Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 8 26

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2012 | ,

மச்சான் - உறவு...

கல்லூரி காலங்களில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை  ராகிங் செய்வார்கள் .. இதெல்லாம் ஏன் என்று கேட்டால் இருவருக்குள் நட்பு பாலம்  உருவாக சிறிய பரிகாச விளையாட்டு என்பார்கள். மூன்று அல்லது நான்கு வருட நட்புக்கு விபரீதமான கேலி கிண்டல் செய்வது என்றால், வாழ் நாள் முழுவதும் உறவாக திகழ போகும் ஒரு உறவை கேலி கிண்டல் செய்வதற்கு சொல்லவா வேண்டும்...!!

ஹல்வா கேட்கும் மச்சினி...

கல்யாணமாகி  முதல் நாள் காலையில் புதுமாப்பிள்ளை பெண் வீட்டை வெளியே செல்ல எத்தனிக்கும் மாப்பிள்ளையின் செருப்பு நேற்றிரவு இட்ட இடத்தில் காணாமல் தவிப்பார். வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு சப்தம் வரும் “மச்சான் செருப்பு இங்கே இருக்கு செறுப்பு வேணும்னா, எங்களுக்கு நல்ல ஸ்வீட் வங்கி தரனும்” என்ற நிபந்தனையோடு கேலி கிண்டல் துவங்கும். இந்த கிண்டல் சில வாரங்கள் தொடரும். சிலரின் கேலி கிண்டல் முகம் சுளிக்கும் அளவிற்கு கூடுதலாகும். சிலர் இனிப்பு என்று எதிர்பார்க்கும் பண்டங்களில்  உப்பை அதிகமாக போடுதல் போன்றவை நமதூரில் நாற்பது வருடங்களுக்கு முன்பு அதிகமாக காணப்பட்டது. அது கனிசமாக குறைந்து பேச்சளவில் மட்டுமே உள்ளது எனலாம். ஆனால், நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் கேலியும் கிண்டலும் கொஞ்சம் தூக்கலாகவே நடைபெறும். சில சமயம் விபரீத நிகழ்வுகளும் நடப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் ..

மாப்பிள்ளை வீட்டுக்குள் வரும் நடை பாதையில் கொட்டை பாக்கு பளிங்கு ரவை போன்றவைகளை தரையில் போட்டு அதன் மேல் புல்லு பாயை போட்டு வைத்து மாப்பிள்ளையை நடக்க வைத்து சறுக்கி விழ வைத்து வேடிக்கை பார்க்க திட்டம். அதே போன்று மாப்பிள்ளையையும் அதன்மீது நடந்து வந்தார். பாயில் கால் வைத்ததுதான் தாமதம் சறுக்கி கீழே விந்தார். பிடரியில் அடிப்பட்டு அதே இடத்தில பரிதாபமாக அவர் உயிர் பிரிந்த காட்சி அந்த பகுதியை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அந்த பகுதி மக்களின் கேலிய்ம் கிண்டலும் இன்னும் மாற வில்ல.

அன்றைய காலங்களில் புதுமண தம்பதிகளிடையே புரிந்துணர்வு ஏற்படவும் அவர்கள் இருவருக்கும் பரஸ்ப்பர உணர்வு வரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்த பட்டது. அது இன்றைய காலத்திற்கு தேவையில்லாத ஒன்று காரணம் ஆணும் பெண்ணும் இக்கால திரைப்படங்கள் சீரியல்கள் எல்லா வற்றையும் கற்று கொடுத்து விட்டதால் சம்பிரதாயங்கள் தேவை இல்லை என்றே சொல்ல வேண்டும். சில வீடுகளில் மச்சான் வரவு வெற்றியானதாகவும்  இன்னும் சில இடங்களின் துயரமாகவும் அமைந்து விடுகிறது.

மச்சான் மச்சினன் உறவு பற்றி முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன். மச்சானின் மெய் காவலன் மச்சினன் எனலாம், தூத்துக்குடி பகுதி மீனவர்கள் முத்துக்குளிக்கும் போது ஆழ கடலில் மூழ்குவார்கள். அப்போது மூழ்கும் நபர் இடுப்பில் கயிறை கட்டி  மேல் மட்டத்தில் மச்சினன் பிடித்து இருப்பார் மூச்சு முட்டும் தருணம் வந்தால் கயிறை அசைப்பார், உடனே மேல் மட்டத்தில் உள்ளவர் இழுத்து கரை எற்றுவார். அந்த கயிறு மச்சினன் கையில் தான் கொடுப்பார்களாம். ஏன் என்றால் சகோதரியின் தாலி காக்க வேண்டும் என்ற உணர்வு மச்சினன் இடம் அதிகமாக இருக்குமாம்.   
தொடரும்...
அதிரை சித்தீக் (தகப்பனார் பெயர் முகம்மது இப்ராஹீம்)

26 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பழைய சம்பிரதாயங்கள் நல்லாயிருக்கு!
இன்னும் கொஞ்சம் நீளமாய் தந்தால் இன்னும் நல்லாயிருக்குமே!

Iqbal M. Salih said...


//மச்சான் மச்சினன் உறவு பற்றி முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன். மச்சானின் மெய் காவலன் மச்சினன் எனலாம், தூத்துக்குடி பகுதி மீனவர்கள் முத்துக்குளிக்கும் போது ஆழ கடலில் மூழ்குவார்கள். அப்போது மூழ்கும் நபர் இடுப்பில் கயிறை கட்டி மேல் மட்டத்தில் மச்சினன் பிடித்து இருப்பார் மூச்சு முட்டும் தருணம் வந்தால் கயிறை அசைப்பார், உடனே மேல் மட்டத்தில் உள்ளவர் இழுத்து கரை எற்றுவார். அந்த கயிறு மச்சினன் கையில் தான் கொடுப்பார்களாம். ஏன் என்றால் சகோதரியின் தாலி காக்க வேண்டும் என்ற உணர்வு மச்சினன் இடம் அதிகமாக இருக்குமாம்.//

கடைசி பாராவில் சகோ.சித்தீக் அவர்கள் எழுதியிருக்கும் உதாரணத்தை நிறையபேர் சொல்ல நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

நண்பர்கள் யாருக்காவது அனுபவம் இருக்கிறதா?

Shameed said...

//மச்சான் மச்சினன் உறவு பற்றி முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன். மச்சானின் மெய் காவலன் மச்சினன் எனலாம், தூத்துக்குடி பகுதி மீனவர்கள் முத்துக்குளிக்கும் போது ஆழ கடலில் மூழ்குவார்கள். அப்போது மூழ்கும் நபர் இடுப்பில் கயிறை கட்டி மேல் மட்டத்தில் மச்சினன் பிடித்து இருப்பார் மூச்சு முட்டும் தருணம் வந்தால் கயிறை அசைப்பார், உடனே மேல் மட்டத்தில் உள்ளவர் இழுத்து கரை எற்றுவார். அந்த கயிறு மச்சினன் கையில் தான் கொடுப்பார்களாம். ஏன் என்றால் சகோதரியின் தாலி காக்க வேண்டும் என்ற உணர்வு மச்சினன் இடம் அதிகமாக இருக்குமாம். ///

தூத்துக்குடி பக்கமெல்லாம் வரதச்சனை கொடுமை இருக்காதோ அப்படி இருந்து இருந்தால் கைரை மச்சினன் கையில் கொடுத்து இருக்க மாட்டார்கள்

sabeer.abushahruk said...

சகோ. சித்திக்,

தங்களின் தொடர் மனித வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றான உறவுகளைப் பற்றி அலசுகிறது.

அருமையான கான்ஸெப்ட். இன்னும் ஆழமாக அலசுங்கள்.

பொதுவாகவே, உறவுகள் உணர்வுகளைக் கொண்டு வரையறுத்து உதாரணங்கள் கொண்டு விளக்கப்பட வேண்டும். தாங்கள் சம்பவங்களைகொண்டு மேலோட்டமாகத் தொட்டுச்செல்கிறீர்கள். தங்களின் திறமையைக் கேள்விப்பட்டிருப்பதால் எதிர்பார்ப்பு கூடிப்போய்விடுகிறது.

கருவை இன்னும் தீவிரமாக அனுகுங்கள்.

வாழ்த்துகள்

மேற்சொன்னவை வாத்தியாராகவல்ல...வாசகனாக மட்டுமே. :-)

Ebrahim Ansari said...

மச்சான் மச்சினன் உறவு பற்றி முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன். //மச்சானின் மெய் காவலன் மச்சினன் எனலாம், தூத்துக்குடி பகுதி மீனவர்கள் முத்துக்குளிக்கும் போது ஆழ கடலில் மூழ்குவார்கள். அப்போது மூழ்கும் நபர் இடுப்பில் கயிறை கட்டி மேல் மட்டத்தில் மச்சினன் பிடித்து இருப்பார் மூச்சு முட்டும் தருணம் வந்தால் கயிறை அசைப்பார், உடனே மேல் மட்டத்தில் உள்ளவர் இழுத்து கரை எற்றுவார். அந்த கயிறு மச்சினன் கையில் தான் கொடுப்பார்களாம். ஏன் என்றால் சகோதரியின் தாலி காக்க வேண்டும் என்ற உணர்வு மச்சினன் இடம் அதிகமாக இருக்குமாம்.//

கயிறை மச்சினன் கையில் கொடுப்பதற்கும் அதை மச்சினன் மிகுந்த கவனமாகப் பிடித்துக் கொள்வதற்கும் காரணம், சகோதரி உடைய தாலி காக்கப் படவேண்டுமே என்ற அக்கறை மட்டும் அல்லவாம். இந்த ஆள் கடலோடு போய்விட்டால் சகோதரி குடும்பத்தை நான்தானே காப்பபாற்ற வேண்டுமென்ற சுய பாதுகாப்புமாம். - சொல்கிறார்கள்.

Ebrahim Ansari said...

பரங்கிப் பேட்டை பகுதியிலும் இப்படி 'பெரளி' பண்ணுவது அதிகம்.

மாணவராய் இருக்கும்போது ஒரு வகுப்புத்தோழனுக்கு மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே திருமணம் நடந்தது. ( நல்ல மாணவனாக இருந்தவன் பிறகு தேர்வில் தோல்வி அடைந்தது வேறு விஷயம்.) அந்த ஊரில் மாப்பிள்ளைத் தோழர்களுக்கு BEST MEN என்று பெயர். சாப்பாடு மிகவும் விஷேசம். எல்லாத் தோழர்களும் அமர்ந்த பிறகு மாப்பிள்ளைதான் முதன் முதலில் தனக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் இடியப்பக் குட்டானைத் திறக்க வேண்டும். அப்படி என் தோழன் அஹமது இப்ராஹீம் , குட்டானைத் திறந்தபோது, பிறந்து இரண்டே நாளான ஒரு பூனைக்குட்டி உள்ளே உறங்கிக் கொண்டு இருந்தது. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் இந்த ஊர் மச்சினச்சிகள் என்று அன்று தோன்றியது.
இன்று இவை எல்லாம் அனாச்சாரமாகத் தோன்றுகின்றன. தோழன் சாப்பாடு எல்லாம் பெண் வீட்டார் மீது ஏற்றப்படும் எக்ஸ்ட்ரா லக்கேஜ் .

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்றைய காலங்களில் நம்மூரில் வரதட்சிணையும், முழு வீடும் வாங்கி விட்டு அல்லது ஏதேனும் ஒன்றை வாங்கி (அபகரித்து) விட்டு பிறகு அந்த வீட்டில் பாசத்தையும், நேசத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? சில மருமகன்களின் (மச்சான்மார்களின்) நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் அவர்களை எப்படியாவது யாராவது எங்காவது போட்டுத்தள்ள வேண்டும்/செத்தொழிய வேண்டும் என்ற மனோநிலைக்குத்தான் அந்த வீட்டினரை கொண்டு போய் சேர்க்கிற‌து.

பரம்பரை முஸ்லிம்களிடம் உள்ள சில ஈனப்புத்தியால் நேற்று இஸ்லாத்தைத்தழுவிய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி, பஜ்ரங்தள் வகையராக்களை கூட துணிந்து வீட்டுக்கு மருமகனாக எடுத்தால் தேவலாம் போல் இருக்கும் இவர்களின் அட்டூழியமும், அநாகரிகமும், அட்ட‌காச‌மும்.

பாச‌மிகு ம‌ச்சான், ம‌ச்சின‌ன் உற‌வெல்லாம் வேச‌மாகிப்போன‌து இன்றைய‌ கால‌த்தில். எங்கோ ஒரு சில‌ இட‌ங்களில் அந்த‌ ந‌ல்லுற‌வு ம‌ல‌ர்ந்து ம‌ண‌ம் வீசிக்கொண்டிருக்க‌லாம். அந்த‌ ம‌க்க‌ளே இறைய‌ருட்கொடையை நிற‌ம்ப‌ப்பெற்ற‌ ந‌ல்ம‌க்க‌ளாக‌ இருக்க‌ முடியும்.

இந்த‌ வேத‌னையெல்லாம் வ‌ந்து விடுமோ? என்ற‌ அச்ச‌த்தில் தான் பெண்குழ‌ந்தை பிற‌ந்த‌தும் ந‌ம் ஊர் ம‌க்க‌ளின் முக‌ம் வாடி வ‌த‌ங்கி விடுகிற‌து. அதை அக்க‌ம் ப‌க்க‌த்திலுள்ள‌வ‌ர்க‌ள் "ப‌ர‌க்க‌த்து, ர‌ஹ்ம‌த்து" என்று சொல்லி வாடிய‌ முக‌த்தில் த‌ண்ணீர் தெளிப்பது போல் கொஞ்சம் தெளித்து ஆசுவாச‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌ர் அந்த‌ வீட்டின‌ரை.

இரண்டுக்கு மேல் பெண்பிள்ளைக‌ள் பெற்ற‌வரா நீங்கள்? கவலையை விடுங்கள். உங்களுக்காக‌ குறைந்த‌ வ‌ட்டிவிகித‌த்தில் வீட்டுக்க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம் என‌ ந‌ம்மூரின் அவ‌ல‌நிலையை க‌வ‌ன‌த்தில் கொண்டு ஏதேனும் புதிய‌/ப‌ழைய‌ வ‌ங்கிக‌ள் ஒரு புதிய‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌த்தை ந‌ம் ம‌க்க‌ளிடையே விரைவில் அறிமுக‌ப்ப‌டுத்தினாலும் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை. (இஸ்லாத்தின் அடிப்ப‌டையையே த‌க‌ர்த்தெறிந்து விட்டு "அல்லாஹ், அல்லாஹ் என்று த‌ஸ்பீஹ்" செய்து வ‌ருவ‌தில்லை அர்த்த‌மில்லை.)

ஆம்புள‌ப்புள்ளைக‌ளும் அள்ளித்த‌ந்து விடுவ‌தில்லை. சில‌ நேர‌ம் வ‌ள‌ர்த்து, ஆளாக்கி, ந‌ன்கு ப‌டிக்க‌ வைத்து வெளிநாடு அனுப்பிய‌தும் அங்கு சில‌ க‌ள்ள‌த்தொட‌ர்புக‌ள் வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த‌ குடும்ப‌த்திற்கே வேட்டு வைத்து விடுகின்ற‌ன‌ர்.

ஆணோ, பெண்ணோ ந‌ல்ல‌ பிள்ளைக‌ளைப்பெறுவ‌து என்ப‌து உண்மையில் அந்த‌ பெற்றோர்க‌ளுக்கு உல‌கிலேயே இறைவனருளால் சுவ‌ர்க்க‌த்தின் சேம்பிளை சுவைத்த‌து போன்ற‌தாகும். பிள்ளைக‌ள் பெற்ற‌ எல்லோருக்கும் இந்த‌ ந‌சீபு கிடைத்து விடுவ‌தில்லை. ந‌ல்ல‌ ந‌சீபு உடைய‌வ‌ர்க‌ளுக்கு த‌ருத‌லைப்பிள்ளைக‌ள் வ‌ந்துவிடுவ‌தில்லை.

யா அல்லாஹ்!!! எம் பிள்ளைக‌ளை ஈருல‌கிலும் க‌ண்க‌ளுக்கும், உள்ள‌த்திற்கும் குளிர்ச்சி த‌ரும் நல்ல சாலிஹான பிள்ளைக‌ளாக‌ ஆக்கித்தந்தருள்வாயாக‌‌......ஆமீன்.

Yasir said...

//சில வீடுகளில் மச்சான் வரவு வெற்றியானதாகவும் இன்னும் சில இடங்களின் துயரமாகவும் அமைந்து விடுகிறது.// வெகு சில வீடுகளில் வெற்றி , பல வீடுகளில் சனியன் சம்மனம் போட்டுக்கொண்டு ஒர்காந்து சாப்பிடுது.......விறுவிறுப்பான வித்தியாசமான தொடர் தொடர்ந்து எழுதுங்கள் காக்கா

Yasir said...

//(இஸ்லாத்தின் அடிப்ப‌டையையே த‌க‌ர்த்தெறிந்து விட்டு "அல்லாஹ், அல்லாஹ் என்று த‌ஸ்பீஹ்" செய்து வ‌ருவ‌தில்லை அர்த்த‌மில்லை.)// குத்துண்டா இது கும்மாங்குத்து...உண்மையும் கூட தொப்பி போட்டா மட்டும் பத்தாது தொப்பி மறைத்திருக்கும் மண்டைக்குள் உள்ள மூளையிலும் என்ன சிந்தனை இருக்கின்றது என்பது முக்கியம்..அல்லாஹ் உங்களுக்கு என்ன அவ்வளவு ஈஸியாவா சொர்க்கத்தை தருவான்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்த மாதிரி அட்டூழியங்களும், அழிச்சாட்டியங்களும், அநீதிகளும், அக்கிரமங்களும் பக்குவமில்லா பண்ணாடை ஆண் வர்க்கத்தால் ஆரம்பமான காலத்தில் தான் அமைதியே உருவாகி பொத்திப்பொத்தி வளர்ந்து ஆளான வீட்டுக்கண்மணிகளிடமிருந்து "கலிச்சல்ல போவான், பொட்டக்கரையாப்போவான், மாண்டுபோவான், மாக்குண்டு சாஞ்சிருவான், மண்ணாப்போவான், பொடுக்குண்டு போவான், கண்மாசியாக்காணாமல் போவான், கசங்கொண்டு போவான்....ETC..போன்ற பொன்(புண்)மொழிகள் வாயிலிருந்து வெகுண்டெழுந்து எரிமலைக்குழம்பு போல் வெடித்துச்சிதறி வெளியாகி இருக்கும் போல் தெரிகிறது நம் ஊரில்.....

பண்ணவேண்டிய அட்டூழியத்தையும் பண்ணிப்புட்டு/பண்ணிக்கிட்டு பள்ளியாசல்லெ போயி உக்காந்துக்கிட்டு யாந்தான் தஸ்பீஹ் உருட்டுதுவொலோத்தெரியலெ.........

இப்னு அப்துல் ரஜாக் said...

வட்டிலப்பம் கடப்பாசிஇல்லாத பெருநாளா மச்சினச்சி இல்லாத கல்யாணமா siththik காக்கா

அதிரை சித்திக் said...

அன்பு சகோ ..,ஜாபர் ..இன்னும்

எதிர்பார்க்கும் மச்சான் பற்றிய சிறப்புகள்

ஆய்வின் முடிவில் தருகிறேன் ..நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சரி காக்கா, சலாம்.

மேற்சொன்னது ஒரு வாசகனாக மட்டுமே!

அதிரை சித்திக் said...

கடைசி பாராவில் சகோ.சித்தீக் அவர்கள் எழுதியிருக்கும்

உதாரணத்தை நிறையபேர் சொல்ல நான்

கேள்விப்பட்டு இருக்கிறேன்..நானும் கேள்வி பட்டதுதான்

ஆனால் அந்த உணர்வு உண்மைதான் .கஷ்டமான

வேலையை மச்சான் செய்ய முற்படும்போது "நீங்க இருங்க மச்சான்

நான் செய்கிறேன் என்று முற்படும் மச்சினனை பார்த்திருக்கிறேன்

அதிரை சித்திக் said...

சகோ ..,கவி...சபீர் காக்காஅவர்களின்

வேண்டுகோளை செவி சாய்க்கிறேன் ..

வலைதள வாசகர்களின் இயற்கையான

நுகர்வு இரத்தின சுருக்கம் என்பதால் ..

சுருக்கமான ஆக்கம் ..இந்த கட்டுரையின்

முடிவுரையில் ஒவ்வொரு உறவின் பங்கு

என்ன என்பதை விளக்குவேன் ..இன்ஷா அல்லாஹ்

ஆழமாக அலசுவோம் ..மூத்த சகோவின் எடுத்து காட்டலுக்கு

நன்றி ...தேன் துளியின் ஒவ்வொரு எழுத்தும் தேன் தான்

தங்களின் தேன் துளி கடைசி இதழில் கடைசி பக்கத்தில்

"பிரிவோம் சிந்திப்போம் "என்ற எழுத்து ஞாபகத்திற்கு

வருகிறது

அதிரை சித்திக் said...

தூத்துக்குடி பக்கமெல்லாம் வரதச்சனை கொடுமை இருக்காதோ

அப்படி இருந்து இருந்தால் கைரை மச்சினன் கையில்

கொடுத்து இருக்க மாட்டார்கள்//சரியாக கூறினீர்கள் ஹமீது காக்கா

நமதூரில் உள்ள மச்சான் சில பேரின் அழிச்சாட்டியங்கள் ..பார்த்தால்

கயிறாய் இடுப்பில் கட்டுவதற்கு பதிலாக கழுத்தில் கட்டிவிடுவார்கள்

அதிரை சித்திக் said...

மூத்த எழுத்தாளர் அன்சாரி காக்கா

அவர்களின் கருத்துமிக சரியானது

பரங்கி பேட்டை கேலி ..நகைப்புக்குரியது

என்றாலும் பூனை மாப்பிள்ளையின்

கையை கடித்து விட்டால் ...?

அதிரை சித்திக் said...

தம்பி நெய்நாவின் வேதனையான

குரல் ,,பாதிப்பட வேண்டிய முக்கியமான

கருத்து

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒன்னுமே இல்லாத மச்சானைக்கூட வாழ்த்தி, வரவேற்று, போற்றிப்புகழ்ந்து, மதிப்பளித்து, உபசரித்து, அகமகிழ்ந்தது அந்தக்காலம். மச்சான் பெரும் பணங்காசுகள் கொண்டவராகவோ, தொழிலதிபராகவோ, வெளிநாட்டுக்காரில் பவனி வருபவராகவோ இருந்தால் மட்டுமே சொந்தபந்தங்களும், சுற்று வட்டாரமும் பல் இளித்து பணி விடை செய்யும் காலமிது.

அந்தக்காலத்திற்கு முன் இந்தக்காலமெல்லாம் ஒரு வெந்தக்காலமே..........

அப்துல்மாலிக் said...

உறவுகள் என்பது கல்யாணம் வரைதான் அதன் பிறகு தானாகவே பிரிந்துவிடுகிறார்கள் (அ) பிரிக்கப்படுகிறார்கள், இதற்கு ஒரு லட்சம் காரணங்கள் சம்மானமிட்டு உக்காரும்.

மச்சினன் உறவு அனுபவிப்பவருக்கு தெரியும் அது எந்தளவு முக்கியம் என்று

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மனைவியமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்போல் மச்சான்,மச்சினன் அமைவதுவும் இறைவன் கொடுத்தவரம்
தோழன் சாப்பாட்டில் நடந்த சுவாரசியத்தை சொல்கிறேன் காலை பசியாரப்போனோம் இடியாப்பமும் இறைச்சியானமும் மற்றவகையாராக்களும் பறிமாரப்பட்டன இறைச்சி அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு ஆனம் மட்டும் மருபடியும் வாங்கி அதில் நாங்கள் கொண்டுபோன இறைச்சியை(பச்சைகறி)அதில் போட்டு மிச்சம் வைப்பதுபோல் திருப்பி கொடுத்துவிட்டோம்.
மருனால் மனைவி கேட்டாலாம் எப்படிங்க வேகாதகறியை சாப்பிட்டீங்க என்று
பிரகு நடந்ததை சொல்ல விழுந்து விழுந்து சிரித்தார்களாம் பெண் வீட்டார்

அதிரை சித்திக் said...

நண்பர் சபீர் தந்த தகவல்

தந்திரமான கேலி ..மகளிர் இனி உசார்

அதிரை சித்திக் said...

//சில வீடுகளில் மச்சான் வரவு வெற்றியானதாகவும் இன்னும்

சில இடங்களின் துயரமாகவும் அமைந்து விடுகிறது.//

வெகு சில வீடுகளில் வெற்றி , பல வீடுகளில் சனியன்

சம்மனம் போட்டுக்கொண்டு ஒர்காந்து சாப்பிடுது...//

தம்பி யாசிர் கூற்று மிக சரி ..உட்கார்ந்து சாப்பிடும்

நம்மவர் சிரமங்களை கண்டு கொள்வதில்லை

உள்ளூரில் உழைக்க முன் வருவதில்லை

அதிரை சித்திக் said...

மச்சினன் உறவு அனுபவிப்பவருக்கு தெரியும்

அது எந்தளவு முக்கியம் என்று //தம்பி அப்துல் மாலிக்

தங்களின் சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே ..!

அதிரை சித்திக் said...

தம்பி அர அல..!

மச்சினன் மற்றும் பசியாறா வுடன்

கேலி கிண்டல் என கலை கட்டிய

அனுபவம் உண்டா

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு