Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவர்ண்மென்ட் உத்தியோகம்..! 13

அதிரைநிருபர் | July 28, 2010 | , , ,

ஆரம்ப பள்ளி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பக்கத்தில் சகவயதுடைய மாணவன் தன்னுடைய புது வகையான லெதர் பேக்கிலிருந்து ஜாமின்ட்ரி                                             பாக்ஸ் திறந்து அழகழகான நிறமும் வடிவமுடைய பென்சில்,                 பேனா, ரப்பர், ஸ்கேல் எடுத்து இது என் வாப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பிருக்காங்க என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த இவன் தன்மேல் வெறுப்பும் கோபமும் வருகிறது. நாம் ஏன் வெளிநாட்டிலிருக்கும் தந்தைக்கு மகனாக பிறந்திருக்கக்கூடாது, இங்கு ஏன் பிறந்தோம் என்று அழுதே விட்டான் தான் கொண்டுவந்திருக்கும் அழுக்கான பரக்கத்ஸ்டோர் என்று எழுதிருக்கும் மஞ்சள்பையையும் அதுலே கூருடைந்த ஒரு பெண்சிலும், சிறு துகள்களாக உள்ள சில கல்லுக்குச்சிகளும் இருப்பதை பார்த்து.

இவனுடைய தந்தை மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஆர‌ம்ப‌ப்ப‌ள்ளியின் தலைமையாசிரிய‌ர், எல்லாத்துலேயும் க‌ண்டிப்பு நேர‌ம் த‌வ‌றாமை ப‌டிப்பு, குரான் ஓதுத‌த‌ல், இறைதொழ செல்லுத‌ல், இப்ப‌டியாக‌... வீட்டிலேயிருந்து ப‌டித்துக்கொண்டிருக்கும்(ப‌டிப்ப‌து மாதிரி ந‌டிப்ப‌து)வெளியில் விளையாடும் கிளித்த‌ட்டு, க‌ண்டுவிளையாட்டு, சில்லுக்கோடுக‌ளால் போடும் கூக்குர‌லால் ம‌ன‌து எதிலேயுமே ல‌யித்திருக்காது. இப்போதும் அதே ம‌ன‌நிலை நாம் ஏன் இங்கே பிற‌ந்தோமென்று ஏனென்றால் வெளியே விளையாடும் ப‌ச‌ங்க‌ளின் த‌ந்தைக‌ள் வெளிநாட்டில் உத்தியோக‌ம். சிறுவ‌ய‌த்திற்கேயுரிய‌ ப‌டிப்பு/ஓதுத‌ல் த‌விர‌ அனைத்திலும் மன‌துசெல்லும் அதுலே இவ‌ர்க‌ள் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிறார்க‌ள், இதுலே தொலைக்காட்சி/சினிமா பார்ப்ப‌து. இதுமாதிரி தான் அனுப‌விக்காத‌ ஒவ்வொரு நிமிட‌மும் இதேம‌ன‌நிலையில் இவ‌னின் ம‌ன‌தும் அழுத‌து.

பல வருடம் கழித்து வேலைக்காக அப்ளைசெய்து கடைசியில் இவனே வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அந்த வெளிநாட்டுவேலை, கைநிறைய சம்பளம், நினைத்தமாதிரி வாழ்க்கை என்ற மனநிலையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து, தன் வேலை நேரம் போக பொதுப்பணியில் தந்தை ஈடுபத்தி தன்னாலான சேவையை இந்த சமுதாயத்திற்காக செய்தது எல்லாம் இந்த உத்தியோகத்தினால் மட்டுமே சாத்தியம்.

இன்று எத்தனையோ வெளிநாட்டு வாழ்கைப்பற்றி கவிதைகள், சம்பவங்கள் படித்தும் பார்த்தும்கொண்டிருக்கிறோம், இதுலே தங்கை கல்யாணம், பெற்றோரை கவனிப்பது, தனக்கென்று ஒரு வீடு, ஏதாவது பிஸினெஸ் பண்ண கொஞ்சம் பணம் இப்படிபட்ட காரணத்திற்க்காக வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தபடுகிறது, ஆனால் இதன்மூலம் மேற்சொன்னதை முழுமனதோடு நிறைவேற்றிருக்கிறோமா? அப்படியே நிறைவேற்றுவதற்கு தன் இளமை, தளர்ச்சி, நோய்கள்தான் மிச்சமிருக்கிறாது. ஒரு நாள் ரிடையர் என்ற ஒன்று பெறும்போது நல்ல கம்பெனியில் வேலைசெய்தால் கிராஜுவிட்டி என்ற பணம் கிடைக்கும், அதை வைத்து தனக்கு வைத்தியம் செய்யவே போதுமானதாக இருக்கும், தன் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ கடைசிவரை நிரந்தரமாக ஒன்றுமே விட்டுவைக்கவில்லை.

இதுவே கவுரவம் பாராமல் உத்தியோகம் செய்த இவனின் தந்தையால் எல்லாமே நிறைவேறியது, தான் வேலையிலிருந்து ஓய்வுப்பெற்றாலும் தனக்கென்ற ஒரு வருமானம். இன்று தான் இறந்தாலும் அந்த ஓய்வூதிய வருமானத்தில் ஒரு பகுதி தன் மனைவிக்கு வருகிறது, அவர் மனைவிக்கூட யாரிடமும் எந்த வித பண உதவிக்கூட எதிர்ப்பாராமல் வாழ வழிவகை செய்கிறது அந்த உத்தியோகம்.

இன்று திரும்பிப்பார்கிறான் தன் பள்ளிக்கால வாழ்வை, இவர்களுக்கு மகனாகப்பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றிக்கூறுபவனாக..

ஆக்கம்: அப்துல் மாலிக்

13 Responses So Far:

அப்துல்மாலிக் said...

மிக்க நன்றி சகோ. தாஜ்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நம் தாய் தந்தையர்கள் நம்மை ஏன் கண்டித்தார்கள் என்பதை நாம் நல்ல நிலையில் இருக்கும் போது தான் உணரமுடிகிறது.

"வாத்தியார் பிள்ளை மக்கு" என்ற பழய(கிளட்டு) பழமொழியை உடைத்து எரிந்தவர்களில் நீங்களும் ஒருவர்.

அதிரையில் உங்கள் தகப்பனாரை அதிகம் பார்த்தது பள்ளிவாசல்களில் தான் தான், நல்ல தன்மையான மனிதர்.

3 வருடங்கள் முன்பு உங்கள் தகப்பனாருடன் சென்னைக்கு சென்ற பேருந்தில் அடுத்த இருக்கையில் சென்றேன், (அதன் பிறகு சந்திக்க முடியவில்லை) முந்தைய காலத்தில் வாத்தியார் வேலையில் எப்படி சேர்ந்தார்கள், எந்த எந்த ஊர்களில் எல்லாம் வேலை செய்தார்கள், என்ன என்ன கஷ்டங்கள் எல்லாம் பட்டார்கள் என்று என்னிடம் பகிர்ந்துக் கொண்டார்கள். வாகன வசதிகள் இல்லாத ஒரு காலத்தில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தார்கள் என்பதை என்னிடம் அவர்கள் சொல்லும் போது, உண்மையில் ஆச்சரியமாக ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது நாம் வேலைகளில் சந்திக்கும் கஷ்டங்கள் எல்லாம் அதில் ஒரு துளி கூட வராது. அல்லாஹ் அக்பர்.

அவர்களின் ஆஹிரத்து வாழ்வுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அரசு வேலைகளில் உள்ள அதிரைவாசிகளை விரல் விட்டு என்னிவிடலாம் நம்மூரில். நம்மூர் மக்களிடம் இருக்கு அதிக பொருளாதார எதிர்ப்பார்ப்புகள் குறைந்தால் தான் இந்த வெளிநாட்டு ஆசைகள் குறையும், நிச்சயம் வாழ்க்கையில் நிம்மதியடைய முடியும்.

Yasir said...

மனதை நெருடும் கட்டுரை ///அதிரையில் உங்கள் தகப்பனாரை அதிகம் பார்த்தது பள்ளிவாசல்களில் தான் தான், நல்ல தன்மையான மனிதர்///அந்த மதிப்புக்குரிய வாத்தியார் பெயரை வெளியிடலாமே....அப்துல் மாலிக் அனுமதி கொடுத்தால்

Adirai khalid said...

நான் தினமும் பார்த்த மனிதர்களில் எளிமை., பொருமை., அடக்கம் போன்ற அழ‌கிய பண்புகளை கொண்டவர்கள்., நீங்கள் யார் என்று சொல்லாவிடாலும் உங்கள் தந்தையார் அப்துல் சமது வாத்தியார் அவர்களின் உருவம் இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.


பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Shameed said...

சகோதரர் அப்துல் மாலிக்
தங்களின் மடல் (கடுதாசி) உணர்வு பூர்வமாக இருந்தது வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//அதிரையில் உங்கள் தகப்பனாரை அதிகம் பார்த்தது பள்ளிவாசல்களில் தான் தான், நல்ல தன்மையான மனிதர்.//

அல்லாஹ் மிகப்பெரியவன், அதனால்தான் அவர்களுடைய மரணம் புனித மெக்கா ஹரமில் நோன்பு வைத்துக்கொண்டு சுபுஹ் தொழுகைக்குப்பிறகு இயற்கை எய்தினார்கள், 27வது இரவு அன்று 30 லட்சம் மக்கள் ஜனாஸா தொழுகையில் கலந்துக்கொண்டார்கள்

அப்துல்மாலிக் said...

நன்றி சகோ யாஸிர், உன்னைப்போல் ஒருவன், ஷாகுல்ஹமீது.

வெளிநாட்டு மோகம் குறையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் என் தந்தையை உதாரணமாக எழுதினேன். இன்று எத்தனையோ சகோதரர்கள் அரசு வேலையில் இருந்தும் அதை துறந்துவிட்டு வெளிநாடு சென்றுவிடுகிறார்கள்.... இது நிச்சயம் மாறனும் நான் உட்பட...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வெளிநாட்டு மோகம் குறையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் என் தந்தையை உதாரணமாக எழுதினேன்//

அவசியமான ஏக்கம், விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடுகள் வந்தவர்கள் அப்படியே தங்கியும் விட்டார்கள் ! சுமை தாங்கிகளாகவும் மாறியவர்களை கண்முன்னால் கண்டு கொண்டிருக்கிறோம், அரசு வேலைதான் என்றில்லாமல் தன்னம்பிக்கை இருந்தும் வீட்டாரின் வற்புத்தலாலும் அல்லது சிக்கியிருக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் வெளிநாட்டுச் சம்பாத்தியம் நாடியவர்களும் ஏராளம் ! இழந்தது கணக்கிடலங்காது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும். மாலிக், உன் வரிகளில் அரசு உத்தியோகத்தின் மகிமையைக்கண்டேன். உன் வரிகளில் நம் சமுதாயத்தின் பிற்போக்கு சிந்தனையை (வெளிநாடு என்ற மோகத்தைக்குறிப்பிட்டேன்) உணர்ந்தேன். உன் வரிகளில் நமக்கு கிடைக்காத வாய்ப்பை எண்ணி ஏங்குவதைக்கண்டேன். உன் வரிகளில் நம் சமுதாயத்திற்கு ஒரு நல்ல உபதேசத்தைக்கண்டென். வெளிநாட்டு உத்தியோகத்தில் ஆயிரம் பல சம்பாதித்தாலும் இரண்டு, மூன்று மாத விடுமுறையில் ஊர் சென்றால் அங்குள்ள செலவழிவுகள் நம் கண்களை பிதுங்க வைக்கின்றது. ஆனால் ஊரில் இருந்து கொண்டே நம் மக்களில் பலர் வருடங்கள் பல ஓட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அது இதுவரை நமக்கு ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கின்றது. "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற போக்கா? இல்லை (வெளிநாட்டு) அலைபாயாத உள்ளமா? உலகை விட்டு செல்லும் பொழுது எதை எடுத்துச்செல்லப்போகிறோம்? என்ற எதார்த்த நிலையா? உண்மைதான் குதிரை வ‌ண்டி ஓடிய‌ கால‌த்தில் இருந்த‌ ச‌ந்தோச‌த்தை மெர்சிட‌ஸ் பென்ஸ் ஓடும் இக்கால‌த்தில் அனுப‌விக்க‌ முடிய‌வில்லை ஏனோ?

மாலிக், இது போன்ற‌ ந‌ம் அனுப‌வ‌த்துட‌ன் கூடிய‌ ச‌முதாய‌ சிந்த‌னை உள்ள‌ க‌ட்டுரைக‌ள் அனைவ‌ரிட‌மிருந்தும் வ‌ர‌ வேண்டும். அத‌ன் மூல‌ம் ச‌முதாய‌ம் ப‌ய‌ன் பெற‌ வேண்டும் என்று ஆவ‌லுட‌ன் இறைவ‌னை பிரார்த்திக்கின்றேன்.

Unknown said...

அப்துல் மாலிக் உங்கள் வாப்பா எபோழுதும் செக்கடிபள்ளியில் சுபுஹுபின் நடக்கும் தஹ்ளிமுக்கு பின் உங்கள் வாப்பா சொல்லும் சலாம்...என் நினைவில் வருகிறது ....இன்ஷா அல்லா உங்கள் வாப்பாவுக்கு ஆஹிரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்க எல்லோரும் துஆ செய்வோம் ....

அவர்களுடைய வாழ்வு எளிமயனதஹவும் ,பர்கத் நிறைந்த வாழ்வாஹவும் அமைந்ததின் அடையாளமே இந்த மகனின் (அப்துல் மாலிக்) உணர்வுள்ள ஏக்கம் கட்டுரையாயி வெளி வந்துள்ளது .

அப்துல்மாலிக் said...

நன்றி சகோ அபுஇபுறாஹிம், சரியா சொன்னீங்க

நன்றி நெய்னா, இளைய தலைமுறைக்காவது வெளிநாட்டு மோகம் தணியவேண்டும் என்ற ஏக்கம்தான்
நன்றி ஹார்மிஸ், உங்க துஆ ஏற்றுக்கொள்ளபடட்டும் ஆமீன்

Shameed said...

அல்லாஹ் மிகப்பெரியவன், அதனால்தான் அவர்களுடைய மரணம் புனித மெக்கா ஹரமில் நோன்பு வைத்துக்கொண்டு சுபுஹ் தொழுகைக்குப்பிறகு இயற்கை எய்தினார்கள், 27வது இரவு அன்று 30 லட்சம் மக்கள் ஜனாஸா தொழுகையில் கலந்துக்கொண்டார்கள்

நல்லவர்களுக்கு நல்லது நடக்கும் என்பதற்கு நல்ல எடுத்துகாட்டு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு