அதிரை தொழில் முனைவோர் - அதிரை அஹமது ஹாஜி : காணொளி

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில்  peach 'n' berry என்ற பெயரில் ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழா 14.01.2013 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது

பர்துபாயிலுள்ள ரோலா வீதியில் அல்-கலீஜ் சென்டர் பின்புறம், இம்பீரியல் ஓட்டல் எதிர்புறம் பாக்கர் முஹைபி கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள peach 'n' berry ஐஸ்-கிரீம் பார்லரில் பிரபலமான அனைத்து வகை சுவைகளிலும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.

முட்டை, ஜெலட்டின் மற்றும் செயற்கை சுவையூட்டி அல்லது நிறமிகள் கலவாத, 100% இயற்கை சுவைகளுடன் தரமான ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 20% திறப்புவிழா சிறப்பு தள்ளுபடி வரும் 15-பிப்ரவரி-2013 வரை வழங்கப்படும் என்று உரிமையாளர்  அஹமது ஹாஜி அவர்கள் தெரிவித்தார்.


அதிரை சகோதரரின் இந்த நிறுவனத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு வழங்கும்படி இதன் உரிமையாளர் சகோதரர் அஹமது ஹாஜி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அதிரைவாசிகள் அயல் நாட்டில் தொழில் முனைவோர்களாக வளம்வருவது மிகவும் அறிதே என்றாலும் சகோதரர் அஹமது ஹாஜி போன்றவர்களை கண்டறிந்து அவர்களின் அனுபவங்களை பகிர்வதன் மூலம் ஆர்வமுள்ள அதிரைவாசிகளும் தொழில் முனைவோராக வாய்ப்பு உருவாகும். இன்ஷா அல்லாஹ்.

புகைப்படங்கள் பகிவு : அபு இஸ்மாயில்
அதிரைநிருபர் பதிப்பகம்

21 கருத்துகள்

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

நம்மூர்க்காரர்கள் கடை வைத்தால் அதை எவ்வளவு நேர்த்தியாக வைத்திருப்பார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் இந்த கடை...வாழ்த்துகள்!!

மாஷா அல்லாஹ்! இந்த "பீச் & பெர்ரி" மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

அல்லாஹ் தொழிலில் பரக்கத் செய்வானாகவும் ஆமீன்.

Unknown சொன்னது…

மாஷா அல்லாஹ்! இந்த "பீச் & பெர்ரி" மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

அல்லாஹ் தொழிலில் பரக்கத் செய்வானாகவும் ஆமீன்.

sabeer.abushahruk சொன்னது…

வாழ்த்துகளும் துஆவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

'eyes' கிரீமை நாடுது !

துஆவுடன் வாழ்த்துகிறோம் இன்ஷா அல்லாஹ் !

மெட்ரோ : ரெட்லைன் அப்புறம் கிரீன்லைன்
வாக்கிங் : கொஞ்சம்தான்...
டேஸ்ட் : பார்த்துட்டு சொல்றேன் ! :)

அபு இஸ்மாயில் சொன்னது…

துபாய் மாநகரில் ஆரம்பிகப்பட்ட peach 'n' berry வியாபாரம் சிறப்பாக நடந்து மேலும் அரபு அமீரகம் முழுவதும் வளர அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.

மொத்தத்தில் பூச்சி மருந்து கலக்காத (preservative) இயற்கை ஐஸ் கிரீம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கூலா வாழ்த்துக்கள்!
------------------------------

ரபியுள் அவ்வல்,4
ஹிஜ்ரி 1434

அதிரை சித்திக் சொன்னது…

வாழ்த்துகளும் துஆவும்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…


வாழ்த்துகளும் துஆவும்.

Ebrahim Ansari சொன்னது…

நண்பர் ஹாஜி அவர்களே! தங்களுடன் துபாய் விமான நிலையம் டெர்மினல் இரண்டில் சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோதே உங்களுக்குள் ஒரு FIRE இருந்ததை உணர்ந்தேன். உங்களின் புதிய வணிகம் உலகெங்கும் ஓங்கி வளர து ஆச செய்கிறோம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

ஐஸ் கிரீமை முற்றிலும் பிடிக்காதவர்கள்(சுவைக்காதவர்கள்) உலகில் யாரும் இருப்பார்களேயானால் நிச்சயம் அவர்கள் 'ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்' புத்தகத்தில் இடம் பெற வேண்டியவர்களே.

வயசு ஏறிப்போச்சு, கடுமையான இனிப்பு நீரு வேறு சேர்ந்து கொண்டது, பற்களெல்லாம் பூச்சாகி சொத்தையாகி செத்துப்போய் இருந்தாலும் நாம் கண்ட பெரிசுகள் நிறைய பேர் அந்த ஐஸ் கிரீமை சின்னப்புள்ள பெயரை வைத்து வாங்கி வீட்டினருக்கு தெரிந்தோ அல்லது கள்ளத்தனமாகவோ நல்லா கறைய விட்டு பல்லு கூசாமல் சர்பத் மாதிரி குடிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

என் உடன் பிறவா சகோ. அஹமது ஹாஜி அவர்களின் புதிய தொழில் நிறுவனம் மென்மேலும் வளர்ந்து பாருக்கெல்லாம் குளிரூட்டி வியாபாரம் சூடு பிடிக்க‌ எல்லாம் வல்ல இறைவனிடம் து'ஆச்செய்கின்றேன்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து
(S/O.முஹ‌ம்ம‌து இபுறாஹிம்)

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…என் உடன் பிறவா சகோ. அஹமது ஹாஜி ,m.o.thaj அவர்களின் புதிய தொழில் நிறுவனம் மென்மேலும் வளர்ந்து பாருக்கெல்லாம் குளிரூட்டி வியாபாரம் சூடு பிடிக்க‌ எல்லாம் வல்ல இறைவனிடம் து'ஆச்செய்கின்றேன்.Abdul Razik சொன்னது…

This is an appropriate business of Dubai’s commercial situation. Allah will grace him to enrich his trade for his generous view with unemployed youths.

Abdul Razik
Dubai’

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Very happy to know an entrepreneur from Adirampattinam has started new venture in Dubai. May Allah bless the bubiness.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

அல்ஹம்துளில்லாஹ் இந்த தொழிலதிபருக்கு வாழ்த்துக்கள் வரவேற்ப்புக்கள் என் தொடருக்கு நாயகனாக ஆக்கிடலாமா என யோசிக்கின்றேன்

Unknown சொன்னது…

Assalamu Alaikkum,

//அதிரை தொழில் முனைவோர் - அதிரை அஹமது ஹாஜி : காணொளி//

If you use the word "தொழில் முனைவோர்" for meaning singular its wrong. "தொழில் முனைவர்" is singular word.

Thanks and regards

அப்துல்மாலிக் சொன்னது…

வல்ல இறைவன் தொழிலில் பரக்கத்தை தருவானாகவும் - ஆமீன்

Unknown சொன்னது…

வல்ல இறைவன் தொழிலில் பரக்கத்தை தருவானாகவும் - ஆமீன்

Yasir சொன்னது…

வாழ்த்துகளும் துஆவும். சிந்திகள் அதிகம் வாழும் இந்தப்பகுதியில் சிங்கம்போல கம்பீரமாக கடைத்திறந்து இருக்கும் தங்களின் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

sabeer.abushahruk சொன்னது…

//if you use the word "தொழில் முனைவோர்" for meaning singular its wrong. "தொழில் முனைவர்" is singular word.//

சகோ. அஹமது அமீன்,
சுட்டலுக்கு நன்றி.

இருப்பினும், அதிரை நிருபரில் "தொழில் முனைவோர்" என்னும் பன்மைத் தலைப்பில் பலதரப்பட்ட அதிரை தொழில் முனைவர் பற்றிய ஊக்கமூட்டம் பதிவுகள் பதியப் பட்டு வருகின்றது.

அந்த வகையில், 'முனைவோர்' என்னும் பன்மை தலைப்பில் இந்தப் பதிவின் முனைவரைப் பற்றி எழுதப்பட்டதால் கீழ்கண்டவாறு தலைப்பிடப் பட்டது:

title of the concept: அதிரை தொழில் முனைவோர்
separator : '-'
title of this chapter: அதிரை அஹ்மது ஹாஜி

சரியா? (அப்பாடா எப்டீலாம் சமாளிக்க வேண்டியிருக்கு. இப்பவே கண்ணகட்டுதே)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//சரியா? (அப்பாடா எப்டீலாம் சமாளிக்க வேண்டியிருக்கு. இப்பவே கண்ணகட்டுதே)//

கவிக் காக்கா,

அப்பாட தப்பிச்சேன் ! :)

Canada. Maan. A. Shaikh சொன்னது…

மாஷா அல்லாஹ்! இந்த "பீச் & பெர்ரி" மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஹாஜி காக்கா.

அல்லாஹ் தொழிலில் பரக்கத் செய்வானாகவும் ஆமீன்.


மான்.A.ஷேக்
முன்னால் குவாலிட்டி (மான்) ரெஸ்டாரன்ட் உரிமையாளர் (Dubai)