அன்றலர்ந்த மலர்களைப்போல்
அகம் திலங்கும் பாலகர்களே
'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...'
சென்றுவந்த தளங்களில்
வென்றுவந்த இறையருள்
நின்று நிலைக்கட்டுமாக
என்றும் இருக்கட்டுமாக
மக்கமா நகர்தன்னில்
மக்களோடு மக்களாக
மாண்புமிகு கஃபாவை
மனதாரக் கண்டிருப்பீர்
முதன்முதலில் கண்டபோது
முகம் மலர்ந்திருக்கும்
கண்களும் கலங்கி
கண்ணீர் உகுந்திருக்கும்
கண்டதும் கையேந்தி
கேட்ட துஆ நினைவுண்டா
நிறைவேற்றித் தருவான்
இறைவனென நம்புவீராக
கஃபாவைச் சுற்றிவந்து
தவாபைச் செய்ததுவும்
சஃப்வா மர்வாவுக்கிடை
சயீ செய்த நினைவுகளும்
இறக்கும் காலம்வரை
மறக்க மனம் ஒப்பாது
இறக்கி வைத்த பாரமென
இன்னல்கள் விலகட்டுமாக
திறவா அருட்கதவும்
அரஃபாவில் திறக்கவைக்கும்
கரமேந்திக் கேட்டுவந்த
தரமானப் பிரார்த்தனைகள்
அரஃபாத் பெருவெளியில்
அபரித வணக்கங்கொண்டு
அழுதழுது கேட்டவற்றை
அல்லாஹ் தருவானாக
ஷைத்தானுக்குக் கல்லெறிந்து
பொய்த்தான் அவன் என்றொழித்து
முடிமழித்து மொட்டையிட்டு
பலி கொடுத்தத் தியாகங்களும்
ஈருடைதனைக் களைந்து
இயல்புடைக்குள் நுழைந்து
மினாவில் நிகழ்ந்ததெல்லாம்
கனாவில் தொடர்ந்துவரும்
கடைசிக் கிரியையென
விடைபெறும் காலத்தில்
தவாபில் மனம் கணத்து
தவிப்போடு பயணித்ததும்
மாநபி(ஸல்)யின் நவபியிலே
மதினத்து அமைதியிலே
தொழுதுநின்ற நேரங்களில்
அழுதக் கண்ணில் அர்த்தமுண்டு
எல்லாவற்றையும் கண்டு வந்தும்
ஏங்க வைத்தக் குறையாக
தங்க நபி(ஸல்)யைக் காணாத
உங்கள் குறை நீங்கிடுமா
இனிச் செய்யும் செயல்யாவும்
இறைப் பொருத்தம் கிடைத்திட்டால்
மறுமையும் சிறந்திடும்
மதிப்புமிக்க ஹாஜிகளே
தங்கள் ஹஜ்ஜை
அல்லாஹ்
ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக்க
அதிரை நிருபரின் துஆ
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
அதிரைநிருபர் பதிப்பகம் - wwww.adirainirubar.in
அகம் திலங்கும் பாலகர்களே
'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...'
சென்றுவந்த தளங்களில்
வென்றுவந்த இறையருள்
நின்று நிலைக்கட்டுமாக
என்றும் இருக்கட்டுமாக
மக்கமா நகர்தன்னில்
மக்களோடு மக்களாக
மாண்புமிகு கஃபாவை
மனதாரக் கண்டிருப்பீர்
முதன்முதலில் கண்டபோது
முகம் மலர்ந்திருக்கும்
கண்களும் கலங்கி
கண்ணீர் உகுந்திருக்கும்
கண்டதும் கையேந்தி
கேட்ட துஆ நினைவுண்டா
நிறைவேற்றித் தருவான்
இறைவனென நம்புவீராக
கஃபாவைச் சுற்றிவந்து
தவாபைச் செய்ததுவும்
சஃப்வா மர்வாவுக்கிடை
சயீ செய்த நினைவுகளும்
இறக்கும் காலம்வரை
மறக்க மனம் ஒப்பாது
இறக்கி வைத்த பாரமென
இன்னல்கள் விலகட்டுமாக
திறவா அருட்கதவும்
அரஃபாவில் திறக்கவைக்கும்
கரமேந்திக் கேட்டுவந்த
தரமானப் பிரார்த்தனைகள்
அரஃபாத் பெருவெளியில்
அபரித வணக்கங்கொண்டு
அழுதழுது கேட்டவற்றை
அல்லாஹ் தருவானாக
ஷைத்தானுக்குக் கல்லெறிந்து
பொய்த்தான் அவன் என்றொழித்து
முடிமழித்து மொட்டையிட்டு
பலி கொடுத்தத் தியாகங்களும்
ஈருடைதனைக் களைந்து
இயல்புடைக்குள் நுழைந்து
மினாவில் நிகழ்ந்ததெல்லாம்
கனாவில் தொடர்ந்துவரும்
கடைசிக் கிரியையென
விடைபெறும் காலத்தில்
தவாபில் மனம் கணத்து
தவிப்போடு பயணித்ததும்
மாநபி(ஸல்)யின் நவபியிலே
மதினத்து அமைதியிலே
தொழுதுநின்ற நேரங்களில்
அழுதக் கண்ணில் அர்த்தமுண்டு
எல்லாவற்றையும் கண்டு வந்தும்
ஏங்க வைத்தக் குறையாக
தங்க நபி(ஸல்)யைக் காணாத
உங்கள் குறை நீங்கிடுமா
இனிச் செய்யும் செயல்யாவும்
இறைப் பொருத்தம் கிடைத்திட்டால்
மறுமையும் சிறந்திடும்
மதிப்புமிக்க ஹாஜிகளே
தங்கள் ஹஜ்ஜை
அல்லாஹ்
ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக்க
அதிரை நிருபரின் துஆ
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
அதிரைநிருபர் பதிப்பகம் - wwww.adirainirubar.in
11 Responses So Far:
ஷபீர் காக்காவின் ஹாஜிகள் பற்றிய கருத்துக் கவிதை அருமை
//கண்டதும் கையேந்தி
கேட்ட துஆ நினைவுண்டா
நிறைவேற்றித் தருவான்
இறைவனென நம்புவீராக//
ஆமீன்
ஹஜ் கடமை முடித்து திரும்பி வரும் ஹாஜிகளும்,
ஹஜ் கடமை முடித்து திரும்பாத (மௌத்) ஹாஜிகளும்
பாக்கியசாலிகளே.ஹஜ் - உம்ரா கடமையை நாமும் நிறைவேற்ற அல்லாஹ் அருள் புரிவானாக.
இங்கு சென்று, மீண்டும்
ஊர் திரும்பக் கூடாது -
என்ற எண்ணமும்,
வந்த இடத்தில் நாயன்
நம்மை எடுத்துக் கொண்டால்-
சாலச் சிறந்தது என்றும்
எல்லாரும் எண்ணும் ஒரே இடம்
ஹஜ்
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு கடிதம்!!
http://kadithams.blogspot.com/2014/10/blog-post.html
ஹாஜிகளின் ஏக்கங்கள், முதன் முதலில் கஃபாவை கண்ட அந்த ஆனந்த தருணங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாங்கள் நேரில் கண்டதை, நீங்கள் கவியாக வடித்திருக்கிறீர்கள் சபீர் காக்கா.
கவிதையின் சில வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றது உண்மை.
முன்பெல்லாம்பைத்துசொல்லிவரவேற்றோம்!இப்பொழுதுகவிதைபாடி வரவேற்கிறோம்.முன்பெல்லாம்சென்றவர்களில்வந்தவர்குறைவே.இன்றோஅப்படியில்லை!எங்களையும்அனுப்பிவைக்கதுவாசெய்யுங்கள்.
கவிதையே பெருமை கொள்ளும் கவிக் காக்கா அதனை வைக்கும் உயர்வான இடங்களை நினைத்து...!
வருக... வருக...!
பி.கு.: கவிதை ப்ரொமோ அருமை !
மினாவில் நிகழ்ந்ததெல்லாம்
கனாவில் தொடர்ந்துவரும்
Arumai
ஹஜ்ஜின் சிறப்பை கவிதையாய் சொன்ன விதம் அருமை.
நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைக்க துவா செய்வோமாக. !
//எங்கள் ஹஜ்ஜை
அல்லாஹ்
ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக்க
அதிரை நிருபரின் துஆ//
ஆமீன்
*** M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது.... ***
//எங்கள் ஹஜ்ஜை
அல்லாஹ்
ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக்க
அதிரை நிருபரின் துஆ//
ஆமீன்
*** M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது.... ***
//எங்கள் ஹஜ்ஜை
அல்லாஹ்
ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக்க
அதிரை நிருபரின் துஆ//
ஆமீன்
Post a Comment