திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா இவரின் மகள் தவ்ஃபீக் சுல்தானா(13). 8ம் வகுப்பு மாணவி. கடந்த 13ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் எடமலைப் பட்டி புதூரை அடுத்த ரெட்டை மலை பகுதியில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உடல் உறுப்புகள் சிதைந்து உடல் சிதறி பினமாக கண்டெடுக்கப்பட்டார்.
14.08.2013 அன்று தவ்ஃபிக் சுல்தானா கற்பழித்து கொலை செய்யபட்டுள்ள செய்தியை தமிழக ஊடகங்களில் ஒருதலைப்பட்சமாக காட்டப்படுகிறது என்பது மிகத் தெளிவாகிறது. டெல்லியில் ஓரு மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு ஒட்டு மொத்த இந்தியாவும் ஒருமித்த குரலில் அநீதிக்கு எதிராக ஒன்று திரண்டு குற்றவளிகளுக்கு தண்டனை வழங்கவும்" குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே பிடிக்கவும் போராட்டம் நாடு முழவதும் நடந்தது "குற்றவாளிகளும் உடனே பிடிக்க பட்டனர், இந்தியாவில் வடமாநிலத்தின் ஓரு நகரத்தில் நிகழ்ந்த குற்றச் செயலுக்கு ஒன்று கூடிய நம்ம தமிழ்நாட்டு மக்களும் ஊடங்களும் சொந்த மாநிலத்தில் ஓரு இளம் பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. இதை எந்த ஒரு செய்தித்தாள்களிலோ தொலைக் காட்சியிலோ வெளிச்சம் போட்டு காட்டாமல் மறைத்தது ஏனோ?
இந்த கொடூரத்திற்கு ஏனோ சமுக அர்வலர்களும் குரல் கொடுக்காமல் இன்னும் மவுனம் சாதிக்கிறார்கள்.
இந்த கொலையைக் கண்டிக்க மறந்த பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளின் ஒருதலைபட்சமான போக்கை அனைவரும் கண்டிக்க வேண்டும். டெல்லியில் வசிக்கும் பெண்ணுக்கு ஓரு நியாயம் தமிழ்நாட்டில் வாழும் பெண்ணுக்கு வேறு நியாயம், அதுவும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஓர் முஸ்லீம் பெண் என்ற பாரபட்சம்.
தவ்ஃபிக் சுல்தானா….. இந்த இளம் பிஞ்சும் ஒரு பெண்தானே…. தமிழ் மக்களே இந்தக் கொடூரத்தை கண்டித்தும் கொடிய குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து விரைவில் தண்டிக்கப்பட குரல் கொடுக்க வேண்டும்.
இந்த கொலை தொடர்பாக சரியான விசாரனை நடத்த கோரி திருச்சியில் முஸ்லீம்கள் நேற்று முன்தினம் நடைத்திய ஆர்பாட்டத்தின் காணொளி இதோ..
அதிரைநிருபர் பதிப்பகம்
மாணவி தவ்பிக் சுல்தானாவின் கொலையும் நாம் பெற வேண்டிய பாடமும்.
முதலில் அவருடைய தந்தை சவூதி அரேபியாவில் வேலை பார்க்கிறார் தந்தையின் நேரடி கவனிப்பற்ற வளர்ப்பு. ஆயிரம் பேர் இருந்தாலும் தந்தை இருப்பது போல் வராது. இன்னும் நாம் வெளிநாட்டில் வேலையிலேயே கவனம் செலுத்தி நமது பிள்ளைகளை இன்னும் எத்தனை பேரை இழக்க போகிறோம் என தெரியவில்லை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
இரண்டாவது காரணம் மாணவி தவ்பிக் சுல்தானா தன்னை சிலர் பின்தொடருவதாகவும் கேலி செய்வதாகவும் தன் கூடப்படித்த தோழிகளிடம் சொல்லியிருக்கிறரே தவிர பெற்றோர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒருவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியை இது காட்டுகிறது. பெற்ற பிள்ளைகளிடம் உற்ற நண்பன் போல் பெற்றோர்கள் நடந்துக் கொள்ள வேண்டும் நம்மிடம் பேசுவதற்கு அவர்களின் குறைகளை சொல்வதற்கு தயங்கக் கூடாது.
வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் போனில் பேசும்போது குழந்தைகளிடம் குறைகளை கொஞ்சம் நேரம் செலவழித்து பேசி கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் நல்ல நண்பனாக நான் இருந்து விட்டால் பல பிரச்சனைகளை ஆரம்பத்திலே களைந்து விடலாம். இன்ஷா அல்லாஹ்.
13 Responses So Far:
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
மனித நேயமற்ற வக்கிர ஊடகங்கள் அழிவை சந்தித்து, உண்மை வெல்ல அல்லாஹ் நாடுவானாக ஆமீன்.
இது சுதந்திர நாடா ? அல்லது மிருகங்களின் காடா ?
இஸ்லாத்தின் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் குற்றவியல் சட்டங்கள் அமுலுக்கு வரும் வரை இந்த கொடூர குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி என்பதே இல்லை. தொடர் கதைதான்.
எந்த இடத்தில் எந்த ஊரில் சம்பவம் நடை பெற்றதோ அங்கேயே தூக்கில் தொங்க விடப்பட வேணும் சட்டப்படி.
அபு ஆசிப்.
தமிழகத்தில் ஊடகங்கள் அணைத்தும் பாசிச வக்கிரம் பிடித்த நாய்களாகவும் ஆர் எஸ் எஸ் போன்ற வக்கிர புத்தி படைத்தவர்களுக்கு மாமா வேலை பார்ப்பவராக மாறிய பின் நமக்கு நீதி கிடைக்குமா தமிழகத்தில் நீதி நேர்மையுடன் ஊடகங்கள் வேலை செய்து பல மாமாங்கம் முடிவுற்ற நிலையில் நாம் இந்த நாய்களிடம் நீதியை எதிபார்க்க முடியுமா? உண்மயை உலகுக்கு உறைக்க வக்கற்ற ஊடகங்கள் தனது ஊடகங்களை மூடிவிட்டு பார்பர் ஷாப் அல்லது பாசிச புத்தி உடையோருக்கு மட்டும் இல்லமல் நாட்டுக்கே மாமா வேலை பார்க்க போகலாம். இப்பொ கிடைக்கின்ற காசைவிட நிறையவே கிடைக்கும். தமிழகத்தில் இஸ்லாமியர்களை இரன்டாம் குடித்தரமாக நினைத்து மீண்டும் மீண்டும் பிரிவினைக்கு வித்திடும் பாசிச ஊடகங்கள் ஒழிக்கப்பட வேண்டும் அரசியல்வாதிகள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் காய் நகர்த்தும் போக்கை இன்னும் கையாண்டீர்களானால் சொர்க்க பூமியாக திகழும் தமிழகம் உங்களால் யுத்த பூமியாக மாற 100% நீங்கள்தான் காரணமாகும் என்பதை மறந்துவிடக்கூடாது
லஞ்சம், ஊழல் இதுபோன்ற விஷயங்களை உங்களால் தவிற்க்க முடியாவிட்டாலும் நாட்டை துண்ட்டாட துடிக்கும் பாசிச் தீய சக்திகளை ஒழிக்காவிட்டால் நீங்கள் பதவிகளில் இருந்து நாட்டுக்கக என்ன செய்தீர்கள். தான் குடும்பம், தன் வயிறு இவைகளை மட்டும் பார்ப்பதற்கல்ல பொது வாழ்வு, மக்களின் குறையை தீர்க்கத்தான் உங்களுக்கு ஓட்டுபோட்டு உங்களை அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அதை கொஞ்சாமாவது சிந்தித்து பொதுமக்கள் நலம் காக்க கவணம் செலுத்துங்கள்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
வாப்பா சவுதியில் இருந்தாலும் ஏற்கனவே இவ்வுலகை விட்டு சென்றிருந்தாலும் நம் பெண் பிள்ளைகளுக்கு/பெண்களுக்கு மார்க்கம் போற்றும் பெரும் மாமேதைகளாக இல்லாவிட்டலும் குறைந்தளவு மார்க்கம் இருந்தால் கூட இது போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. காதல் வயப்பட்டு நம்பிய ஒரு இளைஞனே தன் சக மாணவ நண்பர்களுக்கு (முஸ்லிம் & இந்து) இச்சிறுமியை விருந்தாக்கி பிறகு அப்பெண் தன் தாயிடம் முறையிடுவேன் என மிரட்டியதும் அதற்கு வாய்ப்பு கொடுத்தால் இன்னும் பிரச்சினைகள் விஸ்வ ரூபமெடுக்கும் என்றஞ்சி பொறியியல் படிக்கும் அந்த 5 இளைஞர்கள் இப்பெண்ணை கொன்று யாருமறியா வண்ணம் உடலை அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் போட்டுச்சென்றதாகவும் கொடூரக்குற்றம் செய்த அந்த ஐந்து இளைஞர்களும் பிடிபட்டு விட்டதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் மூலம் செய்திகள் வந்திருக்கிறது.
அல்லாஹ்வே நம்மை விட உலகின் அனைத்து ரகசிய புலனாய்வு துறைகளை விட மிகத்துல்லியமாகவும், தெள்ளத்தெளிவாகவும் ஒவ்வொன்றையும் நன்கறியக்கூடியவன்.
எனவே ஏற்கனவே பாஸிச, மத துவேச சக்திகள் ஊரெல்லாம் விரித்து வைத்துள்ள காதல், கருமாந்திரம் என்ற வலையில் நம் இளைஞர்களும், வயதிற்கு வந்த, வராத பெண்களனைவரும் தங்களைத்தாங்கள் கழுகுக்கண் கொண்டு பாதுகாத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர் இன்றைய உலகளாவிய சூழ்நிலையில்.
வீட்டில் ரிப்பேராகிப்போன ஒரு ஹீட்டரை வந்து சரி பார்த்துச்செல்பவன் கூட சும்மா செல்வதில்லை. அதில் கண்ணுக்கு எளிதில் புழப்படாத மிகச்சிறிய கேமராவை பொறுத்தி விட்டு எங்கோ உட்கார்ந்து கொண்டு குளியலறை காட்சிகளை குதூகலமாக கண்டுகளிக்கும் பயங்காரமான காலமிது.
ஊடகங்களின் செயல்பாடுகள் வன்மையாக கண்டிக்க தக்கது
போலி எண்கவுண்டர் என்னும் திடீர் துப்பாக்கிப்பிரயோக தோட்டாக்களுக்கு மட்டும் உரிமையாளராகிப்போன சிறுபாண்மை சமுதாயமிது.
இஸ்லாமியர்கள் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தால் தான் ஊடகக்கண்கள் உறுத்துமே தவிர அவர்கள் சாய்ந்தாலல்ல.
நம் தமிழகம் என்றோ தனிநாடாக்கப்பட்டு விட்டது
ஊடக, மத்திய அரசின் பாரபட்சமுள்ள பார்வையில்
கிரிக்கெட்டில் இந்தியா இலங்கையை வீழ்த்தினாலே
கடலில் நம் தமிழக மீனவர்களை ஸ்டெம், பேட், பந்தின்றி
வீழ்த்துகிறான் இலங்கை கடற்படை தினம், தினம்.
இனாமாக கொடுத்த கட்சத்தீவில் காற்று வாங்கி வர கூட நம் மீனவர்களிடம் காசு கேக்கிறான் இலங்கை கடற்படை எனும் பொடிப்பயல்
காலமெல்லாம் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பேசி
கண்கொத்திப்பாம்பாய் இருக்கும் நம்மவன்
நாட்டுக்குள் நடக்கும் அட்டூழியங்களை அடக்கி ஒடுக்க வேண்டிய தருணம் கொஞ்சம் கண்ணயர்ந்து உறங்கிவிடுகிறான்.
இப்படியே போனால் சீனாவும், பாக்கிஸ்தானும், இலங்கையும் சேர்ந்து திரிகோணமலையிலிருந்து நம்மேல்
முக்கோணதாக்குதல் நடத்தி முடங்கச்செய்திடுவான் எளிதில்
சிறுபாண்மையினரை கொஞ்சமும் மதிக்காத மோடியின் போக்கு இன்னுமிவனை ஆக்ரோசப்படுத்தி அவர்களின் கூட்டு
அட்டூழியங்கள், தாக்குதல்கள் நம் நாடெங்கும் அரங்கேற்ற இவர்களே நல்லதொரு தொடக்கத்தை தன் நாவிலேயே வைத்துள்ளனர்.
எம் வேதனைகள் விரிவடைந்தாலும்
அதை காது கொடுத்து கேட்க நாதியில்லை
கேட்டாலும் அதன் மேல் வீரியமில்லை
படைத்தவனின் அதிசயத்தில் அன்றாடம்
எம்வாழ்க்கையும் அப்படியே நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நீர் மூழ்கிக்கப்பல் கூட நெருப்பில் மூழ்கும் அதிசயம்
நம் நாட்டில் தான் நடக்கிறது இது சதியா?
இல்லை நாட்டின் தலை விதியா?
தென் தமிழகத்தில் நடந்த ஒரு கொலைக்கு
எங்கோ இருக்கும் பாக்கிஸ்தானை குற்றம் சுமத்தும் இவன்
அரபிக்கடலில் நடந்த அந்த விபத்திற்கு
அரபுநாடுகள் மேல் குற்றம் சுமத்துவானா?
விபத்தையும், சதியையும் பிரித்தறிய
படித்துக்கொடுக்கும் நல்ல தொரு
பல்கலைக்கழகம் நாடெங்கும் வேண்டும்
லாயிலாஹா இல்லல்லாஹ் என்றால் தீவிரவாதம் என்கிறான். நாட்டின் சுதந்திர தினம் குதுகலமாய் கொண்டாட அனுமதி மறுக்கிறான். அவனின் நோக்கமும்
போக்கும் என்ன தான் என? அவனுக்கே தெரியவில்லை
பிறகெப்படி உனக்கும், எனக்கும் எளிதில் தெரிந்து விடும்.
இது கவிதையல்ல சமீபத்திய நம் நாட்டு நிகழ்வுகளைக்கண்டு மண்ணின் மைந்தனாய்
வேதனையின் விளிம்பில் நின்று அமைதியாய் இடும் ஓலம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
இஸ்லாத்தின் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் குற்றவியல் சட்டங்கள் அமுலுக்கு வரும் வரை இந்த கொடூர குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி என்பதே இல்லை. தொடர் கதைதான்.
நான் நம் முன்னோர்கள் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்.
வெள்ளையர்கள் நம்மை அடிமைகளாக வைத்திருந்தார்களே ஒழிய மனித நேயம் என்ற ஒன்றைக் கடை பிடித்தார்கள்.
அடிமை என்ற ஒன்றைத்தவிர மற்ற அனைத்து சுதந்திரங்களும் இருந்தன. மனிதனுக்குள்ள அடிப்படை உரிமைகள் பேணப்பட்டன. ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ்.
சுதந்திரம் என்ற பெயர் மட்டும் இருக்கும் இந்த நாட்டில் , எதிலுமே சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாக , ஒரு குறிப்பிட்ட வர்க்கம் மட்டுமே , ஏதோ அவர்கள் மட்டும் தான் இந்தியாவில் பிறந்ததுபோல் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
கற்ப்பின் முக்கியத்தும் பெண்ணுக்குப் பெண் வர்க்கத்துக்கு வர்க்கம், ஜாதிக்கு ஜாதி, இனத்துக்கு இனம் செல்வாக்குக்கு செல்வாக்கு என்று மாறு பட்டால். காந்தி வாங்கி தந்த சுதந்திரம் ( காந்தி மட்டும் காரணமல்ல , நம் இஸ்லாமிய சமுதாயம் எவ்வளவோ உயிர் தியாகம் செய்திருக்கின்றது அது வேறு விஷயம் ) என்ன அர்த்தத்தில் பேணப்படுகின்றது என்று தெரியவில்லை
மகாத்மாவை கரன்சி நோட்டில் அச்சடித்து முக்கியம் கொடுத்துவிட்டால் போதும் என்று நினைக்கும் இவர்களா மகாத்மாவை மதிக்கின்றார்கள். ?
எப்பொழுது கண்ணுக்கு கண் , பல்லுக்குப்பல், உயிருக்கு உயிர் என்று சட்டத்திற்கு உயிர் கொடுக்குப்படுகின்றதோ அன்று தான் இந்தியாவின் சட்டம் உயிர் பெற்று அனைத்து வர்க்கத்துக்கும் நீதி என்ற எட்டாக்கனி எட்டும் நிலை வரும். அதுவரை நீதி ஏட்டு சுரைக்காய்தான். ( கறிக்கு உதவாது )
அபு ஆசிப்.
மாற்றங்கள் தேவையான மனித சட்டத்தால் இந்த கொடூர குற்றங்களை தடுத்து விட முடியும் என்பது வீண் கனா .
மாற்றங்களே தேவை இல்லாத ஏக இறைவனின் இரும்புச் சட்டத்தின் கை நீளும் வரை இக்குற்றங்களின் பட்டியலும் நீளும்.
இறைவனின் சட்டமே மாற்ற முடியாதது.
குற்றங்களை களைய வல்லது.
குற்றவாளிகளை அடுத்த முறை குற்றம் செய்யத் தூண்டாதது.
தண்டனையை பகிரங்கப்படுத்தி தண்டனை தருவது.
தண்டனையில் ஒளிவு மறைவு இல்லாதது.
குற்றம் செய்ய இருப்பவனை குற்றத்திற்கு முன் யோசிக்க வைப்பது.
குற்றம் என்று வரும்போது தண்டனையில் சொந்தபந்தங்களை பார்க்காதது.
மொத்தத்தில், மக்கள்
சுபிட்சமாய் வாழ
குற்றவாளிகளை கண்டு பயமின்றி நடமாட
குற்றமற்ற பொற்கால வாழ்வு என்று ஏட்டில் மட்டும் இல்லாமல்
வாழ்வின் நடைமுறையிலும் வாழ்ந்து காட்ட
அமுல் படுத்தப்படவேண்டிய குற்றவியல் சட்டம் - 1400 வருடங்களுக்கு முன்பு விரிந்த சட்டம் . அதுவே இறைவனின் உன்னத திருக்குரானின் குற்றவியல் சட்டம்.
அபு ஆசிப்.
மகாத்மா காந்தி அன்றே உமர் ( ரலி ) அவர்களின் ஆட்சிக்கால சட்டம்
இந்தியாவின் குற்றவியல் சட்டமாக வரவேண்டும் என்றார். அவர் சொன்ன அன்று அமுல் படுத்தப்பட்டு இருந்தால், எத்தனையோ எண்ணிலடங்கா கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள், திருட்டுக்கள், லஞ்சம், ஊழல் முன்கூட்டியே தடுக்கப்பட்டு ஒரு குற்றம் குறைந்த நாடாக மாறிப்போய் இருக்கும். அதை மதிக்காததால் இன்று குற்றங்கள் மலிந்த நாடாக நாறிப்போய் இருக்கின்றது.
இவர்களுக்கு இந்த சட்டம் என்பது ஒரு வறட்டு கௌரவத்தின் பிடியில் சிக்கி அதை அமுல் படுத்த விடாமல் ( இது முஸ்லிம்களின் தனியார் சட்டம் என்ற ரீதியில் பார்ப்பதால் ) இதில் உள்ள அறிவு பூர்வமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றது என்று தெரிந்தும் குற்றம் அதிகமானாலும் பரவாஇல்லை. இந்த தனியார் சட்டத்தை அமுல்படுத்தக்கூடத்து என்பதில் குறியாய் இருப்பதோடு , காலத்திற்கு உதவாத இந்த அம்பேத்காரின் அரசியல் சட்டங்களும், மற்றும் குற்றத்தை நாளுக்கு நாள் அதிகரிக்க உதவும் , ஒன்றுக்கும் லாயக்கற்ற குப்பையில் போட வேண்டிய சட்டங்களையும் தூக்கி வைத்துக்கொண்டு, குற்றங்கள் குறைய வழி தேடி விழி பிதுங்கி நிற்கின்றனர். நீதி பதிகளும் அரசாங்கமும்
இதுபோன்ற குப்பை சட்டங்கள் இருக்கும் வரை , மேலும் பல கன்னிப்பெண்களின் கற்ப்புகளும் இந்தியாவில் பாதுகாக்கப்படுவது கேள்விக்குறியே!
வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய் தேடி அலைகின்றனர்
வக்கற்றவர்கள்.
கண்டிப்பாக தேடி வருவர் ஒரு நாள் இறைவனின் சட்டத்தி நோக்கி.
இன்ஷா அல்லாஹ்
அபு ஆசிப்.
//எனவே ஏற்கனவே பாஸிச, மத துவேச சக்திகள் ஊரெல்லாம் விரித்து வைத்துள்ள காதல், கருமாந்திரம் என்ற வலையில் நம் இளைஞர்களும், வயதிற்கு வந்த, வராத பெண்களனைவரும் தங்களைத்தாங்கள் கழுகுக்கண் கொண்டு பாதுகாத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர் இன்றைய உலகளாவிய சூழ்நிலையில். //
இஸ்லாமிய சமுதாயத்தை சீரழிக்க இன்று உலகம் முழுவதும் பாசிச சக்திகள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து கைகோர்த்துள்ள சூழலில் நம் இஸ்லாமிய சமுதாயமோ ஏனோ கையறுப்பட்டுபோனதுபோல் செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டுள்ளது.
உலக அளவில் வெட்ட வெளிச்சமாக அப்பட்டமாக யூதர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராக அத்துமீறல்களை அ நியாயமாக நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது உலக மக்களுக்கு பாலஸ்தீனர்கள் தீவிரவாதிகளாக காட்டப்படுகின்றனர்.
இது போல் ஏராளமான உதாரணங்களைச் சொலலாம், சிரியாவில் ஒரு பசார் அல் அசாத், பர்மா. இலங்கையில் புத்தபிக்குகள், நம் நாட்டிலோ காவித்தீவிரவாதிகள் இன்னும் இதுபோல் எத்தனையோ நாமறியாதவைகள் இருக்கலாம். ஆனால் நம் சமுதாயம் இன்று சரியான தலைமையற்று அதனால் ஒற்றுமையின்றி இருப்பதால் சோதனைகளும் வேதனைகளும் கூடிக்கொண்டே போகின்றது. இதற்கு என்னதான் தீர்வு? யா அல்லாஹ் நீதான் சமுதாயத்தைக் காப்பாற்றவேண்டும்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.
இஸ்லாத்தின் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் குற்றவியல் சட்டங்கள் அமுலுக்கு வரும் வரை இந்த கொடூர குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி என்பதே இல்லை. தொடர் கதைதான்.
மிருகத்தை விடவும் மோசமானவனா மனிதன்?
Post a Comment