நோய்கள் மக்களை காவு வாங்குவதை விட மெடிக்கல்பில்கள் அதிகம் காவு வாங்குவதாக ஊரெங்கும் பேச்சு.ஆனா காலா காலமா அதுக்காக என்ன செய்ரோம்னா துப்பரவா ஒன்னும் இல்லீங்க.ஒரே குடும்பத்திலெ இருக்கிற ஏற்றதாழ்வு ஏழையா இருக்கிற நோயாளியோட பில்லை கட்டுவதற்கு மனசு வராமெ பணவசதி உள்ளவர்கள் "ஜெயிக்கிர குதிரையிலெதான் பணம் கட்டுவேன்ற மாதிரி "அவருக்குதான் வயசாயிடுச்சில அப்புரம் என்ன" என்று ஒதுங்கிக்க்கொள்ளும்போது அந்த ஏழை நோயாளியின் மனசு என்ன பாடுபடும். எழை சொல்தான் அம்பலம் ஏறாதே என்று மெளனிச்சுதான் போயிடுதில்லெ.
இத்தனைக்கும் அந்த நோயாளியும் தனது இளமையில் குடும்பத்துக்கு உழைச்சவர்தான்....எங்கே மதிப்பு இருக்கு. மதிப்பு சம்பாதிக்கிற வரைக்குதான்ற "முக்கிய விதி' தெரியாமலேயே வயசான பெறவு தெரிஞ்சு வருத்தப்படறவங்கதான் இப்போ பெருவாதியா இருக்காங்க.
சென்டிமென்ட்ல காசையும் இளமையும் தொழச்சிட்டு வயாசான பொரவு தெரிஞ்சு ....ச்சே என்னடா பெரிய தப்புபண்ணிட்டோமேனு தேம்பி மனசுக்குள் அழும்போது 'ஒன்னும் கவலைப்படாதே" வாழ்க்கைனா எல்லாம் சேர்ந்ததுதான்னு சொல்ல பக்கத்திலெ ஒருத்தரும் இல்லாத மாதிரி பொட்டவெளியில தனியா நிக்கிறாப்ல ஒரு தாய் மடி கேட்கும்ல.
பொண்டாட்டிக்காக அம்மாவிடம் சண்டை பல வருசம்...அம்மாவுக்காக பொண்டாட்டிகிட்டே சண்டை பல வருசம்...இடையில் சொந்த புத்தி எங்கெ தொலைஞ்சது?
திருச்சி தஞ்சாவூர்னு பொட்டுக்கு திருகாணி மாத்துரேன்னு போயி இந்த நகையை வாங்கிட்டேனு செல்லமாக நொந்துகொள்ளும் [ அல்லது "கொல்லும்"] பொம்பளைங்க இருக்கும் வீட்டிலேயும் மூலையில் முடங்கிப்போன நோயாளிகள். பாயும் தலகானியும் மூத்திர வாடையுடன். எங்கே போனது மனிதம்...கல்யாணம் சுன்னத் காதுகுத்திலெயெல்லாம் மாமன் மச்சான் மாப்பிள்ளைனு சொன்ன எல்லோரும் எங்கே வருமையும் நோயும் மூப்பும் வந்த உடனேயே சொல்லி வச்சாப்லெ காணாமெ போயிடுறாங்க...
மல்லியப்பூ மாதிரி மனசு உள்ளவங்கல்லாம் சம்பாதிக்கிற காலத்தில காசு கேட்டுவந்த உறவுகளெ 'நெசம்னு' நம்பித்தான் ஏமாந்துபோயிட்டாங்க. வந்தவுகளும் இந்த மனுசனுக்கு கொடுத்த மரியாதெ என்ன தெரியுமா..ஒரு ஏ.டி.எம் மிசினுக்கு கொடுத்த மரியாதெதான். பட்டனெ அழுத்தினா காசு தரப்போவுது...பொழைக்கிற காலத்துலெ கொஞ்சம் சூதானமா இருக்காமெ போனவைங்க எல்லாம் கெளரவத்தும் பசிக்கும் எடையிலெ இப்படி சர்க்கஸ் குறங்கா போச்சு அன்னாட பொழப்பு. நீங்க கொடுக்கும்போது அதிகமா மறுப்பு சொல்லாமெ வாங்கிகிர்ரவங்கள்ளெ அனேகப்பேர் நொந்துபோயிருப்பவர்கள்தான்.
ஏழை மனசு அறிய ஏழையா இருக்கனும்னு அவசியம் இல்லே.
ஊர் என்ன சொல்லும்னு கவலைப்படுற விசயங்கள்னு சிலதுகள் இருக்கத்தான் செய்கிறது..அது சமூகம் சார்ந்த அவமானங்கள் மட்டும்தான். அதை வீட்டுட்டு உழைக்காத, உடம்பு வளையாத உறவுக்கெல்லாம் அள்ளி எறெச்சிட்டு அதற்க்கு பெயர் 'ஒத்தாசை-உதவி' என நாமாவே தவறான பெயர் வைத்து கொள்கிறோம்...அதற்க்கு பெயர் ;'கடைந்தெடுத்த.. கேனத்தனம்'
இது வெளங்கும்போது வயசாகி மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் ரொம்ப ஹைலைட் செய்ற ரீடிங் இருக்களாம்
வாங்காமெ வெலெ ஏறிப்போன தோப்புக்கும் வயலுக்கும் வக்கெனெ சொல்லும் சிறுசுங்க சாதிச்சதுதான் என்ன?
சரி எதுதான் வாழ்க்கையிலெ சரி , தப்பு ... எதுவுமில்லெ விட்டுதள்ளுங்க.. மத்தவன்வாழ்க்கெயெ பாத்து கத்துக்கிட்டவன் புத்திசாலி... தன் வாழ்க்கையிலெ பட்டுதெறிஞ்சவன் முட்டாள்.
எப்போதும் நான் நெகடிவ் விசயங்களெ எழுதிறதில்லே... ஆனால் தெரியாமல் பாசிட்டைவா மட்டும் எழுதிட்டு வாழ்க்கையிலெ 'இதுவும் இருக்கு'னு சொல்லாம இருக்கிறது தார்மீகமா தப்பு.
மேலெ உள்ள ஒரு போட்டொவெ பார்த்து 15 நிமிசத்துலெ எழுதுனதான் இது...
-- ZAKIR HUSSAIN









25 Responses So Far:
எங்கோ பட்டென்று ஒரு சுளீர் குத்தல் ஃபீலிங்க் காக்கா...
இதனை வீட்டார் அனைவரும் அவசியம் ஒரு முறையாவது வாசிக்கனும் !
அஸ்ஸலாமு அலைக்கும்.
அருமையான மற்றும் சிந்திக்க வைக்கும் ஆக்கம் தந்த சகோ. ஜாஹிருக்கு வாழ்த்துக்கள் பல.
உங்கள் கட்டுரையை படித்ததும் நம்மூர்ப்பழமொழி ஒன்று இங்கு ஞாபகத்துக்கு வந்திச்சி "காஞ்செ மட்டையெ பாத்து பச்செ மட்டெ சிரிச்சிச்சாம்" இன்று வாலிப முறுக்கில் பச்சை மட்டைகளாகத்திகழும், சுற்றித்திரியும் வாலிப வயதினர் நாளை நாமும் ஒரு நாள் காய்ந்த மட்டையாக ஆகப்போகிறோம் என்பதை மறந்து விடுவது ஏனோ?
வயோதிகத்தால் இன்று படுத்த படுக்கையாக பாயில் மலம் கழித்து அத்துடன் சிறுநீரும் சேர்ந்தே வந்து அதன் மூலம் துர்நாற்றம் வந்தாலும் அவர்கள் வாழ்ந்த காலங்களில் அவர்கள் நம் குடும்ப முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டதை நாம் உளப்பூர்வமாக உணர்ந்தால் அவர்களின் நீண்ட படுக்கையால் வரும் துர்நாற்றமும் நமக்கு நிச்சயம் நறுமணம் தான் வீசும்.
இயலாமை, வயோதிகத்தால் நம் வீட்டுப்பெரியவர்கள் பெரிதும் மதிக்கப்படாமல் போனாலும் வீட்டிள்ளவர்களால் ஒரு போதும் கவனிப்பின்றி மிதிபடக்கூடாது.
அவர்களின் புரைவிழுந்த கண்கள் நம் குடும்பத்தின் வெளிச்சத்திற்கு காரணமாக இருந்து வருவதை நாம் மறக்கலாகாது.
"ஒரு 70வது வயதைத்தாண்டிய ஒரு பெரியவர் சிறுநீர் பையில் கோளாறு ஏற்பட்டு அதனால் சிறுநீர் வராமல் பெரும் கஷ்டப்பட்டு சொலலாத்துயரை அடைந்து பிறகு குடும்பத்தினரால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் மருத்துவர்களால் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுநீர் பையிலிருந்து குழாய் மூலம் சிறுநீர் வெளியேற்றப்பட்டு ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பிறகு அங்கிருந்து குணமடைந்து வெளியேறினார். அவர் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறும் சமயம் அவரிடம் சிகிச்சை மற்றும் தங்கிய செலவுகள் குறிக்கப்பட்ட பில்லை கொடுத்ததும் அதை பார்த்த உடனே அவர் கதறி அழுது கண்ணீர் விட்டிருக்கிறார்.
உடனே மருத்துவர் அந்த பெரியவரிடம் ஏன் ஐயா அழுகிறீர்? உங்களிடம் பில் கட்ட காசுபணம் இல்லையா? என்ன பிரச்சினை என்று கேட்க. அதற்கு அப்பெரியவர் காசு,பணத்திற்காக நான் அழவில்லை. நான்கு நாட்கள் என் சிறுநீரை வெளியேற்ற நீங்கள் நாற்பதாயிரம் கட்டணம் கட்ட சொல்கிறீர்கள். என் எழுபது வயது காலத்தில் எத்தனை ஆயிரம் முறை மலமும், சிறுநீரும் எவ்வித சிரமமும் இன்றி என் உடலிருந்து வெளியேற்ற என்னைப்படைத்த இறைவன் ஒரு நயா பைசா கூட என்னிடமிருந்து பெற்றதில்லை ஐயா. அதை நினைத்துத்தான் அழுகிறேன் இப்பொழுது என்று சொன்னார்.
இதற்கு முன் பெரியவர்களுக்கு மதிப்பளித்தல் சம்மந்தமான தன் கட்டுரை மூலம் பலரின் கண்களை கசக்க வைத்த சகோ. ஜாஹிர் இந்த கட்டுரை மூலம் எத்தனை பேர் கண்களை கசக்க வைக்கப்போகிறாரோ? பொறுத்திருந்து பார்ப்போம் பின்னூட்டங்கள் மூலம்.
இறைவனுக்கு நன்றி செலுத்த, வீட்டு பெரியவர்களை மதித்து அவர்களுக்கு பணிவிடை செய்ய என்றும் மறவோம்.....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
மனசாட்சியோடு எழுதப்பட்ட கட்டுரை .............
//
இத்தனைக்கும் அந்த நோயாளியும் தனது இளமையில் குடும்பத்துக்கு உழைச்சவர்தான்....எங்கே மதிப்பு இருக்கு. மதிப்பு சம்பாதிக்கிற வரைக்குதான்ற "முக்கிய விதி' தெரியாமலேயே வயசான பெறவு தெரிஞ்சு வருத்தப்படறவங்கதான் இப்போ பெருவாதியா இருக்காங்க.///
ரொம்ப ரொம்ப உண்மை ...................
சலாம்,
மத்தவன்வாழ்க்கெயெ பாத்து கத்துக்கிட்டவன் புத்திசாலி... தன் வாழ்க்கையிலெ பட்டுதெறிஞ்சவன் முட்டாள்.
உங்க வயசை விட மத்தவங்க வாழ்க்கையை பார்த்து நிறைய கத்துகிடிங்க,உங்களை பார்த்து நெறைய நாங்களும்(என்னை போல் பலர் இருக்கலாம்)கத்துக்கிடனு இல்லனா இனி சான்ஸ் கிடைக்குமா? தெரியாது!!!
சலாம்
மத்தவன்வாழ்க்கெயெ பாத்து கத்துக்கிட்டவன் புத்திசாலி... தன் வாழ்க்கையிலெ பட்டுதெறிஞ்சவன் முட்டாள்.
உங்க வயசை விட மத்தவங்க வாழ்க்கையை பார்த்து நெறைய கத்துகிடிங்க நீங்க எழுதி இருப்பதை பார்த்து நெறைய நாங்க (என்னை போல் பலர் இருக்கலாம் )கத்துக்கிடனும் இல்லேனா '?' இந்த குறியோடு போய் சேர வேண்டியதுதான்
எல்லாம் அவரவர் மன்நிலை சம்மந்தப்பட்டது ஜாகிர்,
வயோதிகத்தை யதார்த்தம் என ஏற்கும் மனப் பக்குவம் முதலில் வேண்டும். தன் தாயையோ தந்தையையோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கையில் மெல்ல அனைத்துத் தாங்கிச் செல்கையில் அவர்கள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பாதி குணம் தந்துவிடும்.
யார் செய்கிறார்கள் சொல்?
அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வதன் மூலம் மட்டுமே மனிதம் மேம்படும். முதுமையைப் புறக்கணிக்கும் மனிதர்களை இம்மாதிரி கட்டுரைகள் மூலம் சற்றேனும் உணரச்செய்தாலே சமூக நலம் பேனப்படும்.
"மல்லியப்பூ மாதிரி மனசு உள்ளவங்கல்லாம் சம்பாதிக்கிற காலத்தில காசு கேட்டுவந்த உறவுகளெ 'நெசம்னு' நம்பித்தான் ஏமாந்துபோயிட்டாங்க..." ஜாஹுர் ஹூஸைன் காக்கா பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்.
இப்படி நம்பி ஏமாந்து போனவங்க எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள். சிலர் நடமாடிக்கொண்டிருந்தாலும், அவர்களிடம் இனி வாங்க ஒன்றுமில்லையென்று அல்லது வாங்குவதற்கு காரணம் சொல்ல இயலா என்று தெரிந்ததும் அவர்களைப்பற்றி அவர்கள் காதுபடவே தூசிப்பது, குடும்ப விஷேஷங்களில் மறந்தாற்போல் புறக்கணிப்பது போன்ற உளவியல் ரீதியிலான டார்ச்சர் செய்கிறார்கள்.
அவர்களும் ஒரு நாள் மூப்பு அடைவோம் என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமை ஜாஹிர் காக்கா,
மனசாட்சிக்கு புத்திமதி. எனக்கு தெரிந்து அநேக வயதானவர்கள் அதிகம் கேட்கு பிரார்த்தனை நோய்நொடியில்லாமல் இறக்க வேண்டும் என்பதே.
சகோதரர் அப்துல் ரஹ்மான் சொல்வது போல்,மூளையும் மனதும் தனித்தனியே இயங்கத் தொடங்கியதால் வந்த விளைவு. சுயநலம்.
பொதுநலம் எங்கே என்று மனசாட்சியிடம் தான் கேட்கவேண்டும். மனதை நல்லாட்சி செய்யும் மனசாட்சியே நீ எங்கே?
அஸ்ஸலாமு அழைக்கும்
என்ன இத்தனை தாமதம் என்று யாரும் கேட்டுவிடாதீர்கள் கடைசியா வர்ற ரியாஸ் காகா முதல்லா வந்துட்டாக அவுக கடைசி இடம் காலியா கிடக்க கூடாது என்கிற நல்லா எண்ணமே தவிர வேறு எதுவும் கிடையாது
அஸ்ஸலாமு அழைக்கும்
நிறைய வித்தியாமான வார்த்தைகள்
நிறைய வித்தியாசமான
சிந்தனைகள்
அத்தனையும் அருமை
15 நிமிசத்துலெ எழுதுனதா ஆச்சர்யமாக உள்ளது
எங்களுக்கு வயசு
ஆகுறதுக்குள்ள
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
ஒரு 15 நிமிடம் ஒதுக்கினால்
முதுமையில் நாங்களும்
நல்லா இருக்க
ஒரு வாய்ப்பா இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
வயோதிக பெற்றோரின் இறுதி நாட்களுக்காக தன் பொன்னான நாட்களை தியாகம் செய்தவர்களை இங்கு நாம் நிச்சயம் ஞாபப்படுத்தியே ஆகவேண்டும்.
நீண்ட நோயால் பாதிக்கப்பட்ட தன் உம்மா,வாப்பா, உம்மம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் சொந்தங்களுக்காக பல உதவிகள் செய்து தன் இரவுத்தூக்கங்களை தியாகம் செய்தவர்கள், செய்துவருபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி உதவி புரிந்தவர்களை அல்லாஹ் இவ்வுலகிலும் நல்ல நிலையில் வைத்திருக்கிறான்.
இதை படிப்பவர்களிலும் பலர் இவ்வாராக இருக்கலாம்.
அல்லாஹ் போதுமானவன்.
// Shameed சொன்னது…
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
ஒரு 15 நிமிடம் ஒதுக்கினால்
முதுமையில் நாங்களும்
நல்லா இருக்க
ஒரு வாய்ப்பா இருக்கும். //
இங்கு ஹமீது காக்காவுடன் நானும் கேட்கிறேன்.
This is reality . In our way of life committment never dies.
Best Regards,
-Noorani
To Bro Thajudeen,
I wrote a long explanation on this article [ To Thank all commenters]
After i wrote and publish it..it says.."sorry unable to perform your request" ....all my effort is wasted.
Why is this happening in this blog?
this is not first time, it happened before.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா,
தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை எல்லோருக்கும் ஏற்படுகிறது என்பது இயல்பே.
நேரம் ஒதுக்கி type செய்த உங்கள் கருத்தை பதிவதற்கு முன்பு அதை notepad அல்லது MS Wordலோ copy செய்துவிட்டு உங்கள் பின்னூட்டதை எந்த பிளாக்கிலும் பதியுங்கள்.
இது போன்ற ஏமாற்றங்கள் உங்களுக்கு ஏற்பட்டது மட்டுமல்ல, இது எனக்கும் எல்லோருக்கும் ஏற்பட்டது தான். இணையத்தொடர்பில் இருப்பத்தால், சில நேரங்களில் தடங்கள் ஏற்பட்டு இதுமாதிரி நடைப்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. தவிர்ப்பதற்கு வேறு வழி மேற் சொன்னவைகளே.
மீண்டும் எல்லோருக்கும் ஒர் வேண்டுகோள், உங்கள் கருத்தை bloggerல் கருத்துப்பகுதியில் பதிவதற்கு முன்பு, நீங்கள் type செய்து வைத்திருந்தவைகளை notepad அல்லது MS Wordலோ copy செய்துவிட்டு உங்கள் பின்னூட்டதை பதியுங்கள்.
ஜாஹிர் காக்கா, இணையத் தடங்களால் தங்களின் நீண்ட பதிலை காணமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கும் தான்.
அன்பின் அசத்தல் காக்கா: அதிக பட்சமாக இரண்டாயிரம் எழுத்துருக்கள் (including space, line space) ஒரே கருத்துப் பகுதியில் இடலாம், இருப்பினும் நீண்ட நேரம் தாங்கள் IDLE ஆக அதாவது இணையத்தின் செயலை அசைக்காமல் ஒரே பக்கத்தில் வேலை செய்தீர்களேயானால், தானாக logout ஆகும் நிலையும் சில நேரங்களில் ஏற்படும், மற்றொரு காரணம் திடீரெண்று நெட்வொர்க் மூச்சுத் தினறி தடுமாறி மல்லுக் கட்டும் இவைகள் நெடுக கமெண்ட் எழுதும் போது நிகழலாம்.
யோசனை கருத்துக்களை எழுதிவிட்டு அதனை உடணுக்குடன் copy & paste செய்து வைத்திருங்கள் உங்களது நோட்பேடில் மேலேச் சொன்ன காரணங்களில் ஏதாவது ஒன்று கையை விரித்தால் இருக்கவே இருக்கிறது காப்பி அடித்த பேஸ்ட் :)
அஸ்ஸலாமு அலைக்கும். நல்லதொரு ஆக்கம்(எத்தனதடவதான் மாத்தி,மாத்தி இப்படியே சொல்லிக்கிட்டு இருப்பது? எல்லாதடவையும் இப்படியே சொல்ல வைக்கிறாரே!.இன்சா அல்லாஹ் இவர ஒருனாள் சந்திக்கனும்.எப்படி? இப்படி, உற்சாகமா இருக்கிறார்ன்னு பார்த்து ரசிக்கனும்).
15 நிமிடத்தில் உருவான ஆக்கமாக இருக்கலாம்(அந்த திறமை எங்களுக்கெல்லாம் வருமா?)ஆனால் குறைந்தது முப்பது வருடமாக பார்த்து தெரிந்து அன்று கருவாகி இன்று பிர(ஸ்)சவித்திருக்கிறீர்கள்.
இளமை என்பது வரமா?
மூப்பு என்பது தனிமரமா?
இன்றைய இளமை , நாளைய முதுமை.
இதுதான் வாழ்கையின் உண்மை நிலைமை.
முதுமையில் வருமை அது மிககொடுமை.
வரும் போது வகையில்லாமல்
வாரி வழங்கி,வேண்டும்போது வாடி வதங்கி போவது ஏனோ?
இளமை கர்வத்தில் முதியோரை தள்ளிவைக்காதே!
நாளை நீயும் தள்ளாத வயதில் தள்ளிவைக்கப்படுவாய்.
தனிமரம் தோப்பாகாது,முதியோரும்,
இளையோரும் சேர்ந்த குடும்பமே
அழகிய தோட்டம்.
இல்லையெனில் நாளை நமக்குத்தான் நட்டம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
நேற்று "வயசு"க்கு ரொம்ப மெனெக்கெட்டு ஒரு பின்னுட்டம் தயார் செய்து இட்ட பின்னுடம் சகோ ஜாகிருக்கு ஆனதுபோல் எனக்கும் ஆனது
பிறகு திரும்ப பின்னுட்டம் இடும்போது முன்பு போல் மனம் மெனகெட வில்லை என்பதுதான் உண்மை
இனி COPY செய்து விட்டுத்தான் பின்னுடம் இட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்
//தனிமரம் தோப்பாகாது
முதியோரும், இளையோரும்
சேர்ந்த குடும்பமே
அழகிய தோட்டம்.
இல்லையெனில் நாளை
நமக்குத்தான் நட்டம்.//
கிரவ்ன்(னு): அழகுடாப்பா ! இறுத்திடும் மனப் போராட்டம் இதனாலயே எடுக்கும் ஓட்டம் !
அஸ்ஸலாமு அழைக்கும்
என்ன இபோதுஎல்லாம் கடைசி இடத்தை நிரப்ப நிறையப்பேர் போட்டி போடுகிறார்கள் ( நான் கிரௌனை தான் சொன்னேன்ன்னு யாரும் சொல்லி புடாதீங்கோ)
அதுக்காக இப்புடியா Sஹமீத் காக்கா !
சகோதரர் தாஜுதீன் & சகோதரர் அபு இப்ராஹிம் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி. [ அதுக்குத்தான் நாலு எழுத்து படிக்கனும்கிறது]
மற்றும் இந்த எழுத்தாக்கத்திற்கு ஊக்கம் தந்த , சகோதரர்கள் சாகுல், ஹார்மி, அபு இப்ராஹிம், தாஜுதீன். அதிரை போஸ்ட்.கிரவுன்.அனைவருக்கும் நன்றி என சொன்னால் அது சின்ன வார்த்தைதான். இருப்பினும் உங்களுக்கு தென் கிழக்கு திசையிலிருந்து நல்ல செய்தி வரும். பதவி உயர்வு கிடைக்கும். சொத்து பிரச்சினைகளில் சுப முடிவு ஏற்படும். சொந்த பந்தங்ககளின் அனுக்கம் ஏற்படும் நீண்ட நாள் தடங்களாக இருந்த விசயங்கள் நல்ல முடிவுக்கு வரும். அதிஷ்டஎண் 8 , 6
To Sabeer & Riyaz
காலையில் தமிழ் டெலிவிசனைபார்த்து விட்டு எழுதினால் இப்படித்தான் எழுத முடியும். எந்த சேனலை திறந்தாலும் ஒரே அதிஷ்ட கல்,
நியுமராலாஜி [ மூளை இல்லாத மனித விலங்கியல்] மற்றும் வாஸ்து. பக்கத்தில் கிடக்கும் கருப்பு பேனா கூட
ஏதொ குறி சொல்ற பொம்பளைங்க [ ஜக்கம்மா சிஸ்டர் ] வைத்திருக்கும் கருப்பு குச்சி மாதிரி ஒரு மாயை.
ஜாஹிர் காக்கா : காலையில் வாய் விட்டுச் சிரிக்க வைத்த உங்களின் ராசி பலன் சூப்பரூ.....
Bro.மு.செ.மு. நெய்னா முஹம்மது. எழுதியது ஒரு தனி ஆக்கமாக வெளியிடக்கூடிய அளவுக்கு சிறந்தது.
நீங்கள் சொன்ன அந்த பெரியவரின் யூராலஜி பிரச்சினையின் விசயத்தை என் பிள்ளைகளிடம் சொன்னேன். இறைவனுக்கு நன்றி சொல்ல இதுபோன்ற விழிப்புணர்வும், செய்திகளும் தேவை.
Post a Comment