Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அகமும் - புறமும் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2016 | , ,

சங்க காலத்தில் அகத்தையும் (அன்பு, ஈகை) புறத்தையும் (வீரம்) பெருமைப் படுத்துவதற்காக அகநானூறு, புறநானூறு என்ற இலக்கியங்கள் உருவாகின. இலக்கியத்துக்கும் பெருமை சேர்ந்தது. ஆனால் இன்று அகமும் புறமும் நம்மைச் சிறுமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

அகம் :

அகம் என்ற சொல்லுக்கு உள், மனம் என்று பொருள். அகத்திற்கு கர்வம் என்ற பொருளும் உண்டு. தன்னைப் பற்றிய செய்திகளைப் பெருமையாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இழிவாக நினைப்பது. மனத்தினுள்ளே இதைத் தேக்கி வைத்திருப்பதால் அகம் என்று பெயர் வந்திருக்கலாம்.

இது பாவம் என்பதால் அகம்பாவம் பெரும்பாலும் பதவியில் இருப்பவர்களிடம் தான் அகம்பாவம் அதிகம் காணப்படுகிறது. இன்று அரசியலே அகம்பாவத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு அகபாவம் தோற்றால் இன்னொரு அகம்பாவம் தலை தூக்குகிறது. இரண்டு அகம்பாவங்களுக் கிடையில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

பணக்காரர்கள், படித்தவர்கள் அகம்பாவத்தின் சொந்தக்காரகள். பணக்காரரின் அகம்பாவம் அவரை நம்பி இருக்கும் ஏழைகளை மாய்க்கிறது; படித்தவர்களின் அகம்பாவம் அவர்களையே சாய்க்கிறது. அகம்பாவம் என்பது மனித இனத்துக்கே சொந்தமானது. ஒரு பிச்சைக்காரருக்கு காசைக் குறைத்துக் கொடுத்தால், “நீயே வெச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு நடக்கிறாரே! இது அவரது அகம்பாவம்.

தன் தவறை உணர்ந்தவர் கூட அதைத் திருத்திக் கொள்ளா திருப்பதற்கு அவருடைய அகம்பாவமே காரணம். தனது செயலே சரி என்ற நினைப்பு!

புறம்:

புறம் என்றால் வெளி என்று பொருள். ஒருவரைப் பற்றி அவர் அறியாத வகையில் மற்றவரிடம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு புறம் என்று பெயர்.

புறம் பேசுவது ஒரு பொழுது போக்காகவே ஆகிவிட்டது. இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது மூன்றாவதாக ஒருவர் அரூபமாக வந்து விடுகிறார். அவரது கறை போகும்வரை அவர் நன்றாக அலசப்படுகிரார். பாவம்! யாருக்கு?

புறம் பேசுவதை எல்லா மதங்களும், நீதி நூல்களும் புறக்கணிக்கின்றன. இருந்தும் மனிதன் அவற்றைப் புறந்தள்ளி விடுகிறான்.

புறம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் மனிதனுக்கு நேரம் இருப்பது. அதற்குக் காரணம், உழைப் பில்லாமல் இருப்பது. உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமல்ல, தன் வசமுள்ள செயல்களை, அது படிப்பதாக இருந்தாலும் சரி, இறைவனைத் தொழுவதாகாக இருந்தாகும் சரி, அடுத்த பணிக்குப் போகும் வரை, அதைச் செய்து கொண்டு இருக்கவேண்டும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் புறம் பேசுவதைப் பார்க்க முடியுமா? பேச முடியாமல் உழைப்பு தடுக்கிறது. எந்த நாட்டில் அனத்துத் துறைகளிலும் உழைப்பு இருக்கிறதோ அங்கே புறம் பேசுதல் இருக்காது. புறம் பேசத் துடிப்பவர்கள் தங்களைப் பற்றி தங்கள் மனத்துக்குச் சொல்லிக் கொள்ளட்டும்! தன்னை உணரும் மனப் பக்குவம் ஏற்படும். அப்புறம் புறம் புற முதுகிட்டு ஓடும்.

அகமும் புறமும் நகையும் சதையுமல்ல; இரண்டும் வெவ்வேறானவை. கேடு விளைவிக்கக் கூடிவை. இணக்மான சமுதாயத்தில் பிணக்கை ஏற்படுத்தக் கூடிவை. இதை உணராமல் மனிதன் அகம் கொண்டு நன்நெறிகளைப் புறந்தள்ளி விடுகிறான்!

வாவன்னா
நன்றி : (உமர்)தென்றல்.

2 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

புறம் பேசுவதில் பெண்களே முன்னிலையில் நிற்கிறார்கள்.அதுவும் குடும்பமாதர்களே அதிகம்.காரணம் அவர்களுக்கு சமையயல் வேலைகள் தவிர மற்றவேலைகள் இல்லை. எனவேபுறம் பேசுவதுவெறும்வாய்க்கு அவல்கிடைத்ததுபோல.

Unknown said...

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும்.துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்.உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விருபுவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 49:12

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு