படைத்தவன் அளித்த அருட்கொடைகள் ஏராளம் அதில் ஆயிரமாயிரம் பலன்களை ஒவ்வொரு மணித்துளிகளிலும் அடைந்து வந்தாலும், மனிதனென்ற அடிப்படையில் நிறை குறை சுட்டி இறைவனிடம் கையேந்த மறந்த தருணங்களை மூன்று விதமானச் சூழலை உணர்வுகளின் உயிரோடு உறவாடும் வரிகளைக் கொண்டு காட்சிக் காணொளியாக அமைத்து இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் அழகிய பாடலாக நகர்ந்து செல்லும் காணொளிக்கு தமிழ் மூச்சு கொடுத்து அதன் அச்சு பிசகாமல் மனதில் பதிக்கும் கவிதை வரியாக வழங்கவும் அதனை அப்படியே காட்சிகளுக்குள் நடைபோட எழுத்தோடையாக்கிட உதவிய சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
நன்மை நாடி, நலன் வேண்டி பகிர்ந்தளியுங்கள் அதற்கான கூலியை அல்லாஹ்விடமே வேண்டிப் பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ் !
-- அதிரைநிருபர் பதிப்பகம்
10 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஏற்கனவே பிற மொழிகளில் பார்த்த காணொளி, அதிரை நிருபரில் தமிழாய்க் காண சிலிர்ப்பும் மகிழ்வும் ஏற்பட்டது!
உள்ளங்களை எளிதில் ஈர்த்துவிடும் காட்சி ஊடகத்தை முஸ்லிம்கள் வசப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் பயணிக்க வேண்டிய பாதையையும் சகோ. அஹ்மது அபூ ஃகாதிர் திறம்படச் செய்திருக்கிறார்.
மற்றொன்று விரிக்காமலும் கவிதையின் கருத்தில் சற்றும் சிதைவு ஏற்படாமலும் தன் எளிமைத் தமிழில் உணர்ச்சிகளை எழுத்தாய்க் கோத்திருக்கும் தம்பி சபீருக்கும் 'டைரக்டர்' தம்பி தாஜுக்கும் என மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
இதுபோன்ற காட்சி ஊடகத்தை நோக்கி நமது கால்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
அறிமுக ட்டைட்டிலில் வரும் எழுத்துருகளின் நிறம் மாற்றப்படவேண்டும் அல்லது நிழல் அகற்றப்படவேண்டும்.
ஜஸாக்கல்லாஹு கைரா!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்.
இந்தப் புதிய முயற்சியைப் பாராட்டுகிறேன்.
காபி & பேஸ்ட் ஆக இருந்தாலும் சகோதரர் ஜமீல் அவரகளின் கருத்தை வழி மொழிகிறேன்.
//உள்ளங்களை எளிதில் ஈர்த்துவிடும் காட்சி ஊடகத்தை முஸ்லிம்கள் வசப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் பயணிக்க வேண்டிய பாதையையும் சகோ. அஹ்மது அபூ ஃகாதிர் திறம்படச் செய்திருக்கிறார்.
மற்றொன்று விரிக்காமலும் கவிதையின் கருத்தில் சற்றும் சிதைவு ஏற்படாமலும் தன் எளிமைத் தமிழில் உணர்ச்சிகளை எழுத்தாய்க் கோத்திருக்கும் தம்பி சபீருக்கும் 'டைரக்டர்' தம்பி தாஜுக்கும் என மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
இதுபோன்ற காட்சி ஊடகத்தை நோக்கி நமது கால்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.//
அல்ஹம்துலில்லாஹ்.
ஆமீன்!
அல்ஹம்துலில்லாஹ்!!
அருமைத் தமிழ்!!!
காக்கா,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
தங்களின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி!
உற்சாகமூட்டும் கருத்திற்கும் சுட்டிக்காட்டிய திருத்தங்களுக்கும் நன்றியும் கடப்பாடுவும்.
முதல் முயற்சிக்கே மோதிரக்கை குட்டு என்கிற தகுதி வாய்த்ததால் அடுத்தடுத்து இதுபோன்ற பதிவுகள் தரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரித்துக் கரித்திட்ட ஈனா ஆனா காக்கா, அலாவுதீன், இப்னு அப்துர்ரஸாக், கிரவுன், எம் ஹெச் ஜே மற்றும் கண்டு கற்ற அனைவருக்கும் நன்றி!
சபீர், தாஜுதீன், அபு இபுறாகீம்.
நான் இந்த பாடலை இரண்டு மூன்று தடவை பார்ஹ்ட்திருந்தாலும் அதிலுள்ள ஆழமான அர்த்தங்கள் இப்பொழுதுதான் தெரிந்தது
ஜஸக்கல்லாஹ் கைர்
நாம் நம்முடைய உடலில் எத்தனை உறுப்புக்களை திடகாத்திரமாக பெற்றிருந்தும் அதனுடைய நாம் அதைபற்றி சிந்திப்பதில்லை அந்த சிந்தனையை தூண்டும் இந்த பாடல்களை தமிழில்தந்தவர்கள் இதுபோன்றவற்றை தொடர்ந்து தமிழில்தரவும் உங்கள் தொண்டுகள் தொடரவும் வாழ்த்துக்கள்
இன்னொன்று தம்பிகளே!
அதிரை நிருபரில் இது ஒரு புதிய பரிணாமம். இது தொடர வேண்டுமென்று நம்புகிறேன்.
நம்மிடம் புதிய படைப்புகளைத் தேடித்தர தம்பி தாஜுதீன் போல வலையில் வலைவைத்துப் பிடிக்கும் வல்லவர்கள் உண்டு.
ஆங்கிலமாய் இருந்தாலும் அரபு மொழியாக இருந்தாலும் தேன் தமிழில் அதை மறுபிறவி எடுத்துப் படைத்துத்தர தம்பி சபீர் அவர்கள் போல கவிகள் உண்டு.
நாம் தடுமாறும் போதும் தவறிழைக்கும் போதும் தட்டவும் குட்டவும் திருத்தவும் அனுபவப் பழங்களான அஹமது காக்கா மற்றும் சகோதரர் ஜமீல் ஆகியோர் போன்ற அறிஞர்கள் உண்டு.
படித்துப் பருக சிறந்த வாசகர்கள் உண்டு.
ஆகவே இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். து ஆச் செய்கிறேன்.
இந்தப் பதிவைப் பாராட்டி அவர்கள் சார்பாக ஒரு கருத்து இடும்படி பெரியவர் SMF மச்சான் அவர்கள் எனக்கு கட்டளை இட்டார்கள்.
தம்பி சபீர் அவர்களுக்கும் தாஜுதீன் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் மச்சான் SMF அவர்களின் சார்பான பாராட்டுதல்களையும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
Post a Comment