Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மருத்துவ மாணவி 3 தங்கம் 2 வெள்ளி சாதனை ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2013 | , , , ,

பிரபல நரம்பியல் நிபுணர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதன்மை மருத்துவர், மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் மனிதநேய மருத்துவர் ஜஹபர் சாதிக் அவர்களின் புதல்வி மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர்,  பள்ளிப்பருவத்தில் இருந்தே சாதனைகளை நிகழ்த்தும் அற்புத அறிவு இவருக்கு. பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் ..பனிரண்டாம் வகுப்பு பொது தேர்விலும் இராமநாதபுர மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் இந்த மாணவி.

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர், கடந்த 2007-ல் சேர்ந்து 2013-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். முதலாம் ஆண்டு தேர்வில் உடற்கூறியியலிலும், இரண்டாம் ஆண்டில் மருந்தியல் பாடத்திலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பெற்றவராவார்.

தற்போது மருத்துவக் கல்வியை முடித்துள்ள மாணவி தஹ்ஸின் நிலோஃபர், அறுவைச் சிகிச்சை, மருந்தியல் தங்கப் பதக்கங்களையும், நோய்க் குறியியல், நுண்ணுயிரியல் சிறப்புத் தகுதிச் சான்றுகளையும் பெற்றுள்ளார். இவரின் தந்தை ஜ அஃபர் சாதிக் ராமநாதபுரத்தில் நரம்பியல் துறை மருத்துவ நிபுணராக உள்ளார். இம்மாணவியின் தாயார் சாதிக்கா சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணராக உள்ளார்.

தஹ்ஸின் நிலோஃபரரின் சகோதரிகளில் ஒருவரான பாய்க்கா மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு சகோதரியான ஜுமானா கோவையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

மருத்துவக் கல்வியில் பதக்கங்களைக் குவித்துள்ள தஹ்ஸின் நிலோஃபர் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1184 மதிப்பெண்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதுமட்டுமின்றி கடந்த 2007-ல் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை வகித்தவர்.

தஹ்ஸின் நிலோஃபர் அகச் சுரப்பியல் சிகிச்சைத் துறையில் மருத்துவப் பட்ட மேற்படிப்பைத் தொடர உள்ளதாக தெரிவித்தார்.

முகநூல் பகிர்விலிருந்து...

அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ் !

நம் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் மருத்துவத்துறையில் பதக்கங்களை குவித்துருப்பது ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும். இது ஆச்சரியப்படத்தக்க விஷயமாக தெரியவில்லை. குடும்பமே மருத்துவத்துறையில் கோலோச்சி இருப்பதால் இம்மருத்துவத்துறை பதக்கம் பெற ஒன்றும் கடினமான சூழ்நிலைகளை சந்தித்திருக்க வாய்ப்பில்லை.

எது எப்படியோ நம் சமுதாயப்பெண்மணி என்ற ரீதியில் பதக்கங்களை குவித்திருப்பது மற்ற நம் சமுதாயப் பெண்களுக்கு ஒரு முன் மாதிரியே. .

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜுமானா,
பாய்க்கா,
தஹ்ஸீன் நிலோபர்,
சாதிக்கா,
ஜஹபர் சாதிக்
இவர்களின் குடும்பம் மார்க்க பேணுதலுடன் மருத்துவ சேவையில் சாதனை புரிந்து இஸ்லாத்திற்கு படிப்பினையாக முன்மாதிரியாக அமையட்டுமாக!

KALAM SHAICK ABDUL KADER said...

இனஷா அல்லாஹ் இது போன்று நம் கவிவேந்தர் சபீர் அவர்களின் புதல்வியார் அவர்கட்கும் பேறு கிட்டும் நற்செய்தி இதே தளத்தில் வரும் என்பது என் அவாவும்; துஆவும்.

அப்துல்மாலிக் said...

தலை சிறந்த மருத்துவ குடும்பம் என்று அழைக்கலாமா

மனமார்ந்த வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு