அக்கா…. தங்கை உறவு...!
அக்கா தங்கை உறவு ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் போன்றவர்கள். சிறு வயது முதற்கொண்டு மணமாகும் வரை நல்ல தோழியாக, செல்ல தோழியாக வளர்ந்து வருவார்கள். தங்கைக்கு சிகை அலங்காரம் அக்காவின் கைவண்ணமாகதான் இருக்கும். தனது மனக்குறை உடல் உபாதை பற்றி பேசிக்கொள்ளுதல் மற்றும் பல அந்தரங்க விசயங்களை பரிமாறி கொள்ளும் அளவிற்கு அற்புதமான உறவு அக்கா தங்கை உறவு. .மலர்களின் வாழ்நாளை போல மிகவும் குறைந்த ஆயுளை கொண்ட உறவு.
அக்காவிற்கு மணமான பிறகும் கூட அக்கா தங்கை உறவு சந்தோசமாகவே தொடரும்.. புதுமனபெண்ணான அக்காவிற்கு தங்கையின் பணிவிடை மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும் அக்காவின் கணவரின் பரிகாசம். மச்சினியின் பதில் பரிகாசம் அழகிய நாட்கள்.
சில வருடங்கள் கழித்து தங்கையின் கல்யாணம் நடந்தேறும். ஆனால், அந்த தருணத்தில் தான் அக்காவின் மனதில் நெருடல்கள் ஏற்படும் "எனது கணவருக்குசரியான மரியாதை கொடுக்க படவில்லை முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் துவங்கும் மனகசப்பு நாளாக நாளாக கூடுதலாகும் .அக்கா தங்கை இருவரில் யாராவது ஒருவரின் மன வாழ்வுதான் சிறந்திருக்கும். பணம் பொருள் ஈட்டுவதில் யார் கணவர் கூடுதலாக முனைகிறார்களோ ..அவர்களின் நடவடிக்கைகளால் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டாகும் கணவன் மீதுள்ள ஈடுபாடு சகோதரி பாசம் காணாமல் போய் விடுவதுதான் இயற்கை என்றாலும் சில நேரங்களில் மற்றொரு பரிதாபமான சூழல்.
ஒரு தாய் மக்களான ஒருத்தி பெரும் சீமாட்டியாகவும் மற்றொருத்தி பரம ஏழையாகவும் இருக்கும் தருணத்தில் கணவனின் சொல்கேட்டுகணவன் வழிசெல்லும் அக்கா தங்கை உறவு திசை மாறும் பறவைகளுக்கு ஒப்பாகும் இவர்கள் இருவரும் மீண்டும் சந்திப்பது சந்தோஷ மகிழ்வாக இருக்குமா என்பது சந்தேகமே ..!தனது கணவனின் இயலாமையை சொல்லி அழ உடன் பிறந்த சகோதரிக்கு நேரம் இருக்காது என்பதுடன் சந்தோசத்தில் தழைத்த சகோதரிக்கு அழுது புலம்பும் சகோதரியை காண பிடிக்காமல் போகும் நிலை பரிதாபமான நிலை.
ஒரு சகோதரி செல்வசெழிப்பில் சொந்த ஊரில் வசதி நிறைந்த மாளிகை கட்டி அதில் குடியிருக்கும் சூழ்நிலையில் கணவனின் தொழில் நிமித்தம் காரணமாக கணவர் இருக்கும் வெளியூருக்கோ ,அல்லது வெளிநாட்டிற்கோ செல்லும் போது அந்த மாளிகையை பூட்டி அந்த மாளிகைக்கு காவல் காக்க சம்பளத்திற்கு ஆள் வைத்து விட்டு செல்கிறாள் .அதே சந்தர்பத்தில் தன உடன் பிறந்த சகோதரி வீடில்லாமல் குடிசையில் வாழும் சூழல் ஏழை சகோதரி நிலையை எட்டி பார்க்க முடியாத உறவுதான் அக்கா தங்கை உறவு. பெண் பிறரை சார்ந்து வாழும் நிலை.
ஒரே வீட்டில் வாழும் சகோதரிகள் .கிழக்கு பக்கம் வாழும் சகோதரி செழிப்பாகவும் மேற்கு பாவம் பரம ஏழை ஒரே வீடு ஒரு புறம் பல சவ்கர்யங்கள் ..,மறு புறம் கஷ்டம் ஆனால் ஒருவருக்கு ஒருவர் உதவ முடியாத சூழல்...! இப்படி தான் சார்ந்திருக்கும் கணவனின் சூலில் இணைந்து கொள்ளும் சகோதரியால் உடன் பிறந்த சகோதரிக்கு உதவிட இயலா நிலை ..,சில நேரங்களில் தனது வாழ்வின் வளத்தை மேலும் அதிகரித்து கொள்ள சகோதரிக்கு பாதகமாக செயல்படும்..சகோதரிகளும் உண்டு பிறந்து வளந்ததெல்லாம் ஒரே சூழல் விதி வசத்தால் இவ்வளவு ஏற்ற தாழ்வு.
மனசாட்சியுடன் மார்க்க வழிமுறையுடன் நடந்தால் எந்த சூழ்நிலையிலும் உடன் பிறந்த சகோதரிக்கு மற்ற சகோதரி உதவிட முடியும், சிலர் வருடத்திற்கு ஐந்து ஆறு லட்சம் ஜக்காத் கொடுக்கும் நிலை இருந்தும் உடன் பிறந்த சகோதரியை எண்ணி பார்க்காத நிலையை என்னவென்று சொல்வது ..?
தொடரும்...
அதிரை சித்தீக்
14 Responses So Far:
வாழ்க்கையில் நிறைய எதிரும் புதிரும் உண்டு இதையெல்லாம் மார்க்க முறைப்படி சமாளித்து செல்பவர்களே சிறந்தவர்கள்
ராத்தா தங்கச்சி
உறவு நல்லாயிருக்கு!
உறவு நல்லாயிருக்கனும்.
அக்கால் தங்கையின் உரவு குறைந்த ஆயுல் நாலை கொண்ட மலருக்கு ஒப்பிட்டு ஆசிரியர் கூரியிருக்கிரார்
உன்மைதான்.
ஆனால் சிலகுடும்பங்களில் 5- 6 பெண் பிள்ளைகள் உல்ல ஆனால் ஒற்றுமையாய் கானப்பெருகிரோம்.
அவர்களை பற்றி சில வரிகள்
மலர்களை ஒன்று சேர்த்து
மாலையாய் கோர்த்திட்டால்
மலர் சரம்
தானாய் உதிர்ந்தால்
மலர் சவம்
இதுதான் ஒற்றுமையற்ற சகோதரிகளின் நிலய்
சரமாய் இருப்பதும் சவமாய் கிடப்பது அவர்களின் செயலில்
இளயமகலின் வருமைக்கு பரிவுகாட்டிய தந்தையிடம் மூத்த மகள் சன்டைக்குப்போனாலாம் அவலுக்கு கொடுக்கும் பங்கில் எனக்கும் வேண்டுமெண்று பாவப்பட்ட தந்தைக்கு வசதிபடைத்த மூத்தவலை சமாதானப்படுத்த கடன் வாங்கி கொடுத்து சரிகட்டினாராம்
A sister is a little bit of childhood that can never be lost. Keeping relationship even separate by inescapable circumstances will create very good combined family until end of life. An elder sister can act as a mother for her kin blood issues. All women must read this article.
Abdul Razik
Dubai
அக்கா தங்கை உறவின் வாசம் கடைசிவரை வீச வேண்டும்...தங்கையோ அக்காவோதான் சுயநலமின்றி ஒருவொருக்கொருவோர் உதவிக்கொள்ள முடியும் மற்றவர்கள் செய்தால் அது வசையாகத்தான் போகும்....சித்திக்காக்காவின் சிறந்த இன்னிங்ஸ் இந்த 6ஆம் தொடர்
அன்பு சகோதரர் சித்தீக் அவர்கள் அக்கா தங்கை உறவை சித்தரித்துக்காடி இருககிரார்கள்.
பாட்டோடு இராகம் மோதாமல் இருந்தால்தான் சரியாக இருக்கும். இளையோரை அரவணைக்கும் பக்குவமும் பாங்கும் மூத்தவருக்கும் ,மூத்தவர்களுடன் மோதாமல் சகித்துக்கொள்ளும் பக்குவமும் பாங்கும் இளையவர்களுக்கும் இருந்தால் விளைவது நிம்மதியே.
ஒன்றாக இருக்கும்போது அடித்துக்கொள்வது, முட்டி மோதிக்கொள்வது என்று இருந்தாலும், பிரிவு வருகிறபோது முட்டிய நேரத்தில் பரஸ்பரம் உதிர்த்துக் கொண்ட வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவிப்பது, அதைக்காணும் பெற்றோருக்கும் மற்றவர்க்கும் " இந்த ரோசம் கெட்ட பிள்ளைகளுக்கு இதுதான் வழக்கம்" என்று கமெண்ட் அடிப்பதும் பல வீடுகளில் வாடிக்கை.
அன்பு தம்பி ஜாபரின் ஆசைப்படி
ராதா தங்கச்சி உறவு வளம்பெறவே
நானும் ஆசை படுகிறேன் ..இத்தொடரின்
நோக்கம் அவலங்களை எடுத்து காட்டுவதும்
தொடரின் முடிவில் எப்படி ஒவொரு உறவும் இருக்க
வேண்டும் என்பதை அறி உருத்துவதும் தான்..
வருகைக்கு நன்றி
வாழ்கையில் எதிரும் புதிரும் உண்டு
அதனை மார்க்க முறைப்படி எதிர் கொள்ள
வேண்டும் ..நல்ல கருத்து..அனால் நம்மவர்
மார்க்க பேருரைகளை பொழுது போக்காக
கேட்க விரும்புகிறார்களே தவிர நடை
முறைகளுக்கு கொண்டு வருவதில்லை ..
மார்க்க முறைப்படி எதிர் கொள்வது
என்பது நல்ல கருத்து வரவேற்கிறேன்
சாகுல் காக்கா..வருகைக்கு நன்றி
அன்பு நண்பன் சபீர் (மு செ மு )
தமது கவி நய மான உவமை ..வியந்தேன்
மலர்கள் ஒன்று சேர்ந்தா மலர் சரம் ..
சேராது உதிர்ந்தால் மலர் சவம் ..
நல்ல கருத்து ..அடுத்து
கூட பிறந்த அக்காள் வறுமையில்
வாடும் தங்கையிடம் சரி நிகராக
தந்தையிடம் போட்டி போட்டு
சீதனம் பெற்றமையால் தந்தை
கடனாளியான கொடுமையை
சுட்டி காட்டியமைக்கு நன்றி
இந்த கருத்து புத்தகமாக
வெளியிடப்பட்டால் அவசியம்
சேர்த்து கொள்வேன் ..இன்னும் ஒன்றை
சொல்ல விரும்புகிறேன் கணவன்
வீட்டு சார்பாக தந்தையிடம் கூடுதலாக
வெகுமதி பெற போராடும் பெண்களும் உண்டு
அன்பு வாசகர் அப்துல் ராஜிக்
தங்களின் வருகைக்கு நன்றி
அக்கா தங்கை உறவின் வாசம் கடைசிவரை வீச வேண்டும்..
.தங்கையோ அக்காவோதான் சுயநலமின்றி
ஒருவொருக்கொருவோர் உதவிக்கொள்ள முடியும்
மற்றவர்கள் செய்தால் அது வசையாகத்தான் போகும்...\\
மிக சரியாக சொன்னீர்கள் தம்பி யாசீர் ...
ஒன்றாக இருக்கும்போது அடித்துக்கொள்வது,
முட்டி மோதிக்கொள்வது என்று இருந்தாலும்,
பிரிவு வருகிறபோது முட்டிய நேரத்தில் பரஸ்பரம்
உதிர்த்துக் கொண்ட வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவிப்பது
, அதைக்காணும் பெற்றோருக்கும் மற்றவர்க்கும்
" இந்த ரோசம் கெட்ட பிள்ளைகளுக்கு இதுதான் வழக்கம்"
என்று கமெண்ட் அடிப்பதும் பல வீடுகளில் வாடிக்கை\\
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்கள்
வெல்லாந்திகளாக உள்ளவர்கள் அவர்கள்
என்றும் நல்லவர்கள் ...அன்சாரி காக்காவின்
கருத்துக்கள் புத்தகமாக வெளியிட்டால்
சேர்த்துக்கொள்ள வேண்டிய கருத்து ..
Post a Comment