லண்டன் ! பெரும்பாலோரின் கனவுக்குள் வந்து செல்லும் நகரம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் நகரம் என்ற கூடுதல் தகவலை சொல்லித்தான் தெரிய வேண்டுமா !?
இதற்கு முன்னர் பனிப்பொழிவில் என்மொழி என்று அழகிய பேசும் படங்களை நம் அதிரைநிருபரில் பதிந்தோம், அதனைத் தொடர்ந்து பனி வீழ்ந்த பொழுதுகள் கழிந்ததும் மலர் எழுந்து மனதிற்கு குதூகலம் தரும் இந்த மலர்வனம்.
கண்களால் கைது செய்தால் என்னோடு இருந்திடுமே ஆதலால், கையடக்க கேமராவின் துணை கொண்டு அடைத்துக் கொண்டேன் என் மனத் திரையிலும் இந்த பதிவில் பளிச்சிடும் படங்களாக.
இதோ உங்களின் பார்வை பட்டு மலர்களும் மயங்கட்டும் !
M.H.ஜஹபர் சாதிக்
44 Responses So Far:
தாயின் பாதத்தில்தான் சொர்க்கம் இருக்கின்றதென உதிரும் மலர்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கவிஞர் உமர் கயாம் பாடினார்.
இந்த கவின் மிகு காட்சிகளை படத்தில் பார்ப்பதற்கே இப்படி மகிழ்வைத்தருமென்றால் நேரில் பார்ப்பவர்கள் - படமெடுப்பவர்கள் பாக்கியம் செய்தவர்களே.
வாழ்த்துக்கள் எம். எச். ஜெ.
உங்களுக்கு ஒரு ஜே!
கொத்துக்கொத்தாய் லண்டன்!
கான்க்ரீட் காடுகளையே
லண்டன் என்று காட்டுவர்
இதோ
கலர் கலராய் லண்டன்.
எம் ஹெச் ஜே,
இப்படி
பூக்களுடனான
உஙகளின் பரிச்சயம்
ஊட்டுக்காரவங்களுக்குத் தெரியுமா?
அழகான பூக்களைச் சரமாகத்
தொடுக்கவும்
அழகான பூக்களைப் படமாக
எடுக்கவும்
ரசனை வேண்டும்.
நீர்
ரசனை மிக்கவர்தான்.
வாழ்த்துகள்
கடைசிப் படம் சற்று வித்தியாசமானது.
கொம்பைத் தாவி
கொடிகள் மேவி...
படரும்
இங்கு
வேலிக்குக் காவலாய் மலர்கள்
விழிக்கு விருந்தய் கோலங்கள்
ஒலிம்பிக் நகரம் மக்களை கவர செயற்கையாய் வண்ணமயமாய் காட்சி தரும் இவ்வேளையில் இயற்கையாய் மனதை கவர இறைவன் அளித்த வண்ணமலர்கள் சரியான நேரத்தில்...
ஒலிம்பிக் நகரம் மக்களை கவர செயற்கையாய் வண்ணமயமாய் காட்சி தரும் இவ்வேளையில் இயற்கையாய் மனதை கவர இறைவன் அளித்த வண்ணமலர்கள் சரியான நேரத்தில்....
டவர் பிரிட்ஜ்க்கு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் லாவண்டர் மலர்களுடன் என்னையும் உட்படுத்தி எடுத்த புகைப்படம் என் வாழ்வில் மறக்க முடியாது...லண்டம் மலர்களின் பூங்கா...சுத்தமான காற்று...இப்புகைப்படம் என் லண்டன் நினைவுகளை தூண்டி விட்டது...இன்னொரு வியாபார பயணம் விரைவில் மேற்க்கொள்ள ஆசையைத்தூண்டி விட்டீர்கள்
அன்புச் சகோதரர் எம்.ஹெச்.ஜே, அஸ்ஸலாமு அலைக்கும், ரமலான் கரீம்!
அலைபேசியில் அபூபக்கரின் “கமர்கட் கடி” பாதி உரையாடலில் உங்கள் பாசமலர்க் கொய்தேன்; இன்று காமிராக் கவிதையில் வீசும் மலர்வாசம் கண்கட்கு விருந்தாக நுகர்ந்தேன்.
தென்றலின் தீண்டுதலில்
மன்றலின் மலர்வாசம்
குன்றாமல் வீசுதற்போல்
உன்றனரும் படபிடிப்பு
தொட்டுச் செல்லும்
கட்டிடப் பூந்தொட்டி
மொட்டும் மலருமாய்
சுட்டும் விழிச்சுடரில்(காமிராவில்)
பட்டுச் சென்றது.....!!
மேதகு இப்ராஹிம் காக்கா.
பார்ப்பது, படமெடுப்பது பாக்கியமென்றாலும் நீங்கள் முதலில் கருத்திட்டது பெரும் பாக்கியமே. அதனாலெ உங்களுக்கும் ஒரு ஜே!
நேசமுள்ள சபீர் காக்கா.
காங்ரீட் காடுகள்: என்னவொரு அழகு எதிர்மறை!
பூக்களின் பரிச்சயம் வூட்டுக்காரவங்களுக்கும் தெரியும். ஏன் தெரியுமா? அதனாலெ பிரச்சனையும் கூட? அது ஒன்னுமில்லெ ஹே பீவர்.
ரசனை அப்படின்னா சில சமயம் உங்க கவியோடு போட்டி போடுவது போல மூன்றாம் கண் புகழ் ஹமீதாக்காவோடு இதிலும் போட்டி அவ்வளவு தான்.
கடைசியாய் சொன்ன மலரும் அழகு!
சகோ.யாசிர் சொன்னதிலிருந்து...
பல வருசம் விளம்பரம் செய்தும் நேத்தைய கால்பந்தாட்டத்தில் 45% இருக்கைகள் காலியாயிருந்ததாம். அதனாலே இதெ காட்டியாவது ஆசையை காட்டி வருக வருக என அழைக்கிறோம். விரைவில் வர என் துஆ
கவியால் கலை கலாம் காக்கா சொன்னதிலிருந்து...
வ அலைக்கு முஸ்ஸலாம். அன்று அதிரையில் அலைபேசியில் உரையாடிய நினைவு இன்னமும் வாடாமல் மலராய் மனமாய் இருப்பது தெரிந்து மிக்க மகிழ்சி. ஜஸாக்கல்லாஹ் ஹ்ஹைர்
to Brother MHJ,
Good sense of photography...in future try to change the object & locations & focus distance in the photographs...we will have more variety
எம் ஹெச் ஜே:
பூக்கள்
கூந்தலில் மட்டுமல்ல
கூரையிலும் அழகுதான்...
அந்த
வெள்ளைப் பூக்கள்...
நிறமின்றியே பூத்தனவா
அல்லது
வண்டுக் கூட்டம் மரித்தபின்
வர்ணம் உதிர்த்த
விதவைப் பூக்களா!?
என் வீட்டுப் பூவோ
ஈதுக்குப் பிறகுதான்
இங்கு வருமாம்
இவ்வேளையிலும்
என் விழிப்பூக்கள்
உறங்காததையும்
படமெடுங்களேன்
லண் டனிலிருந்து
ட்டன் ட்டன்னாய் பூக்கள்
கட்டியவளுக்குச் சரி -
கட்டிடத்திற்குமா
பூக்கள் பிடிக்கும்!
மேலைநாட்டில் உமக்கு
விதவிதமாய்ப் பூக்கள்
பாலைநாட்டில் எமக்கு
உஷ்னமாய் ஒரே பூ...
உச்சியில் சூரியன்!
படமெடுக்க முயன்றால்
உடம்பெப்படியிருக்கு
என்று கேட்கும்
சூடான பூ!
அஸ்ஸலாமு அலைக்கும்.
முதல் படம்: பனிதுளிகளின் உறக்கமா? இல்லை பூக்கொத்தின் ஊர்வலமா(கிளைவலமா?).கொத்து,கொத்தாய் பூத்த முத்தா? இல்லை கொடியில் உறங்கும் மல்லிகையா?
பறவைகள் ஏதும் வந்து விடாமல் பறவையின் ராஜாவின் காவல் பார்வையா, இல்லை இவை பூவின் மேல் காதல் கொண்ட ராஜ பறவையா?(கவிவேந்தர் எழுதிவிட்டு போன பின்னே நான் எல்லாம் எப்படி குப்பை கொட்டுவது?சபிர்காக்காவின் வருகைக்குப்பின் என் கவிதைகளெல்லாம் சருகுகளே)
2,3,4,5 லண்டன் வரும் அழகிகளை பொறாமை கொள்ளவென பூத்ததுபோல் வழிகளின் ஓரத்தில் ஆங்கேங்கே ஒய்யாரமாய் நிற்கும் அழகில் எந்த ரதியும் மயங்கிபோவாள்.அப்படி ஒரு இயற்கையின் லிங்கில் இந்த பிங்க் மலர்கள்.
6 வதுபடம்:கட்டிடங்கள் அழ ஆரம்பித்துவிட்டது பூக்களை தாங்கிய மரத்திடம்... சற்று ஓரமாய் ஒதுங்கி நில்லேன் எங்களையும் எல்லாரும் பார்கட்டுமே! அதானால் தேமே என அழுத கட்டிடங்களிலிருந்து ஒதுங்கி நிற்கிறது இந்த மரம்! இதுதான் இயற்கை செய்யும் அறம்.
7வது படம்: ஈசானிமூளையில் மேகம் பஞ்சு மெத்தை போட்டிருக்க இங்கே பார் நானும் என் அழகு தோகை விரித்து காட்டுகிறேன் என இப்பூமரம் இருக்க மரத்துபோய் மேகம் அப்படியே நின்றிவிடும் காட்சியில் கவிதை மழை கருவாகிறது.
8வது படம்: உயிர் பூக்களில் நன்மை தரும் நோன்பூ பூத்திருப்பதால் ஆன்மாவின் அழகைப்போல் இந்த பூக்களும் இந்த மாதத்தில் பூத்ததால் பூரித்து புளங்காகிதம் அடைந்து துன்பம் துறந்த தும்பை பூவாகியதோ???
11.ஈழத்தமிழர்கள் மஞ்சல் நீராட்டு நாடாத்தினரோ பூப்பெய்த வண்ணமலர்களுக்கு ?
எம் ஹெச் ஜே, விருந்து கிடைத்ததா? விருந்து கிடைக்காவிட்டால் பரவாயில்லை இங்கே அ. நி-ரில் காமிராகவிஞன் விருது கிடைக்க நான் உத்திரவாதம்.
உயர வழி தரும் ஜாஹிர் ஹுசைன் காக்கா சொன்னதிலிருந்து...
தங்களின் மேலான ஆலோசனைகளை கிரகித்துக் கொள்கிறேன்.நன்றி.
கவிக்காக்கா.
உங்கள் கவியால் வரவுகள் மலர் வண்ணங்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன!
சூரியப்பூ
அது சூடான பூ மட்டுமல்ல
இந்த வண்ண மலர்களுக்கு
உயிர் கொடுத்து சூட்டிக்கை
ஊட்டும் சுவாசப்பூ!
கிரவ்னின் வருகையிலிருந்து...
மிக்க மகிழ்சி!
பூக்களின் சுவையறிந்து தனித்தனியாய் தேன் குடித்து நுகர்ந்து செல்லும் வெள்ளை வண்டு.
மீதியை நுகர தாமதம் உண்ட மயக்கமா? அல்லது நோன்பு காலமா?
அஸ்ஸலாமு அலைக்கும். மனதை கொள்ளை கொள்ளும் மலர்களை கண்டு தேன் குடிக்கும் இந்த வெள்ளை?? வண்டு!தேன் குடித்த மயக்கமல்ல! நோன்பிருந்தேன், அதனால் சற்று வலுவிழந்தேன், ஆனாலும் சுவைத்தேனை சகரில் சுவைத்தேன் இந்த தேன் சுகர் இல்லாமல் இனிப்பதேன்? எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருனையை என்னவென்பேன்? எப்படி எடுத்துரைப்பேன். எல்லா புகழும் அல்லாஹுக்கே!
என்னை ஈர்த்த பூக்கள் எல்லாம் பாக்கள் இயற்ற சொல்ல!அதன் அதன் வாசனையை கற்பனையிலேயே நுகர்ந்தேன், நானும் பூக்களைப்போல் மலர்ந்தேன், இயற்கையின் அழகை கண்டு சிலிர்த்தேன்,மெல்ல நெளிந்தேன், இப்படி அழகிலும் , வாசனையிலும் வாட்டி இழுக்கும் பூக்களின் மேல் கொன்ட பொறாமையில் தான் பெண்கள் தங்கள் கொன்டையில் சூடி அதை பின் படுத்துகிறார்களோ? ஆனால் இங்கே லண்டன் வாசிகள் வீட்டின் கொள்ளையில் வைத்து பின் படுத்தாமல் வீட்டின் முன்வைத்து
தன் வீட்டை அழகாக்கி வைத்துள்ளனர்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அடடா! மெச்ச மொழி இல்லை. எம் இனிய கவித் தோழர்கள் சும்மாவே சுரம் சொட்டும் கவிதை தரும் வல்லவர்கள். இவர்களுக்கு பூவைக் காட்டிய உடன் பொளந்து கட்டுகிறார்கள். இதே எங்கள் கவியரசர் சபீர்
//அந்த
வெள்ளைப் பூக்கள்...
நிறமின்றியே பூத்தனவா
அல்லது
வண்டுக் கூட்டம் மரித்தபின்
வர்ணம் உதிர்த்த
விதவைப் பூக்களா!? // என்று இதயத்தின் இடது ஆர்டிகிளை கவிதைப்பூச்செண்டால் அடிக்கிறார். ( இதில் பிரிவாற்றாமை வேறு )
வார்த்தைகளின் வடிவமைப்பாளர் கிரவுன்
//கொத்து,கொத்தாய் பூத்த முத்தா?//
//இயற்கை செய்யும் அறம்.// //காட்சியில் கவிதை மழை கருவாகிறது//
//உயிர் பூக்களில் நன்மை தரும் நோன்பூ//
என்றெல்லாம் சொல்லாட,
கவியன்பன் தன் பங்குக்கு
//தொட்டுச் செல்லும்
கட்டிடப் பூந்தொட்டி
மொட்டும் மலருமாய்
சுட்டும் விழிச்சுடரில்(காமிராவில்)
பட்டுச் சென்றது.....!!// என்று மொட்டுக்களைப்பார்த்து மெட்டெடுக்க
படங்கள் தந்த ஜாபார் சாதிக் அவர்களும் கவிதையிலேயே கவியரசின் சூரியனை சொல்கொண்டு பிளக்க எங்களை சுற்றிலும் பூவாசம், கவி வாசம்.. இவற்றால் எங்கள் சுவாசம் இனிமையும் இதமும் பெற்றது இன்று.
//காங்க்ரீட் காடுகள்//
தம்பி சபீர்! நீங்க ஊதும் நாதஸ்வரத்தில் இருந்துதான் இப்படி பிரவாகம் வருமா? எது கவிதை என்பதற்கு இதுவே உதாரணம்.
இங்கே தமிழும், கவிதையும் !
ஒலிம்பிக்கில் ஓடுகின்றன !
அபு இபுறாகீம்
இது எதையுமே நோன்பு திறக்க யூஸ் பண்ண முடியாது. உறைப்பு கூடாமல், அடி பிடிக்காமல், சுடுகஞ்சி வாசம் இல்லாமல், நோன்புக்கஞ்சி வாடையோடு கஞ்சி செய்வது எப்படி என்று ஏதும் லிங்க் இருந்தால் தாங்களேன். இன்று லீவுதானே, ட்ரை பண்றேனே.
பின்குறிப்பு: செய்முறை, ஒரு கையால் மட்டுமே செய்வதுபோல் இருக்கவேண்டும். இன்னும் ஆப்ரேஷ்ன் வலி மிச்சமிருக்குப்பா.
பின்பின்குறிப்பு: இன்னிக்கு இங்கு நீங்க வருவீங்க என்பதும் நினைவிருக்கட்டும். சொதப்புனா உங்களுக்கும் நிறைய கஞ்சி வச்சிடுவேன்.
படங்களுக்கு இட்ட தலைப்பு அபாரம் ,,,
பனி விழும் மலர்வனம் .....
படைபாளியின் தரமாய் எழுத்திலும் படத்திலும்
தரம் காண்கிறேன் ..அமைதிக்குள் ஆழம்
ஜகஅபரின் படைப்பு ..படத்தின் பின்னணி ஆகாயம்
நல்ல ரசனை ..
அழகோ அழகு அப்படி ஒர் அழகு கவனித்தீர்க்ளா மரங்கள் என்றால் பசுமை இருக்கும் இதில் பசுமையை தவிர மற்ற அனைத்து வன்னங்களும் கொட்டிக்கிடக்கிறது
மைத்துனருக்கு வாழ்த்துக்கள்
நெய்னா தம்பி காக்கா சொன்னதிலிருந்து...
// இங்கே தமிழும், கவிதையும் !
ஒலிம்பிக்கில் ஓடுகின்றன !//
அதுனாலெதான் காக்கா அப்பப்ப வந்து கை கொடுத்து நன்றி சொல்லி செல்ல வேண்டியதாக இருக்கிறது.
சித்தீக் காக்கா சொன்னதிலிருந்து...
தங்களின் நல் வரவுக்கு நன்றி! ஆனால் அவொ வரவுக்குப் பின் இங்கே உங்க வரவு கம்மியாக தெரிகிறதே!
வாங்க மச்சான்
வரவு மகிழ்ச்சியை தருகிறது.
நண்பர் சித்தீக் அவர்கள் வர்ர வரை வெய்ட் பண்ணினியலா?
பசுமைக்கு முன்னே இத்தகு வகைவகையான வண்ணங்கள். அதுவே இம்மலர்களின் சிறப்பு.
கலர் பூக்களும் வானமும் கொள்ளை அழகு
கவிக்காக்கா அந்த பக்குவத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச உங்களுக்கு எந்த லிங்க்-உம் தே வைஇல்லை ஒரு ரிங்க் எனக்கு பண்ணி இருந்தால் உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பாக கருதி சூப்பர் நோன்புக்கஞ்சி காய்ச்சி தந்திருப்பேன்...உண்மைதான் காக்கா இது நானும் ரவுடிதான் டைப் இல்லா....
படைத்தவன் படைத்த
பாமாலை
பாரெங்கும் பூத்திருக்கும்
பூஞ்சோலை
கருப்பையின் கதகதப்பு
அன்னையின் அரவணைப்பு
அத்தனையும் வாடாத பூ
மனைவியின் இதழ்
மலரும் சிரிப்பு
மாதுளையின் பூ
கன்னச் சிவப்பு
கவரும் ரோசாப் பூ
மழலையின்
மாசிலாப் புன்சிரிப்பு
மல்லிகைப் பூ
நண்பனின் நட்பு
நாளும் பாதுகாப்பு
அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சிப் பூ
உறவுகள் என்பது
கதம்பப் பூ
அத்தனைக்கும்
ஆணிவேர் அன்பு
ஆனால்,
கல்லின் மீது
பூ வீசியவர்கள்
முதன் முதலாய்
ஒரு பூவின் மீது
கல்வீசினார்கள்
தாய்ஃப் நகரத்தில்
பூவொன்று புரட்சிப்
புயலானாதால்
வெறுப்பு
அப்பூவே
கற்களை
வீழ்த்தியதும்
பெரும் வியப்பு..!!
மக்கத்தில் பிறந்து
மதீனத்தில் மறைந்த
இறைவனின்
அருட்கொடை பூ
அரசியலார் அள்ளி வீசும்
வாக்குறுதி காகிதப் பூ
என்று மினிக்கும் இலக்கியம் போலவே
தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்
அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்
சுகந்தம் தருமே சுகம்.
http://adiraixpress.blogspot.com/2012/07/blog-post_26.htm
கவிவேந்தரே! “மட்டன் கொத்து கறி நோன்பு கஞ்சி” செய்முறை இந்த லிங்கில் காணலாம். இதனை அனுப்பிய எனக்கு அழைப்பு உண்டா? அபுதபி-ஷார்ஜா-அபுதபி பயணச்சீட்டுடன் அழைப்பிருந்தால் வந்து கலக் கலாம்!
அதுவும் உங்க வீட்டுப் பூ அடுத்தத் திங்களில் தான் வருவதால், அதற்குள் வந்து விட்டு போ கலாம்!
ஒரு பூவின் மீது
கல்வீசினார்கள்
தாய்ஃப் நகரத்தில்
பூவொன்று புரட்சிப்
புயலானாதால்
வெறுப்பு
அப்பூவே
கற்களை
வீழ்த்தியதும்
பெரும் வியப்பு..!!
மக்கத்தில் பிறந்து
மதீனத்தில் மறைந்த
இறைவனின்
அருட்கொடை பூ
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஒரே திகைப்பாகவும், தித்திப்பாகவும் இருக்கு!! இதை எழுத வார்தைகள் இல்லை! அன்பை கோர்த்தபூ, கண்ணீரை வார்த்த பூ!
//இதனை அனுப்பிய எனக்கு அழைப்பு உண்டா?//
கண்டிப்பாக கவியன்பன். இன்ஷா அல்லாஹ் வாருங்கள். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் (கஞ்சி ஹோட்டல்ல வாங்கிக்கொள்வோம் :))
யாசிர், அன்பிற்கு நன்றி. உங்கள் அன்பு எனக்குத் தெரியாதா. நானோ, சைவக்கஞ்சிப் பிரியன். அதனால்தான், ஐ மேக் மய் ஓன் கஞ்சி :)
//இங்கே தமிழும், கவிதையும் !
ஒலிம்பிக்கில் ஓடுகின்றன ! //
எங்கே அமெரிக்க கவிஞர் தம்பி ஷஃபாஅத்? அடுத்த “ரிலே” அவருக்கு என்றால் இந்த ஒலிம்பிக் கவியோட்டம் சிறக்கும்; அவரிடமிருந்து மிக அற்புதமான கவிதைப் பிறக்கும்!
//கண்டிப்பாக கவியன்பன். இன்ஷா அல்லாஹ் வாருங்கள்.//
அன்பான அழைப்புக்கு ஜஸாக்கல்லாஹ் கைரன் துஆவுடன் நன்றி;வெய்யிலின் உக்கிரம் குறையட்டும்;இன்று கூட துபை வருவதாகச் சொன்ன இடத்திற்குச் செல்ல முடியாமல் இந்த வெய்யிலின் தாக்கம் என்னைத் தூக்கத்தில் இருக்கச் சொல்லிவிட்டது;அன்பாக அழைத்தவர்கட்கு என்ன மறுமொழி கூறுவாய் என்ற என் மன்சாட்சியின் குரலும் எனக்குக் கேட்கின்றது.
கண்கொள்ளா காட்சி என்று சொல்லுவாங்களே அது இதுதானா
இதுவரை பார்ர்க்காத அழகான மலர் மரங்கள்.
சூப்பர் வண்ண மலர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அநியாயமாக பூக்களின் விலைகள் எகிறி இருக்கும்.இவ்வேளையில் அ.நி.ரில் அல்லோலப்படுகிறது.வண்ண வண்ண பூக்கள்.தூவி விட்ட எம்.ஹெச்.ஜெ வுக்கு துமுக்கை இல்லா வாழ்த்துக்கள்.
மேலும் வருகை புரிந்து வண்ணங்களை அதிகப்படுத்திய சகோ சுலைமான், சகோ மாலிக், சகோ. பக்கர், சகோ.ஜலால், சகோ.ஜாபர் மற்றும் வண்ணங்களை கண்ணுற்ற கலர் நேயர்களுக்கு நன்றியும் சலாமும்.
பூக்களின் அணிவகுப்பு ஒலிபிக் அணிவகுப்பை தோற்கடித்து விட்டது வாழ்த்துக்கள்
//பூக்களின் அணிவகுப்பு ஒலிம்பிக் அணிவகுப்பை தோற்கடித்து விட்டது வாழ்த்துக்கள்//
கடசியா வந்தாலும் இதற்கு காரணம் நீங்க தான். தேங்க்யூ காக்கா.
Post a Comment