Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சங்கங்கள் சமுதாயத்தின் அங்கங்களா ? :: விவாதக்களம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2013 | , , ,


பாரம்பரியம், குலப் பெருமை பேசுவதில் இன்னும் அப்படியேதான் இருக்கிறோமா? அல்லது நம்மிடையே அந்தச் சூழல்களிருந்து வெளியேறி இன்றைய கால ஓட்டத்திற்கு ஏற்றார்போல் மாறிக் கொண்டிருக்கிறோமா? என்று ஆராய்வதற்கு முன்னர், அதிரையில் ஊர் கட்டுப்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் சில மற்றும் தெருக் கட்டுப்பாடுகள் என்று ஆங்காங்கே இருப்பதை யாவரும் அறிந்ததே.

சரி, விஷயத்திற்கு வருவோம்...

உங்கள் பார்வையில் முஹல்லா சங்கங்கங்கள், தெரு சங்கங்கள் இன்றைய நிலையில் எவ்வாறு இருக்கிறது, அவற்றின் பங்களிப்பு அந்த சங்கங்களைச் சார்ந்த அல்லது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதிகளில் எப்படி உள்ளது !?

நீங்கள் சார்ந்திருக்கும் தெரு அல்லது முஹல்லா சங்கங்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், அதன் நிர்வாகங்கள் இன்றைய சூழலில் எவ்வகை பங்கை சமுதாயத்திற்கு நிலைநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

வாருங்களேன்... விவாதிக்கலாம்....!

வழக்கமாக சொல்வதுதான், வரம்பு மீறல்கள், தனிமனித சாடல்கள் இன்றி உண்மையை உரக்கச் சொல்லுங்கள் ஆனால் உணர்வுகளோடு மல்லுக்கட்டடாமல் நிதானமாக கருத்துக்களை பதியுங்கள்.  வரம்பு மீறல், தனிமனித சாடல் இருப்பின் உடணடியாக நெறியாளுமைக்கு உட்படுத்தப்படும்.

அதிரைநிருபர் பதிப்பகம்

25 Responses So Far:

sabeer.abushahruk said...

முதற் குறைபாடே கொள்கைகளில் தெளிவில்லாமைதான்.

இப்ப இருக்கும் சங்கங்களும் அங்கங்களும் எதையும் சாதிக்க வலுவின்றியே இருக்கின்றன.

அந்தக் காலத்திலே தலைமைக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதற்கான தகுதியும் தலைவருக்கு இருந்தது. 

இப்பவெல்லாம் வேலைவெட்டி இல்லாதவங்க பொருப்பில் இருப்பதால் காசு பார்க்கும் காரியங்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர்ராங்க சங்கங்களும் அங்கங்களும்.

தலைமை... வலுவான தலைமை இல்லை என்பதே என் வாதம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சங்கங்களின் பலம் தெரிந்தவர்கள்தான் தலைகளாகவும் செயல் விரர்களாவும் இருப்பது அந்த சங்கத்தின் ஆளுமைக்கு சேர்க்கும் பலம்...!

முஹல்லா, தெரு நலன்களின் திட்டங்கள் தீட்டி முஹல்லா வாசிகளின் நலனுக்கு பலன் சேர்க்கும் விதமாக செழுமைக்கும் வழிவகுக்கும்படி உயிரோட்டமாக இருக்க வேண்டும். [இவைகள் எனது ஆசைகள்]

தெரு சங்கங்கள் இல்லாத தெருக்கள் முஹல்லா சங்கங்களைத்தான் சார்ந்திருக்கிறது...

புதிது புதிதாக உருவெடுத்திருக்கும் இயக்கங்கள் ஆளுக்கு ஒரு சீஸனல் திட்டங்களைத் தீட்டி மக்களோடு கலக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இயக்கங்களுக்கு முன்னரே உருவாக்கப்பட்ட சங்கங்களின் செயல்பாடுகளில் தடங்கல்கள் ஏராளாம்.

முஹல்லா ஒற்றுமைக்கும் கட்டுக் கோப்புக்கும் பெயர்பெற்ற சங்கங்களும் முஹல்லா வாசிகளின் நலனுக்கு ஏற்ற பலன்கள் அளிக்கும் நீண்ட காலத் திட்டங்களை அமல் படுத்தலாம். [அதெல்லாம் செய்கிறோம் என்றால் பட்டியலிடலாம் அவைகள் என்னவென்று]

பெண்களுக்கென்று அந்த தெருக்களில் முஹல்லா சங்கங்களின் சார்பாக பெண்களால் நடத்தப்படும் தையல்கூடங்கள் (exclusive for ladies) அமைக்கலாம்....

தங்களின் வறுமையை வெளியில் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மானதிற்குள்ளேயே, அஞ்சி வெட்கிக் கொண்டும் தங்களுக்குள்ளேயே வைத்திருக்கும் குடும்பங்கள் செழிப்பான தெருக்கள் இருக்கும் தெருக்களிலியே அந்த குடும்பங்கள் இருக்கிறது.

ஒரு சில தெரு சங்கங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி சில நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

sabeer.abushahruk said...

//ஒரு சில தெரு சங்கங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி சில நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது//

அப்படிப்பட்ட நலத்திட்டங்களை மற்ற எல்லாத்தெருக்களுக்கும் முன்னுரைப்பதற்கு இறைப்பொருத்தம் போதுமா அல்லது ஏதும் ச்சார்ஜ் பண்ணுவீஙக்ளா?.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்படிப்பட்ட நலத்திட்டங்களை மற்ற எல்லாத்தெருக்களுக்கும் முன்னுரைப்பதற்கு இறைப்பொருத்தம் போதுமா அல்லது ஏதும் ச்சார்ஜ் பண்ணுவீஙக்ளா?.//

நல்லெண்ணமும், முஹல்லா / தெரு நலனும் முன்னிருந்தால் அப்படியே காப்பியடிக்கலாம்... அப்படி காப்பியடித்தால் தப்பில்லையே !

sabeer.abushahruk said...

//அப்படி காப்பியடித்தால் தப்பில்லையே !//

டீ வாங்கிக் கொடுத்தால் காப்பி அடிச்சிடமாட்டங்களா?

Adirai pasanga😎 said...

1) எல்லாவற்றிற்கும் அடிப்படை கொள்கை தான் அது முதலில் இஸ்லாத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

2) இறையச்சம் - இது இருந்தால் நியாயம், பாரபட்சமின்மை, பொது நலனில் அக்கறை இன்னும் எல்லாம் இருக்கும்.

3) மார்க்க அறிவும் உலக அறிவும் இருக்க வேண்டும். இதன் மூலம் பிரசனைகளை தீர்க்க வாய்ப்பு உண்டு.

மேற்சொன்னவைகள் அனைத்தும் ஒரு காலத்தில் பரவலாக அனேக பேரிடம் இருந்ததால் ஒற்றுமை இருந்தது. மாற்றுமதத்தவர் நம் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர். ஆனால் இன்று அவைகளெல்லாம் எங்கு போனதோ... எல்லாம் போய் விட்டது.

அதிரை சித்திக் said...

சங்கங்கள் ....

உறவுகளின் கூட்டமைப்பாக கருதுகிறேன் ...

இக்கால கட்டத்தில் குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்களை தீர்ப்பதற்கே

தடுமாறும் நிலை காரணம் இக்கால இளைஞர்கள் பெரியோர்களை

மதிக்காததே காரணம் ..பல இளைஞர்கள் தன்னால் ஈர்க்க பட்ட

கொள்கைகளையும்,சமூக நடைமுறைகளையும் குழப்பி கொள்வதும்

ஒரு காரணம் ..பெரியவர்கள் ..அல்லது சங்க தலைவர்கள்

படிக்காதவர்களாக பொருளீட்டலில் தன்னை விட குறைந்தவர்களாக

இருப்பதால் கூட மதிப்பதில்லை ...தனது உயர்வான நிலையினை

குடும்ப சூழ்நிலையில் தனது ஆளுமையில் இருக்க நினைப்பதும்

குழப்பத்திற்கு காரணம்... நல்லவர்களாக இருக்கும் இளைஞர்கள்

இதற்கு காரணமாக இருப்பதில்லை ..திருமண வாழ்கையில் ஏற்படும்

பிரச்சனைகளில் மிக மூர்க்கமான முடிவெடுக்கும் சூழல் சங்கங்களின்

இயலாமை நன்றாகவே வெளிப்படுகிறது ..சங்கள் அவசியமே ..

இனி வரும் காலங்களில் இளைஞர்கள் ஆளுமையின் கீழ் சங்கங்கள்

வர சங்கங்களுக்கு கட்டு படாத இளைஞர்களை அவர்கள் பாணியிலேயே

அடக்க வேண்டும் ..அது சட்ட ரீதியாக இருந்தாலும் சரி ..,சக்தி ரீதியாக

இருந்தாலும் சரி ..,பெரியவர்கள் மதிக்க பட வேண்டும் ..மிதிக்க படும்

காமாக உள்ளது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சங்கம் அவசியம் தேவை.

அதன் அங்க தலை ரொம்ப வயோதிகராக இருக்கக் கூடாது.
( அன்றைய மர்ஹூம் அப்பாஸ் ஹாஜியார் அவர்கள் மாதிரி
துடிப்புள்ள வயதுடையவராக இருப்பது நலம்)

பார்வையிலேயே கட்டுப்பட வைக்கும் தோற்றமும், செயல்பட வைக்கும் திறனும் இருக்க வேண்டும்.

அங்கத்தினர் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனம் பெற்றிருக்க வேண்டும்.

தலை முடிவெடுத்தார்,
...... எனக்கு தெரியாது,
......... நான் வெளிநடப்பு செய்தேன்,
............. நான் மெளனமாக இருந்தேன்,
................ என்னை கலக்க வில்லை என்ற பேச்சே எழக்கூடாது.

கடந்த காலத்தில் வார்டு மெம்பரை தேர்வு செய்வதில் முனைந்த சங்கங்கள் இது வரை அவ்வாறு தேர்ந்தெடுத்த உறுப்பினர்களின் செயல்பாடுகளின் நிறை குறைகளை எடுத்து சொல்லி சீர்திருத்த முயன்றதாக தெரியவில்லை.
(அவ்வாறு செய்திருந்தால் அச்சங்கம் நம்பர் 1. என்பதில் ஐயமில்லை)

கடந்த கால தீர்வுகள், அதை கையாண்டு வெற்றி கண்ட விதம் பற்றி அவ்வப்போது கலந்துரையாடி சங்கங்களுக்கிடையே நல்ல பரிவர்த்தனை நட்பு இருக்க வேண்டும்.

அன்று தேசத்து விடுதலைக்காக கோரிக்கை வைத்தது போல இன்று சமுதாயத்துக்கு அரசு காட்டும் ஏற்றத்தாழ்வுகளை பகிரங்கப் படுத்தி அது களைய குரல் கொடுக்க வேண்டும்.

முதலில் சங்கம் மிக முக்கியம் என்பதை நம்மவர்கள் உணர வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------

ரபியுள் ஆகிர் 12
ஹிஜ்ரி 1434

Ebrahim Ansari said...

விவாதங்களில் உள்ள கருத்துக்களை கவனித்து வருகிறார்கள். நிறைய கருத்துக்கள் இன்னும் கடல்களைத்தாண்டியும் வருமென்று எதிர்பார்க்கலாம்.

முதலாவதாக எனது கருத்தை சொல்கிறேன். சங்கம் தேவை. ஆனால் அவை பொது நல சங்கமாக இருக்க வேண்டும். சில தெருக்களின் சங்கங்கள் அரசியல வாதிகளின் கைப்பாவைகளாகவும்- பணம் படைத்தோகளின் ஏவலாட்கள் போலும் செயல்படக் கூடாது. யார் தவறு செய்து இருந்தாலும் தட்டிக் கேட்கும் திராணி வேண்டும். தவறு இழைத்தவர் யார் என்று பார்த்து தண்டனை வழங்குதல் தகாது. இழைத்த தவறு என்ன என்று பார்த்து தண்டனை வழங்க வேண்டும்.

வாயு களைவது எல்லோருக்கும் பொதுவானது. ஏழைக்கு வாயு போனால் "நாத்தம் புடிச்சவன் என்ன இழவை சாப்பிட்டானோ" என்பது - பணக்காரனுக்கு வாயு போனால் "காக்கா நேத்து பச்சரிசி சோறு சாப்புட்டாக கூடவே உருளக் கிழங்கு ருசியாக இருக்குன்னு ஒரு துண்டை சாப்புட்டாக" என்கிற பாகுபாடு கூடாது.

இன்னும் சொல்வேன். ஏக்கங்கள் நிறைய இருக்கின்றன.

Unknown said...

//பாரம்பரியம், குலப் பெருமை பேசுவதில் இன்னும் அப்படியேதான் இருக்கிறோமா?//

ஆம்.

* சங்கங்கள் அது எந்த சங்கமாக இருந்தாலும் பொருள் உள்ளவர்களுக்கு ஒரு ஞாயம் பொருள் இல்லாதோருக்கு ஒரு நியாயம் என்ற நிலைபாடை கொண்டுள்ளது.

*தகுதியானவர்கள் பொறுப்பு வகிபதில்லை.

* இந்திய அரசியல் சட்டப்படி ஒவ்வரு பஞ்சாயத்துகளுக்கும் நிறைய உரிமைகளை வழங்கி உள்ளது, அவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வரு சங்கங்களும் தங்களின் கட்டுபாட்டிற்குள் உள்ள பகுதிகளில் இஸ்லாமிய கட்டுபாடுகளை நிலை நாட்ட பஞ்சாயத்துகளின் வரம்புகட்கு உட்பட்டு, கடுமையான நிலைபாட்டை வரையறுக்க வேண்டும்.

* மேலும் நவீன கலாசார கேடுகள், கள்ள உறவுகள், இன்ன பிற இழி செயல்களுக்கு காரணமான தரப்பினரை கண்டறிந்து, தனி நபராக இருந்தால் அதற்கேற்றார் போல், அல்லது மொத்தமாகவோ, குற்றத்தின் அளவறிந்து, அவர்களை ஊரைவிட்டு ஒதிக்கி வைக்க வேண்டும்.(அதாவது, அவர்களின் பிறப்பு,இறப்பு, திருமணம் போன்ற அணைத்து நிகழ்சிகளையும் ஒட்டு மொத்தமாக புறகணிக்க வேண்டும்.)

* இன்னும் பல உண்டு. ஆயினும், கேட்போரும், செயல்படுதுவோரும் அல்லது குறைந்த பட்சம் இதற்காக முயல்வோர் உண்டா? இது போன்ற சமூக அக்கறை கொண்ட விவாதங்கள், விவாதங்களாக மட்டும் இல்லாமல் இதன் மூலம் பெறப்படும் செய்திகள், மாற்றங்களாக உருவெடுப்பது என்று?

Abdul Razik said...

I want to script the same point of Brother Abu Ibrahim "சீஸனல் பிரச்சினைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், இன்னும் நீண்டகால சமூகத் தீர்வுகளுக்கும் அவசியம் கவனம் செலுத்த வேண்டும்!

ஒரு குறிப்பிட்ட ஆதரவாளர்கள்தான் சங்கம் என்றில்லாமல், பரவலாக அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

இவர் யாரு சொல்ல என்ற மல்லுக்கட்டவும் கூடாது, இவர்கிட்டேயெல்லாம் கேட்கக் கூடாது என்று அடம் பிடிக்கவும் கூடாது!"
Abdul Razik
Dubai

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

வெள்ளி சனி விடுப்பை நல்லா பயன் படுத்துகின்றீர்களே
பொண்டாட்டி புள்ளைகளை கூட்டிக்கிட்டு
பர்ச்சேஸ் கெளம்பளயா

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

Associations for each and every street (Muhalla) in the town are vital.

* I think social harmony is very important in each community in
the whole town of Adirampattinam.

* Each member of an association is to be socially responsible,
should have service oriented mentality to the community, and
above all God consciousness(Taqwa) since so many issues are
being discussed and resolved where judgements are to be fair(God
Almighty is seeing all).

* So many issues can be prevented in the communitites(regardless
of religions over there) before they occur by proactive efforts
in education, religious knowledge spreading(without clashes) and
facilitating understanding.

* I have been observing that the associations are having
understanding with government entities like Town Police,
Town Punchayat, etc. Its better to have such cooperation with
positive intentions than being independent entities.

* Each and every association at the end are having service
motive to fellow human. So, by this concept, every association
in the town should have undestanding, good relation and harmony
(than the competetion and the pride of their association). And
best practices can be shared between associations.

* I have been wishing for our town as a whole should be an
excellent model community to be followed by other near by towns.
May Allah accept our good wishes and dua.

Thanks and best regards,

B. Ahamed Ameen
from Dubai.

அப்துல்மாலிக் said...

சங்கம் என்பது மிக முக்கியம் அதுபோல் அது ஒரு கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு காலத்தில் ஒருத்தர் சொல்லே மந்திரமாக இருந்தது எத்தனையோ பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைத்து போலீஸோ கோர்ட்டுக்கோ நிரந்தர லீவு கொடுத்து இருந்தார்கள். இப்போ எல்லோர் கையிலும் காசு காசு காசு இருக்கு. யாரும் யாரையும் கட்டுக்குள் கொண்டுவரமுடிவதில்லை. உடனே கோர்ட் கேஸ் என்று அல்லோலப்படுகிறோம்.

எந்த தவரையும் (சிறுவர்கள், அந்த ஏரியா சார்ந்தவர்கள்) செய்யும்போது குறிப்பிட்ட அந்த சங்க தலைவரை சந்தித்து அதன்மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்

அரசியல், ஆதாயம், பதவியாசை இல்லாமல் இருந்தால் நிச்சயம் சங்கம் என்பது ஒன்று தேவைதான்..

adirami said...

மனித சமூகத்திற்கு நன்மை பயக்கும் முறையில் ஒவ்வொருவரும் தன் தனிப்பட்ட வாழ்கையில் எவ்வாறு இருக்கிறோமா என்று தன் நிலையை சுயபரிசோதனை செய்துவிட்டு பின்னர் தன் வீட்டை சரி செய்து கொண்டு அதில் வெற்றி கண்டபின் (மீதி நேரம் இருக்காது) அவர்கள் சங்கப் பணிகளை பொறுப்பேற்க வந்தால்....

அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு சகாபாக்கள் அமிருல் முமின்களை எவ்வாறு தேர்ந்தெடுத்து வழி காட்டினார்களோ அந்த இறை அச்சத்துடன் சிறந்த ஆலிம்களின் சுதந்திரமான வழிகாட்டளுடன் சங்கம் தலைமை அமைந்தால் மட்டுமே அது மனித சமூகத்திற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் பலன் அளிக்கும் இல்லையேல் அச்சங்கம் அங்கத்தினருக்கு மட்டுமே பலன் இருக்கும்.

அங்கத்தினர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

1. புகழ்
2. ஆணவம்
3. உலக இலாபம்
4. தனது சொத்தாக நினைத்து ஆளுமை
5. நம்பியிருக்கும் சமூகத்திடம் பிரதிபலன் அடைவது

இதனால் ஏற்படும் அவலம்

1. இறைவனுக்கு பதில் மனிதனுக்கு கீழ்படிய வேண்டிய நிலை
2. அநீதி நிலை நிறுத்தப்படும்
3. மறுமையில் கடுமையாக விசாரிக்கப்படுவார்கள்
4. மக்களுக்கு பலனிருக்காது

ZAEISA said...

தெருவுக்கு சங்கங்கள் தேவைதான்;
அதில் பொறுப்புக்களை அறிவுப்பூர்வமாக அணுகுபவர்கள் அமர்ந்து,உணர்ச்சிப்பூர்வமாக{அலட்டல்,அடிதடி}அணுகும் உறுப்பினர்களை நியமித்து செயல்படுதல்தான் இக்காலத்திற்கு சரியாகுமென்றுப்படுகிறது.

sabeer.abushahruk said...

சந்தோஷமாக இருக்கிறது இத்துணை சிந்தனைகளையும் சீர்தூக்கிப்பார்க்க. அத்துடன் சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு விவாதித்து பேசுபொருளைப் பற்றிய தெளிவு ஏற்பட இதுபோன்ற விவாதக்களங்கள் துணைபுரியும்.

சஃபீர் பாய்,

தங்களின் பின்னூட்டம் இந்தப் பதிவுக்குத் தொடர்புடையதுபோல்தான் தெரிகிறது. "இவிங்க சொன்னா கேட்கவா போறாங்க" என்னும் கோபம் தெரிகிறது.

நாம சொல்லாமல் இருந்தால் இன்னும் மோசமாயிடுமே?

Ebrahim Ansari said...

கடந்த சில நாட்களுக்கு முன் அதிரை நிருபர் வலைதளத்தில் ஒரு தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது. பல பிரச்னைகள் அலசப்பட்டு இருந்தன.

ஊரில் எத்தனை இயக்கங்கள் இருந்தாலும் அவை அவரவர் தனிக் கருத்து. ( சொன்னாக் கேட்கவா போராங்க? பேசாமல் தண்ணீர் தெளித்து விட்டுவிடலாம்)

ஆசைகளை சொல்லி விடுகிறேன்.

ஊர் முழுமையும் ஒட்டு மொத்தமாக கட்டுப் படுத்தக் கூடிய ஒரு ஜமாஅத் சங்க அமைப்பு தேவை. இந்த அமைப்புக்குத் தெரியாமல்- அனுமதி இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்து எந்தக் காரியமும் நடை பெறக்கூடாது. எல்ல இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இதில் பிரதிநிதித்துவம் தேவை. முடிவுகளுக்கு கட்டுப்படுவோம் என்கிற துணை விதி தேவை.

இன்று என்ன நடை பெறுகிறது? ஒரு தெருவில் ஒரு குமாரை திருமணம் முடித்துவிட்டு சரியாக வாழவைக்காமல் கொடுமை செய்தவன் - மறு ஊரில் திருமணம் முடிக்க பெண் பார்த்து வந்து தெருவில் கடிதம் கேட்கிறான். தெரு கடிதம் தர மறுக்கிறது. காரணம் தீர்க்கப் படாத முதல் மனைவி. இதனால் அதே ஆள் வேறு ஒரு தெருவில் யாரையாவது பிடித்து கடிதம் வாங்கி இரண்டாம் திருமணமும் செய்து கொண்டு முதல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பேப்பே காட்டுகிறான்.

ஒரு மையப் படுத்தப்பட்ட அமைப்பில் இருந்துதான் திருமணக் கடிதங்கள் வழங்கப்படவேண்டுமென்று விதி வகுக்கப்பட்டால் இப்படி நடக்குமா?

இன்னும் உள்ளன. முதலில் மேலே கண்ட கருத்து பற்றி நண்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சங்கம் என்பது நல்ல மனங்கள் சங்கமிக்கும் இடமாக‌ திகழ வேண்டும்.

அசிங்கப்பட்டவர்களும், அசிங்கப்படுத்துபவர்களும் ஒன்று கூடும் இடமாக இருக்கக்கூடாது.

பணத்திமிராலும், அடக்குமுறைத்திமிராலும், ஆணவத்திமிராலும் சில பலவீனமானவர்களை மீறி சிலர் சங்கத்தின் பார்வைக்கே வராமல் யார் வந்து எம்மை என்ன கேட்க முடியும்? வரட்டும் பார்க்கலாம் என்ற வீராப்பில் தான்‍தோன்றித்தனமாக ஏதேதோ செய்து விடுவதை நாம் சில வேளைகளில் பார்க்க, கேட்க முடிகிறது. கடைசியில் அவர்களுக்கே அல்லாஹ் புறத்திலிருந்து ஏதேனும் துன்பம் வந்தடையும் பொழுது ஒப்பாரி வைப்பதையும் நாம் சில வேளைகளில் பார்த்து விடுகிறோம்.

மன்மோகன் சிங்கிடமே சென்று கொஞ்சம் அந்த‌ ஹெலிகாப்ட‌ர் ஊழ‌லை தீர‌ விசாரித்து உண்மைக்குற்றவாளிகள் பற்றி ஒரு ந‌ல்ல‌ முடிவை மக்களுக்கு அறிவியுங்க‌ள் என்று கேட்ப‌து போல் ஆகிவிட‌க்கூடாது ச‌ங்க‌த்தின் நிர்வாக செய‌ல்பாடும், அதை முழுவதும் ந‌ம்பி தங்கள் பிர‌ச்சினைக‌ளுக்கு சங்கத்தை அணுகும் ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பும்......

ப‌டைத்த‌ அல்லாஹ்வின் இறை அச்சம் இருந்தால் எந்த‌ வேலியும் எச்சூழ்நிலையிலும் எப்ப‌யிரையும் மேய்ந்து விடாது என்ப‌தே இங்கு இறுதியாக‌ சொல்ல‌ வ‌ந்த‌ விச‌ய‌ம்.

Ebrahim Ansari said...

அதே போல் ஊரில் ஒரே நாளில் எண்ணிக்கையற்ற திருமணங்கள் நடை பெறுகின்றன. ஒரே நபருக்கு பல வீடுகளில் இருந்தும் விருந்தழைப்பு வருகிறது. யார் யாரை அழைத்தார்களோ அவர்களின் எண்ணிக்கை மேஸ்திரியின் எண்ணிக்கை லிஸ்டில் இருக்கிறது. ஆனால் ஒருவர் ஒரு வீட்டில்தான் சாப்பிட முடியும். அவருக்காக அடுத்த நான்கு வீடுகளில் சமைக்கப்பட்ட மிகப் பெரும் செலவை உள்ளடக்கிய உணவு வீணாகிறது.

ஒரே நாளில் பல திருமணங்கள் நடை பெறாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை திருமணம் அல்லது தெருவாரியாக இத்தனை திருமணம் என்று ஒரு மையப் படுத்தப்பட்ட அனைத்து தெரு சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு அனுமதி தருமானால் பெருமளவு செலவு குறையும். வீண் விரயம் குறையும். வீணாக கூடுதலாக சமைத்து தெருவில் கொட்டுவதை அடுத்த வாரம் திருமணத்தை தள்ளிவைத்தால் எல்லோரும் எல்லா வாரமும் உண்ணலாமே.

ஒரு வேளை அப்படி ஒரே நாளில் பல திருமணங்கள் நடத்தப்பட்டுத்தான் ஆகவேண்டுமானால் மேலத்தெரு பள்ளி போன்ற பெரிய பள்ளிகளில் வைத்து சமுதாய திருமணமும் சமுதாய விருந்தும் வைத்து செலவுகளை பங்கிட்டுக் கொள்ளலாமே!

இந்த மாதிரி முறைகள் பேரணாம்பட்டு , கடைய நல்லூர் போன்ற ஊர்களில் நடைபெறுகின்றன. நாம் நினைத்தால் முடியாதா? தெருக்களுக்கு சங்கமும் தேவை அவற்றின் ஒருங்கிணைப்பும் தேவை - ஆக்க பூர்வமான ஒருங்கிணைப்பு தேவை.

கூட்டத்தில் கூடி நின்று
கூடிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே
நாளில் மறப்பாரடி.


ZAKIR HUSSAIN said...

முஹல்லா தலைமைக்கு கல்வி மிக அவசியம். இறைவனுக்கு பயந்து நடப்பவர்கள் இருந்தால் நல்லது [ அந்த இனம் இப்போது இல்லை எனும் அளவுக்கு அநியாயங்கள் பெருத்ததும் உண்மை ]

சுகாதாரம் பயிற்றுவிக்கப்பட்டு பிறகு மீறுபவர்கள்
தண்டிக்கப்பட வேண்டும் [ உதாரணம்; சிங்கப்பூர் ]

கல்வியை ஆதரிப்பதும் அதற்காக ஊக்கப்படுத்துவதும் இருக்க
வேண்டும் [ போட்டிகள் ]

15 - 25 வயதில் இருப்பவர்கள் நிச்சயம் அதிக அளவில் பங்கெடுத்துக்கொள்தல் அவசியம். வயதானவர்கள் ஆலோசனை முக்கியம்- ஆனால் அவர்களால் செயல்படமுடியாது. அதற்கு இளைஞர்கள்தான் அவசியம்.


வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன் என்று "கூறுமாறி'ப்போனவர்களிடம் போய் நின்றால் ஒன்னும் உருப்படாது.

நம் ஊரில் எத்தனையோ தெருக்கள் முஹல்லா சங்கம் / பஞ்சாயத்து என்று பல வருடம் ஆரம்பித்து நடத்தி வருகிறது. இவைகள் பெரும்பாலும் 'சின்ன சின்ன சண்டைகளை ' / பணச்சண்டை சச்சரவுகளை / விவாகரத்து பிரச்சினைகளத்தான் அதிகம் கவனம் செலுத்தி முடித்து வைக்கிறது.

இதுவரை இத்தனை வருடத்தில் சாதித்தது [ in positive contribution to society] என்ன என்று பெரும்பாலான அமைப்புகளால் பட்டியலிடமுடியாது என நினக்கிறேன்.







Adirai pasanga😎 said...

//கடந்த காலத்தில் வார்டு மெம்பரை தேர்வு செய்வதில் முனைந்த சங்கங்கள் இது வரை அவ்வாறு தேர்ந்தெடுத்த உறுப்பினர்களின் செயல்பாடுகளின் நிறை குறைகளை எடுத்து சொல்லி சீர்திருத்த முயன்றதாக தெரியவில்லை.
(அவ்வாறு செய்திருந்தால் அச்சங்கம் நம்பர் 1. என்பதில் ஐயமில்லை)//

இனி வரும் காலங்களில் வார்டு மெம்பர்களைத் தேர்ந்து எடுக்கும்போது சங்கங்களின் வரையறைக்குட்பட்ட தெருவாசிகளின் கருத்தை கேட்டு கூடுமானவரை போட்டியின்றி மெம்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வரக்கூடியவர்கள் தாங்கள் இருக்கும் கட்சியைவிட மார்க்கத்தை நேசிப்பவராக இருந்தால் நல்லது.

Unknown said...

இங்கே பின்னூட்டமிட்டவர்களின் ஆதங்கமும் சமூக பொறுப்பும் அக்கறையும் மிக மகிழ்ச்சியாக உள்ளது.இறைவன் படைத்த உடலின் அங்கங்களுக்கு உள்ள பொறுப்பை போல சங்ககளின் கட்டமைப்பை பலப்படுத்தி சமுதாயத்தின் அங்கங்களான உறுதி செய்ய வேண்டும்.மார்க்க அறிவு மிக்க சமுதாய பெரியோர்கள் சங்ககளின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும்.அதிரை நிருபரின் ஆக்கம் சமூதாயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்
------------------------
இம்ரான்.M.யூஸுப்

Ebrahim Ansari said...

https://www.facebook.com/photo.php?fbid=332115306908515&set=a.222541787865868.48728.100003301449622&type=1&ref=nf

ஜெயலலிதாவுக்காக திருப்பூரில் பள்ளிவாசலில் தொழுகை.

திருப்பூர் சபீர் அவர்களே! இது உண்மையா? நாம் எங்கே போகிறோம். விசாரித்து சொல்லுங்கள்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

ஏதோ தர்காவில் பிராத்தனை நடந்திருக்களாம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு