Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேசும்படம் :: பூக்களை கொல்லாதீர் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2013 | , , , ,

அதிரைநிருபரின் எழில் எடுத்துவைத்த கருத்தாடல் ஒன்றில், 'எழுதுவது ஒரு கலை, அதனை சிலர் செய்வதோ கொலை' என்றார். எழுதுவதில் மட்டுமா ? எடுக்கும் படங்களையும் கலை என்று சொல்லி 'கொல்லும்' படங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம் ! சற்றே இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பூக்களை எடுத்து கவிஞர்களுக்கும், கட்டுரையாளார்களுக்கும், வாசகர்களுக்குக்கும் அவர்களின்  பார்வையோடு இருக்க விருந்தொன்று பகிர்ந்தளிக்கிறேன் இஃப்தாருக்குப் பின்னரே, இனி உங்கள் சாய்ஸ் !காகிதப் பூக்களை கசக்கிப் போடவைக்கும் கொசுவங்களுடன், யார் வீட்டு முற்றத்திற்கு இப்படி வெளிச்சம் போடுகிறது... !


சொட்டும் துளிர் நீருடன் மொட்டும் கொள்ளும் திட்டு முட்டு !
இப்பொழுதெல்லாம் வண்டுகள் பூக்களை விட்டுவிட்டு தீன் எனும் தேன் தேடிச் சென்று விட்டன போலும் ஈக்கள்தான் பூக்களின் மீது அமர்ந்து நாங்களும் தேன் குடிப்போம்ல என்று பாவனை செய்கிறது !
தலையில் வைக்க தலைவியை தேடும் தலைவன் இருந்தது அந்தக்காலம் இப்போதெல்லாம் அப்படி இல்லைங்க ! மாறாக தலைவியின் காலில்தான் போடுகிறார்கள் !
எங்களை கிள்ளி கூஜா தேடிச் சொருகும் மனிதன் பின்னர் அதனை மட்டும் தூக்காமல் இருந்தால் சரி.பூவடை சுட்டு நடுவில் வைத்தது போன்ற இந்த பூவின் சாடை எப்படி !?பார்வையை சீவியெடுக்கும் பரவசமான பூவின் தோற்றம் !

பூவுக்குத் தெரியுமா மூன்றாம் கண் படம் பிடிப்பது !?
51:58   إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.

 41:10   وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِّلسَّائِلِينَ

41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

இனி உங்களனைவரின் ரசனைக்கு விட்டுவிடுகிறேன் இனி அதனை என்னைப் போன்றோரின் வாசிப்புக்கும் வாரி வழங்குங்கள்.

Sஹமீது

22 Responses So Far:

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

சாகுல் அடுத்த முறை மலேசியா வந்தால் நிறைய உங்களுக்கு பிடித்தமான லொகேசன் இருக்கிறது.//எடுக்கும் படங்களையும் கலை என்று சொல்லி கொல்லும் படங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம் //

சில வலைத்தளங்களில் நானும் பார்க்கிறேன். டிஜிட்டலில் எடுக்கும்போது சரியாக 'லைட்' செட்டிங் செய்யாமல் வலைத்தளத்தில் பதியும்போது 'லைட் எடிட்டிங்" செய்யாமல் பதிகிறார்கள். படம் எடுத்த முயற்சி சமயங்களில் மிகவும் வீணாகிறது.

Unknown said...

இவ்வளவு அழகாக தெளிவாக,ரசனையோடு, பூக்களுக்கு கேமராவால் எந்தவித களங்கமும் வராமல் எப்படி எடுக்க முடிந்தது.?

ரசித்து ருசித்து எடுத்த படங்கள். உண்மையிலேயே இரண்டு கண் போதவில்லை

அந்த மலையில் பனி மூட்டமா அல்லது மேகங்களின் மலை வருடலா எதுவா
இருந்தாலும் எடுத்த கேமராவுக்கு அதனை லாவகமாக ஏந்திய கைகளுக்கும் ஒரு சொட்டு .

சோளக்கதிர் தீஞ்சதை கூட இவ்வளவு துல்லியமாக காட்ட முடியுமா?
இதை எடுத்த கேமரா காஸ்ட்லியா ? அல்லது எடுத்த கைகளின் லாவகமா
எதுவாக இருந்தாலும் அருமை அருமை அருமை.

அபு ஆசிப்.

Unknown said...

இப்படி பூக்களை துல்லியமாக படமெடுத்தால் கொல்ல யாருக்கு மனம் வரும் ?
வளர்த்து அழகு பார்க்கத்தான் மனம் விரும்பும்.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

பேசும்படத் தலைப்பில்
பூக்களின் பேரணி

பூக்களின் படங்களா
புன்னகைக்க பாடங்களா

பூக்களின் இதழ்களும்
ஈக்களின் இறகுகளும்
இணையான அழகு

இந்த வர்ணங்களை
மங்காமல் தர
எங்காளுக்கே சாத்தியம்

ஹமீது
உங்களின் புகைப்படக் கருவி
எங்களின் புதையல்!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Shahul Hameed,

MashaAllah!!!

Nice pictures captured in crystal clear clarity.

I feel like being in cool hill stations just by experiencing the beauty of flowers, green forest, steep hills with cloud, corn BBQ, icy lake with duck style boats.

Thanks a lot for sharing.

Best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

KALAM SHAICK ABDUL KADER said...

தியானம் என்பது மலர் போனறது
கவனமிக்க அன்பே அதன் வாசம்

ரோஜாக்களிடமிருந்துக் கற்போம்
காற்றில் ஆடும்
கடும் மழையிலும்
கவலையின்றி மகிழும்
மாலையில் உதிரப்போகும்
நிலையை எண்ணாமலே..

மன்னன் மயங்கும்
பொன்னான மலர் கைபட்டு
கசக்கினாலும் கைக்குள் வாசம்
காண்போம் அதன் தியாகம்!

மலரைத் தீண்டிச் செல்லும்
மலரின் வாசம் போலவே
புலரும் உன்றன் சுட்டும் விழியை(காமிரா)
பலரும் பாராட்டும் பாசம் என்பேன்!

படைத்தவன் படைத்த
பாமாலை
பாரெங்கும் பூத்திருக்கும்
பூஞ்சோலை

பூக்கள் கிள்ளப்படல்லவே
பூக்களின் வாசம் அள்ளப்படவே
மாக்களாய் இருந்தால் கிள்ளுங்கள்
மக்களாய் இருந்தாய் நுகருங்கள்!
--

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

ஹமீது
//உங்களின் புகைப்படக் கருவி
எங்களின் புதையல்!//


பாராட்டு புகைப்பட கருவிக்கா அல்லது எனக்கா!

sabeer.abushahruk said...

கவனிக்க,

உங்களின் புகைப்படக்கருவி!

ஹெலிகாப்ட்டர் ஷாட் அடிப்பது டோனியா டோனியின் பேட்டா?

Unknown said...

//பாராட்டு புகைப்பட கருவிக்கா அல்லது எனக்கா!//உங்களுக்குத்தான்,

ஏனனில் இது விலையுள்ள கேமராவாக இருந்தால்கூட, தரமுள்ள கேமராவாக இருந்தால் கூட எல்லோரும் இதேபோல் உயிரோட்டமுள்ள நிழர்ப்படைத்தை தருவார்களா என்பது சந்தேகமே.

ஆதலால் சந்தேகமில்லை பாராட்டு உங்களுக்குத்தான்,

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

இங்குள்ளக் கவிதைகளை ஃபைரோஸ் பானு என்ற பெண், சுட்டி எடுத்து தன் கவிதை என்று முகநூலில் இப்பொழுது பதிந்து கொண்டிருக்கின்றார்கள்!
கவிதை என்பது ஒரு கவிஞன் பிரசவித்த குழந்தை அதனைத் தன்னுடையது என்று போட்டு விளம்பரப்படுத்தும் இந்நிலையும் ஒரு தாய்மைக்கு வேண்டுமா?

KALAM SHAICK ABDUL KADER said...

தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொண்டார்கள் அப்பெண்மணி. இஃது என் கவிதை என்று சொன்னதும் “தெரியாமல் செய்து விட்டேன்” என்று சொல்லி அவர்களின் முகநூல் சுவரில் பதியப்பட்டதை எடுத்து விட்டார்கள்.

ZAEISA said...

பூக்காரரே......மன்னிக்கவும்.s ஹமீது அவர்களே...உங்கள் கைவண்ணத்தில் அ.நி.மணங்கமழ வைத்தீர்கள்.வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வண்ணங்களோடு அதன் வடிவங்கள் மிக அழகு!
கேமராவை கையாண்ட கை வண்ணமும் இன்னுமழகு!

Ebrahim Ansari said...

கொடைக்கானல் பள்ளியில் மகனை சேர்த்ததே இப்படி பூவிருந்து வைக்கத்தானா?

பூக்கள் பேசுகின்றன . இன்னும் நிறையப் பேசிக் கொண்டே இருக்குமே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு.

mohamedali jinnah said...

அருமையான மனம் மகிழ வைக்கும் படங்கள்
ஒரு படம் ஓராயிரம் விளக்கம் தரும்
படத்துடன் சில குறிப்புகள்
குர்ஆன் வசனங்கள் உயர்வானவை
தொடரட்டும் உங்கள் தொண்டு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ZAEISA சொன்னது…
பூக்காரரே......//

காக்கா குசும்புதான் ! பூக்காரியைத்தானே கூப்பிடுவாங்க (ஊரில்)!

வீடுகளில் பரபரப்பான நேரத்தில் பூக்காரி கிராஸ் செய்தால் "இவ ஒத்தி நேரங்காலம் தெரியாம வருவா" இப்புடி காதில் விழும்தானே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஹெலிகாப்ட்டர் ஷாட் அடிப்பது டோனியா டோனியின் பேட்டா?//

உங்க தல கிட்டே தைரியம் இருந்தா ஃபீல்டர் கைக்கு நேர அடிக்கச் சொல்லுங்க பார்ப்போம், ஆள் இல்லாத இடத்துல அடிச்சு விட்டுட்டு ஜெயிச்சோம்னு சொன்னா ஏமாத்து வேலையில்லைய ?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.ஆஹா! மலர்களின் அணிவகுப்பு!போட்டோ கவிஞரின் வகுப்பெடுப்பு!இயற்கையின் பேரணி!
படகு மிதக்கும் ஊரணி!
எல்லாம் அழகாய் தெரிய கவிஞரின் கைவண்ணமே காரணி!
---
சோளம் சுட்டு சாப்பிடுவதை
வண்ணகோலமாய் காட்சியில் "சுடும்" திறமை!
காலம் கடந்தும் போற்றும் ஆற்றலுக்குரியதே!
-அல்ஹம்துலிலாஹ்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வண்ணங்களோடு அதன் வடிவங்கள் மிக அழகு!
கேமராவை கையாண்ட கை வண்ணமும் இன்னுமழகு..

Super kaka

Yasir said...

வண்ணங்களோடு அதன் வடிவங்கள் மிக அழகு!
கேமராவை கையாண்ட கை வண்ணமும் இன்னுமழகு..

Super kaka

Anonymous said...

''சுட்ட சோளம் வேணுமா? சுடாத சோளம் வேணுமா? ''என்று என்னிடம் கேட்டால்' 'சுட்ட 'சோளம்' தான் கேப்பேன்!. ஆனால் அவ்வையார் ஏமாந்தது போல் ஏமாற மாட்டேன்!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு