Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெலக்காத்தெரு (பெண்கள் கடைத்தெரு) - இன்று ஒரு தகவல் 40

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2012 | , , ,


இப்படி படிக்கிற யாருக்குமே இதன் அர்த்தம் நேரடியாக தெரியுமா என்பது கேள்வியானாலும், ஆனால் அந்த இடம் மட்டும் நன்றாகத் தெரியும். எனக்கும் தெளிவில்லைதான், ஒரு சமயம் “விலைகாரத் தெரு”வாக இருக்குமா அல்லது வெளியாட்கள் அதிகம் வந்து கடைவிரித்து வியாபரம் தெரு ஓரம் செய்வதனால் ”வெளிக்காரர்” மருவி ”வெலக்காத்தெரு”வானதோ ? இதுக்கு போய் ஏன் இப்படியான ராக்கெட் சயின்ஸ் ரேன்ஞ்சுகு ஆராய்சியெல்லாம் என்ற கேட்பது காதில் விழுகிறது. சரி சரி இத்தோடு இந்த ஆய்வை நிறுத்திடுவோம். என்னோட இந்த கருத்துக்கு மேலே நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன், இரத்தம் வர்ராப்லயா இருக்கு ?!!!

இங்கே எங்க கடற்கரைத் தெருவில் உள்ள “வெலக்காத்தெரு”வை சொல்லியே ஆகனும் ஏனென்றால், மீன் தோன்றி இறால் வலையில் சிக்காத காலத்திற்கு முன் தோன்றியது (!!!) கடற்கரைத் தெரு பெண்கள் வெலக்காத்தெரு. ஒரு ஊரின் திறவு வாயில் அதன் கடற்கரைப் பகுதியைத்தான் பெரும்பாலும் குறிக்கும். பட்டுக்கோட்டைக்கு எப்படி என்று யாரோ முனுமுனுப்பது ஏதோ கொஞ்சம் ஒவராத்தான் போய்ட்டோமோ என்ற உணர்வை தருகிறது. அதன்படி பல தெருக்களுக்கு தாய் தெருவான கடற்கரைத் தெருவின் பெண்கள் மார்க்கெட்டை அறியாத நடுத்தர வயதினர் குறைவே. அந்த அளவிற்கு வசதி வாய்ப்புகளுக்காவும், புளிய மரத்தை வெறுத்தும், கடற்கரைத் தெருவின் உப்பு வீட்டை அரித்து அப்புறபடுத்தி விடும் என்று பயந்தும் ஊரின் மற்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களும் இந்த லேடீஸ் மார்க்கெட்டை மறக்காமல் ஆட்டோபிடித்து வந்தாவது ஒரு கெளக்கமீனையோ, உயிர் கெண்டை மீனையோ வாங்கி செல்வது இன்றும் கண்கொள்ளா காட்சி!


எனக்கு தெரிந்தவரை தமிழ்நாடு அளவில், அட ! இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட பார்த்தோம்ண்டா(ங்க) பெண்களுக்காக இயங்கும் ஒரு மீன் மார்க்கெட் கடற்கரைத் தெரு பெண்கள் வெலக்காதெருதான் (வேற எங்கேயும் இருந்தாலும் இதான் ரோல் மாடலாக இருக்ககூடும் !!! நம்பும்படியாக இருக்கா !). இதை கின்னஸ்காரனுங்ககிட்ட கொஞ்சம் அமெரிக்கவுல இருக்கிற சகோ. கிரவுன் எடுத்து சொன்னா நல்லது அவனுங்க தானே கண்ணுல ஒத்திக்கொள்வதையும் / கண்றாவியையும் போடுறானுங்க.

எனக்கு தெரிந்தவரை வெலக்காத்தெரு மார்க்கெட்டின் நீண்ட கால கதாநாயகி செல்லம்மா ஆச்சிதான். அந்த ஆச்சி குட்டானை (பனை ஓலையில் செய்தது) தலைகீழா கவுத்தி அதில் சோளக்கதிறு, நிலக்கடலை, வெள்ளரிப்பிஞ்சு, பயறு, நடுவிலே மாங்கய் தூண்டு, பக்கத்தில் அவிச்ச சக்கரவள்ளிகிழங்கு, அட போங்க… ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டின் செல்ஃப்லேயே இவ்வளவு சின்ன இடத்தில் இத்தனை நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்க முடியாது, அந்த அளவிற்கு அடுக்கி வைத்து இருக்கும். ஏதோ ஒரு பக்கத்து கிராமத்தில் இருந்து பொடி நடையாக வரும் அந்த குமரி(க்)கிழவி, சில்லறையாக குடுத்தால் சிரித்து கொண்டே பொருள் கொடுக்கும் செல்லம்மா. பெரிய பணத்தை கொடுத்தா “டேன்ஞ்ர் மூஞ்சு” வச்சிக்கிட்டு ஏதோ எதிரியை பார்ப்பதுபோல் பார்க்கும், பல வருடங்கள் தன் ஜீவிதத்தை அந்த மார்கெட்டிலேயே ஓட்டிக் கழித்தது அந்த இளம்கிழவி !


அடுத்த எனக்கு தெரிந்த மிகப்பிரபலமான காய்கறி வியாபாரி. போஸ்ட் ஆபீஸ் சல்மா ஹோட்டல் (மர்ஹும் சாகுல்ஹமீது) அவரின் தாயார், மிக கஷ்டப்பட்டு காய்காறி வியாபாரம் செய்து தன் குழந்தைகளை காப்பாற்றினார்கள், அனைத்து காய்கறிகளும் பிரிட்ஜ் இல்லாமலேயே ஃபிரஷ்-ஷாக இருக்கும் அவர்களின் கடையில்.

அப்புறம் கொடுவா மீன் விற்க்கும் வியாபாரிகள், கில்லட் மெசின் கண்டுபிடித்த ஜெர்மன் ஆசாமிகள் நம்ம ஊரின் கொடுவாமீன் பிஸ்க்கை (பீஸ்) பார்த்தா அவர்களின் காப்புரிமைக்கு வேட்டு வைத்து விடுவோமோ என்று தலைதெரிக்க ஓடிவிடுவார்கள். அந்த அளவிற்க்கு முடியைவிட சிறிது அகலமாக பீஸை வெட்டுவதில் கில்லா(ட்)ட்டிகள் நம்ம ஆட்கள். சரிங்க! உங்களிடம் ஒரே ஒரு கேள்வி (எனக்கும் தெரியாமாத்தான் கேட்கிறேன்)  அது ஏன் மீன் வெட்டியதும் அதன் மீனின் இரத்ததை தடவுவதன் மர்ம்ம் என்னங்க.

அப்புறம் மண் புரட்டி இறால் விற்கும் வியாபாரிகள், தரகர் தெரு ஜெய்லானி கடை, டெம்பரவரியாக ஐஸ் மோர் விற்கும் ஸ்கூல் பசங்க இப்படியாக பெண்கள் தலைகள் மட்டுமே தெரிய களைக்கட்டி நிற்கும் கடற்கரைத் தெரு வெலக்காத் தெரு. முன்பெல்லாம் ஆண்கள் அங்கே நுழைந்து விட்டால், அந்த செய்தி புளிய மரத்தடியில் குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் சமுகக்காவலர்களுக்கு எட்டியதும் உள்ளே நுழைந்தவருக்கு சில சமயம் அவருக்கு அபராதம் அல்லது தர்ம அடி கொடுப்பார்கள். அந்த காலமெல்லாம் ஐஸ் போல கரைந்து விட்ட பிரம்மை மனத்திரையில் ஓடுகிறது. பெண்களின் நெகோஷியஷன் திறமைகளை அங்கே காணலாம், ஆனால் இப்போது அப்படி இல்ல பல்லு உள்ளவன் பக்கோடா திண்கிறான் என்பதுபோல் பணம் உள்ளவன்(ர்) பெரியமீன் சாப்பிடுறாங்க, பணம் இல்லாதவன்(ர்) ”பொடிபட்டு” வாங்கி வந்து அவியல் வைச்சு தான் வாழ்வை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இரண்டு பேரின் வயிறும் நிரம்பித்தான் போகுது.

சரிங்க ! ஒரு சின்ன மேட்டரை எவ்வளவு(தான்) சவ்வு போல இழுத்தாலும் இதற்கு மேல வெலக்காத்தெருவப் பத்தி எழுத முடியல. என்னுடைய சீனியர்கள் (கவிக்காக்கா, சாவன்னா காக்கா, ஜாஹிர் காக்கா இடிசி.....) இதனைக் கொஞ்சம் சிரியஸாக எடுத்துகொண்டு பின்னூட்டத்தில் போட்டா அது செல்லம்மாவுக்கு நாம் கொடுக்கும் சில்லரை காசுகளின் சந்தோஷம் முகத்தில் காணலாம் உத்திரவாதம்!

ச்ச்சும்மா டைம்பாஸூக்காக… (எல்லோரும் சீரியஸா எழுதுறாங்களே அதனாலதானுங்க இப்புடி…)

முகமதுயாசிர்
நிழற்படம் உதவி : S.ஹமீத்

40 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

//பல்லு உள்ளவன் பக்கோடா திண்கிறான்//

இந்த வரியை ரசித்தேனா...அல்லது படித்து சிரித்தேனா தெரியவில்லை.

வெலக்காத்தெரு....தினமும் நான் கடந்து சென்ற பகுதி [ சபீர் வீட்டுக்கு போக இதுதான் எனக்குவழி- " என் வழி தனி வழி" நு சொல்லிட்டு புளிய மரம சுத்தி போகலாம்...ஆனா தெருவில் "ஏன்டா நீ லூசா?' நு கேட்பானுக" ]


மீனில் ரத்தம் தடவி- இராலில் மண் சேர்த்து யாரும் இதுவரை ஒரு அடி நிலம் வாங்கியதாக சம்பவங்கள் இல்லை. யாரோ சொன்ன 'வியாபார யுக்தி" யை இன்னும் தொடருகிறார்கள்.


மீனில் ரத்தம் தடவி- இராலில் மண் சேர்த்து யாரும் இதுவரை ஒரு அடி நிலம் வாங்கியதாக சம்பவங்கள் இல்லை. யாரோ சொன்ன 'வியாபார யுக்தி" யை இன்னும் தொடருகிறார்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

யாசிர், நீங்க போன வருசம் போட்டுக்குடுத்த அந்த‌ லுவாக்காப்பி மாதிரி வெலக்காரத்தெரு மேட்டரும் நல்லாத்தான் இருக்குது.

"வெலக்காரத்தெரு" விளக்கம் : விலைக்காரர் தெரு (எப்புடி) வேறென்னா, அங்கே கருவாப்பில்லையும், கொத்தமல்லியும், பச்சமொளவாவும் சும்மா தர்ரதுனாலெ "சும்மாக்காரத்தெரு"ண்டா சொல்ல முடியும்? அதுவும் மத்த காய்கறி வாங்குனாத்தான் அதுவும் சும்மா கிடைக்கும் தெரியுமுல்லெ....."

வாடாவுலெ ராலு வக்கிறது, மீன்லெ ரத்தத்தை தடவுறது, கொத்துப்புராட்டா கடையிலெ முட்டை, எலுமிச்சம்பழம், தக்காளிபோன்றவற்றை டிசைனாக்கி வக்கிறது, சேம்பிள் மாம்ப‌ழ‌த்தை தித்திப்பா வெட்டிக்கொடுத்து அத‌ற்கு கீழே புளிச்ச‌ மாம்ப‌ழ‌த்தை வ‌ச்சி விக்கிறது எல்லாம் சும்மா ஒரு அட்ராக்‍ஷனுக்குத்தான் கரிக்காட்லெ எடம் வாங்கிப்போட்றதுக்கு இல்லெ......கிளுகிளுப்பு இருந்தா தானே பல்லில்லாக்கிழவன் கூட தன் பொக்கெ வாயை பொழந்து பாக்குறான்.....

Haja Mohideen said...

யாசிர்! நல்ல மேட்டரை சொல்லும்போது கொஞ்சம் ரெஸ்க் எடுத்து சொல்லிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும். சில வரலாறு வெளிவந்துருக்கும்.(வரலாறு முக்கியம்)
ஜாஹீர் காக்கா கூறிய கருத்திலிருந்து : சபீர் காக்காவிடம் கொஞ்சம் வரலாறு கேட்டிருக்கலாம் அவரும் இப்ப திறந்த தகவல் களஞ்சியம்தான்.
ஓகே! ஒரு சின்ன வருத்தம் நம்ம வயசுல பேசிய செல்லம்மா சில காலத்திற்கு முன் இறந்தபோய்விட்டார். செல்லம்மாவிடம் செய்த குசும்புதனமும் இன்று குதூகுலம்தான்

Unknown said...

ஆமம் எல்லாம் சொன்னிர்க்கள் முக்கியமா விளக்காரி அஞ்சலையை சொல்லமரந்திர்க்கள் இருந்தாலும் எதோ ஆட்டோகிராப் படம் பார்த்தமாதிரி இருந்தது இந்த செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இப்ராகிம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்படியான இடங்களோ... ஆச்சி(களின்) கடைகளோ எனக்கு அதிகம் பரிட்சையம் இல்லாடிவிடினும், இவைகள் பற்றி பேச, எழுத, வாசிக்க புடிக்கும் ! :)

//சரிங்க ! ஒரு சின்ன மேட்டரை எவ்வளவு(தான்) சவ்வு போல இழுத்தாலும் இதற்கு மேல வெலக்காத்தெருவப் பத்தி எழுத முடியல.//

அதெப்படி இழுத்த இழுப்பு இவ்வ்வ்வ்ளோ தூரம் வந்துடுச்சே !! :)

sabeer.abushahruk said...

யாசிர்,

செய்திகளுக்கு இடையே வாசிக்கப்படும் "செய்தித் தொகுப்பு" போலவொரு நடையில் சுறுசுறுன்னு இருந்தது வாசிக்க.

நகைச்சுவை தூக்கலா இருந்தாலும் எனக்கு ஹோம்சிக்கை கிளப்பிவிட்டுவிட்டது வெலக்காரத்தெரு நேரலை.

பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இருப்பதால் எனக்கு இவ்வழிதான் தனீவழி தினமும். சக்கரவல்லிக் கிழங்கு, சோளக்கதிர், எழந்தப்பழம் ஆகியவை கூறு கட்டி விற்கப்படும்.

நானும் நிறைய வாங்கித் திண்ணிருக்கேன் என்றாலும் உங்களைப் போல, சேனா முனா ஹாஜா மொய்தீன் போல, இப்றாகீம் மீரான் போல சேல்ஸ் லேடீஸ்களின் பெயர் தெரிந்து வைத்துக்கொள்ளுமளவுக்கு நெருக்கம்லாம் இல்ல :) (மாட்டிக்கினீங்களா)

sabeer.abushahruk said...

யார் இந்த இபுறாகீம் மீரான் அவர்கள்?

அஞ்சலை முக்கியமாம்ல? வீட்டுக்காரங்களுக்கு பயம்லாம் இல்லையா? என்னா தைரியமா நூல்விட்ட நாட்களை எண்ணி ஜொல்லுறாக...சாரி சொல்லுறாக!

சேனாமூனாக்கு வரலாறு முக்கியமாம். கம்ப்யூட்டர் படிச்ச ஆளுக்கு வெலக்காரத்தெரு விற்பனை பெண்கள் பற்றிய வரலாறு எதற்காம்?

நோம்பு நேரமா இருக்கேன்னு பார்க்கிறேன். இல்லேன்னா உங்க மூனு பேத்துக்கும் வீட்டுக்கு போட்டுக்கொடுத்து மாட்டிவிட்டுடுவேன்.

ஜாகிரே இந்த வழியை க்ராஸ் பண்ணும்போது குதிரைக்குக் கண்களுக்குப் போடுவதுபோல் கைகள் இரண்டாலும் கண்களைக் கவர் பண்ணிதான் க்ராஸ் பண்ணுவான், தெரியும்ல?

sabeer.abushahruk said...

//ஒரு சின்ன வருத்தம் நம்ம வயசுல பேசிய செல்லம்மா சில காலத்திற்கு முன் இறந்தபோய்விட்டார். //

என்னது? காந்தியை சுட்டுட்டாங்களா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

////ஒரு சின்ன வருத்தம் நம்ம வயசுல பேசிய செல்லம்மா சில காலத்திற்கு முன் இறந்தபோய்விட்டார். //

என்னது? காந்தியை சுட்டுட்டாங்களா?///

நானும் தான் காக்கா பேப்பரிலே படிச்சேன் ஆனா தேதியை பார்க்க மறந்துடுச்சு !

sabeer.abushahruk said...

//நானும் தான் காக்கா பேப்பரிலே படிச்சேன் ஆனா தேதியை பார்க்க மறந்துடுச்சு //

எந்த பேப்பரில்? செல்லம்மா நெல்லிக்காய் மடிச்சு தந்த பேப்பரிலா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///எந்த பேப்பரில்? செல்லம்மா நெல்லிக்காய் மடிச்சு தந்த பேப்பரிலா?//

நான் தான் சொன்னேனே "ஆச்சி(களின்) கடைகளோ எனக்கு அதிகம் பரிட்சையம் இல்லாடிவிடினும், இவைகள் பற்றி பேச, எழுத, வாசிக்க புடிக்கும் !"

நாளை மறுநாள் வெளிவர இருக்கும் சுடச் சுடச் செய்தியில் வாசித்த ஞாபகம் காக்கா... :)

Yasir said...

//செல்லம்மாவிடம் செய்த குசும்புதனமும்// சொல்லவே இல்லை :)...

Yasir said...

///விளக்காரி அஞ்சலையை// அஞ்சலைதானே செல்லம்மாவின் மெயின் போட்டியாளர்....நாங்க செல்லம்மா கட்சி அதான் அஞ்சலையை வுட்டுட்டோம்..நீங்க அஞ்சலை கட்சியா ?? அஞ்சலை பெரிய ஹைப்பர் மார்க்கெட்....ஆனா ஹைஜினிக் கிடையாது

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான பதிவு(இன்னும் சொல்ல வருவோம்ல!) சபீர் காக்காவுக்கு அந்த மீரான் இபுறாகிம் என் மச்சான்(அத்தான்,அத்தீம்பேர், அக்காபுருசன்).எனக்கும் பல நினைவுகளை கொண்டுவருது. ஆனாலும் ஆச்சிகள் இப்படி ஆட்சி செய்த விசயமெல்லாம் தெருவில் பிறந்து வளர்ந்தவங்களுக்குத்தான் தெரியும்.

Yasir said...

//இதுவரை ஒரு அடி நிலம் வாங்கியதாக சம்பவங்கள் இல்லை// காக்கா இரால் கால் பங்கு மண்ணு முக்கா பங்கு வித்தா எப்படி நிலைக்கும் காக்கா

Yasir said...

//மேட்டரும் நல்லாத்தான் இருக்குது///.சகோ நெய்னா நீங்களும் எதாவது பதிவு போடுங்களேன்....ரொம்ப நாளாச்சு உங்க மேட்டரெல்லாம் டாப் டக்கரு

Yasir said...

அ.நி.நெறியாளர் அவர்களே !!! கவிக்காக்காவின் கருத்துக்களை மட்டுறுத்தி போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் :):)..வீட்டீல் ஒவ்வொரு கருத்துக்களையும் படித்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்....இப்படியே போய்க்கொண்டு இருந்தால் இன்னைக்கு இஃப்த்தாருக்கு பேரிச்சபழமும் தண்ணீரும் தான் கிடைக்கும்போல :)

Yasir said...

///வீட்டுக்காரங்களுக்கு பயம்லாம் இல்லையா? // ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் காக்கா நோன்பு நேரம் கொஞ்சமாவது விட்டுபுடிங்களேன்

crown said...

Yasir சொன்னது…

அ.நி.நெறியாளர் அவர்களே !!! கவிக்காக்காவின் கருத்துக்களை மட்டுறுத்தி போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் :):)..வீட்டீல் ஒவ்வொரு கருத்துக்களையும் படித்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்....இப்படியே போய்க்கொண்டு இருந்தால் இன்னைக்கு இஃப்த்தாருக்கு பேரிச்சபழமும் தண்ணீரும் தான் கிடைக்கும்போல :)
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.யாசர் . நலமா? நோம்பு எப்படி போகிறது. சரி மேட்டருக்கு வருவமோம். இப்படி அவசரபட்ட பேரித்தபழமும், தண்ணியுந்தான் கிடைக்கும். அதுவும் நோம்பு இருப்பதால் இல்லைன்னா அதுவும் கிடையாது. இதுக்குத்தான் எழுதும் முன் உணர்ச்சிவசப்படாது!

crown said...

இதை கின்னஸ்காரனுங்ககிட்ட கொஞ்சம் அமெரிக்கவுல இருக்கிற சகோ. கிரவுன் எடுத்து சொன்னா நல்லது அவனுங்க தானே கண்ணுல ஒத்திக்கொள்வதையும் / கண்றாவியையும் போடுறானுங்க.
---------------------------------------------------------------
விசாரிச்சேன் ஏற்கனவே போட்டுடாங்களாம் . நீங்க பாக்கலையானு கேட்குறாங்க! யாசர் சரியா பாருங்க!

Ahamed irshad said...

யாசிர் பாய்..... கலக்கல் போங்க.. அருமையான கட்டுரை... நேரில் கண்டதுபோல்.. திறமையை எல்லாம் ஒளிச்சி வெச்சிட்டு எங்க போனீங்க நீங்க... தொடர்ந்து கலக்குங்க.. அருமை..

KALAM SHAICK ABDUL KADER said...

அந்த விலக்காரத்தெருவுக்கு எதிர்வீட்டில்(புளியானத்து வீடு) தான் அடிக்கடி விளையாட போவேன்;அதற்கும் பக்கத்தில் இ.மு. வீடு என் பள்ளித்தோழன் இ.மு.ஹனீஃப் வீட்டிலும் விளையாடி இருக்கின்றேன்; யாசிரின் இக்கட்டுரை என் சிறுவயது கடற்கரைத்தெரு கனாக்காலத்தை ஞாபகப்படுத்திவிட்டது. எனக்கு உம்ம்மா வீடும், கிரவுனுக்கு வாப்பிச்சா வீடும் “அதிரையின் நுழைவாயில்” கடற்கரைத் தெரு என்பதும் அறியத்தருகிறேன்.

ஜாஹிர், கவிவேந்தர் சபிர், யாசிர் இவர்களெல்லாம் பாசத்தில் அதிகமானதற்கு அம்மண்ணின் வாசத்தை கொஞ்சம் (அடிக்கடி)சுவாசித்ததனாற்றானோ?

யாசிர்! அதெப்படி நோன்பு நேரத்தில் செல்லம்மா ஞாபகம்? “உற்ற மனைவியையும் உற்று (அம்மாதிரியான நோக்கில்) நோக்கினால் நோன்பில் குற்றமாகி விடும்” என்று கேள்விப்பட்டேன்; நீங்கள் இப்படி கடந்தகால செல்லம்மா சிணுங்கள் எல்லாம் போட்டு, கவிவேந்தரின் மிரட்டலுக்கும் ஆளாகி, அந்தோ பரிதாபம்: “யாகாவாராயினும்.............”

Shameed said...

அஞ்சலை இறந்த வரலாறு ( முக்கியம் ) = அஞ்சலை அவர் ஊரில் இருந்து தின் பண்டங்களை கூடையில் வைத்து ஆற்றை கடக்கும்போது ஆற்று வெள்ளம் அஞ்சலையை அடித்துக்கொண்டு போய் விட்டது

crown said...

Shameed சொன்னது…

அஞ்சலை இறந்த வரலாறு ( முக்கியம் ) = அஞ்சலை அவர் ஊரில் இருந்து தின் பண்டங்களை கூடையில் வைத்து ஆற்றை கடக்கும்போது ஆற்று வெள்ளம் அஞ்சலையை அடித்துக்கொண்டு போய் விட்டது .
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். பாவம்! அந்த அஞ்சலையின் பரிதாப சாவுனிலை!ஆனாலும் அந்த ஆற்றுக்கு பசியில் திண்பன்டமாய் இந்த அஞ்சலையை பேரலையாய் வந்து அடித்து கொன்று தின்றது, சோக அலைதான். ஆனாலும் அந்த வீரமிக்க உழைக்கும் பெண் எதற்கும் அஞ்சலை என்பது தன் சாவின் மூலம் நி ( நீ)ரூபித்துள்ளார்.

sabeer.abushahruk said...

கிரவுன்,

ஓரலை, ஈரலை, மூவலை,நாளலைகூட ஒன்றும் செய்யவில்லையாம் அஞ்சலைதான் அஞ்சலையை இழுத்துச் சென்றதாம். கொன்று அஞ்சலையை ஒர் அஞ்சலைப் போல நதி போஸ்ட்மேனாகி கடலில் சேர்த்ததாம் அந்த நஞ்சலை.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

கிரவுன்,

ஓரலை, ஈரலை, மூவலை,நாளலைகூட ஒன்றும் செய்யவில்லையாம் அஞ்சலைதான் அஞ்சலையை இழுத்துச் சென்றதாம். கொன்று அஞ்சலையை ஒர் அஞ்சலைப் போல நதி போஸ்ட்மேனாகி கடலில் சேர்த்ததாம் அந்த நஞ்சலை.
------------------------------------------------------------------
ஆமாம் காக்கா ஈரலை அத்துகொண்டு போனது போல இருக்கு! அந்த அலை சாவலையா மலையில் உச்சியில் இருந்து வீழ்ந்து? இப்படி "ஆறு"தல் தான் தேவலையா இருக்கு(தேறுதல்)இப்படி ஆறும் அதன் அஞ்சலை காற்றில் ஒளிபரப்பி இருக்கலாம்... அது வெலக்காரி தெருவில் கேட்டதோ என்னவோ? நீங்கள் சொன்னமாதிரி அது நச்சலைதான்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.! நண்பர் சபீர் அவர்களே ! என்னை எளிதில் மறந்து விட்டீர்கள் சகோ ! சபீர் அவர்க்களுக்கு ஓர் சிறிய புதிர் கண்டுபுடியுங்கள் பார்போம் ? புதிர் 1 ) என் வீட்டின் எதிரில் தான் விலக்காரத்தெரு உள்ளது. புதிர் 2 )வாலிபால் ,புட்பால் ,மற்றும் செஸ் ,நீண்டகாலம் உங்களோடு தொடருந்து விளையாடியது உண்டு.மேலும் பல காலம் புளியமரம் திண்ணை .கொடிமரம் , போன்றவற்றில் அமர்ந்து அரட்டை அடித்தது உண்டு .இந்த வார கடைசிக்குள் விடையை அனுப்பினால் நோன்புகடைசிக்குள் ஓர் பரிசு உண்டு .நன்றி !!

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ். என்னமா எழுதுறாங்கப்பா!!!? ஒவ்வொரு எழுத்தாளர்களும் இந்த வலைத் தளத்தில் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். நான் முதன் முதலாக முற்றிலுமாக ஒரு ஆங்கில நாவலைப் படித்தது ALEX HALEY எழுதிய ரூட்ஸ். அதற்கு முன்பாக ஆப்பிரிக்கர்கள் மீது எனக்கிருந்த கழிவிரக்கம், அனுதாபம் எல்லாம் மாறி அந்த இனத்தின் மீது மரியாதையை ஏற்படுத்தியது, அந்த பகுதிகளுக்கு போய் சம்பவம் நடந்த இடங்களை காண முடியாதா என்ற ஆவலை ஏற்படுத்தியது அந்த நாவல். இது நல்ல எழுத்தாளர்களுக்கே உரிய திறமை. இளவல் யாசிருக்கு அந்த திறமை நிறையவே இருக்கிறது. குறிப்பாக அந்த ஆச்சியிடம் கிடைக்கும் ORGANIC FOOD கட்டாயம் வாங்கி சாப்பிட மனம் நாடுகிறது.

முஹம்மத் தமீம்.

KALAM SHAICK ABDUL KADER said...

//நோன்புகடைசிக்குள் ஓர் பரிசு உண்டு .//
கவிவேந்தர் அவர்கட்கு சைவ நோன்பு கஞ்சி பார்சலில் அனுப்பி விடுங்கள்

sabeer.abushahruk said...

//என்னை எளிதில் மறந்து விட்டீர்கள் சகோ ! சபீர் அவர்க்களுக்கு ஓர் சிறிய புதிர் கண்டுபுடியுங்கள் பார்போம்//

இபுறாகீம், நான் ஓரளவு ஏற்கனவே யூகித்துவிட்டேன். ஆனால், நீ என்னை மரியாதையாக வாங்க போங்க என்று விளித்ததால் குழம்பிட்டேன்.

உன்னைக் கடைசியாக இக்பால் ரூமிலிருந்து ஐ பால் ச்சாட்டில் பார்த்தது நினைவுண்டா?

Yasir said...

கருத்துக்களையும்,வாழ்த்துக்களையும்,உற்சாகத்தையும் அள்ளித்தந்த சகோதர்களுக்கு என் மனமார்ந்த ரமலான் கரீம்

Yasir said...

இவ்வாக்கத்திற்க்கு நிழற்ப்படம் தந்துதவிய சாவன்னா காக்கா அவர்களுக்கும் அவர்களின் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த ”பானிப்பட் போரில்” இறந்துபோன சாரி பாயும் ஆற்றில் இறந்துபோன அஞ்சலைப்பற்றிய குறிப்பிற்க்கும் ஜாஜகல்லாஹ் ஹைர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வெலக்காரத்தெரு மேட்டரும் அதன் பின்னணிகளும் ரொம்ப நல்லாயிருக்கு சகோ.யாசிர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

வெளக்காரத் தெருவுக்குள்ள இப்படி ஒரு மேட்டரா?

நம்ம மூத்த குடிமக்கள் வாழ்ந்த இடம்,இப்போ ஒவ்வொரு குடும்பமா குடிக்காடு என அழைக்கப்படும் புதுமனைத் தெரு ஏரியாவில் செட்டில் ஆகிட்டதாலே,பழசெல்லாம் மறக்காம - வல்லாரை லேகியம் தந்திருக்கார் யாசிர் காக்கா.வாழ்க - வாழ்க

எமக்கும்,அங்கு ஆச்சிகளிடம் வாங்கி தின்ற அனுபவம் உண்டுங்கோ?

நோம்பு நேரத்துல ஏன் வல்லானலையில,பசியை கிளப்புரிய?

விளக்காரத் தெரு ஓகேதான் - அங்குள்ள வீடுகளுக்கு சிம்ம சொப்பனமா இருக்குறது - அந்த கொசுத் தொல்லைதான்.(இப்பவும் அப்படித்தானா யாசிர் காக்கா).

போற போக்க பார்த்த,விளைக்காரத் தெருவ்க்கு ஒரு சங்கம் வந்துடும் போல இருக்கு.இங்க கடற்கரைத் தெரு மக்களோட ஆதிக்கம் அதிகம் தெரியுதே?(பிச்சலத்தையும் சேர்த்துதான் சொல்லுதேன்)

அப்துல்மாலிக் said...

நமக்கு நாமே தெரிந்துக்கொள்ளும்(கொசுவர்த்தி சுத்துறது) என்ற நிகழ்வுகள் சில சமயம் சுவராஸ்யமாகவும் இப்படியெல்லாம் வரலாற்றில் பதியவேண்டியது சில இருக்கு என்பதையும் உலகுக்கு எ.கா இது மாதிரி நிகழ்வுகள் நம்மூர்கேயுரிய பாணியில் சொல்லிருக்கீங்க யாஸிர் பாய்...

ஆண்கள் அதிகமில்லாத (அட வெளிநாடே கெதினு கெடக்கோம்) நம்மூர்லே இது மாதிரி வெலக்காரக்கடைக்கு பொம்பளைங்க பொழந்துகட்டி ஏறி மீனோ ராலோ வாங்கியாந்து நினைத்தவைகளை சுவைத்து திண்பது என்பது சாதனைதான், அடுத்தாளை கெஞ்சவேண்டியது இல்லை பாருங்க்கோ.... இதே வெலக்காரத்தெரு இப்போ ரெண்டு மூனு இடங்களிலேயும் விரிவாக்கம் செய்திருக்காவோனு நினைக்கிறேன்..

Yasir said...

சகோதர்கள் M.H.J/அர.அல /அப்துல்மாலிக் நன்றி தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

//அந்த கொசுத் தொல்லைதான்// ஆமா சகோ. அந்த ஈ தொல்லைதாங்காம இடத்தை வித்துட்டு போனவங்க நிறையபேர்....இப்ப கொஞ்சம் குறைவு என்று நினைக்கின்றேன்...மீன் வரத்தும் ஆள்கள் வரத்தும் அங்கே குறைஞ்சு போச்சுல

//ரெண்டு மூனு இடங்களிலேயும் விரிவாக்கம் செய்திருக்காவோனு நினைக்கிறேன்// சந்தோஷமான செய்தி....

crown said...

அர அல சொன்னது…
.(இப்பவும் அப்படித்தானா யாசிர் காக்கா).
===========================================================
அஸ்ஸலாமு அலைக்கும். என் காக்கா அ.ல.வுக்கு சகோதரர் யாசர் நமக்கு கொஞ்சம் சிறிய வயதுதான் எனவே தம்பி என அழைக்கலாம். ஆனாலும் அறிவில் எனக்கு அண்ணன் தமக்கு சமம்.

Yasir said...

சகோரர் கிரவுன்....நான் நலமே அல்லாஹ்வின் உதவியால்...நீங்களும் உங்கள் குடும்பமும் நலமா...உங்கள் குரல் கேட்டு ஒரு வருஷம் ஆகிவிட்டது..போன வருடம் ஆகஸ்ட் நீங்கள் கால்பண்ணி இருந்தீர்கள்

//என் காக்கா அ.ல.வுக்கு// உங்களுக்கே காக்காவா..அப்ப எனக்கு ரொம்ப மூத்த காக்கா..என் வயது தற்பொழுது 33.5

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//என் காக்கா அ.ல.வுக்கு// உங்களுக்கே காக்காவா..அப்ப எனக்கு ரொம்ப மூத்த காக்கா..என் வயது தற்பொழுது 33.5//

வயசுக்கு பதிலா இடுப்பு (பேண்ட்) சைஸ்ஸை சொன்ன மாதிரி இருக்குது..... அது என்னா .5 என்றால் 500 கிராமா??

ஹைட்டைக்கேட்டால் FM ரேடியோ அலைவரிசை மாதிரி இருக்குமோ?

Shameed said...

அஞ்சலை பற்றி எல்லோரும் அஞ்சாமல் எழுதுறாங்கள் காரணம் அஞ்சலையின் ஆர்கானிக் புட் மகிமைதான்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு