Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அந்தி(ரை) மாலை! 39

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2011 | ,

வாக்கிங் போக வண்டிப்பேட்டை
காத்து வாங்க காலேஜ்
செழிப்பான செக்கடி மேடு
ரயிலில்லா ரயிலடி

சிட்டுக்குருவிகள் போடும் சத்தம்
சில்லெனெ வரும் மஃரிப் காத்தும்
சொல்லாமல் வரும் மொவ்த் செய்திகள்
இல்லாமல் இடை வந்த மாலைக் கல்யாணம்

மகிழ்ச்சியாய் மாமியா வீடு செல்லும் பெண்கள்
மலர்ச்சியாய் மணத்தோடு கூவி வரும் மல்லிகைகள்
மரியாதையே இல்லாமல் விற்க வரும் 'வாடா'க்கள்
மனதை நெருடும் அந்தி மாலை கதிரவனின் வண்ணங்கள்

எட்டிப்பார்க்கும் புது நிலா
சுட்டிக்குழந்தைக்கு புதுவிழா
எனர்ஜி கொடுக்கும் கதிரவன்
ஏற்றுக்கொள்ளும் சந்திரன்

பள்ளிவிட்டு வரும் சிறுசுகள்
துள்ளிவிளையாடும் ஜாலியாய்
பல்லி இடும் சத்தம்
பகல் முடிவுக்கு சங்கு

பகலை காவல் காத்த கதிரவன்
பகலுக்குப்பின் ஷிஃப்ட் சந்திரன்
பனையிலைகள் உரசும் சத்தம்
இணையிலாத காற்றின் கபடம்

பகலில் உண்டு படுத்த அசதி
அசரில் வரும் கொட்டாவி
அதையும் மீறி விழித்து வல்லோனை தொழுதிட
வருமே அழகிய அதிரை மாலை, அழகிய வேளை!

- ஜஹபர் சாதிக்

39 Responses So Far:

crown said...

Assalamualikum non stop!!!!!!!!!!!!!!!!!

இடைவிடாது நீண்டுகொண்டே போகும் நம் மண்ணின் வாழ்கை முறையை அடுக்கி, அடுக்கி சொன்ன கவிதை நல்ல தொரு கதம்பமாய் மணம் வீசுகிறது. கன்னி கவிதை சொன்ன சகோதரர் இனி என்னிக்கையில்லா அளவில் கவி சொல்ல வாழ்துக்களுடன் அழைக்கிறேன்.

crown said...

பகலை காவல் காத்த கதிரவன்
பகலுக்குப்பின் ஷிஃப்ட் சந்திரன்
பனையிலைகள் உரசும் சத்தம்
இணையிலாத காற்றின் கபடம்
-------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .பகலை காயும் (அல்லது) காச்சும் கதிரவன். காரணம் அல்லாஹ் வொருவனாலேயே எல்லாவற்றையும் காக்க முடியும். நான் இப்படி மாற்றி பார்த்தேன் சரியா? கவிஞர்கள்,அறிஞர்கள் சொல்லனும்.(தவறு இருந்தால் இந்த அறியாதவனை மன்னிக்கவும்).

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பகலை காயும் (அல்லது) காச்சும் கதிரவன். காரணம் அல்லாஹ் வொருவனாலேயே எல்லாவற்றையும் காக்க முடியும். நான் இப்படி மாற்றி பார்த்தேன் சரியா? கவிஞர்கள்,அறிஞர்கள் சொல்லனும்.(தவறு இருந்தால் இந்த அறியாதவனை மன்னிக்கவும்//.

சகோ. க்ரவ்னார் விளக்கியது மிகச்சரி,வல்லோன் நாயன் மன்னிப்பானாக![இந்த அறியாதோனையும் மன்னிப்பானாக!]
கவிதைக்கு பொய்யழகு தானே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மச்சான் அருமையான கவிதை.

பழைய நினைவுகள் இங்கு நடுவரில்லாமல் ஒரு பெரும் பட்டிமன்றமே நடத்தியது போல் உள்ளது உன் புதுக்கவிதை.

புதுசு,புதுசாக‌ ந‌ம் வாழ்வில் வ‌ரும் தொல்லைக‌ளுக்கும், ச‌ல்லைக‌ளுக்கும் அத‌னால் தூசி/பாசி/ஒட்டடை ப‌டிந்துள்ள‌ ந‌ம் இத‌ய‌த்திற்கு அடிக்க‌டி இப்ப‌டி ப‌ழைய‌ நினைவுக‌ள் என்னும் பிளீச்சிங் ப‌வுட‌ர் போட்டு அதைக்க‌ழுவி சுத்த‌ம் செய்ய‌ வேண்டியுள்ள‌து.

மெருகூட்ட‌ப்ப‌ட்ட‌ உன் புதுக்க‌விதைக‌ள் இன்னும் மென்மேலும் இங்கு பிர‌சுரிக்க‌ப்ப‌ட்டு பாசிபடிந்துள்ள எம் இத‌ய‌ங்க‌ளை ப‌ரிசுத்த‌ப்ப‌டுத்த‌ட்டும்.

வாழ்த்துக்க‌ள்.

யாருமில்லா பாலைவ‌ன‌ ம‌ண‌ற்குன்றில்
மினி செக்க‌டிமேட்டை உள்ள‌த்தில் வ‌ர‌வ‌ழைத்து
அதில் சாமரம் வீசும் சாய்ங்கால‌ தென்ற‌லில்
அப்ப‌டியே சாய்ந்து கிட‌க்கின்றேன் நினைவுக‌ளில்


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன் : ஒரு ஜோக் சொல்லட்டுமா ?

(அந்தக் கால) மன்னர் தூது வந்த புறாவைப் பார்த்ததும் அப்படியே மரியாதை செய்து கம்பளத்தின் மேல் நிற்கவைத்து தலை வணங்கி கும்பிட்டானாம்..

அருகில் இருந்த மந்திரி கேட்டார் "ஏன் மன்னா தூது வந்த புறாவை வணங்குகிறீர்கள்" என்று..

(அந்த கால) மன்னர் சொன்னார் "மந்திரியாரே இதுதான் என் இரை வணக்கம்" என்று !

அது சரி எங்கே இதுநாள் வரை ஆளையேக் கனோம் குறைந்தது ஒரு மின் அஞ்சல் !? ஏன் ஏன் ஏன் !?
--------------------

அ(ந்)திரை மாலை !

இங்கே (வளைகுடா வாழ்வில்) அதிகாலையை அதிகம் கண்ட எனக்கு அந்தி மாலை அப்படியே அழைத்துச் செல்கிறது ஊருக்கு !

கன்னிக் கவிதை
கண்கள் முன்னாள் காட்டியது

தொடர்ந்து எழுதுங்கள் !
களம் இதுவென்று தெரிந்தும் கலைகட்டும் பாருங்கள் !

வாழ்த்துகள் தம்பி ஜஹபர் சாதிக்!

sabeer.abushahruk said...

அதிகாலைக்கு அந்திமாலையா? அதிரை காலைக்கு அதிரை மாலையா? சபாஷ் சரியான போட்டி!

காளையின் கன்னி முயற்சி(?) வெற்றிதான் என்பதை கிரவுனாரின் வருகைப்பதிவு நிரூபிக்கிறது.

ஜ.சா.: கிரவுனின் திருத்தத்தை நெற்றிக்கண்ணெனக் காணாமல் வெற்றிக்கெனக் கொள்ளவும்.

வாழ்த்துகள்!

கிரவுன்: பகலைக் காத்த என்றில்லாமல் பகலை காவல் காத்த என்று ஒரு வாட்ச்மேனாகத்தான் சூரியனைச் சொல்லி இருக்கிறார் என்று மாற்றர்த்தம் கொண்டு ஆளை விட்டுவிடுவோமா?

ZAKIR HUSSAIN said...

அது என்ன சிட்டுக்குருவிக்கு கீழே வாடா படம்... வாடாவில் இராலுக்கு பதில் சிட்டுக்குருவி வைக்கப்படும்னு சிம்பாளிக்கா காண்பிக்கிறாப்லயா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அது என்ன சிட்டுக்குருவிக்கு கீழே வாடா படம்... வாடாவில் இராலுக்கு பதில் சிட்டுக்குருவி வைக்கப்படும்னு சிம்பாளிக்கா காண்பிக்கிறாப்லயா? //

அசத்தல் காக்கா : எப்படி இவ்வ்வ்வ்ளோ கரெக்டா சொல்லிட்டீங்க மெய்யலுமே இப்படியும் நடந்தது வாடாவில் அல்ல மெது வடையில் சிட்டு(குருவியின்) சொட்டு விழுந்து அத்னையே வாடா என்று சொன்னவங்க இன்னும் (நமது)ஊரில் உண்டு !

crown said...

கிரவுன்: பகலைக் காத்த என்றில்லாமல் பகலை காவல் காத்த என்று ஒரு வாட்ச்மேனாகத்தான் சூரியனைச் சொல்லி இருக்கிறார் என்று மாற்றர்த்தம் கொண்டு ஆளை விட்டுவிடுவோமா?
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் குறை காணவில்லை என்பது உங்களுக்குத்தெரியும் தானே சபிர்காக்கா. நானும் இதை கவனித்துதான் எழுதுவேன். அதேவேளை நீங்களும்
ஊக்குவிப்பதற்காக மிகவும் எளிதாக தவறை சுட்டுபவரும் மேலும் எழுதுறவங்க எழுதனும்னு வக்காலத்து வாங்குவதும் உங்களின் நற்குணத்தில் ஒன்று.அதனால்தான் நடுபகலுக்கு கூட காவல் பணி செய்யும் கூர்கா என்று ஒரு புது இலக்கணம் எழுதுகிறீர்களோ?

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

கிரவுன் : ஒரு ஜோக் சொல்லட்டுமா ?

(அந்தக் கால) மன்னர் தூது வந்த புறாவைப் பார்த்ததும் அப்படியே மரியாதை செய்து கம்பளத்தின் மேல் நிற்கவைத்து தலை வணங்கி கும்பிட்டானாம்..

அருகில் இருந்த மந்திரி கேட்டார் "ஏன் மன்னா தூது வந்த புறாவை வணங்குகிறீர்கள்" என்று..

(அந்த கால) மன்னர் சொன்னார் "மந்திரியாரே இதுதான் என் இரை வணக்கம்"
-------------------------------------------------------------
அது,அது அபுஇபுறாகிம் காக்கா சாட்(ஸிக்ஸர்)

Yasir said...

கன்னிக்கவிதையானலும் நம் ஊரில் நடப்பதை நடந்ததை கண்முன் அள்ளிவந்து கொட்டிவிட்டீர்கள் அதில் நிறைய முதிர்ச்சி தெரிகிறது...வாழ்த்துக்கள் சகோ. சரக்கு நிறைய இருக்கிறது உங்களிடம் அதை கொட்டுங்கள் இங்கே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சலாம் சபீர் காக்கா,
நான் எழுதும் போது உண்மையிலேயே வாட்ச்மேனாகத் தான் கதிரவனைக் கருதி வரைந்தேன்.
ஆனால் வாட்ச்மேன் வார்த்தை, வசனத்திற்குதடை போட்டது.
என் மனதில் உள்ளதை 100% மிகச்சரியாக விளக்கி சொல்லி விட்டீர்கள்.
காரணம் சும்மா இருந்த என்னை இங்கே வம்பாக இழுத்துப்போட்ட ஆளாச்சே நீங்கள்!

Meerashah Rafia said...

படிக்கவும், புசிக்கவும் பிடித்தது

"மரியாதையே இல்லாமல் விற்க வரும் 'வாடா'க்கள்"

Shameed said...

//வாக்கிங் போக வண்டிப்பேட்டை
காத்து வாங்க காலேஜ்
செழிப்பான செக்கடி மேடு
ரயிலில்லா ரயிலடி//


ஒட்டு மொத்த அதிரை பட்டினமும் நான்கு வரிக்குள் வந்து விட்டது

வாட மேட்டர் படு சுவையாக இருந்தது

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

//நான் குறை காணவில்லை என்பது உங்களுக்குத்தெரியும் தானே சபிர்காக்கா//

நிச்சயமாக கிரவுன்.

அபு இபுறாஹீம்:

இன்றைய இரை வணக்கம் கோழிக்கா மீனுக்கா ஆட்டுக்கா மாட்டுக்கா?

//என் மனதில் உள்ளதை 100% மிகச்சரியாக விளக்கி சொல்லி விட்டீர்கள்.//

பாம்பறியும் பாம்பினகால்!

Shameed said...

வாடா(PHOTO)வெல்லாம் எப்படிப்பா சுடுரிங்க!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இன்றைய இரை வணக்கம் கோழிக்கா மீனுக்கா ஆட்டுக்கா மாட்டுக்கா?//

கவிக் காக்கா:

இன்று(ம்) இரை முனக்கம்தான் தினமும் வழக்கமான மலையாளி சாப்பாடு ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வாடா(PHOTO)வெல்லாம் எப்படிப்பா சுடுரிங்க! //

Sஹமீத் காக்கா:

அதானே எவ்வ்ளோ மருவாதையா வாங்க போ(ன்)னா கிடைப்பது வாடா தான் காக்கா !

அதிரைநிலா said...

நம்மூரில் பல சாய்ங்கால கல்யாணம் நடக்கும் இன்றய நாளில் அது சம்பந்தப்பட்ட கவிதை வார்த்தைகலும்,வாடா மல்லியப்பூ,புதிய மஹ்ரிப் காத்து என அறிவியலோடு இஸ்லாமிய அதிரையை கொண்டு மிக அருமயாக இருக்கு இந்த கவிதை.இதுபோன்றதை அடிக்கடி போடுங்கள்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…
//நான் குறை காணவில்லை என்பது உங்களுக்குத்தெரியும் தானே சபிர்காக்கா//

நிச்சயமாக கிரவுன்.

அபு இபுறாஹீம்:

இன்றைய இரை வணக்கம் கோழிக்கா மீனுக்கா ஆட்டுக்கா மாட்டுக்கா?

//என் மனதில் உள்ளதை 100% மிகச்சரியாக விளக்கி சொல்லி விட்டீர்கள்.//

பாம்பறியும் பாம்பினகால்!
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா! நன்றி!.
பாம்பின் கால் பாம்பறியும், இதற்கு மகு(டம்)டிக்கு ஆடும் பாம்பாக நான் இருக்க விரும்பவில்லை. ஆதே வேளை நான் சொல்ல விழைவது. பாம்பின் கால் பாம் பறியும் என்பது ஒரு கால் நூற்றாண்டு சொல். நாம மாத்தலாமே??? "பண்பானவர்களை பண்பானவர்கள் அறிவர்". நல்லா இருக்கா சொல்லுங்களே!!!!( புதிய இலக்கணம் எழுதி பார்போமே இக்கணத்திலிருந்து)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் சொல்லியது போல் எண்ணிலடங்கா சொல்தொடர்கள் உள்ளன இங்கே மிகத்தேர்ந்த எழுத்தர்கள் அது போல் உள்ள வார்தைகளையும் அதற்கு இணையான வேறு வார்தைகளையும் அறிமுகப்படுத்தலாமே. நான் சொல்ல வரும் சின்ன உதாரணம் சும்மா சிவனேன்னு இருந்தேன்னு சில இந்து நண்பர்கள் சொல்வார்கள். அவர்கள் வணங்கும் கடவுள் பெயர் சிவா அதனால் சும்ம சிவேனேன்னு கிடந்தேன் சொல்வார்கள். நம்மில் சிலர் அதை அப்படியே சொல்வது பல முறை கண்டிருக்கிறேன் அதை சும்மா அல்லாஹ்ஹுன்னு கிடந்தேன்னு மாற்றி பயன் பாட்டில் கொண்டுவரனும். வரும் தலை முறைக்கு இது உதவியாக இருக்கும். என்னற்ற ஆரிய சித்தாந்தம் நம் மொழியில் கலந்துவிட்டது அதை களையவேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு): இப்படியும் சொல்லலாம்(டா)ப்பா... கவியின் உயிரை வரிகளுக்குத்தான் தெரியும்..

அதிருக்கட்டும் நம்மூரிலா இதற்கு பஞ்சம், அல்லஹுங்க்காவல் ! யாஅல்லாஹ்ன்னுலா இருந்தேன் ! இப்படி நிறைந்த்திருக்கே... MSM மற்றும் Sஹமீத் காக்கா பாடு இனிமே...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// சும்மா அல்லாஹ்ஹுன்னு கிடந்தேன்னு மாற்றி பயன் பாட்டில் கொண்டுவரனும்.//
நானே அல்லாஹ்.. ண்டு இருக்கேன் நீவெறெ யான்டா வாப்பா என்ற வார்த்தயெல்லாம் நெரைய நம்மூரு பொம்பளைகளிடம் உண்டே!

crown said...
This comment has been removed by the author.
crown said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
// சும்மா அல்லாஹ்ஹுன்னு கிடந்தேன்னு மாற்றி பயன் பாட்டில் கொண்டுவரனும்.//
நானே அல்லாஹ்.. ண்டு இருக்கேன் நீவெறெ யான்டா வாப்பா என்ற வார்த்தயெல்லாம் நெரைய நம்மூரு பொம்பளைகளிடம் உண்டே!
----------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். சகோ. நானும் அதை அறிவேன். இதை உதாரணமாகத்தான் சொல்லியுள்ளேன் . என்னற்ற வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளது.அதை களையனும் என்ற ஆதாங்கமே நான் சொன்ன சிறு தகவல்.அபு இபுறாகிம் காக்கா சொன்னது போல் சகோதர்கள்.... அடுத்து படையெடுத்து வரட்டும்... நம் இனம் வெல்லட்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வழியமைத்த(நெ.காக்கா),
வழிகாட்டிய(நெ.மச்சான்),
காயவைத்த(கதிரவ{க்ரவ்}னால்),
களமிரக்கிய(கவிகாக்கா),
கருத்திட்ட,
கண்ணுற்ற
அனைவருக்கும் சலாமும், நன்றியும்.

மீண்டும் இன்சா அல்லாஹ்...

crown said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
வழியமைத்த(நெ.காக்கா),
வழிகாட்டிய(நெ.மச்சான்),
காயவைத்த(கதிரவ{க்ரவ்}னால்),
களமிரக்கிய(கவிகாக்கா),
கருத்திட்ட,
கண்ணுற்ற
அனைவருக்கும் சலாமும், நன்றியும்.

மீண்டும் இன்சா அல்லாஹ்...
------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் காய வைக்கவல்ல கைவைத்தது. நாம் கைசேதமாகி போய்விடக்கூடாது என்பதால் சிறு திருத்தம் சொன்னேன் இதில் வருத்தம் இருந்தால் நான் சொல்லியதில் அர்தம் தப்பி இருந்தால் மன்னிக்கவும்.பொருத்தம் இருந்தால் பொருந்திக்கொள்ளவும். அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

crown சொன்னது…
// நான் காய வைக்கவல்ல கைவைத்தது. நாம் கைசேதமாகி போய்விடக்கூடாது என்பதால் சிறு திருத்தம் சொன்னேன் இதில் வருத்தம் இருந்தால் நான் சொல்லியதில் அர்தம் தப்பி இருந்தால் //

வ அலைக்குமுஸ்ஸலாம் சகோதரர் தஸ்தகீர்,
வருத்தமுமில்லை,தப்புமில்லை.பொருத்தம் மட்டுமே.
இதற்குமேல் சபீர் காக்கா தான்(பாம்பின் கால் பாம்பறியும்) விளக்கம் அளிக்கனும்.

Unknown said...

அசலாமு அழைக்கும் ஜகபர் சாதிக் ,
முதல் கவிதைமாதிரி தெரியவில்லை ...
சில வரிகள் ஊர் நினைப்பை கிளறிவிட்டது ..
தொடர்ந்து எழுதவும்

sabeer.abushahruk said...

கிரவுன், உங்கூர்ல நடக்கவியலாததற்கு "keep your fingers crossed " என்று சொல்வதை காப்பியடித்து நம்மவரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். "இனி அல்லாஹ் விட்ட வழி" என்பதைத்தான் அவர்கள் " இனி சிலுவை (cross) விட்ட வழி " என்று சொல்கிறார்கள். எனவே நம்மவர் தவிர்க்கனும். மிக்க அறிந்தவன் ஆல்லாஹ் ஒருவனே.

மேலும் பாம்பினத்தின் இருப்பிடத்தை(பாம்பின கால்) பாம்பறியுமா பாம்பின் காலை(?)பாம்பறியுமா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவி காக்கா அவர்களே,நான் சொன்ன நன்றியிலும் வருத்தமாக நினைத்துக்கொண்டதற்கு தான் கிரவ்னாருக்கு விளக்கம் அளிக்க வேண்டுகோள் விடுத்தேன்.("பண்பானவர்களை பண்வானவர்கள் அறிவர்")

sabeer.abushahruk said...

ஜ. சா.: இது கிரவுனோடு விவாதிக்க நான் போட்ட பிட்டு. நீங்க கண்டுக்காதிய. டோன்ட் ஒர்ரீ பீ ஹேப்பீ...

sabeer.abushahruk said...

ஜ.சா:

//கைவைத்தது
கைசேதமாகி
திருத்தம்
வருத்தம்
அர்த்தம்
பொருத்தம்//

இத மட்டும் கவனியுங்கள். இந்த வார்த்தை ஜாலங்களை வரவழைத்து ரசிக்க நானும், கிரவுன் காக்காவென்று அழைக்கும் தம்பியும் கிரவுனை வம்புக்கிழுப்பது இந்த வலைப்பூவின் தர்மம். ஜாயின் பண்ணிக்கோங்க.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

கிரவுன், உங்கூர்ல நடக்கவியலாததற்கு "keep your fingers crossed " என்று சொல்வதை காப்பியடித்து நம்மவரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். "இனி அல்லாஹ் விட்ட வழி" என்பதைத்தான் அவர்கள் " இனி சிலுவை (cross) விட்ட வழி " என்று சொல்கிறார்கள். எனவே நம்மவர் தவிர்க்கனும். மிக்க அறிந்தவன் ஆல்லாஹ் ஒருவனே.

மேலும் பாம்பினத்தின் இருப்பிடத்தை(பாம்பின கால்) பாம்பறியுமா பாம்பின் காலை(?)பாம்பறியுமா?
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். முதலில் ஒரு மேதை என்னைப்போல் ஒருவனிடம் விவாதம் என்று சொல்வதே எனக்கு சிறப்பை ஏற்படுத்துகிறது.மேலும் இதுபோல் குறுக்கீடு(கிரார்ஸ்)கள் வேண்டாம் என்றுதான் உங்களைபோல் உள்ளவர்களிடம்
கிளாஸ் நடத்துங்கள் என்றேன். இக்லாஸ் உள்ளவங்க அந்த கிராஸை, கிராஸ் பண்னாமல் பாஸ் ஆகிவிடுவாங்க.சிலுவைகளை நிலுவையில் வையுங்கள். நேரம் உங்கள் தோழுகையை நிலை நிறுத்துங்கள், அல்லாஹ்விடம் சலுகை பெருங்கள்.
இதுதான் நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமை.
மேலும் பாம்பினத்தின் இடத்தை பாம்பும் அறியும், பாம்பு பிடிப்பவர்களும் அறிவர்.
பாம்பின் காலை பாம்பறியும் நாம் நம் காலை அறிவதுபோல்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு) என்ன கிராஸ்(டா)ப்பா ! எப்பவுமே அதனை கிராஸ் என்றே வைத்திடுவோம் நம் அகராதியிலும் !

crown said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
கவி காக்கா அவர்களே,நான் சொன்ன நன்றியிலும் வருத்தமாக நினைத்துக்கொண்டதற்கு தான் கிரவ்னாருக்கு விளக்கம் அளிக்க வேண்டுகோள் விடுத்தேன்.("பண்பானவர்களை பண்வானவர்கள் அறிவர்")
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் தம்மை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை . அதே வேளை தம்மிடம் தவறு கண்டு பிடிப்பதும் என் வேலையல்ல. நான் திருத்தம் சொன்னது உம்மை காய்சவல்ல நன்மை காய்க்க! எனக்கு தூசெய்யுங்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

sabeer.abushahruk சொன்னது…
ஜ.சா:

//கைவைத்தது
கைசேதமாகி
திருத்தம்
வருத்தம்
அர்த்தம்
பொருத்தம்//

சலாம் காக்கா,
வம்புக்கிழுப்பதில் கில்லாடி,கிங்,க்ரவ்ன் என்பதை தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.ஓகே.ஹேப்பி.

சலாம் க்ரவ்ன்,
என்னை காய்ச்சியாவாது உங்களுக்கு நன்மை கிடைக்க கண்டிப்பாக துஆ செய்கிறேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்த கவிதை(அந்தி மாலை) வெளியிட்ட ஞாயிறு அன்று அதிரையில் மூன்று மாலை கல்யாணமும், மாலையில் ஒரு மரணமும் (இன்னாலில்லாஹி...)
சரியான நாளில் களம் அமைத்த (அ.நி.) தெளிவான நெறியாளர்கள்.
அதோடு மட்டுமல்லாமல் கதிரவனுக்கு ஞயிறென்ற மற்றொரு பெயரும் உண்டு.அந்தக் கதிரவனால் நான் காய, க்ரவ்ன் நன்மை காய்க்கப்பெற்ற நாளாகி,அது மட்டுமல்லாமல் எனது துஆ வேறெ உண்டு.எல்லாத்தையும் நீதிகாத்த கவி காக்காக்கும், அவொ தம்பீன்டு சொல்ற காக்காக்கும் என்நன்றி நிச்சயம் உண்டு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு