Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"அம்மா" ஆஸ்பத்திரியில்… வீடே பட்டினி! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2011 | , , , ,

அரிசியும் பருப்பும்
அடுக்குப் பானையிலே;
உப்பும் புளியும்
தக்கரிலே இருக்கு

மாவடுவும் மசாலாவும்
தகர டப்பாக்குள்ளே
சீனியும் சிறுகடுகும்
சிவப்புநிற குடுவையிலே

கண்ணாடி போத்தலிலே
கல்கண்டு இருக்கு
காகிதப் பொட்டலத்தில்
கருமிளகு மடித்திருக்கு

மஞ்சளும் மல்லித்தூளும்
அஞ்சறைப் பெட்டிக்குள்ளே
நெஞ்சையள்ளும் நிறத்தில்
பிஞ்சுக் கத்தரி இங்குண்டு

அத்தனைப் பொருட்களும்
அடுக்களையில் இருக்க
அம்மா நீ இல்லை
ஆக்கி அதைக் கொடுக்க

காயிருக்கு கறி இருக்கு
கழுவித் தர ஆளிருக்கு
கறிசோறு கிளறித்தர
தாயில்லை வீட்டுக்குள்ளே

ஊருக்குள் நோய் வந்து
உலகையே அழித்தாலும்
சொற்ப நேரம் பிந்தாமல்
சோறு தந்தாய் நீ யம்மா

தாய்மை மணக்கும் உன்
தயவு நோய் தீர்க்கும்
தைலம் மணக்குதின்று
தாய் உந்தன் தேகத்திலே

ஒற்றைத் தலைவலிக்கே
மடி தந்த மகராசி
மருத்துவமனை படுக்கை
மடியாகிப் போனதம்மா

சேர்த்துவைத்த செல்வமெல்லாம்
செலவழிக்கச் சம்மதமே
முடக்கிய நோய் நீங்கி
மீண்டு நீ வருவதற்கே

பட்டம் படித்ததில்லை
பட்டயமும் பெற்றதில்லை
பாசம் பயிற்றுவிக்கும்
பல்கலைக் கழகம் நீ

வீடே பசித்திருக்கு
வீட்டுப் பூனைப் படுத்திருக்கு
வேகமாக நீ வந்து
விருந்தொன்று வைப்பாய் அம்மா!

- சபீர்
Sabeer abuShahruk

41 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைப்பைப் பார்த்ததும் தேர்தல் ஷாக்கோன்னு நெனச்சுட்டேன் !

//ஒற்றைத் தலைவலிக்கே
மடி தந்த மகராசிக்கு
மருத்துவமனை படுக்கை
மடியாகிப் போனதம்மா//

ஒற்றைத் தலைவலி ! - வேதனைப் பட்டவர்களுக்குத்தான் தெரியும் !

//பட்டம் படித்ததில்லை நீ
பட்டயமும் பெற்றதில்லை
பாசம் பயிற்றுவிக்கும்
பல்கலைக் கழகமம்மா//

ஆஹா ! பெத்த தாயைத்தான் சொல்கிறீர்கள் என்று(ம்) எங்களுக்குத் தெரியும் இருந்தாலும் உள்ளாட்சித்த் தேர்தலிலே உள்ள ஆட்சியிலே இருப்பங்களையோன்னு தொண்டர்படை போஸ்டர் அடிக்காமல் இருந்தால் சரி !

:)

ZAKIR HUSSAIN said...

உன்னுடைய கவிதை கபிலன் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கு...அத்தனை வரிக்குள்ளும் அர்த்தம் பொதிந்திருக்கு.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

அம்மாவுக்கு ஓட்டுப் போட, அம்மா வந்து விடுவாள்! அழாதே அம்மா!
- வாவன்னா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவிகாக்கா,

நீண்ட நாட்களுக்கு பிறகு கருத்திடுகிறேன்.

அலுவலகத்தில் கடுகடுத்தவனின் (மேலாளர்) இம்சையில் நொந்து போயிருந்த எனக்கு தங்களின் கவிதை வரிகள் நல்ல ஆறுதல்.

ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த வரிகளும் எங்கள் அனுபவம்.

கண் கலங்க வைத்துவிட்டது இந்த கவிதை. தாயின் பாசத்தை அறிந்தவனுக்கு மட்டுமே தான் தெரியும் அவர்களின் இழப்பு.

அப்துல்மாலிக் said...

அடுப்படியை பற்றி சரசரவென சொன்ன விதம் அருமை

அம்மாவின் கைப்பக்குவம் கிடைக்க என்றென்றும் தவமிருக்கனும்

அருமை காக்கா

Shameed said...

//அரிசியும் பருப்பும்
அடுக்குப் பானையிலிருக்கு
உப்பும் புளியும்
தக்கரிலே இருக்கு//

கவிதை ரொம்ப
டக்கர இருக்கு

"தக்கர்"
"அஞ்சரைப்பெட்டி"
இவைகளெல்லாம்
அடுப்பன் கரயில்
காணமல் போய்
வெகுகாலம்
ஆச்சு

அதிரை என்.ஷஃபாத் said...

/*
அத்தனைப் பொருட்களும்
அடுக்களையில் இருக்க
அம்மா நீ இல்லை
ஆக்கி அதைக் கொடுக்க*/

Salute Sabeer Kaka !!!

இந்த வரிகட்கு
ஈடுஇணை இருக்கா?
சந்தம் இனிக்கிறது
சர்க்கரை கணக்கா!!

crown said...

அதிரை என்.ஷஃபாத் சொன்னது…
/*
அத்தனைப் பொருட்களும்
அடுக்களையில் இருக்க
அம்மா நீ இல்லை
ஆக்கி அதைக் கொடுக்க*/

Salute Sabeer Kaka !!!

இந்த வரிகட்கு
ஈடுஇணை இருக்கா?
சந்தம் இனிக்கிறது
சர்க்கரை கணக்கா!!
-----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அம்மா என்கிற சொந்தம் இல்லாமல் எல்லாம் கசப்பே!

crown said...

இந்த தலைப்பை எங்கேயோ பார்த்து,கேட்டமாதிரி இருக்கே?அதான் பூமாலையை ஒரு அறிஞருக்கு போடுவதும்,வானரமானதுக்குப்போடுவதும் உள்ள வித்தியாசம். அறிஞன் கை பட்டதும் அது எப்படியெல்லாம் மாறி இருக்கு என்பதற்கு இந்த கவிதை ஒரு சாட்சி. மேலும் இது தலைப்புமட்டுமே கொடுத்து எழுதச்சொன்னதால் இப்படி தலைப்புக்குமட்டுமே எழுதியுள்ளார் இந்த கவிஞர். எனக்கு கொடுத்த தலைப்பில் இணைப்பாக சூழ்னிலையையும் சேர்த்தே கொடுத்தார் இந்த கவிஞரின் நண்பர் எனக்கு ஓர வஞ்சனையா? நெருப்பு கணத்தில் சமைத்த கவிதை என்ணுடையது.அடிப்படையில் அடுப்பு இருந்தாலும் அம்மா இல்லாமல் சமைக்க முடியாது என்பது நம் கவிஞரின் வாதம் எல்லாம் சரிதான். கவிஞருக்கு முன் நான் எல்லாம் எம்மாத்திரம்?(ஜஹீர் காக்கா உங்களுக்கு இருக்கு போனில் )கவிஞரே கலக்கிடீங்க பிறகு விபரமாக எழுத வருகிறேன் இன்ஷால்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அம்மாவின் அளவிடமுடியா மகிமைக் கவி மிக அருமை!

அம்மாவுக்கு அசெளகரியமென்றால் வயிறும் பசித்திருக்கும்
அடுக்களையில் பூனையும் படுத்திருக்கும்
ஆனால் இங்கோ அமீபா புகுந்ததுபோல்
அரசியலம்மா புகுந்தது ஏனோ!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆனால் இங்கோ அமீபா புகுந்ததுபோல்
அரசியலம்மா புகுந்தது ஏனோ!//

அதெல்லாம் ஒன்னுமில்லை தம்பி, உடன்பிறப்புளை மட்டுமே கண்டு வந்த (அந்தக் கால) தெருக்களில் இன்று அம்மா ! அம்மா ! என்று அம்மாவின் ஆசி பெற்ற ரத்தத்தின் ரத்தங்களையும் கானும்போது அம்மா(ன்னு) சொல்லி மாடி வீடாகவே இருக்கும் தெருக்களில் ஓட்டைப் போடச் சொன்னாங்களா அதான் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அந்தக் கால தெருக்களில் இன்று அம்மா ! //
அப்படீன்டா தோழர்கள்,சமுதாயங்கள்,ரசிகர்கள், உயிரினும் மேலான உடன்பிறப்புகள்,உங்கள் வீட்டுப்பிள்ளை என்று சொல்லிவரும் பெருசுகள் நிலமைகள் எல்லாம் பாவம் தானோ!

ZAKIR HUSSAIN said...

///அதிர்ஷ்டவசமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூர்வசொத்தில் வளர்ச்சியும் உபரி வருமானமும் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடந்தேறும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
. பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். புத்திரர்கள் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். ///

மேற்குறிப்பிட்ட சுகசுமூகங்கள் சஞ்சரிக்க உடனே செய்ய வேண்டிய பரிகாரம் ;

குளித்து முழுகி, வெள்ளை கம்ஸு சட்டை , கைலி அனிந்து "INSTALL MISSING PLUG IN" என்ற தொந்தரவை இந்த வலைத்தளம் லோட் ஆகும்போது வருவதை அகற்றவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மேற்குறிப்பிட்ட சுகசுமூகங்கள் சஞ்சரிக்க உடனே செய்ய வேண்டிய பரிகாரம் ;
குளித்து முழுகி, வெள்ளை கம்ஸு சட்டை , கைலி அனிந்து "INSTALL MISSING PLUG IN" என்ற தொந்தரவை இந்த வலைத்தளம் லோட் ஆகும்போது வருவதை அகற்றவும்.///

ஆஹா ! டெக்னிக்ல டீம் என்னங்கப்பா செய்றீங்க... சீக்கிரம் இந்தப் பரிகாரத்தைச் செய்யுங்கப்பா அசத்தல் காக்காவின் அதிகாலை / நன்பகல் பலன் கைகூடட்டும் !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

ZAKIR HUSSAIN சொன்னது…
///அதிர்ஷ்டவசமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூர்வசொத்தில் வளர்ச்சியும் உபரி வருமானமும் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடந்தேறும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
. பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். புத்திரர்கள் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். ///

மேற்குறிப்பிட்ட சுகசுமூகங்கள் சஞ்சரிக்க உடனே செய்ய வேண்டிய பரிகாரம் ;

ஜாஹிர் காக்கா,

பாத்து "மருத்துவர் காக்கா" என்ற பட்டத்தை திரும்பப்பெற்றுக்கொண்டு "கைரேகை வல்லுனர்" என்ற புதுப்பட்டத்தை தந்துவிடப்போகிறார்கள்?

குறிப்பு : கைரேகை, ஜோதிடம், நட்சத்திர சாஸ்த்திரம், ராசி பலன், குறிசொல்லுதல் இவைகளெல்லாம் இஸ்லாத்தில் அன்றே பிடுங்கி எறியப்பட்ட நச்சுப்பற்கள்.

உதாரணம் : காலண்டரில் குறிக்கப்பட்ட (முகூர்த்த) நல்ல நேரத்தில் உலகில், நாட்டில், மாநிலத்தில், மாவட்டத்தில், ஊரில், தெருவில் இறுதியாக வீட்டில் உள்ள எத்தனையோ பேர்களுக்கு தீய காரியங்கள் பல நடந்து விடுகின்றன.

அதேபோல் ராகு, எமகண்டம் (கெட்ட நேரம்) குறிக்கப்பட்ட நேரங்களில் உலகின் மேற்கண்ட வட்டத்திற்குள் இருக்கும் எத்தனையோ நபர்களுக்கு நல்ல பல காரியங்கள் நடந்தேறி விடுகின்றன.

சிந்திக்கத்தூண்டும் சன்மார்க்கமே எம் மார்க்கம் இஸ்லாம். எல்லாம் படைத்தவனின் கட்டுப்பாட்டிலேயெ நடந்தேறக்கூடியதாக இருக்கிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

ZAKIR HUSSAIN said...

To Brother மு.செ.மு. நெய்னா முஹம்மது,

ராசி பலன் ஸ்டலில் நான் எழுதினால் அதை நான் சப்போர்ட் செய்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா?...முன்பு ஒரு முறை பத்திரம் எழுதுவது போல் ஒருவருக்கு இ-மெயில் அனுப்பியிருந்தேன்..அப்டீனா நானும் பத்திரம் எழுதுகிறேனா?

எழுதுகின்ற விசயத்தை வித்யாசமாக எழுதுவது [ யார் மனதும் பாதிக்காமல் ] என் சின்ன வயது தொடங்கிய பழக்கம். [ சபீரிடம் கேட்டால் இது பற்றி நிறைய சொல்வான் ]


நண்பன் ஹாஜா இஸ்மாயிலிடமும் [ உரிமையாளர்: "அதிரை ஹாஜாவின் கைவண்ணம்" வலைத்தளம் ] மற்றும் நண்பன் ரியாஸ் [ அதிரை ரியாஸ் வலைத்தளம் ] இருவரும் என்னைப்பற்றி சொல்வார்கள் ...என்ன கமெண்ட் எழுத குறைந்தது 2 வருடம் ஆகும்...பரவாயில்லையா?

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//நண்பன் ஹாஜா இஸ்மாயிலிடமும் [ உரிமையாளர்: "அதிரை ஹாஜாவின் கைவண்ணம்" வலைத்தளம் ] மற்றும் நண்பன் ரியாஸ் [ அதிரை ரியாஸ் வலைத்தளம் ] இருவரும் என்னைப்பற்றி சொல்வார்கள் ...என்ன கமெண்ட் எழுத குறைந்தது 2 வருடம் ஆகும்...பரவாயில்லையா? //




நான் ஒருத்தன் இங்கே (DAMMAM) இருக்கேன்

அதிரைநிருபர் said...

//ZAKIR HUSSAIN சொன்னது… குளித்து முழுகி, வெள்ளை கம்ஸு சட்டை , கைலி அனிந்து "INSTALL MISSING PLUG IN" என்ற தொந்தரவை இந்த வலைத்தளம் லோட் ஆகும்போது வருவதை அகற்றவும்.//

சகோதரர் ஜாஹிர் தங்களின் வேண்டுக்கோளை ஏற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது நம் அதிரைநிருபரில்.நீங்கள் குறிப்பிட்டுள்ள "INSTALL MISSING PLUG IN" என்ற message மீண்டும் வந்தால் தெரிவிக்கவும்.

ZAKIR HUSSAIN said...

To Tuan Haji Shahul...

//நான் ஒருத்தன் இங்கே (DAMMAM) இருக்கேன் //

உங்களை மறக்கவில்லை...நம் ரியாஸ் கமன்ட்ஸ் எழுத எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றி எழுதத்தான் அப்படி எழுதினேன்.

நீங்கள் சொன்ன அந்த கூகுல் டாக் பட்டன் இங்கு வீட்டில் சொல்லி எல்லோரும் சிரித்தோம். இருந்தாலும் கூகுல் டாக் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக;

ZAKIR HUSSAIN said...

To Adirai Nirubar..

the message on missing plug in is NOT appearing now.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAKIR HUSSAIN சொன்னது… நீங்கள் சொன்ன அந்த கூகுல் டாக் பட்டன் இங்கு வீட்டில் சொல்லி எல்லோரும் சிரித்தோம். இருந்தாலும் கூகுல் டாக் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக;//

அடுத்த தலைப்பு வந்தாச்சு, விஞ்ஞானியாக்கா ரெடியா?

sabeer.abushahruk said...

//கூகூனு டாக்வதுதான் காலப்போக்கில் மறுவி கூகுள் ட்டாக் ஆனது//

//கூட்டுக்குள் டாக்வதுதான் இந்த ரீமிக்ஸ் யுகத்தில் சுருங்கி கூகுள் ட்டாக் ஆனது//

//நீங்கள் டாக், நாங்கள் டாக் என்று பிரித்துப்பேசாமல் கூகுள் ட்டாக் என்று கேட்டு வாங்குங்கள்... //

...எனக்குத் தெரியலப்பா யாராவது ட்டாக்குங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

அப்படின்னா கூட்டமைப்பு டாக்குன்ன்னு சொல்ல வர்ரீங்களா!?

சரி இருகிளிகள் பேசுவதை கூண்டுக்குள்தான் இருக்கனும் அதுதானே சரி !!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு): இதோ வருகிறேன்னு சொல்லிட்டு போனே எங்கே இருக்கே சீக்கிரம் வா ! "அம்மா" ஆஸ்பத்தியிலே வீடே பட்டினி மேடை ஏறனும் அவர்களே !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மேலே அம்மா இல்லாத வீட்டின் சோகம்.

கீழே மருத்துவர் சோதிடம் பார்க்கிறார்.

கவனமாக வந்து மூட நம்பிக்கைகள் எது என்பதை எடுத்துச்சொல்கிறார். புரட்சி புயல் மு.செ.மு.

கருத்துப்போட 2 வருடம் எடுத்துக்கொள்ளுபவர்களிடம் கருத்துக் கேட்க சொல்கிறார். மருத்துவர்.

கூகுள் டாக் பற்றி சொல்லி விட்டு தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்கிறார். அதிரை கவி

கூகுள் டாக் பற்றி சிறு குறிப்பு வரைக! எப்படி வரைவது என்பதை விஞ்ஞானியார் யோசிக்கிறார். ( யோசிக்க வைத்தவர் தளபதி தம்பி).

கருத்தை முழுமை படுத்த உடனே மேடை ஏற கருத்து கவிஞருக்கு அழைப்பு (எங்கிருந்தாலும் வரவும்).

ஒருங்கிணைப்பாளர் சகோ. அபுஇபுறாகிமிற்கு ஒரு சோடா உடைத்து தரவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எழுதுகின்ற விசயத்தை வித்தியாசமாக எழுதுவது [யார் மனதும் பாதிக்காமல்] என் சின்ன வயது தொடங்கிய பழக்கம். [ சபீரிடம் கேட்டால் இது பற்றி நிறைய சொல்வான் ]//

அதனாலத் தானே நீங்கள் "அசத்தல் காக்கா" !

அலாவுதீன்.S. said...

பிள்ளையின் உண்மையான ஏக்கம்
கவிதை மனதை கலங்க வைக்கிறது.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்தப் பதிவை வாசித்த அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//நீங்கள் சொன்ன அந்த கூகுல் டாக் பட்டன் இங்கு வீட்டில் சொல்லி எல்லோரும் சிரித்தோம். இருந்தாலும் கூகுல் டாக் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக;//

ஒன்றுக்கும் உதவாத பொருட்களை உழைக்காத ஆட்களை வீணாப்போன பொருட்களைத்தான் அட்டு (@ )என்று சொல்கின்றோம் ஆனால் நவீன கண்டுபிடிப்பான email களை அந்த அந்த கம்பெனிகளே அட்டு என்று போடுவது ஏன் உதாரணமாக @gmail.com / @yahoo.com மேலும் இப்படி பல அட்டுக்களை சொல்லலாம், ஏன் இப்படி @ களாய் போட்டார்கள் என்று புரியவில்லை , இன்னுமொரு சந்தேகம் nokia கம்பெனிக்கும் மலையாளத்துக்கும் என்ன சம்பந்தம் ஏன் நோக்கியா ( பார்த்தியா ) என்று மலையாள பெயர் வைத்தார்கள் ?

ஒரு சிறு குறிப்பு போதுமா?

crown said...

Shameed சொன்னது…
நான் ஒருத்தன் இங்கே (DAMMAM) இருக்கேன்
----------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.தாங்கள் ஆம் என்றாலும் . இல்லையென்றாலும் ,தாமதமே என்றாலும் இதயத்தில் எப்பொழுதுமே இதயத்தில் நின்றாளும் படித்தான் இருக்கீங்க,என அனைத்து நட்புகளும் ஏற்று கொள்கின்றன.
--------------
(தமாம்=தாம்+ஆம்=தமாம், ஆம் ,இல்லை என்பது எதிர்பதம்)என்றாலும் =என்றும்+ஆளும்=என்றாலும்.இதயத்தில் நின்றாளும்= நின்று +ஆளும்.

crown said...

அரிசியும் பருப்பும்
அடுக்குப் பானையிலே
...............

மஞ்சளும் மல்லித்தூளும்
அஞ்சறைப் பெட்டிக்குள்ளே
நெஞ்சையள்ளும் நிறத்தில்
பிஞ்சுக் கத்தரி ........

அத்தனைப் பொருட்களும்
அடுக்களையில் இருக்க
அம்மா நீ இல்லை
ஆக்கி அதைக் கொடுக்க.
--------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சமையலுக்குத்தேவையான பொருள்ளெல்லாம் இருக்கு. ஆனாலும் அதன் பயன்? கைக்கு எட்டியது ஏதும் வாய்க்கு வாய்கவில்லை காரணம் அம்மா அங்கே இல்லை.சேய்கள் இங்கே பசித்திருக்க நோய்க்கு தாய் தற்காலிக உணவானால்.அங்கே அன்பு குழந்தைகள் இல்லாமல் பாசப்பட்டினி,இங்கே அம்மா வந்து சமைக்காமல் வயிறுப்பட்டினி.

crown said...

காயிருக்கு கறி இருக்கு
கழுவித் தர ஆளிருக்கு
கறிசோறு கிளறித்தர
தாயில்லை வீட்டுக்குள்ளே
-----------------------------
சுத்தம் சொறுபோடும்னு சொன்னாலும் தூய்மை நிறைந்த தாய்மை அங்கே இல்லாதபோது
எந்த சுத்தமும் ,சத்தமில்லாமல் விலகும். சுத்தமாய் ஒரு பருக்கைகூட கிடைக்காது.எல்லாம் தாய் இருந்தாலே கிட்டும். நிரம்பும் சோறு தட்டும்.
உரியில் சில அஃறினை பொருள் இருந்தாலும். உரி உயந்த இடத்தில் இருந்தாலும் உரியை விட உயர்ந்த தாய் அங்கே இல்லை யென்றால் அஃறினை பொருள் எல்லாம் பொருளற்று போகும் அங்கே உயர் தினையாம் நாம் எல்லாரும் நம் தாய் என்னும் நம்மைவிட உயர்தினை இல்லாமல் அஃறினைபோல் சடம்தான்.

crown said...

வீடே பசித்திருக்கு
வீட்டுப் பூனைப் படுத்திருக்கு
வேகமாக நீ வந்து
விருந்தொன்று வைப்பாய் அம்மா!
------------------------------------------------
நீவந்து வயத்துல பால்வார்கனும். பூனைக்கும் உன் கையால் பால் வார்க்கனும்.பால் போல் உன் வெள்ளை உள்ளம் பூரிக்கவே நீ வீடு வருவாய் அம்மா! நீ வந்து ஒருவாய் சோறு தந்தாலும் உடல் சோர்வும், உள்ளச்சோர்வும் நீங்கும் எங்களை ஊட்டி வளர்தவளே நீயே எங்களின் ஊட்டம், நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் உடலுக்கும், உள்ளத்துக்கும் வாட்டம். நீ எங்களருகில் இல்லாத ஒவ்வொரு மணித்துளியும் நட்டம்.அம்மா ! என்றும் நீ ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ அல்லாஹ்வை கெஞ்சும் என் பிஞ்சுமனம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.கவிஞர் அவர்களுக்கு.ஒவ்வொரு பொருளையும் அதன் இருக்கும் இடம் சொல்லி பொருள் உணரும் வகையிலும் அந்த பொருளேல்லாம் அன்பெரும் பெனும் பொருள் முன்னே சிறியது என்பதையும் அதன் அதன் இருப்பிடமும் இந்த கவிதையின் ஒரு பாத்திரமாய் அழகழகாய் அடுக்கி அஞ்சரை பெட்டி முதல் எல்லாத்தையும் பத்து பன்னிரென்டு வரிகளில் பின்னி எடுத்து விட்டீர். பெரும்காயமானாலும் அது அம்மா சமைக்காமல் வீட்டில் மணக்காது காரணம் அம்மா இல்லாமல் உள்ளமெல்லாம் பெரும் காயமாகிபோய்விடுதலும் .அருமையான கவிதையை சமைத்து இப்படி பாசத்தை பறிமாறி எங்கள் அன்பை புதுபித்துகொள்கிறீர்கள்.

Yasir said...

துபாய் “கணிப்பொறி(GITEX)” கந்தூரி விழாவில் ரொம்ப பிஸியாக உள்ளதால்...கருத்திட தாமதம்...”அம்மா “ இல்லையென்றால் எல்லாமே ”சும்மா”தான்...என்று கவிக்காக்கா மறைந்துபோன பல பொருட்களையெல்லாம் கண்முன்னே நிறுத்தி...மனதை கனமாக்கும் கவிதை வடித்து இருக்கிறீகள்.....

Ameena A. said...

அஸ்ஸலமு அலைக்கும்வ் வரஹ்,

கவிதையில் காணும் காட்சிகளைக் கண்டிராவிட்டாலும், வாசிக்கும்போது அப்படியே கண் முன்னால் நிறுத்துகிறது உங்களின் வரிகள் சகோதரரே.

உங்களை இங்கே நம் சகோதரர்கள் முறை வைத்து அழைப்பது மிகச் சரியே.

உங்களின் கவிதைக்கு நான் மட்டுமல்ல எனது குடும்பத்தினர் அனைவரும் வசப்பட்டுவிட்டோம்.

அபு ஆதில் said...

அடுக்களையேயானாலும்
ஆட்சிகட்டிலேயானாலும்....அம்மா இல்லையென்றால் எல்லாம் சும்மாதான்.அம்மாவையும் அழ வைக்கும் பாசமான வரிகள்

நட்புடன் ஜமால் said...

சேர்த்துவைத்த செல்வமெல்லாம்
செலவழிக்கச் சம்மதமே
முடக்கிய நோய் நீங்கி
மீண்டு நீ வருவதற்கே
]]

என் கண்ணீரை மொழி பெயர்த்துள்ளீர்கள் ...

வார்த்தைகளில்லை என்னிடம் ...

Shameed said...

crown சொன்னது…
//(தமாம்=தாம்+ஆம்=தமாம், ஆம் ,இல்லை என்பது எதிர்பதம்)என்றாலும் =என்றும்+ஆளும்=என்றாலும்.இதயத்தில் நின்றாளும்= நின்று +ஆளும்.//

மொழி வித்தகர் தம்மாமை கணக்குக்குள் புகுத்திய விதம் அருமை

ZAKIR HUSSAIN said...

நட்புடன் ஜமால் சொன்னது…

சேர்த்துவைத்த செல்வமெல்லாம்
செலவழிக்கச் சம்மதமே
முடக்கிய நோய் நீங்கி
மீண்டு நீ வருவதற்கே

என் கண்ணீரை மொழி பெயர்த்துள்ளீர்கள் ...

வார்த்தைகளில்லை என்னிடம் ...


சபீர் உன் கவிதை வரிகளுக்கு கிடைத்தப் மிகப்பெரிய பாராட்டுதலாக இதை கருதுகிறேன்.

எப்போதும் கவிதை வரிகள் மற்றவர்கள் மனதுக்குள் ஏதாவது செய்ய வேண்டும்,.

கவிதையின் 'நிறைவு" அந்த தருணம் தான்.

சத்ரியன் said...

அம்மாவின் அவசியத்தை உணர்த்தும் அற்புத கவிதை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு