பனிப் பொழிவில் என் மொழி.. !


மினியருவிக் கிணற்றில்
பனிக் கட்டியாகிய நீரை
பல துண்டாக்கி நிற்க வைத்த
பாங்கு அருவிக்கு அழகு


பனித்துண்டின் மேல்
கொட்டிப்பார்த்த பனித்துகள்கள்
கம்பளியாடு போர்த்திய தோல் போல்
கரையாக் கட்டியும் காட்சி தருகிறது


இலையுதிர்த்த
என் மேல் விழுந்த
பனிப்பொடி
இருளுக்கெதிரான வெண் மென் பொடி
இஞ்ச் அளவில் படிந்திட்டால்
என்
சூரிய சுவாசம் எப்படி?


நட்டுவைத்த பனித்துண்டின் மேல்
கொட்டிப்பர்ர்த்த பனித்துளிகள்
கம்பளியாடு போர்த்திய தோல் போல
கரையாக் கட்டியாய்
காட்சி தருகிறது


வாகனம் நாங்கள்
வழுக்கி ஓடாதிருக்க
வழியெங்கும் உப்பிட்டு
வழக்கமாய் ஓட்ட வைத்த நிர்வாகம்


பாதுகாப்பாய் உள்நிறுத்திய
பயண வாகனத்தை
பல அடுக்கு பாதுகாப்பு அரண் போல்
அழகாய்
வெண் பனிப்பொடி போர்த்தும்
இயற்கைப் பொழிவே!

மரம் மேல் பூத்திட்ட
மல்லிகை போல்
வெண்மையாய்
மனதுக்கு இதம் தரும்
மணக்கா
பஞ்சுப்பனித்தொகுப்பே நான்!


இயற்கை தந்த அழகு காட்சி
இதிலும் அழகிய தமிழ் பெயர்
இத்தைகைய இனிய வெள்ளோட்டத்தில்
இன்னும் எல்லாம் வடிக்கலாம்


கொட்டித்தீர்த்த இப்பனித்துகள்
குடியிருப்போர் வெண்சிறையினுள்
கொஞ்சும் குழந்தைகள் விளையாடிட
பஞ்சு போன்ற பாலைவனம்


-அபுருமானா
படங்கள் : MHJ

20 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

குளிரவைக்க கவிதையை நாடுகிறோம்...
குதர்க்கம் தவிர்க்க கவிதைக்காக வாதாடுகிறோம்...
உள்ளத்து உணர்வுகளை உள்ளபடி உரைப்பதை கவிதை என்கிறோம்... :)
உருகும் உள்ளங்களை உருகவிடாமல் பனிப்போர்வை போர்த்தி குளிரவைக்கும் இந்த கவிப் படம் அழகோ அழகு !

தம்பி MHJ:
உமக்கு பொறுமை அதிகமப்பா !
எடுத்தனுப்பிய படம் பதிவுக்குள் வந்து அசத்துதப்பா !

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

“கவி” அபுருமானா மற்றும் லண்டன் “புகை”ப்பட கலைஞர் MHJ ஆகியோருக்கு என் வாழ்த்துகள் !

லன்டன் ரபிக் சொன்னது…

ஜாபர் சாதிக் காக்கா வின் கவிதை அருமை.


இழுத்துபோர்த்தியும் முழுவதும் மறைந்து போகாத இருட்டில் போர்வைக்குள் மெல்ல எட்டிப்பார்கும் பனிகட்டிகளின் வெளிச்சம்.
by
mohamed rafeeq uduman

ஜமால் முஹம்மது UKஜமால் முஹம்மது சொன்னது…

கவிதையும் , போட்டாவும் மிக அழகாக உள்ளது

பேங்க் ஹசன் சொன்னது…

இயற்கை தந்த அழகு காட்சி
இதிலும் அழகிய தமிழ் பெயர்
இத்தைகைய இனிய வெள்ளோட்டத்தில்
இன்னும் எல்லாம் வடிக்கலாம்


பனி கட்டியில் அழகான தமிழ் பெயரா? வெரி குட் பெயர்

sabeer.abushahruk சொன்னது…

எம் ஹெச் ஜே:

பனி பொழிவை ரசிக்க ஒரு ரசனை வேண்டும். அதில்கூட அப்படியே ரசித்ததை எழுத்தில் வடிக்க அபரிதமான ரசனை வேண்டும்.

நீங்கள் அழகாகவே வடித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.

sabeer.abushahruk சொன்னது…

தனி பதிவிட
கனி இனிப்பென
இனி பொழுதுகள் 
பனி பொழிவுடன்

சனி ஞாயிறு
தனி அறைதனில்
மணி ஆயினும்
துணி போர்வையில்

(Halo Uk)

ABU ISMAIL சொன்னது…

ஐஸிலிம் தமில் பேர் ரசித்தவை.போட்டாவெல்லாம் ரொம்ப அழகா இருக்கிரது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//தனி பதிவிட
கனி இனிப்பென
இனி பொழுதுகள்
பனி பொழிவுடன்

சனி ஞாயிறு
தனி அறைதனில்
மணி ஆயினும்
துணி போர்வையில்//

இப்பதிவுக்கே வித்திட்ட நுழைவாயில்.
நன்றி Mr.S.காக்கா

ZAKIR HUSSAIN சொன்னது…

பனியினூடே தமிழ்....கொஞ்சம் சூடான டீயும்...மெல்லிய தீயும்...கார்கள் ஓடாத அமைதியும், பேசும்போது வெளிப்படும் பனிப்புகையும் கிடைத்துவிட்டால் உள்ளத்துக்குள் புத்துயிர் பூத்துவிடுமா?

Thanx MHJ...wonderful..

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

" கவிதை என்பது பேசும் ஓவியம்
ஓவியம் என்பது பேசாக்கவிதை"- என்று கூறுவார்கள்.

இந்த கவிதைகளும், படங்களும் அந்த இலக்கணத்துக்கு இலக்கியமாக திகழ்கின்றன.

பாராட்டுக்கள் M H J.

இப்ராகிம் அன்சாரி

Yasir சொன்னது…

பனிக்ககட்டியை தொட்டதுபோன்ற சில்லென்ற உணர்வு உங்கள் கவி வரிகளில்....ருமானா மின்னுகிறது வெண்பனி துகள்களுக்கிடையே....நல்ல புகைப்படங்கள்....

Unknown சொன்னது…

அமர்களமாக இருக்கிறது ஜாபர் சாதிக் !!!!

தமீம் சொன்னது…

போட்டாவும் அதற்கு எற்ற வர்ணிப்பும் அதிலும் பெயர் எழுதீருப்பது அழகாயிருக்கிரது

JAFAR சொன்னது…

படத்தோட கவி ரொம்ப அழகு
பிடிச்ச கவிதை

கொட்டித்தீர்த்த இப்பனித்துகள்
குடியிருப்போர் வெண்சிறையினுள்
கொஞ்சும் குழந்தைகள் விளையாடிட
பஞ்சு போன்ற பாலைவனம்

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

பார்வைக்கு அனுப்பிய படங்கள் பதிவுக்கு வந்ததோ கரையாத கவி வரிகளால்.
பனி துளிகள் இறுகியது போல்.மனதில் பதிந்தது ஜப்பான் நாட்டில் பனி கட்டி மேல் மிதிவண்டி ஓட்டி சறுக்கி விழுந்த நிகழ்வு.


பாராட்டுக்கள் M H J & அ.நி. குழுவினருக்கு.

அப்துல்மாலிக் சொன்னது…

பனியால் கவியுடன் கலந்து போர்த்திய விதம் மேலு அழகு சேர்க்குது, வாழ்த்துக்கள் சகோ..

இதுலே எப்படி மக்கள் வாழுறாங்கனு கொஞ்சம் வியப்பாகவேதான் இருக்கு..

Saleem சொன்னது…

ஆங்கிலேயர் நாட்டில் ஆங்கில எழுத்தை பனி மூடி விட்டது,ஆனால் மூடிய பனியில் ஒரு தாய்த்தமிழ் எழுத்து!!! படங்கள் அருமை.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

அமெரிக்காவில் அனுபவித்த இத்தகுப் பனிப் பொழிவும், அச்சூழலில் எங்களின் பணி நிகழ்வும் மீண்டும் நினைவுகளைத் தட்டி விட்டன இப்படங்கள்

முதல் மூன்று நாட்களுக்கு “இடியாப்ப மாவு” போல இருக்கும் இப்பனித்தரைக் கட்டியாகி இறுகிவிட்டால் கவனமாக நடக்காத வரை சறுக்கி விழுந்து அடி பட வேண்டியதாகி விடும்.

படங்களும் வர்ணணைகளும் அருமை !!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

பனிப்பொழிவின் பின் என் மொழி....
/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/
அர்த்தமுள்ள தலைப்பிட்டு பதிவுக்குள் கொண்டு வந்து அசத்தச் செய்த நெய்னாதம்பி காக்காவுக்கும்,
தனி பதிவிட, கவி இதுயென கைகாட்டி கொடி அசைத்து களம் இறக்கிய தலைமைக் கவிஞர் சபீர் காக்காவுக்கும்,
எங்கும் எதிலும் எப்போதும் கவியே செவிக்கு விருந்தென தமிழ்த்தேனை அள்ளித்தரும் உயர்தகு அபுல்கலாம் காக்காவுக்கும்,
ஊன்று கோல் மாதிரி வாழ்வியல் உயர் தத்துவங்களை அவ்வப்போது தொடர்ந்து தந்திடும் அசத்தல் ஜாஹிர் காக்காவுக்கும்,
கிடைத்தற்கரிய அதிரையின் செய்தித்தந்தை நிஜாம் சகோதரருக்கும்,
பொருளாதாரத் தந்தை உயர்தகு இப்ராகிம் அன்சாரி காக்காவுக்கும்,
நல்ல தமிழுக்கு யாசிர் என்று மனதில் பதிவாகிவிட்ட சகோதரர் யாசிருக்கும்,
அமர்கள கவிஞன் அப்துல் ரஹ்மானுக்கும்,
படித்து செரித்ததை மனதுக்குள் புழுங்கிக்கொண்டிராமல் விமர்சன அம்பு எய்துவரும் பக்கருக்கும்,
மண்ணின் மைந்தன் மச்சான் நெய்னா மற்றும் சகோதரர்கள் ஜாபர்,ஜலால் ஜமால்,மாலிக்,ரபீக்,சலீம்,ஹசன்,மற்றும் கண்ணுற்ற அனைவருக்கும் (cool) கூலான நன்றியும் சலாமும் உரித்தாகுக!