Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊடக போதை - தொடர்கிறது... 4 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 05, 2012 | , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
version 4

முந்தைய ஊடக போதை பதிவில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் கேடுகெட்ட தமிழக ஊடகங்களை விமர்சனம் செய்து நடுநிலையான தமிழ் மற்றும் கேரளத்து மக்களின் எண்ணங்களைப் பகிர்ந்துக்கொண்டோம். 

இந்தப் பதிவில் அறிவை மங்க வைக்கும் இன்றைய ஊடகங்களின் போக்கை  சிறிதேனும் அலசுவோம். இது முஸ்லீம் சமுதாயத்தை ஆழமாக பாதித்துள்ளது என்பதற்கு அன்றாட நிகழ்வுகளாக கண்முன்னால், நம் காதுகளால் உணர்த்தப்படும் சமூதாய சீர் கேடுகளே சாட்சி.

விஞ்ஞான வளர்ச்சியின் பலனாய் முத்தாய்ப்பாக கிடைத்த தொழில்நுட்பத்தைக் கொண்டு அறிவை வளர்க்கும் மற்றும் நன்மையான வழியில் செலவழிக்க எவ்வளவோ வழிகள் இருந்தும் 99% அறிவை மட்டுப்படுத்தும், மக்கிட வைக்கும் சீர்கேட்டுக்கான வழிகளையே நம்மக்கள் வேண்டி விரும்பி அதனூடே மூழ்கிக் கிடக்கிறார்கள். படைத்த இறைவனை அனேகமாக எந்நேரமும் நினைவு கூற தவறும் தருணங்களை உருவாக்குவதில் இன்றைய காலச்சூழல் நிலவுகின்றது. அதற்கு அதி முக்கிய காரணியாக ஒவ்வொரு நாளும் நாம் கண்டுகளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே காரணம் ! அல்லாஹ் காப்பாற்றுவானாக….

என்னப்பா இது இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா.. எத்தனை பதிவுகளில்தான் இதை பற்றியே எழுவார்கள்? என்றெல்லாம் அலுத்துக்கொள்ள வேண்டாம், ஏற்கனவே பல தளங்களில், அச்சுக் காகிதங்களில் படித்திருந்தும் அந்த எச்சரிக்கைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் தயை கூர்ந்து இங்கே எடுத்து வைத்திருக்கும் விடயங்களை நிதானமாக படியுங்கள். நாம் எங்கெல்லாம் தொடராக நம்மால் அறிந்தோ அறியாமலோ தவறு செய்கிறோம் என்பதை உணர இது ஒரு வாய்ப்பாக அமையலாம்.

மனித வாழ்வியலின் எதார்தத்தை மறைத்து சாமானியனின் சக்திக்கு அப்பாற்பட்டவைகளை கற்பனை கதாபாத்திரங்களாக உருவாக்கி அவைகளை காட்சிப்படுத்தி தொலைக்காட்சிகளின் வாயிலாக வீட்டு வரவேற்பறைக்கும், நிம்மதியாக உறங்க ஒதுக்கியிருக்கும் தனியறைக்கும் கொண்டுவந்து நம்மவர்களின் அறிவை மழுங்ககடிக்கும் வேலையை சிறுக சிறுக செய்து வருகிறது சினிமா மற்றும் தொடர் நாடகங்கள், மனித வாழ்வியலுக்கு ஒவ்வாதவைகளை இந்த கேடுகெட்ட ஊடகங்கள். சினிமாவை கலையாக காண்பதே தவறு அது கலையே அல்ல. பல கேடுகெட்ட ஆபாசங்களுடன்,  மனித வாழ்வுக்கு முரணான தடுக்கபட்ட இசைகளுடனும் குழப்பங்களுடனும் சேர்ந்த சில கலவை குப்பையே எந்தக் கால சினிமாவும் இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி தொடர் நாடகங்களும். 

ஒழுக்கக் கேட்டின் ஒய்யாரமாக இருக்கும் சினிமாதுறையில் ஈடுபடுபவர்களை முன்னிருத்தியே தொலைக்காட்சி நிகழ்சிகள் அனைத்தும் விழித்தது முதல் உறங்க மறுக்கும் இரவின் கடைசி நேரம் வரை பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஒளிப்பரபப்படுகிறது. எதார்த்தமான வாழ்வுக்கு பொருந்தாத கற்பனைகளுக்கு உருவம் கொடுத்தவர்களை தங்களுக்கு பிடித்தவர்களாக எண்ணி, தங்களின் அன்றாட வணக்க வழிபாடுகளுக்கு வேட்டு வைத்துக் கொண்டு நம் சமுதாய மக்களில் பெரும்பாலோர் தங்களின் அறிவை மழுங்கச் செய்யும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பொன்னான நேரத்தை வீணடித்து வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை காலங்களில் தங்களது அறிவை வளர்க்கும் தருணத்தையும், அல்லது குடும்ப உறவுகளோடு மனம் விட்டு பேசும் வாய்ப்பையெல்லாம் “தானே” புயல் வேகத்தில் தூக்கி எறிந்துவிடுவது இந்த கேடுகெட்ட சினிமாகாரர்களை முன்னிருத்தும் ஊடகங்களே அன்றி வேறில்லை.

சினிமா என்றொரு காரணியை மூலதனமாக வைத்தே ஏராளமான தொலைக்காட்சிகளும் வானொலி நிலையங்களும் இயங்கிவருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதனால் 24 மணிநேர இசை தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இளைய சமுதாயத்தின் பசுமையான அறிவு வளர்ச்சியினை பொசுக்கிவிடுகிறது என்பதை இங்கு எடுத்து வைத்தால் சிந்திப்பவர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். இசையொன்று காதுகளில் விழுந்தால் மட்டும்தான் மனத்துக்கு அமைதியும் உற்சாகமும் என்று சொல்லுபவர்களின் வாதம் போலியானது. கர்ப்பினிப் பெண்டிர் இசையை கேட்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது என்று சிசுவை வைத்து வியாபார விளம்பரம் செய்வது. இசைதான் புத்துணர்வு கொடுக்கிறது மனிதனின் அறிவை வளர்க்கிறது என்று எந்த ஆதாரங்களை முன்னிருத்தி இவர்கள் சொல்கிறார்கள் என்று நமக்கு புலப்படவில்லை.அதனை நிருபிக்கத்தான் முடியுமா இவர்களால்.

“அறிவை மழுங்கடிக்கச் செய்யும் இசைக்கருவிகளை உடைத்தெரியவே நான் வந்துள்ளேன்” என்று சொன்ன நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோமா இல்லையா என்பதை இசைக்கு கொஞ்சமாகவோ கூடுதலாகவோ அடிமையாகியுள்ள மனசாட்சியுள்ள நற்சிந்தனைகளுக்கு காது கொடுக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய காலச்சூழ்நிலையில் சினிமா அடிவருடிகளாகவும் இசையின் இச்சைக்கு அடிமையாகியுள்ள நாம், மனித சமுதாயத்திற்கே அருட்கொடையாக வந்த நபிகளின் சொல்லை மதிக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்.

இஸ்லாத்தில் இசை கேட்பது தடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்குரிய ஆதாரத்தை பின் வரும் இறைவசனமும் அதற்கான விளக்கமும், மற்றும் தொடர்ந்து வரும் நபிமொழியை நிதானமாக வாசித்து பருங்கள்..

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31:6

இந்த திருவசனத்தில் வந்திருக்கும், வீணான பேச்சுக்கள் என்பதற்கு, அது இசைக்கருவிகள்தான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.

என்னுடைய உம்மத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள், அவர்கள் விபச்சாரத்தையும், பாட்டையும், மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் (ஆகுமானதாக) ஆக்குவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

மேல் கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. 

நம் உயிரினும் மேலான நபிகளார் தடுத்த ஒருவகை போலிகளின் கலவையை முன்னிருத்திய சினிமாவையும் அதன் பாடல்களையும் ஊக்குவிக்கும் ஊடகங்களை ஒவ்வொரு கலிமா சொன்ன முஸ்லீம்களும் வெறுக்க வேண்டும். ஊடகங்களின் வாயிலாக அறிவை வளர்க்கும் நல்லவைகள் எவ்வளவோ நிறைந்து கிடக்கிறது அவைகளை தேடி பிடித்து குர்ஆன் நபிவழியுடன் ஒப்பிட்டு நம் இவ்வுலக அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இந்தப் பதிவின் கருப்பொருளை பின் வரும் ஹதீஸ்களை முன்னிருத்தி நிறைவு செய்தால் பொருத்தமாக இருக்கும். 

புகாரி: (இலக்கம் 100.) 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி: (இலக்கம் 80.) 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

மார்க்க கல்வி அறிஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே செல்கிறது. மேல் சொன்ன நபிமொழிகளின் முன்னறிவுப்புகள் அன்றாட நிகழ்வுகளாக நடைபெறுவதை காண முடிகிறது.

அறிவின் தேடலே கல்வி, தமிழகத்தில் மார்க்க பிரச்சாரங்கள் செய்யும் பிரச்சாரகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றைய காலச்சூழலில் மார்க்க கல்வியை தேடும் ஆர்வம் நம் சமுதாயத்தவர்களிடம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பொதுவான காரணம் இன்றைய கேடுகெட்ட சினிமாவின் ஆதிக்கத்தால் ஆளப்படும் தொலைகாட்சிகளும், இணையதளங்கள் போன்ற ஊடங்களின் தாக்கம், போதை. அறிவுக்கு புலப்படாத கற்பனைகளை சித்தரிக்கும் காட்சியமைப்புகளை முன்னிருத்தி ஒளிபரப்படும் நிகழ்ச்சிகளால் கேடுகள்தான் நிலைத்திருக்கிறதே தவிர அறிவு வளர்ச்சி என்பது 100% கேள்வி குறியே !

தினமும் தூக்கம், வீட்டு வேலை, அலுவலக வேலை, குறைந்தபட்சம் ஐந்து நேர தொழுகைகள் தவிர்த்து மற்ற நேரங்களை அறிவை பாழாக்கும் இஸ்லாம் தடுத்த இசை இச்சையின் விபச்சார காட்சிப்படுத்தல்களாலும் சினிமாவினாலும், அதன் தாக்கம் ஏற்படுத்தும் விளைவுகளால் உருவான கேடுகெட்ட மெகா (மட்டமான) தொடர்களின் குடும்பங்களால் எத்திவைக்கப்படும் குடும்பத்தில் குழப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொலைகாட்சி சேனல்கள் போன்ற ஊடகங்களின் போதையிலிருந்து விடுபட்டு. மார்க்க அறிவையும் நன்மை பயக்கும் உலக அறிவையும் வளர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற்ற சாலிஹான கூட்டத்தில் அல்லாஹ் நம் எல்லோரையும் சேர்த்தருள எல்லோரும் துஆ செய்வோமாக.

சிந்திக்க(வும்) : ஒரு நாள் “தென்றல்” என்ற தொடரை பார்க்காதவர்களுக்கு, நடந்த 20 நிமிட காட்சிகளை அப்படியே ஒரு காட்சி தவறாமல் சொல்லிக்காட்டி மகிழ்கிறோம் நாம், ஏன் நம் பிள்ளைகளிடம் “தென்றல்” காட்சிகளை பற்றி தாராளமாக உரையாடுகிறோம் நாம். 

ஒரு நாளைக்கு ஒரு குர்ஆன் வசனம் பொருள் உணர்ந்து மனனம் செய்ய ஏன் முயற்சி செய்யக்கூடாது? நம் பிள்ளைகளையும் ஊக்கப்படுத்தக்கூடாது? கவலை தரும் விடையமில்லையா?

இந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில் எல்லா சமுதாயத்திற்கும் எத்திவைத்து பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் உண்டு.

ஊடக போதைக்கு(ம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் மருத்துவம் தொடரும்…  

இன்ஷா அல்லாஹ் !

- அதிரைநிருபர் குழு

10 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காலத்திற்கேற்ற விழிப்புணர்வாக்கம்.

ஊடக போதைக்கு(ம்)அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் மருத்துவம் தொடரட்டும் அதிரடியாய்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கட்டிட கட்டுமானப்பொருட்களுக்கு அதன் பலத்தையும், உறுதியையும் மக்களுக்கு எடுத்துரைக்க விளம்பரப்படத்தில் பாம்பன் பாலத்தை காட்டி, யானையை சுவற்றில் வேகமாக மோத விட்டு அதன் பலத்தை நிரூபிப்பது போல் காட்டி மக்களை அந்த பொருட்களின் பக்கம் திசை திருப்பி வியாபாரம் செய்தது அந்த காலம்.

மக்களிடம் உள்ள தீராத சினிமா மோகத்தை/பித்தை வியாபார நிறுவனங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன பாருங்கள். கட்டுமான முறுக்கு கம்பிகளுக்கும், காத்தடித்த பலூன் போல் இருக்கும் நமீதாவுக்கும் என்ன சம்மந்தம்? உடல் குலுங்க ஒரு ஆட்டத்தை போட்டு "மச்சான் மறந்துடாதீங்க கிஸ்க்கால் கம்பிகள்" என்று சொல்லும் அந்த விளம்பரத்தை வாய்ப்பிளந்து பார்க்கும் பல்லில்லா கிழவன்மார் பல்லாயிரம் என்றால் ஊடகத்தின் தாக்கம் எந்தளவுக்கு அணுக்கதிர்களை தாண்டி மக்களை தாக்கியுள்ளது என்ப‌து ந‌ன்கு விள‌ங்கும்.

ஏற்க‌ன‌வே த‌ரிகெட்டு தான்தோன்றித்த‌ன‌மாக‌ ஓடிக்கொண்டிருக்கும் இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு ந‌ம‌து பிர‌த‌ம‌ர் அண்மையில் டெல்லியில் ந‌ட‌ந்த‌ ஒரு விழாவில் வ‌க்கால‌த்து வாங்கி இருக்கிறார் இப்ப‌டி "ஊட‌க‌ங்க‌ளை யாரும் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாது; அதன் சேவை நாட்டுக்கு அவ‌சிய‌ம் தேவை என்று"

நாடு ரொம்ப‌ வெள‌ங்குன‌ மாதிரி தான் போங்க‌........

கால‌ம் அறிந்து வெளியிட‌ப்ப‌ட்ட‌ ந‌ல்ல‌ தோர் சிந்த‌னையைத்தூண்டி வாழ்வை சீர்தூக்கி பார்க்க‌ வைக்கும் ஆக்க‌ம். ச‌கோ. அபுஇபுறாஹீமின் ப‌ணி தொட‌ர‌ட்டுமாக‌..

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"தானே" புயல் கோரத்தாண்டவம் ஆடிய பாண்டிச்சேரி, கடலூர் மாவட்டங்களில் முந்திரி தோட்டங்களால் கோடீஸ்வரர்களாக வாழ்ந்து வந்த மக்களை தெருக்கோடியில் கொண்டு வந்து நிறுத்தியது. அவர்களுக்கு ஒரு வாரம் ஆகியும் சரிவர உணவு, பால், மின்சாரம், சாலைப்போக்குவரத்து இதுவரை சரிவர கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசின் இயந்திரங்களும் ஆமை வேகத்தில் அங்கு நிவாரணப்பணிகள் செய்து வருவதாக பரவலாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கும் இவ்வேளையில்

சமீபத்தில் இந்தியா வந்த ஜப்பான் பிரதமருக்கு, நமது பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வரவேற்று அவருக்கு ராஜ விருந்து உபசரிப்பு நடக்கும் வைபவத்தில் "Why this கொலெவெறி" பாடிய நடிகர் தனுஷை சிறப்பு விருந்தினராக வரவழைத்து விருந்து கொடுத்து "Nice to meet you" என்று சொல்லி வாழ்த்தி இருக்கிறார் என்றால் ஊடகத்தின் தாக்கத்தை பாருங்கள்......

சமூக வலைதளங்களான ஃபேஸ் புக், கூகுள், டிவிட்டர், யாகு மூலம் பெரும் அரசியல், விளையாட்டு, சினிமாத்துறையின் முக்கியஸ்தர்களுக்கு அவமானம், அசிங்கம், அவதூறு, மனதை வேதனை செய்யும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியிடுவதை தடுப்பதில் மட்டும் மத்திய அரசு கவனம் செலுத்துவது போல் மத்திய அமைச்சர் கபில் சிபலின் பேச்சு இருந்தது.

வருங்காலங்களில் நம் ராஷ்ட்ரிய பவனையும், பாராளுமன்றத்தையும் ஆளப்போவது ஊடகமா? மனிதர்களா? என்பதை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கால‌ம் அறிந்து வெளியிட‌ப்ப‌ட்ட‌ ந‌ல்ல‌ தோர் சிந்த‌னையைத்தூண்டி வாழ்வை சீர்தூக்கி பார்க்க‌ வைக்கும் ஆக்க‌ம். //

MSM(n): இந்த கருவுக்கு சுழியிட்டது அ.நி.அமீர் அதன் பின்னர் குழுவின் கலந்துரையஞ்சல் (கலந்துரையாடல்ன்னு எத்தனை நாட்களுக்கு சொல்வது) இப்படியாக அதற்கு முத்தாய்ப்பாக தனி மின்னாடல் வழியாக அழி-ரப்பர் கையில் இருக்கா பேனா கையில் இருக்கா கேள்விகள் கேட்காமல் இப்படிச் செய்திடுவீங்களாம் சரியான்னு சுருக்கமாக யோசனைகளும் உள்ளடக்கம் ஆக அ.நி.குழு என்று நிறைவில் இடும் பட்சத்தில் அது குழுவின் கருத்துக் குவியலே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அ.நி. அமீர் எதோ மேலே சொல்றாஹெ "ஆனா நமக்கு என்னம்மோ ஒரு நல்ல பாடத்தை அழகுற நடத்தும் ஒரு ஆசிரியரின் (ஹாஜி முஹம்மது சாருண்டே வச்சிக்கிடுவோமே..) வகுப்பில் கவனச்சிதைவுடன் பராக்கு பார்த்துக்கொண்டு கவனிக்காமல் இருந்தது போல் ஓர் உணர்வு" மன்னிக்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மன்னிக்கவும்.//

இது எதுக்கு MSM(n) ? ஹாஜி சார்தானே அடிக்கடி ஸாரி சொல்வார் ! "ஸாரி ஸாரி ப்பா அட ! நீ... " இப்படியாக ! எனக்கும் கொஞ்சம் ஞாபகம் இருக்குதே :)

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் நண்பர்களே!

நல்ல தலைப்பு கொடுத்து இருக்கிறீர்கள். அத்துடன் தொடர்ந்து நல்ல கருத்துக்களை படைத்து புகட்டி வருகிறீர்கள்.

இந்த போதை சமுதாயத்தின் அழிவுக்கான ஆபத்தின் அரிச்சுவடி.

இன்றைக்கு ஒரு வீட்டில் உள்ளோர் அவரவர் முகம் பார்த்து பேசிக்கொள்வதில்லை.

தொலைக்காட்சிப்பெட்டியை பார்த்துக்கொண்டேதான் பேசிக்கொள்கிறார்கள்.

அதுதான் போகட்டும் என்றால் உணவு உண்ணும்போது கூட தட்டைப்பார்த்து அள்ளி உண்பதில்லை.

தொலைக்காட்சி பெட்டியை பார்த்துக்கொண்டே உண்டு ஒருவருக்கு வாழை மீன் முள் மாட்டிக்கொண்டதாக கேள்வி.

பலர் வீடுகளில் தொடர்களில் வரும் பாத்திரங்களுடைய பிறப்பு, இறப்பு, திருமணம், விபத்து ஆகியவற்றிற்காக மகிழ்ந்தும், துக்கப்பட்டும் பேசிக் கொள்வதைப் பார்த்தால் சொந்தக்காரர்களுடைய வாழ்வின் நிகழ்வுகளில் கூட இவ்வளவு அக்கறை எடுப்பார்களா? என்பது சந்தேகமே.

இன்று எங்கள் அலுவலகத்தில் இருந்து ஒருவர் (MBA EDUCATED) மற்றவருக்கு போன் செய்து சொன்ன செய்தி “ நேற்று பாண்டி தூக்கு மாட்டி செத்துவிட்டான்’ என்பதே..

துக்கம் விசாரிக்கும் தொனியில் நாம் விவரம் கேட்டபோதுதான் தெரிகிறது அது ஒரு தொலைக்காட்சி தொடரின் சம்பவம் என்று.

தலையில் அடித்துக்கொள்வதை தவிர என்ன செய்ய?

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

Yasir said...

ஊடகபோதை ஒரு லெவலாதான் நம் மக்களை கட்டுப்படுத்தி மயக்கத்திலயே வைத்து இருக்கின்றது..இதை மாதிரி கட்டுரைகள் மூலம்தான் கொஞ்சமாவது தெளிவுபடுத்த முடியும்...வாழ்த்துக்கள் அபு இபுராஹிம் காக்கா

ZAKIR HUSSAIN said...

//ஊடக போதைக்கு(ம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் மருத்துவம் தொடரும்//

நிறைய இதுபோல் நல்ல விசயங்களை எழுதுங்கள். ஊடகங்களின் ஒப்பற்ற சாதனை என்னவாக இருகும் தெரியுமா?....

I am reminding about the CURRENT TREND of media..

1. சோரம்போதல் அதிகமாகும்.
2. துரோகங்கள் அதிகமாகும்
3. உறவுகளுக்கு முக்கியத்துவம் இருக்காது.
4. கொலைக்குற்றங்கள் அதிகரிக்கும்.

sabeer.abushahruk said...

இதுபோன்ற ஊடக போதை, வீடு வீடாக பேதைகளையே உருவாக்கிச் செல்லும்.
நாடாக இருக்கும் நானிலமும் ஊடக போதியில் பாதை பிறழ்ந்து காடாக மாறிப்போகும்.

விழித்தெழுவோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு