பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்பான சகோதரர்களே,
இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.
இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?
இதற்காக உருவாக்கப்பட்டது தான்
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்
இதன் நோக்கம்
நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
ஆலோசனை குழு
இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.
ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
அடிப்படை தகுதிகள்
· ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்
· 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்
தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795
email : admin@makkamasjid.com
தகவல்: முதுவை ஹிதாயத்துல்லாஹ்
7 Responses So Far:
well done ...our students need this. THEY WILL ACHIEVE
ஆர்வமுள்ளவர்களை மட்டும் தூண்டுவதோடு நின்று விடாமல், மேலும் விபரம் அறிந்தவர்கள் வழிகாட்ட வேண்டும் இங்கே எப்படி அணுகி இந்த பயிற்சியில் கலந்து கொள்வது என்றும்...
அரிய வாய்ப்பு தேவையுடையவர்களும், சமுதாய அக்கறை கொண்ட இளைஞர்கள் அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ்...
நமது ஊரில் I.A.S. எனும் படிப்பு படித்தவர்களை விட அறிவு ஜீவிகள் பலர் இருந்தும் I.A.S.படிப்பின் வழிமுறை தெரியாமல் கோட்டை விட்டுவிட்டோம் என்பது நிதர்சனம் இனி அப்படி ஒரு நிலை இருக்கா கூடாது.
நல்லதோர் வழிகாட்டுதல் கட்டுரை நம் இளைய தலைமுறையினர்களுக்காக. தகவல் வழங்கி சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
ஆமா, நமது பிரதமர் நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் வந்து பின் கணிதமேதை ராமானுஜன் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் பெருமிதம் கொண்டு மேடையில் "வரும் 2012 கணித ஆண்டாக" அறிவித்து சென்றிருக்கிறாரே? அப்படி என்றால் வரும் 2012ல் காலை முதல் மாலை வரை நாட்டு மக்கள் கணக்குப்போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா? அது மனக்கணக்கா? இல்லை பணக்கணக்கா? இதனால் நாட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? யாராச்சும் வெளக்குங்களேன்........
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ: நெய்னா சொன்னது:
// ஆமா, நமது பிரதமர் நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் வந்து பின் கணிதமேதை ராமானுஜன் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் பெருமிதம் கொண்டு மேடையில் "வரும் 2012 கணித ஆண்டாக" அறிவித்து சென்றிருக்கிறாரே? அப்படி என்றால் வரும் 2012ல் காலை முதல் மாலை வரை நாட்டு மக்கள் கணக்குப்போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா? அது மனக்கணக்கா? இல்லை பணக்கணக்கா? இதனால் நாட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? யாராச்சும் வெளக்குங்களேன்........//
அட நெய்னா ஒன்னும் புரியாத ஆளா இருக்கிறியே.அதா கூடாங் குளம் விசயத்தில்
எதிர்ப்பவர்களை கணக்கு பண்ணனும்டு சொல்லி இருக்கிறாரு அவங்களே சரி பண்ணிட்டா நாட்டு மக்களுக்கு மின்சாரம் தட்டு பாடு இல்லாமல் கிடைக்கும்லே.புரியுதா?
நல்ல முயற்சி...
சிறந்த முறையில் வெற்றியடை நாம் எல்லோரும் துஆ செய்வோம்...
இங்கு திறமைக்கும், ஏழை மாணாக்கர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எல்லோரின் விருப்பம்.
Post a Comment