அல்லாஹ்வின் திருப்பெயரால்…
கடந்த ஊடக போதை பதிவுகளில் போலி புனைபெயர்கள், தமிழக ஊடகங்களின் அன்மைச் செயல்பாடுகள், அறிவைக் கெடுக்கும் ஊடகங்கள் என்று விரிவாக அலசினோம், மேலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எச்சரிக்கையும் செய்து ஊடக போதையிலிருந்து தெளிவுபெற ஒரு சிறிய முயற்சியே செய்தோம். இந்தத் தொடர் நம் வாசக நேசங்களிடம் நல்ல ஆதரவைப் பெற்று உணர்வுபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை நம்மால் நன்றாகவே அறிய முடிகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இருப்பினும் இந்தத் தொடரில் பதிவுகளும் அதற்கான பின்னூட்டங்களும், பின்னூட்டங்களுக்கு பின்னால் ஒட்டமும் என்ற கருத்தினை மையப்படுத்தி சிறிதேனும் தெளிவுபெறலாம் என்று கருதுகிறோம் இன்ஷா அல்லாஹ்.
பொதுவாக அதிரை பெயர் கொண்ட வலைத்தளங்களின் பதிவுகளை அதிரைவாசிகள் மட்டுமே வாசிப்பதில்லை, அதிரை அல்லாத பிற ஊர் சகோதர சகோதரிகள் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
பதிவாளர்களில் சிலர் அவர்களின் நேரத்தை ஒதுக்கி சிந்தனையில் உதிக்கும் நல்ல கருத்துகளை பொதுவில் நம்மிடையேப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சுயமாக எழுதி பதிவேற்றமும் செய்கிறார்கள். இன்னும் வேறு சிலரோ மற்ற வலைத்தளங்களில் பதிவுக்குள் வரும் பதிவுகளின் தரம் கண்டு அத்தளத்தின் அனுமதியுடன் அல்லது அத்தளத்தின் பதிவு சுட்டியை இணைத்து நன்றியுடன் பதிவேற்றம் செய்கிறார்கள். ஆனால் முன் சொன்ன இருசாராரை தவிர்த்து எங்கோ உள்ளதை வெட்டி & ஒட்டி (copy & paste), எங்கு அந்த தகவலை எடுத்தாண்டார்களோ அதற்கான முகாந்திரமோ அல்லது சுட்டியைச் சுட்டிக்காட்ட மனமில்லாமல் தான் எழுதிய பதிவுபோல் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள். இவைகள் அனைத்திலும் பின்னூட்டம் அதிகம் வரும் பதிவுகள்தான் சிறந்த பதிவு என்று வரைமுறை வைப்பது ஏற்புடையதல்ல. பின்னூட்டங்கள் குறைவாக பதியப்படும் பதிவுகள் அனைத்தும் சிறந்த பதிவுகள் அல்ல என்றும் நிர்ணயித்து விடவும் முடியாது. பின்னூட்டங்களின் எண்ணிக்கை அல்லது அதன் ஆராவாரம் இவைகளை வைத்து மட்டும் வைத்து பதிவின் தரத்தை தீர்மானிப்பது அறிவுடைமையாகாது.
அதிரை பெயர்(கள்) கொண்ட ஏராளமான வலைப்பூக்கள் இணையக் கடலில் மிதக்கிறது, தவழ்கிறது, வீரிட்டு பாய்கிறது என்று வகைப்படுத்தப்பட்டும் வருகிறது, இதில் ஓரிரு வருடமாக வலைத்தளங்களை நிர்வகிப்பவர்கள்கூட இணைய உலகில் அனுபவசாலிகள் என்று வெளிக்காட்டிட தங்களின் எழுத்துத் திறமையை மட்டுமல்ல வலைத்தளங்கள் இயக்கும் திறனையும் வெளிக்காட்ட கிடைக்கும் சொற்ப நேரத்தினையும் செலவழித்து வருகிறார்கள். அதிரை சார்ந்த வலைத்தளத்திற்கு வருகை தருபவர்களில் அதிக எண்ணிக்கையாக வெளிநாட்டில் வாழும் அதிரைச் சகோதரர்கள் என்பதை அனைத்து வலைதள நிர்வாகிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
இவைகளில் குறிப்பிட்டு சொல்லத்தக்க சில வலைதளங்களில் மட்டுமே வாசகர்களின் வருகையும் அவர்களின் பின்னூட்டங்களும் அதிகம் பதியப்படுகிறது, மற்ற பெரும்பாலான வலைத்தளங்களில் பின்னூட்டங்கள் பதியப்பட்டாலும் அவைகளைவிட மிகச் சொற்பமே. இதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு பதிவுகளுக்கும் கணிசசமான பின்னூட்டங்கள் பதியப்படும் தளங்கள் எவைகள் என்பதை அதிரை இணைய வாசர்கள் நன்றாகவே அறிவார்கள்.
பின்னூட்டங்கள் அதிகம் இடம் பெரும் அவ்வகைத் தளங்களில் ஒன்றாக மிளிரும் அதிரைநிருபர் தளமும் தப்பவில்லை அவ்வகையான விமர்சனங்களுக்கு. பரவலாக செவிவழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும், அதிரைநிருபர் கருத்துப் பெட்டியிலும் மற்றும் பிற சகோதர அதிரை தளங்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விழுங்கவும் முடியாமல் வெளியில் துப்பவும் முடியாமல் அவதூறு பரப்பிவிடப்பட்டு வருகிறது. பொதுவான விமர்சனங்கள் இதோ... இவைகள் அனைவருக்கும் பொருந்தும்...
- பின்னூட்டங்களில் முகஸ்துதியே அதிகம்.
- தனிமனிதர்களை வானுயர பாராட்டுகிறார்கள்.
- பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமிட்டு பின்னூட்ட எண்ணிக்கையை கூட்டுகிறார்கள்.
- அதிரையில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் அல்லது மரண அறிவிப்புக்களைப் பதிவாகப் போடுவதில்லை.
- பதிவைப் படிக்காமல், பதிவாளர் நமக்கு தெரிந்தவர், பின்னூட்டமிடாவிட்டால் தவறாக எண்ணிவிடுவாரோ என்று சும்மா கடமைக்காக பின்னூட்டமிடுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக ஊடக போதைக்குள் சிக்கியிருப்பவர்களும் அதில் சிக்காமல் சிண்டுமுடிந்து விடுபவர்களும் அதிகம் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை "முகஸ்துதி", அது என்ன முகஸ்துதி?
முகஸ்துதி – flatter – முகத்துதி, முகப் புகழ்ச்சி, தகாப் பாராட்டு, முன்னிலைப் புகழ்ச்சி, மிகைப் பாராட்டு, போலிப் புகழ்ச்சி.
இஸ்லாமிய பார்வையில் முகஸ்துதி என்றால் என்ன?
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.
(புஹாரி : 6499 ஜூன்துப் ரலி)
அல்லாஹ் கூறுகின்றான்:
‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடுதான். அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்’ (107-4-7)
அல்லாஹ்வுக்காக என்றில்லாமல் பிறர் தம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக ஒருவர் தன் இபாத்துக்களை செய்தால் அது ‘முகஸ்துதி’ என்றழைக்கப்படுகின்ற மறைமுக ஷிர்க் என்பதை நாம் உணர்ந்துக் கொண்டு அதிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் தவிர்ந்து இருக்கவேண்டும்.
முகஸ்துதி ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இறைநம்பிக்கையில் ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒருவனுக்கு உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதை விட மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவனுக்கு பெரிதாகத் தோன்றும். இறைநம்பிக்கையில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளை அவன் புறக்கணிக்கிறான். இதே நேரத்தில் இந்த உலகில் கிடைக்கும் புகழுக்காக அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே முகஸ்துதியில் அவனை வீழ்த்துகிறது. இப்போது முகஸ்துதி என்றால் என்னவென்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இறைவனை மறந்து மனிதர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக செய்யப்படும் செயல்களே முகஸ்துதி என்பது தெளிவாகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும்’ அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதாரம்: புகாரி
ஒருவர் ஒரு நல்ல கருத்தை நல்லெண்ணதில் மக்கள் மத்தியில் வைக்கும்போது அது எல்லோருக்கும் பயன்தரும் விதமாக உள்ளது. இதற்காக மக்கள் அவரின் செயலைப் பாராட்டுகிறார்கள். அந்த கருத்துச் சொன்ன மனிதரின் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிவான், நல்ல கருத்தை எத்திவைத்த மனிதர் அல்லாஹ்விடமே நன்மையை நாடி செய்திருந்தால் அவருக்கு நிச்சயம் நற்கூலி கிடைக்கும், அவர் மனிதர்களிடம் மட்டுமே புகழையும் பாராட்டையும் பெறுவதற்காக அந்நற்செயலை செய்திருந்தால் நிச்சயம் அல்லாஹ்வின் தண்டனை, மேல் சொல்லப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் தண்டனை நிச்சயம் கிடைக்கும். அல்லாஹ் நன்கறிவான்.
நபி (ஸல்) சொன்னார்கள் 'எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தேடப்படும் கல்வியை உலகப் பொருட்களை அடைந்து கொள்வதற்காக கற்றுக்கொள்கிறாரோ அவர் மறுமை நாளில் சொர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகர மாட்டார். (நூல்: அபூதாவூத் 3664)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: எவர் கற்றோருடன் மோதுவதற்காகவும், அறிவீனர்களுடன் வாதம் புரிவதற்காகவும், மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுப்பதற்காகவும் எவர் கல்வி கற்கின்றாரோ அவரை அல்லாஹ் நரகத்தில் நுழைவிப்பான்'' (நூல்: திர்மிதி 2654)
இன்றைய நிலை: வெறுமனே முஸ்லீம்கள் என்று சொல்லி இன்று நம் சமுதாயத்தில் புரிதலால் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகளால் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களாக இல்லை, ஒரே தாய் தந்தையருக்கு பிறந்த சகோதரர்கள் (இயக்க) கொள்கை வேறுபாடுகளுக்கு சிக்கி குடும்ப உறவுகள் சின்னா பின்னமாகிவிட்டது, கேடுகெட்ட நவீன சைத்தான்களான சினிமா, சின்னத்திரை, இணைய சைத்தான்களான facebook, twiter, orkut, blog இவைகளின் தாக்கத்தால் கலாச்சார சீரழிவின்மூலம் நேரவிரையத்தினாலும் இஸ்லாமிய நெறிகள் மறக்கடிக்கப்பட்டுவருகிறது, இதுமட்டுமா தேவையற்ற அவதூறுகளை தனிமனித தாக்குதலுடன் மார்க்க அறிஞர்களை பற்றி வீணானதை எழுதியே தங்கள் நேரத்தையும் அடுத்தவர்களின் நேரத்தை வீணடிக்கும் வீணர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். ஆளுக்கு ஒரு வலைத்தளங்களை போலிபெயர்களில் வேடிக்கை காட்டி திட்ட வேண்டியவர்களை திட்டி, தான் கேவலப்படுத்த நினைப்பவர்களை கேவலப்படுத்தியும் வருகிறார்கள்.
இவைகளுக்கு மத்தியில் வலைத்தளத்தின் மூலம் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் ஒரே நோக்கத்தில் உலகெங்கும் பிரிந்து வாழும் எம்மண்ணின் மைந்தர்களை கணிசமான முறையில் ஒன்றிணைத்து நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து ஒருவருக்கு ஒருவர் பாராட்டி, ஊக்கமூட்டி, நேசம் காட்டி, மார்க்க விடயங்களில் எல்லோரின் கவனத்தையும் ஒன்றே கலக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை முகஸ்துதி என்று பிதற்றலாக சொல்லித் திரியும் / எழுதி வருபவர்கள் காழ்ப்புணர்வுகளைக் கலைந்து அவ்வாறு ஈடுபடுவதை கைவிட வேண்டும். நல்ல கருத்துக்களை பகிர்ந்தளித்துவரும் ஒருவரை மற்றவர் ஊக்கம் தந்து பாராட்டுவதை முகஸ்துதி என்று சொன்னால் எவ்வகையில் நியாயம்? சில சந்தர்ப்பகளில் பதிவுக்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் பின்னூட்டத்தினூடே பதியப்பட்டிருக்கலாம் அது கருத்தைச் சொல்ப வருபவரின் கருத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், அதற்காக வானுயர பாராட்டுகிறார்கள் என்று உறுமுவது எவ்வகையில் நியாயம்?
புஹாரி 6064. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி 6065. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இக்காலச் சூழலில் ஒருவரோ அல்லது ஒருசாராரோ தன் கருத்துக்கு மற்றுக் கருத்துடையவரை/களை தரக்குறைவாக விமர்சிப்பதற்காகவே அநேக இணையதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள் இதில் அதிரை வலைத்தளங்கள் மட்டும் விதிவிளக்கல்ல என்பதற்கு கடந்தகால நிகழ்வுகளும் அன்மைகால சலசலப்புக்களுமே சாட்சி.
அதிரைநிருபர் தளத்தில் வெளிவரும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் எந்த தனிநபரின் மனதையோ அல்லது எந்த ஒரு அமைப்பையோ புறந்தள்ளியோ அல்லது அவதூறாக தாக்கியோ வெளிவந்துள்ளது என்று நிருப்பிக்கத்தான் முடியுமா? ஆக! முகஸ்துதி, வானுயர பாராட்டு என்று சஞ்சலப்படும் சகோதரர்கள் உணர்ந்து கொள்ளட்டும் இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர் போலி புனைபெயர்களை ஊக்கப்படுத்துவதில்லை, போலி புனைபெயர்கள் வலையுலகில் சகஜம் என்று சொல்லுவதை கண்டித்தும் அதனை புறக்கணித்தும் வருகிறது. மேலும் நிழல்களாக வந்து பின்னூட்டமிடுவதால் எந்த ஒரு நன்மையுமில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.
மரண அறிவிப்பு செய்திகள் அதிரைநிருபரில் தனி பதிவாக ஏன் பதிவதில்லை, மரண அறிவிப்பு தகவல்கள் கிடைக்க பெற்றால் வலப்பக்கத்தில் ஓர் அறிவிப்பாக வெளியிடும் வழமையை செய்து வருகிறோம். மரண அறிவிப்புகளுக்காக தனி பதிவுகள் இல்லை, ஏன்? என்பதனை தனி பதிவாக விளக்கமளிக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
விரும்பிய தளத்தில் மட்டும்தான் கருத்துக்களை கட்டாயமாக பதிய வேண்டும் என்று எந்த கட்டளையோ அல்லது life time agreement என்று எந்த வலைதளத்திலுமில்லை. கருத்திடுபவர்களின் விருப்பு வெறுப்புக்கு உடண்பட்டு அவரவர்களுக்கு கிடைக்கும் அரிய நேரத்தை பொருத்தே அவர்களுக்கு பிடித்த பதிவுகளில் அல்லது தளங்களில் கருத்திடுவார்கள். யாரையும் இப்படித்தான் கருத்திட வேண்டும் என்றோ ஏன் கருத்திடவில்லை என்றோ கட்டாயப்படுத்த முடியாது. பதியப்படும் கருத்து தனிமனித தாக்குதல், தரகுறைவான வார்த்தைகள், மார்க்கத்திற்க்கு புறம்பான கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் அவைகளை உடணடியாக அகற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு வலைத்ததள நிர்வாகிகளுக்கும் உண்டு.
பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களைக் கண்கானிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிக கடினமே. அமையப் பெற்றிருக்கும் நேரத்தில் மட்டுமே நாம் இவ்வகை வலைதளங்களை கண்காணிக்க முடியும். மேலும் தவறான பின்னூட்டங்களை பதிவுக்குள் இடம பெறாமல் அதனை கண்காணித்து நீக்குவதே நன்னெறி நோக்காக இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். யாரையும் புண்படுத்தாத வகையில் தனிநபர் ஒருவர் தனது கருத்தைப் பதிய விரும்பிய இடம் அந்த பதிவுதான் என்று நினைத்து பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களைப் பதிந்திருந்தால் அதனை அதன் தாக்கம் கருதி கண்டுக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது அதுவே அறிவுடமை.
தடம் பதித்த நாள்முதல் அதிரைநிருபர் வலைத்தளத்தளத்தின் நோக்கம் அதிக ஹிட்டுக்கள், அதிக வாசகர் வட்டம் என்பதல்ல, செய்வதை எளிமையாகச் செய்தாலும் சிறப்பாக, முறையாக, சரியாக, மார்க்க வரம்புக்கு உட்பட்டு கட்டுப்பாட்டுகளுடன் இருக்க வேண்டும் என்பதே தலையாய நோக்கம். அதிரைநிருபரில் வெளியாகும் பதிவுகள் முன்னுதாரனமாக இருந்து பலர் பயனடைவதைவிட ஒருவர் அதிரைநிருபரை தவறான முன்னூதாரனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம். அதற்கு இங்கே பதியப்படும் ஒவ்வொரு பதிவுகளும், பின்னூட்டங்களுமே சாட்சி.
இஸ்லாம், கல்வி, மருத்துவம் இவைகள் எங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகளை நம்முடைய அதிரை எழுத்தாளர்களின் உதவியுடன் பகிர்ந்தளிக்கிறோம். எல்லா புகழும் இறைவனுக்கே.
அதிரைநிருபர் வலைத்தளத்திற்கு வருகை தந்து பயனடைந்து, எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி, ஜஸாக்கல்லாஹ்...
அல்லாஹ்வின் பொறுத்தத்தை நாடியே, மக்கள் பயன் அடையவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு கட்டுரையாளரும், பின்னூட்டமிடும் வாசக நேசங்களும் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் ஞாபக்கடுத்துகிறோம். இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்.
நாகரீகமான கருத்துரையாடலின் மூலம் நட்பு வட்டாரத்தை விரிவடையச் செய்து சகோதரத்துவத்தை வலுப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் (சில)வலைத்தளங்களின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் கொச்சை படுத்தும்விதமாக முகஸ்துதி, வானுயர பாராட்டு என்ற பிதற்றல் பிரச்சாரமும் ஓர் ஊடக போதையே.
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நன்னடத்தை தொடரும்…
இன்ஷா அல்லாஹ் !
- அதிரைநிருபர் குழு
17 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்
// பின்னூட்டங்களில் முகஸ்துதியே அதிகம்.
தனிமனிதர்களை வானுயர பாராட்டுகிறார்கள்.
பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமிட்டு பின்னூட்ட எண்ணிக்கையை கூட்டுகிறார்கள்.
அதிரையில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் அல்லது மரண அறிவிப்புக்களைப் பதிவாகப் போடுவதில்லை.
பதிவைப் படிக்காமல், பதிவாளர் நமக்கு தெரிந்தவர், பின்னூட்டமிடாவிட்டால் தவறாக எண்ணிவிடுவாரோ என்று சும்மா கடமைக்காக பின்னூட்டமிடுகிறார்கள்.//
இப்படிப்பட்ட போதையில் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்(து)தாக்கம். கவனமாக உட்கொண்டால் தெளிவு பெறலாம். முதலில் நான் உட்கொள்கிறேன் வாழ்த்துக்கள்.
இறைவன் நமக்களித்த இரைக்காக உண்டு பின் அவனுக்கு நன்றி செலுத்துவது போல,
படித்து செரித்தவற்றிற்கு கட்டுரையை படைத்த படைப்பாளருக்கு நன்றியும் ஊக்கமும் கருத்து பகிர்வும் அளிப்பவர்கள் இத்தளத்துக்கு வருபவர்கள் அதிகம் என்பது தான் உண்மை.
அம்மாவோ, அவளோ சமைத்தவற்றிக்கு அது பற்றி ரசனையை சொன்னால் தான் அவங்களுக்கு ஊக்கமாக இருக்கும். அதில்லாமல் சும்மா சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாவிட்டால் இவன் ரசனை இல்லாதவன் என்ற பார்வை தான் இருக்கும் என்பது தான் கருத்து சொல்வதற்கு என் ரசனைக்கு கிடைத்த உதாரணம்.
அதற்காக அவரவர்கள் சூழ்நிலையால் கருத்திடா எல்லாரும் தவறாக நினத்துவிடாதீர்கள்
ஒரு பதிவாளர் நல்ல பயனுள்ள கருத்துகளுடன் கூடிய பதிவை தரும்பொழுது...........அப்பதிவைக்கொண்டு சிறிதளவாவது வாசர்களுக்கு பயன்தரும் எனில், அப்பதிவளாருக்கு , அப்பதிவை தாங்கிவந்த வலைத்தளம் / பூ விற்கு வாசகர்களால் வாழ்த்து சொல்வது தப்பில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
நன்றி சொல்வது, வாழ்த்துக்கள் சொல்வது , மனம் பொறுத்தருள்க என்று சொல்வதைப் பற்றி நமது மார்க்கத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை நன்கு மார்க்கம் விளங்கியவர்கள் விளக்க வேண்டும்.
என்னைப்போன்ற சிறியவர்கள் விளங்கிக்கொள்ள இலகுவாக இருக்கும்.
குறிப்பு : வலைத்தளம் / பூ போன்றவைகளில் உள்ள பின்னூட்டம் பகுதியை நீக்கி விட்டால் நமது சகோதரர்களுக்கிடையே கட்டுரையில் குறிப்பிட்டது போல் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்காது.
போதை ஏறிடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக !
யூகத்தின் அடிப்படையில்,
கற்பனைக்குள் உதிப்பவைகள் சந்தேகத்தை கிளப்ப, கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்ட, அல்லது பரபரப்பை ஏற்படுத்த.... அடுத்தவர்களின் முடக்கத்தில் உற்சாகம் கொண்டிட...
ஒருத்தர் எடுத்த வாந்தியை அப்படியே வதந்தியாக மாற்றுவதிலாகட்டும்..
அவனாக இருக்குமோ, இவனாக இருக்குமோ ?
கன்ஃபார்மா அவனே தான், இல்லேஇல்லே இவனே தான்
இப்படியாக கொஞ்சம் கூட படைத்தவனின் அச்சமின்றி அவதூறுகளைப் பரப்புவதில் எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஈடுபடுபவர்கள் ஊடகபோதைக்கு அடிமையானவர்களே !
அவர்களும் இச்செயல்களிலிருந்து மாற்றிக் கொள்ள துஆச் செய்கிறேன்...
// மரண அறிவிப்பு செய்திகள் அதிரைநிருபரில் தனி பதிவாக ஏன் பதிவதில்லை, மரண அறிவிப்பு தகவல்கள் கிடைக்க பெற்றால் வலப்பக்கத்தில் ஓர் அறிவிப்பாக வெளியிடும் வழமையை செய்து வருகிறோம். மரண அறிவிப்புகளுக்காக தனி பதிவுகள் இல்லை, ஏன்? //
ஒரு நல்ல விசயத்தை கூட பதிவதற்கு முன் வருவதில்லை மரண அறிவிப்பு செய்திகளை போட்டால் எல்லோரும் தெரிந்துக்கொள்வார்கள். மற்ற வலைத்தளத்தில் போடுகிறார்கள். மரண அறிவிப்புகள் கொடுத்தால் உடனே போடுவதில்லை அந்த ஊடகத்தை நடத்துபவர் எப்பொழுது அதை திறந்து பார்ப்பாரோ அப்பொழுது தான் வெளியிடுகிறார்கள். பெயருக்குத்தான் அதிரை வலைத்தளங்கள் என்று வைத்துயிருக்கிறோம்
ஆனால் அதிரையில் நடக்கக்கூடிய செய்திகளை போட்டால் வலைத்தளங்களில் போடுவதில்லை. (copy & paste) இதை மட்டும் நன்றாக தெரிந்து வைத்துயிருக்கிறோம். இந்த ஊடகத்தில் மரண அறிவிப்பு செய்திகள் போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முதலில் அதிரையில் உள்ள செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நான் பல மரண அறிவிப்பு செய்திகள் அனுப்பினாலும் அது உடனே வருவதில்லை இது முக்கிய அறிவிப்புகள் என்று அனுப்பினால் தாமதமாகத்தான் வருகிறது. மரண அறிவிப்பு செய்தியை (copy & paste) பண்ண முடியுமா? யார் நல்ல கருத்துக்கள் எழுதினாலும் சரி, போட்டாலும் சரி அதை ஊக்கப்படுத்த வேண்டும். குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள் யார் மனமும் புன்படுவதர்க்காக இதை எழுதவில்லை. நாம் யாரையும் தப்பாக எண்ணிவிடக்கூடாது ஒருவர் மீது தவறான எண்ணம் வந்துவிட்டால் அதை நோக்கத்தில் தான் பார்க்கவும் செய்வோம், என்னவும் செய்வோம்.
எதைதான் குத்தம் சொல்லலே, இந்த ஊடகத்தின் மதிப்பும் அதன் பயனும் நான் ஊரில் இருந்தபோது உணர்ந்தேன், தொடரட்டும் உமது பணி..
அதிரை நிருபரின் தன்னிலை விளக்கமும், அதன் போக்கும் வரவேற்கத்தக்கது (இது முகஸ்த்துதியாக யாரும் எண்ணி விடவேண்டாம்). தொடரட்டும் உம் சீரிய பணி...
யான்ப்பா, அப்துல் மாலிக்கு ஊருக்கு போயிட்டு வந்தியே? சொல்வே இல்லெ? எதாச்சும் ஊரெப்பத்தி ஒரு நல்ல கட்டுரை எழுதலாமுல்லெ?
அய்யா..எனக்கு ஒரு உண்மெ தெரிஞ்சாகனும்...இதுக்கு "ஊடக போதை"னு ஏன் பேரு வச்சீங்க??
எந்த விடயத்திலும் ஆழமாகச் சிந்தித்தால் அவசரப்பட்டு எவரையும் குறை கூறவோ துருவித் துருவி ஆராயவோ முடியாது. உதாரணாமாக: இக்ஹ்லாஸ் என்னும் மனத்தூய்மையுடன் செய்யும் செயலைப் பார்ப்பதற்கு "சுய தம்பட்டம்" போல அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. தர்மம் செய்வது இரகசியமாகவும் செய்யலாம்; வெளிப்படையாகவும் செய்யலாம்.இரண்டிலும் செய்பவரின் "இக்ஹ்லாஸ்"எனும் உளத்தூய்மை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது.ஒருவர் வெளிப்படையாகச் செய்யும் நற்செயல் "சுய தம்பட்டம்" போல் தெரியலாம். ஆனால், அவரின் உளத்தூய்மை யாதெனில்: "இச்செயலை நான் இங்கு எல்லார் முன்னிலையும் செய்கின்றேன்;சொல்லிக் காட்டுகின்றேன் என்றால், இதனைக் காண்பவர்களும் என்னைப் போல் அதே நற்செயல் செய்ய வேண்டும்" என்ற தூண்டுதல் செய்யும் "நல்லெண்ணம்"தான் இங்கு அவரின் உள்ளத்தில் பதிவாகியிருக்கும் "உளத்தூய்மை". அதனாற்றான், அல்லாஹ்வின்
பாதையில் போவதற்கு "நிய்யத்"வைத்தவர்களை பகிர்ந்ககமாக பெயர் கொடுக்கும்படித் தூண்டுதல் செய்கின்றார்கள். நான் அடிக்கடி AAMF கூட்டங்களில் "உளத்தூய்மை" உருவாக்கும் ஒற்றுமை என்றும்,"ஈகோ"எனும் மனோ இச்சை தான
சமுதாயம் பிளவுபடக் காரணம் என்றும் சொல்லி வருகின்றேன்.
படித்து செரித்தவற்றிற்கு கட்டுரையை படைத்த படைப்பாளருக்கு நன்றியும் ஊக்கமும் கருத்து பகிர்வும் அளிப்பவர்கள் இத்தளத்துக்கு வருபவர்கள் அதிகம் என்பது தான் உண்மை.
அம்மாவோ, அவளோ சமைத்தவற்றிக்கு அது பற்றி ரசனையை சொன்னால் தான் அவங்களுக்கு ஊக்கமாக இருக்கும். அதில்லாமல் சும்மா சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாவிட்டால் இவன் ரசனை இல்லாதவன் என்ற பார்வை தான் இருக்கும் என்பது தான் கருத்து சொல்வதற்கு என் ரசனைக்கு கிடைத்த உதாரணம்.//
டிட்டோ!!!
சகோதரர் மு.செ.மு.அபுபக்கர் (அமோஜான்):
ஆரோக்கியமான கருத்துரையாடலுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
//மரண அறிவிப்பு தகவல்கள் கிடைக்க பெற்றால் வலப்பக்கத்தில் ஓர் அறிவிப்பாக வெளியிடும் வழமையை செய்து வருகிறோம். // கவனிக்க ! அதோடு அதற்கான தனிப் பதிவு என்று சொன்னதால் அதில் விளக்கமாக விவரிப்போம் இன்ஷா அல்லாஹ்...
நன்மையான காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை நன்கு அறிவோம் !
தகவல் பரிமாற்றம், தூது செல்வது, எத்தி வைப்பது என்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே இருக்க வேண்டும் (அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் கொள்வது).
பொதுவாக ஊடகங்கள் எதைத் தான் செய்யவில்லை அனைத்தையும் செய்கிறார்கள், நாம் ஒரு நெறிமுறைக்குட்பட்டு பதிய முற்படுகிறோம் அதில் நம்முடைய சக்திக்கு மீறி எதனையும் செய்ய இயலாது அதனையும் தாண்டி முயற்சிகள் மேற்கொள்ளத்தான் செய்கிறோம்.
ஊர்ச் செய்திகளுக்கு முக்கியத்தும் கொடுங்கள் என்ற உங்களின் வேண்டுகோள் கவணிக்கத்தக்கதே... !
இத்தகைய வேலையை சகோதர தளங்கள் சிறப்புடனே செய்கிறார்கள் அவர்களே தொடர்ந்து செய்வதே நல்லது இப்போதைய சூழலில்.
ஆக! அதற்கான சூழல் கைகூடும்போது கைகோர்ப்போம் களம் காண்போம் இதில் தெளிவாக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
இங்கே சொல்லப்பட்டிருக்கும் விடயம் அவதூறுகளுக்கும், பொறாமைகளுக்கான பொன்னாடையாக இவ்வகை இணைய வழி ஊடகங்களை பயண்படுத்தும் போதைக்கு ஆளாகாதீர்கள் என்பதே.
இங்கே மையப்படுத்தியிருக்கும் கரு, அதிரை வலைஞர்கள் அனைவருமே நம் சகோதரர்கள் அவர்கள் யாவரும் நல்லவர்கள் என்று நம்புங்கள் அந்த நம்பிக்கைக்கு ஏற்றறர்போல் நடந்து கொள்ளுங்கள் என்பதே... !
ஏன் நீங்கள் கூட சுறுசுறுப்பாக செய்திகளை வழங்குவதில் முன்னோடியாக இருக்கிறீர்கள் உங்களால் இன்று பதியப்பட்டவைகள் நாளைய வரலாறு ஆகலாம்... அதற்கான நெறிகளைத்தான் இங்கே சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
செய்தி ஊடகமாக செயல்படுவது ஒருவகை, வாழ்வியலோடு உறவாடும் ஊடகம் இது மற்றொரு வகை இரண்டையும் சேர்த்தே செய்வதும் ஒரு வகை…
ஊடகத்தில் ஈடுபடுபவர்களின் விருப்பு வெறுப்பென்றும் இருப்பதால் எது எங்கே எப்படி பதிவது என்பதில் தெளிவாக இருக்கிறது அதிரைநிருபர் வலைத்தளம்.
அன்புடன்,
நெறியாளர்
www.adirainirubar.in
//இதுக்கு "ஊடக போதை"னு ஏன் பேரு வச்சீங்க??//
புகழை எட்டுவதற்காக எதை வேண்டுமானால் செய்தல் புகழ் போதை.
பெண்ணுக்காக யாரையும் எதிர்த்தல் பெண்போதை
மண்ணுக்காக வெட்டுக்குத்து மண்போதை
மதிமயங்கி உடல் மிதப்பது குடிபோதை
நண்பா, ஊடகத்தை தன்வசப்படுத்த ஜகஜ்ஜாலக்கில்லாடி வேலையெல்லாம் செய்யக்காரணம் அவ்வலைஞர் கொண்ட ஊடக போதையே காரணம்.
சோடா ப்ளீஸ்
//நண்பா, ஊடகத்தை தன்வசப்படுத்த ஜகஜ்ஜாலக்கில்லாடி வேலையெல்லாம் செய்யக்காரணம் அவ்வலைஞர் கொண்ட ஊடக போதையே காரணம்.
சோடா ப்ளீஸ்//
ஏன் கவிக் காக்கா ஊடக'போதை'க்கு விளக்கம் கொடுத்ததாலா ?
// பொதுவாக ஊடகங்கள் எதைத் தான் செய்யவில்லை அனைத்தையும் செய்கிறார்கள், நாம் ஒரு நெறிமுறைக்குட்பட்டு பதிய முற்படுகிறோம் அதில் நம்முடைய சக்திக்கு மீறி எதனையும் செய்ய இயலாது அதனையும் தாண்டி முயற்சிகள் மேற்கொள்ளத்தான் செய்கிறோம். //
சக்திக்கு மீறி எதையும் செய்ய முடியாது தான் முதலில் மரண அறிவிப்பு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்து மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சகோதர தளங்கள் சிறப்புடனே செய்வதாக கூறியிருந்தீர்கள் அல்ஹம்துலில்லாஹ் அவர்கள் செய்யட்டும் நீங்களும்
உங்களால் முடிந்த அளவு அவர்களுடன் சேர்ந்து செய்தால் மிக நன்றாக இருக்கும் எல்லாம் வல்ல இறைவன் இதற்கு அருள் புரிவானாகவும்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. அபூபக்கர், தங்களின் வேண்டுகோளுக்கு மிக்க நன்றி.
அதிரை சகோதரர்கள் நடத்துனர்களும் நம் சகோதரர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளதால் தான் மற்ற முன்னனி அதிரை வலைதளங்களின் பதியப்படும் செய்திகளை அதிரைநிருபரிலும் பதிவதில்லை. ஒரு முன்னனி அதிரை வலைதளத்தில் ஒரு செய்தி வெளியானாலும் பெரும்பாலும் அனைவரையும் சென்றடைகிறது என்பது தான் உண்மை.
மரண அறிவிப்பு செய்திகளை தனி பதிவாக அதிரைநிருபரில் போடுவதில்லை என்பதற்கான காரணத்துடன் ஒரு தனி பதிவு இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும். காத்திருக்கவும்.
நல்ல நோக்கத்திற்காக நீங்கள் செய்யும் அதிரை ஊடகப் பணியை தொடர்ந்து செய்யுங்கள்.
இந்தத் தொடரின் சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. பலவற்றில் உடன்பாடு உண்டு. என்றாலும் "ஊடக போதை" என்ற தலைப்பு இந்தத் தொடருக்குப் பொருந்தாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
sabeer.abushahruk சொன்னது…
// புகழை எட்டுவதற்காக எதை வேண்டுமானால் செய்தல் புகழ் போதை.
பெண்ணுக்காக யாரையும் எதிர்த்தல் பெண்போதை
மண்ணுக்காக வெட்டுக்குத்து மண்போதை
மதிமயங்கி உடல் மிதப்பது குடிபோதை
நண்பா, ஊடகத்தை தன்வசப்படுத்த ஜகஜ்ஜாலக்கில்லாடி வேலையெல்லாம் செய்யக்காரணம் அவ்வலைஞர் கொண்ட ஊடக போதையே காரணம்.//
இதில் எந்த அளவு உண்மை இருக்கக் கூடும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். நம் கருத்துக்கு மாற்றுக் கருத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக நாமாக எதனையும் கற்பனை செய்வது கூடாது.
போதை என்பது சுய நினைவை இழக்கும் சூழல். குறிப்பிட்ட சில பொருள்களை உட்கொள்வதால் இது ஏற்படக் கூடும். அளவுக்கு மீறிய புகழ், அளவுக்கு மீறிய காதல், செல்வம் போன்றவை வந்து சேரும் போதும் ஒருவர் தன் சுய நினைவை இழந்து செயல்படக் கூடும். ஆக, புகழ், செல்வம், காதல் போன்றவற்றை அடைந்த பின் ஏற்படுவதே போதை. ஊடகங்களை தன் வசப்படுத்துவதற்காக ஜகஜ்ஜாலக்கில்லாடி வேலை செய்வது தவறு. மாறாக வசப்படுத்திய பின் வந்து சேர்வதே போதை.
அன்பிற்குரிய அபுசுஹைமா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//என்றாலும் "ஊடக போதை" என்ற தலைப்பு இந்தத் தொடருக்குப் பொருந்தாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது//
தங்களின் அபிப்ராயங்களில் எப்போதும் அர்த்தம் பொதிந்திருக்கும். இம்முறை புரிதலில் சற்றே கருத்து மயக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நான் ஜாகிருக்குக் கொடுத்த விளக்கங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென நான் எதிர்பார்த்தேன் என்றால்,
ஊடகத்தின்மீதான போதையே ஊடக போதை. ஊடகம் கைவசப்பட்டபின்பும், முன்பும், இடையேயும் என எந்நேரமும் இந்த போதை நீடிக்கும். அதன்மீதான போதைகொண்டலையும் எத்தனையோ பேர்களையும் அவர்களின் அடாவடி தளங்களையும் நான் கண்டு வருகிறேன்.( உதாரணத்திற்கு முகநூல் போதை?)
நீங்கள் சொல்வதுபோல்
//புகழ், செல்வம், காதல் போன்றவற்றை அடைந்த பின் ஏற்படுவதே போதை// என்ற அர்த்தத்தில் அல்ல.
என் கருத்தில் "அதிரை வலைஞர்களைத்தவிர" என்று குறித்திருந்தால் நீங்கள் இப்படி அர்த்தப்படுத்தியிருக்க மாட்டீர்கள்தானே?
//எந்த அளவு உண்மை இருக்கக் கூடும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்//
சரியாகச்சொன்னீர்கள்.
//நம் கருத்துக்கு மாற்றுக் கருத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக நாமாக எதனையும் கற்பனை செய்வது கூடாது.//
//மாற்றுக் கருத்தில் இருக்கிறார்கள்// நீங்கள் யாரைக்குறிப்ப்டுகிறீர்கள் என்று விளங்கவில்லை. தவிர, நான் எதைக் கற்பனை செய்துவிட்டேன் என்றும் பிடிபடவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.
நான் பொதுவாக என்னறிவால் சொன்ன ஒரு கருத்தை ஏன் தங்களின் நுண்ணறிவால் பெரிதாக்குகிறீர்கள் என்றும் தெரியவில்லை.
Dear AbuSuhaimaa,
I request you to please read my whole statement either to apply for every blogger in the WORLD or atleast, please exclude our Hometown bloggers, ‘cause I did not mean what you are trying to emphasize.
Thanks.
Post a Comment