சகோதரன் சகோதரி பாச உறவின் மறுபக்கம்
சகோதரன் சகோதரி பாச உறவுகளின் மறுபக்கம் மிகவும் வித்தியாசமானது. சிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவு பெற்ற அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும் தருணத்தில் அண்ணனோ தம்பியோ வீட்டில் வம்பு சண்டை அல்லது சிறு உதவி செய்யாத போது சகோதரி மூலம் தந்தைக்கு தகவல் பறக்கும். எனவே சகோதரி என்றாலே உடன் பிறந்த சகோதரனுக்கு ஆகாது, சிறுவயது போராட்டம் குரோதம் .கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும் சகோதரி பெரியவளாக ஆனா பின்பு மரியாதை கலந்த பாசம் பிறக்கும் எல்லா உதவிகளுக்கும் சகோதரனையே நாடும் சகோதரி தான் விருப்பப்படும் தீன்பண்டங்கள் கூட சகோதரன் மூலம் வாங்கி வர செய்வாள்.
பெற்றோர்கள் தன் மகன் குடும்பத்தின் எல்லாவித பொறுப்புகளையும் ஏற்கும் தருவாயில் சகோதரியானவள் இயற்கையாகவே மரியாதையை கொடுக்க ஆரம்பித்து விடுவதும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம் .
சகோதரன் படிப்பு முடித்து பொருளீட்ட ஆரம்பித்தால் அவனுடைய சகோதரி மணவாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பிப்பது பாசத்தின் எல்லை என்றே கூறலாம். சகோதரனின் உழைப்பு ஆபரணமாகவும் வீடாகவும் மாறுவதுடன், நல்ல வரண் அமைய சகோதரனை பகரமாக வைப்பதும் உண்டு. சகோதரி, சகோதரனின் தியாகத்தை எவ்வளவு நாள் உள்ளத்தில் வைத்திருப்பாள் என்பது கால சக்கரத்தின் சுழற்சியும் வாழ்க்கை சூழ்நிலையுமே நிர்ணயிக்கும்.
இது பொதுவான கருத்து, இலக்கு நோக்கி கருத்து கூற விழைகிறேன் .....
அண்ணன் தம்பி உறவு எதிரும் புதிருமாய் இருந்து உரிமை கொள்ளும் உறவாய் மாறி மீண்டும் பகையாய் உருவெடுத்ததை கண்டோம். ஆனால் அக்கா தம்பி உறவு அதிகமாக பிளவு படுவதில்லை. அக்கா உறவு ஏறக்குறைய தாய்க்கு சமமான உறவு அக்காவிடம் தனது தேவைகளை கேட்பது அன்றாட நிகழ்வுகள் காலம் செல்ல செல்ல உறவுகள் பலப்படும் அக்காவிற்கு மணமானால் தம்பியின் மகிழ்ச்சி அலாதியானது. அக்காவின் கணவருக்கு கொடுக்கும் மரியாதை, இவைகளால் தம்பி பெரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்து செல்லும் தம்பி மீது அக்காவிற்கு தனி மரியாதையே வந்து விடும்.
மச்சானுக்கு கொடுக்கும் மரியாதை தனக்கே தருவதாக எண்ணி மகிழ்வாள். சகோதரிக்கு மணமானால், சகோதரியின் கணவன் சற்று ஏறக்குறைய எஜமானன் தோரணையில் செயல்படுவார். சற்றும் தயங்காமல் பணிவிடை செய்யும் மச்சினனின் பணிவிடை காணப்படும். தனது வாழ்க்கையின் துவக்கம் சகோதரியின் மன வாழ்க்கை கிடைத்த பின்புதான் என கூறும் சகோதரன் உறவு உயிருக்கு நிகரான உறவு. இப்படிப்பட்ட தியாக உள்ளம் கொண்ட உறவு பிரிவதும் தொடர்வதும் அவரவர் துணையின் செயல்பாடுகளை பொறுத்தே அக்கா தம்பி உறவு தொடரும்.
அதே போன்று அண்ணன் -தங்கை உறவு ..அண்ணன் தங்கைக்கு தரும் பரிசு உறவாக தொடரும் தங்கைக்கு அண்ணன் தரும் ஆதரவு ..சிறு வயது கொண்ட தங்கைக்கு பரிந்து பேசி தங்கை அன்பை பெரும் அண்ணன் ..அன்பு மிகுதியால் அண்ணனாக தெரியாமல் அன்பின் மிகுதியால் தந்தை ஸ்தானமாக தெரிவான் தங்கையின் கணவர் சின்ன மச்சான் சில நேரங்களில் தோழனாய் சுற்றி திரியும் தருணமும் உண்டுசகோதரன் சகோதரி உறவு பாசமலர்கள் தான். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது போல, இந்த உறவிலும் மறுபக்கம் உண்டு அதிரை நிருபரின் பதிவர்கள் தங்களின் எதிர்மறை கருத்தை வழங்கி இவ்வாக்கத்தை வலுப்பெறச் செய்ய வேண்டுகிறேன்.
தொடரும்...
அதிரை சித்தீக்
(தகப்பனார் பெயர் முகம்மது இப்ராஹீம்)
16 Responses So Far:
தங்கச்சி-காக்கா, ராத்தா-தம்பி உறவு பற்றி பல்வேறு கோணங்களில் அலசி இருக்கிறீர்கள்.
இந்த உறவுகள் பாசமலர் தான். இது என்றும் தொடர, சகோதரனுக்கு வாய்க்கப்பட்டவளை தன் சகோதரனுக்கு நிகராகவோ அல்லது ஒரு படி மேலோ மதிப்பது நேசம் நீள வழி வகுக்கும் என்பது என் கருத்து.
------------------------------------------------------------
உங்கள் தகப்பனார் ஆலிம்சா (முகம்மது இப்ராஹிம்) அவர்களை நினைவு கூர்ந்தவனாக, துஆ செய்தவனாக!
உறவுகளின் ஊடே கொஞ்சம் மச்சான் பெரளியையும் சொல்லுங்களேன்!
சகோ.அதிரை சித்திக்,
அண்ணன் தன் தங்கைமேலும் தம்பி தன் அக்காள்மேலும் பொழியும் அன்பு / அக்காள் தன் தம்பிமேலும் தங்கைத் தன் அண்ணன்மேலும் காட்டும் பாசம் இரண்டையும் ஒரு பட்டிமன்றத் தன்மையில் விளக்குங்களேன்.
ஏனெனில்,
எனக்கென்னவோ அண்ணன் தன் தங்கைமேல் காட்டும் அன்பே உச்சம் என்று தொன்றுகிறது.
உறவுகளை அலசும் பாங்கு நல்லாயிருக்கு. ஆனால், இன்னும் விரிவாகச் சொல்லப்பட வேண்டுமோ என்று தோன்றுகிறது.
எனக்கு இந்த அனுபவங்கள் இல்லையே !
எதுவானாலும் அது அல்லாஹ்வின் நாட்டமே அன்றி வேறில்லை !
அன்பு தம்பி ஜாபர் ..
தாங்கள் கூறுவது போல
பாச மலர்கள் தான் .
தங்களின் து ஆ விற்கு நன்றி
அன்பு சகோ சாகுல் அவர்களுக்கு .
தங்களின் அவா ..மைத்துனர் ..மச்சான்
உறவில் கிண்டல் கேலி நிகழும்
இன்ஷா அல்லாஹ்.நெகிழ்ச்சியும்
நிகழும் ..
அன்பு சகோ ..கவிஞர் சபீர் காக்கா அவர்களின்
சுவையான தேடலுக்கு நான் தயார் ..பட்டி மன்றத்திற்கு
எதிர் தரப்பு வேண்டும் ..நான் கூறுகிறேன்
அக்கா தம்பி உறவில்தான் அன்பு அதிகம்
என்பேன் ..தாங்கள் தங்களின் வாதத்தை
வையுங்கள் நான் பத்தி தருகிறேன் ..
அன்பு தம்பி ..நெய்னா தம்பி ..
தங்களை போல தான் நானும்
அக்கா..தங்கை உறவு இல்லாதவன் தான்
சமூக பார்வையாளனாய் இருந்தே
எழுதுகிறேன் ..ஒவ்வொரு உறவுகளும்
எப்படி உள்ளது என்பதை நான்
பல் வேறு தருணங்களில் பார்த்தவன்
பல உறவுகள் எனக்கு இல்லாத
உறவுகளே ..எழுத்தாளன்
நுகரும் தன்மை உடடியவன்
பல உறவுகளை பார்வையாளனாய்
பார்த்தே எழுதுகிறேன்
கவிஞர் சபீர் அவர்கள் சொன்னது,
//அண்ணன் தன் தங்கைமேலும் தம்பி தன் அக்காள்மேலும் பொழியும் அன்பு / அக்காள் தன் தம்பிமேலும் தங்கைத் தன் அண்ணன்மேலும் காட்டும் பாசம் இரண்டையும் ஒரு பட்டிமன்றத் தன்மையில் விளக்குங்களேன்.//
நெறியாளர் இதை கவனிக்கலாம். கவிகள் இருவரையும் ஆளுக்கொரு அணிக்குத் தலைமை தாங்கச்செய்து எழுத்துப் பட்டி மன்றம் ஏற்பாடு செய்யலாமே.
//நெறியாளர் இதை கவனிக்கலாம். கவிகள் இருவரையும் ஆளுக்கொரு அணிக்குத் தலைமை தாங்கச்செய்து எழுத்துப் பட்டி மன்றம் ஏற்பாடு செய்யலாமே.//
அதனாலென்ன காக்கா, இரு கவிகளும் நேரமுண்டு என்றால் நம் மனது முரண்டா பிடிக்கும் !
ஓ தாராளமாக !
ஒரு அருமையான பதிவு யென்ட்ரு தான் சொல்ல வேன்டும்
உயிரின் ஓட்டமான உறவுகளை உன்னதமாக சொல்கிறது உங்களின் இந்த தொடர்...என் பெரிய ராத்தாவை நான் இன்றும் என் தாய் போன்ற மரியாதை கலந்த பாசத்துடன் தான் பார்த்து வருகின்றேன்...தொடர்ந்து எழுதுங்கள் சித்தீக் காக்கா
தம்பி யாசிரின் தீர்ப்பு
கவிஞர் சபீர் காக்காவிற்கு
பதிலாக அமையும் என நினைக்கிறேன்
அன்பை பெறுவது என்பது தாய் மூலமே
அதிகம் எதிர் பார்க்கலாம் ..அக்காவை
தாயாக பார்க்கும் தம்பி யாசீர் நல்ல தனயன்
தங்களின் பின்னூட்டத்தை தன்களின் சகோதரி
பார்பார்களே யானால் மிக்க சந்தோசம் அடைவார்கள்
அன்பு பெருகும்
சூப்பர்
பிறக்கும் முதல் குழந்தை பெண்ணாக.
இருந்தால்.
அடுத்து பிறக்கும் குழந்தைக்கு அவல் தான் தாய்யாக இருப்பால்.
சூப்பர்
Post a Comment