நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேசும் படம் - தொடர்கிறது... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், செப்டம்பர் 11, 2014 | , , ,

அதிரைநிருபர் அவ்வப்போது அசைபோடும் அழகியலோடு அதன் தனித் தன்மையான மூன்றாம் கண்களோடு பேசும் கலைக்கும் மேடை அமைத்துக் கொடுத்து அவைகள் ஒவ்வொன்றுக்கும் கிரீடமே (கிரவ்ன்) வைத்துப் பார்ப்பதில் உவகை கொள்கிறது...!

அந்த வரிசையில் விழியால் மொழி மாற்றம் செய்து தனக்கு பிடித்த இடங்களை இடமாற்றம் செய்யாமல் இதயத்தில் இருப்பிடம் கொடுக்க வைக்கும் அற்புதமான கைவண்ணத்திற்கு சொந்தக் காரரான அதிரைநிருபரின் 'மூண்றாம் கண்' Sஹமீத் அவர்களின் கிளிக்ஸ் இனி தொடர்கிறது..


அனல் பறக்கும் கோடைச் சூடு அரபுநாடுகளை விட்டு அகல மறுக்கும் இந்த சூழலில் குளிருக்கு முன்னரே குளிர் காய ஏற்ற தீப்பிழம்பு எப்படி எழுந்து நிற்க வேண்டுமென்று சொல்லிக் காட்டுகிறது.


மொட்டுக்கள் குத்தி வைத்திருக்கும் அழகு காது குடையச் சொல்லும் ரீங்காரம்.


மலைகளின் இடுக்கில் தவழும் தண்ணீர், அந்த வானாமோ அதனை தனது அழகை சரிபார்த்துக்கொள்ள விரிக்கப்பட கண்ணாடியாக்கிக் கொண்டது ! சாரலும் சத்தமில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறது.


குளிருக்கு ஆவி புடிக்க போர்த்திய வெள்ளிப் போர்வையை கழட்டி வீசிவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது....


ஆகாயம், மலை, இலைகளில்லாத குச்சிகள், மரம், புல் இதெல்லம் கவிஞர்களுக்குத்தான் கருவறையைத் காட்டும்.


அழகிய குடில், ஆயிரம் ஏசி போட்டு அடுக்கு மாடியில் படுத்து உறங்கினாலும் அங்கே வராத தூக்கமும் சுகமும் இங்கே மண்டியிட்டு மயக்கியெடுக்கும்...

'புகை' படங்கள் : Sஹமீது

23 Responses So Far:

Ebrahim Ansari சொன்னது…

அந்த

ஓலைக் குடிசை நடுவிலே ஒரூ படுக்கையைப் போட்டு
ஒரு குத்துவிளக்கை ஏத்தி வச்சு கோலத்தைப் போட்டு
ஆற அமர மச்சானோடு படிக்கணும் ஒரு பாட்டு
ஆனானப்பட்ட ராஜா கூட மயங்கனும் கேட்டு

- என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

sheikdawoodmohamedfarook சொன்னது…

படம்[1]கடல்விரித்தபூமியிலேசுடர்விரித்தகண்டம்எந்தக்கண்டம்?

sheikdawoodmohamedfarook சொன்னது…

[2]மொட்டுகளே!மொட்டுகளே!நீங்கள் யாருக்காக மலரக் காத்திருக்கிறீர்கள்?

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…

வதந்'தீ':

மூட்டிவிட்டால்
பற்றி எரிவது
தீ மட்டுமா
வதந்'தீ' யுமல்லவா?

எரிந்து சாம்பலாவது
விறகு மட்டுமா
உறவு மல்லவா?

குளிர் காயக் காத்திருக்கும்
கூட்டத்திற்கு
தீயும் ஒன்றுதான் -வதந்
தீயும் ஒன்றுதான்!

தகதகவென்று எரிவதையும்
கதகதவென்று சுகமாக்குவது
சுட்டவருக்கு
கை வந்த கலை!

sabeer.abushahruk சொன்னது…

ஃபாரூக் மாமா,

மொட்டுகள் காத்திருப்பது
கதிருக்கோ காதருக்கோ

ஆனால்,
மலர்வதற்குள் சூடிவிடுவதும்
உலர்வதற்குள் நுகர்ந்துவிடுவதும்
பூக்களுக்கும்
பூமியர்க்குமான உறவு!

sabeer.abushahruk சொன்னது…

தார்ச் சாலைகளையே
கண்டுவந்த நமக்கு
இந்தக் கலைஞன் காட்டுவதோ
நீர்ச் சாலை!

ஊர்ச் சாலைகளில்
காரோடும்
நீர்ச் சாலையிலோ
யாரோடும் எவரோடும் படகோடும்

ஹமீது,
படகைப் படமாய்
எடுப்பதைவிட
படகை இடமாய்
இருப்பது சுகமோ சுகம்!


sheikdawoodmohamedfarook சொன்னது…

படம்[5]பசுமைஅரண்போட்டுபசும்புல்பாய்விரித்தபூமியே! யாருக்காகநீபாய் விரிதுக்காத்திருக்கிறாய்?

sabeer.abushahruk சொன்னது…

அந்த
ஒற்றைக் குடிசைக்கு
உயிரிருப்பதைப் போன்றதொரு
உணர்வு வியாபிக்கிறதே
அது ஏன்?

குடிசையைக் கண்டதும்
கண்ணதாசனுக்கு
காதல் வாழ்க்கை நிழலாட
எனக்கோ
கடந்த காலம்!

இப்படி ஒரு குடிசையில்தான்
என்
பிள்ளைப் பிராயம் கழிந்தது

ஒன்றுமில்லாத வீட்டுக்கு
அற்றைப் பொழுதில்
உயிர் இருந்தது
காரணம்
வீடு முழுவதும்
நானும்
என் அன்னையும் மட்டுமே!

போகட்டும்

மவுலி வாக்கம் எஞ்ஜினியர்களுக்கு
இடிந்து விழாமல் கட்டுவதற்கு
மாடலாக
இதைப் பயில
பரிந்துரைக்கிறேன்!

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்
.அதீ"த பசியில் ஆகாரமாய் மட்டையை விழுங்கும் தீயே! தீன் குலத்தில் சாலிஹான ஈமான் தாரியை நீ விழுங்க முடியுமா?அங்கே அல்லாஹ்வின் அருள் மழையில் அவர்கள் நனைவதால்!

crown சொன்னது…

மொட்டு விட்டு காத்திருக்கு இதை பறிபவர் சிலர்தான் ஆனால் இளமொட்டை கசக்கியெரிபவரே இக்காலத்தில் அங்காங்கே தோன்றும் சர்ப்பமாக,அர்ப்பமாக,இளமொட்டுக்களின் கற்பை பறிக்கிறார்கள்!சமூக விழிப்புணர்சி அவசியம் இந்த கேடு கெட்ட புணர்ச்சி நோய்கெதிரே!

crown சொன்னது…

சாலையில் தண்ணிப்போட்டு தள்ளாடும் நம்மவர்களும், இந்த நீர்ச்சாலை நிரம்பி(full) இருந்தாலும் அமைதியாய் தள்ளாடாமல் இருப்பதும் முரன் நகையாய்!

crown சொன்னது…

பனியின் கீழ் "போட்" அதன் வேலையில் மும்முரமாய் இருக்க!பணியின் நூடே "போட்டோ" பணியில் சாகுல் காக்கா சிறக்க!இதமாய் அந்த தடாகம் போல் மனசு குளிர ,இன்ப அதிர்வலைகள் ஆங்காங்கே!!!!

sheikdawoodmohamedfarook சொன்னது…

படம்[6]ஒருரசிகனின்இறுதிமூச்சுஇந்தகுடிசைக்குள்போனால்அவன்உடல் மண்ணுக்குபோனாலும்உயிர்விண்னுக்குபோகாது;கோடிகொடுத்து 'போ' என்று சொன்னாலும் போகாது அந்த மூச்சு. அதுவே ஒரு உண்மை ரசிகனின் காதல்மூச்சு, குடிசையோடு குடிசையாய் அவன் பேச்சும் மூச்சும் கலந்துபோச்சு. இனிகுடிசை வேறு;மூச்சுவேறாய் ஆவதில்லையே; குடிசை'என்றும்'மூச்சு'என்றும் பிரிவதில்லையே.!

crown சொன்னது…

பச்சை மரங்களை கானும் போது மனம் இச்சை கொள்கிறது!இதயம் கச்சை கட்டி அந்த குட்டையில் நீராட துடிக்கிறது!

crown சொன்னது…

குடிசையைப்போட்டு ,காமிராதிறமையில் மாளிகை கட்டியிருக்காரு சாகுல் காக்கா!அதேவேளை நம்ம கவிஞர்காக்கா இளம் பிள்ளைப் பிராயம் கழிந்தது!என சொல்ல கேட்டு குடுசை மனசை ஏதோ செய்கிறது!இந்த (கூ)குடில் இருந்து வந்த அந்த கவிப்பறவை ஆகாயம் தொடும் தூரம் பறப்பது!அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் கருனையும் அந்த பறவையின் முயற்சியும்! நீண்ட அயூளையும்,ஆரோக்கியத்தையும்,அருளையும் அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்!

ZAKIR HUSSAIN சொன்னது…

எல்லா படங்களும் Desktop Theme ஆக திரைவு செய்யவேண்டியவை.

ZAKIR HUSSAIN சொன்னது…

//இப்படி ஒரு குடிசையில்தான்
என்
பிள்ளைப் பிராயம் கழிந்தது//

பாஸ் அது இதுமாதிரி விஸ்தீர்ணமான குடிசை இல்லை பாஸ்..

விடுங்க பாஸ் நாம கஷ்டத்தையும் காமெடியா எடுத்துக்கிற டைப்னாலதான் நல்லா இருக்கிறோம்.

Adirai Ahmad சொன்னது…

//நாம கஷ்டத்தையும் காமெடியா எடுத்துக்கிற டைப்னாலதான் நல்லா இருக்கிறோம்.//

உண்மை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//நாம கஷ்டத்தையும் காமெடியா எடுத்துக்கிற டைப்னாலதான் நல்லா இருக்கிறோம்.//

உண்மை.

sabeer.abushahruk சொன்னது…

//பாஸ் அது இதுமாதிரி விஸ்தீர்ணமான குடிசை இல்லை பாஸ்..//

ஆமாடா.

முட்டை விளக்கு
ஒன்று போதும்
முழு வீட்டையும் ஒளிர்விக்க

பாயைச்
சுருட்டி வைத்தால்
ஹால்
விரித்துப் படித்தால்
பெட்ரூம்

சமைக்கும் சமயம்
கிட்ச்சன்
சாப்பிட நேர்ந்தால்
டைனிங் ஹால்

மழை நீர் சேகரிக்க
வீட்டுக்குள்ளேயே பண்டபாத்திரம்

சுவர்க்கோழி சப்தத்தினூடே
உம்மாவின்
ஒத்தப் புடவைக்குள்
உறங்கும்போது மட்டும்
சொர்க்கம் அக்குடிசை!


Shameed சொன்னது…

அந்த ஓலை குடிசையை படம் பிடிக்கும் போது சபீரும் ஜாகிரும் என் மனத்திரையில் வந்து போனதை என்னால் படம் பிடிக்க முடியவில்லை

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு