Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 04, 2016 | , , ,


பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

அபுஇபுறாஹிம்

15 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

// ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’//

படிக்கும்போதே இந்த இடத்தில் “சிரித்து” விட்டேன்


// தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ? //

இது தான் காரணமாக இருக்குமோ ? கட்டுப்பாடற்ற உணவு முறை, அளவுக்கு அதிகமான எடை, முறையான உடற்பயிற்சி இல்லாமை........

பட்டுக்கோட்டை டாக்டர் ஷக்கில் மருத்துவனையில் காலை நேரத்தில் போய் பார்திங்கன்ன...........ஒரே மூட்டு வலி கேஸாத்தான் இருக்கும் : ) அவரும் மாத்திரை, மருந்துகளை ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு எழுதிக்கொடுத்து சாப்பிடச் சொல்வார்...........ஆனா நம்மாளுக வீட்டுக்கு பத்திரமா அதை வாங்கிவந்து அப்படியே “பத்திரமா” வைத்துருப்பார்கள்.

Yasir said...
This comment has been removed by the author.
மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"யார் சொன்னது பதவிகள் இல்லாத நாற்காலிகள் இது என்று?"

என்றைக்கு இந்த நாற்காலிகளில் அமர்ந்து பள்ளிகளில் தொழ ஆரம்பித்து விட்டோமோ அன்றைக்கே கீழ்கண்ட பதவிகளை கமுக்கமாக யாருமறியா வண்ணம் பெற்றுக்கொள்கின்றோம். அவையாவன:

1. ஒடம்பு சரியில்லாதஓ / முடியாத‌ஓ / ஏலாத‌ஓ / சொக‌மில்லாத‌ஓ

2. வ‌யசான‌ஓ

3. குடும்ப‌ த‌லைவ‌ரு

4. புள்ள‌க்குட்டி பெத்த‌ ம‌னுசெ

5. ம‌ரும‌க்க‌ எடுத்த‌ஓ

6. இனிப்பு நீரு கார‌ஓ

7. ரெத்த‌க்கொதிப்பு கார‌ஓ

8. எங்கையோ ஒழ‌ச்சி,ஒழ‌ச்சி ஊர்ல‌ வ‌ந்து ஓடாப்போன‌ஓ

9. பொம்புள‌ப்புள்ளைய‌ல்வொளுக்கு ஊடு க‌ட்டியே ஓஞ்சி போன‌ஓ

10. பெத்த‌ ஆம்புள‌ப்புள்ளெ/பொம்புள‌ப்புள்ளெய‌ள்வொலாலே கை விட‌ப்ப‌ட்ட‌ஓ

11. எந்த‌க்க‌ள‌ரி சாப்பாட்டுக்கும் ஆப்ஸ‌ன்ட் ஆகாத‌ஓ

12. வாயையும், வ‌யித்தையும் எக்காலமும் க‌ட்டாத‌ஓ

13. தொட‌ர் உட‌ற்ப‌யிற்சி எதுவும் செய்யாம‌ல் த‌ன் உட‌ல் ஆரோக்கிய‌த்தை ஆஸ்ப‌த்திரியில் தேடி அலைற‌ஓ

இப்ப‌டி த‌ன‌க்கே அறியாத‌ ப‌ல‌ ப‌த‌விக‌ளை பெற்றிருந்தும் ப‌ள்ளிக்கு தொழ‌ வ‌ருகிறார்க‌ளே என‌ நாம் ச‌ந்தோச‌ம‌டையாவிட்டாலும் ந‌ம்மைப்ப‌டைத்த‌வ‌ன் ச‌ந்தோச‌ம‌டையாம‌ல் இருந்து விடுவானா?

இள‌மையில், ஆரோக்கிய‌த்துட‌ன் சுற்றித்திரியும் ப‌ருவ‌த்தில், போதிய நேரங்கள் இருந்தும் ப‌ள்ளிப்ப‌க்க‌ம் த‌லைவ‌ச்சிப்ப‌டுக்காத‌ ந‌ப‌ர்க‌ளைப்ப‌ற்றி என்ன‌த்தெ சொல்ற‌து?????

ப‌ள்ளிக‌ளில் நாற்காலிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்துக்கொண்டே செல்வ‌தால் நாம் யாரையும் வ‌சைபாடி விட‌ முடியாது. ஆரோக்கிய‌ம் மெல்ல‌,மெல்ல‌ ந‌ம்மை விட்டு வில‌கி வ‌ருவ‌தையே இங்கு பேச‌ இய‌லும்.

இவ்வ‌ள‌வு தூர‌ம் ஒவ்வொரு நாளும் சிர‌ம‌ப்ப‌ட்டு வேலை நேர‌ம் போக இங்கு உட‌ற்ப‌யிற்சி கூட‌த்திற்கு சென்று உட‌லை க‌ட்டுக்கோப்பாக‌வும், வ‌யிற்றை த‌ட்டையாக‌வும் வைத்துக்கொண்டு ஊர் வ‌ந்தால் அதைப்பார்க்கும் பெற்றோர்க‌ள் இப்ப‌டி புல‌ம்புகிறார்க‌ள் "என்னா வாப்பா ச‌ரியா சாப்புட்ற‌து இல்லையா? வ‌யிறு எல்லாம் புள்ளெக்கி இப்ப‌டி ஒட்டிப்போயிக்கித‌ம்மா? என்னா செய்யிற‌து புள்ளெக்கி ஊட்டு க‌வ‌லை? ந‌ல்லா சாப்புடும்மா என்று ஊர் வ‌ரும் ச‌ம‌ய‌ம் த‌லைய‌ணைக்குள் ப‌ஞ்சை திணிப்ப‌து போல் சாப்பாட்டை திணித்து விடுகிறார்க‌ள் பாச‌க்கார‌ பெற்றோர்க‌ள்....................."


ந‌ல்ல‌ எச்ச‌ரிக்கை க‌ல‌ந்த‌ நினைவூட்ட‌ல் காக்கா....

வாழ்த்துக்க‌ள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்னொரு விச‌ய‌மும் இங்கு சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன். ஒட்டு மொத்த உடம்பும், வயிறும் பெருத்து இருப்ப‌வ‌ர்க‌ளிடம் சென்று க‌வ‌லையாக‌ என்னா இப்ப‌டி உட‌ம்பை பெருக்க‌ வைத்து விட்டீர்க‌ளே? குறைத்துக்கொள்ள‌க்கூடாதா? தினமும் உட‌ற்ப‌யிற்சிகள் ஏதேனும் செய்ய‌ வேண்டிய‌து தானே? என்று அக்க‌றையுட‌ன் விசாரித்தால் "அட‌ப்போப்பா, இது க‌ள்ள‌ம், க‌ப‌ட‌ம் இல்லாத நல்ல ஒட‌ம்பு. அதுனால‌ தான் இப்ப‌டி ச‌ந்தோச‌த்தில் பெருத்திருக்கிற‌து என்ப‌வ‌ர்க‌ளும் உண்டு. அப்போ, மெலிந்து உட‌ம்பை பேணி க‌ட்டுக்கோப்பாக‌ வைத்திருப்ப‌வ‌ர்க‌ளெல்லாம் ம‌ன‌தில் கேடும், கசடும், கெட்ட‌ எண்ண‌ங்க‌ளும் கொண்ட‌வ‌ர்க‌ளா?

என்னாமாரி ச‌மாளிக்கிறாங்க‌......பாத்திய‌ளா?????

Shameed said...

இங்கு சவுதியில் தொழுகை நாற்காலி என்றே பெயர் வைத்து நாற்காலி விற்கிறார்கள்

Yasir said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

The main cause is , now a days dining tables makes our ligaments more rigid. It is not flexible..to make it people must practice Sit down & eat and ,must use squad toilets.....But I leave it to individuals to practice. If no ortho / arithritis comlaints ...every body can do...If they are lazy. no body can do.

sabeer.abushahruk said...

நாற்காலிகளின் எண்ணிக்கை கூடியிருப்பதை நானும் கவனித்தேன்.
இந்த ஆக்கம் ஓர் அலெர்ட்.

KALAM SHAICK ABDUL KADER said...

அய்யம்பேட்டைப் பக்கத்தில் உள்ள வழுத்தூரில் உள்ள பள்ளிவாசலில் (பள்ளிக்கூடத்தில் இருப்பது போன்ற) “டெஸ்க்” வைத்து இருக்கின்றார்கள்; அதுவும் பள்ளிவாசலின் பாதி இடத்தை அடைக்கும் அளவுக்கு! அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நான், பின்னர் இந்த மாதிரி நாற்காலிகள்/ பெஞ்சுகள் பள்ளிவாசலில் பெருகி வருவதைப் பற்றி ஓர் இஸ்லாமிய மாத இதழில் வன்மையாகக் கண்டித்து “சர்ச் போலாகி விட்டதா” என்று எழுதியிருந்ததும் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன்; இப்பொழுது அன்புச் சகோதரர் இப்றாஹிம் அன்சாரி அவர்களின் ஆக்கம் படித்து எனக்கு ஏற்பட்ட அதே உள்ளுணர்வும் வேதனையும் அவர்கட்கும் ஏற்படுத்தி இருப்பதை அறிந்து கொண்டேன். முன்னோர்கள் “வைரம் பாய்ந்த கட்டை” தான்; old is gold! முன்பு அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் ஓர் ஆக்கம் எழுதியிருந்தார்கள்” புதுப்பள்ளியின் வரலாறு” பற்றிய அக்கட்டுரையில் அக்காலத்தில் தராவிஹ் தொழுகையினை மிக நீண்ட நேரம் தொழுத விவரம் அறிந்தேன். இன்றுள்ள நம்மைப் போன்றவர்கட்கு விரைவில் வியாதிகள் வருவதற்குக் காரணம்: கட்டுப்பாடற்ற உணவு, நடைபயிற்சியினை. எனக்கும் தற்பொழுது “டயபடிக்” எட்டிப்பார்த்ததும் உஷாராகித் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டும், நடைபயிற்சி தவறாமல் செய்தும், உணவு முறையில் மிகுந்தக் கட்டுப்பாடு மற்றும் எவ்வகை உணவுகள்/பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டும்; வீட்டில் கிடைக்கும் எளிய மருத்துவ குணமுள்ள மளிகைப்பொருட்கள் எவை என்பனவற்றை தினமும் இணைய தளம் வழியாக தேடி தேடி கண்டுணர்ந்து அதன்படி சாப்பிட்டும் அல்ஹம்துலில்லாஹ் இப்பொழுது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டேன்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை; நான் வழக்கமாக சிகிச்சை எடுக்கும் மருத்துவர் கேட்டார்கள்,” எப்படி சாத்யமானது?” என்று. நான் எல்லாவற்றையும் விவரித்து அவர்களிடம் சொல்லவில்லை. நீங்கள் எல்லாரும் அறிவீர்கள்; “அலோபதி” மருத்துவரிடம் “ஆயுர்வேதிக்” மருத்துவம் அல்லது மாற்று மருத்துவம் செய்த விவரம் அல்லது அதில் சொன்னபடி சாப்பிட்ட விடயம் சொன்னால் முரண்டுபிடிப்பார்/முரண்படுவார். (காட்டு: “தேங்காய்ப்பால்”. அலோபதி மருத்துவர் தேங்காய்ப்பால் கொலஸ்ட்ரால் என்பார்; ஆயுர்வேதிக் மருத்துவர் தேங்காய்ப்பாலில் உள்ள ஓர் அமிலம் கொழுப்பைக் கரைக்கும் என்பார்)
ஆனால், இனிப்பும், உப்பும் ஆரோக்யத்திற்குக் கேடு என்பதில் இருசாராரும் ஒன்றுபடுவர்! இனிப்பு மற்றும் உப்பைக் குறைத்து அல்லது இல்லாமல் சாப்பிட்டுப் பழகினால் உங்களின் ஆரோக்யத்தின் அரிச்சுவடி அதுவாகும்.

குறிப்பாக, அசைவ உணவை தவிர்த்து சைவ உணவுக்கு அதிரைப்பட்டின “களரி சாப்பாடு” என்று மாறுமோ அன்று இந்த நாற்காலிகளின் எண்ணிக்கையும் குறையும். இதை டாக்டர் இப்றாஹிம் சொன்னார்கள் அன்று; பொருளாதார நிபுணர் (டாக்டர்)இப்றாஹிம் அன்சாரி அவர்களும் சொல்வார்கள் இன்று@

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வளரும் வருத்தமான செய்தி!
வேண்டாம் இந்த நாற்காளி.

டென்ஷன் நிறைந்த வாழ்க்கைச்சூழலும்,
பட்டியல் நீளும் பதப்படுத்திய
மற்றும் கலப்படம் நிறைந்த உணவுகளும்
இதன் மூலமாக இருக்கலாம்.
அல்லாஹ் காப்பாத்தி ஆரோக்கியம் தரனும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல அலசல்.நன்றி அபூ இப்ராஹீம் காக்காவுக்கு

// அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..//

கட்டிலில் படுப்பது நல்லது என்றும்,தரையில் படுக்கும்போது புவி ஈர்ப்பு விசை மூலம் நமக்கு (தரையோடு தரையாக இருப்பதால்)இவ்வாறு உடல் பிரச்சனை ஏற்படும் எனவும் கேள்விப்பட்டுள்ளேன்,அவர் வெளிநாட்டில் கட்டிலிலும்,ஊரில் தரையிலும் படுத்திருக்க வாய்ப்புண்டு.இது ஒரு ஊகமே.

//குறிப்பாக, அசைவ உணவை தவிர்த்து சைவ உணவுக்கு அதிரைப்பட்டின “களரி சாப்பாடு” என்று மாறுமோ அன்று இந்த நாற்காலிகளின் எண்ணிக்கையும் குறையும்//

வெல்டன் கலாம் காதிர் காக்கா,சரியாக சொன்னீர்கள்

Shameed said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…

// இப்பொழுது அன்புச் சகோதரர் இப்றாஹிம் அன்சாரி அவர்களின் ஆக்கம் படித்து //

கட்டுரையாளர் இப்றாஹிம் அன்சாரி அவர்கள் அல்ல அபுஇபுறாஹிம் அவர்கள் ,

இங்கு இருவர் பெயரும் இப்ராஹிம் என்று வருவதால் அனைவருக்குமே சற்று தடுமாற்றம் ஏற்ப்படுவது சகஜமே

ZAEISA said...

நாற்காலிகள் பெருக காரணம்.சகோ.,ஜாகிர் ஹுசைன் சொன்னதுதான்
சரியென நினைக்கிறேன்.ஆமாம்.இயற்கை கடன்கள் கழிக்கும்போது
கால்கள் மடக்கி உட்கார்ந்து இருக்கும்போது வயிறு சுருங்கி கால் நரம்புகள் நீண்டு அது ஒருவகை உடற்பயிற்சியாக நம்மை அறியாமல் நடந்தேறி விடுகிறது.ஆகவே,கழிப்பறையில் பாஸ்போர்ட் போட்டோவுக்கு
இருப்பதுபோல் இருந்தால் நாற்காலி தவிர்க்க முடியாதாகிவிடும்

KALAM SHAICK ABDUL KADER said...

//கட்டுரையாளர் இப்றாஹிம் அன்சாரி அவர்கள் அல்ல அபுஇபுறாஹிம் அவர்கள் ,//
ஜஸாக்கல்லாஹ் கைரன் அன்புச் சகோதரர் ஷமீத். இதற்கு முந்தைய ஆக்கத்தின் ஆசிரியர் இப்றாஹிம் அன்சாரி காகா அவர்கட்குப் பின்னூட்டமிட்டு விட்டு (நடுநிசியில்)உடன் அடுத்த ஆக்கமும் அவர்களுடையது என்றெண்ணி விட்டேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு