Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

1984ல் - பேயோடு ஒரு ஹாய் ! - குறுந்தொடர் - 2/4 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2013 | , , , , ,

‘பூ’வின் வாடைதான் மூக்கிற்குத் தெரிந்ததே தவிர ‘பேய்’ கண்ணுக்கு தெரியவில்லையே என்று  பேயைக் காட்ட வந்தவரிடம்,

“என்ன காக்கா, பூ வாடைதான் வருது பேயைக் காணோமே?” என்றதும்…

“ நான் பல தடவை பேயை இங்கே பார்த்திருக்கிறேன் இன்னைக்கி பூ வைத்துக் கொண்டு வந்த பெண் பேய் நம்ம எல்லோரையும் பார்த்து பயந்துகிட்டு கடல் கரை பக்கம் போச்சு” என்றார்.

அது போச்சு என்றதும் நமக்கு தைரியம் வந்துரிச்சு.  திருப்பி அவரிடம்… 

“ நம்மளை பார்த்து பேய் ஏன் காக்கா பயப்படனும்?” என்று வினவ..

“நம்மளோடு யாரோ ஒருவன் நெருப்பு ராசிக்காரன் இருக்கான் அதான் பேய் பயந்து கிட்டு கடல் கரை பக்கம் போச்சு” என்றார்.

நாங்களும் தைரியத்தை தூக்கலாக வரவழைத்து கொண்டு அவர் வரமாட்டார் என்ற நம்பிக்கையில், “சரி வாங்க காக்கா கடல் கரைக்கு போய் அந்த பேயை பார்த்து விடுவோம்” என்று கூப்பிட்டதும்.

“சரி  வாங்கடா போவலாம்”  என்று ஸ்டடியாக நின்றதும் எங்களுக்கெல்லாம்  தூக்கி வாரி போட்டது.

இப்போ  கடல் கரையை நோக்கி நடை பயணம் தொடங்கியது. 

கஸ்டம்ஸ் பில்டிங் அந்த இருட்டில் தலைவிரி கோலமாய் காட்சி அளித்தது அதற்கு காரணம் உடைக்கப்பட்ட ஓடுகளும் களவாடப்பட்ட கதவுகளும் பேய் வீட்டை நினைவு காட்டியது. அங்கே நின்ற பாதாங்காய் மரத்தை காட்டி “இந்த மரத்தில்தான் பூ வாடையோடு போன அந்த பெண்  தூக்கு போட்டு கொண்டு இறந்தது” என்று மேலும் எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் கொண்டே கடற்கரை ரோட்டில் உள்ள முதல் பாலத்தை கடந்தோம் கடலை நெருங்க நெருங்க பயமும் எங்களை நெருங்கிக் கொண்டே  வந்தது.

“ஏன் காக்கா அந்த பெண் தூக்கு போட்டு கொண்டு செத்தது?” என்று நூறு நாள் நிற்காமல் ஓடின அந்தக்கால ரெக்கார்டு சத்தத்தில் கேட்டதுதான் தாமதம், சட்டென்று அவரே தொடர்ந்தார்

“அந்த பெண் ஒரு கல்லுரி மாணவனை காதலித்ததாம் அவன் இந்த பாதாங்காய் மரத்தடியில்  இருந்து தான் படித்துக் கொண்டிருப்பானாம். அவன் படிக்க வரும்போதெல்லாம் இந்த பெண்ணுக்கு  பூ வாங்கிக் கொண்டு வருவானாம். இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியம், அதனால் வீட்டில் எதிர்ப்பு கிளப்பியதால் இந்த பெண் இந்த பாலங்காய் மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டு செத்துவிட்டது”

என்று ஒரு முன் கதை சுருக்கம் சொன்னார்.

கதையைக் கேட்ட நண்பன் “காதலால் வாழ்ந்தது கொஞ்சம் பேராத்தான் இருக்கும்  காதாதலால் செத்தது அதிகம் பேரா இருக்குமோ?” என்று முணுமுணுத்தான்.

இந்த முணுணுப்போடு நாங்கள் இரண்டாவது பாலத்தை நெருங்கும் போது  மணி சரியாக ஒன்று. இரண்டாவது  பாலத்தை தாண்டி கடல் கரையை நெருங்கியதும் கொஞ்சம் தூரத்தில் கடல் தண்ணீருக்கும் கரைக்கும் நடுவே  ஒரு நிழல் போல் ஒரு உருவம் தென்பட்டது பேயை காட்ட வந்தவரோ…

”டேய் அங்கே பாருங்கடா பேய் நிற்கின்றது”  என்றார் 


அங்கே தென்பட்ட உருவத்தை காட்டி அனைவரும் அதையே உற்று நோக்கி கொண்டிருக்கையில் நடந்தது, அந்த ஆச்சர்யம் நின்ற உருவம் லேசாக அசைந்து அசைந்து ஆடியது நின்ற இடத்திலேயே. 

எங்களுக்கோ பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது பக்கத்திருந்த நண்பன் சொன்னான்.

“அந்த பேய் உயரம் கம்மியா இருக்கே இது பேயா அல்லது கடல் மோகினியா” என்ற சந்தேகத்தை கொத்திக் கிளைப்பினான். 

மற்ற நண்பனோ “இது மோகினிதான் இது நம்மளை சும்மா விடாது நல்ல மாட்டிக்கிட்டோம்” என்று மேலும் பயத்தை பத்தற்றதோடு கலந்தான். 

எங்களில் ஒருவன் மட்டும் வாயே திறக்காமல் வாயில் முனுமுனுத்தவாறு இருந்தான் “என்னடா முனுமுனுக்குறே” சீண்டியதுதான் தாமதம்.

“என்னை காப்பாத்திக் கொள்ள யாசின் ஓதி கொண்டிருக்கின்றேன்” அதே முனுமுனுப்போடு.

“அடப்பாவி ஒனக்கு மட்டும் ஒதிக்கிறியோ இது நியாயமா எல்லோருக்கும் சேத்து  ஒதுடா” என்றதும் யாசினை சத்தமிட்ட உரக்க ஓத ஆரம்பித்தான்.

பேயை காட்ட வந்தவர் “பேயை பாத்தாச்சு வாங்கடா  போவலாம்” என்றார்.

இவ்வளவு நேரமும் அமைதியா இருந்த இன்னொருவன் “அது பேயாக தெரியவில்லை வேறு ஏதோ” என்றான்.

பேயை காட்ட வந்தவரோ “அப்போ நீ அது கிட்டேயே  போய் பாரு அது கொடுக்குற அறையிலே ரெத்தம் கக்கி  சவாய்” என்று பயமுறுத்தினார்.

“அடிக்கப் போறது நானா என்று பார்ப்போம்” என்று சொல்லி கடல் கரை ஓரம் நின்று கொண்டிருந்த தோணியில்  போய் ஒரு கம்பை உருவிக் கொண்டு வந்து அந்த அசைந்து  ஆடிக் கொண்டிருந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னால் நானும் நடக்க தொடங்கினேன்…!
தொடரும்
Sஹமீது

40 Responses So Far:

M.B.A.அஹமது said...

யான் காக்கா நீங்க வேற கஸ்டமஸ் ஆபீஸ் பில்டிங் பக்கத்தில இருக்கிற பேயை பத்தி எழுதி அது உங்களை விட்டுட்டு உங்க வாப்பாவை புடிசுகிட்டு நாங்க பட்டு பாடு எங்களுக்குத்தான் தெரியும் இதுல வேற நீங்க தொடரும் வேற போடுறிய

M.B.A.அஹமது said...

அடுத்த பேய் கதை எங்கள் சாட்சா பட்டுக்கோட்டையில் இருந்து இரவு 1.30 மணி எம்.எஸ் மணியம் பஸ்ஸில் வந்து சேரமான் வாடியில் இறங்கி நடந்து வந்து கொண்டிரந்தபோது மறைக்கா பள்ளி அருகில் ரஹ்மானியா மதரசா முனையில்
ஒரு பெண் என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கதறி உள்ளார ... எங்கள் என்ன யாரு பிரச்னை என்று கேட்டபோது காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று அப்படியே துவர்பாக்கு ஹாஜியார் வீட்டை நோக்கி அப்படியே பைப்படி நோக்கி அந்த பெண் நகர்ந்துள்ளார் ஒரு கணத்தில் எங்கள் சாட்சா தைரியமான ஆள் சுதாரித்துகொண்டு வேகாமாக திரும்பி வீட்டூக்கு வந்த சேர்ந்து ஒரு வாரம் சரியான ஜுரத்தில் கிடந்தார்கள்

Yasir said...

பூ வாசனை , கஸ்டம்ஸ் பில்டிங், பாதாம் மரம்,கடற்க்கரை பேய் காக்கா ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா பயமுறுத்தாதீங்க..நாங்கலெல்லாம் தைரியமான ஆளுங்க

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

காக்கா நல்லாத்தான் ஈக்கிது உங்க பேய் படம் ச்சே பதிவு

sabeer.abushahruk said...

நெம்ப தெகிரியம்தான்

பேய் பார்க்க போய் வந்த பாய்களுக்கு ஒரு "ஓ"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதை // பத்தி எழுதி அது உங்களை விட்டுட்டு உங்க வாப்பாவை புடிச்சுகிட்டு நாங்க பட்டு பாடு எங்களுக்குத்தான் தெரியும் இதுல வேற நீங்க தொடரும்'னு வேற போடுறிய//

அதானே ஜனாதிபதியாக்கா!

சரி இல்லாத ஒன்றை சொல்ல எல்லாரும் அந்த வெள்ளை கலரையே சொல்றாங்களே! அந்த கலரை உட்டுட்டு வேறெ கலர்லையும் ஜோடிக்கப்புடாதா?

நீங்க தொடருங்க விஞ்ஞானியாக்கா, உங்கட்டெ ரொம்ப சுவராஸ்யம் நெறெஞ்சு கெடக்கு!

Shameed said...

Yasir சொன்னது…
//பூ வாசனை , கஸ்டம்ஸ் பில்டிங், பாதாம் மரம்,கடற்க்கரை பேய் காக்கா ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா பயமுறுத்தாதீங்க..நாங்கலெல்லாம் தைரியமான ஆளுங்க//



போன பேய் பதிவுக்கு பயந்துக்கிட்டு வராம இருந்த நீங்க இப்போ யாரு கிட்ட தாயத்து வாங்கி கையில் கட்டிக்கொண்டு வர்றிய

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பேய் என்றொரு பயமேற்றும் கற்பனைகள் இளமைக் காலத்தில் இருந்ததை நகைச்சுவையுணர்வோடு சொல்லும் இந்த பதிவில்.. அந்தச் சூழலின் மடமைகளையும் அறியாமையை சுட்டுவதே நோக்கம்... இடம் பெறும் தாயத்து, மந்திரிப்பு இதெல்லாம் என்றுமே நமது நம்பிக்கையில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்... !

Anonymous said...

தம்பி M.B.A. அஹமது!

இன்னும் நான் ஏர்வாடிலே இருக்கேன்!

ஊருக்கு திரும்பலான்டு பாத்தாலும் பஸ்ஸுக்காரன் 'பேய்க்கும் டிக்கெட்டு ஏடு! இல்லாட்டி யாரங்குய்யா''ங்க்றான்.

கைலே ஒரு டிக்கட்டுக்குதான் காஸு இருக்கு. பேய் என்னைதனியா உடமாட்டேங்குது.

''உன்னைபாத்உடனேயேஎனக்கு புடிச்சு போச்சு! அதனாலே உன்னை புடிச்சிட்டேன். உன்னை நம்பி வந்துட்ட என்னை 'கை' உட்டுடாதே!

இது Promise-ன்னு இங்க்லீஸுலே வசனம் பேசியது!

''பேயோட ஒரு மனுஷன் குடும்பம் நடத்தி வாழ முடியுமா?''ன்னுகேட்டேன் !

பேய் சிறுச்சுகிட்டு சொன்னுச்னு ''என்னையா நீ ரெம்ப உலகம்தெரியாத innocent boyயா இருக்கே?

ஒரு சில கல்யாணம் முடிச்சவனல்லாம் எதோட வாழ்ந்துய்யா புள்ளேகுட்டி பெத்துகிட்டு இருக்கான்?'' என்று கேட்டுச்சே ஒரு கேள்வி!

உலக விசயத்தையும் ஊர் விஷயத்தையும் கரைச்சுக் குடிச்ச பேயா இருக்குமோ?

'ஒன்னோட ரெண்டா இருக்கட்டுமே'ன்னு ஏர்வாடியிலேயே பேயும் நானும் மாலை மாத்திகிட்டோம்.. ஊருக்கு வந்தா பஞ்சாயத்துக்காரன் கடுத்த புக்கு தரமாட்டன். இது ஏர்வாடிக் கல்யாணம்.. நாகூர் கல்யாணன்னு ஒன்னுயிருக்கும் போது ஏன் ஏர்வாடி கல்யாணம் இருக்ககூடாது..

எதற்கும் ஒரு emergence exit இருக்கிறது நல்லதுதானே! அவையா சமயத்திற்கு ஓதவுமுளோ!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.
[Camp. kualaLumpur. Genting Highland / Pls. note . Newly wedded couple on Honeymoon.. Don't disturb.

Yasir said...

//போன பேய் பதிவுக்கு பயந்துக்கிட்டு வராம இருந்த நீங்க இப்போ யாரு கிட்ட தாயத்து வாங்கி கையில் கட்டிக்கொண்டு வர்றிய//

GITEX என்ற பேய் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த தால் கருத்திட வரமுடியவில்லை ஆனால் படி(யந்)த்தேன்

எல்லா தாயத்து உள்ளேயும் பஸ் டிக்கெட்டும்.சினிமா டிக்கெட்டும் , லாட்டரி சீட்டும்தான் இருக்கின்றது...சில மடையர்கள் இன்னமும் நம்பிக்கொண்டுதான் ...இருக்கின்றார்கள்

Ebrahim Ansari said...

பேய் கதையைப் படித்துவிட்டு பேந்த பேந்த முழிக்கிறேன். பே(B) பே (B) என்று கத்தவேண்டியதுதான் பாக்கி.
இன்னும் இரண்டு பகுதியை விரைவில் வெளியிடுங்கள். அப்புறம் பேய் ஓடி அதிரையில் சேற்றுக் கடலில் விழுந்து சிக்கிவிடப் போகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஏர்வாடிலே கட்டிகிட்டு கோலாலம்பூரில் ஹனிமூன் கொண்டிருக்கும் இளம்புதுமைத் தம்பதியரை வாழ்த்துகிறோம்.

இனி பயங்காட்டமாட்டோமென வாக்களித்தால் அதிரை திரும்புகையில் லெமன் மாலையுடன்
வரவேற்க காத்திருக்கோம்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

After reading Shameed kaka's article, I have interviewed personally maraikapalli's mu'athin regarding any incidents while he opening the masjid lonely @ 4 O' clock daily in the morning. He said that 'Salaam' coming from the beyond the grill gate where it is located as a wall of kaburstaan. He also added there is no other disturbances from it. I also heard it one day from Abdul latheef aalim when he was taking ihtiqaaf lonely beginning of the holy month of Ramadan. He said these are from maiyaths. Almighty Allah knows better.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

I don't have opportunity to write in tamil right now. So' please don't consider anyone english "Payee" caught me.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பேயி அதுக்கு புடிச்ச ஆளை புடிக்க மொழி தேவையில்லை. ஆனா புடிச்ச பிறகு அது எந்த மொழியிலெ விசாரணை நடத்தும்?

M.B.A.அஹமது said...

சகோதரர் மு சே மு தங்களுக்கு தெரியாதா எப்போது சலாம் சொல்லுகிறதோ அப்போது அது நல்ல பேய் சாரி அது நல்ல மனிதர்களின் ஆவி அவர்கள் எதுவும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்

M.B.A.அஹமது said...

மூத்த காக்காவுக்கு கன்கராசுலாசன் அப்புறம் அது இங்க்லீஸ் பேசையிலையே எனக்கு சந்தேகம் அது நீங்க புத்தக கடையில வேலை பாக்கையில உள்ள மலேசியா பேயாகத்தான் இருக்கும் என்று எப்ப கெண்டின்குக்கு ஹனிமூன் கூட்டிக்குட்டு போனிச்சோ அப்ப கன்பார்ம் ஆயிப்போச்சு அது கண்டிப்பா மலேசியா பேய் தான் ......மருமகன ஜாகிர் மாமாவை ஜாக்கிரதையா பாத்துக்கப்பா அப்புறம் காக்கா கெண்டிங்க்லரிந்து ரிட்டன் வர்றப்போ ஈ போ ரோடு வழியா வராதிய அங்க ரெண்டு இளம் வயது அதிரை பேய் இருக்குது....... கெண்டிங்க்லருந்து கே எல் திரும்ப வர்ற ரோட்டில நம்ம அதிரம்பட்டினம் பையன் காத்தி வீட்டு மொய்தீன் கடை வைச்சுருக்கான் அவன் கடையில ரெண்டு எலுமிச்சைபழம் வாங்கி கிடுங்க காக்கா சாரி அவன் கடை பக்கம் போய் ராதிய அவன் இளம் மனைவி சமிபத்தில் அதிரையில் தன சிறு பிள்ளைக்களை விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டது எதோ செய்தான் கோலாருண்டுதான் சொல்லிகிட்டாங்க எங்கிட்டு போனாலும் பிரைசினையா இருக்கு ஜாக்கிரதையா வாங்க ஆமா பஸ் காரனே பேய்க்கு டிக்கெட் கேட்டானே பிளைட்ல பேய்க்கு என்ன பண்ணினின்னிய பாஸ்போர்ட் இருந்துச்சா விளகம்மா கொஞ்சம் சொல்லுங்க ரொம்ப சுவாரசியமா தான் இருக்குது

sabeer.abushahruk said...

//ஒரு சில கல்யாணம் முடிச்சவனல்லாம் எதோட வாழ்ந்துய்யா புள்ளேகுட்டி பெத்துகிட்டு இருக்கான்?'' என்று கேட்டுச்சே ஒரு கேள்வி!//

இதப் படிச்சிட்டு பேய்ச் சிரிப்புச் சிரிச்சேன்.

கல்யாணம் பண்ண புதுசுல மோகினியாய் மயக்கும் மனைவி காலப்போக்கில் காட்டேரியாக மாறிப்போவதும் நாளெல்லாம் ஆவுசம் மாதிரி புருஷனக் கத்துறதும் தாம்பத்யத்தில் சர்வ சாதாரணம் என்பதை உணர்ந்த பேயின் "வெள்ளை அறிக்கைதான்" உங்களிடம் பேய் சொன்னது.


Anonymous said...

என் பின்னூட்டத்தில் // எதற்கும் ஒரு emergence exit இருப்பது நல்லதுதானே/ என்ற வரியில் emergence என்பதை emergency என்று திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எம்.எஸ்.எம்.(n): இங்கிளீஸ் பேய் ! ஹா ஹா ஹா !

M.B.A.அஹமது said...

அப்பறம் காக்கா அங்கிருந்து உடனே பிரைச்னைன்ன எர்வாடிகெல்லாம் வரமுடியாது. கே எல்லிருந்து மலாக்கா ரெண்டு மணி நேரம் டிரைவ் தான் மலக்காவிலிருந்து ஒரு 10 நிமிச ட்ரைவ்ல பூல பஜார் தர்காவுக்கு போய்டலாம் மருமகன் ஜாகிர்ட சொல்லி ஜோஹர்பருக்கு கம்பெனி வேலையா போகையில பூல பஜார் பெர்ரி (ferry ) ஸ்டேஷன் ல ட்ராப் பண்ண சொல்லிருங்க யாண்டா அவங்க தர்கா கெல்லாம் வர மாட்டாங்க திரும்ப வரையில பிக்க அப் பண்ணிக்கிட சொல்லிடுங்க அங்க ஒரு 15 நிமிஷம் பெர்ரி ல போனீங்கன்ன ஒரு தர்கா இருக்கு சாப்பட்டைஎல்லாம் பத்தி கவலை படாதியா தேங்காய் சோறு தாளிச்சா கரி அல்லது பிரியாணி கட்டா வருஷம் 365 நாளும் சாப்பாடு கொடுப்பாங்க சாப்புட்டகலாம் சாப்ட்டு ரம்மியமான கடல்கரை அப்படி ஓய்வெடுங்க கக்கா கடல்கரைக்கு போகையில இங்கிலிஸ் பேயை தர்காவிலையே போட்டுட்டு போயிருக யாண்ட அந்த சவுக்கு தோப்பு ஆள் அரவம் இருக்காது அப்புறம் எதாவது பண்ணிடும் இவ்நிங் பெர்ரியில திரும்பி வந்திடுங்க

Unknown said...

பல வருடங்களுக்கு முன்பு இரவு 10:00 மணி இருக்கும் தக்வா பள்ளி மையவாடி அருகில் நானும் என் நண்பண் ஒருவரும் நடந்து வந்து கொண்டு இருந்தோம் அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லை.

அப்பொது உற்சாகமாக பேசிக் கொண்டு வந்தோம்.. ஒரு காமெடிக்கு சிரித்துக் கொண்டே என் நண்பன் முதுகில் உற்சாகத்தில் ஓங்கி அடித்தேன். எனினும் என் கைக்கு தெரிந்தது நன்றாக விழுந்த அடி என்று

அப்போது நான் அவனிடம், "என்னடா என் கை வலிக்கிற அளவுக்கு அடித்திருக்கேன் எந்த சலனமுமின்றி இருக்கிறாயே?" என்றேன்.

அதற்கு அவன் எப்போது என்னை அடித்தாய? என்றான் உண்மையில் அங்கு நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.. அப்போது அவன் " ஒருவேளை பேய் எதையும் அடித்தாயோ?" என்றானே பார்கலாம்.

அவன் என்னை அன்று இரவு முழுக்க உறங்க விடாமல் பாடாய் படுத்த வேண்டும் என்றே இவ்வறு பொய் சொல்லியிருக்கிறான் என்று அடுத்தநாள்தான் தெரிந்தது.

பேய் என்றால் பயம்... அப்போது.. இப்போது...?!

Anonymous said...

பேய் இருப்பதை நம்பும் பழக்கம் மேலை நாட்டிலும் உண்டு-சவக்குழியிலிருந்து வௌவால் உருவில்இரவில் பறந்து வந்து மனிதர்களின் தொண்டையே கடித்து ரத்தம் குடிக்கும் பேய்களைபற்றி Bram Stoker என்பவர் எழுதிய Dracula என்ற புத்தககம் ஐரோப்பிய இலக்கிய வரிசையில் இடம் பெற்று இருக்கிறது..

மலேசியர்கள், இந்தோனேசியர்கள், தாய்லாந்து கார்கள் பேய் இருப்பதை நம்புகிறார்கள்.

மலேசியாவில் ஒரு பேய் கதை புத்தகம் மட்டும் பதினைந்து இலட்சம் பிரதிகள் விற்று ஒரு வெளியீட்டாளர் இரண்டு Mercedes Benz Car வாங்கியதோடு, ஒரு வீடும் வாங்கினார்.

அந்த புத்தகத்தில் நான் மட்டும் ஐம்பது ஆயிரம் பிரதிகள் விற்று இருக்கிறேன். 1980களில் Exorcist என்ற ஆங்கில பேய் கதை புத்தகமும் திரைப்படமும் Box Office Hit ஆகியது. இது எல்லாம் மக்களின் மனவிருப்பத்தை பொருத்தது.

பேய் உண்டா இல்லையா? உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ யாரும் நிருபித்தார்களா? என்பது தெரியவில்லை.

பேய் கதை என்றால் அதை படிக்க ஆசையும் வருகிறது பயமும் வருகிறது!..

சிலருக்கு பேய் மனைவியாக அமைகிறது. சிலருக்கு மனைவி பேயாக அமைகிறாள்.

பதினெட்டு வயசுலு பஞ்சவர்ண கிளியா தெரியுற மனைவி பத்து வருசத்துக்கு ஒரு கலரு கொறஞ்சு கொறஞ்சு அருவத்து எட்டு வயசுலே ஒரு பக்கம் பாத்தா காக்கையா தெரியுறா! மறுபக்கம் பாத்தா பேயா தெரியுறா!

S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

பாய்மரப் படகின் திரைதான் அசைந்திருக்கும்; அதனையே பேய் என்று பொய் சொல்லிப் பயம் காட்டி விட்டார் என்பது என் கணிப்பு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Recently I heard from my family circle that one auto man was driving his auto in between Usvathoor Rasool ladies Arabic matharasha and Muhaydeen Jumma Masjid @ 12 midnight. One woman with thuppatti was standing on the way carrying an infant. She stopped the above auto and asking auto man to drop her somewhere on the way. Auto man also took her with infant in the auto. On the way before Muhaydeen jumma masjid from inside the auto the woman make big sound and suddenly fall into the Sekkadi kulam. Ooh alas! The auto man got shocked & panicked and drove his auto towards his house fast. Then the next day he got heavy fever because of this incident happened to him in the midnight. So, my question here is Has that ghost (jin) recently delivered a baby??? Was that normal delivery or operation?

Shameed said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
//my question here is Has that ghost (jin) recently delivered a baby??? Was that normal delivery or operation?//

ஆட்டோ குளுக்குற குளுக்குலே அந்த ஜின்னுக்கு நார்மல் டெலிவெரிதான் ஆகி இருக்கணும்

ஆட்டோ டிரைவர்ருக்கு ஆட்டோ கட்டணம் ஜின்னு கொடுத்துசான்னு சொல்லவே இல்லையோ !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

That Jin has given sudden shock (Thobukkadeer) to auto driver instead auto fare. Shameed kaka why are you asking it deeply? Do you want to bring sugar 3 kgs.(Pullappayru seeni) to Jin house?

M.B.A.அஹமது said...

மு சேனா முணா ஆங்கிலத்தில் எழுத எழுத எனக்கும் ஒரு ஆங்கில பேய் கதை நினைவுக்கு வருது நீண்ட வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு உடல்நிலை சரி இல்லை என்று சொல்லி மருத்துவரை அழைத்து வந்துள்ளார்கள் மருத்துவரிடம் அந்த பெண் ஆங்கிலத்தில் உரை ஆடி இருக்கிறது . மருத்துவர் வீட்டில் உள்ளவரிடம் இந்த பெண் என்ன படித்திருக்கிறது என்று வினவி உள்ளார் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதிங்கயதில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லி உள்ளனர் பேய் பேசிய சரளமான ஆங்கிலத்தில் டாக்டருக்கு வியர்த்து கொட்டி டாக்டர் உடனே எஸ்கேப் .. என்ன எது என்று தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் எதிர் வீட்டில் குடியிருந்த கனரா வங்கியில் அகவுண்டாக பணிபுரிந்த ஜிந்தா மதாரை அழைத்து வந்துள்ளனர் அந்த பெண் பேசிய ஆங்கிலத்தில் அகவுண்டண்டே அசந்து போய் விட்டாராம் .

ZAKIR HUSSAIN said...

To Brother M.B.A அஹமது.....

எப்படி மலேசியாவை இப்படி படம் பிடித்து
எழுதியிருக்கிறீர்கள். ?...பூலாவ் பெசார் ஓசி சாப்பாடு எல்லாம் இப்படி விவரமாக எழுதியிருக்கிறீர்கள். ??

சமீபத்தில் மலேசியாவில் உள்ள சில சிறப்பம்சம்ங்களை எழுதி பிரசுரத்திற்கு " அவ்வளவு ஒன்னும் விசேசம் இல்லே" என்று நினைத்ததால் டெலிட் செய்து விட்டேன்.

ZAKIR HUSSAIN said...

சாகுல்...ஏன் பேய் என்றாலே சில விசயங்கள் ஒரே மாதிரி இருக்கிறது??

1. பேய்களுக்கு வெள்ளைப்புடவை [ சரியாக கட்டாதது ] எப்போது யூனிஃபார்மாக அறிவிக்கப்பட்டது?

2. பேய்கள் ஏன் மல்லிகைப்பூவை விரும்பி அணிகிறது? [ யார்யா இதுகளுக்கு பூ விக்கிறது? ]

3. ஏன் பேயை பார்த்தவர்களுக்கு ஜுரம் மட்டும் வருகிறது?...ஏன் அப்பன்டிக்ஸ் , வயத்துப்போக்கு, சூல வாயு, மூட்டுவலி போன்ற உபாதைகள் தாக்குவதில்லை?

4. பெண் பேய் மட்டும் ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இரவில் அழைகிறது?....ஆண் பேய் எல்லாம் எங்கே தொலைந்தது?...இரவில் அலையும் பெண்பேய்களுக்கு "ஊராவூட்டு' ஆண் பேய்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டால் யார் பொறுப்பு?

5. உயிரோடு இருக்கும்போது அடுத்த தெருவுக்கு போகவே ஆட்டோ கேட்கும் பெண்கள் எப்படி பேய் ஆனதும் இவ்வளவு சீக்கிரமாக ஊரையே இப்படி வேகமாக கடக்கிறார்கள்.


6. அன்று ஒரு நாள் நடுச்சாலையில் ஒரு பெண் லிஃப்ட் கேட்டால் ...இறக்கி விட்ட இடத்தில் திரும்ப போய் பார்த்தால் அந்த பெண் இல்லை...அது சுடு காடு என்று சொல்லும் கதைகள் பிளாக் அன்ட் ஒயிட் படக்காலத்திலிருந்து இன்று Digital Technology Time
வரை ஏன் சுத்தி சுத்தி நம்மை வதைக்கிறது?

7. வெஜிட்டேரியன் பேய்கள் இறைச்சி / ரத்தம் விரும்பி சாப்பிடுமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஹா ஹா ஹா !

அசத்தல் காக்காவின் கேள்விகளுக்கு அவசியம் பதில் சொல்லியே ஆகவேண்டும்....

பேய்கள் அவர்கள் பிளாக்கில் பதிலைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையேல்... பத்திரிக்கையாளார்களை கூட்டி பேட்டி கூட கொடுக்கலாம்...

'PAYEE' நானல்ல என்று யாரும் விலகிவிட முடியாது !

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//சாகுல்...ஏன் பேய் என்றாலே சில விசயங்கள் ஒரே மாதிரி இருக்கிறது??

1. பேய்களுக்கு வெள்ளைப்புடவை [ சரியாக கட்டாதது ] எப்போது யூனிஃபார்மாக அறிவிக்கப்பட்டது?

2. பேய்கள் ஏன் மல்லிகைப்பூவை விரும்பி அணிகிறது? [ யார்யா இதுகளுக்கு பூ விக்கிறது? ]

3. ஏன் பேயை பார்த்தவர்களுக்கு ஜுரம் மட்டும் வருகிறது?...ஏன் அப்பன்டிக்ஸ் , வயத்துப்போக்கு, சூல வாயு, மூட்டுவலி போன்ற உபாதைகள் தாக்குவதில்லை?

4. பெண் பேய் மட்டும் ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இரவில் அழைகிறது?....ஆண் பேய் எல்லாம் எங்கே தொலைந்தது?...இரவில் அலையும் பெண்பேய்களுக்கு "ஊராவூட்டு' ஆண் பேய்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டால் யார் பொறுப்பு?

5. உயிரோடு இருக்கும்போது அடுத்த தெருவுக்கு போகவே ஆட்டோ கேட்கும் பெண்கள் எப்படி பேய் ஆனதும் இவ்வளவு சீக்கிரமாக ஊரையே இப்படி வேகமாக கடக்கிறார்கள்.


6. அன்று ஒரு நாள் நடுச்சாலையில் ஒரு பெண் லிஃப்ட் கேட்டால் ...இறக்கி விட்ட இடத்தில் திரும்ப போய் பார்த்தால் அந்த பெண் இல்லை...அது சுடு காடு என்று சொல்லும் கதைகள் பிளாக் அன்ட் ஒயிட் படக்காலத்திலிருந்து இன்று Digital Technology Time
வரை ஏன் சுத்தி சுத்தி நம்மை வதைக்கிறது?

7. வெஜிட்டேரியன் பேய்கள் இறைச்சி / ரத்தம் விரும்பி சாப்பிடுமா? //

இப்படி IAS கேள்வியா கேட்டதாலே என்னாலே பதில் சொல்ல முடியலே இந்த கேள்வி அனைத்தையும் பேய்களுக்கு அப்படியோ ரிடைரேக்ட் செய்து விட்டேன்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். அசத்தல்! பேய் ஆலமரத்தில் மட்டும் தங்குவதேன்?பேயுடன் யாராவது பேயிங் கெஸ்டா தங்கி இருந்திருக்காகளா?

M.B.A.அஹமது said...

சஹோதரர் ஜாகிர் அவர்களே என்ன இப்படி சொல்லிட்டீங்க ஓசி சாப்பாட்டையும் விருந்து சாப்பாட்டையும் தெரியல்லன்னா அப்பறம் அதிரம்பட்டினமே கிடையாது . 60. 70, 80 களில் விருந்துக்கு லாலா ஊறுகாயும் நண்பர்கள் கூட்டமும் இரண்டு சகன் ஏறக்குறதும் ரொம்ப சர்வ சாதாரணம் இப்ப அதெல்லாம் ரொம்ப மாறிடுச்சு

M.B.A.அஹமது said...

///சமீபத்தில் மலேசியாவில் உள்ள சில சிறப்பம்சம்ங்களை எழுதி பிரசுரத்திற்கு " அவ்வளவு ஒன்னும் விசேசம் இல்லே" என்று நினைத்ததால் டெலிட் செய்து விட்டேன்////


சகோதரர் ஜாகிர் அவர்களே மலேசியாவோட சிறப்பம்சத்த எழுத ஒன்னும் இல்லை என்று சொல்லி டெலிட் பண்ணிட்டீங்களா ஜோகர் பரிளுருந்து கோலா பெர்லிஸ் வரை எழுத எனக்கு நேரம் போதவில்லை அது பற்றி எழுத ஒரு நாள் பத்தாது மலேசிய மலரும் நினைவுகளை சிறப்பம்சங்களை விரைவில் தருகிறேன்

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
Anonymous said...

//ஏன்பேய் என்றாலே சில விஷயங்கள் ஒரே மாதிரியா இருக்கு?//

இந்தப் பேய்கள் எல்லாம் அந்தக் காலப் பேய்களைப் போல எலிமென்டரி இஸுகூலுலே சிலேட்டு குச்சியிலே எழுதி நாக்குலே எச்சியை தொட்டு அலுச்சு அலுச்சு எழுதுன அந்தக் காலத்து தோவந்து பாவாடை தாவணி போட்டு படிச்ச புள்ளைங்க அல்ல; இந்த பேய்கள் எல்லாம் லிவைஸ் ஜீன்ஸும் T சர்ட்டும் போட்டு கட்டுக் கட்டா புக்கு தூக்கி காலேஜுலே படிச்ச பேய்ங்கள். இப்புடித்தான் இருக்கும்!.

புடிச்சுதுனா கட்டிகிங்க!. இல்லீனா மந்திரிச்சு ஓதி ஊதி வெரட்டிடுங்க!

வேறே கிராக்கி இருக்கு!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Ebrahim Ansari said...

எதற்கும் மலேசிய நாட்டுப் பிரதிநிதி எழுப்பியுள்ள கேள்விகளை சட்டமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பி அவர்கள் அனுமதியுடன் தமிழ்ப் பேயோ, ஆங்கிலப் பேயோ , அரபுப் பேயோ கண்ணில் படும்போது கேள்வித்தாளாக அவைகளின் கைகளில் கொடுத்து பதில் அளிக்கச் சொல்லுங்கள்.

அனைத்துக் கேள்விக்கும் பதில் அளிக்கும் பேய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடி இருப்புகளில் பிளாக்கிற்கு ஒரு வீடு பரிசாக அளிக்கப் படுமென்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்யப்படும்.

வீட்டுக்கு ஒரு வௌவால் இலவச இனிப்பாகவும் வழங்கப் படும்.

Ebrahim Ansari said...

இலவச இணைப்பு - சாப்பிடும்போது இனிப்பாக இருந்தால் இனிப்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும். திருத்தம் அரசிதழில் வெளியிடப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு