Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

டெல்லி மாணவி கற்பழிப்பு - யாருக்கு தண்டனை !? 35

அதிரைநிருபர் | December 30, 2012 | , , , , ,

டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் சிகிச்சை பலனின்றி உயிர் பலியான பெண் அமானத் பற்றிய செய்தியே தேசிய மற்றும் உலகம் தழுவிய செய்தி ஊடகங்களில் இதுவே கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தி!

அந்த கற்பழிப்பு கொடூரத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கோஷங்கள் கடந்த இரண்டு வாரமாக இந்திய ஊடங்களின் ஒளி, ஒலிகளில் மின்னிக் கொண்டிருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே!.

TRIBUTES TO INDIA’S DAUGHTER, INDIA DAUGHTER REST IN PEACE, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், தி.மு.க. தலைவர் என்று வரிசைப் பிரகாரம் இரங்கல். டெல்லி மாணவி கற்பழிப்பு தொடர்பான செய்திகளை இணையத்தில் வாசிக்க நேரிட்டதில் பெரும்பான்மையான ஊடக தளங்களின் பேனர்களாக மேல், கீழ், இடது, வலது, புறங்கள் பெண்களின் ஆபாச படங்கள் நிறைந்ததாகவே உள்ளது. தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விளையாடும் இது போன்ற ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

பொதுமக்கள் பார்ப்பதற்கென(?) எடுக்கப்படும் சினிமாக்களில் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச காட்சிகளுடன் வயது வித்தியாசமின்றி காம இச்சையை தூண்டும் காட்சிகளை எடுக்கும் சினிமாகாரர்களுக்கு என்ன தண்டனை?

பெரும்பாலான கற்பழிப்பு குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது என்பது ஒட்டுமொத்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் 27,000 கோடி ரூபாய் டாஸ்மார்க்கிலிருந்து வருமானம் வருகிறதாம்(!!!). தமிழ்நாட்டில் குடிகாரனின் சராசரி வயது 13. ஏராளமான பாலியல் வன்முறைக்கு காரணம் இந்த மதுவே. கேடுகெட்ட இந்த மதுவை வைத்து கடைவிரித்து வருமானம் பார்க்கும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

பொது இடங்களிலும் அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் காமப் பார்வையில் சிக்கி கற்பழிக்கப்பட்டட பின்னர், நான் எந்த ஆண் நண்பனோடும் சுற்றுவேன், நான் எவ்வகை ஆடை (ஆபாச அரைகுறை உடையானாலும்) அணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பது என்னுடைய உரிமை என்று போலி பேராட்டங்கள் நடத்தி பெண் சமூகத்தை கேவலப்படுத்தி வழிகெடுத்துவரும் போலிப் பெண்ணுரிமை காவலாளிகளுக்கு என்ன தண்டனை?

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால், இந்தியாவில் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை பற்றி பேசும் போலிகளான எவனுக்கும் / எவளுக்கு அறுகதையில்லை. இஸ்லாத்தை முறையாக கடைப்பிடித்துவரும் முஸ்லீம்களை தவிர.

டெல்லி பாலியல் வன்முறை தொடர்பாக “பெண்களுக்கு இரவு நேரத்தில் ஊர் சுற்றுவதால் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறுகிறது” என்று 3 பெண் பிள்ளைகளை பெற்றவர் என்ற முறையில் நியாயமான கருத்தை தெரிவித்த ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும், கற்பழிப்புக்கு எதிராக போலிப் பேராட்டம் நடத்தி வருபவர்களைக் கடுமையாக சாடிய இந்திய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜியையும் காமவெறியைத் தூண்டும் ஊடகங்கள் பொங்கி எழுந்து கண்டனங்களால் தங்களின் போலிப் பெண்ணுரிமை ஆதரவை காட்டினார்கள்.

இஸ்லாத்தை அறியாத அல்லது விமர்சிக்கும் பிறமத சகோதர சகோதரிகளே..! இது போன்ற கற்பழிப்பு வன்முறைகளும், சீர்கேடுகளும் தொடராமல் இருக்க, பெண்களுக்கு மரியாதையை, கண்ணியத்தை கொடுங்கள். அவர்களை அரை நிர்வாணத்துடன் மேடையிலும், திரையிலும், தொலைகாட்சிகளிலும் ஆட விட்டு உங்களின் காம பசியை தீர்த்துக்கொள்ள உதவும் காட்சிப் பொருளாக அவர்களை பயன்படுத்தாதீர்கள். செய்த குற்றத்திற்கு ஏற்ற உடனடி தண்டனையும், அது நிகழ்வதற்கு காரணமாக அமைந்த காரணிகளை கண்டறிந்து கலைந்து எறிவதுதான் மக்களுக்கும் பொறுப்பில் இருக்கும் அரசுக்கும் உள்ள தலையாய கடமை. கடும் சட்டங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களை குறைக்க முடியாது, இஸ்லாம் நிலைநாட்டிய இஸ்லாமிய திட்டங்களால் பாலியல் குற்றங்களை அடியோடு குறைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் டைக் கட்டுப்பாடு - (திருக்குர்ஆன் 24:31, 33 :59).

பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை - (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32).
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், சுய பார்வைக் கட்டுப்பாடு  - (திருக்குர்ஆன் 24:30,31).
பத்து வயதுக்கு மேல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல் - (ஹதீஸ்).
இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி - (ஹதீஸ்).
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை - (ஹதீஸ்).
அந்நிய ஆண்களும் பெண்களும் இருபாலரும் இணைந்து சரளமாகப் பழகுவதற்குத் தடை -  (திருக்குர்ஆன் 24:27, 33: 55).
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை- (திருக்குர்ஆன் 33:32).
வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை - (ஹதீஸ்)
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய காலத்தில் விரைவாகத் திருமணம் -(திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)
குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்)
கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4  )
இந்த வரம்புகள் அனைத்து மனிதனால் உருவாக்கபட்டதல்ல, இது  அகிலத்தின் அதிபதி இறைவனால் வகுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியிருக்கும் நாடுகளில் கற்பழிப்பு பேன்ற குற்றங்கள் மிகக் குறைவு என்பது உலகம் அறிந்ததே.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்த்தால்தான் தெரியும் அந்த குற்றத்திற்கு எவ்வகை தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று. இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டம் மட்டுமே இதுபோன்ற பாலியல் குற்றங்கள் குறைய மிகச் சரியான தீர்வு.

சிந்தீப்பார்களா வீதியிறங்கியிருக்கும் பெண்ணுரிமை பேரியக்கவாதிகளும், அறிவுஜீவிகள் என்று சொல்லித் திரியும் கேடுகெட்ட பிற்போக்கு சிந்தனையுடைய பெண்ணுரிமைக் காவலாளிகள் (?) அவர்களுக்கு துணைபோகும் அரசியல் வாதிகளும்!?

அதிரைநிருபர் பதிப்பகம்

35 Responses So Far:

Unknown said...

பதில் கூற நாதியுண்டா?

Meerashah Rafia said...

அதிக முட்டாள்களே அரசியல்வாதிகளாய் இருப்பதால் அவர்களை பற்றி பேசுவதும், பேசாமல் இருப்பதும் ஒன்றே..

ஆனால், முற்றிலும் அறிவு ஜீவிகளாய் இருக்கும் மீடியாக்களில் ஆபாசம்,அனாச்சாரம் போன்ற விதைகளை தூவுபவர்களை என் சொல்லுவதென்று தெரியவில்லை.

ஒரு நாட்டின் நான்காவது தூணான ஊடகங்கள் உன்னதமாக மாறும்வரை 100 நாள் இமையமலை உச்சியில் நின்று பணிக்கிட்டில் உறைந்தபடி போராட்டம் செய்து, அதை நேர் ஒலிபரப்பு செய்தாலும் சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை.. கயவர்களுக்கு மட்டுமே சட்டம் என்று விடுத்து ஊடகங்களுக்கு ஒரு சட்டம் இல்லாவிடில் இந்த நாட்டில் குருடர்கள் மட்டுமே வாழ்ந்தாலே ஒழிய இத்தகைய செயல் முழுமையாக ஒழியாது.

அப்பாவி இந்திய மக்கள் நினைக்கின்றார்கள் அரபு நாடுகளில் சட்டம் மட்டுமே குற்றத்தை குறைக்கின்றது என்று.. ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கும் எத்தகைய கட்டுப்பாடு போட்டிருக்கின்றார்கள் என்பதையும் வந்து அறிந்துக்கொள்ளட்டும். உதாரணம் : Orkut Blocked,Times of India photo gallery blocked.

எம்மைப்போன்ற இளைஞர்களின் வருங்கால சந்ததிகளுக்கு எந்த தளங்களை காண்பித்து நாட்டு நடப்பு மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளச்செய்வது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய் உள்ளது இந்த கேடுகெட்ட ஊடகத்தால்..

MSM(MR-Meerashah Rafia)

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஏக இறைவன் ஒருவனை ஏற்று அவனின் திருத்தூதரின் வழிமுறையினை உளமார பின்பற்றுவதினால்தான் இந்த உலகின் அமைதிக்கு உத்திரவாதம்.

அதுவல்லாமல் தனது சுய அறிவிற்க்கு திட்டம்போட்டு சட்டம் இயற்றும் யாராக இருந்தாலும் விளைவு ஏமாற்றமாகவே இருக்கும்.

இதனை ஏற்காதவர்களே உண்மையில் பிற்போக்குவாதிகள்.

Unknown said...

சிந்திக்கத்தூண்டும் பதிப்பு. சமூக போர்வையில் சதையை வைத்து வியாபாரம் செய்யும் இந்த ஊடங்கங்கள் தான் மிக பெரிய குற்றவாளி,கலாசாரத்தை சீரழிக்கும் சினிமாவுக்கு சமூக அடையாளத்தை தந்த பிற்போக்குவாதிகள் இந்தியாவில் அதிகமுண்டு.பெண்ணுரிமை பேசி வேடம்தரிக்கும் சிலர் நவீன விபசார சந்தை சினிமாவுக்கு சாவுமணி அடிக்க தயார? 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ்வின் அழகிய மார்க்கம் இஸ்லாம் தெளிவான வழிமுறையை தந்துள்ளது.குற்றவாளிகளுக்கு தண்டனை சரிதான்!குற்றம் செய்ய தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை தர போகிறார்கள்?! பஞ்சு மெத்தையில் பசியில்லா தூங்கும் நம்நாட்டின் அதிகார வர்க்கம் இரங்கல் தெரிவித்து இறப்பை சரிசெய்து விடுகிறார்கள்.மார்க்க கல்வியின் தேவையை அறியாதவரை பாதிப்பு பக்கத்தில் வருவதை தவிர்க்க முடியாது
-----------------
இம்ரான்.M.யூஸுப்

sabeer.abushahruk said...

தண்டனையைக் கடுமையாக்கி, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் மிருகங்களைப் பொது மக்கள் மத்தியில் தண்டிக்கச் சொல்லும் இஸ்லாமியச் சட்டங்கள் அரங்கேறாதவரை இதையொத்த மரணங்கள் தவிர்க்கவே முடியாது.

அந்தப் பெண்ணையும் பெற்றோரையும் நினைத்துப்பார்த்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்.

KALAM SHAICK ABDUL KADER said...

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்............!!

இஸ்லாமியப் பெண்கள் எப்படிப் பர்தா அணிகிறார்களோ அதேபோலத் தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்.

இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம், கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.

இதேபோலத் தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம், இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும் பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

உலகம் இஸ்லாத்தைப் பார்க்கின்றது
இஸ்லாம் உலகத்தைக் கவனித்துக் கொண்டு வருகின்றது
இஸ்லாத்தின் சட்டம் அவசியம் என்பதைக் காலம் கடந்து உணர்கின்றார்கள்!

KALAM SHAICK ABDUL KADER said...

கவிதாயினி: அதிரையின் வித்து-முத்துப்பேட்டை முத்து “நீரோடை” மலிக்காஃபாரூக் அவர்கள் ஹிஜாப் பற்றி எழுதி முகநூலில் வலம்வந்து கொண்டிருக்கும் கவிதை:

முக்காடென்னும் பர்தாயிட்டு

முஸ்லீம் பெண்மை

முடக்கபடுகிறதா? -அல்லது

முழுமையாக மூடியும்

முன்னுக்கு வந்து முன்னேறுகிறதா?

பூவைப்போன்ற பெண்ணை

பாதுகாப்பதெப்படி என்று

படைத்த இறைவனுக்கு தெரியாதா?

பூவுடலை மறைப்பதால்

பாவைக்குதான் நன்மையென்று

பதருக்கும் புரியாதா?

போர் வீரனுக்கு

கவசம் எவ்வளவு முக்கியமோ? அதைவிட பலமடங்கு பெண்ணுக்கு பர்தா அவசியம்!

”ஏனெனில்”

கழுகுப்பார்வைக் கொண்டு உடல்கொத்தும் பாம்புகளால் பெண்ணின் மேனியை பதம் பார்ப்பதிலிருந்து தப்பிக்க!

பாவத்திலிருந்த தன்னை பாதுகாக்க!

நாளுக்கு நாள்

அதிவேகமாய் பரவுகிறது

நவ நாகரீக ”தீ”

தீயிற்க்கு இரையாவதென்னவோ!

தினந்தோறும் பெண்மைதான்

உண்மையறியாமல்

உலறுகிறது உலகில் சில நாவுகள்!

அடிமையின் சின்னமாய்

அலைகிறது பர்தாவென!

அறிவார்களோ! அவர்கள்

பர்தா அணியும் பெண்மை

அசிங்களை அவமதித்து

அவதாரிகளாகிறார்கள்

அழகிய பதுமைகாகவென்று!

அங்கங்களை காட்டி அலைவதில்தான்

சுதந்திரமிருக்கிறதென்றால்

வேண்டாமந்த முள்வேலி சுதந்திரம்!

அடிமையாகவே இருப்பதையே

அன்போடு விரும்புகிறோம்,

பர்தா அணிவதில் தவறேதுமுண்டோ!

இதனால்

பாதகங்கள் எவருக்குமுண்டோ!

படைத்தவனின் வாக்கை

படைப்பினங்கள் மீறுவது சரியோ!

பாழ்பட்டு போக நினைப்பதுதான் முறையோ!

முக்காட்டால்

முழுவதுமாக மூடியிருப்பது

உடலையே தவிர

உள்ளத்தையல்லவே! -அதனை

செயல்படுத்தும் மூளையையும் அல்லவே!

முக்காடிட்டபடியே முன்னுக்கும் வரலாம் முழங்கால் கட்டாமல் முகம் நிமிர்த்தியும் நிற்கலாம். முஸ்லீம் பெண்ணே!

முன்னேறி வா

முன்னோர்கள் வழிகெட்ட பாதையிலிருந்து

முள்ளகற்றி முன்னேறி வா!

முக்காடிட்டபடியே!

உன்னுடலை

முழுமையாக மூடியபடியே!

நன்றி: மரியாதைக்குரிய சகோதரி மலிக்காஃபாரூக்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். கவிதாயினி கவிதை இயந்திரம் சகோ. மலிக்காஃபாரூக் அவர்களின் கவிதையுடன் ,கவியரசு சகோ.சபீர்,கவியன்பன் சகோ.அபுல்கலாம் மற்றும் பெரும் கவிஞர்கள் அறிஞர்கள் கருத்தை ஒரு முழு தொகுப்பாக தொகுத்து அ. நி பதிப்பகம் விழிப்புணர்வு புத்தகமாக வெளியிடலாமே?

இப்னு அப்துல் ரஜாக் said...

அதிக முட்டாள்களே அரசியல்வாதிகளாய் இருப்பதால் அவர்களை பற்றி பேசுவதும், பேசாமல் இருப்பதும் ஒன்றே..

ஆனால், முற்றிலும் அறிவு ஜீவிகளாய் இருக்கும் மீடியாக்களில் ஆபாசம்,அனாச்சாரம் போன்ற விதைகளை தூவுபவர்களை என் சொல்லுவதென்று தெரியவில்லை.

ஒரு நாட்டின் நான்காவது தூணான ஊடகங்கள் உன்னதமாக மாறும்வரை 100 நாள் இமையமலை உச்சியில் நின்று பணிக்கிட்டில் உறைந்தபடி போராட்டம் செய்து, அதை நேர் ஒலிபரப்பு செய்தாலும் சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை.. கயவர்களுக்கு மட்டுமே சட்டம் என்று விடுத்து ஊடகங்களுக்கு ஒரு சட்டம் இல்லாவிடில் இந்த நாட்டில் குருடர்கள் மட்டுமே வாழ்ந்தாலே ஒழிய இத்தகைய செயல் முழுமையாக ஒழியாது.

அப்பாவி இந்திய மக்கள் நினைக்கின்றார்கள் அரபு நாடுகளில் சட்டம் மட்டுமே குற்றத்தை குறைக்கின்றது என்று.. ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கும் எத்தகைய கட்டுப்பாடு போட்டிருக்கின்றார்கள் என்பதையும் வந்து அறிந்துக்கொள்ளட்டும். உதாரணம் : Orkut Blocked,Times of India photo gallery blocked.

எம்மைப்போன்ற இளைஞர்களின் வருங்கால சந்ததிகளுக்கு எந்த தளங்களை காண்பித்து நாட்டு நடப்பு மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளச்செய்வது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய் உள்ளது இந்த கேடுகெட்ட ஊடகத்தால்..

MSM(MR-Meerashah Rafia)

Yes brother,your view is 100% right and politicians,media groups should learn lesson,otherwise they are the responsible for this kind of all ills.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உயர் ரக தலையங்கம்!

வாய்ப்பை கொடுத்து தண்டனையும் கண்டனமும் போலிச் செயல்!

அறிவிலி அரசியலர்கள் இஸ்லாமியத்தை ஏற்பதே முழுத் தீர்வு.

Ebrahim Ansari said...

தலைநகரில் மாணவி கற்பழிப்பு சம்பவம் நடைபெற்றதும் முதல் கோரிக்கை பல தரப்பில் இருந்து எழுந்தது குற்றவாளிகளுக்கு இஸ்லாமிய முறைப்படி கடுமையான தண்டனை தரவேண்டுமென்று.

இரண்டாவதாக குற்றவாளிகள் இந்தக் குற்றம் இழைக்க தூண்டியது மது போதை. மதுவை இஸ்லாம் தடை செய்து இருக்கிறது.

இப்போது மதுரை ஆதீனம் பர்தா அணிய வேண்டுமென்கிறார். ஆக ஒட்டு மொத்தமாக இங்கு தேவை ஒரு இஸ்லாமிய சட்டங்கள் அரசாலும் ஆட்சியே. மெல்ல மெல்ல எல்லோரும் லைனுக்கு வரத்தொடங்கி இருககிரார்கள்; உணர்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். இறைவன் பெரியவன். அல்லாஹு அக்பர்.

Ebrahim Ansari said...

தலை நகரங்களில்
தறுதலைகளின் கூட்டம் - அது
ஆட்சி பீடங்களிலும்
சாட்சி பீடங்களிலும்.....

நேற்று பிறப்புறுப்பை
பிய்த்தெறிந்தபோதும் கருவறைகள்
அறுத்தெறிந்தபோதும் காணாமல்
போயிருந்தன - சீழ் வடிந்த
பாரதத்தின் நவீனத்தாய்மார்கள்.....

தூத்துக்குடிகளிலும்
ஆண்டிப்பட்டிகளிலும் கற்பிர்க்காய்
கொல்லப்படுபவர்கள்
பெண்ணகளல்லரோ....

நான் தவறு சொல்லவில்லை
என் சகோதரியே - தலைநகரில்
இழந்தாலும் கற்புதான்
தர்மபுரியில் இழந்தாலும் கற்புதான்....

நான் நியாயம் கேட்கவில்லை
நியாயம் மறுக்கவுமில்லை - உடலை
மூடி மறைக்கப்பட்டதற்காய் கீறி
எறியப்பட்டவர்கள் காந்தியின்
மண்ணில் பிறந்த எம் பெண்டிர்....

ஒட்டுதுணிகளோடும்
ஒட்டடை கிளிசல்களோடும்
கடை விரிக்கவேண்டியவை அல்ல
பெண்களின் அங்கங்கள் - அசுரர்களால்
கிழித்தெடுத்தபின்
ஊளையிடவேண்டியதும் அல்ல
உனது உணர்வுகள்.....

வருந்துகிறேன் சகோதரிகளே...

இனி ஒருக்காலும் நவீனம்
பேசாதீர் சகோதரிகளே - நீ போகும்
வழிகளில் முட்களாய் நீயே
இருந்துவிடாதே.....
- கவிஞர் அபூ பஹத் எண்ணச்சிறகுகளில்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

முதல் தன்டனை மதுக்கொள்கையை கடை பிடிக்கும் அரசிற்க்கு
இரண்டவது தன்டனை அன்னியப் பெண்களிடம் அனாகரிகமாக நடப்போர் அனைவருக்கும்
மூண்றாவது தன்டனை (அ) நாகரீக உடை அனிந்து வெளியில் செல்லும் பெண்களுக்கு
நான்காவது தன்டனை பெண்னையும் ஆனையும் சரி சமம் எனும் சொல்லும் மாதர் சங்கங்களுக்கு
ஐந்தாவது தன்டனை வெளியில் செல்லும் பெண்களை பாதுகாப்பில்லாமல் செல்ல அனுமதிக்கும் பெற்றோர்க்கு
ஆராவது தன்டனை கற்பழித்த அந்த 6 நபர்களுக்கு

ZAKIR HUSSAIN said...

இவ்வளவு சொல்லியும் மதுரை ஆதீனம் இப்படி சொல்லக்கூடாது என்று பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பெண்கள் மானத்தோடு வாழுங்கள் உடை உடுத்துங்கள் என்று சொல்வதும் இந்தியாவில் தவறு போலத்தெரிகிறது.

மரண தண்டனை என்பது தவறு என்று கூறும் மக்களும் இந்த பாலியல் வன்முறை செய்தவர்களை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடவேண்டும் என்று சொல்வதன மூலம் அவர்களின் தார்மீக கோட்பாடு / மனித உரிமை எல்லாவற்றையும் தற்காலிகமாக "DISABLE MODE" .

முஸ்லீம்கள் எழுதும் வலைத்தளங்களில் முஸ்லீம்களை எதிர்த்து , இஸ்லாமிய தண்டனை சட்டம் தவறு என்று வாதிடுபவர்களும் , இப்போது டெல்லி மாணவியின் மரண விசயத்தில் எழுதுவதற்கு வார்த்தையை இன்னும் தேடுகிறார்கள் போல தெரிகிறது.

Ebrahim Ansari said...

பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது- மதுரை ஆதீனம்

தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். அருணகிரிநாதரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார் அவர்.

Ebrahim Ansari said...

அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள்....

பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கை பிரமுகருமாகிய அருந்ததிராய் டெல்லி கற்பழிப்பு பற்றி கூறிய சில கருத்துக்களை மிகைப்படுத்தி சில ஊடகங்கள் அவர்மீது அவதூறுகளை பரப்பிவருகிறது...

அவர்கூறிய வார்த்தைகள்...

"கற்பழிப்பு எங்கு நடந்தாலும் அவை கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எல்லாவிஷயங்களையும் போன்று இந்த விஷயத்திலும் நம்நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
குஜராத்தில் பலநூறு முஸ்லீம் பெண்களின் கற்புகள் காவிகொடூரர்களால் சூரயடபட்டப்போது இந்த ஊடகங்கள் ஏன் அமைதிகாத்தன?

காஷ்மீரில் அபலைபெண்கள் இந்தியரானுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கிலடவேண்டும் என்று கோரிக்கைவைக்கபடாதது ஏன்?

சட்டீஸ்கரில் ஆதிவாசிபெண் சோனி சோரிபோலீசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய மர்மஉருப்பு கற்களால் சேதபடுத்தபட்டபோது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?

இப்போது டெல்லியில் கர்ப்பழிக்கபட்டப்பெண் பஸ்சிலிருந்து நிர்வாணமாக தூக்கிவீசபட்டப்போது நூற்றுகனக்கானோர் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தனரே தவிர அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டிதரக்கூட யாரும் முன்வரவில்லை..

கர்ப்பழிக்கபட்டது எந்த ஜாதியாகவும்,மதமாகவும் இருந்தாலும் பாகுபாடில்லாமல் அதனை எதிர்க்கவேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக முஸ்லீம்களுக்கும்,ஆதிவாசிகளுக்கும்,தலித்துகளுக்கும் ஆதரவாக கருத்து தெரிவுக்கும் அருந்ததிராய்க்கு எதிராக
அவரை தேசதுரோகி எனவும் அவரை தாக்கவேண்டும் என்றும் ஏசியாநெட் போன்ற காவிஊடகங்கள் மக்களை உசுப்பெத்திவிட்டுள்ளனர்...
By: முஹம்மது புகாரி

Yasir said...

மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டத்தில் ஓட்டைகள் இருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால்,நம்மை படைத்த ரப்பினால் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்கள் சரியானவையாவும் சமுதாயத்தை சீர்படுத்த கூடியதுமாகவும் இருக்கும்..ஒரு மாறுதலுக்காக இஸ்லாத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவிட்டாலும் பரவாயில்லை இஸ்லாமிய சட்டங்களை ஒரு வருட காலத்திற்க்கு அமுல் படுத்தி பாருங்கள்...மாற்றத்தை காண்பீர்கள்

அதிரை முஜீப் said...

உரக்க ஒலித்த சிந்தனை கட்டுரை!. பாராட்டுக்கள்!!. ஆனால் புரிந்து கொள்ளவேண்டியவர்கள் தான் புரியா போலிகளாக கபட நாடகமிட்டு, கேட்க மறுக்கின்றார்கள். மதுரை ஆதினத்தின் கருத்தை விட, மாதர் சங்கம் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஆர்ப்பாட்டங்களும் கண்டனக்குரல்களும் முக்காடு போடாத முழு நிர்வாணமாக வலம்வருகின்றன. ஆதினமே அரை நிர்வாண உடை அணிந்திருந்துக்கொண்டு, இப்படி கருத்து தெரிவித்து இருந்தாலும், அவரின் கருத்து பெண்கள் முழுமையாக ஏற்கதக்கதே!.

ஆதினத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், ஆதினத்தின் கருத்திற்கு முன்பே முஸ்லிம் அல்லாத பெண்கள் இஸ்லாம் கூறும் ஆடைகளை முழுமையாகவோ அல்லது அதற்கு இணையாகவோ பின்பற்றி வரும் பெண்களின் முன்னாள் ஆட்ப்பாடம் செய்ய துனிவுண்டா..?

உதாரணத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை எடுத்துக்கொள்வோம். அவர் நாம் வாழும் நிகழ்காலத்தில் நம் கூட வாழ்ந்து வருபவர். அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முன், சினிமாவில் அரை குறை ஆடை அணிந்து ஆட்டம் போட்டவர்தான். ஆனால் இன்றோ தன்னை முழு ஆடை கொண்டு முழுமையாக மறைத்து (தலையை மட்டும் மறைக்காமல்) பெண்களுக்கான ஆடையை பேணி வருகின்றார். எனவே மதுரை ஆதினத்தின் கருத்திற்கு இனையாக ஆடை அணிந்துள்ள இவரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்த இந்த பேடிகளுக்கு துனிவுண்டா..?

அன்னை தெரசா அணிந்த, தற்போதும் கூட கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் அணிந்துள்ள, பெண்களை முழுமையாக காமக்கண் கொண்டு காணும் வக்கிர புத்தி கொண்ட ஆண்களின் பார்வையில் இருந்து தங்களை பேணி காத்து வரும் இந்த கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் என்ன ஆதினத்தின் கருத்திற்கு பின் அணிந்த ஆடைகளா...?

அல்லது பெண்ணாக இருந்தாலும், இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டில் அணிந்து வரும் ஆடை, ஆதினத்தின் கருத்திற்கு பின் அணிந்த ஆடையா..? அல்லது இவரின் இல்லத்திற்கு முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்ய இந்த மாதர் சங்கத்திற்கு துனிவுண்டா...?

அல்லது ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் பெண்கள் அணியும் முழு கலாச்சார ஆடையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய இந்த போலிகளுக்கு துனிவுண்டா...?

விளம்பரம் முதல், மதுபான விற்பனை வரை பெண்களை போக பொருளாக சித்தரித்து வரும் இந்த நாட்டில் இதை எல்லாம் தட்டிக்கேட்க துப்பில்லாதவர்கள், ஆதினத்தின் கருத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை நினைத்து சிரிப்புத்தான் வருகின்றது.

ஆதின மடத்தை முற்றுகை இட்டவர்கள், முதலில் தங்களின் மடமையை எதிர்த்து தங்களுக்கு தாங்களாகவே முற்றுகை இடட்டும்.... !

போலி சாமியார்களின் வேடத்தில், பெண்களை கற்பழித்து காம வேட்டை ஆடிவரும், நித்தி, காஞ்சி போன்ற மடங்களுக்கு முன் முற்றுகை இடட்டும்..!

ஆசிரியர் மாணவியை இழுத்து கொண்டு ஓடும் பள்ளி, மற்றும் கல்லூரி முன் முற்றுகை இடட்டும்...!

காதல் என்ற பெயரால் சிறுமிகளை சீரழித்து தெருவில் விட்டு விட்டு செல்லும் ஆணாதிக்கத்தின் அரக்கர்களுக்கு தன்டனை பெற்றுத்தர முற்றுகை இடட்டும்...!

இதெற்கெல்லாம் மேலாக ஆபாச நடிகை ஷகீலா கோர்ட்டிற்கு வரும் போது பர்தா ஆடை அணிந்து வந்த காட்சிக்கு ஆர்ப்பாட்டம் செய்யாமல் எங்கே சென்றீர்கள் மாதர் சங்கங்களே...?

Iqbal M. Salih said...

சகோ.முஜீப் உடைய துணிச்சலான கேள்விகள்
வரவேற்கத்தக்கவை!

வலுவான கருத்துக்கள் பாராட்டத்தக்கவை!

Ebrahim Ansari said...

சகோ.முஜீப் உடைய துணிச்சலான கேள்விகள்
வரவேற்கத்தக்கவை!
I second the view of Thmabi Iqbal.

Unknown said...

சகோ.முஜீப் உடைய துணிச்சலான கேள்விகள்
வரவேற்கத்தக்கவை!

வலுவான கருத்துக்கள் பாராட்டத்தக்கவை!

Yasir said...

Delhi singer Alisha Chinai has demanded Sharia laws to deal with sexual offenders in India. Angered embittered and frightened for the future of femininity Alisha says, "India should show no mercy for sexual offenders. The monsters who did this to Damini must be dealt with in a way most appropriate for them. We must have Sharia laws in this country. An eye for an eye, a life for a life.

source : http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Gang-rape-victims-death-Celebs-cancel-their-New-Year-plans/articleshow/17827983.cms

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இப்பதிவின் வாயிலாக கேட்ட கேள்விகள் மட்டுமல்லாமல் சகோ.முஜீப் உடைய துணிச்சலான கேள்விகளும் இன்னும் பல கேள்விகள் மீதமுண்டு அத்துணை கேள்விகளை இப்பதிவில் மட்டுமல்லாமல் இதையும் தாண்டி அனைவரின் கவனத்திற்க்கு எடுத்து செல்லல் நம் கடமை.

அசத்தலான கேள்விகள் அ.நி மற்றும் சகோ.முஜீப்

KALAM SHAICK ABDUL KADER said...

வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து
..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான்
வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற
...வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்
மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்
...மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப்
பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப்
...பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!


கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக்
...காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால்
பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள்
...பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை
மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச வேண்டும்
....மலிந்துவரும் இக்கொடுமை நீங்க வேண்டி
கண்ணிமைபோல் பெண்களையும் காத்து நிற்கும்
....காலத்தின் கட்டளையாம் பர்தா என்பேன்

ஆதிவாசி அன்றிருந்தாள் அறியா வேளை
...ஆடைகளை உடுத்தவுமே தெரியா மூளை
ஓதியோசித் துணரத்தான் தந்தான் திட்டம்
...ஓரிறையின் மறைதனிலே ஆடைச் சட்டம்
ஆதிவாசிப் போலிருந்தால் கூழாங் கல்லு
...ஆறறிவு பெற்றவளா நீயும் சொல்லு
பாதிபாதி உடையணிந்தால் உன்றன் மேனி
...பார்ப்பவர்கள் கண்கட்குத் தானே தீனி!

Shameed said...

கெடுத்துட்டான் கற்பழிச்சுட்டானு கூடும் கூட்டம் ஏன் கற்பழிச்சான் ஏன் கெடுத்தான்னு இதுவரை சிந்திக்கவில்லை.... வீட்டை திறந்து போட்டா நல்லவனுக்கும் திருடனும் என்ற எண்ணங்கள் எழுவதை தவிர்க்க இயலாததே !

இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாங்க வேண்டிய மானத்தை தெருவில் இறங்கி போறாடி வாங்கி விட்டு(!!!???), கடைசியில் கட்டுப்பாடாம் இறந்த பின்னர் எதனையும் ஒளி/ஒலிபரப்பக் கூடாது என்று 'இந்திய ஒலி/ஒளிபரப்பு கூட்டமைப்பு' முடிவு செய்துவிட்டதாம் !!?

பிரத்தியோகமாக டெல்லி (மாணவி) கற்பழிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் !? பயனடைந்தவர்கள் யார் !?

crown said...

ஆதிவாசி அன்றிருந்தாள் அறியா வேளை
...ஆடைகளை உடுத்தவுமே தெரியா மூளை
ஓதியோசித் துணரத்தான் தந்தான் திட்டம்
...ஓரிறையின் மறைதனிலே ஆடைச் சட்டம்
ஆதிவாசிப் போலிருந்தால் கூழாங் கல்லு
...ஆறறிவு பெற்றவளா நீயும் சொல்லு
பாதிபாதி உடையணிந்தால் உன்றன் மேனி
...பார்ப்பவர்கள் கண்கட்குத் தானே தீனி!
--------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
இதுதான் கவிதை! கற்பை பாதுகாக்க அற்புதமாய் சொன்ன யோசனை!
பர்தா போட்டால்,கயவரின் பார்வைக்கு பூட்டாய்! அவள் சீரழிந்து போகமாட்டாள். பார்தா அவசியம் புரிகிறதா போலி மாதர் சங்கங்களே!

Anonymous said...

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! -

திங்கள், 28 ஜூலை 2008 16:05

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

தொடரும்...

Anonymous said...

தொடர்கிறது 2/4

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்"

என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.

தொடரும்...

Anonymous said...

தொடர்கிறது 3/4

அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?"

என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்"

என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும்ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால்ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது"
என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

தொடரும்....

Anonymous said...

தொடர்கிறது 4/4

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக
இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?"

என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.
எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.
ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட. என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில், இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!

அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்
--
நன்றி: “சத்யமார்க்கம்” வலைத்தளம்
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
---

Unknown said...

Assalamu Alaikkum,

Islam is one of the best frameworks of living disciplined and harmonious life in the world. It has practical methods to solve all problems human beings have been facing, is now facing and will be facing. Once a person or a community start to follow the principles and guidelines islam provides, then the person or the community is set in the straight path.

Islam's all the teachings and regulations proclaim nothing but "prevention is better than cure".

Unknown said...

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் ஒவ்வொரு பெண்ணின் தகப்பன், கணவன் மற்றும் சகேதரன் போன்றோர் இதை உணர்ந்தாலே போதும் ஆனால் உணர்ந்துகொள்ள விடாமாட்டார்கள்(மாதர் சங்கத்திர்) சிலர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு