நினைக்கும் போதெல்லாம்
பதைக்கிறது நெஞ்சம்
நிலைத்த மஸ்ஜிதை
குலைத்த நாளெண்ணி
இந்திய இறையாண்மை
இயலாமல் வீழ்ந்த நாள்
மதச் சார்பற்ற அரசின்
மானம் போன நாள்
இந்திய உள்ளம் துடிதுடிக்க
இறை யில்லம் இடிக்கப்பட
இரட்டை வேட அரசாங்கத்தை
இனங்கண்டு கொண்ட நாள்
கடப்பாறை ஏந்தி கரசேவகன்கள்
தடுப்பாரே இன்றி தகர்த்தனன்
காக்கிச்சட்டை காவல்துறையோ
காவிச்சட்டையின் ஏவல்துறையானது
மகாத்மாவை சுட்டதற்குப் பிறகு
மஸ்ஜிதை உடைத்துத்தான்
மறுபடியும் தலைகுணிந்தது பாரதம்
உலகே சிரித்தது; உமிழ்ந்தது
மதச்சார்பற்ற போர்வை
கிழித்தெரியப்பட
இந்துத் தீவிரவாதிகள்
இந்தியாவை நிர்வாணப் படுத்தினர்
நாட்டுக்காக தாம் வாழும்
வீட்டையே தியாகம் செய்யும்
வரலாறு சொல்லும் இஸ்லாமியர்
இறையில்லம் இழந்தும் பொறுத்தனர்
எப்படியெல்லாம் இழுத்துப் பிடித்தும்
எல்லா ஓட்டை வழியாகவும்
நழுவிச் சென்றது நாட்டின்
நீதியும் நியாயமும்
இருப்பதை இல்லையென்றும்
இல்லாததை உண்மையென்றும்
திரித்துச் சொல்லும் இந்திய வரலாறு
டிஸம்பர் 6ஐ - இந்துக்களின்
ஜனவரி 26 என புனிதப்படுத்தும்
நடப்பது நன்றாகவே நடக்கிறது
என்னும் கொள்கைவாதிகளுக்கு
நரக நெருப்பைப் பற்றித்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
நீதித்துறையை
நிதித்துரைகளும் சாதிக்கறைகளும்
கட்டுப்படுத்தி வைக்கட்டும்
தேவைக ளற்றவனின்
தீர்ப்புநாள் வரும்வரை!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
32 Responses So Far:
அஸ்ஸலாமுஅலைக்கும்!ஆறா ரணம் இந்த டிசம்பர் ஆறு!இண்ணும் எழாத இந்த இனம் என்று எட்டும் இலக்கை!உன்பது செரிக்கிறது!பத்தும் செய்ய முடிகிறது! ஆனாலும் ஒன்று கூடி இந்த கயவர்களுக்கு பாடம் மட்டும் புகட்டமுடியல!
கடப்பாறை ஏந்தி கரசேவகன்கள்
தடுப்பாரே இன்றி தகர்த்தனன்
காக்கிச்சட்டை காவல்துறையோ
காவிச்சட்டையின் ஏவல்துறையானது
---------------------------------------------------------------------------------
காக்கி சட்டையிலும்,சட்டத்திலும் படிந்த கறை இன்னும் நீக்க அக்கறையற்ற நீதி(?)மன்றம்!வெளுத்ததெல்லாம் பால் என அரசியல் சாக்கடையின் பின் போகும் நம் இனம்!காவி பாவிகளின் பலி ஆடு நாம்! ஆடு,மாடு அறுக்ககூடாது என சொல்லும் காவி ஓனாய்கள் நம்மை அறுத்து கூறுபோடு(ம்)'வதை தடுக்காத உலக சமூகம்!எல்லாம் அவலம்!
மதச்சார்பற்ற போர்வை
கிழித்தெரியப்பட
இந்துத் தீவிரவாதிகள்
இந்தியாவை நிர்வாணப் படுத்தினர்
------------------------------------------------------------------------------
மானங்கெட்டவர்களுக்கு எங்கே பிறர் மானம் ,தன்மானம் எல்லாம் தெரியும்? நிர்வான சாமிகளிடம் (கெ)கேட்டே நிர்வாகம் செய்யும் பிரதம மந்திரிமுதல் அவாளின் அடிவருடிகள் வரை இருக்கும் இன் நாட்டில் எல்லா தீமைகளும் சாத்தியமே! சத்தியமும்,சாத்வீகமும் வெரும் கல்லே!
நாட்டுக்காக தாம் வாழும்
வீட்டையே தியாகம் செய்யும்
வரலாறு சொல்லும் இஸ்லாமியர்
இறையில்லம் இழந்தும் பொறுத்தனர்
-------------------------------------------------------------------------
நம்முடன் அல்லாஹ் இருக்கிறான் பொருப்பது நல்லதுதான்! நெருப்பது என தெரிந்தும் , நம்மை சுடும் அழிக்கும் என தெரிந்தும் பொருப்பது?பொருத்தமா?இதில் அர்தம் உண்டா? இனியேனும் அமைப்புகள் நல்லதொரு திட்டம் வகுத்து ஒன்னும் சேருமா? எதிர்காலத்திலாவது நம் இனம் தேருமா?
எப்படியெல்லாம் இழுத்துப் பிடித்தும்
எல்லா ஓட்டை வழியாகவும்
நழுவிச் சென்றது நாட்டின்
நீதியும் நியாயமும்
-----------------------------------------
ஊழல்,அயோக்கிய பெரிச்சாளிகள் சட்டத்தின் ஓட்டையில் சென்று நழுவிவிடதான் செய்யும் நீதி கொலுவீற்றிருக்க வேண்டிய இடத்தில் இந்த கொழுத்த எலிகளும்,பெரிச்சாளிகளும் நல்ல சுண்டல் தின்று கொ(லு)ழுத்திருக்கு அல்லவா?
இருப்பதை இல்லையென்றும்
இல்லாததை உண்மையென்றும்
திரித்துச் சொல்லும் இந்திய வரலாறு
டிஸம்பர் 6ஐ - இந்துக்களின்
ஜனவரி 26 என புணிதப்படுத்தும்
----------------------------------------------------------
இறைஇல்லம் இடித்து அந்த கொடியவர்களின் கோட்டையில் இந்தகாவி கொடிஅ(ய)து பறக்கிறது அவர்களுக்கு ஜனவரி 26தான் கவிஞரே சரியாதான் சொல்லியுள்ளீர்!
நீதித்துறையை
நிதித்துரைகளும் சாதிக்கறைகளும்
கட்டுப்படுத்தி வைக்கட்டும்
தேவைக ளற்றவனின்
தீர்ப்புநாள் வரும்வரை!
----------------------------------------------------------
நிச்சயமாக, ஆமீன்! அதுவரை இந்த காவிகளின் ஆட்டம் கொஞ்சமாவது அடக்க நாம் அடங்களும்,உணர்விலும் செயலிலும் அடங்காதிருக்கனும்! கண்ணீர் நினைவூட்டல்!
நடப்பது நன்றாகவே நடக்கிறது
என்னும் கொள்கைவாதிகளுக்கு
நரக நெருப்பைப் பற்றித்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
Irai nirakarippalarukku ivvulakam sorkkam.nadappavai yellaam avarkalukku nallavaiyaka theriyum kaanal neerai pola. Vanavarkal avarkalin uyirai vekamaka pidungum pothu therinthu kolvarkal nadanthavai yaavum kettavai. Ippo nadappathu athaivida kodumai yentru therinthuk kolvarkal. Aniyayakkararkalai iraivan vittuvida maattaan.
க்ரவுன்,
வ அலைக்குமுஸ் சலாம் வரஹ்...
நான் எழுதியபோது எனக்கிருந்த மனநிலையை தங்கள் கருத்துகளிலும் காண்கிறேன். அதே வேதனை, வன்மம், கோபம், நம் இனத்தின் கையாலாகாதத் தன்மை எண்ணி வெட்கம்.
இந்தப் பதிவு அந்த ரணத்தில் மருந்திடுவதற்கு அல்ல.
இடித்து ஏற்படுத்திய காயம் ஆறாமல் இருக்க ஒவ்வொரு டிஸம்பர்6 ஆம் தினத்தையும் கீறிவிட்டுக் கொண்டே இருப்போம், புறையோடிப்போனாலும் சரி. தீராது இந்த வலி.
ஒவ்வொரு இந்தியனுக்கும் நினைவுபடுத்த வேண்டிய நல்லதொரு கவிதை படைத்தாய் நட்பே.
டிசம்பர் 6 இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு மனிதாபிமானத்திற்கு மனசாட்ச்சிக்கு நீதிக்கு நேர்மைக்கு நியாயத்திற்கு,ஜனநாயகத்திற்கு அனைத்திற்கும் கருப்புதின நாள்
இந்த கருப்புதினத்தை ஒவ்வொரு இந்தியனும் அனுசரிக்க வேண்டும். பாபர் மஸ்ஜித்தை மீண்டும் எழுப்ப மனசாட்ச்சியுள்ள இந்திய மக்கள் அனைவரும் அரசுடன் வாதிட வேண்டும்.
//கடப்பாறையைஏந்திகரசேவகன்தடுப்பாரின்றிதகர்த்தனன்//இஸ்லாமியநாடானமலேசியதலைநகர் கோலாலம்பூரில் ஜாலன்திலாவிஎன்றமெயின்வீதியில் அமைந்திருந்தராமர்கோவிலுக்குஅரசுபோலிஸ் பாதுகாவல்கொடுத்தது. ஆனால் முஸ்லிம்கள் யாரும்எந்தகோவிலையும்சீண்டவில்லை.எனக்கு தெரிந்த ஒரு ஆளும் கட்சிM.P. இடம்கேட்டபோது அவர்சொன்னபதில் ''நாங்கள் கடப்பாறைஅரசியல்நடத்தும்*அஞ்சடிபயல்கள்'அல்ல!''என்றார்.[*பிளட்பார்ம்பொறுக்கிகள்]
ராமனின்பத்தினிசீதையைகடத்தியஇராவணன் ஆண்டலங்காபுரி அதிபர் ராஜபக்சேக்கு சிவப்பு கம்பளவரவேற்ப்பு?சிரிக்கிறதுஉலகம்!
இல்லாத ராமருக்காக
இருந்த மசூதியை
இடம் தெரியாமல் அழித்த
இறுமாப்பு கொண்டோரின்
இதயம் இருண்டுபோன நாள்
உண்மை முஸ்லிம்களின் இதயத்தில்
முள் தைத்த நாள்.
இம்முள்ளை அகற்ற
ஒன்று கூடுவோம்
ஒருமித்த குரலில்
மீண்டும் அதே இடத்தில்
இறை இல்லம் வரும் வரை.
அபு ஆசிப்.
//இம்முள்ளை அகற்ற
ஒன்று கூடுவோம்//
ஆம் ! ஒரு இயக்கம் தஞ்சை ரயில் நிலையம் முன்பு - மறு இயக்கம்தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு மற்றொன்று சென்னை செயலகம் முன்பு மழுங்கிப் போன கோஷங்களை முழங்கிக் களைவோம்.
மசூதியை இடித்தவன் கூட, மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். ஆனால் இஸ்லாத்தில் இருப்பவன் - என் தெருவில் - என் வீட்டருகில் இருப்பவன் என்னைக் கண்டு மட்டுமல்ல என் தொப்பியைக் கண்டும் கூட முகம் சுழிக்கிறான்.
இப்படியே போனால் மசூதியை இடித்தது போல் மக்களும் இடிக்கப்படுவார்கள். உரசிப் பார்க்கும் வேலைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த உரசலின் ஒரு அடையாளம்தான் உதவி மந்திரி ஒருத்தி அவர் ஒரு சன்யாசியாம் - (சந்நியாசி என்பவர்கள்தானே சந்தேகக் கேசில் விசாரிக்கப் பட வேண்டியவர்கள் ) டில்லியில் பேசிய பேச்சும் தொடர்ந்து அவர் பாராளுமன்றத்தில் கேட்ட மன்னிப்பும்.
தனது நாவையே அடக்க இயலாதவர்கள் தங்கள் இதர புலன்களை எப்படி அடக்குவார்கள்?
பள்ளி இடி பட்ட நிகழ்வை கண்ணீர் சிந்தி நினைவுருவோம்.
இருக்கும் பள்ளிகள் காற்று வாங்குகின்றன. - எங்கள் மக்களோ பாங்கு சொல்லும் நேரத்தில் பாலத்தடிகளில் மூன்று சீட்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். - வட்டிக் கடைகளில் - மதுக்கடைகளில் -வரிசையில் நிற்கிறார்கள். தன்னை திருத்திக் கொள்ளாத சமுதாயம் உருப்பட்டதாக வரலாறு கிடையாது.
(6-12-92 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுதில் கவிஞர் வைரமுத்து இடிந்துபோய் எழுதியது)
கங்கை காவிரி
இணைக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
காடுகள் மலைகள்
திருந்த வேண்டும்
கரசேவகரே வருவீரா?
வறுமைக்கோட்டை
அழிக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மாட்டீர்கள் சேவகரே
மாட்டீர்கள்
நாம்
உடைக்கவே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துண்ணும் பறவைகள்
விதைப்பதில்லை
* * *
விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டுப் பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே!
வறுமைக் கோட்டின்கீழ்
நாற்பதுகோடி மக்கள் என்றாய்
அறிவுக் கோட்டின்கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்?
* * *
மதம் ஒரு பிரமை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுதயுத்தம்?
மதம் என்பதொரு வாழ்க்கைமுறை சரி
வன்முறை என்பது எந்த முறை?
அந்த கட்டடத்தின் மீதெப்போது
கடப்பாரை வீழ்ந்ததோ
அப்போது முதல்
சரயூ நதி
உப்புகரித்துக் கொண்டே
ஓடுகிறது
சீதை சிறைப்பட்டபின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்
* * *
மாண்புமிகு மதவாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா?
அயோத்திராமன்
அவதாரமா? மனிதனா?
அயோத்திராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?
அயோத்திராமன்
மனிதன்தான் எனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா
மசூதி இடித்தீர்?
போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்த வேண்டியது
வேர்வைதான்
நம் வானத்தைக்
காலம் காலமாய்க்
கழுகுகள் மறைத்தன
போகட்டும் இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும் !
வைரமுத்து கவிதையும் வருடந்தோறும் வெளியிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
ஆவணப்படுத்தப்பட வேண்டிய கவிதை ! இன்றுபோல் நாளை வரும் சமுதாயம் தேடும் வரலாற்றுக்கு இவ்வகை உண்மைகள் உரக்கச் சொல்லும், இடிக்கப்பட்டபோதும் அதன் பின்னரும் நாம் மவுனியாக இருக்கவில்லை என்று இன்ஷா அல்லாஹ் !
// சன்யாசிஎன்பவள்தானேசந்தேககேசில்விசாரிக்கப்பட வேண்டியவள்//. மைத்துனர் இனா. ஆனா. சொன்னது. 'தனக்கொருSonஇல்லையேஎன்றுகடவுளிடம் கையேந்தியாசிப்பவளேsonயாசி!. விசாரிக்கவேண்டியதில்லை!. டாக்டர்சோதனைக்குஅனுப்பினால்போதும்!.
//மாண்புமிகுமதவாதிகளே கேட்பதற்க்குசிலகேள்விகளுண்டு! செவிதருவீரா?//வைரமுத்துகவிதை / செவிதரமாட்டோம்!கரமுண்டுசேவைசெய்ய! அடுத்தபள்ளிஎந்தப்பள்ளி?கைகாட்டுங்கள்! இட்டித்துகாட்டுகிறோம்.! [-இப்படிக்குகரசேவகர்கள்].
லெ.மு.செ,
ஒரேஒரு இறை இல்லத்தை அதன் இடத்திலிருந்து அகற்றி கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் கட்டி விட்டார்கள்.
பாபர் மசூதியை அடுத்திருந்தவர்கள் மட்டுமே அறிந்திருந்த நிலையில் அதைத் தாக்கி இவ்வுலகமே அறியுமளவிற்கு பிரசித்திப் பெற வைத்து அந்த மூடர்கள் தோற்றுத்தான் போனார்கள்.
ஆற்றாமையில் ஒருமித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.
//டிசம்பர் 6 இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு மனிதாபிமானத்திற்கு மனசாட்ச்சிக்கு நீதிக்கு நேர்மைக்கு நியாயத்திற்கு,ஜனநாயகத்திற்கு அனைத்திற்கும் கருப்புதின நாள் //
சரியாகச் சொன்னாய். எனவே, இத்தினம் குறித்து அதிகம் அதிகம் எழுதப்பட, பேசப்பட வேண்டும்.
உன் கருத்திற்கு மிக்க நன்றி.
//எனக்கு தெரிந்த ஒரு ஆளும் கட்சிM.P. இடம்கேட்டபோது அவர்சொன்னபதில் ''நாங்கள் கடப்பாறைஅரசியல்நடத்தும்*அஞ்சடிபயல்கள்'அல்ல!''என்றார்.[*பிளட்பார்ம்பொறுக்கிகள்]//
ஃபாரூக் மாமா,
அந்த MP யின் ரோஷத்தில் கடுகளவேனும் எம் தேசத்தின் இஸ்லாமிய அரசியல் வாதிகளுக்கு இருந்திருப்பின் இடிப்பிற்குப்பின்பு நிகழ்ந்த வழக்கு நீதி போன்ற நாடகங்களில் சற்றேனும் ஞாயம் இருந்திருக்கும்.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி
//இல்லாத ராமருக்காக
இருந்த மசூதியை
இடம் தெரியாமல் அழித்த
இறுமாப்பு கொண்டோரின்
இதயம் இருண்டுபோன நாள்//
காதர்,
இரட்டை வேட அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டோம். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறோம்.
உணர்ச்சிபூர்வமான உன் கருத்திற்கு நன்றி.
Assalamu Alaikkum
Dear brother Mr. Abushahruk,
Yes... they did the action that destroyed harmony and they will sure reap the result...
//மதச்சார்பற்ற போர்வை
கிழித்தெரியப்பட
இந்துத் தீவிரவாதிகள்
இந்தியாவை நிர்வாணப் படுத்தினர்//
They(we too) call mother India. Isn't it?.. Its extremely shame!!!
Almighty God is fair in judgment.
Jazakkallah khairan
B. Ahamed Ameen from Dubai.
இப்றாகீம் அன்சாரி காக்கா,
//இப்படியே போனால் மசூதியை இடித்தது போல் மக்களும் இடிக்கப்படுவார்கள். //
அதற்கான அடையாளங்களை ஆங்காங்கே இப்பவே காண முடிகிறது.
வைரமுத்துவின் கவிதையைப் பகிர்ந்து இந்த உணர்வுக்கு ஊக்கமூட்டியதற்காகத் தங்களுக்கு பிரத்யேக நன்றி.
//ஆவணப்படுத்தப்பட வேண்டிய கவிதை //
ஆம். ஆணசக்காரர்களுக்கு எதிராக இந்த உணர்வை ஒவ்வொரு இஸ்லாமியரும் இதயத்துள் ஆவணப் படுத்தியே தீர வேண்டும்.
தங்கள் கருத்திற்கு நன்றி.
//They(we too) call mother India. Isn't it?.. Its extremely shame!!!//
dear brother B. Ahamed Ameen,
Thanks for your comment.
இந்தியா வெட்கித்தலைகுனிந்த நாள் இன்று...எங்களின் ஆற்றமையை வெளிப்படுத்தியதற்க்கு நன்றி காக்கா....இன்னும் சில திரைமறைவு வேலைகள் நடக்கத்தொடங்கி / நடந்து கொண்டு இருக்கின்றன....வாருங்கள் இயக்கவாதிகளே கைகோர்த்து அனைத்தையும் முறியடிப்போம்...காலம் இன்னும் கடந்து போய்விடவில்லை ..ஒற்றுமையேவலிமை
மறக்கவே முடியாத நாள் அது
இந்தியாவின் அபி மானம்
அவலமாக மாறிய நாள்
இன்ஷா அல்லாஹ்
மீண்டும் கட்டுவோம், காட்டுவோம்
யாசிர் / இப்னு அப்துர்ரஸாக்,
உத்வேகமூட்டும் தங்களிருவரின் கருத்துகட்கும் நன்றி.
இக்கவிதையை ஒலி ஒளி வடிவில் எங்கு பதிவிரக்கம் செய்வது...
Post a Comment