விரிந்த வலையிலும் வாய்ப்புகள் வசப்பட்டச் சூழலில் வாசித்த புத்தகங்களிலும் சிக்கியவைகளை சான்றாக எடுத்து இங்கே தகவலாக பதிந்தால் நீங்களும் வாசிச்சுடுவீங்கதானே !
1773ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) நியமிக்கப்பட்டார்.
1833 மற்றும் 1853 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த சட்டங்களின்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கின.
1861 மற்றும் 1892 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 'இந்திய கவுன்சில்கள் சட்டஒத்தின்கீழ் சட்டம் இயற்றும் மன்றங்கள் உருப்பெற்றன.
1861ம் ஆண்டு சட்டத்தின்கீழ் முதல் முறையாக சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1919ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் 'சென்னை மாகாண சட்டமன்றம்' 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது - ஆயுட்காலம் மூன்றாண்டுகளாகும்.
1921ம் ஆண்டு ஜனவரி 9-ம் நாள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
1923ம் மற்றும் 1926ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் சென்னை மாகாணத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சட்டமன்றங்கள் அமைந்தன.
1930ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நான்காவது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு,
1935ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் மாகாண தன்னாட்சி 1937-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வரை செயல்பட்டது.
1935ம் ஆண்டின் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு 'மேல் அவை', 'கீழ் அவை' என இரு அவைகள் உருவாக்கப்பட்டன.
சட்ட மேலவையில் 35 பொது உறுப்பினர்களும், ஏழு இஸ்லாமிய உறுப்பினர்களும், ஒரு ஐரோப்பிய உறுப்பினரும், மூன்று இந்திய கிறிஸ்துவ உறுப்பினர்களும் இருந்தனர்.
சென்னை மாகாண சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 215-ஆக இருந்தது. இதில் 146 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 30
பிற்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் பழங்குடியினர் - 1
முஸ்லீம்கள் - 28
ஆங்கிலோ இந்தியர்கள் - 2
ஐரோப்பியர்கள் - 3
இந்திய கிறிஸ்தவர்கள் -8
தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் - 6
நிலச்சுவான்தார்கள் - 6
பல்கலைக்கழகம் - 1
தொழிலாளர் பிரதிநிதிகள் - 6
பெண்கள் - 8
1935ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மாகாணங்களை பொறுத்தவரை 1937-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.
1937ம் ஆண்டு ஜுலை மாதம் தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
1939ம் ஆண்டு அக்டடோபர் மாதம் இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவசரகால பிரகடனம் அறிவிக்கப்பட்டதால் அமைச்சரவை பதவி விலகியது.
1946ம் ஆண்டு மார்ச் மாதம் போர் முடிந்ததும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மே மாதம் இரண்டாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
1952ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.
1952ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி சென்னை மாநிலத்தின் முதலாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
1956ம் ஆண்டு நவம்பர் முதல் நாளிலிருந்து 'மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது.
1956ம் ஆண்டு 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக உயர்ந்தது.
1957ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இரண்டாவது சட்டப்பேரவை ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது.
1959ம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை சீர்திருத்தத்தின் விளைவாக ஆந்திர மாநில சட்டப்பேரவையின் ஒரு உறுப்பினர் இடம் சென்னை சட்டப்பேரவைக்கு மாற்றப்பட்டது.
1961ம் ஆண்டு 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் முறை நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக 38 கூடுதல் 'ஒரு உறுப்பினர்' தொகுதிகள் உருவாக்கப்பட்டன.
1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை தொடர்ந்து மார்ச் 3-ம் தேதி மூன்றாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.
1965ம் ஆண்டு 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 234-ஆக உயர்த்தப்பட்டன.
1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களின் விளைவாக மார்ச் முதல் தேதி சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டப்பேரவை அமைந்தது.
1969ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் 'சென்னை மாநிலம்' 'தமிழ்நாடு' மாநிலமாக பெயர் மாறியது.
1971ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அமைக்கப்பட்ட ஐந்தாவது சட்டப்பேரவை 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் நாள் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி முதல் முறையாக அமல் செய்யப்பட்டது.
1977ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி ஆறாவது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.
1975ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
1980ம் ஆண்டு இந்த சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.
1980ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி ஏழாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டன.
1988ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி எட்டாவது சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
1986ம் ஆண்டு எட்டாவது சட்டப்பேரவையில் தமிழக 'சட்ட மேலவை'யை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஆண்டின் நவம்பர் 1ம் தேதி தமிழக 'சட்ட மேலவை' கலைக்கப்பட்டது.
1937ம் ஆண்டு இரு அவைகளாக உருவாக்கப்பட்ட தமிழக சட்டமன்றம்
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரே அவையைக் கொண்ட சட்டமன்றமாக உருவெடுத்தது.
1989ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைந்த 9-வது சட்டப்பேரவை 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1989ம் ஆண்டு ஏற்கனவே கலைக்கப்பட்ட 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்க இந்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1991ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி 10-வது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.
1991ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
1996ம் ஆண்டு மே 13ம் தேதி 11-வது தமிழக சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது.
2001ம் ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து மே 14ம் தேதி 12-வது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.
2006ம் ஆண்டு மே 8ம் தேதி 13-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.
1951ம் ஆண்டு இறுதியில் துவங்கி 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இந்தியா குடியரசு ஆனதற்கு பின் தமிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது.
1957ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் மாநிலங்கள் சீரமைப்பின் விளைவாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக குறைந்தது.
1965ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.
1975ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் 1977-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் அப்போது தேர்தல் நடந்தன.
1977ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் 1975-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடைபெற்று வந்தன.
2007ம் ஆண்டு நடைபெற்ற 'தொகுதி சீரமைப்'பின்படி தொகுதிகள் சில மாற்றி அமைக்கப்பட்ட போதும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2011ம் ஆண்டு சட்டபைத் தேர்தலுக்காக காத்திருகோம்...
வலை மேய்ச்சலில் கிடைத்த விளைச்சல்களை குவியலாக்கித் தந்தவன் :
அபுஇபுறாஹிம்.
27 Responses So Far:
Dear Abu Ibrahim,
Really a fantastic posting. This can be further improved and updated and included in the text books of our school education.
Alas who is going to heed. The compiler of this valuable information is a Muslim!!!
Wassalam
N.A.Shahul Hameed
நம்மவங்க சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்னர், நான் இங்கே முதல்ல நுழைந்திடுறேன்...
அன்று சுதந்திரத்திற்கு முன்னர் ஒருங்கினைந்த இந்தியாவில் நமக்கு இட ஒதுக்கீடு 28 !
இன்று சுந்தனிரமடைந்த இந்தியத் திருநாட்டில் இடமேதுமில்லை ஒதுக்கிட இவய்ங்களால !!!!!!!!
காக்கா...படிக்கும் போதே மூச்சு முட்டுதே... எவ்வவளவு கஷ்டப்பட்டு தொகுத்து இருப்பீங்க...சாரின் கருத்துப்படி கல்வி புத்தகத்தில் இடம்பெற தகுதியானதுதான்.....வாழ்த்துக்கள் காக்கா.
அபு இப்ராஹிம்....இவ்வளவு விசயங்களை அழகாக தொகுத்து இருக்கிறீர்கள். இதை முடிந்தால் ஒரு பிரின்ட் எடுத்து ஸ்டாலினுக்கும் , ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும்...மற்றும் நமது முஸ்லீம் சகோதரர்கள் வைத்து இருக்கும் கட்சி அலுவலகத்துக்கும் அனுப்புங்கள். அல்லது இ-மெயிலில் அனுப்புங்கள்.
அவர்களாவது தெரிந்து கொள்ளட்டும்.
சமயோசிதமான பதிவு. யாசிருக்கு மட்டுமல்ல சயன்ஸ் குரூப் எடுத்த யாவருக்குமே மூச்சு முட்டும்தான்.
ஒரே பதிவுக்கு கூடுதல் தகவலோ?!
ஓரிடத்தில் சேகரித்ததல்ல சட்டப் பேரவை அவைக் குறிப்பில் இடம்பெற்ற நிகழ்வுகள் நகைச்சுவைகள்னு ஒரு புத்தகம் என்றோ வாசித்த ஞாபகம் ஆதலால், தேர்தல் அறிவித்தவுடன் ஒரு சிந்தனை ஓடியது அப்போதே சேகரித்த தகவல்கள் குறைவே அதில் சில தகவல்களாக ஆட்சி அமைந்த சூழலும் அவைகளின் கால அளவும்னு எழுதலாம்னு இருக்கும்போது வலைமேய்ச்சலிலும் மேலும் தகவல்கள் வாசிக்க நேர்ந்தது அங்கே ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லீம்களுக்கு 28 இடம் இருந்ததை வாசித்ததும் மேலும் சமீபத்தில் வாரப்பத்திரிக்கையில் வாசித்ததையும் கோர்த்து ஏன் டைஎழுத வாய்ப்பாக அமைந்துவிட்டது.
வாசிச்சுட்டீங்களே அப்பாடா... இந்த தேர்தல் அறிக்கையில் ஒன்னுமேயில்லைன்னு குரல் எழுப்பலையே அப்பாடா !
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சகோ. அபுஇபுறாஹீம்
கை வலிக்கவில்லையா? இத்தனை நீண்ட வரலாறை எழுத! பொறுமையாக தொகுத்தளித்தற்கு வாழ்த்துக்கள்!
அலாவுதீன் காக்கா: தட்டி கொடுக்க மடிக் கணினியும் (இலவச மாக்கிடைத்தல்ல) ஒட்டியெடுக்க கட்டு பேஸ்டும் இருப்பதனாலே "கை"க்கு வலிக்கவில்லை ஆதலால் "கை"யை விரித்துக் காட்டுகிறேன்... வேனாம் வேனாம் உதயம் தெரியுதுன்னு சொல்லிடுவாங்க... ஆதலால் சும்மாவே இருந்து விடுகிறேனே...
ஜஜாக்கால்லாஹ்..
NAS-ஐயா, (அ. & க.)காக்காமார்கள் மற்றும் தம்பி(யாசிர்) ஜஜாக்காலாஹ் !
அதெல்லாம் இருக்கட்டும் இன்னொன்றுக்கு தயாராகிட்டு இருக்கு என்னான்னு சொல்லிட்டா இப்போவே கருத்துக்களின் சாயலிலே வந்திடும் அதனால் அதப் பத்தி சொல்லமாட்டேனே !
தகவல் பதிவு நல்லது.. அதோடு உடைஞ்ச சேர்களும், கிழிஞ்ச வேஷ்டியும் எத்தனை'ன்னு சொல்லியிருந்தா ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் நல்லா இருந்திருக்கும் :)
தகவல் பதிவு நல்லது.. அதோடு உடைஞ்ச சேர்களும்,கிழிஞ்ச வேஷ்டியும் எத்தனை'ன்னு சொல்லியிருந்தா ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் நல்லா இருந்திருக்கும் :) ///
அவைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கழிவுகள்... :)
தம்பி இர்ஷாத், அதனால்தான் மு.க.ஐயா அவர்கள் சக்கர நாற்காலியில் இப்போ வருகிறார் பொத்தானை அழுத்தினால் ஓட்டிச் செல்லலாம்...
வேஷ்டி பொடவைங்க இலவசமா கொடுத்தா கிழிச்சுடுறாங்கன்னு இந்தத் தேர்தலில் கொடுக்கவில்லையாம்
ஆடு ஃப்ரீ மாடு ஃப்ரீ கேபிள் ஃப்ரீ - அதிமுக
மிக்ஸி கிரைண்டர் அடுத்து ஃப்ரிட்ஜ் கொடுத்தா வேணாம்னா சொல்வீங்க - திமுக
அட எல்லாமே ஃப்ரீயாம்ல..
பிள்ளை பெறுறத மட்டும் நீங்க பார்த்துக்கிடுங்க, மிச்சத்தப் பூரா நாங்க பார்த்துக்கிடுறோம் # தேர்தல் வாக்குறுதிகள்# வந்தாலும் வரலாம்..///
***ஃபேஸ்புக்கில் என் நண்பர் கடற்கரை(குமுதம் அஸிஸ்டென்ட் எடிட்டர்)
:))))
இவ்வளவு பாரம்பரியமான சட்ட மன்றம் சென்றிட எவ்வளவு விலையைக் கொடுக்கிறாங்க !?
தம்பி எல்லாம் ஃப்ரீதான் ஆனால் எம்.எல்.ஏ.மட்டும் ஃப்ரீ(யா) இல்லையாமே !? எவ்வ்ளோன்னு கேட்டுச் சொல்லிடுப்பா !!
அங்க போய் வேட்டிய கிழிக்கிறதுக்கு இங்கேயே இருக்கலாமே காக்கா..
தம்பி இர்ஷாத் விவாதக் களம் பக்கம் வந்திடு ! இவய்ங்க கிழிக்கிற கிழிப்புல கைப்புள்ளைக்கு அரெஸ்ட வாரண்டாம்....
விவாத களமா? ஒன்னுமே பிரியலையே..ங்....?
இங்கேதான் !
http://adirainirubar.blogspot.com/2011/03/2.html
http://adirainirubar.blogspot.com/2011/03/3.html
இதுக்கெல்லாம் நமக்கு இங்லீஸ்'ல சொன்னா டைம் நோ, ஹிந்தியில சொன்னா நஹி ப்ரதர்..
அப்படின்னா டைம் இலவசமா கொடுக்கிறதுக்கு மு.க.விடமும் செல்வியிடமும் கோரிக்கை வச்சுடலாம் பிரதர் !
ஏங்க அவங்களே சும்மா இருந்தாலும் நீங்க விடமாட்டீங்க போல..
அஹமது இர்ஷாத் சொன்னது…
அங்க போய் வேட்டிய கிழிக்கிறதுக்கு இங்கேயே இருக்கலாமே காக்கா..
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் . (கற்பனை:முன்னாள்( M.L.A விடம்):ஏங்க அவரு வேட்டிய ஏங்கிழிச்சிங்க?
சட்டசபை போய் என்னத்த கிழிச்சிங்கன்னு யாரும் கேட்டுடகூடாது பாருங்க அதுக்குத்தான்.
மேய்ச்சலில் கிடைத்த விளைச்சல்கள் ரொம்ப டேஸ்ட் காக்கா,
இன்றைய சீசனுக்கு!
2011-க்கு போனாப்போகுது அவங்க வரட்டும்,
2016-க்காவது நீங்க தான் முதல்வர்!
வியக்கத்தகுந்த தொகுப்பு, முழுதும் அறியத்தந்தமைக்கு நன்னி, அதுபோல் ஒவ்வொரு தடவை சட்டசபை தேர்ந்தெடுத்த போதும் யார் யார் முதல்வராக இருந்தார்கள் என்ற தகவலையும் தந்தால் இன்னும் நலம், கஷ்டம்தான் இருந்தாலும் கேட்பதில் தவறில்லைதானே, தெரிந்துக்கொள்ளும் ஆவலில்
நிச்சயம் இந்த தகவல் வரும் சந்ததினருக்கு ஒரு சிறந்த அறியதகவலாக இருக்கும். நன்றி
தம்பி மாலிக் : அதுவும் தயாராகிக் கொண்டிருக்கிறது... :)
தம்பி மாலிக் இங்கேயும் இருக்கு : http://adirainirubar.blogspot.com/2011/03/blog-post_20.html இனிமேலும் வரும்
நன்றி காக்கா விரைவில் எதிர்ப்பார்க்கிறோம், வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே, அதுனாலேதான் ஹாஜி சார் அடிக்கடி வரலாற்றை நல்லா படினு அடிக்கடி சொல்லுவார்
ஆம் ! ஹாஜி முஹம்மத் மற்றும் ஷேக்தாவுத், அஹ்மத் தம்பி இந்த ஆசிரியர்கள் சுட்டிக் காட்டிய புத்தகங்கள் நிறைய... !
Post a Comment