அதிரைநிருபரில் ஹ்யூமருடன் (ஹேமருடன் அல்ல) படைப்புகள் என்று நினைத்தால் அங்கே முதலிடத்தில் இருப்பது சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள்தான். மருத்துவம் படிக்கும் அவர்களின் மூத்த மகன் தன்னோடு தொடர்புடைய ஒன்றோடு ஒன்றிணைந்து, அதனையும் படிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். பாவம் அந்த மனித எலும்பு கூடோ தனது தலையில் கைவத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விட்டது.
என்னதான் புலம்பியது என்று எமக்கு சொல்லாமல் புத்தகங்கள் சகிதமாக சீரியஸாக படிக்கும் போது படம் எடுத்து அனுப்பி விட்டார்.
அடிக்கடி ஒருசிலரின் கனவுகளில் வருபவராச்சே இந்தப் படத்தில் இருப்பவர், இன்னும் இவரோடு உரையாடும் பழக்கமுள்ளவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
ஆகையால் படத்தில் இருப்பவர் என்ன நினைத்துக் கொண்டு தலையில் கைவைத்தவாரே சொல்லியிருப்பார் !?
தெரிந்தால் கருத்துப் பெட்டியில் கொஞ்சம் போட்டுவிட்டு போங்களேன்... அவரிடம் சொல்ல மாட்டோம்.
என் கனவில் வந்தவரின் ஃபோட்டோதான் என்று உரிமை கொண்டாடினால் அவர்களின் விலாசத்தையும் பதியுங்கள் படத்தில் இருப்பவருக்கு ஈமெயில் அனுப்பி வைத்து விடலாம்.
படம் : AZHAR HUSSEIN - [Final
Year MBBS]
அதிரைநிருபர் பதிப்பகம்
26 Responses So Far:
"இத்தனையும் படித்து என்ன பயன்? இறுதியில் பயனின்றி மண்ணுக்குள் இறையாகி இப்பொழுது நீங்கள் காணும் எலும்புக்கூடு நிலையில் தான் இருக்கின்றேன். ஹாஹா” என்று கூறி தலையில் அடித்துக் கொள்ளுதோ?
\இரையாகி\\
Skeleto psychology:
I am no one perhaps
yes
not anymore a human
yet
I was some one
just not long time ago
I've had my
tissues and issues
blood and food
life and a wife
It's all gone by now
leaving me alone
books that I refer
looks tough to prefer
one who needs wisdom
is one who wouldn't stop searching
after all,
knowledge is to know
tomato is a fruit;
wisdom is to know
not to put it in fruit salad.
what a pity
I just don't belong to myself!
டாக்டர் தம்பி
அதுவல்ல மேட்டர்
இதையெல்லாம் படிச்சிட்டு டாக்டர் பட்டம் வாங்கியதுனாலே எலும்பு கூடா போன பிறகும் தன்னை நிம்மதியா தூங்கவிடாமல் தொந்தரவு கொடுக்கின்ற மக்களைப் பார்த்து மண்டை ஓட்டிலே அடிச்சிக்கிடுது.
டாக்டர் தம்பி எதுக்கும் உங்களது எலும்பு கூட்டுக்கு சொல்லி வைங்கோ எலும்புக்கூடா போனதற்கு பின்பும் சளைக்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும். இப்படி தலையிலேயெல்லாம் அடித்துக்கொள்ளக் கூடாதுன்னு
எலும்புகூடா போனதற்கு அப்புறமே இப்படி என்றால்
டாக்டர் பட்டம் வாங்கியதும் மக்களுக்கு எப்படி சேவை செய்யவேண்டும் என்பதை இப்பவே கொஞ்சம் யோசித்து வைத்துக்கொண்டால் தேவலை.
ஏனெனில் இப்போ உள்ள டாக்டர்கள் எல்லாம் தனக்காக மட்டுமே சேவை செய்து கொள்கின்றார்கள்
கப்ரில் வேதனை தாங்காமல் வெளியில் வந்த எலும்புக்கூடாக இருந்தால் :
இத்தனை நாள் உலகக்கல்விக்கு இடம் கொடுத்து கொஞ்சம் கூட கப்ரை பற்றிய சிந்தனை இல்லாமல் போய்விட்டோமே எவ்வளவு முட்டாள்தனம் பண்ணிவிட்டோம் உலகில் பணம் பதவிக்காக படித்த அனைத்தும் கப்ரில் வீணாகி விட்டதே.
உன்னுடைய இறவன் யார் ?
உன்னுடைய மார்க்கம் எது ?
உன்னுடைய தொழும் திசை எது ?
உன்னுடைய வழிகாட்டி யார் ?
உன்னுடைய வேதம் எது ?
என்ற முன்கர் நக்கீரின் கேள்வியில் ஒன்றுக்கு கூட ஒழுங்கான பதிலை சொல்லவில்லையே ? என்று ஏங்கி தலையில் கைவைத்து , இதை இவ்வுலகில் உள்ளவர்களிடம் சொல்லும் நிலைமையில் கூட நான் இல்லையே என்று தலையில் கை வைக்குது என்று நினைக்கின்றேன்.
ஒரு நல்லடியாரின் எலும்புக்கூடாக இருந்தால்.
நல்ல வேலை இந்த புத்தகங்களுக்கு நாம் அவ்வளவு முன்னுரிமை கொடுத்து படிக்காதது இவ்வுலகோடு முடிந்து விட்ட இவைகள் நமக்கு கப்ரில் எந்த உதவியும் செய்திருக்காது. நாம் குரான் ஹதீசுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கப்ரில் மலக்குகளின் மேற்ச்சொன்ன கேள்விகளுக்கு அழகிய பதிலை கொடுத்து தப்பித்தோம்.
அல்லா நம்மை காப்பாற்றிவிட்டான் . என்று நினைத்து சந்தோசப்பட்ட நபராக இருக்கலாம்.
அபு ஆசிப்.
"ச்சே டாக்டர் பட்டமெல்லாம் வாங்கி அதற்கு மேல் உலக பொருளாதார மேதை என்ற முடி சூட்டப்பட்ட பின்பும் நம் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டதே" என மன்மோகன் சிங்கே இங்கு எலும்புக்கூடாய் தலையில் கை வைத்து அமர்ந்திருப்பதாகவே தெரிகிறது.
"அடச்சே இஸ்லாம் ஒரு உண்மையான இறை மார்க்கம் என்று நாம் உலகில் வாழும் பொழுதே ஓரளவுக்கு புத்திக்கு புழப்பட்டும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்களிலும், சூழ்ச்சிகளிலும் வாழ்வின் பெரும்பகுதி ஈடுபட்டு அவர்களை ஊடகம் என்ற ஆயுதத்தை வைத்து எப்படியெல்லாம் அந்த அப்பாவிகளை அடக்கி, ஒடுக்கினோம் இன்று மண்ணறையில் ஏக இறைவனால் வேதனைப்படுத்தப்படுகிறோமே, அப்பவே சொன்னான்வோ கேக்கமாட்டம்ட்டோம். உலகிலேயே கொஞ்சம் விழித்திருக்க கூடாதா?" என வேதனையில் மண்ணறையை விட்டு வெளியே வந்து தன் தலையில் கை வைத்து புலம்பும் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஊடகவியலாளரின் எலும்புக்கூடாகவே தெரிகிறது.
When I was a man there were so many opportunities avail for me to rectify my life in right & devine path of Almighty Allah. But I missed them all unfortunately so, I am in very sad with fed-up, disgusting and being cruel punished even by the small creatures like insects, worms eaten my flesh all and waiting to eat my sekleton ASAP. So, You living people to be aware before becoming like me here. There is no opportunity given to us to expose the real things whatever happening in the cave in order to give precaution to the people whoever coming here minute to minute and hour to hour basis from the world. That's the reason, some time we are coming to some one's dream as a nightmare. Don't be afraid and be prepared to enter in the paradise without any punishment in the graveyard through your good deeds as per the holy Quran and Hadees which are in front of you as a ready reference.
இந்த படத்தை பார்த்ததும் ஒரு ஆங்கிலப்படத்தின் பெயர் ஞாபகத்து வருகிறது "A LIFE AFTER ME".
இவரைப் பார்த்தா ஏற்கனவே நிறைய பட்டங்கள் வாங்கி பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுகிட்டவர் போல் இருக்கே ! இப்போது வலைப்பூக்களில் வரும் தத்துவங்களைப் படிக்காமல் வந்துட்டோமே பொலம்புறாரோ என்னவோ !
சரியான டென்ஷானா இருக்கிற மாதிரி தெரியுது எதைப் படிச்சுட்டு இம்பூட்டு டென்ஷானா இருக்காராம !?
''அப்பவே நான் பள்ளிக் கூடத்து பக்கம் தலே வச்சுக்கூட படுக்கமாட்டேன் !
இப்போ போய் சும்மா கெடந்தவனை இழுத்தாந்து வச்சுக்கிட்டு ''படிடாண்டா!'' என்ன கிண்டலா?
இல்லே கேக்குறேன் கிண்டலா? முன்னே மாதிரி நான் மூக்கும்-முழியுமா இருந்து இருந்தா இந்த புக்கே என் கைலே தர தஹ்ரியம் வந்து இருக்குமா? ஒரு குத்தோட மூஞ்சி மூக்கை எல்லாம் ஒடச்சு
இருக்க மாட்டேனா!'
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
அவர் அனா' ஆவன்னா' கூடா படிக்கலே ங்குறதே அவர் மூஞ்சியே பாத்த தெரியலயா?! அவர் மூஞ்சியிலேயே எழிதி இருக்கே!. தமிழ் ஆயுத எழுத்து மொகதுலே அக்கேனா (ஃ) தலைகீழா போட்டுருக்கே பாக்கலையா? அவுரு எப்புடி இந்தே பெரிய புக்கெல்லாம் படிப்பாரு? !
S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்.
அதிரை நிருபரில் MBBSலாம் கலக்குறாங்க!!
அடச்சீ, நாம்ம படிச்ச B.COM.ல தான் ADVANCE ACCOUNTANCY BOOK பெருசா ஈக்கிம்ண்டு நெனச்சா இங்கே அத விட பெருசாவுள்ள ஈக்கிது????
உயிரோட இருக்கும்போதே புரியாததன் காரணமாக இதையெல்லாம் விட்டு விலகி இருந்தோம்.
இப்படி நிம்மதியா தனி உலகத்தில் இருந்த நம்மை மீண்டும் இந்த கேடுகெட்ட துன்யாவுக்கு கூட்டிக்கிட்டு வந்து வலுக்கட்டாயமாக விழுந்து படி என்றால் வெறும் எலும்பு மட்டுமாக இருக்கின்ற எனக்கு ( மண்டையில் மூளை இருக்கும்போதே புரியவில்லை) இப்பொழுது மட்டும் புரியப்போவுதாக்கும் ?
அபு ஆசிப்.
//அவர் மூஞ்சியிலேயே எழிதி இருக்கே!. தமிழ் ஆயுத எழுத்து மொகதுலே அக்கேனா (ஃ) தலைகீழா போட்டுருக்கே பாக்கலையா? அவுரு எப்புடி இந்தே பெரிய புக்கெல்லாம் படிப்பாரு? !//
ஹாஹ்ஹாஹா!
என்னவொரு அவதானிப்பு!!!
எங்க செட்ல இல்லாமப் போயிட்டியல எங்கிற ஏக்கம் எழுகிறதே ஃபாருக் மாமா.
எழும்புக்கூடு கூட எழுந்து வந்து பிரிட்டனில் படிக்கலாம்.
ஓரு வயசான ஆளை பார்த்து நீங்க எந்த விசாவில் இருக்கீர் என கேட்டபோது Student விசா என்று சொன்னார்!
அடச்சே ! தமிழே எனக்கு ஒழுங்கா வராது,
இந்த ஆங்கில புத்தகங்கலையெல்லாம் தந்து படிடா என்று சொன்னால் , நான் எப்படி படிப்பேன். ( மூளை இருக்கும்போதே ) டியூஷன் வைத்தே கூட பாசாகாமல் ஆங்கிலத்தில் பெயில் ஆனா எனக்கு இதைதந்து படிக்க சொல்ற உங்களுக்கு மூளை இருக்கா ? தெரியாமத்தான் கேக்குறேன்.
அபு ஆசிப்.
sabeer.abushahruk சொன்னது…
//என்னவொரு அவதானிப்பு!!!
எங்க செட்ல இல்லாமப் போயிட்டியல எங்கிற ஏக்கம் எழுகிறதே ஃபாருக் மாமா.//
அதுக்காகத்தான் நாங்க இருகோம்லோ வாரிசு அப்பறம் எதுக்கு ஏக்கம்
Assalamu Alaikkum,
Nice and funny arrangement.!!!
It’s an extreme way of symbolically telling that survival of fittest in knowledge only can live in current information technology era (regardless of your fields, medicine, accounts, business or IT).
Please bear in your minds that most and majority of the ideas and knowledge are available in English language.
Why to spread this much books?
Instead of classical paper books, the skeleton of human can hold and read on a smartphone or on a tablet pc. Its the current trend.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
'படிச்சு-படிச்சு-என்னத்தேடா கிளிச்சு புட்டிய?
புக்கே தூக்கி கொளத்துலே எறிஞ்சுட்டு
போயி வேறே வேலையேபாருங்கடா!'' என்று கமென்ட் அடிச்சா அதிராம்பட்டினம் கடல்கரைதெரு V.I.P. ஒருத்தருடைய எலும்பு கூடுதான் இது!
''அப்போ நான் அடிச்ச கமெண்டுக்கு இப்போ என்னை இங்கே கொண்ணாந்து என்னன்னமோ இங்குலீசூ புக்கை யெல்லாம் என் கைலே குடுத்து படிடாண்டு பழி வாங்குரானுவோ! விழி இருந்தபோதே நான் படிக்கலே! இப்போ விழி
இருந்த இடதிலே 'குழி' இருக்கு!
எப்புடி படிப்பேன்? அதான் தலைலே கையே வச்சுக்கிட்டு இருக்கேன்! அப்போ மாதிரி இப்போ நான் இருந்தா ஒரே ஒரு குத்துலே மூக்கை
ஒடச்சு ஊட்டுக்கு அனுப்பி இருப்பேன்!
இப்போ என்னை இங்கே கொண்டாந்து என் மூக்கை அறுக்குரானுவோ! கால முடா இது!
"ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்;
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்'".
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
பாரூக் மாமா புக்கை பத்தி எழுதியதாலே உணர்ச்சிவசப்பட்ட ஜாஹிர் காக்கா இவ்வ்வ்வளவு பெரிய்ய்ய்ய் புக்க்கையெல்லாம் கொடுத்து என்னை படிக்க சொன்னதுநால படிச்சு படிச்சு..என் உடம்பு உருகி இப்படி எலும்புக்கூடா போய்ட்டேன்...ஐய்யோ ஐய்யோ ஜாஹிர் காக்கா பாரூக் மாமா சொன்னது நல்ல புக்குகள் இப்படி ஆளையே உருக வைக்கும் மெடிசின் புக்கு கிடையாது...எப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிட்டியலே
''அடே! என் பேராண்டியோடே மவனே! டாக்டர் படிக்கிரியாமுல டாக்டரு! நல்லா படிடா! நீ கூப்புட்டாண்டு முடிஞ்சும் முடியாமே ஓங்-கை தாங்கலா வந்தேன்!. இந்த குளியிலே பெரண்டு உருண்டு படுக்க முடியலே குளியே வெட்டுன. பய வயசு காலமாச்சே பெரண்டு உருண்டு படுக்கனு முண்டு கொஞ்சம் பெருசா வெட்டு நானா என்ன? என்னமோ அவன் அப்பன் ஊட்டு காசிலே வாங்குன நிலம் மாதிரில இம்புடு கானுலே குளி வேட்டிக்கிறான்!
வாய்க்கு நல்ல சோறு கறி இல்லே! பாத்தியா ஒடம்புலே ஒண்ணுமில்லே! ஒடம்பு வத்தி ஓடா போச்சு! கண்ணே பாரு! பல்லாங்குழியா? கண்ணாண்டு தெரியாமே இருக்கு! நண்டு பொந்து மாதிரியும் இருக்கு! நீ கூபுட்டாண்டு வந்தேன். நல்ல டானிக்கு தருவா! சத்து மாத்திரை தருவாண்டு நெனச்சேன்.
நீ என்னாடாண்டா! மொத்தி மொத்தி பொத்தவத்தை கைலே தந்து படிடாண்டு சொல்றே! இந்தோ பெரிய பொத்தவத்தை எங்கேடா பாத்தேன்!
பொறந்தவங்க - இறந்தவங்க பேருபதிஞ்ச பொஸ்தவந்தான் நம்மூரு ரிசிச்ட்டர் ஆபீஸுலே இருந்துச்சு!
உன் அப்பனோட தாய் வழிபாட்டன் காவன்னாட்டை இருந்த குசும்பு தனமெல்லாம் உனக்கும் இருக்குற மாதிரி தெரியிதுடா!. அதுக்கெல்லாம் இந்த ஈக்கி குச்சி ஒடம்பு தாங்காதுடா பேராண்டிட மவனே!
ஒன் டானிக்கும் வானாம்! ஒன் கீனிக்கும் வாணாம்! என் பொழப்பே பாத்துகிட்டு நான் போறேன். என்னை உடுப்பா!
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
சமீபத்தில் "மெடிக்கல் டே" யில் என் மகன் அவனது யுனிவர்சிட்டியில் எதேச்சையாக யோசித்து எலும்புக்கூட்டை வைத்து எடுத்த போட்டோவுக்கு இவ்வளவு விசயம் எழுத முடியுமா?....ஆச்சர்யம் தான்.
எல்லோருடைய கருத்துக்கும் நன்றி [ சும்மா சொல்லக்கூடாது இவ்வளவு கிரியேட்டிவிட்டி நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது.
ஃபாரூக் மாமா அவர்களின் கமென்ட்டில் நிறைய சரித்திர நிகழ்வுகள் வந்த வண்ணம் இருக்கிறது [ "வண்டியும் ஒரு நாள் ஓடம் ஏறும்" என்ற விசயம் சிலருக்கு மட்டும் தெரியும் கடற்கரைத்தெருவில்...]
இதை மட்டும் படித்து வந்து என்ன பயன்? இனிமேல் நம் பயணம் இனிதாய் தொடர இறைவன் அந்த வையகத்தில் நமக்கு தந்த வான்மறையை படித்து அதன்படி வாழாமல் வந்துவிட்டோமே என நினைத்திருக்குமோ?
சும்மா சொல்லக்கூடாது
பாரூக் காக்கா
கலக்குரிய போங்க
எத்தனை கற்ப்பனை திறன்
எல்லாமே அற்புதம்
Post a Comment