Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊடக போதை - 6 தொடர்கிறது... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2012 | , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்….
version - 6

கடந்த ஊடக போதை தொடர் பதிவில், நவீன ஊடகங்கள் நம் அறிவு வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை விமர்சனம் செய்திருந்தோம், மேலும் மார்க்க கல்வியாளர்களின் எண்ணிக்கை குறந்துக்கொண்டே வருகிறது இதற்கு காரணம் நவீன ஊடகங்களின் தாக்கம் என்பதை கோடிட்டும் காட்டினோம். அதன் தாக்கம் எவ்வாறு என்பதையும் வசகர்களின் கருத்துகள் பறைசாற்றியது. அல்ஹம்துலில்லாஹ்..!

இந்த பதிவில் நம் சமுதாயத்தில் கணக்கிலடங்கா இயக்கங்கள் நம்மைச் சூழ்ந்துக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு ஊடகம் என்று வைத்துக்கொண்டு சமுதாய சேவை செய்திகள் தருகிறோம் என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அவதூறுகளை அசிங்கங்களை மாறி மாறி சேற்றை வாரியிரைத்து முகத்தில் பூசிக்குக் கொள்கிறார்கள். இதற்கு அளவே இல்லை. இவைகளுக்கு காட்டாக எதனையும் இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. அன்றாட இணையதளங்களில், மின்னஞ்சல் குழுமங்களிலும், தனி மின்னஞ்சல்களிலும் நேரத்தை வீண் விரயம் செய்து குழப்பங்களை அவர்களுக்கே உரிய பாணியில் பரப்பி வருகிறார்கள். 

ஒருவர் மார்க்க விடையத்தில் அறிந்தோ அறியாமலோ ஒரு தவறான தகவல் தருகிறார் என்றால் அவரின் கருத்துக்கு நளினமான முறையில் அவரின் தவறை திருத்தும் விதமாக மிகச் சரியான ஆதாரத்தகவலுடன் எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும். இதைவிடுத்து அவரின் கருத்தை விமர்சிப்பதை புறந்தள்ளிவிட்டு அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரின் அந்தரங்க செய்திகளை பொதுவில் கட்டுரைகளாக விவாதிப்பதன் மூலம் அந்த மனிதனை அவமானப்படுத்த மட்டுமே முடியுமே தவிர அந்த மனிதரைத் திருத்த முடியுமா?  மேலும் அடுத்தவனுடைய மானத்தில் விளையாடுவதால் பாவத்தை மட்டுமே சம்பாதிக்க முடியும். 

இது போன்ற இயக்கத்தவர்களின் ஊடக போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை தரும் விதமாக பின் வரும் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் உங்கள் பார்வைக்கும் தருகிறோம். தயை கூர்ந்து நிதானமாக படியுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல தெளிவுடன் கூடிய சிந்தனையை தந்து நல்லருள் புரிவானாக.

அல்குர்ஆன் : 49:10. "நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."

அல்குர்ஆன் :3:103. “இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்”.

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புஹாரி (11). 

மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (121). 

ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (481). 

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். 

எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். 

எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். 

எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் 

என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (2442). 

உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (2444). 

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (4011).

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (4045). 

பரபரப்பூட்டும் அவதூறு, கிசுகிசுக்களை வலைத்தளங்களிலும், மின்னஞ்சல்களிலும் பரப்புவது ஒரு நவீன (அதீத)நாகரீகமாகிவிட்டது. குறிப்பாக முஸ்லீம் மார்க்க பிரச்சாரர்களை குறிவைத்தே இது போன்று நடைப்பெறுகிறது. வேதனையிலும் வேதனை என்னவென்றால் மார்க்க அறிஞர்(?)களே சக மார்க்க அறிஞர்களைப் பற்றி தனிமனித தாக்குதல்களுடன் கூடிய அவதூறுகள் பரப்புவது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை உண்மைபடுத்தும் விதமாக காழ்ப்புணர்விலும் சொந்த பகையாலும் எழுதப்படும் இது போன்ற அவதூறுகளை ஊக்கப்படுத்தி மீள்பதிவு செய்யும் கேடுகெட்டவர்களை நினைத்தால் வேதனைப்படாமல் நடுநிலையை விரும்பும் ஒரு உண்மை முஸ்லீமால் இருக்க முடியாது.

ஒருவரின் மானம் எப்படிப் பட்டது?

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!" எனக் கூறினார்கள்.  மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்தபோது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கிடையே நின்று கொண்டு, 'இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்!' எனக் கூறினார்கள். மேலும், 'இறைவா! நீயே சாட்சி!" என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே, மக்களும் 'இது நபி(ஸல்) அவர்கள் (நம்மிடம்) விடை பெற்று (உலகைவிட்டு)ச் செல்கிற ஹஜ்ஜாகும்!" எனப் பேசிக் கொண்டார்கள்." (புகாரி: 1742. )

ஒரு முஸ்லீமுடைய மானம் மரியாதையை எந்த வகையில் புனிதமானது என்று நபிகளார் உவமையுடம் மிக அழகாக கூறியுள்ளார்கள்.

மேலும் மேல் சொன்ன குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஒரு முஸ்லீம் சகோதரன் அடுத்த முஸ்லீம் சகோதரனுடன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் எல்லோரும் உணரவேண்டும். இந்த நவீன இயக்க ஊடக போதையிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றி. உண்மை முஸ்லீமாக வாழ்ந்து உணமை முஸ்லீமாக மரணிக்க செய்வானாக.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நன்னெறி தொடரும்... இன்ஷா அல்லாஹ் !

- அதிரைநிருபர் குழு

8 Responses So Far:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

வலைத்தளங்களில் அவதூறுகளையும்,தேவை இல்லாதா அபாண்டமும்,குறைகளையும்,அடுத்தவனுடைய குறைகளை துருவி,துருவி ஆராய்ந்து மனிதன் சிந்துத்துக்கொண்டே இருக்கிறான். அல்லாஹ் கூறி விட்டான் அடுத்தவனுடைய குறைகளை நீ மறைத்தால் நான் உன்னுடைய குறைகளை மறைப்பேன் என்று.

அவ்வாறு இருக்க நாம் அடுத்தவருடைய குறைகளை ஏன் பகிரங்க படுத்த வேண்டும். முதலில் நம்மவர்களுடைய குறைகளை போக்க வேண்டும் ஒரு முஸ்லிம்மான ஒரு முஸ்லிம் சகோதரர்கள் என்ன செய்யவேண்டும்,எப்படி செய்யவேண்டும் என்றல்லாம் குர் ஆனியிலும்,ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுயிருக்கிறது. இதை யாரும் கவனிப்பதில்லை அடுத்தவரை பற்றி துருவி,துருவி கெட்ட எண்ணங்களிலும்,பொறாமையிலும் அலைந்து,திருந்துக் கொண்டியிருக்கிறோம். இந்த காழ்ப்புணர்ச்சி ஊடக போதையில் தான் அதிகமாக ஆகிவிட்டது ஏன்னென்றால் இந்த போதையில் தான் என்னா வேண்டுமானாலும் எழுதாலாம்.

ஊடக போதையில் எழுதுவதாக நினைக்க மாட்டார்கள் வேற என்னமோ மற்ற போதையில் எழுதுவது போல் எழுதுவார்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஊடகத்தீயை அணைக்க அவசியமான வழிகாட்டி நெறிகள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இவ்வாறாக ஊடக போதையில் இருப்பவர்கள் !

நீயா - நானா ?

செய்திகளில் / பதிவுகளில் எதைச் சொல்ல வேண்டும் என்ற நெறி இருந்தாலே போதும், அதோடு அந்தச் செய்திகளை வாசிப்பவர்கள் அதனை எழுதியவர்களைவிட நன்கு விபரம் தெரிந்தவர்கள் என்று கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

அதீத புகழ்ச்சியும் வீழ்த்தும் - நிதானமாக
அடிமட்ட இகழ்ச்சியும் வீழ்த்தும்..- வேகமாக

விமர்சனம் செய்பவரையும் செய்யப்படுபவரையும் !

நேற்று முன்தினம் சென்னையில் பள்ளி ஒன்றில் குரூரம், ஒரு மாணவன் ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்தி ஆசிரியர் மரணம் இத்தகைய வேதனையான செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியே...

இந்தச் சம்பவம் விமர்சிக்கக் கூடியதா ? எச்சரிக்கை விடுக்கக் கூடிய செயலா ? அல்லது விழிப்புணர்வை ஏற்பத்தக் கூடியதா ? தற்காப்புகள் செய்து கொள்ள விடுக்கப்பட்ட சவலா ?

மனதில் கைவைத்துச் சொல்லுங்கள் எது சரி / தவறு ?

ஆராய்ந்து களைவதா ?
எப்படி நிகழ்வு நடந்தது என்று விளக்கிக் கொண்டே இருப்பதா ?

செய்தி ஊடகங்களை அதில் பங்கெடுப்பவர்களின் (பெரியவர்கள்) வயதுடையவர்கள் மட்டும் பார்க்கவில்லை, பாதிக்கப்பட்ட மாணவ சமுதாயமும் அவதானித்து வருகிறது என்பதை மறந்துவிட்டு இந்த ஊடங்கள் நடந்து கொள்வது வேதனையே...

ஒரு சில ஊடகம் தவிர மற்ற ஏனைய ஊடகங்கள் மாணவரின் (வயதை கருத்தில் கொண்டு) பெயர்கள் சொல்லாமலே செய்திகளை வெளியிட்டன...

போட்டி போட்டுக் கொண்டு அந்தக் கொலைச் சம்பவம் நடந்த நிமிடத்திலிருந்து ரன்னிங்க் கமெண்ட்ரி, யூகங்கள், மாணவன் சொன்னதாக, வெளியில் சொன்னதாக அடுக்கடுக்காக சொல்லித் திரியும் இந்த பாங்கு யூதர்களின் வழிமுறையையே...

யூகத்தின் அடிப்படையில் ஒன்றை உருவாக்கி, அந்தக் கற்பனை / யூகத்தின் பிம்பத்தை நிஜமாக்கி தகிடுதத்த வேலையை கன கச்சிதமாக அவர்கள் செய்வதை இங்கே பின்பற்றுகிறார்கள் இதுதான் இன்றைய நிலை...

இங்கே சொன்னவைகள் எனது தனிப்பட்ட கருத்து...

சேக்கனா M. நிஜாம் said...

// நேற்று முன்தினம் சென்னையில் பள்ளி ஒன்றில் குரூரம், ஒரு மாணவன் ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்தி ஆசிரியர் மரணம் இத்தகைய வேதனையான செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியே...

இந்தச் சம்பவம் விமர்சிக்கக் கூடியதா ? எச்சரிக்கை விடுக்கக் கூடிய செயலா ? அல்லது விழிப்புணர்வை ஏற்பத்தக் கூடியதா ? தற்காப்புகள் செய்து கொள்ள விடுக்கப்பட்ட சவலா ?//

கண்டிப்பாக இவைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியது அல்ல மாறாக நமது சமுதாயம் சார்ந்த “தவறான கருத்துக்கள்” மாற்று சகோதரர்களிடேயே பரப்பி விடும் வாய்ப்புகள் அதிகமே !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்துவேறுபாடு உள்ள ஒருவரின் கருத்தை விமர்சிப்பதை காட்டிலும் அவரின் தனிபட்ட வாழ்கையை விமர்சிப்பதே இன்றைய நவீண யுக்தி என்பது நம் எல்லோரும் அறிந்துவரும் மிக கசப்பான உண்மை.

இதில் எந்த ஒரு இயக்கமோ, கட்சியோ தனி நபர்களோ விதிவிளக்கல்ல.

ஒரு முஸ்லீமுடைய மானம் மரியாதையை எந்த வகையில் புனிதமானது என்ற மேற்குறிட்ட இறைவசனங்கள், ஹதீஸ்களை மீண்டும் மீண்டும் ஞாபகமூட்டுவது அவசியம். காரணம் எல்லைமீறி போய்கொண்டிருக்கிறது தனிமனித விமர்சனங்கள் இணையதளங்களில் மார்க்க அறிஞர்களை பற்றி.

நல்லவகைகளுக்கு முன்மாதியாக இருக்க வேண்டிய சமுதாயம், ஊடக தாக்கத்தால் பொறுப்பின்றி தொடர்கதையாக திரிவது மிகவும் வேதனையே. குறிப்பாக தமிழகத்தில்.

Anonymous said...

சமுதாய நலனில் அக்கரைகொண்டுள்ள பலரின் எண்ணங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம்.

மார்க்கம் படித்தவர்களே புகழ் / பண போதையால் இளைஞர்களை தூண்டிவிட்டு மூளை சலவை செய்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை ஒருவருக்கொருவர் தூற்றிக்கொள்ளச் செய்வது - "மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சிலை காரித்துப்புவது போல" இருக்கிறது.

இறைவன் அனைவருக்கும் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள கருணை செய்வானாகவும்.

-இபுராகிம் அன்சாரி

KALAM SHAICK ABDUL KADER said...

Which is the main cause for having more denominations in our religion and community? After having more and more denominations within a single religion and community, the new generation is having confusion and asking to whom we shall follow as guidance.
(One sector killed another sector in the Masjid for taraweeh prayer conflict) I was shocked to hear from a student as reply to my question why he was not offering prayer," Rasulullah(sal)was ordered to offer prayer only ater the age of forty?" How the boy is confused about prayer!!!! (na udu billahi minha) He was not taught by right path or he should have read many books which are misleading our boys and girls.

EGO is the root cause which is making divisions/denominations within a single religion and community. IKHLAS is to be maintained in each and every action; then only our ambitions and advices will reach to students very well.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாம் என்னும் தெளிந்த நீரை அருந்தாமல் மாற்றமான ஒன்றை அருந்துவதால். போதை தெளியாமல் திண்டாடுகிறார்கள்.

// மார்க்கம் படித்தவர்களே புகழ் / பண போதையால் இளைஞர்களை தூண்டிவிட்டு மூளை சலவை செய்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை ஒருவருக்கொருவர் தூற்றிக்கொள்ளச் செய்வது - "மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சிலை காரித்துப்புவது போல" இருக்கிறது.//

காக்கா மூலக் காரணங்கள் சரியானதே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு