இப்படியிருந்த அம்மாவை ! எப்படி மாத்திட்டாங்க !
மாணவ மணிகளே !
சீற்றமான மூச்சுக் காற்றுகள் அடங்கி இப்போது சீரான மூச்சுக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்து இருப்பீர்கள், தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் சமச்சீர் கல்விப் புத்தகங்கள் அனைத்தும் இணைய வழி தரவிறக்கம் செய்து கொள்ள மிகச் சிறப்பான ஏற்பாட்டை தமிழக அரசு பாடப் புத்தக கழகம் செய்திருக்கிறது.
இதோ கீழ்கண்ட சுட்டிகளைத் தட்டினால் மாணவச் சுட்டிகள் கெட்டியாக தாங்கள் படிக்கும் வகுப்புப் பாடங்களை வீட்டுக் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இனிமேல், வீட்டாரை நான் படிக்கனும் கம்ப்யூட்டரை எனக்கு ஒதுக்கிடுங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்!
கனினியின் ஊடே சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கிறது, அதனைப் போகப் பொருளாகவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் மாற்றிக் கொள்ளாதவரை. அப்படி ஒரு சூழல் உங்கள் வீடுகளில் இருக்குமானால் தயை கூர்ந்து நளினமாக உங்கள் வீட்டாரிடம் எடுத்துச் செல்லி அப்படிப் பயன்படுத்தாமால் பார்த்துக் கொள்ள வேண்டியது இளம் மாணவ மணிகளாகிய உங்களின் கடமை இது உங்களுக்கும் பொருந்தும்தானே செல்வங்களே !
- அதிரைநிருபர் குழு
6 Responses So Far:
இதுக்குப் பெயர்தான், நீதிபோதனையா !?
மாணவனின் கையை அம்மா பிடிக்க, அம்மாவின் கையை நீதிபதி பிடிக்க !
அட ! ஆமா இனிமேல் மாணவர்கள் தடையில்லாமல் படிக்க(த்தானே) !
சிந்திக்க சிரிக்க தூண்டும் அரசியல்.... என்னமா யோசிக்கிறாய்ங்க...
ஆஹா!!! என்ன அருமை இதுதான் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கல்வியா?..
நீதிபதியின் போதனை, அம்மாவின் வேதனை, தமிழக அரசின் சாதனை.. !!!!
// இனிமேல், வீட்டாரை நான் படிக்கனும் கம்ப்யூட்டரை எனக்கு ஒதுக்கிடுங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்! //
கம்யூட்டரை தொடர்ந்து கையகப்படுத்த பிள்ளைகளுக்கு நல்ல யோசனை சொல்லிகொடுத்திருக்கிறீர்களே! அ.இ.காக்கா.
அம்மாவும் நீதியும் படம் சூப்பர்! பார்த்து ரொம்ப நாளாச்சு!
ஒருமாதத்திற்கு முன்பிருந்தே நான் என் மகளுக்கு இணையத்தின் மூலம் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறேன்.ஆனால் ஊர்லெ இணைய இணைப்பு தான் ரொம்ப ரொம்ப 'மக்கர்' பண்ணுதாமே!
ஆக்கத்தை வென்றுவிட்டது புகைப்பட சேர்க்கை.
நீதியின் கை அம்மாவின் கையைப் பிடித்து சொல்லித்தருவது நல்ல கற்பனை.
பிரயோஜனமான பதிவு.
நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்.
//மாணவனின் கையை அம்மா பிடிக்க, அம்மாவின் கையை நீதிபதி பிடிக்க //
இந்த புகை பட காட்ச்சியை பார்த்தால் சமச்சீர் கல்வி விசயத்தில் மாணவர்களை உன் வழியில் விட மாட்டேன்.என்று தடுத்து நிறுத்துவது போல் இருக்கிறது.எழுத கற்றுக் கொடுக்கும் அம்மாவின் கையை எழுத விடாமல் பிடித்திருப்பதை பார்த்தால்.
நீதிபதியின் போதனை, அம்மாவின் வேதனை, தமிழக அரசின் சாதனை.. !!!!
இனி மாணவர்களுக்கு முதுகு வலி வராமல் இருப்பதருக்கு இது சரியான வழி.
மாணவர்களே கீழ்க்கண்ட சுட்டிகளை தட்டுங்கள் கம்பியூட்டர்க்கு தான் வலிக்க போகிறது.
உங்கள் முதுகு வலியெல்லாம் பறந்து போவபோகிறது
Post a Comment