Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 15 - ஏமாற்றும் வித்தைகள் பலவிதம் ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 15, 2014 | , , ,

இரண்டு பேர்கள் சேர்ந்து தொழில் தொடங்கி நடத்திட முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இறங்கினார்கள். சம அளவில் பங்கு போடுவது, சம அளவில் லாப நட்ட கணக்குகள் பிரித்துக் கொள்வது என்பது திட்டம். இருவரில் ஒருவர் வியாபரத்தில் வேலை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதுபோல வேலை செய்பவதற்குண்டான  சம்பளத்தை வேலை செய்பவர் எடுத்துக் கொள்ள வேண்டும்! ஷரத்துகள் முடிவு காணப்பட்டு, தொழில் ஆரம்பித்து நன்றாக வளரவும் ஆரம்பித்தது. 

சிறிது காலம் சென்றது.வேலை பார்க்கும் பார்ட்னரில் ஒருவர் பொய்யான தகவல்களை புனைந்து அந்தக் கடையை எடுத்துக் கொள்கிறார். ஏகபோக உரிமை அவருக்கு என்றாகியது.

இன்னொரு சம்பவம் ! இரண்டு பேர்களுடன் ஆரம்பித்த ஒரு நிறுவனம் செழித்து வளர்ந்து - உச்சம் தொடுகிறது. இரண்டு பங்குதாரர்களும் தங்கள் பங்குகளை மகிழ்ச்சியாக பிரித்துக் கொள்கிறார்கள் .காலம் சுழன்றது ! வியாபாரம் நொடிக்கும் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. பார்ட்னரில் ஒருவர் கழன்று கொள்கிறார். அடுத்த பங்கு பங்குதாரர் முழு நஷ்டத்தையும் சுமந்து கடன்காரராகிறார்,

உதாரணத்துக்கு இரண்டே இரண்டு சம்பவங்களை கோடிட்டு காட்டியிருக்கிறோம். இது இன்று சர்வசாதாரனமாகப் போய்விட்டது.

அந்த இரண்டும் வேறு எங்கோ நடைபெற்றதல்ல, நம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற சம்பவங்கள்தான் அவைகள். இப்படி வியாபாரம், கொடுக்கல் - வாங்களில் நேர்மை இல்லாது இருந்து,கொண்டதே கோலம், கண்டதே காட்சி என்று நடக்கும் சம்பவங்கள் எத்தனை, எத்தனை ? பிற மத மக்களின் வாழ்வை செம்மைப் படுத்தும் படியான சட்டதிட்ட்ங்கள் அவர்கள் நம்பும் புத்தகங்களில் இல்லை. ஆனால், முஸ்லிம்களில் பலரே இப்படி பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவது ஏன் ? உலகை உய்விக்க வந்த திருக்குர்ஆன் மற்றும் நபிவாழ்வியல் நம்மிடையே இருக்க, அதைப் பின்பற்றி நடவாமல் இப்படி தான் தோணித் தனமாய் நடப்பது ஏன் ?

நம் மனைவியர் கழுத்திலும், கைகளிலும் தங்க நகை அணிந்து வலம் வர வேண்டும், நம் பிள்ளைகள் ராஜ போக வாழ்வு வாழ வேண்டும், நம் பெற்றோர் மனங்குளிர வேண்டும் நம் ஆடம்பர வாழ்வை எண்ணி என்ற எண்ணத்தின் வெளிப்பாடா இவைகள் ?

மறுமை வாழ்வு என்று ஒன்று உண்டு, அதில் எந்தத் தாயும் தந்தையும் மனைவியும், மக்களும் உதவ முடியாதே அந்த நாளை நினைத்து பயந்து நடந்தால், இப்படி ஏமாற்றுவோமா ? எல்லாவர்றையும் அல்லாஹ் நிலைநிறுத்திப் பார்ப்பானே ? என்ற ஐயம் இருந்தால் இப்படியெல்லாம் செய்ய துணிவு வருமா ?

ஆக ! இறுதியில் நமக்கு, நாம் சம்பாதித்த எதை கொண்டு போகப் போகிறோம். குர்ஆன்-ஹதீஸ் எச்சரிக்கைகளைப் பாருங்கள் !

இன்ஷா அல்லாஹ் தொடரும்

இப்னு அப்துல் ரஜாக்

9 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

மலேசியாவில்நான்சொந்தமாகஅனுபவித்தவலியின்ஓசைகள்இங்கேஎதிரொலிக்கிறது.

sheikdawoodmohamedfarook said...

இந்தக்கதையின்முதல்பகுதிஎன்னுடையது.Aமாற்றப்பட்டது நான்.[மலேசியாவில்].மதராசிலும் மலேசியாவிலும் ஒரேமாதிரித்தான் Aமாற்றுகிறார்களா?மதராஸ் காரர்கள் மலேசியகாரர்களை விடரெம்பபுத்திசாலியாச்சே! Aமாற்றுவதைகொஞ்சம் மாற்றி Aமாற்றசொல்லுங்களேன்!.

இப்னு அப்துல் ரஜாக் said...

மலேசியாவில்நான்சொந்தமாகஅனுபவித்தவலியின்ஓசைகள்இங்கேஎதிரொலிக்கிறது.
உங்கள் வலி புரிகிறது காகா.
இன்று நீங்கள் இழந்திருக்கலாம். ஆனால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் பெற்றுக் கொள்வீர்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இந்தக்கதையின்முதல்பகுதிஎன்னுடையது.Aமாற்றப்பட்டது நான்.[மலேசியாவில்].மதராசிலும் மலேசியாவிலும் ஒரேமாதிரித்தான் Aமாற்றுகிறார்களா?மதராஸ் காரர்கள் மலேசியகாரர்களை விடரெம்பபுத்திசாலியாச்சே! Aமாற்றுவதைகொஞ்சம் மாற்றி Aமாற்றசொல்லுங்களேன்!.

ஏமாற்றுக்காரர்கள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் போல.ஆனா ஒன்னு காக்கா, வினை விதைத்தவன் அதை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்.

sabeer.abushahruk said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தம்பி.

மறுமை பயம் உள்ளவன் ஏய்க்க மாட்டான்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தம்பி.

மறுமை பயம் உள்ளவன் ஏய்க்க மாட்டான்.

ஆமாம் காக்கா.
ஆனால் அந்த பயம் குறைந்து வருவது போல் உள்ளது.அல்லாஹ்தான் நம்மை காப்பாற்ற வேண்டும் .

Ebrahim Ansari said...

இஸ்லாமிய சமூகம் அடிப்படையில் ஒரு வணிக சமூகம். படித்து இருந்தாலும் படித்து இருக்காவிட்டாலும் ஒரு வணிகம் அல்லது வணிக நிறுவனத்தில் கொஞ்ச காலம் பணியாற்றி விட்டு சொந்தமாக தொழில் தொடங்குவது என்கிற ரீதியில்தான் நம்மவர்களில் பலர் சிந்திக்கிறோம்; செயல்படுகிறோம். ஆனால் எந்த அளவுக்கு எல்லோரும் இஸ்லாம் சொல்லும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தொழில் செய்கிறோம் என்பது சிந்தனைக்குரியது. இன்றைய நவீன அமைப்புகளில் சிக்கி அவைகளைக் கடைப்பிடிப் போர்தான் அதிகம். குறிப்பாக வங்கிகள் விஷயத்தில் வட்டி முதலிய பாவமான காரியங்கள் பாவம் என்று அறிந்து செய்யும் அமைப்புகள். (வட்டி பற்றி தனியாக நிறைய விவாதிக்க இருக்கிறோம்.)

ஒவ்வொரு முஸ்லிமும் எந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபடலாம்? எதில் ஈடுபடக்கூடாது? என்பதைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். எதில் வியாபாரம் செய்யலாம்? எந்த வியாபாரம் கூடாது? என்பது பற்றி மார்க்கம் அறிந்தவர்களிடம் ஆலோசனை செய்து வணிகம் தொடங்க வேண்டும்.

இன்று உலகியல் சார்ந்த ஒவ்வொரு துறைக்கும் உலகக் கல்வியை பல வருடங்கள் படிக்கிறார்கள். வியாபாரத் தொடர்பான கல்வியை மட்டுமே பல வருடங்கள் செலவு செய்து வெளிநாடுகளில் கூட சென்று படிக்கிறார்கள். ஆனால் வியாபாரம் குறித்த மார்க்க சட்டங்களைப் பற்றி படிப்பதற்கு எவ்வளவு காலம் ஒதுக்கப்படுகிறது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்? சந்தைக்கு வருவதற்கு முன் மார்க்கத்தின் பொருளாதார சட்டங்களை அறிந்திருக்கிறோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் ஒவ்வொரு முஸ்லிமும் எந்த ஒப்பந்தம் கூடும்? எது கூடாது? என்பது பற்றி படித்திருக்க வேண்டும்.

“மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர் மட்டுமே நம்முடைய கடைவீதிகளில் விற்றல் வாங்கலில் ஈடுபடவேண்டும்,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: கன்ஜுல் உம்மால் - 9865) .

( இஸ்லாமியப் பொருளாதாரச சிந்தனைகள் - அத்தியாயம் - 18 ) இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் - வணிகத்தில் நேர்மை.

இப்னு அப்துல் ரஜாக் said...

இன்று உலகியல் சார்ந்த ஒவ்வொரு துறைக்கும் உலகக் கல்வியை பல வருடங்கள் படிக்கிறார்கள். வியாபாரத் தொடர்பான கல்வியை மட்டுமே பல வருடங்கள் செலவு செய்து வெளிநாடுகளில் கூட சென்று படிக்கிறார்கள். ஆனால் வியாபாரம் குறித்த மார்க்க சட்டங்களைப் பற்றி படிப்பதற்கு எவ்வளவு காலம் ஒதுக்கப்படுகிறது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்? சந்தைக்கு வருவதற்கு முன் மார்க்கத்தின் பொருளாதார சட்டங்களை அறிந்திருக்கிறோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் ஒவ்வொரு முஸ்லிமும் எந்த ஒப்பந்தம் கூடும்? எது கூடாது? என்பது பற்றி படித்திருக்க வேண்டும்.

“மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர் மட்டுமே நம்முடைய கடைவீதிகளில் விற்றல் வாங்கலில் ஈடுபடவேண்டும்,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: கன்ஜுல் உம்மால் - 9865) .

அற்புதமான ஹதீஸ் அழகான விளக்கம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்திட்ட
வாசித்த துவா செய்த அனைத்து ஸிஸ்டர்ஸ் பிரதர்ஸ்க்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு