
“அடேய், இது பெரிய சப்ஜெக்ட். இன்று இரவு பத்து மணிக்கு வெட்டிகுள படித்துறையில் நம்ம மீட்டிங்கை வைத்துக் கொள்வோம்” என்றார்.
அண்ணன் N .A .S. எங்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் இடம் அந்த வெட்டிக் குளப் படித்துரை தான் சொன்னது போல் அண்ணன் சரியா பத்து மணிக்கெல்லாம் படித்துறைக்கு வந்து விட்டார் .
நடந்த சம்பவகளைத் திரும்பவும் ஒரு முறை கேட்டுக் கொண்ட அவர் சொன்னார், “ஆவி உங்களுடன் பேசியது என்பது உண்மையல்ல. அது நீங்களே உங்களுடன் பேசிக்கொண்டது. உங்களது உள் மனதில் உள்ள விசயங்கள் அங்கே உங்களுக்கே தெரியாமல் பரி மாறிகொள்ளப்பட்டது” என்றார்.
“அப்படின்னா இறந்து போனவர் பற்றிய விபரம் எங்களுக்கு தெரியாதே? அது எப்படி?”
என்று கிடிக்கி பிடி கேள்வி கேட்டதும் அவர் சொன்னார்,
“டெலிப்பதி என்ற ஒன்று உண்டு அது என்னவென்றால் நமக்கு ஆர்வமுள்ள விசயங்கள் மற்றும் சம்பவங்கள் ஊரில் உலகத்தில் எங்கு நடந்தாலும் அது நம்மை அறியாமல் நம் மனதில் டெலிப்பதியாய் அந்த செய்தி பதிந்து விடும் இது போன்று நீங்கள் கேரம் போர்டில் செய்யும் போது அது நம்மை அறியாது நம் ஆழ் மனதில் பதிந்த செய்திகள் அங்கு வந்து விழும் அப்படி வந்து விழும் செய்திகள் நம்மை ஆச்சரியமடைய செய்யும் இந்தச் செய்திகள் நம்மிடம் இருந்து நமக்கே தெரியாமல் நாம் அறியும் போது நாம் அதிர்ச்சியின் உச்சத்திற்குச் செல்வதில் எந்த வித ஆச்சரியமும் கிடையாது” என்று தெள்ளத் தெளிவாக கூறினார்.
“இதை எல்லாம் நம்பி இதன் பின்னால் திரிந்தால் நாம் நம் ஈமானை இழந்து விடுவோம் அதனால் இதயெல்லாம் நம்பாதீர்கள்” என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர் சொன்னார், “ பேய்கள் என்ற ஒன்று இருந்தால் தற்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களைவிட பேய்கள் மெஜாரிடியாக இருக்கும் காரணம் உலகம் தோன்றியதில் இருந்து தற்போதுவரை இறந்தவர்கள்தான் அதிகம் அப்படி இருக்கும்போது பேய்கள் என்ற ஒன்று இருந்து அதற்கு சக்தி என்ற ஒன்று இருந்தால் தற்போதைய உலகை அந்த பேய்கள் தான் ஆட்சி செய்யும் மனிதர்கள் எல்லாம் அதற்கு அடிமையாகவல்லவா இருக்க வேண்டும் அப்படி ஒன்றும் இந்த உலகில் பேய்கள் ஆட்சி நடக்கவிலையே” என்று சொல்லியவர் தொடர்ந்து “ஆவிகள், பேய்கள் இல்லை என்பதற்கு மேலும் இந்த அல் குரான் வசனம் நல்தொரு எடுத்துகாட்டு” என்று சொல்லி கீழ் காணும் அல் குரான் வசனத்தை எடுத்துரைத்தார்
23:100 لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒருதிரையிருக்கிறது.
பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.
உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன் (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது. உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக எந்த ஒரு முஸ்லிம்மும் நம்ப மாட்டான் நம்பவும் கூடாது.
ஆகவே பேய் பிசாசு என்பதெல்லாம்இல்லாத ஒன்றை மனிதன் மனிதனை கோழைகளாக்க மனிதனால் கற்பனையாக தோற்றுவிக்கப்பட்ட வெறும் கட்டுக்கதைகளே தவிர வேறு ஒன்றும் அல்ல.
குறிப்பு :- இந்த கட்டுரையின் நோக்கம் பேய் பிசாசு இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்து சொல்வதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்ல.
Sஹமீது
23 Responses So Far:
சகோ ஷாஹுல்ஹமீது அவர்களே !
முடிவில் குரான் ஹதீஸ் ஆதாரத்தோடு
பேய் என்ற ஒரு மாயைக்கு முற்றுப்புள்ளி வைத்த தங்களின் இந்தப்பதிவு உண்மையில் பேய் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் , பேயாடுபவர்களுக்கும் , அதற்க்கு சக்தி உண்டென்றும், அதன் நடமாட்டம் உள்ளதென்றும் நம்புபவர்களுக்கு அதிலிருந்து விடுபட ஒரு தெளிவான விளக்கம்.
அபு ஆசிப்.
ஹமீது பாய்!
பேய் கதை மிக அருமை. படிப்போர் படிப்பினை பெறட்டும்! பெறட்டும் !
அதிரை மன்சூர்
Masha allah, well explanation & conclusion through authenticated & reliable sources from Al Qur'an. I think, most of the people considering the Saitaan as a ghost or evil etc. But anybody's loneliness at dark & night time is the dangerous & suitable time to play saitaan in our life easily & quickly. Almighty Allah knows everything in crystal clear & better.
பேய் ஆடுவது , அருள் வருவது பற்றி எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தது.
" உயர்ந்த கல்வி கற்றவர்களுக்கு அருள் வருவதில்லை. இது சாதாரண மக்களின் மைன்ட் & பாடி கனென்க்சன் விட்டுப்போகும் இடத்தில் முன்பே பதிந்த சில விசயங்கள் எட்டிப்பார்ப்பதுதான்'
இரண்டு சாகுல்களும் [ N.A.S & சாகுல் ] ஒரு நல்ல விசயத்தை பகிர்ந்து இருக்கிறீர்கள்.
அப்பாடா! ஒரு வழியாக பேய் இல்லை என்று தெரிந்து சந்தோசம்.
இதற்கான மார்க்க ரீதியான சான்றுகளும் பேராசிரியர் என் ஏ எஸ் அவர்களின் வாதமும் மிகவும் அருமை.
சாவன்னா நீ நிருபித்து வருகிறாய்.
ஆஹா, இன்னாருதான் வந்து தீர்ப்பு சொல்லப்போறாக என்று அறியாமல் போன அத்தியாயத்தில் கொஞ்சம் ஓவராவே கலாய்ச்சிட்டேனே?
சார் சூடாய்ட்டா மறுக்கா ஒருதபா குற்றாலம் கொண்டுபோய் அறுவில குளிக்க வச்சி குளிர்விக்க வேண்டியதுதான்.
ஹமீது,
அப்பாடா பேயை ஒரு வழியாக ஓட்டியாச்சு.
சபீறு,
இன்னா நைனா, ஒன் profile போட்டோ கருப்பு பேய் மாறி கீது.
அபு ஆசிப்.
இஸ்லாத்தில் இதற்கு இடமில்லையென்று அறிந்தும் அரைகுறையாக அநியாயமாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிரையிலும் அகிலத்திலும் இல்லை இல்லை என அழகாக சொல்லி விட்டீர்கள்.
அப்படின்னா... ஜனாதிபதியாக்கா இப்பதிவுக்கு வருவார்களா?
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
//அப்படின்னா... ஜனாதிபதியாக்கா இப்பதிவுக்கு வருவார்களா?//
அதில் என்ன சந்தேகம் தைரியமா வருவாக சந்து பொந்தெல்லாம் புகுந்து வருவதால் கொஞ்சம் லேட்டாகும் !!
//பேய்கள் என்று ஒன்று இருந்தால் தற்போதைய உலகை பேய்கள் தான் ஆட்சி செய்யும் // இது N.A.S. அமுத வாக்கு!
அப்படி என்றால் ''இப்போது நாட்டையும் உலகையும் ஆட்சி செய்வது யார்?'' என்று கொஞ்சம் வேவரமா சொன்னா தேவலே!
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
அப்பாடா இப்பதான் பாலை வார்த்தீங்க....பேய்-க்கு ஒரு பாய் (bye)....மூடர்களின் வேஷம் கலைக்கும் கலக்கல் தொடர்....ஆனா ரொம்பதான் பயமுறுத்திடீங்க காக்கா
Yasir சொன்னது…
//அப்பாடா இப்பதான் பாலை வார்த்தீங்க....பேய்-க்கு ஒரு பாய் (bye)....மூடர்களின் வேஷம் கலைக்கும் கலக்கல் தொடர்....ஆனா ரொம்பதான் பயமுறுத்திடீங்க காக்கா//
சுட்ட மீன் சாப்பிடும் போது ரொம்பவே பயந்து இருப்பியளோ
ஆம்மாப்பா சரி தான் இரவு ஒரு மணிக்கு அதிரையில் நடந்து போனால் பயம் வருகிறது அதே சென்னையில் இரவு 1 மணிக்கு எத்தனையோ முறை தன்னந்தனியாக நடந்தால் எந்த பயமும் இல்லையே ..அப்போ அது டெலிபதி தான் ......கிராமங்களில் இருக்கும் பயம் நகரங்ககுக்கு போகும்போது இருப்பதில்லையே என்று 30 ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து நண்பர்களிடம் பகிருந்துள்ளேன் .........எங்கள் அண்ணன் N .A .S அவர்கள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து மூட பழக்கத்தில் சிக்கி திரியாதடா அது ஒரு டெலிபதி என்று ஹதீஸ் விளக்கத்துடன் தந்தது அருமை .....
சகோதரர் சாவன்னா காக்கா அவர்களே பேயை பற்றி பெரிய எதிர்பார்ப்போட இருந்தா இப்படி சப்புன்னு முடுன்ச்சிடீன்களே இது சரி இல்லை என்னென்னமோ சோ காட்டி எங்க கிட்ட இருந்த உண்மையை எல்லாம் கறந்துபிட்டு கடைசியிலே எங்க N .A .S அண்ணனை கூட்டிக்கிட்டு வந்து ஒரு ஹதீஸை சொல்ல வச்சி முடுச்சிட்டீங்க .......இது நம்ப வச்சி கழுத்தை அறுத்தது மாதிரி ...........
சகோதரர் ஜாகிர் சுஜாதா சொன்னதாக சொன்னது
//// உயர்ந்த கல்வி கற்றவர்களுக்கு அருள் வருவதில்லை. இது சாதாரண மக்களின் மைன்ட் & பாடி கனென்க்சன் விட்டுப்போகும் இடத்தில் முன்பே பதிந்த சில விசயங்கள் எட்டிப்பார்ப்பதுதான்'////
அப்போ உயர் கல்வி கற்று பேயிக்கு பயப்புற ஆட்களை படித்த முட்டாள்கள் என்கிறாரோ
எங்கள் பவுதீக ஆசான் கணிபொறி துறையின் தலைவர் அண்ணன் N .A .S அவர்கள் ஆலிம்களும் உலமாக்களும் கற்றறிந்த விசயங்களை உலக அறிவை மட்டும் அல்ல மார்க்க அறிவையும் கற்று அருமையான ஒரு ஹதீஸ் விளக்கத்துடன் டெலிபதியை விளக்கி உள்ளது ...... அப்போமே அல்லாஹ் கரக்டான இடத்தில எங்கள் அண்ணனை பிறக்க வைத்துள்ளான் இடது பக்கம் அப்துல்கலாம் பிறந்த ஊர் வலது பக்கம் ஹைதர் அலி ஆலிம் பிறந்த ஊர் ........விஞ்ஞானமும் மார்க்கமும் எங்கள் அண்ணன் ஒரு சேர அறிந்துள்ளார் ..........
பேயென்று சொன்னல் பேயா
தீயென்று சொன்னால் தீயா
நீயொன்றை நினைத்து நீயே
வாயென்று அழைத்தால் வருமா?
பேய் ஐஸ் ஆகக் கரைந்து விட்டதென்று “சிம்பாலிக்” ஆகச் சொல்லத்தான் இந்தப்படமா?
புரப்யில் படம் மாறி இருப்பதற்கு காரணம் சாகுல் காக்காவின் கேரம்போடில் வந்த பேய் ஐஸ் விற்பவர் அவர் மீண்டும் வந்துவிடாமல் இருக்க அவருக்கு வைத்த ஐஸ் தான் அந்த படம்
'வெட்டிக் கொளத்து கரைக்கு ராவு பத்து மணிக்கி அந்த அஹால நேரத்திலே கடல்கரைத் தெரு மையத் தாங்கரையையும் தாண்டி வந்தது நெசமா N.A.S ஸார்தானா? பேயா?''ன்னு எனக்கு ஒரு சம்சயமா இருக்கு!
ஏன்னா அன்னிக்கித்தான் பிச்சை குட்டியோட மூத்த மொவன் மெய்ம் பக்கிரு அதான் நவூரு பிச்சையோட காக்கா அல்லா பிச்சையோட இளய மருமொவன் மௌத்தா போன மூனா ராவூ!
அப்போ வந்த N.A.S.ஸுக்கு கால் இருக்கான்னு உத்து பாத்து கிட்டியளா ?
S. முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்
//அப்போ வந்த N.A.S.ஸுக்கு கால் இருக்கான்னு உத்து பாத்து கிட்டியளா ? /// யான் மாமா நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு....மறுபடியும் “கிலி”யை கெளப்புறீங்களே.....:)
மும்பை: இறந்து விட்ட தனது தந்தையை சந்திக்க விரும்பினார் மும்பையைச் சேர்ந்த 21 வயது வாலிபர். இதையடுத்து ஒரு பெண் மந்திரவாதியிடம் போனார். அந்தப் பெண்ணோ, அந்த வாலிபர் உடல் முழுவதும் சூடு வைத்து கடந்த 2 மாதமாக சித்திரவதை செய்துள்ளார். அந்த வாலிபர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். பெண் மந்திரவாதி தலைமறைவாகி விட்டார். அந்த நபரின் பெயர் ஜிதேஷ் கோஷோ. வாசி பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான தர்ஷனா ஜாதவ் என்ற பெண் மந்திரவாதி, இறந்தவர்களுடன் சந்திக்க வைப்பார் என்று யாரோ சொல்லியதைக் கேட்டு அவரை அணுகினார். அந்தப் பெண்ணும் வாலிபரை வைத்து விளையாடி விட்டார்.அதாவது அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து உடலெங்கும் சூடு வைத்துள்ளார். கழுத்தில் ஊசியால் குத்தியுள்ளார். இப்படியாக கிட்டத்தட்ட 2 மாதம் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார் அந்த நபர். இத்தனைக் கொடுமைகளையும் தாங்கினால்தான் உன்னால் உனது தந்தையை சந்திக்க முடியும் என்று அந்தப் பெண் கூறியதால் அதைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார் அந்த நபர். இந்த நிலையில் இளைஞரின் குடும்பத்தினருக்கு இது தெரிய வந்து அதிர்ந்தனர். உடனே இதைச் செய்ய வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் கூறியுள்லனர். ஆனால் அவரோ அதைக் கேட்பதாக தெரியவில்லை. இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்த சமூக சேவகர் ராஜேஷ்ஸ்ரீ கோய்தலே மூ்லம் போலீஸை நாடினர். போலீஸார் வந்து அந்த வாலிபரை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர். தற்போது தர்ஷனா தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனரா
மும்பை: இறந்து விட்ட தனது தந்தையை சந்திக்க விரும்பினார் மும்பையைச் சேர்ந்த 21 வயது வாலிபர். இதையடுத்து ஒரு பெண் மந்திரவாதியிடம் போனார். அந்தப் பெண்ணோ, அந்த வாலிபர் உடல் முழுவதும் சூடு வைத்து கடந்த 2 மாதமாக சித்திரவதை செய்துள்ளார். அந்த வாலிபர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். பெண் மந்திரவாதி தலைமறைவாகி விட்டார். அந்த நபரின் பெயர் ஜிதேஷ் கோஷோ. வாசி பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான தர்ஷனா ஜாதவ் என்ற பெண் மந்திரவாதி, இறந்தவர்களுடன் சந்திக்க வைப்பார் என்று யாரோ சொல்லியதைக் கேட்டு அவரை அணுகினார். அந்தப் பெண்ணும் வாலிபரை வைத்து விளையாடி விட்டார்.அதாவது அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து உடலெங்கும் சூடு வைத்துள்ளார். கழுத்தில் ஊசியால் குத்தியுள்ளார். இப்படியாக கிட்டத்தட்ட 2 மாதம் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார் அந்த நபர். இத்தனைக் கொடுமைகளையும் தாங்கினால்தான் உன்னால் உனது தந்தையை சந்திக்க முடியும் என்று அந்தப் பெண் கூறியதால் அதைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார் அந்த நபர். இந்த நிலையில் இளைஞரின் குடும்பத்தினருக்கு இது தெரிய வந்து அதிர்ந்தனர். உடனே இதைச் செய்ய வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் கூறியுள்லனர். ஆனால் அவரோ அதைக் கேட்பதாக தெரியவில்லை. இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்த சமூக சேவகர் ராஜேஷ்ஸ்ரீ கோய்தலே மூ்லம் போலீஸை நாடினர். போலீஸார் வந்து அந்த வாலிபரை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர். தற்போது தர்ஷனா தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனரா
Post a Comment