Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஈழத் தமிழனும்…. e-தமிழனும்...! 14

அதிரைநிருபர் | March 10, 2013 | , , ,

இலங்கையில் நடைபெற்றது போர் குற்றம் என்ற ஒற்றை வாக்கியத்தை கையில் எடுத்துக் கொண்டு அன்மையில் தமிழ் ஊடகங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திகளாகவே உள்ளது.

உலகில் தமிழை வாழ வைக்கிறோம், தமிழினத்தை வாழ வைக்கிறோம் என்று சீசனுக்கு சீசன் e-தமிழின தலைவர்கள் டெல்லிக்கு கடிதம் என்றும் போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல் என்று தொடர்ந்து இலங்கை தூதரக தாக்குதல், இலங்கை சுற்றுலா பயணிகள் தாக்குதல், இலங்கையுடன் தொடர்புடைய அலுவலகங்களை தாக்குவது என்று நீடித்து தீக்குளிப்புடன் தீவிரமடைந்து, தீக்குளித்த அந்த அப்பாவியை தியாகியாக்கி, பிறகு அவனுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி போராட்டம் நிறைவடையும். பின்னர் வருடா வருடம் நினைவு தினம் என்று அன்றாட e-தமிழர்களின் வாழ்வு சுழன்று வருகிறது.

பிரபாகரன் மகனை கொடூரமாக கொலை செய்தது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்பது மனசாட்சியுள்ள அனைவரின் ஒட்டுமொத்த நிலைபாடாகும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தற்போது போர் குற்றம் தொடர்பாக சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகளை வைத்து மிகப்பெரிய அரசியல் நாடகத்தை உலகம் முழுக்க அரங்கேற்றும் அமெரிக்கா இந்தியாவையும், e-தமிழர்களையும் முட்டாளாக்குகிறார்கள் என்பதே எதார்த்த உண்மை.

பொதுவாக சாப்பாட்டில் ரசம் சேர்த்து சாப்பிட்டால் தான் ருசி அதிகம் இருக்கும் என்பது ஊற்றிச் சாப்பிடுபவர்கள் சொல்வார்கள், அதுவும் நிறைய சாப்பிடலாம்.  தமிழ்நாட்டு அரசியல் விருந்திற்கு ஈழத் தமிழர்கள்தான் ரசம். 

ராஜபக்சே என்ற போர்க் குற்றவாளி ஈழ ரத்தம் குடித்தான் என்று சொல்பவர்களால்தான் இந்த e-தமிழர்கள் தங்களின் அரசியல் விருந்தில் ஈழத் தமிழர்களை ரசமாக்கி ருசிக்க ருசிக்க குடிக்கிறார்கள். ஒளி ஊடகங்களிலும், இணையை ஊடகங்களில் ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் இலாபம் அடையவே அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டு உளறல் பேட்டிகள் கொடுத்து, தங்களின் ஈழத் தமிழினத்திற்கான கரிசனத்தை (?) காட்டி வருகிறார்கள். இன்னும் ஒரிரு வாரத்தில் அனைத்தையும் மறந்து விடுவார்கள் இந்த e-தமிழர்கள்.

திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக இன்னும் இதர கட்சிகளின் விளையாட்டு:

திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக, போன்ற அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரளித்தவர்கள் என்பது ஒட்டு மொத்த உலகத்திற்கு தெரியும். இவர்கள் அனைவரும் சேனல் 4 காணொளிகளை வைத்து அரசியல் இலாபம் அடையலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அவதியுறும் ஈழத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பற்றியோ அவர்களின் முன்னேற்றம் பற்றியோ வழியுறுத்த தவறிவிட்டனர் என்பது வெளிப்படையான உண்மை.

மதிமுக மற்றும் நாம் தமிழர் விளையாட்டு:

இலங்கை இனப்படுகொலைக்காக குரல் கொடுத்துவரும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும், மதிமுகவும் முக்கிய பங்களிக்கிறார்கள். ஆனால் இவ்விரு கட்சிகளும் ஆயுத போராட்டக்காரன் (அப்பாவி தமிழர்களையும், முஸ்லீம்களையும், சிங்களர்களையும், ராஜீவ் காந்தியையும் கொன்று குவித்த) இயக்கத்தின் தலைவனை முன்னிருத்தியே தங்களின் குரல்களை போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுவும் இலங்கை அரசு ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதற்கு பலமான காரணம்.

இலங்கை மக்களின் வில்லனாகவே பிரபாகரன் கருத்தப்படுகிறார்கள். இலங்கை மற்றும் காங்கிரஸ் கட்சியின் வில்லன் பிரபாகரனை சீமான் மற்றும் வைகோ வைகையறாக்கள் ஹீரோவாக சித்தரித்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சலித்துப் போகிறது.

எங்கள் தலைவன் சாகவில்லை, உயிருடன் இருக்கிறான் என்று முன்பு சொல்லி வந்தனர் e-தமிழின வகையறாக்கள், சேனல்-4 வெளியிட்ட கானொளியில் பிரபாகரன் மகனின் இறப்புடன் சேர்த்து, பிரபாகரனும் கொல்லப்பட்டுள்ள செய்தி சொல்லப்பட்டுள்ளதை இன்னும் கண்டு கொள்ளாமல் அந்தச் செய்தியை மூலை முடுக்கெல்லாம் போட்டுக் காட்டிவரும் இவர்கள் செய்யும் அரசியலின் உச்சகட்ட நகைச்சுவை என்று சொன்னால் மிகையில்லை.

அமெரிக்காவின் விளையாட்டு:

அமெரிக்கா, ஈழத் தமிழர்களுக்காக ஏதோ கரிசனம் காட்டுவது போல் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும், அப்பாவிகளையும் அமெரிக்கா கொன்றுக் குவித்துள்ளதை நாங்கள் அப்பொவே எதிர்த்து விட்டோம் என்று மொத்த பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இந்த அரசியல் கயவர்களின் செயலை பற்றி என்ன சொல்ல முடியும். மனித உரிமை மீறல்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இந்தியா அரசின் நிலைப்பாடு:

இந்தியா அரசு இலங்கை உள் விவகாரத்தில் தலையிடுவதற்கு தயங்குவதற்கு பல காரணம் இருந்தாலும், முக்கிய காரணம் இந்தியா இலங்கையில் தலையிட்டால், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தங்களின் வில்லனான இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் இலங்கைக்கு உதவ முன்வர ஆயத்தமாக உள்ளனர். மேலும் காஷ்மீர் விசயத்தில் பிற நாடுகள் இந்தியாவில் தலையிடுவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்ற அச்சமும் இந்திய அரசிடம் உள்ளது நியாயம் தானே. மேலும் அமெரிக்கா உளவுத்துறை இந்திய அரசியல் நடவடிக்கைளை நம்ம அரசியல் வாதிகள் அறிந்ததைவிட ஆழமாகவே அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து ஆசிய கண்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தவே அமெரிக்கா கொண்டுவரும் ஐநாவில் தீர்மானம்.

30 வருடங்களுக்கு மேல் நடந்து வரும் இலங்கை பிரச்சினையால், ஈழத் தமிழர்களின் வாழ்வு அன்றும் இன்றும் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இதற்கு 100% பொறுப்பானவர்கள் தமிழ்நாட்டின் e-தமிழர்களே. விடுதலைப் புலிகளை ஊக்குவித்தவர்கள் யார்? இலங்கையில் சமாதான நடவடிக்கை எடுக்க தடுத்தவர்கள் யார்?  உள்ளூர் அரசியலுக்காக ஈழத்தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையின் இறையாண்மைக்கு வேட்டு வைத்தவர்கள் யார்? என்பது தமிழ்நாட்டு மக்கள் மறந்தாலும் இலங்கை அரசும், இலங்கை மக்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு E-தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஈழத் தமிழர்களுக்கு நன்மை பிறக்க வேண்டுமானால், தமிழ்நாட்டு E-தமிழர்கள் தங்களின் 30 வருட அரசியல் விளையாட்டை நிறுத்திக் கொண்டு சும்மா இருந்தாலே போதும். ஈழத் தமிழர்களின் வாழ்வு சுபிட்ச்சம் பெரும். மீண்டும் E-தமிழர்களின் ஈழ அரசியல் விளையாட்டு தொடருமானால்,  பாவம் ஈழத் தமிழர்கள்.

அடிக்குறிப்பு: e-தமிழர் = தமிழ் இனவெறித் தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருக்கும் ஈனப்பட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அவர்கள் பின்னால் சுற்றும் தமிழர்களும்.

அதிரைநிருபர் பதிப்பகம்

14 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

//அமெரிக்கா, ஈழத் தமிழர்களுக்காக ஏதோ கரிசனம் காட்டுவது போல் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும், அப்பாவிகளையும் அமெரிக்கா கொன்றுக் குவித்துள்ளதை நாங்கள் அப்பொவே எதிர்த்து விட்டோம் என்று மொத்த பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இந்த அரசியல் கயவர்களின் செயலை பற்றி என்ன சொல்ல முடியும். மனித உரிமை மீறல்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.//


\\இந்தியா அரசு இலங்கை உள் விவகாரத்தில் தலையிடுவதற்கு தயங்குவதற்கு பல காரணம் இருந்தாலும், முக்கிய காரணம் இந்தியா இலங்கையில் தலையிட்டால், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தங்களின் வில்லனான இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் இலங்கைக்கு உதவ முன்வர ஆயத்தமாக உள்ளனர். மேலும் காஷ்மீர் விசயத்தில் பிற நாடுகள் இந்தியாவில் தலையிடுவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்ற அச்சமும் இந்திய அரசிடம் உள்ளது நியாயம் தானே. மேலும் அமெரிக்கா உளவுத்துறை இந்திய அரசியல் நடவடிக்கைளை நம்ம அரசியல் வாதிகள் அறிந்ததைவிட ஆழமாகவே அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.\\


அமெரிக்காவின் குள்ளநரித் தந்திரத்தை அப்பட்டமாகப் போட்டு உடைத்து விட்டீர்களே! சபாஷ்! நம் தமிழக அரசியல் வியாதிகட்கு இந்தச் சூழ்ச்சிகள் தெரியுமா? தெரிந்தும் தெரியாமல் நடிக்கின்றார்க்ளா?

இப்படிப்பட்ட நேர்மையான, உண்மையான, நடுநிலையான தலையங்கம் அடிக்கடி இத்தளத்தில் வர வேண்டும்; நம்மவர்க்கு உண்மையான அரசியல் அறிவு உண்டு என்பதை வெளிக்காட்ட முடியும். ஜஸாக்கல்ல்லாஹ் கைரன்.

Ebrahim Ansari said...

பெரும்பான்மை தமிழர்கள் இந்த அரசியல் சர்க்கசை வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

கட்டுரையின் ஒவ்வொரு வரியும் உணமைகளை போட்டு உடைக்கிறது.

கவியன்பன் அவர்களின் கருத்தின் நிறைவுப் பகுதி எனது ஆசையும் கூட. வேண்டுமானால் தலையங்கத்துகு ஒரு நாளை ஒதுக்கலாம். அந்த நாளை அனைவரும் எதிர் பார்ப்பார்கள்.

sabeer.abushahruk said...

அரசியல் செய்வதற்கும் பரபரப்பாய்ப் பேசப்படுவதற்கும் அவசியப்படும் ஆயிரத்தெட்டுக் காரணங்களில் ஒன்றாய்த்தான் ஈ தமிழர்கள் ஈழத்தமிழர்களைப் பிரயோகிக்கிறார்களேயொழிய உண்மையான கரிசனத்தால் அல்ல என்பதைப் போட்டுடைக்கிறது தலையங்கம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஈழத் தமிழர் பிரச்சினை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்களின் சென்டிமென்டான பொழுதுபோக்கு. ஒருதனின் செயல்பாடுகூட அந்த பாவப்பட்ட மக்களுக்கு நன்மை தரும்விதமாக இல்லை.

தமிழ் இனவெறித் தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருக்கும் ஈனப்பட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அவர்கள் பின்னால் சுற்றும் தமிழர்களின் அனைத்து அனுகுமுறைகளும் சினிமாத்தனமாக உள்ளது.

Unknown said...

Assalamu Alaikkum

The article depicts public service guys(politicians of nations) are not having any service mindedness but have pure selfishness.

Every act out of good and bad intentions will be rewarded or punished by God Almighty fairly. May God Almighty save oppressed people from evil minds.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

அலாவுதீன்.S. said...

///தாஜுதீன்சொன்னது… ஈழத் தமிழர் பிரச்சினை எல்லாம், தமிழ்நாட்டு மக்களின் சென்டிமென்டான பொழுதுபோக்கு. ஒருத்தனின் செயல்பாடுகூட அந்த பாவப்பட்ட மக்களுக்கு நன்மை தரும்விதமாக இல்லை.

தமிழ் இனவெறித் தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருக்கும் ஈனப்பட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அவர்கள் பின்னால் சுற்றும் தமிழர்களின் அனைத்து அனுகுமுறைகளும் சினிமாத்தனமாக உள்ளது.////


**********************இதுதான் உண்மை************************

அப்துல்மாலிக் said...

இப்போ மாணவரணி என்ற சில பேர் இருக்கும் உண்ணாவிரதப்போராட்டம், இதுவும் e-தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தனக்கே வீடு இல்லியாம்
இன்னோருவன் வீட்டில்
தன் நண்பனுக்கு பங்கு கேட்டால் எப்படி இருக்கும்

அப்படிதான் இருக்கு இந்த e-தமிழர்களின் போராட்டமும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கூரிய அலசல் தலையங்கம்.

தமிழக அரசியல் வாதிகளின் ஈனத்தனமான போக்கு மட்டுமே ஈ தமிழர்களின் இந்நிலைக்கு காரணம்!

இதற்கு அமெரிக்காவோ இந்திய தலைமையோ மூக்கை நுழைக்க தேவையில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அப்துல்மாலிக் சொன்னது… இப்போ மாணவரணி என்ற சில பேர் இருக்கும் உண்ணாவிரதப்போராட்டம், இதுவும் e-தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.//

கலைஞர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் லயோலா மாணவர்களை பார்த்து சாப்பிடுங்க தம்பிகளா என்று கெஞ்சுகிறார்..

வைகோ அதே மாணவர்களை பார்த்து சாப்பிடாதே என்று தூண்டுகிறார்..

அதெல்லாம் சரி.. தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் என்றால் சாப்பாடு மட்டும் தானே சாப்பிடக்கூடாது. டாஸ்மார்க் சரக்கு எல்லாம் குடிக்களாம் தானே?

sabeer.abushahruk said...

//கலைஞர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் லயோலா மாணவர்களை பார்த்து சாப்பிடுங்க தம்பிகளா என்று கெஞ்சுகிறார்..//

கலைஞர் சாகும்வரை
லயோலா காலேஜ் மாணவர்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கனும் என்று அப்டியே ஷாக்காயிட்டேன்.

கலைஞருக்குப் பக்கத்தில ஒரு கமா போட்டு எழுதுங்கப்பா.

நல்லா கெளப்புரீங்கய்யா பீதியை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கலைஞருக்குப் பக்கத்தில ஒரு கமா போட்டு எழுதுங்கப்பா.//

அப்படின்னா அவர் அங்கே ஒரு நடிகரா தெரிகிறாரே பரவாயில்லையா ?

ஏங்காக்கா.... காட்டுக் கத்தல் கத்தும் எவரும் உண்ணா விரதம் நானும் சேர்த்து இருக்கிறேன்னு சொல்ல மாட்டேங்கிறாய்ங்க... ஆதரவுதானாம்...

அவய்ங்களுக்கே தெரியும் இருக்க ஆரம்பிச்சா... பிரணாப் முகர்ஜி மாதிரி யாராவது ஃபோட்டு... தனி ஈழம் அமைச்சாச்சுன்னு சொல்லிட்டாங்கன்னா அப்புடியே... உண்ணா நோன்பை விட்டுவாங்களே !!

Adirai pasanga😎 said...

உலகத்தில் எந்த இனத்திற்கு எதிராகவும் அ நீதம் இழைக்கப்பட்டாலும் பாரபட்சமின்றி கண்டிக்கப்படவேண்டும். தங்கள் எதிர்ப்பை அனைவரும் தெரிவிக்கவேண்டும். ஆனால் அமெரிக்காவின் நிலை அவ்வாறு இல்லை என்பது அது கடந்த காலத்தில் காட்டிய நடவடிக்கையிலிருந்து அனைவரும் அறிவோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

தமிழ் ஈழம் தனியாக வேண்டும்.

இந்தியாவில் பற்றி எரியும் காஷ்மீர் பற்றி எங்களுக்கு தெரியாது.

இலங்கையை இரண்டாக பிரிக்க பாடு படுவோம், தமிழர்களை காப்போம்.

அட முட்டாள்களே! அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்பது மனித இயல்பு. அதே இலங்கையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காக எவனாவது வாயை திறந்து இருக்கிறீகளா? சொந்த நாட்டில் அரசு பயங்கரவாத நடத்திக் கொண்டு இருப்பது தெரியவில்லையா? அல்லது கண்ணை மூடிக் கொள்கிறீர்களா?

பாகிஸ்தான் பெயரால் காஷ்மீர் மக்கள் மீது அரசே பயங்கரவாதம் செய்து வருவதை கண்டிக்க ஒரு அரசியல்வாதியும் குரல் கொடுக்கவில்லை முஸ்லிம்கள் விஷயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒரே நிலையைத் தான் கையாளுகின்றனர்.

சொந்த நாட்டில் மக்கள் மீது அரசு பயங்கரவாதம் செய்கையில் அதையே தடுக்க வக்கில்லாத வக்கிரம் பிடித்த அரசியல்வாதிகள் இலங்கையை பிரிக்க போராடுவதாகக் கூறுவது நடிப்பு என்று புரியவில்லையா? இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை இன்னுமாடா நம்புறீங்க..?

முகநூலில் கண்ட பதிவு

Adirai pasanga😎 said...

ஈழத்தமிழன் - e-தமிழன் - ஹி.. ஹி - தமிழன்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு