Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'அணை'யட்டும்... 33

அதிரைநிருபர் பதிப்பகம் | December 14, 2011 | , , , ,


ஒட்டிப் பிறந்தோமடி
ஒன்றாய் வளர்ந்தோமடி,அவரை
'குட்டி' என்பேனடி..என்னை
'குழந்தாய்' என்றாரடி..

இன்றோ..

சிந்தை இரங்காரடி..
செம்மை மறந்தாரடி..
விந்தை இதுவல்லவோ..
விளித்தல் இயலாதடி..

அண்டை நிலமல்லவோ.
அதனை விளங்காரடி..
பண்டை நட்பல்லவோ..
பாசம் இழந்தாரடி..

முல்லை பெரியாரடி..
மூட நினைத்தாரடி.
தொல்லை இதுதானடி
தொன்மை அறியாரடி..

நிலத்தைத் தந்தாரடி..
'அணை'த்து கொண்டோமடி..
நீரின் கரம்கொண்டுதான்
பிணைப்பைக் கண்டோமடி..

அகவை அதிகம்வரின்
ஆற்றல் குறைதலடி,
அணைக்கு மட்டுமின்றி
அத்தனைக்கும் இயல்பாமடி.

ஆய்வு செய்தாரடி.
'ஆகும் இத்துணை அடி'
அழகாய்ச் சொன்னாரடி- இருந்தும்
அச்சம் ஏந்தானடி?

புதிய அணைகட்டுதல்
விரயம், உணராரடி.
எதிலும் சுகம்கண்டிடும்
அரசியல் விளையாட்டடி.

நடுவண் அரசைத்தான்
நம்பி உள்ளோமடி..
விடியும் நாள்நோக்கித்தான்
வேட்கை கொண்டோமடி..

பேசலும் விளித்தளும்
பேதம் இல்லையடி..
கூடி வாழ்வோமடி.
கோடி நன்மையடி...

-அதிரை என்.ஷஃபாத்

33 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Excellent !

தண்ணீர் வேண்டும் தமிழக மக்களின் உச்சக்கட்ட உணர்வுக் கோர்வை !

தம்பி ஷஃபாத், பெருமைப் படுகிறோமய்யா உன் கவித் திறன் எண்ணி!

உன் வார்த்தைகளை பொறுக்கியெடுத்து அரசியல் ஆதாயப் பொருக்கிகள் பாடம் கற்றுக் கொள்ளட்டும் !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

மலையாள சேட்டன்மாரே
மனசுலாக்காத தெங்ஙனே
பாலம் பொட்டியாலும்
பயம் ஒந்நும் வேணா ஏட்டோ

சேட்டன் வீடெல்லாம்
மேட்டிலல்லோ கெட்டி இரிக்கி
பள்ளம் நோக்கியல்லோ
வெள்ளம் ஓடிப்போம்

புத்திமுட்டு ஒந்நும் இல்லா
கத்திக்குத்து எந்தானு சேட்டா
கள்ளத்தனம் கானிச்சி
காரியம் ஜெயிக்கன்டா

பரயரது மனசுலாக்கு
பட்டங்ஙல் படிச்ச சுகர்த்தே
ஓஃபீசர் மாரு சம்சாரிக்கட்டே
லோரி முடக்கன்டா

கட்டன் சாயாவோ
கடுங் கோஃபியோ
பெட்டெந்நு ஒந்நு அடிச்சி
படுத்துறங்ங என்ட சேட்டா

-Sabeer seettan

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மலையாள (பதிப்பு ஸாரி பாதிப்பு) கவிஞர் கவிக் காக்கா...

மொழி புரிந்து கொள்ளத்தான், விடயத்தை உள்வாங்கிக் கொள்ளத்தான் அதற்காக அவய்ங்க மொழியிலியிலேயே சொல்லி உலக குடிமக்களான அவர்களின் மனசைத் தொடுமா ?

வரும் வெள்ளிக்கிழமை காலை 06:00மணி முதல் 02:00 மணி வரை துபாய மெட்ரோ ஓடாது...

யூ.ஏ.யி. இருக்கும் அனைத்து மலையாள அன்பர்களின் கடைகள் இரவு 12:00மணியிலிருந்து அதிகாலை 05:00மணி வரை அடைக்கப்படும்...

தமிழ் பேசும் அன்பர்களுக்கு சாப்பாடு கிடையாது அவய்ங்க ரெஸ்ட்ரண்டில் .... :(

இதெல்லாம் போராட்டமாம் (மு.பெ.அ.க்கு) !!!

தலைத்தனையன் said...

மதம் கொண்ட மனிதனே!
வதம் கொண்டு வருவதால்

ஆரியனுக்கல்லாது
ஆருக்கடா ஆறுதல்

மலைசார் நாட்டனும்
தகைசால் தமிழ் நாட்டனும்

திராவிடத்தின் வித்தடா, இதை
திமிர் பார்பனர்க்கு ணர்த்தடா

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலமு அலைக்கும்.

சகோ: அதிரை என்.ஷஃபாத்தின் அடங்கா வரிகள் (அ.நி) அணையில் அருமையான சுழற்ச்சி. அந்த சுழற்ச்சியில் 33. டி களும் அரசியல் போடிகளுக்கு சரியான பேரிடி.இன்னும் முழங்கட்டும்.சொல் அடி. வாழ்த்துக்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கேயும் மலையாளி விடுவதாக இல்லை போலும். தமிழ் வரிகள் சுழற்ச்சி ஏற்ப்பட மலையாள வரிகள் வீர் கொண்டு கிளம்பி விட்டது .

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

புகைப்படம் பென்னி குக் கட்டிய சமயம் எடுக்கப்பட்டதா? இல்லை தமிழனும், மலையாளியும் தள்ளுமுள்ளு செய்யும் இக்காலத்தில் எடுக்கப்பட்டதா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எதைவேண்டுமானாலும் அரசியலாக்ககலாம் என்ற இன்றைய கேவலமான நிலையில் அதையும் அருமையாய் கவிப்படுத்திய தம்பி ஷஃபாத் கவிதைமூலமாவது நீரால் ஏற்பட்ட நெருப்பும் அணையட்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எதைவேண்டுமானாலும் அரசியலாக்ககலாம் என்ற இன்றைய கேவலமான நிலையில் அதையும் அருமையாய் கவிப்படுத்திய தம்பி ஷஃபாத் கவிதைமூலமாவது நீரால் ஏற்பட்ட நெருப்பும் அணையட்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தம்பி ஷஃபாத்..

வரிகள் டி டி என்று முடிகிறது.. அந்த உம்மஞ்சாண்டிக்கு பதிலா கேரளத்துலயும் ஒரு அம்மை முதல்வராக இருந்தால் இந்த கவிதையை நம்ம முதல்வரம்மா சார்பாக கோரிக்கையாக அனுப்பலாம்.

கலக்கல் தம்பி..

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தம்பி ஷஃபாத் இத்தனை டிடி வைத்து மிக அழகாக கவிதைகள் எழுதியுள்ளார். நம்ம எத்தனை டிடி போட்டு கவிதையோ,கட்டுரையோ எழுதினாலும் கூட முல்லை பெரியார் பிரச்சினை ஓயப்போவதில்லை. அலைகள் எப்படி ஒய்வதில்லையோ? அதைப்போல் முல்லை பெரியார் பிரச்சினை வேகமாக கிளம்பி விட்டது மலையாளி இங்குமட்டமல்ல எங்கும் விடுவதில்லை.

Yasir said...

”அணை”யட்டும்
“பிணை” களையட்டும்
“இணை”ப்பு ஓங்கட்டும்
அரசியல் ஒதுங்கட்டும்
ஷாஃபாத்தினால் ஷிஃபா பெறட்டும் இந்த பிரச்ச”ணை”
சூப்பர் தம்பி....அடிக்கடி எழுத மாட்டுகிறீங்களே

Yasir said...

கவி -க்க்காவின் மலையாள ஜாலத்தில் யான் மரிச்சு....வாழ்க சேட்டன் சபீர்-க்க்கா

ZAKIR HUSSAIN said...

//புதிய அணைகட்டுதல்
விரயம், உணராரடி.
எதிலும் சுகம்கண்டிடும்
அரசியல் விளையாட்டடி.//


ஒருக்கால் புதிய அணை கட்டினால் கிடைக்கும் கமிசனில் எத்தனை அமைச்சர்கள் செட்டிலாகிவிடக்கூடிய அளவு பணம் கிடைக்கும் என்பதை சொல்லும் வரிகள் ...

ஷஃபாத்.........ஷபாஸ்

Shameed said...

நான்கு வரிகளுக்கு ஒரு அணை போட்டு முல்லை பெரியார் அணை பற்றி சொன்னது அனைவருக்கும் பட்டுன்னு மனசிலாஈ

KALAM SHAICK ABDUL KADER said...

அணைக்கட்டு அன்பால் அணைக்கட்டும்

’முல்லைப் பெரியாறு’
சொல்லிப் பாரு
நற்றமிழ்ப் பேரு
நம்மை ஏய்ப்பது யாரு?

உடைக்க நினைப்பது
ஒற்றுமை உணர்வுகளை
தண்ணீரை வைத்து
தானியம், காய்கறி
அரிசியும் பயிரிட்டாயா
அரசியலைப் பயிரிடுகின்றாய்

அண்டை மாநிலமே
அரிசியும் பருப்பும் தந்தும்
சண்டைப் போட்டே
சகோதர்களின்
மண்டை ஓட்டை வைத்து
மல்லுக்கு நிற்கின்றாய்

உடைப்பதில் தான்
இடைத்தேர்தல் வெற்றி
கிடைப்பதென்பது
மடையர்களின் சூழ்ச்சி

தமிழின் உதிரமாய்
உன்றன் மொழியும்
தமிழனின் உதிரமும்
தட்டிப் பறிக்கின்றாய்

உன்றன் பூமியில்
உள்ள சாமியைத் தேடி
உன்றன் பூமிக்கு வந்தவன்
உதிரம் குடிக்கும் நீயும்
உலக மகா அறிவிலி

அணை கட்டாதே
அன்பால் எம்மை
அணைக்கட்டு

- "கவியன்பன்” கலாம்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

முல்லை பெரியாறு அணையும் கேரள கிருத்துவர்களும்.

//உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு வழக்கு குறித்த விசாரணையைக் காண, அமைச்சர் ஜோசப், இடுக்கி எம்.பி. பி.டி.தாமஸ், கேரள காங்கிரஸ் (மாணி பிரிவு) தலைவர் ஃப்ரான்ஸிஸ் ஜோசப் மற்றும் அந்த மாநில அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தனர்//

மேலே காண்பது தினமணி செய்தி.

33 வருடங்களுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணை உடையப் போவதாக வதந்திகள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டாலும், உம்மன் சாண்டி முதல்வராக வரும்போதெல்லாம் இந்த வதந்தி பூதகாரமாக்கப்பட்டு வருவதை அரசியல் நோக்கர்கள் கவனித்தே வருகின்றார்கள்.

கேரளத்தில் கிருத்துவர்கள் கோலோச்சுகின்ற கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, இடுக்கி ஆகிய நான்கு மாவட்டத்தை சார்ந்த கிருத்துவ தனவந்தர்கள்தான் இந்த வதந்திகள் பரவவும், மக்களிடையே பதட்டம் அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறார்கள்.

மேற்கண்ட மாவட்டங்களில் தொழில் ரீதியான போட்டிகளிலும், நில பேரங்களிலும் தமிழர்கள்தான் இவர்களுக்கு போட்டியாக இருக்கிறார்கள். இவர்களை ஒடுக்க இந்த கிருத்துவ தனவந்தர்களும், அரசியல் புள்ளிகளும், அமைப்புகளும் கையில் எடுத்த ஆயுதம்தான் முல்லைப் பெரியாறு உடையப்போகிறது என்று பரப்ப்படும் வதந்திகள். இதற்கு - அறிவுரீதியாக அல்லாமல் - உணர்வு ரீதியாக மட்டுமே சிந்திக்க்கூடிய மலையாளிகள் பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள்.

வளைகுடா நாடுகளில் எங்களோடு பணியாற்றக்கூடிய கேரளத்தை சார்ந்த அறிவு பூர்வமாக சிந்திக்கக்கூடிய நண்பர்கள் பலர் இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். எனது இந்த ஆக்கம் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு எனது கேரள நண்பர் ஒருவரால் முகணூலில் வெளியிடப்படுகிறது.

அமைச்சர் ஜோசஃப் - இடுக்கி எம். பி. தாமஸ் கேரள காங்கிரஸ் தலைவர் ஃப்ரான்ஸிஸ் ஜோசஃப் கேரள முதல்வர் உம்மன் சாண்டி – ஆகியோரை குண்டர் சட்டத்தில் அல்லது தேசபாதுகாப்பு சட்டத்தில் பிடித்து உள்ளே வைத்தால் எல்லாம் சரியாகிவிடும்.

அப்போது தெரியும் இடுக்கியில் ஏலக்காய் தோட்டங்களுக்காகவும், முல்லை பெரியாறு அணையை சுற்றியுள்ள இடங்களில் ஓய்வு விடுதிகள், உல்லாச விடுதிகள் கட்டுவதற்காகவும் இடங்களை ஆக்ரமித்ததும் ஆக்ரமிக்க ஆயத்தம் ஆவதும் அந்த வளங்களை சுரண்டுவதற்காக் இரு மானில அப்பாவி சகோதரர்களை யுத்தம் செய்ய தூண்டுவதும் யார் என்று.

கரிகாலன் கட்டிய கல்லணையை விடுங்கள் - அது மிதமிஞ்சிய உதாரணம்.
150 வருடத்தில் உடையப்போகும் அணைக்காக 999 வருடங்கள் ஒப்பந்தம் போட இங்லீஷ்காரன் என்ன இளிச்சவாயனா?

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே நேரத்தில் கட்டப்பட்ட கோதாவரி அணைக்கு இந்த பயமுறுத்தல் பிரச்னை எழுப்பப்படவில்லையே!
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட- அதுவும் தூணே இல்லாமல் கட்டப்பட்ட ஹவுரா பாலம் இடிந்துவிட்ட்தா?

மும்பை விக்டோரியா டெர்மினஸ், சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவனந்தபுரம் பெங்களூரு, போன்ற புகைவண்டி நிலையங்களும் , அவர்கள் கட்டிய எண்ணற்ற ரயில்வே மேம்பாலங்களும் , பூனா – மும்பை போன்ற குகை பாலங்களும், நாடுமுழுதும் போடப்பட்ட இருப்புப்பாதைகளும் இன்றளவும் நிலைத்து நின்று அவர்களின் கட்டிட கலைகளின் வல்லமைக்கும் திறமைக்கும் சான்று பகரவில்லையா?

சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட பாலங்கள், பள்ளிகள் இடிந்து இருக்கின்றன. ஆங்கிலேயர் கட்டியவை இடிந்ததற்கு ஆதாரம் உண்டா?

ஒரு அணையை உடைப்பது என்பது புட்டும், கிழங்கும் அவித்து சாப்பிடுவதுபோல் எளிமையானதா?

மத்திமீனை பொறித்து சாப்பிடுவதுபோல் சுலபமானதா?

சக்கை சாப்பிடும் சக்கை சகோதரர்களே சிந்தியுங்கள்.

இது மலையாளத்திலும் கேரள நண்பர் கோழிக்கோடு அப்துல் நாஸர் அவர்களால் வெளியிடப்படுகிறது- தாக்குதல்களை எதிர்கொள்ளும் தமிழனின் தைரியத்துடன்).

- இப்ராகிம் அன்சாரி.

sabeer.abushahruk said...

என் ஷஃபாத்,
என்ன ஷஃபாத்
என்ன ரிதம்
என்னென்ன விதம்
என்னை ஜெயித்த ஷஃபாத்
என்னையா திறன்
என்ன சொல்ல நானும்
என்னவோ செய்யுதிந்த ராகம்
 
எழுத்திலேயே ராகத்தைப் பொதிக்கும் திறன். டெம்ப்போ பிறழாத நடை.  கருத்தை எடுத்து வராமல் உடுத்தி வந்திருக்கு இப்பாடல்.
 
நீர் சொல்கிறீரா சுடுகிறீரா.
 
நாவினால் சுட்டப்புண் மாறாதாம்; நல் எழுத்தினால் தோன்றும் பாதிப்பும் மாறாது.
 
வாழ்த்துகள் தம்பி.
 

sabeer.abushahruk said...

//தண்ணீரை வைத்து
தானியம், காய்கறி
அரிசியும் பயிரிட்டாயா
அரசியலைப் பயிரிடுகின்றாய்//

க்ளாஸ் கவியன்பன்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அ.நி. குழுவினர்களுக்கு,

ஷஃபாத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சிறந்த கவியாக உருப்பெறும் அடையாளங்கள் அவரிடம் இருக்கின்றன.

***

கலாமின் பின்னூட்டம் தனிப் பதிவாக:

அணை கட்டாதே
அன்பால் எம்மை
அணைக்கட்டு!

http://www.satyamargam.com/1848

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//அ.நி. குழுவினர்களுக்கு,
ஷஃபாத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.//

இன்ஷா அல்லாஹ்...

எங்கள் விருப்பமும் அதுவே... நிச்சயமாக !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் - (அதி அழகு) காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உடைப்பதில் தான்
இடைத்தேர்தல் வெற்றி
கிடைப்பதென்பது
மடையர்களின் சூழ்ச்சி//

மடை(யை) உடைக்க மடையர்கள் செய்யும் அரசியல்..

கவியன்பன் காக்காவின் வரிகளுக்கு யாரும் அணை கட்ட முடியாது !

KALAM SHAICK ABDUL KADER said...

பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே
சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை
நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக்
கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே


ஷஃபாஅத் மிகச்சிறந்த கவிஞர் எனபதற்கான ஷஃபாஅத்(பரிந்துரை)

1) கல்லூரி ஆண்டுவிழா மலர்களில் அவரின் கவிதைகள் கண்டு ஆனந்தம் அடைந்துள்ளேன்;
2) “அணு உலை” கவிதையில் அணு அணுவாய் இரசித்தேன்;
3)”நட்புக்குத் தோழர்கள் பரிசு” கவிதை முந்தி வந்திருந்தால் முதற்பரிசு அவருடையதே
4) முகப்புக் கவிதையாய் அமைய நெறியாளரின் தேர்வும், பின்னூட்டமிட்ட அனைவரின் கருத்தும், கவிவேந்தர் சபீர் அவர்கள் சொல்வது போல் “முண்டாசு கட்டாத பாரதி” என்ற அடைமொழிக்கு ஒப்ப அமைந்து விட்டன.
5)இன்னும் ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் கூட்டிக்கொண்டால், ஓசையுடன் அமையும் அறுசீர் விருத்தம் வாய்பாட்டில் அமையும் வாய்ப்பைப் பெறும் என்பது என் நிலைப்பாடு
6)சீர்களைச் சீர்படுத்தும் யாப்புக்கலையும் அவரறிவார் எனபதும் யான் அறிவேன்.

அழகு, அறிவு, ஆற்றல், நற்பண்புகள் நிரம்பப் பெற்ற அன்புத்தம்பி ஷஃபாஅத் நீடூழி வாழ்க; வற்றாத ஜீவ நதியாய் கவிதைகள் வழங்குக!

என் ஆருயிர் நண்பன் முஹம்மத் தமீம் பெற்றிருக்கும் எழுத்தாற்றலும் அதற்கான காரணங்களும்:

1) நூலகம் தேடி நூற்களைப் படித்தவன்; படிப்பாளிதான் படைப்பாளியாக முடியும் என்பதால் படைப்பான் இன்ஷா அல்லாஹ் பைந்தமிழில் கட்டுரைகள்; கவிதை நடையில்..
2) நாவல் படிக்கும் பழக்கம் அவனுக்கு உண்டென்பதாற்றான், நாவன்மையிலும், எழுத்திலும் வசனவீச்சுக்கள் வீசும்

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெமீல் காக்கா மற்றும் அ.நி. நெறியாளர் அபூஇப்றாஹிம் ஆகியோரின் ஆதரவால் எனது பின்னூட்டத்தில் பதியப்பட்ட கவிதை “சத்யமார்க்கம்.காம்” கவிதை பகுதியில் பதியமிடப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சியுடன் “ஜஸாக்கல்லாஹ் கைரன்” என்ற துஆ செய்கின்றேன்

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

சபீரண்ட கவிதை வாசிச்சு ஞான் குபீரெண்டு சிரிச்சுப் போயி!.

-வா..

crown said...

ஒட்டிப் பிறந்தோமடி
ஒன்றாய் வளர்ந்தோமடி,அவரை
'குட்டி' என்பேனடி..என்னை
'குழந்தாய்' என்றாரடி..
------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். குட்டிக்குழந்தை , மெல்ல அடிமேல் அடியெடுத்து நகர்வதுபோல் ஈரடியாடி கையாண்ட கவி நடை ஒரேடியாக எமை இப்படி வாரி 'அணை'த்துக்கொண்டது. மளையாள மரமண்டைகளுக்கு ஆரம்பத்திலேயே (சு)குட்டி காட்டியதும் அருமை.

crown said...

தம்பி(வேலைப்பளு அதனால் சுனங்கி இதை எழுதுகிறேன்) மடி, மடி என்று சொன்னது ஒரே தாயின் மடியில் வளர்ந்தது போல் சகோதர வாஞ்சையை குறிப்பிட ஆனால் கேரளத்தானோ நம்மை செத்து மடி என சொல்வதும், நீர் அடித்து நீர் விலகாது என்பதை அறியாமல் மளையால இனமே நீர் அடித்தா நான் விலகுவேன்? நான் மறித்து போகச்சொல்லி நீ சிரித்து போகிறாய்! தமிழ் நாட்டு உணவை விழுங்கிவிட்டு செரித்துபோகும் உன் குடல் ஆனாலும் நீ செய்யும் அழுச்சாட்டியம் செரிக்கவில்லையட!

crown said...

அகவை அதிகம்வரின்
ஆற்றல் குறைதலடி,
அணைக்கு மட்டுமின்றி
அத்தனைக்கும் இயல்பாமடி.
-------------------------------------------------
அணை கட்டி நீற்கும் உன் சிந்தனைக்கு இந்த வரிகள் சிறு துளிகள்.!!!இந்த அகவையிலும் அடியை அளந்து வைக்கும் உன் நிதானம் ஆனாலும் நான் சொல்கிறேன் உன் அடியின் அளவை அகலவை! வரும் தலைமுறையின் அறியாமை "அகல"வை.

crown said...

பேசலும் விளித்தளும்
பேதம் இல்லையடி..
கூடி வாழ்வோமடி.
கோடி நன்மையடி...
-------------------------------------------------
தேனீர் விருந்து உலக நாகரிகமாய் எங்கும் பரவி இருக்க!சேட்டானே உனக்கு நாங்கள் தேனீர் கடை வீதிக்கு வீதி வைத்து உன் வாழ்வில் ஆதாரத்துக்கு ஆதரவு தந்தோமே அந்த நன்றி கூட இல்லாத கோட்டானா நீ சேட்டான்? தமிழன் என்ன கேட்டான் ? எம் உயிரை எடுக்க துணிந்து விட்டாய்? உன் கொட்டம் அந்த கோட்டையில் உள்ளவர்கள் அடக்குவார்க்களோ இல்லையோ!ஆனால் மரிச்சு போனதும் மறுமை வரும் அதில் உனக்கெல்லாம் தீர்ப்பு வரும்.

crown said...

தம்பி முன்போல் அதிகம் பேசிக்கொள்ளமுடியாதபடி உனக்கும் ,எனக்கும் வேலைப்பளு! ஆனாலும் ஓர் வேண்டுகோள் எனக்கு எப்ப வகுப்பெடுப்பாய் இப்படியெல்லாம் எழுத, சிந்திக்க.?

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

தமிழே ! உன்னை சாகடிக்கவும் நோகடிக்கவும் மலையாளிகள் தேவையில்லை ! உன் மக்களே போதும் ! சொற்களிலும் நடையிலும் அவ்வளவு தப்புத்தாளங்கள் !

- தமிழன்

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

"சேரர்கள் எங்கள் பேரர்கள்! பாண்டியர்கள் எங்களுக்கு வேண்டியவர்கள் ! சோழர்கள் எங்கள் தோழர்கள் !" என்பதெல்லாம் அணை கடந்து போச்சா?

- வா..

crown said...

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) சொன்னது…

தமிழே ! உன்னை சாகடிக்கவும் நோகடிக்கவும் மலையாளிகள் தேவையில்லை ! உன் மக்களே போதும் ! சொற்களிலும் நடையிலும் அவ்வளவு தப்புத்தாளங்கள் !

- தமிழன்
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். வாத்தியார் அய்யா! அவர்களுக்கு. இங்கே அனைவரும் அணைவரும், பிரட்சனை அனையவரும் என இருக்க மலையாளத்தான் என சரியாக சொல்லியும், நான் பிழையாக மறுபடியும் மளையாலத்தான் என அழைத்தது அவனை பிழையாக அழைக்கத்தான். மேலே குறிப்பிட்டது எனக்காக வெனின் தவறுகளை திருத்தி கொ(ல்)ள்கிறேன். மளையாலத்தான் எனும் வார்த்தை தவிர்த்து.மலையாலத்தான் என அவனை உச்சியில் வைக்க மனம் இல்லாத தமிழன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு