
எழுத்துப் பிழைகள் – 7 ஒவ்வாத ஒற்றுப் பிழை
எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது, சிலருக்கு அலட்சியம். ‘ஆமாம், இதெத் தெரிஞ்சுதான் நாம பெரிய எழுத்தாளனாப் போகப் போறோமா?’ எனும் எண்ணம். இன்னும் சிலருக்கோ, ‘இப்படியெல்லாம் பிழைத் திருத்தம் செய்வதற்குச் சான்று வேண்டாமா?’ என்ற எதிர்க் கேள்வி. இவ்விரு...