ஆப்பிளை ரசித்தேன்!(ருசிக்கவில்லை-ரசாயனம்)
ஆத்திச்சூடி-என்றால் அறிவுரையாகவும் இருக்கணும்,அதிரை வட்டாரத் தமிழாகவும் இருக்கணும் என்று மனதில் கவ்விக் கொண்டு என்னால் இயன்றதை தொடர்ந்தேன்.
அகிலமெங்கும் ஒலிக்கணும் அதிரைப்புகழ்! அமரிக்காவாலும்-ஆஸ்திரேளியாவானாலும் ரிஜிக் மின் அல்லாஹ்!
ஆண்டவனே எல்லாம் ஏன்டவன்(இயன்றவன்)!
இல்லாத ஊருக்கு வழி தேடாதே !
ஈக்கிரத்தை உட்டுட்டு பறக்கிரத்த ஆசைப்படாதே!
உள்ளதைக் கொண்டு ஒப்பேத்து!
ஊரார் மெச்ச நடந்து கொள்!
எங்க வேலைசெஞ்சா என்ன..எமிகிரேஷன் கிடைக்குமா?
ஏலும்போதே சம்பாதிக்கணும் !
ஐசு வச்சாவது முதலாளியிடம் நல்ல பேரு வாங்கிக்கோ.....
ஒத்தும சத்துமையா ஈந்துக்கணும் !
ஓவர்டைம் பார்த்தாவது ஊட்டுக்கு காசுவரனும்.!
ஒளவை பாட்டி இப்பயிருந்தால் இதைத்தான் சொல்லிக்குடுப்போம்!
அஃதன்றி வேரன்றியோம் சகோதரா!
வாழ்க வளமுடன்.
ராஃபியா
27 Responses So Far:
அ முதல் அஃகு தானுங்கோ..உங்க
ஆத்திச்சூடி 'நச்'தானுங்கோ..!!!
ஆஹா சூப்பர் ஆத்திச்சூடி,
கல்வியில் அரசு குழம்பி(குழப்பி)க்கொண்டிருக்கும் போது இதை அம்மாவுக்கு உடனடியாக அனுப்பி வையுங்களேன்.ஒருவேளை பரிசீலனை,மேல்முறையீடு,திருத்தம் என ஏதாவது செஞ்சு ஒரு வரியாவது பாடத்துக்கு வருமா என்று பார்க்கலாமே.
அதிராம்பட்டினத்து ஆத்திசூடி அருமை. நெல்லிக்காய் பார்த்து பசிக்க ஆரம்பித்து விட்டது.
//ஐசு வச்சாவது முதலாளியிடம் நல்ல பேரு வாங்கிக்கோ.....
வேலையை உருப்படியா கத்துக்க வேணாங்களா???
சகோ. ரஃபியா அவர்களின் சேடைகலந்த "அதிரைச்சூடி" அருமை.
"ஐசு வைக்காமல் நாணயமாக இருந்து எல்லார்ட்டையும் நல்ல பேரு எடுக்கனும்"
என்று ஜாஹிர் காக்கா ஆசப்பட்ரது போல் ஈந்தால் நல்லது. அ.நி. மாற்றுங்களேன்.....
அது சரி கட்டுரையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நெல்லிக்காயிக்கும், ஆத்திச்சூடிக்கும் என்ன சம்மந்தம்? சம்மந்தமே இல்லாமல் சம்மந்தமாகி அதில் பெரும் விருந்து படைக்க விரும்புகிறீர்களோ? இஸ்ஸ்வ்வ்வ்....வாய் ஊறுது....
ஆஹட்டும்...ஆஹட்டும்...ஆயிரத்தெட்டு மனப்புழுக்கம் எம்மிடையே இருந்தாலும் நம்மூர் நினைவுகள் என்றும் அதற்கு நிவாரணம் அளிக்கும் நினைக்கும் பொழுதெல்லாம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
(என்ன சகோ ராஃபியா ஈசியா அருமையா சொல்லிப்பிட்டு எங்கள பென்டெடுக்கிரிய?)
அண்ணந்தம்பியாய் அதிரையில் புழங்கு
ஆறுனகஞ்சி பழங்கஞ்சி. வெளங்கு
இம்மைக்குமட்டுமில்லே இவ்வொலகம் வந்தது
ஈருலகம் ஜெயிக்க ஈகையே செறந்தது
உள்ளூரு மாப்பிள்ளைக்கு ஊடுகட்டிக்கேக்காதே
ஊருக்கே தெரியாம வலமை வாங்கி திங்காதே
எச்சக்கையாலே காக்கா வெரட்டாத கஞ்சனுவோ
ஏரோப்ளான்ல போனாலும் என்னாத்த ஜெயிச்சானுவோ
ஐயரு வூட்டுப் பிள்ள மா(தி)ரி அம்பூட்டும் படி
ஒலகமெல்லாம் ஒசந்து நிக்கிம் நம்மூரு கொடி
ஓதிப் படிச்ச புள்ளைவோ மட்டும்தான்
ஓளவை மா(தி)ரி பெரும்புகழை எட்டும்தான்
அஃதே அதிரைக்கும் என் சட்டம்தான்!
மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் ,சகோ.ராஃபியா அவர்களின் அதிரைச்சூடி அருமை .படித்தேன் ரசித்தேன் .
அகிலமெங்கும் ஒலிக்கணும் அதிரைப்புகழ்! அமரிக்காவாலும்-ஆஸ்திரேளியாவானாலும் ரிஜிக் மின் அல்லாஹ்!
கீழே நெல்லிக்காய் படம் போட்டதனாலே ஒலிக்க வாய்ப்பில்லை புளிக்கத்தான் செய்யும்.
முதலில் சகோ.மு.செ.மு.நெய்னாக்கு வாய் ஊறியது போல்.அடுத்தது எனக்கும் ஊறியது இன்னும் எத்தனை பேருக்கு ஊறப்போகிறதோ ?
லெ.மு.செ.முஹம்மத் அபுபக்கர்
அஸ்ஸலாமுஅலிக்கும்.என்ன காக்கா இப்படி வார்தையை சோடி,சோடியா அமைச்சி,வெற்றி சூடிடிங்க அடி ஆத்தி அந்த அம்மையாருக்கே நெல்லிகனியா(ஹல்வா)?இதுதான் ரபியா!!ஒவ்வொரு வார்தையும் மூட்டையிலிருந்து அவிழ்துவிட்ட நெல்லிகனிபோல் இனிமை,அருமை,அதனுடன் நமவூர் வார்தையின் பெருமை.இப்படி வார்க சிலருக்குதான் இருக்கு அந்த திறமை காரணம் மொழிப் புலமை.(கல்சல போன தஸ்தகீருக்கு இதான் வலமைன்னு யாரொ சொல்றமாதிர் கேட்பதால் இத்துடன் ஜூட்).
//(க ச போன தஸ்தகீருக்கு இதான் வலமைன்னு யாரொ சொல்றமாதிர் கேட்பதால் இத்துடன் ஜூட்).///
ஏன் இப்படியுமா அசரீரி கேட்குது !? இது ஏதோ பழக்க தோஷமா இருக்கப்போவுதடாபா.... பரிகாரம் இருந்தா கேட்டு செஞ்சுடலாம்(டா)ப்பா !
ஆப்பிளில் ரசாயனம்(மாம்), விலை எல்லாம் அதிகம்(மாம்) அதனால் அதற்கு நிகரான விட்டமின் உள்ள நம்மூரு கனி நெல்லியை போட்டுஇருக்கார்கள்?
//அது சரி கட்டுரையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நெல்லிக்காயிக்கும், ஆத்திச்சூடிக்கும் என்ன சம்மந்தம்? சம்மந்தமே இல்லாமல் சம்மந்தமாகி அதில் பெரும் விருந்து படைக்க விரும்புகிறீர்களோ? இஸ்ஸ்வ்வ்வ்....வாய் ஊறுது....//
நொல்லிக்காயை பார்த்தவுடன் நமக்கு நாவு ஊறுவது போல். இந்த பதிவை படித்தவுடன் நமக்கும் இது போன்ற ஆத்திச்சூடி எழுத தூண்டுகிறது என்பதால் இந்த படம் பதியப்பட்டது என்பதை வாசக நேசங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
/அது சரி கட்டுரையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நெல்லிக்காயிக்கும், ஆத்திச்சூடிக்கும் என்ன சம்மந்தம்? சம்மந்தமே இல்லாமல் சம்மந்தமாகி அதில் பெரும் விருந்து படைக்க விரும்புகிறீர்களோ? இஸ்ஸ்வ்வ்வ்....வாய் ஊறுது....//
------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இதற்குமுன் நெல்லிக்கனி இங்கே வந்ததை சொல்லி இருந்தேன். அது மூட்டையிலிருந்து நெல்லிகனி அவிழ்துவிட்டதுபோல் வார்தைகள் அவ்ழ்த்துவிடப்பட்டுள்ளது அதுவும் ஒளவையார் பற்றி நெல்லிக்கனியை சொல்லும் போது அதியமான் தந்ததை சொல்வார்கள் இது அதிரை தந்த நெல்லிகனி இதில் எள்ளி விளையாடாதிங்கன்னு சொல்லி போகவே வந்தேன். மேலும் ஒரு விசயத்தை புரியும் படி விளக்குவது உள்ளங்கையில்
நெல்லி கனிபோல் என்பர். ஆகவே இந்த ஆக்கத்திற்கு நெல்லிக்கனி படம் போட்டதுதான் சாலப்பொருந்தும்.
//மேலும் ஒரு விசயத்தை புரியும் படி விளக்குவது உள்ளங்கையில்
நெல்லி கனிபோல் என்பர். ஆகவே இந்த ஆக்கத்திற்கு நெல்லிக்கனி படம் போட்டதுதான் சாலப்பொருந்தும்.//
கிரைவ்ன்(னு): ஒளவைக்கு நெல்லிக்கணி தந்ததை நினைவில் வைத்துதான் கடை பறத்தியிருக்கிறது ஆனால் விலை கொடுக்காமல் வடிகிறது (அதிரை இரயில்-சந்திப்பில் - உபயம் மார்டன் மோய்னப்பா)...
தமிழ் வரிகளோடு ஊடுருவும் நமக்குத் தெரியாதா நெல்லிக்கணி எள்ளி நகையாடவல்ல என்று அது அவ்வைக்கு கொடுத்தது என்று !?
நல்ல சமாளிஃபிகேஷன்
(கிரீடமும் தம்பியும் இஸ்கூல் காலத்திலே எப்படியெல்லாம் சமாளித்தார்களோ!!!)
உஙகள் மனதை கவ்விக்கொண்டு எங்களின் மனங்களையெல்லாம் கொள்ளை கொண்டு அல்லவா சென்று விட்டீர்கள்....ஆத்தி சூடி அருமையான சூடி
ஆத்திசூடிக்கு போட்டியாக “ஆதங்க” சூடி எழுதிய அபு இபுராஹிம் காக்காவிற்க்கும் வாழ்த்துக்கள்
கவிக்காக்கா...உங்க அமுத சுரபி கவி மூளையில் 1% எனக்கு கொடுங்களேன்....என்ன மாதிரி எழுதுரீங்க காக்கா....மிகவும் ரசித்தேன் காக்கா
Yasir சொன்னது…
கவிக்காக்கா...உங்க அமுத சுரபி கவி மூளையில் 1% எனக்கு கொடுங்களேன்....என்ன மாதிரி எழுதுரீங்க காக்கா....மிகவும் ரசித்தேன் காக்கா .
---------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அதானே! ஆனா நமக்கு 1% பத்தாது. 50%விழுக்காடு இருந்தாதான் என் மூளை வேலை செய்யும் பிறகு நாங்களும் உங்கள மாதிரி கவிதை எழுவோம்ல. காக்கா நல்ல மாதிரி வந்து சேர்ந்திங்களா? கேட்ட மறந்துவிட்டேன்.
கிரவுனைப்போல் சிலேடையில் எழுதுவதற்க்கு...நான் வாழ்நாள் முழுவதும் கத்துகிட்டாலும் பத்து வார்த்தைகூட எழுத முடியாது....
வந்தாச்சு கிரவுன்.
கொஞ்சம் மழைக் காற்றும்
மெல்லிய மண் வாசனையும்
சடுதியில் மழைத் தூறலும்
புழுக்கமும் பிசுபிசுப்பும்
ஹவுலுத்தண்ணீரில்
ஒளுவும்
கலரிச்சோறும்
என
கலந்துகட்டிய
அனுபவங்களின் வில்லல்களோடு மட்டும்
ஒளவையார் கையில் அலைபேசியிருந்தால் என்ன செய்திருப்பாங்க ? யாராவது சொல்லுங்களேன் !
//ஆப்பிளை ரசித்தேன்!(ருசிக்கவில்லை-ரசாயனம்)//
நானும்தான் ஆப்பிள்(ளை) ரசித்தேன், அதன் விலையை ! அதன் அழகை ! அதன் கருப்பு வெள்ளை இரண்டு நிறங்களை... அதோடு அதனைத் தடவித் தடவித்தான் ரசிக்கனுமாம் !! கையடக்கத்திலும் இருக்கு, சாப்பிடும் தட்டு வடிவிலும் பளிச்சென்று இருக்கே !
MSM(n)
//"ஐசு வைக்காமல் நாணயமாக இருந்து எல்லார்ட்டையும் நல்ல பேரு எடுக்கனும்" //
நாணயம் இருக்கிமிடத்தில் மட்டுமல்ல ! எல்லா இடத்திலும் ! :)
ஒளவையாரே பல்லைக் காட்டுக்ம் அளவுக்கு நாமும் ஆத்திச் சூடிகள் ஏராளம் எழுதியாச்சு ! :))
இருப்பினும் எழுதும்போது கொட்டும் வார்த்தைகளை அடுக்கியது..
நல்ல வேளை எல்லோரும் நெல்லிக் கணியைத்தான் கண்டு கொண்டீர் இங்கே ஒரு உல்டா ஆகியிருப்பதை யாருமே கவனிக்கலையே:
//அதிரையிலே
ஆவேஷம்
இரயிலோடவில்லை
ஈவுவிரக்கமின்றி
உறவுகளுக்கும்
ஊருக்குள்ளே
எவஞ்செயல்தான்
ஏமாற்றியதோ
ஐக்கியமில்லை
ஒன்றானலும்
ஓரணியிலிருப்பதில்லை
ஃ (இப்படியாக ஆளுக்கு ஒரு புள்ளியிலே !)//
அ
ஆ
இ
ஈ
உ
ஊ
எ
ஏ
ஐ
ஒ
ஓ
ஒள
ஃ
இந்த வரிசையில் ! கண்ணாடி போட்ட டீச்சர் எங்கே இருக்காங்கன்னு தெரியலை என்னைத் தேடி அடிக்க !
//ஒளவையார் கையில் அலைபேசியிருந்தால் என்ன செய்திருப்பாங்க ? யாராவது சொல்லுங்களேன் !//அதிரை நிருபரின் அமீருக்கு போன் செய்து நல்லவேலை நான் முந்திக்கொண்டேன் -என்னைவிட திறமை வாய்ந்து ஆத்திசூடி சொல்பவர்களாக உங்க ஆட்கள் இருக்காக்ங்க...கொஞ்சம் அடக்கிவாசிங்க..இல்லைனா என்பெயர் - என்ன பெயர் என்று கேட்கும் அளவிற்க்கு போய்விடும் :)
//உல்டா ஆகியிருப்பதை யாருமே கவனிக்கலையே:// உல்டா ஆனாலும் அதை எந்தவித அல்டாப்பும் இல்லாம ஒத்துக்கொண்ட காக்கா அவர்களுக்கு ஒரு ஜே.....வாங்க வாங்க மும்தாஜ் டீச்சர்டையும்,நூர்ஜாஹன் டீச்சர்டையும் சொல்லி உங்களிக்கு அடிவாங்கி கொடுக்கின்றேன்
தம்பி யாசிர்: இது அவங்க சொல்லித் தரல :( நடுத்தெரு வாய்க்கால் பள்ளிக்கூடத்தில கண்ணாடி போட்ட டீச்சர் (கண்டிப்பானவங்க) அவங்க சொன்னது அதான் ஒரே பயம் ! :)
அதிருக்கட்டும்...
ஒளவையின் கையில் அலபேசியிருந்தால் அவரிடமிருந்து SMS...
ராசாவுக்கு ஒரு பாட்டு
"திஹாரிலே தாலாட்டு"
மொழிக்கு ஒரு பாட்டு
"தந்தையின் கண்ணீர் சொட்டு"
மின்சாரத்திற்கு ஒரு பாட்டு
"ஏனிந்த பவர் கட்டு"
கல்விக்கு ஒரு பாட்டு
"சீர் இழந்த சமச்சீருக்கு குட்டு"
நிதிக்கு ஒரு பாட்டு
"யார் சுருட்டிய கட்டு"
இதையெல்லாம் விட நமக்கு ஒரு பாட்டு
"இன்னுமா போடுறீங்க ஓட்டுன்னு !"
என்று குறும்பாட்டுக்கள் SMSல் அனுப்பிக் கொண்டிருபபார்...
சகோதரர் ஜாகிர் கருத்துப்படி "ஐ " க்கு ஐஸ் வைக்காமல் நேர்மையாக
"ஐக்கியப்பட்டு சமுதாயத்தை முன்னேற்று" -
எனக் கொள்ளலாம்.
Assalamu Alaikkum
கீழே நெல்லிக்காய் போட்டது அவ்வையாரை நினைவு படுத்தத்தானே தாஜூதீன்?
N.A.Shahul Hameed
வ அலைக்குமுஸ்ஸலாம்,
வாங்க சார் ! ரொம்ப நாளைக்கு பிறகு கருத்திடுகிறீர்கள்.
நலமா?
ஆமாம் சார், கீழே நெல்லிக்காய் போட்டது அவ்வையாரை நினைவு படுத்தத்தான்.
இஸ்ஸ்வ்வ்வ்....வாய் ஊறுது.... நெல்லிக்காய் என்றாலே..
Post a Comment