கிறது.
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
I am ok brother crown your regular attentence here in A.N gives me a good feeling same like drinking ginger tea after suhoor meal thanks for entertaining us with your tamilpulamai
கேமராவினால் மனிதச முதாயம் நிறையவே நண்மைகள் அடைந்து இருப்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. 'பாஸ்போட், அடையாள அட்டை, கூப்பன், திருமண வைபவம், பிறந்தநாள் விழா, தபால் தலையில் தியாகிகளின் படம், சுற்றுல்லா பயணம் போன்றவற்றை பல ஆண்டுகள் கழித்தும் பார்த்து மகிழ படம் எடுத்து கொடுப்பதும் இந்த கேமராதானே!.
எந்த 'நேரத்தில்' இருட்டு அறை' என்று லத்தின்காரர்கள் அதற்கு பெயர் வைத்தார்களோ? தெரியவில்லை. அது நித்யானந்த சுவாமிகளின் இருட்டறை லீலைகளை டி.வி.சேனலில் படம் பிடித்து காட்டிவிட்டது. பெயருக்கு தகுந்த செயல்!
S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்
ஜாஹிர் உன் நினைவலைகள் சிதரிடவில்லை வாழ்த்துக்கள் மிக்க சந்தோசம்
உன் முகம் கண்டு மூன்று மாமங்கம் ஓடிவிட்டது
மீன்டும் என்று சந்திப்போமோ இறைவன் அறிவான்
அமா அபு இபு நான்
தெரியாமல்த்தான் கேட்கின்றேன் நானும் இருட்டரையில் இருந்தேன் நானும் இருட்டரயில் இருந்தேன் என்று இருட்டரைக்கு போட்டி அதிகமாக இருக்கின்றதே!!!!!!!!!!
இருட்டரை என்பது கடுமையான கிரிமினல்களுக்கு கொடுக்கப்படும் இடம் வல்லவா அப்போ.............?
மன்சூர் காக்கா:
இருட்டறை அது நிழற்படங்களின் கருவறை !
அற்புதங்களையும், அந்தரங்கங்களையும், ஆதாரங்களையும் வெளிச்சம் போட ஒதுங்கும் கறுப்பு அறை ! :)
கிரிமினல்களை ஒதுக்குமிடம் வேறு, கிரியேட்டிவிட்டியின் ஒப்பனை அறை வேறு !
எழத்துப் பிழை, கருத்துப் பிழை, மொழி வேற்றுமை, கருத்து வேற்றுமை, ஆகிய தடை ஏதுமில்லாமல் கண்னால் மட்டும் உற்று நோக்கி உற்று அறியும் வாய்ப்பை தருவது படம்-அதை தேடி வேட்டையாடி சுட்டுகொண்டு வரும் துப்பாக்கிதான்' கேமரா. .இது 'ஓசை இல்லா சூட்டிங்.. இது ரத்தமும் சிந்தாத உயிரும் போகாத ஒரு அஹிம்சா வேட்டை!.
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
அபு இபு சும்மா தமாஷா எடுத்துவிட்டேன்
அதுக்காக அடேய்ங்கப்பா கருவறை வரை போய்ட்டியப்பா
"அற்புதங்களையும், அந்தரங்கங்களையும், ஆதாரங்களையும் வெளிச்சம் போட ஒதுங்கும் கறுப்பு அறை"
இந்த மாதிரி எதாவது அற்புத வசனங்கள் உன்னிடமிருந்து புறப்படும் என்றே அந்த அம்பை சும்மா விட்டுப்பார்த்தேன்
மாஷா அல்லாஹ் அபு இபு கடுமையான தேர்ச்சிதான்.
கவணித்தீர்களா முஹம்மது பாரூக்கின் உவமையை
"எழத்துப் பிழை, கருத்துப் பிழை, மொழி வேற்றுமை, கருத்து வேற்றுமை, ஆகிய தடை ஏதுமில்லாமல் கண்னால் மட்டும் உற்று நோக்கி உற்று அறியும் வாய்ப்பை தருவது படம்-அதை தேடி வேட்டையாடி சுட்டுகொண்டு வரும் துப்பாக்கிதான்' கேமரா. .இது 'ஓசை இல்லா சூட்டிங்.. இது ரத்தமும் சிந்தாத உயிரும் போகாத ஒரு அஹிம்சா வேட்டை"
மிகவும் அருமையான உவமை
பாரூக்கின் வரிகளில் கேமரா, சூட்டிங் என்ற வார்த்தைகளை மட்டும் அழித்துவிட்டு ஒரு விடுகதையாகவே இதை மற்றவர்களிடம் கேட்கலாம்.
பெரியவர் மூத்த சகோதரர் ஃபாரூக் காக்கா அவர்கள் சொன்னது....
//"எழத்துப் பிழை, கருத்துப் பிழை, மொழி வேற்றுமை, கருத்து வேற்றுமை, ஆகிய தடை ஏதுமில்லாமல் கண்னால் மட்டும் உற்று நோக்கி உற்று அறியும் வாய்ப்பை தருவது படம்-அதை தேடி வேட்டையாடி சுட்டுகொண்டு வரும் துப்பாக்கிதான்' கேமரா. .இது 'ஓசை இல்லா சூட்டிங்.. இது ரத்தமும் சிந்தாத உயிரும் போகாத ஒரு அஹிம்சா வேட்டை"//
முற்றிலும் உண்மை !
பிழைகளை - பிழையற பதியும் இந்த கேமரா ! :)
அன்பின் தம்பி மன்சூர் அவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம்.
//மாஷா அல்லாஹ் அபு இபு கடுமையான தேர்ச்சிதான்.
கவணித்தீர்களா முஹம்மது பாரூக்கின் உவமையை//
இந்தத் தளத்தில் அவ்வப்போது ஒரு இளைஞர் போல வந்து கருத்திடும் எஸ். முகமது பாரூக் அவர்கள் இந்தப் பதிவைத்தந்து இருக்கிற சாகுல் ஹமீது அவர்களின் வாப்பா ஆவார்கள். எனக்கு மச்சான்.
ஜாகீருக்கு பாசமுள்ள மாமா .
சி. எம். பி. லைனில் குடி இருந்து வருகிறார்கள். சின்ன வயது முதல் மலேசியாவில் தொழில் செய்துவிட்டு ஒய்வு பெற்று கோலூன்றி நடந்து வருகிறார்கள். அதிரை நிருபருக்காக இப்போது எழுதுகோலூன்றி தனது அனுபவங்களை அற்புதமாக வடித்த ஒரு தொடரின் அறிவிப்பு வர இருக்கிறது. அவர்களின் கருத்துக்களில் இளமை பளிச்சிடுவதால் அப்படி எண்ணி விடக் கூடாது என்பதற்காகவே இந்த அறிமுகம் தங்களுக்கு.
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றியும் துவாவும்
இ.அ. காக்கா நான் உங்களுக்கு நன்றி சொல்ல பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்
உரிய நேரத்தி என் கண்களைத்திறந்தீர்கள்
உண்மையிலேயே பாரூக் காக்கா யார் என்று எனக்கு தெரியாது அவர்களின் எழுத்துக்களில் நீங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் இளமை பளிச்சிடுவதால் நான் என்னைவிட இளமையானவராக இருக்கும் என்றுதான் நான் பாரூக் என்று தலையில் அடித்தார்போல் உச்சரித்துவிட்டேன் அல்லாஹ் மன்னிக்கனும்.
என்னைவிட வயது மூத்தவர்களை நான் ஒருபோதும் அரேபியர்கள் அழைப்பது போன்று அழைக்கும் பழக்கமில்லாதவன்
பாரூக் காக்கா அவர்களையும் அவர்களின் தனயன் சாகுல் அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு மிகவும் நன்றி
ஜசாக்கல்லாஹ் க்ஹைர்
ஆனாலும் நானும் சி எம் பி லேனில் தான் வாழ்ந்து கொன்டிருக்கின்றேன் இவர்களை இன்னும் எனக்கு பிடிபடவில்லை இவர்களின் வீடு எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை சிந்தித்தவனாக இருக்கின்றேன்
காக்கா என்னைபற்றி சிறு அறிமுகம்
நான் சீப்சைடு யாகூப்(மாமா) அபுல்காசீம் (சிங்கப்பூர்)மாமா இவர்களில் அபுல்காசீம் அவர்களின் மருமகன்
புரியவில்லை என்றால் இன்னும் விளக்கம் தருகின்றேன்
உங்களைப்பற்றியும் எனக்கு சிறு அறிமுகம் தந்தால் நன்றாக இருக்கும்
Post a Comment