அதிரை மொழிக்கே ஆங்கிலத்தில் அகராதி போட்டவர்கள் (MSMn) நம்மவர்கள், ஆங்கிலமே எழுதுபவர்களோடும் அகராதி(யில்) பேசுபவர்களும் நாம்மவர்கள்தான்.
எந்த ஒரு மனிதனுக்கும் தனது மண்ணின் மொழி மீது ஒரு மயக்கம் உண்டு. காதல் உண்டு. பசுமரத்து ஆணி பதிவது போல் மனத்தின் அடித்தளத்தில் பதிவதே மண்ணின் மொழி. உலகம் சுற்றி வந்தவர்கலானாலும் தனது சொந்த ஊருக்கு வந்து தன் மக்களோடு தன் இயல் மொழியில் பேசும் மொழியில் கிடைக்கும் ஒரு அன்னோனியம் சுகம் இதை உணர்ந்தவர்களால் மட்டுமே உணர்த்தபபடக்கூடியது.
சமுதாய அமைப்பில் சபை நாகரீகம் என்ற பெயரில் இயல்பாகப் பழகிய மொழியின் வார்த்தைகளை மறைத்துப் பேசும் அனைத்து மொழிகளுமே தாய் மொழியில் பேசினாலும் அவை அந்நிய மொழியே. "உம்மாடி ஏல்லே" என்கிற வார்த்தையில் உள்ள ஹோம்லி உணர்வு அம்மா முடியவில்லை என்று சொல்வதில் கிடையாது.
"அல்லாட காவ" என்று சொல்வதில் உள்ள இயல்பு அல்லாஹ் மாக் என்று சொல்வதில் உணர முடியாது.
பூக்கமலையை எடுத்து சோப்பிவிடுவேன் என்று கோபமாக சொல்லும் வார்த்தை கூட உன்னை தொலைத்துவிடுவேன் என்கிற கோபத்தில் உணர முடியாது. கோபமா இருந்தாலும் பாசமா இருந்தாலும் அதை நாம்மூர் பாசையில் வெளிக்கொட்டுவது என்பது ஒரு அலாதிதான்
காரணம் மண்ணின் மனம், மண் வாசனை, என்பது கரிசல் காட்டிலே கூட ஒருவனை கடுதாசி போடவைத்ததாகும் . கடித்துப் பேசும் நெல்லைத் தமிழையும் கனிவுடன் பேசும் கொங்கு தேச தமிழையும் வய வய கொய கொய என்று பேசும் சென்னைத்தமிழையும் அந்தந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் தங்களின் மனதில் மாளிகை கட்டி வைத்திருக்கிறார்கள்.
அதுபோல் நம்ம ஊர் பாசையில் பேச்சு வழக்கில் இருந்து நினைவுக்கு வந்தவைகள் இங்கே பட்டியலாக விரிகிறது.
ஒரு 'அவயாசமயத்துக்கு' இவன் ஒதவமட்டேன்கிறான்
இவனோட இம்முசு தாங்க முடியலமா
மல பேஞ்சி 'தாவாரம்' வழியா தண்ணி ஊத்துது
கலரி சோறு திண்டது ஒத்துகிடாமே ஒரே கொட பெறட்டா இருக்கு
'சப்பாத்தை' மாட்டிக்கிட்டு பள்ளிகொடம் போடா
இது எங்க வாப்புச்சா காலத்திலே இருந்து எங்க ஊட்டுலே உள்ள 'சப்பரம்பெஞ்ச் கட்டுலு'
என்ன சொன்னாலும் இவன் 'ஈட்டிக்கி மூட்டி' யா தான் செய்வான்
பினாங்குலய்ருந்து 'பொட்டிபிசு மேத்துண்டு' வரும் பாருங்க கமகன்னு மனத்துக்கிட்டு
அப்போவுல்லாம் வெட்டிக்கொலத்து தண்ணி பளிங்கி மாதிரி கெடக்கும் இப்போவெல்லாம் எல்ல கொலத்து தண்ணியும் 'பிளாய்யா' கெடக்கு
ரெங்கு பொட்டிலே பத்தாய் கைலி வச்சது வச்ச மாதிரியோ இருக்கு
அப்போவெல்லாம் ஊட்டுக்கு ஊடு பத்தாயமும் ரெங்கு பெட்டியும் இருக்கும்
இவன்டே அசந்து மசந்து கடன் வாங்கிறது கூடாது கொதவலை சுருக்கு வஞ்சி திருப்பி கேப்பன்
என்னதான் திட்டுனாலும் பேசுனாலும் சூடுசொரணை கெடையாது
குதுராளி நெறையா நெல்லு கொட்டி வைக்க ஆசை
ஒரு எடத்துலே இருக்காமே மக்க சக்கரத்துலே வர்றான்
என்னா பசப்பு பசப்புறான்
'ஆறு' வருசத்துக்கு அப்புறம் இப்பதாம்மா மசக்கையா இருக்கா
வால்வாட்டி [ ]
ஆம்புலப்புள்ள குப்பற படுக்க கூடாது
பொம்புலப்புல்ல மல்லாக்க படுக்க கூடாது
என்ன கை மருந்து கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்குது
இவன் வூட்டுக்குள்ள நொழஞ்சா வூட்டை அலங்கமலங்கா அடிப்பான்மா
வூட்டுக்குல நொலைரப்பவே மொவரக்கட்டை சரி இல்லாம இருந்துச்சி
ரூமுகுள்ள வச்ச சொவ்க்காரப்பொட்டி எங்க போனிசுன்னு தெரியலே
பாசை படிக்கிறான் [ ]
ஒன்னோட சங்கனாத்தமே வாணாம்
பொரிக்கன்சட்டி [ ]
காமாடு தலமாடு தெரியாம தூங்குறான்
நேத்தையானம்னதும் அப்பம் தான் நினைவுக்கு வரும்
பாலுஞ்சோறு காமாடு
ஒலமூடிய காணோம்
காலுக்கு மோஜா போடாமே சப்பாத்து போடதே
எங்கே போனாலும் பொறத்தாலே வந்துகிட்டே இருப்பா
பிருமனை [ ]
முட்டாசு [ ]
குட்டிப் பாளையம் ஒரு எடத்துலே இருக்க மாட்டேங்குது பாளையம்
என்ன வேலை சொன்னாலும் 'மாய்ச்ச' இல்லாமே பாப்பான்
சாமத்துலே [ ]
உப்புத் தக்கரு [ ]
சீவன் செத்தவன் [ ]
பின் குறிப்பு : கடைசியா அண்ணன் NAS அவர்கள் எங்களை அடிக்கடி திட்டும் அந்த ஸ்லோகனுடன் இன்னும் சில வார்த்தைகள் கிடைக்கும் போது தொகுத்துக் கொண்டு வருகின்றேன்
ஹேர்பின் குறிப்பு : [ ] இப்படியிட்ட இடங்களில் என்ன பொருள் போடலாம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அல்லது கருத்துப் பெட்டியில் போட்டுவிடுங்கள் !
Sஹமீது
67 Responses So Far:
ஹமீதுட செரவடி தாங்கமுடியலையம்மா
இப்படி வெள்ளனமே வந்து நம்மூரு பாஷைய அலங்கமலங்க படுத்திட்டியளே காக்கா. நான் கட்டுரை எழுதி வெளியான பொறகுதான் எவ்ளோவ் வார்த்தையல்வோ உட்டுப்போனது யாஃபொவத்துக்கு வந்திச்சி தெரியுமா? ஒரக்க எழுதி செத்த நேரத்துல முடிக்கிற சப்ஜக்ட்டா இது? சதுராஃபியத்து ஈந்தா அடிக்கடி இப்புடி எழுதிக்கிட்டே ஈக்கலாந்தான்...நெறையா பேரு சும்மா பதூசா படிச்சிட்டு மனசுக்குல சிரிச்சிக்கிட்டு போயிர்ராஹ....பொற ஊரு காரவொலுக்கு நம்மூரு பாஷை பாண்டையாத்தெரிஞ்சாலும் நம்மலுக்கு ரொம்ப லெச்சனமா, ஒஹப்பாத்தான் இரிக்கிம் போங்க....யாங்காக்கா, கிட்டன்ஸ்ல ஊருக்கு போயிட்டு வந்தியளா? கரூண்ட ஊதா கலர்ல சட்டை போட்டுக்கிட்டு தொலைவுல உங்கள மாதிரி ஒரு ஆளு போய்க்கிட்டு இரிந்திச்சி. அவ்வொளுக்கு எதித்தாப்ல நம்ம லொடுத்தம்பியும் போய்க்கிட்டு இருந்தாஹ...ஹலோ அதிரை எக்ஸ்பிரஸ்ஸா? இந்தர்ங்க மோட்டுக்கொல்ல உம்மாசல்லிமார்த்தா ஊட்டு மோட்டு மேல கள்ளன் நிக்கிறான் வெரசன வந்து புடிங்க...ண்டு ஒரு ஃபோனு....சாரி ராங் நம்பரு.....யாவுள! அவ்வூட்டு ஆம்னாச்சியா மொவ பெரிம்சாயிட்டா அதுனால சாங்காலம் அவ்வூட்ல ஒப்பிச்சி பாக்குறாஹ...நாம ரெண்டு பேரும் செத்த போயிட்டு வந்துர்வோம்ளெ...போவாட்டி ஏசுவா....ரொம்பத்தான் நடலத்துல வர்ரா அவ அக்கச்சிய்யா....அந்த சாய்மான நாக்காலிய எடுவுளே கொஞ்ச நேரம் சாஞ்சிட்டு போரேன்....குடுநி போட்டுத்தரவா? காந்தல்,கபகபப்புக்கு நல்லது....சும்மா சின்னதுக்கெல்லாம் வார்த்தெ சொல்ற காலமா ஈக்கிது இது....அவ்வொளுக்கென்னா நல்லக்கொடப்பொசுப்பு.....ஒரு கோடாளிச்சோப்பு எம்மாத்துரம்??? ம்மாடி மூச்சி எளக்கிதும்மா......கண்ணான வாப்பா அங்கிட்டால போவாதியம்மா பூச்சிவட்டெ கெடக்கும்.....நடு சாமத்துல பாத்து பதயத்துப்பட்டுப்போன இந்த கெரண்டெ அமத்திப்புட்ரானுவோ....காத்தாடி வீணாப்போயிரிச்சி நாளெக்கி அதெ எசவு பண்ணிட்டு வாத்தம்பி.....புள்ளெ என்னன்டோ எளச்சிப்போயிட்டாம்மா....இப்புடி எழுதிக்கிட்டே போனா படிக்கிற உங்களுக்கு சடப்பு வந்துரும்........
இங்கனக்குள்ள தானம்மா வச்சேன் செத்த நேரத்துல கண்மாசியாக்காணம்மம்மா....இந்த கலிச்சல்ல போன ஐபிஎல்லு எப்பத்தான் ஒழியுமோ? ஒரு புள்ளயல்வோ ஆவத்துக்கு ஒதவ மாட்டிக்கிது....இங்கனக்குள்ள உள்ள கடைக்கி போயிட்டு வர கூட மாச்சப்படுதுவோ இந்த வெறுவாக்குலகெட்ட ஐபிஎல்லு கிரிக்கெட்டுனால எல்லாம் கெட்டுப்போயி திரியுதுவோ.........
அசத்தும் அதிரை மொழிகள் ந்டு தலப்ப பாத்தவுடனயே இது மம் நைனாட சடபுடமாதான் இருக்கும்னு நெனைச்சேன் அப்பரமாதான் தெரிஞ்ஜுது அது சாவுலட செரவடின்டு கொஞ்ச நேரத்திலேயெ மம் நைனா சட புடம் அடிச்சிக்கிட்டு வந்து சேந்துட்டனாவுல அட லாயிபுடைச்சவனே ஆமா நைனா இந்த நாலு வார்த்தையை தமிழ்ழ அடிக்கிரதுக்குள்ள மே மூச்சு கீ மூச்சு வாங்குதே எப்படிமம் நைனா இவ்லோ வார்தைகலை சடப்பு இல்லாம மூசு மூசுன்டு அடிக்கீரியே
Assalamu Alaikkum
Dear brother Mr. Shameed,
Your presentation of Adirampattinam Tamil local dialect is nice and funny.
Actually our dialects are expressed through speech, but not in the writings. Writing is mostly a formal one.
In order to sense and feel the smell of our local dialects, we need to speak out with the sound. MashaAllah you tried your best to produce our local dialects in your writing too.
I think by speaking only we can preserve the dialects rather than putting our dialects in writings. Because writing is a formal one.
Our local dialects will last as long as our people are living in Adirampattinam instead of migrating to other lands.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
ரெண்டு பேரும் நல்லாத்தான் எழுவுறியோ!
வாழ்க அதிரைத்தமிழும்!
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்),
இது ஒரு புதிய முயற்சி. அந்த காலத்து தாய்மொழி கேட்டதும் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்றும் தாயின் பால்வந்து பாயுது நாவினிலே என்றும் பாடத் துடிக்குது நெஞ்சு. இன்னும் நிறையவே உண்டு. தோண்டினால் அமுத ஊற்று பொங்கும்.தாகம்அடங்க குடிக்கலாம்..
முயற்சிக்கு வாழ்த்துகள்.
from: முஹமது பாரூக், அதிரைக்காரன்
வால்வாட்டி [அவளுக்கு என்ன கொரச்ச ]
பாசை படிக்கிறான் [ பாசை ]
பொரிக்கன்சட்டி [யை ஒழுங்கா சோப்பு போட்டு கழுவி வை ]
பிருமனை [ என்கவுலே இங்கதானவுல வச்சேன் ]
முட்டாசு [ எங்கே காடுப்பல்லிவாச கந்திரிக்கடையிலே வாங்குனதா ?]
சாமத்துலே [ ஏன்டா மூத்துரத்த பேஞ்ச ]
உப்புத் தக்கரு [ இங்க இருக்கு ஊருவா பாட்ட எங்கவுல ]
சீவன் செத்தவன் [ இந்த சின்ன பொட்டிய இவனால தூக்க முடியல பாரேன்.
இப்படி எங்களாலு எழுத முடியும்ல .
அபு ஆசிப்.
சாவன்னாவும் தம்பி நெய்னாவும் இப்புடி இடுசாமம் மாதிரி கிளம்பி கொந்தமளி போடுரியலே இது அடுக்குமா?
இந்த சல்லைவோ ரெண்டும் சவுதியிலே ஹாலைப் பேணிக்கிட்டு இருக்காமே
இப்புடி அடந்த்ரிசுலே இறங்க்குதுவோ. மெளலாசனை பன்னுதுவோ.
தேன் ! தேன்! திகட்டாத தேன்!
உலகில் எந்த மூலை யிலும் இருக்கும் அதிரையருக்கு அழகான போனஸ். பாராட்டுகள் மருமகனார் சாகுலுக்கு. அத்துடன் பேராசிரியர் முனைவர் நெய்னா அவர்களுக்கும்.
இந்த ஹமீதுங்குரவொலும், நைனாங்குரவொலும் ( எங்க மு. செ.மு.) தான்
இந்த A.N. தளத்த போட்டு இந்த பிராண்டு பிராண்டுரியலே இது கொஞ்சம்கூட அடுக்குமா வல்லானாலயிலே, சுமமகிடந்த என்ன அதிராம்பட்டினம் அடுப்பங்ககரைக்கு இழுத்துக்குட்டு வந்துடியளுவோலே.
இருந்தாலும் விசாவும் , பாஸ்போட்டும் இல்லாம ஊருக்கு போயிட்டுவந்த ஒரு
அனுபவம் கெடைச்சதுல இப்படி நான் ஊருக்கு போக யார் யாரெல்லாம் காரணமோ அவ்வளுவேருக்கும் ரொம்ப நன்றிங்க.
அபி ஆசிப்.
இந்த நாலு வார்த்தையை தமிழ்ழ அடிக்கிரதுக்குள்ள மே மூச்சு கீ மூச்சு வாங்குதே எப்படிமம் நைனா இவ்லோ வார்தைகலை சடப்பு இல்லாம மூசு மூசுன்டு அடிக்கீரியே
உம்மாடி இதே கேள்வி எனக்கு ஏற்பட்டுச்சுமா
abu asif.
மாஷா அல்லாஹ் ”வித்தியாசம்”இதன் மறுபெயர்தான் சாவன்னா காக்கா....நீங்களும் சகோ.MSM நெய்னா அவர்களும் இப்படி போட்டு வெளுத்து வாங்கிட்டியல
// இந்தர்ங்க மோட்டுக்கொல்ல உம்மாசல்லிமார்த்தா //
தம்பி நைனா,
நீங்க குறிப்பிட்ட அந்த பொம்புலைக்கு அவ்வ வாப்பா உம்மா உட்ட பேர்தான் என்ன இதுநாள் வரைக்கும் புரியாத புதிராகவே இருந்துக்குட்டு இருக்குது வாப்பா இந்த பேர் மட்டும் இன்னை வரைக்கும் ( எனக்கு வயது 50 ஐ தாண்டிடுச்சு )
அபு asif
Abdul Khadir Khadir சொன்னது…
//
// இந்தர்ங்க மோட்டுக்கொல்ல உம்மாசல்லிமார்த்தா //
தம்பி நைனா,
நீங்க குறிப்பிட்ட அந்த பொம்புலைக்கு அவ்வ வாப்பா உம்மா உட்ட பேர்தான் என்ன இதுநாள் வரைக்கும் புரியாத புதிராகவே இருந்துக்குட்டு இருக்குது வாப்பா இந்த பேர் மட்டும் இன்னை வரைக்கும் ( எனக்கு வயது 50 ஐ தாண்டிடுச்சு )
அபு asif //
உம்மாசல்லிமார்த்தா - could be an arabic names such as Ummu Salma,
Ummu Salamah(a historical woman in the time of Prophet Muhammad's peace be upon him, time, who married to Prophet Muhammad peace be upon him).
ர்த்தா - here a suffix calling sister.
Dear Mr. Ameen,
I am appreciating you in this name's research.
but I would like to know the correct name and meanining of the woman without any
doubt. Because, since last more than 40 year I couldn't get the correct meaning of this name,
Could you clear my doubt again without any suspicion or any misgiving.
If you do, will be awarded from me by giving "thattupula, Harickan Lamp, solavu, etc.,
with lovingly,
abu asif.
இந்தாவுளே உச்சி உரும நேரத்துல மொவுத்தானகார (பால்கார வீடு போல் சொல்வார்கள்) ஊட்டு பக்கம் போவாதே... நடு சாமத்துல ஒத்தியா போவாதே ஆவுசம் கத்தும்.... அவ எப்பவுமே தமயனுக்கு ஏந்துக்கிட்டுத்தான் பேசுவா....நீஞ்ச தெரியாம தாப்பத்துக்கு போவாதே....வாங்கர்வாயெ எடுத்துக்கிட்டு வந்து அந்தோல ஒசக்க மொத்தியா கெடக்குற முருங்கக்காய பறி.....காரித்துப்ப காக்காசு பெறமாட்டான்....இந்தடீ புள்ள அழுவுறான் வெளயாட்டுல உப்புக்குச்சப்பானியா அவன சேத்து வெளையாடுங்கள்வோ.....செத்த நேரம் தும்க்கை.....ம்மடி திடுக்கின்டு பெயந்துட்டேம்மா.....பத்தாக்கொறைக்கி என்னா செய்றது? மொடையா ஈக்கிது 500 ரூவா கைமாத்து தர்ரியா?....அவ்வூட்டுக்குப்போனா பொழுதன்னக்கிம் கீசரி,நாசரியா ஒரே மோலாசனையா கெடக்குது.....நல்ல தீந்த அப்பாதான் நீங்க போங்க......ம்மடி அவளாம்மா பீயில அரிசி பொறக்குரவளாச்சே....வண்டியில ரோதை கழன்டு அன்னாத்திரிச்சி.....ஒக்கதக்க ஒதவி செய்ம்மா நல்லாயிர்ப்பா நீ......அந்த ஊதாங்கொலைய எடுவுளே....லைட்டெ போடு இருட்டுக்கசமா ஈக்கிது.....மாடாக்குழில நெருப்பட்டியெ எடுத்து முட்டெ லாம்பெ ஏத்து....வாப்பா கச்சாக்கடைக்கு போயி கொஞ்சம் காஸ்கட்டி வாங்கிட்டு வர்ரியாம்மா.....வெரசன கடெத்தெருவுக்கு போங்க காக்கா மீனு எக்கச்சக்கம்மா வந்து குமிஞ்சி கெடக்குது....நானும் சல்லிசா கொல்லநயத்துக்கு வாங்கிக்கிட்டு வந்துட்டேன்......அரச்சேரு பாலு எங்க பத்துது? ஒடம்பு கொனகொனண்டு ஈக்கிது....சீந்தாப்பா ஈக்கிது பாத்துக்கிட்டு போங்க....இது பெரிய தீவினையாவுல ஈக்கிது இவனோட......அல்லாஹ் சதுர வாழ்வெ போட்டு வக்கட்டும்......ஒழுங்கா ஓதலண்டா ஒஸ்தார்ட்ட சொல்லிக்குடுத்துடுவேன்......வாங்கு சொல்ல நேரமாச்சி சட்டுண்டு சர்வத்து கலக்கிக்கிட்டு வாவுளே.....அந்த சர்வ சட்டிய எடுத்து ஓரமா வையி........கருமொகொண்டபுள்ள ஒரு வார்த்தெ சொன்னிச்சா......
சாகுல் காக்காவும் நண்பர் நைனாவும் அதிரை பாசையை இரண்டு பேரும் சேர்ந்து புரட்டி புரட்டி வெளுத்துக்கட்டி விட்டீர்கள். இதை படித்தாலே வெளி நாட்டில் உள்ள அதிரையர்கள் ஊருக்கு போக தேவை இல்லை. ஆனால் மு.செ.மு.நைனா மட்டும் ஊருக்கு அப்போ அப்போ போய்ட்டு வந்து இந்த மாதிரியான வார்த்தைகளை எல்லாம் எழுதி விட்டு மற்றவர்களை போகவிடாமல் ஆக்கி விடுகிறார்.
நைனா செரவெடியிலும்,சடப்புடத்திலும் வருகிறார். நம்ம ஊர் பாசையில் சொல்ல போனால் இவன் யான் இந்த செரவெடியில் வருகிறான் என்று தெரியளையமா நான் என்னம்மா செய்வேன். எல்லோரும் வேட்டியை தான் வரிஞ்சிக்கட்டுவோம் நைனா அதிரை தமிழை வரிஞ்சி கட்டிவிட்டார். அப்பா இதை படித்த உடனை செலவு இல்லாமல் ஊருக்கு போய் விட்டு வந்துட்டேன். மேல் மூச்சும், கீழ் மூச்சும் வாங்குதும்மா என்னால முடியல இதை சொல்லி சொல்லி மால முடியலே. நைனாவுடைய அதிரையின் வார்த்தைகள் தாங்க முடியலே.
என்னா எழுதுறதுன்னு தெர்ல.
எம் எஸ் எம், கொஞ்சோன்டு பேப்பர காட்டுங்களேன், காப்பியடிச்சி கருத்து போட்டுட்றேன்.
சாகுல் தந்த வண்டப்பத்துக்கு அஹமது அமீனின் சில்லி சாஸ் வித் மயோனைஷ்
நம்ம சபிராக்காவும், தோழப்புள்ளெ அவ்பக்கரும் கச்சாமுச்சாண்டு இங்கெ நா எழுதிப்போட்டதெ பாத்து கண்ணூரு போட்ராதிய ஆம்மா......
கண்ணூறு போட்டாச்சி எம் எஸ் எம்.
கல்ப்பு கழிச்சிட்டு மொளவா சுத்தி போட்டுடுங்க.
Ahamed Ameen சொன்னது…
Abdul Khadir Khadir சொன்னது…
//
// இந்தர்ங்க மோட்டுக்கொல்ல உம்மாசல்லிமார்த்தா //
தம்பி நைனா,
நீங்க குறிப்பிட்ட அந்த பொம்புலைக்கு அவ்வ வாப்பா உம்மா உட்ட பேர்தான் என்ன இதுநாள் வரைக்கும் புரியாத புதிராகவே இருந்துக்குட்டு இருக்குது வாப்பா இந்த பேர் மட்டும் இன்னை வரைக்கும் ( எனக்கு வயது 50 ஐ தாண்டிடுச்சு )
அபு asif //
//உம்மாசல்லிமார்த்தா - could be an arabic names such as Ummu Salma,
Ummu Salamah(a historical woman in the time of Prophet Muhammad's peace be upon him, time, who married to Prophet Muhammad peace be upon him).
ர்த்தா - here a suffix calling sister.//
"மொம்மாத்து" "ஆமாத்து" "வல்குசு" இந்த பேருக்கெல்லாம் சரியான பெயர் இதுவரைக்கும் சரியா வெளங்கலே
அதிரையின் தமிழ் மணமனக்கிறது. அதில் ஷாகுல் அரவர்களும் , நைனா அவர்களும் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்து உள்ளனர். முகப்பு செய்தியாக சாகுல் அவர்கள் இந்தக்களத்தில் முன்னே வந்திருந்தாலும் நைனாவின் கை ஓங்கிவிடுமோ என்றுதான் தோன்றுகிறது.
அதிரை மண்ணின் தமிழ் , பைப்படி, மார்க்கெட், மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்ட் , சலூன், நால்ரோடு வண்டிப்பேட்டை , சேர்மேன் வாடி மற்றும் அதிராம்பட்டினத்தில் நாலுபேருக்கு மேல் கூடும் அனைத்து இடங்களின் தமிழும் ஒருசேர இந்த தளத்தில் வளைய வந்துகொண்டிருப்பது கண்டு அதிரையில் பிறந்ததற்கு ஆனந்தப்படுகின்றேன்.
கடைசியாக களத்தில் ( இது மாரத்தான் ஓடப்பந்தயத்தைவிட ) படு வேகமாக
போய்கொண்டிருப்பதை உணர்கிறேன்.
இறுதியாக வெற்றிபெருபருக்கு,
வழக்கமாக கொடுக்கும் பரிசாக, அதிரை நிருபர் வலைதளத்தில் மிகவும் அறியப்பட்ட பரிசுகளான எல்லோருக்கும் தெரிந்த ........... ............. .............
மற்றும் பல பரிசுகள்.
அபு ஆசிப்.
Shameed சொன்னது…
//"மொம்மாத்து" "ஆமாத்து" "வல்குசு" இந்த பேருக்கெல்லாம் சரியான பெயர் இதுவரைக்கும் சரியா வெளங்கலே//
மொம்மாத்து முஹம்மது ஃபாத்திமா
ஆமாத்து அஹமது ஃபாத்திமா
வல்கூசு பல்கீஸ்
அவ்குர்சா அபூபக்கர் கர்சாவா? (செட்டாகவில்லை)
அவ்பக்கர் அபூபக்கர்
ஆவ்மியாக்கா அஹமது முஹைதீன் காக்கா
மோம்மியாக்கா முஹம்மது முஹைதீன் காக்கா
கார்மி காதர் முஹைதீன்
மொம்மிம்மீ முஹம்மது முஹைதீன்
ஆமுசென் அஹமது ஹுசைன்
மொம்மசென் முஹம்மது ஹுசைன்
சேக்காமரைக்கான் சேக் முஹம்மது மரைக்காயர்
சேம்தம்பி சேக் முஹம்மது தம்பி
மொம்நாச்சியா முஹம்மது நாச்சியார்
மொம்மாதுல்லா முஹம்மது அப்துல்லாஹ்
அபுல்சன் அபுல் ஹசன்
பரக்கத் ஸ்டோர் மொம்க்ரப்பாஜியாரு கடை
மெய்யாப்துல்காதரு முகைதீன் அப்துல் காதர்
காக்கம்மா ராத்தம்மா
அக்கச்சியா சகோதரி
அப்புறம் இது எல்லாத்துக்கும் இங்கீலிஸ்ல மீனிங் கேட்டுப்புடாதிய ஆம்மா???? எதோ நம்மனால ஏன்டது........
//அவ்குர்சா அபூபக்கர் கர்சாவா? (செட்டாகவில்லை)//
அபூபக்கர் சாஹிப்
இந்த வெளாயாட்டுக்கு நான் வரல.. இருப்பினும்
மொழிக்குள் மொழி உண்டாக்கிய நம்மூர் மக்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கும்.
மொம் நைனா - முஹமது நெய்னா ( இத ஏன் உட்டுட்டியே )
யாஃபுவம் இல்ல சாச்சா அதான்......
Assalamu Alaikkum
I guess that non of us could stop laughing!!!.
We can announce that MSM Naina is beating everyone and becoming winner.
Please give away the prizes to him as he is really deserved candidate here.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
///Dear Mr. Ameen,
I am appreciating you in this name's research.
but I would like to know the correct name and meanining of the woman without any
doubt. Because, since last more than 40 year I couldn't get the correct meaning of this name,
Could you clear my doubt again without any suspicion or any misgiving.
If you do, will be awarded from me by giving "thattupula, Harickan Lamp, solavu, etc.,
with lovingly,
abu asif. //
Assalamu Alaikkum,
Dear brother Mr. Abdul Khadir,
I think the first part 'ummu' - "أم" means mother, it is clear.
The second part is "salma","salaamah" - derived from root words "سلام","سلم" , which means "peace".
As usual our people could have twisted(check above those twisted forms of names) the orginal name "Ummu Salaamah" to Ummasallima.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
//The second part is "salma","salaamah" - derived from root words "سلام","سلم" , which means "peace".
As usual our people could have twisted(check above those twisted forms of names) the orginal name "Ummu Salaamah" to Ummasallima.//
இந்த இங்லீசு கருத்தில் மாறுபடுகிறேன்.
ஆதாரம் இக்பால் சாலிஹ் அவர்கள் எழுதிய
"நபிமணியும் நகைச்சுவையும்"
தொடரிலிருந்து....
//உம்மு சுலைம் என்ற அழகிய பெயரை வைத்துத் தான் "உம்மா சளி" "உம்மா சளி " என்று சளி பிடிக்க அழைக்கின்றனர் நம் சமூகத்தினர்!//
மேலும் படிக்க இங்கேயே சுட்டி....
http://adirainirubar.blogspot.in/2012/12/blog-post_8633.html
நண்பர்களே! படித்துவிட்டு சிரித்ததில் வயித்துக்குள் செரவடியா வந்து இதனாலே ஊட்டுலே எடுத்த சொலேர்ப்பு இன்னம் உடலே.
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
என்னங்க MSM இந்தப் போடு போடுறிய. தம்பி அபு ஆசிப் சொல்றது போலே விசா டிக்கெட் இல்லாமே ஊருக்குப் போன சந்தோஷம். அப்பப்பா அட்டகாசம்.
வாழ்த்துக்கள்.
N.A.Shahul Hameed
சகோ.சாவுலமீதுக்கு அவுபக்கர் வரைவது நீங்க ஏப்ப சாப்பையான ஆளுண்டு நெனச்சேன் ஆனா நீங்க உழைச்சு உழைச்சு ஓடா போய்டீங்களே ???
அஸ்ஸலாமுஅலைக்கும்!!!
எனக்கு சுமார் 25 ஆண்டுகளாகப் புரியாத ஒரு அதிரை மொழி:
"என்ன பம்பி எப்புடி ஈக்கிது? பொறடி புளிச்சுரும்"
எவராவது இதற்குப் பொருள் சொல்லவும்.
எப்போ அவர் வீட்டுக்குப் போனாலும் இதைத் தான் சொல்வார். இப்போது அவரே தான் சொன்னதை மறந்து விட்டார்.
N.A.Shahul Hameed
மணி 11 ஆவ போவது சோத்துக்கு உலையை வாத்து போடுவுல. தண்ணீ கிடந்து கொதிக்கதம்மா அரிசியை கலஞ்ஜி போடாம எஙகம்மா போனா அவ. உம்மா காப்புடி சுன்ட கானாமே என்ஙம்மா அரிசி குதிர் பானையில பாரு. அதில தான் இல்லை பச்சரிசி பானையில பாரு இல்லன்டா ராத்திரி இடியப்ப மாவு எடுத்தேன் அதுல பாரு உம்மா அருசி அரை படி போடவா முக்கால் படி போடவா.எல்லாம் சொல்லனும் இவலுக்கு அர்ரிக்காபடி போடு போட்டுட்டு மச மசன்னு நிக்காம வாப்பா மீனு வாங்கிட்டு வந்திருக்கவோ அத ஆஞ்ஜி கலுவி தந்துரும்மா மீனு எஙம்மா இருக்கு உமல் பையோட இருக்கு பாரு .ஆ லொஹருக்கு வாங்கு சொல்லியாச்சம்மா புள்ள பள்ளிகொடம் உட்டு வந்துருவானம்மா இன்னம் ஆனம் கரைச்சி வைக்காம இருக்குதம்மா .தங்கச்சி அந்த மொலவாசெலவு டப்பாவ எடுத்தாம்மா கர்சாம்மா இந்தா வெங்காயத்த செத்த பரக்க பரக்க உருச்சி தாவேன். மீனை கலுவிட்டியா .உம்மா அடசுவல பொடி கொஞசம் நேரம் ஆவும் உம்மா மதியானம் பள்ளிகொடம் 2 மணிக்கலாம் போவனும்மா. ஆ புள்ள வெயில்ல வந்திருக்கானம்மா இப்படி வேர்க்குதே இந்த சமயம் பார்த்து கல்ச்சல போரவன் கரன்ட அமத்திபுட்டானம்ம இந்தா கரன்ட் வந்திருச்சு வாப்பா காத்தாடி அடிச்சுவிட்டுட்டு கூடத்தில போயி உட்காருங்கப்பா மீனு ஒரு கொதி கொதிச்சவொன்ன உம்மா சோரு தந்திர்ரேன். கர்சாம்மா மீன கரைச்சி வைச்சிருக்கேன் உப்பு புளி மிலஹா ஒரப்பல்லாம் போதுமான்டு பார்த்து செத்த அடுப்பில வைச்சு எருச்சிவிட்டுரும்மா சோரு வெந்துருசான்னு பார்த்து அந்த கன்னார மூடிய போட்டு இருத்துவுட்டுரும்மா ஆனம் கொதிச்சிருச்சா இன்னம் மொலவாகொதி அடஙகல மொலவா கொதி அடஙினவுடன் கத்தால மீனு கடுத்து கெடக்கும் கொஞ்சம் தேஙகாபாலை நெரைய ஊத்தி எரக்கிடும்மா .புள்ளைக்கு இவலொ செரமபட்டு அவதி பொவதியா சோர கொடுத்தா புள்ள சோத்த பரக்க பரக்க தின்னுட்டு பட்டுக்கோட்டைக்கு முருகையா தேட்டருக்கு மேட்னி சோ பார்க்க போயிட்டான்
சாகுல் காக்காவும் நண்பர் நைனாவும் அதிரை பாசையை இரண்டு பேரும் சேர்ந்து புரட்டி புரட்டி வெளுத்துக்கட்டி விட்டீர்கள். இதை படித்தாலே வெளி நாட்டில் உள்ள அதிரையர்கள் ஊருக்கு போக தேவை இல்லை. ஆனால் மு.செ.மு.நைனா மட்டும் ஊருக்கு அப்போ அப்போ போய்ட்டு வந்து இந்த மாதிரியான வார்த்தைகளை எல்லாம் எழுதி விட்டு மற்றவர்களை போகவிடாமல் ஆக்கி விடுகிறார்.
நைனா செரவெடியிலும்,சடப்புடத்திலும் வருகிறார். நம்ம ஊர் பாசையில் சொல்ல போனால் இவன் யான் இந்த செரவெடியில் வருகிறான் என்று தெரியளையமா நான் என்னம்மா செய்வேன். எல்லோரும் வேட்டியை தான் வரிஞ்சிக்கட்டுவோம் நைனா அதிரை தமிழை வரிஞ்சி கட்டிவிட்டார். அப்பா இதை படித்த உடனை செலவு இல்லாமல் ஊருக்கு போய் விட்டு வந்துட்டேன். மேல் மூச்சும், கீழ் மூச்சும் வாங்குதும்மா என்னால முடியல இதை சொல்லி சொல்லி மால முடியலே. நைனாவுடைய அதிரையின் வார்த்தைகள் தாங்க முடியலே
இந்த கட்டுரைய டைபுரப்பு இப்புடி கொழுந்து விட்டு பத்திக்கிட்டு எறியும்ன்னு நெனைக்கல
இங்கு பின்னுடம் போட்ட அம்புட்டு பேருக்கும் நன்றி
Aboobakkar, Can. சொன்னது…
//சகோ.சாவுலமீதுக்கு அவுபக்கர் வரைவது நீங்க ஏப்ப சாப்பையான ஆளுண்டு நெனச்சேன் ஆனா நீங்க உழைச்சு உழைச்சு ஓடா போய்டீங்களே ???//
ஹா ஹா ஹா
ஓடு இப்பவெல்லாம் கண்ணு மாசிக்கும் காண கெடைக்கலே
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
Shameed சொன்னது…
//"மொம்மாத்து" "ஆமாத்து" "வல்குசு" இந்த பேருக்கெல்லாம் சரியான பெயர் இதுவரைக்கும் சரியா வெளங்கலே//
//மொம்மாத்து முஹம்மது ஃபாத்திமா
ஆமாத்து அஹமது ஃபாத்திமா
வல்கூசு பல்கீஸ்
அவ்குர்சா அபூபக்கர் கர்சாவா? (செட்டாகவில்லை)
அவ்பக்கர் அபூபக்கர்
ஆவ்மியாக்கா அஹமது முஹைதீன் காக்கா
மோம்மியாக்கா முஹம்மது முஹைதீன் காக்கா
கார்மி காதர் முஹைதீன்
மொம்மிம்மீ முஹம்மது முஹைதீன்
ஆமுசென் அஹமது ஹுசைன்
மொம்மசென் முஹம்மது ஹுசைன்
சேக்காமரைக்கான் சேக் முஹம்மது மரைக்காயர்
சேம்தம்பி சேக் முஹம்மது தம்பி
மொம்நாச்சியா முஹம்மது நாச்சியார்
மொம்மாதுல்லா முஹம்மது அப்துல்லாஹ்
அபுல்சன் அபுல் ஹசன்
பரக்கத் ஸ்டோர் மொம்க்ரப்பாஜியாரு கடை
மெய்யாப்துல்காதரு முகைதீன் அப்துல் காதர்
காக்கம்மா ராத்தம்மா
அக்கச்சியா சகோதரி
அப்புறம் இது எல்லாத்துக்கும் இங்கீலிஸ்ல மீனிங் கேட்டுப்புடாதிய ஆம்மா???? எதோ நம்மனால ஏன்டது........//
உம்மாடி யென்ன இந்தேபெரிய லிஸ்டு மேமூச்சி கீமூச்சி வாங்குது படிகிறதுகுல்லே
தாஜுதீன் சொன்னது…
//இந்த வெளாயாட்டுக்கு நான் வரல..//
அத ஏன் "கண்ணீரும் கம்பலையுமா" சொல்றிய
//Shameed சொன்னது… அத ஏன் "கண்ணீரும் கம்பலையுமா" சொல்றிய//
அஸ்ஸலாமுஅலைக்கும்,
ஹமீத் காக்கா... இப்படி போட்டு தாக்குறியலே இரண்டு பேரும்... எப்படித்தான் வருதோ...
ஊருலே ஒரு செய்தி அடிபடுது காக்கா..., உங்களையும் முசெமு நெய்னாவையும் வரும் பாராலுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிகளின் அதிரை நகர கொள்கை பரப்பு செயலாளர்கள் பதவி கொடுத்து ஊர் பாசைல பேசிப்பேசி ஒட்டு சேகரிக்க திட்டம் தீட்டியிட்டு இருக்காங்கலாம்... உஷாரா இருந்துக்குங்க காக்கா..
sabeer.abushahruk சொன்னது…
//என்னா எழுதுறதுன்னு தெர்ல. //
என்ன நீங்களும் யாசிரும் கமுக்கமா ஈக்கிரியலே
UNMAI சொன்னது…
//மணி 11 ஆவ போவது சோத்துக்கு உலையை வாத்து போடுவுல. தண்ணீ கிடந்து கொதிக்கதம்மா அரிசியை கலஞ்ஜி போடாம எஙகம்மா போனா //
சகோ உண்மை உங்களை உண்மையா யாருன்னு வெளங்கலே
கம்சு சட்டை -
நாறங்கி-
கொளுக்கி-
நாற்சா சோறு -
மால மகதி நேரம் -
அவ்ரவ புள்ள -
ஒஹப்பு-
இருந்தாலும் உங்களுவலுக்கு ரொம்ப தான் பவ்மானம்.
Shafi Ahmed
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
MSM & சாவன்னா ஓயாம்மா வின் உண்மைப் பெயர் என்ன?
N.A.Shahul Hameed
சகோ உண்மை உங்களை உண்மையா யாருன்னு வெளங்கலே? என்ன ஹமீது பிரதரே இப்படி கேட்டுப்புட்டிய .நெறையா பேரு சும்மா பதூசா படிச்சிட்டு மனசுக்குல சிரிச்சிக்கிட்டு போயிர்ராஹ..மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…அப்படி படுச்சிபுட்டு போயிராமெ நீங்க அசத்தும் அதிரையை பதிவிட்ட அடுத்த நிமிடமே நீங்க சொன்ன மாதிரி இந்த கட்டுரைய டைபுரப்பு இப்புடி கொழுந்து விட்டு பத்திக்கிட்டு எறியும்ன்னு நெனைக்கல கொலுந்து விட்டு எரிவதர்க்கு முதல் ஸ்பார்க்லிங் ஹமீதுட செரவடி தாங்கமுடியலையம்மா அது உஙகளை பாராளுமன்றம் வரை இழுத்து சென்றிருப்பதால் ஒரு அரசியல் வாதியாக கூட இருக்கலாம் ஊருலே ஒரு செய்தி அடிபடுது காக்கா..., உங்களையும் முசெமு நெய்னாவையும் வரும் பாராலுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிகளின் அதிரை நகர கொள்கை பரப்பு செயலாளர்கள் பதவி கொடுத்து ஊர் பாசைல பேசிப்பேசி ஒட்டு சேகரிக்க திட்டம் தீட்டியிட்டு இருக்காங்கலாம்... உஷாரா இருந்துக்குங்க காக்கா.. என்றாவது ஒரு நாள் உண்மை வெளியே வரும் சஹொதரரே
சகோ உண்மை உங்களை உண்மையா யாருன்னு வெளங்கலே உஙகளை கார்மொயிதீன் ஹைஸ்கூலில் 77- 85 படிச்சப்ப அந்த மைத்தாங்கரைகுள்ள உளுந்து கருவமுள்ள விளக்கிகிட்டு வருவிய அப்ப பார்த்தது அப்புறம் சகோதரர் சாவன்னா கடையில 87- 90 வாக்கில் பார்த்திருப்போம் அதுக்கு பிறகு சந்திக்கவே இல்லை இன்ஷா அல்லாஹ் சந்திப்போம் ஒரு நாள். ஆனால் உஙகளுடைய அதிரை , மலேசியா ,ராமெஸ்வரம் புகைபடங்களை ரசித்துகொண்டுதான் உள்ளேன்
ஊரு பாசையை கிளப்பி விட்டவர்களை உடுரமாதிரி இல்லை..... ஒருதடவை கார்மரியத்து மவன அடுசுபுட்டேன் அவ்வ உம்மா என்னை திட்டினாங்க அடகுலமட்டிகொல்லுவா,ஒருஒட்டுபீயிலபோய்டுவாஉங்க வீட்டுக்கு தந்திவர ,நெட்ட மொம்குறு (நான் உயரமான முகமது அபூபக்கராம் )இந்த கழிச்சல் எந்தா மொத்தி எந்தா ஒசரம்........
ம்மா...இங்க வந்து கருத்து சொன்னா எல்லா அம்புளையல்வொலுக்கும் நம்மூட்டு ஏன்சு அலிமால்லேர்ந்து சுக்குர்சானை எடுத்திக்கிட்டு வந்து தேத்தண்ணி ஊத்திக்குடும்மா......இல்லாட்டி எல்லாரும் கோவிச்சிக்கிடுவாஹ......
சும்மா கச்சாமுச்சாண்டு இங்கே எழுதி உட்டதுக்கெல்லாம் உற்சாக கருத்துக்கள் சொல்லி எம்மை குந்தமரி கொள்ளச்செய்து ஊக்கப்படுத்திய எல்லா நல்லுள்ளங்களும் அல்லாட ஹாவல்ல சதுராஃபியத்தா ஈக்கட்டும்.....ரொம்ப தேங்க்ஸ்....
எங்கெ எடிட்டராக்காவெயே காணோம்மே என்னா சங்கதி???
நமதூரின் அந்தகால மடமைகளில் சில..... புள்ளைக்கு கண்ணூறு மொலவக்கா சுத்தி போடணும் சந்தரமா செந்தூரம் கொடுக்கணும் .......அடுத்தவீட்டுகண்ணு அவுன்சு போக பக்கத்துவீட்டுகண்ணு பாலாபோவ ,எதிர்த்த வீட்டுகண்ணு எரிஞ்சுபோக ........இதுக்குள்ளே மவன் .......உம்மா பீ முடுக்குது செட்டியாகொளம் போறேன் ..........
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
MSM & சாவன்னா ஓயாம்மா வின் உண்மைப் பெயர் என்ன?
N.A.Shahul Hameed
வஜிஹா அம்மாள்
நல்லத்தான்! !
இப்புடில்லாம்.எலுதபுடாதுவாப்பா!.
அசளுறு காரவோ பாத்த இத அவுருக்கு களவாண்டுகிட்டு போfய்டு வாஹ. பத்தரமா பாத்துகிடுங்க
S. மம்மதுபாறக்கு - அதுராம்பட்டணம்
Abdul Khadir Khadir சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
MSM & சாவன்னா ஓயாம்மா வின் உண்மைப் பெயர் என்ன?
N.A.Shahul Hameed
//வஜிஹா அம்மாள்//
சகோ Abdul Khadir Khadir அவர்களுக்கு அதிரை டிஹ்னரி என்ற சிறப்பு பட்டத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
//எங்கெ எடிட்டராக்காவெயே காணோம்மே என்னா சங்கதி???//
களரி சோறு போட்டு வாங்குதோ !!!
UNMAI சொன்னது…
//உஙகளுடைய அதிரை , மலேசியா ,ராமெஸ்வரம் புகைபடங்களை ரசித்துகொண்டுதான் உள்ளேன்//
நீங்க கலர் போட்டோக்களை பார்த்துக்கொண்டு என்னை பிளாக் & ஒய்ட்டை (77- 85 )யோசிக்க வச்சுபுட்டியலே
ஆஹா அற்புதம் அதிரை மொழி மனம் விசுது,
நல்லா இருப்பியே காக்கா கொஞ்சங்குட அசராம இப்புடி பேசினா எங்கனால சிரிக்க முடியலே
அதிரை மொழிமனம் வீசட்டும் இவ்வுலகமே அச்சரியப்படட்டும்...அதிரையன் எப்பவுமே கிங்குதான்
மணி 11 ஆவ போவது சோத்துக்கு உலையை வாத்து போடுவுல.... தண்ணீ கிடந்து கொதிக்கதம்மா அரிசியை கலஞ்ஜி போடாம எஙகம்மா போனா அவ.. உம்மா காப்புடி சுன்ட கானாமே என்ஙம்மா... அரிசி குதிர் பானையில பாரு. அதில தான் இல்லை.. பச்சரிசி பானையில பாரு இல்லன்டா ராத்திரி இடியப்ப மாவு எடுத்தேன் அதுல பாரு... உம்மா அருசி அரை படி போடவா முக்கால் படி போடவா.எல்லாம் சொல்லனும் இவலுக்கு அர்ரிக்காபடி போடு போட்டுட்டு மச மசன்னு நிக்காம வாப்பா மீனு வாங்கிட்டு வந்திருக்கவோ அத ஆஞ்ஜி கலுவி தந்துரும்மா... மீனு எஙம்மா இருக்கு உமல் பையோட இருக்கு பாரு.. .ஆ லொஹருக்கு வாங்கு சொல்லியாச்சம்மா புள்ள பள்ளிகொடம் உட்டு வந்துருவானம்மா இன்னம் ஆனம் கரைச்சி வைக்காம இருக்குதம்மா.. .தங்கச்சி அந்த மொலவாசெலவு டப்பாவ எடுத்தாம்மா.. கர்சாம்மா இந்தா வெங்காயத்த செத்த பரக்க பரக்க உருச்சி தாவேன். மீனை கலுவிட்டியா .உம்மா அடசுவல பொடி கொஞசம் நேரம் ஆவும் உம்மா.. மதியானம் பள்ளிகொடம் 2 மணிக்கலாம் போவனும்மா... ஆ புள்ள வெயில்ல வந்திருக்கானம்மா இப்படி வேர்க்குதே இந்த சமயம் பார்த்து கல்ச்சல போரவன் கரன்ட அமத்திபுட்டானம்ம.. இந்தா கரன்ட் வந்திருச்சு வாப்பா காத்தாடி அடிச்சுவிட்டுட்டு கூடத்தில போயி உட்காருங்கப்பா மீனு ஒரு கொதி கொதிச்சவொன்ன உம்மா சோரு தந்திர்ரேன்... கர்சாம்மா மீன கரைச்சி வைச்சிருக்கேன் உப்பு புளி மிலஹா ஒரப்பல்லாம் போதுமான்டு பார்த்து செத்த அடுப்பில வைச்சு எருச்சிவிட்டுரும்மா..... சோரு வெந்துருசான்னு பார்த்து அந்த கன்னார மூடிய போட்டு இருத்துவுட்டுரும்மா. ஆனம் கொதிச்சிருச்சா.. இன்னம் மொலவாகொதி அடஙகல மொலவா கொதி அடஙினவுடன் கத்தால மீனு கடுத்து கெடக்கும் கொஞ்சம் தேஙகாபாலை நெரைய ஊத்தி எரக்கிடும்மா....புள்ளைக்கு இவலொ செரமபட்டு அவதி பொவதியா சோர கொடுத்தா புள்ள சோத்த பரக்க பரக்க தின்னுட்டு பட்டுக்கோட்டைக்கு முருகையா தேட்டருக்கு மேட்னி சோ பார்க்க போயிட்டான்...........என்னாப்பா கதை இது ஒன்னும் புரியல
11 மணி, 12 மணி என்னப்பா இது... நம்ம மு.செ.மு சொன்ன மாதிரி எடிட்டாராக்கா தூங்கிட்டாங்கலோ இல்லை கலரி சோரு தின்டது செரிமானம் ஆவலையோ வேன்டா நான் நல்லா இஞ்ஜை தட்டிபோடு சீனியை கரிக்க போட்டு கொஞசம் வெரும் தேத்தண்ணீ போட்டு தரவா
ஏன்ஸ்ல ஈந்த கிண்ணியில லேஞ்சி உழுந்துடுச்சா.சாலியாக்கா கடைல சொவ்காரம் வாங்கி அலசு அலசுனா போவும்.
கிடியாரத்துல மணி என்னான்னு பார்த்தால் லிப்பேரா ஈந்திருக்கு,நானும் யாவ்ஹுவமில்லாம மெதனமா ஈந்திட்டேன். பட்டப்பகலுல உச்சிஉருமநேரத்துல வேகுவேகுன்னு உழுந்தடிச்சிக்கிட்டு போனாக்கா,கடைக்காரவோ பள்ளியாசல்ல வாங்கு சொல்லிட்டாஹன்னு வெரசா ஒய்செஞ்சிட்டு போயிட்டார். நானும், ஈந்துஈந்து பார்த்துட்டு ஆத்தாகொலையும் போக்கனங்கேடும்னு நெனைச்சிக்கிட்டு ஊட்டுக்குள்ள நொழையுறேன், கல்சல்லபோன மாடு குண்டான திண்டுகிட்டு ஈந்துச்சு.அங்கன ஈந்த தடுக்க எடுத்து சுருட்டி அடிச்சேனா மூசிக்கிட்டு வந்துச்சு. மொய்யதுனாண்டவொளே சேக்காதி சாகிபேன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டேன். அல்லாதான் ஹாப்பாதுனான்.
இந்த காலத்துலெயும் கூடு,கந்தூரிண்டு வீட்டுமெக்காக எடுக்குறானுவொமா....ச்சீ அரீர்ப்பா ஈக்கிதும்மா....கருமங்கொண்ட புள்ளயல்வோ பலிங்கிய ஊட்டுக்குள்ள வச்சி வெளையாண்டு சர்சராக்குழி அடச்சிக்கிடிச்சிம்மா...இந்தாவுள கொஞ்சம் ஒரமோரு எடுத்து வய்யி தயிரு ஒரக்கனும்....யாம்மா யூசுப்பு, இவ்ளோவ் நாளா தட்டுப்படலெய்யே எங்கம்மா ஈந்திய???
யாரு நெய்னாவா? லெக்குத் தெரியலையே. யாவூட்டு புள்ளமா? நான் ஏன் ஹாலப்போணிக்கிட்டு நாஉண்டு ஏன் வேலை உண்டுண்டு அபுதாபில ஈக்கிறேன். என்னைய லெக்கெ தெரியுதா? தெரியலன்னா கருமோசல்ல போனவன் அதிரைக்காரன்ட கேளுங்க. சதுரவாழ்வ பாத்துக்கிடுங்க.
ஈசுபு. நெய்னா நம்ம தாயபுள்ளதான். சவுதியரபியாவுல மேனேஜருக்கு செஹரட்டரியா ஈக்கிறான். நம்ம சின்னமச்சி மொய்தீன் செட்டு. மொய்தீன் அமெரிக்கா போயி மனுசனாயிட்டான். நாமதான் அரபுநாட்டுல வந்து மாட்டிக்கிட்டோம்.
ஈசுபு, உன்னையத்தான் எனக்கு நல்லாத்தெரியுமப்பா....நீயும், நானும் பத்தாவது ஒன்னா படிச்சோம் கா.மு.மே. பள்ளிக்கொடத்துல. கிட்டன்ஸ்ல ஊர்ல கூட அடிக்கடி செக்கடிப்பள்ளியில வச்சி சந்தித்துக்கொள்வோமே? யாஃபொவம் வந்திரிச்சா? முன்னாடி நீ துபாயில டாக்குமென்ட் கண்ட்ரோலராவாவுல வேல பாத்துக்கிட்டு ஈக்கிறதா சொன்னா? இப்பொ சவுதியிலயா ஈக்கிறா? சொல்லவே இல்ல? ஜமால்தீன் சொல்லித்தான் எனக்கு தெரிஞ்சிச்சி.....
வல்லாநாலைல. நான் சொன்னது நெய்னாவைப்பற்றி ஈசுபிடம். :)
Post a Comment