Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மிகைப்படுத்தும் செய்திச் சேனல்கள் - விவாதக் களம் 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2011 | , , , , , ,


நேற்று காலை சன்-செய்திச் சேனலில் தொடர்ந்து ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் "அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது" செய்தி அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே அதன் செய்தியாளர் ஒருவரின் வக்கிரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு மக்களுக்கு பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

அவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.

சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் புகைப்படத்தினை 15 வினாடிகள் தவறாக காட்டிவிட்டதாக மன்னிப்பும் கேட்டது ஒரு ஆங்கில செய்திச் சேனல், அதற்கு நீதிமன்றமும் அபராதம் நூறு கோடி விதித்தது...

விந்தை என்னவென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்றும் சாமானியன் ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி ஊடக தர்மத்தினை நிலைத்திடச் செய்வோம். மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம், வாருங்கள் விவாதிக்கலாம்.

தனிமனித சாடல் இன்றி நேர்மையாகவும் நிதானத்துடனும் விவாதிப்போம், நமது கண்டனத்தை இங்கே பதிந்திடுவோம்.

- அதிரைநிருபர் குழு

22 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நம்பிக்கையை உருவாக்கி அதனைத் தொடர்ந்து தூரோகம் இழைப்பது ஒன்றும் புதிததல்ல இந்த வேடதாரி செய்திச் சேனல்களுக்கு...

இவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் மேலும் தொடர்ந்தால் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

சட்டம் பாயும் என்றதும் ஓடி ஒழிந்ததும் இந்த சேனலின் நிறுவனர் மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த போது வரிந்து கட்டிக் கொண்டு சாலையோரம் செல்லும் பாதசாரிகளிடமெல்லாம் பேட்டி கண்டு கதறியவர்கள்தானே இவர்கள், காசுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள்.

ZAKIR HUSSAIN said...

until we interrupt their broadcasting technically , we can't do anything.

அதிரை முஜீப் said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
மீடியாக்கள் முஸ்லிம்கள் என்றாலே அளவுக்கு அதிகமாகவே அந்த சமூகத்தின் மீதே கற்பழிகின்றார்கள்...! வன்புணர்ச்சி செய்கின்றார்கள்..!!. இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல.

அமெரிக்க தாக்குதலுக்கு பின் உலக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிதார்கள். அதற்கு இந்த சமூகம் பல தியாகங்களை செய்து, பல கோடிகணக்கில் செலவு செய்து தங்கள் தரப்பு நியாங்களை கூறி வருகின்றார்கள்.

முன்பு ஆஸ்திரேலியாவில் ஹனீப் என்ற மருத்துவரையும் இதேபோல தீவிரவாதியாக சித்தரித்து பின் நிருபிக்கமுடியாமல் திணறி மன்னிப்பு கோரினர். கோவை கலவரத்திற்கு பின் ஆயிஷா என்ற கற்பனை பாத்திரத்தை புனைந்து இவர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல. இதை காரணமாக வைத்தே பல பெண்கள் மதரசாக்களில் அத்துமீறி நடந்தனர்.

தவ்பீக் தொடர்பாக நக்கீரனில் வெளிவந்த செய்தியில், தமிழகம் முழுக்க குண்டுவைக்க திட்டம் தீட்டிய தீவிரவாதி கைதாம்..!. என்ன ஒரு காழ்புணர்ச்சி..!. ஏண்டா அயோக்கியனே..! ஒரே ஒருவனால், தமிழகம் முழுக்க குண்டு வைக்க முடியும் என்றால், காவல் துறை என்னடா செய்துகொண்டு இருக்கின்றது.

ராஜ்நியூஸில், தவ்பீக்மீது குண்டுவைப்பு, ஹவாலா மோசடி, ஆள் கடத்தல், லக்ஷர் ஈ தொஈபா..... என்று ஏதோ மளிகை சாமான் பட்டியல் போல வரிசையாக வாந்தி எடுத்து கொண்டிருந்தான்.

சன்நியூஸை பற்றி தாங்களே கூறிவிட்டீர்கள். இனிவரும் வார ஏட்டில் இதுதான் பிரதான வாந்தியாக இருக்கும்...!

சரி இதுவெல்லாம் உண்மை என்றால் இந்த சகோதரரை தூக்கில் இடுங்கள். சிறை சாலையில் வைத்து அல்ல, மாறாக அதிரையின் நடு ரோட்டில். அதுவும் பல மக்கள் முன்னிலையில்..!. இந்த குற்றச்சாட்டு அனைத்தும் பொய் ஜோடிக்கப்பட்டது என்றால் இந்த மீடியாவையும், காவல்துறையையும் என்ன செய்வது?.

ஏற்கனவே குஜராத் என்கவுன்டர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போலி என செய்திகள் வருகின்றன. ஆந்திராவில், மாலேகான் வழக்கில், இதே போல ஜோடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சகோதரர்கள் அனைவரும் அஜிமானந்தாவின் வாக்குமூலத்தின் மூலம், போலி குற்றச்சாட்டில் இருந்து வெளியில் வந்தனர்.

இத்தனை குற்றத்தை செய்ததாக கூறி தவ்பீக்கை வேறு மாநிலம் வரை சென்று டிரேஸ் செய்து கைது செய்யும் காவல்துறையும், அரசாங்கமும் இதே வேகத்தை இதைவிட பல மடங்கு குற்றம் செய்ததாக கூறப்படும்(?) தாவூத் இபுராஹிமிடம் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பலகோடி இந்திய அரசாங்கத்தின் பணம் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தியாவின் மானம் காப்பாற்றப் பட்டிருக்கும்.

Yasir said...

சிறுபான்மையரின் இரத்தத்தை குடிக்கும் “தீவிரவாதி” ”பிணந்தின்னி” போலி என்கவுண்டர் மூலம் அப்பாவிகளை கொன்ற் நரேந்திரமோடியையும் கைது செய்தால் நலமாக இருக்கும்....தீவிரவாதிகள் எப்படி உருவாக்கபடுகிறார்கள் அதற்க்கு காரணங்கள் யார் என்று அறிந்து தண்டனை கொடுக்க வேண்டும் இந்திய அரசு

Yasir said...

முஸ்லிம்கள் என்றாலே மிகைப்படுத்தி கை,கால் வைத்து பேசும் மீடியாக்களே...பத்திரிக்கை தர்மத்தை பேணுங்கள் அல்லது வேறு தொழிலுக்கு மாறிவிடுங்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தவறு யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.

பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்குகள் பொய் வழக்குகள் என்று தீர்ப்புக்கு பின்னர் அதே வழக்குகளையும் மீண்டும் இணைத்து அச்சகோதரனையும், அதிரையையும் அவமானப்படுத்தும் விதமாக செய்தி என்ற பெயரில் வாந்தி எடுத்து வெளியிட்டு திரியும் இந்த கேடுகெட்ட ஊடகங்களை ஒவ்வொரு முஸ்லீம்களும் கண்டிக்க வேண்டும். அதிரை சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை நமக்கும் ஏற்படும்.

பொய் வழக்குகள் போடுபவர்களும் அதற்கு ஜால்தட்டும் ஊடங்களும் அவமானப்படப்போகும் காலம் வெகுதூரத்திலில்லை என்பது மட்டும் உண்மை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பரபரப்பு எற்படுத்த வேண்டும் 99% செய்திகள் மனிதர்களை வழிகெடுக்கும் வேலையை செய்துவரும் வருமானத்தை மட்டுமே எதிர்ப்பார்த்து வக்கிரபுத்தி கொண்ட ஊடகங்களில், எப்படி உண்மையை எதிர்ப்பார்க்க முடியும்?

இரட்டை வேடம் போடாத பதிலடி கொடுக்கும் சக்திவாய்ந்த நம் ஊடகம் அவசியம் தேவை.

Unknown said...

சாதாரணமாகவே இந்த மீடியாக்களுக்கு முஸ்லிம்கள் என்றாலே கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள். பாப்பன புத்தி இன்னும் இவர்களை விட்டு போகலில்லை என்பதற்ற்கு இவையெல்லாம் ஒரு சாட்சி. பெருநாள் என்றால் நுற்றுக்கனக்கனவர்கள் தொழுதார்கள் என்றும்..முஸ்லிம்கள் ஒன்று கூடினால் ஆயிரக்கணக்கானவர்கள் என்றும் சொல்வது வழக்கமாகி விட்டது. தப்பு எப்போதும் நம் பக்கம்தான். இவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று ஆயிரம் தடவை சொன்னாலும் யார் கேட்கிறார்கள்....முதலில் அஸ்திவாரம் சரியில்லாததால்தான் இவர்கள் இப்படி சொல்கிறார்கள். இதற்கு ஒரு சின்ன உதாரணம். நம் பெண்கள் எப்படி புர்க்காவை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான விபச்சாரிகள் கோர்டுக்கு வரும்போது இதைதான் பயன்படுத்துகிறார்கள். நம் எல்லோரும் ஒன்றாக எதிர்த்து குரல் கொடுக்கலாம். ஆனால் யார் குரல் கொடுக்க... ஒவ்வொரு இயக்கத்திற்கும் இவன் அவனை குறை சொல்லவும் அவன் இவனை குறை சொல்லவுமே நேரம் சரியில்லை. எப்படி சமூகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றது. இவற்றையெல்லாம் சரி செய்யாமல் இவன் தீவிரவாதி அவன் தீவிரவாதி என்று சொன்னாம் எப்படி எதிர்கொள்வது.....முதலில் நம்சமுகத்தில் விழிப்புணர்வு வரவேண்டும். ஒருகை ஓசை ஜெயிதடாக சரித்திரம் இல்லை. இரண்டு கைகள் வேண்டும். நம் இயக்கங்கள் ஒன்றாக இருந்து குரல் கொடுத்தால் எதிர்காலம். இல்லையென்றால்......!

வெள்ளை ரோஜா said...

அதிரை சகோதரன் கைது என்றவுடன்.கவட்டில் அரிப்பு எடுத்துள்ளது அறிவில்லாத ஊடகத்துறைனருக்கு
சகோதரர் யாசிர் சொல்வது போல் .// முஸ்லிம்கள் என்றாலே மிகைப்படுத்தி கை,கால் வைத்து பேசும் மீடியாக்களே...பத்திரிக்கை தர்மத்தை பேணுங்கள் அல்லது வேறு தொழிலுக்கு மாறிவிடுங்கள் // உண்மையில் பணங்கள் கொட்டோ கொட்டும் தொழில்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனஅதை தேர்ந்து எடுத்து பணத்தை கட்டு கட்டாக பாருங்கள்
அதை விட்டு விட்டு முஸ்லிம்களை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைப்பீர்களானால்.ஊடகத்துறையின் மூக்கு அறுபட்டுவிடும் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

mohamed said...

//இத்தனை குற்றத்தை செய்ததாக கூறி தவ்பீக்கை வேறு மாநிலம் வரை சென்று டிரேஸ் செய்து கைது செய்யும் காவல்துறையும், அரசாங்கமும் இதே வேகத்தை இதைவிட பல மடங்கு குற்றம் செய்ததாக கூறப்படும்(?) தாவூத் இபுராஹிமிடம் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பலகோடி இந்திய அரசாங்கத்தின் பணம் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தியாவின் மானம் காப்பாற்றப் பட்டிருக்கும்.//

சகோ, அதிரை முஜீப் தாவூத் இப்ராஹிம் முஸ்லிம் என்பதாலே மீடியாக்களில் அடிக்கடி அவ்ரின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் படி சம்ஜெளதா ரயிலில் குண்டு வைக்க ரூ 50,000 பணம் கொடுத்த ஆர் எஸ் எஸ் தேசிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமாரை கைது செய்யட்டும். இந்திரேஷ் குமாரின் நிழலை கூட நெருங்க மறுக்கிறார்கள். இந்திரேஷ் குமார் கைது செய்யப்பட்டால் ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டிருக்கும், இனி இந்தியாவில் எங்குமே குண்டுகள் வெடிக்காமல் இருக்கும்.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
முஸ்லிம்கள் என்றாலே மிகைப்படுத்தி செய்தி வெளியிடும் ஊடகங்களின் செயல் கடும் கண்டனத்திற் குரியது. என்றோ சகோ.தௌஃபீக் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அநேகமும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட பின்னும் இப்படி மிகைப்படுத்தி வெளியிட்டிருப்பது மிகவும் வேதனை யளிக்கிறது.
நான் அறிந்த வரை சகோ.தௌஃபீக் கழிவறையில் எறும்புகள் ஊர்ந்தால் கூட தண்ணீர் ஊற்றினால் எறும்புகள் இறந்து விடும் என்று வேறு கழிவறைக்கு சென்றுவிடுவான். அந்த அளவிற்கு இரக்க குணமுடையவன். யாரேனும் பசி என்றோ கஷ்டமென்றோ அவனிடம் கேட்டால் தன்னிடம் பணம் இல்லாவிடினும் தன் நண்பர்களிடமாவது வாங்கி அவர்களுக்குக் கொடுப்பான். அப்படிப்பட்டவன் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு கூலி கொடுக்க அல்லாஹ்வே போதுமானவன்.

மஅஸ்ஸலாம்

sabeer.abushahruk said...

பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் ஊடகங்களிடம் நியாய் தர்மம் எதிர்பார்ப்பது கதைக்காகாது.

மாற்றுத்திட்டங்களும் அவற்றின் செயல்பாடுகளுமே தீர்வாகும்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பான சகோதரர்களுக்கு,

அநீதி எங்கிருந்து புறப்பட்டு வந்தாலும் அதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தவ்ஃபீக்குக்கு எதிராக ஊடகங்கள் வாந்தி எடுப்பது இது முதல் முறையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர் - நக்கீரனிலா ஜூவியிலா என நினைவில்லை - அட்டைப்படத்தில் தவ்ஃபீக்கின் படத்தைப் போட்டு, 'பின் லாடனோடு தொடர்புடைய தீவிரவாதி' எனபதுபோல் சிறப்புப் புலனாய்வு(?)க் கட்டுரையெல்லாம் வந்தது. அந்த வழக்குகள் எல்லாம் பொய்யாகி நீர்த்துப் போயின.

முஸ்லிம்கள் என்றாலே ஒரு மொடக்குக் கூடுதலாகக் குடித்துவிட்டுத்தான் ஊடகக்காரர்கள் எழுத உட்காருவார்கள். அலைச்சல்களையும் மன உளைச்சல்களையும் ஆண்டுக் கணக்கில் எதிர்கொண்டு, இறுதியில் நீதிமன்றம் 'இவர்கள் அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்த முஸ்லிம்களின் பட்டியல் வெகு நீளம்.

விசாரணை முறையாக நடைபெற்றால், இன்ஷா அல்லாஹ் தவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தவிடுபொடியாகிவிடும்.

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், விசாரணை முறையாக-விரைவாக நடப்பதற்குண்டான வழிவகைக் கண்டறிந்து, நீதிக்காகப் போராடும் குணமுள்ள சிறந்த வழக்கறிஞரை நியமித்து வழக்கை எதிர்கொள்வதற்கு நம்மாலான ஆலோசனைகளை/உதவிகளைச் செய்ய வேண்டும்.

தம் அப்பாவி மகனைப் பற்றி ஊடகங்கள் ஊதிப் பெருக்கியதைப் படித்துப் படித்தே தவ்ஃபீக்கின் தந்தை மனநிலை பாதிக்கப்பட்டார் என்பது, காசுக்கு வேசித்தனம் செய்யும் சில ஊடகங்களுக்குத் தெரியப்போவதில்லை.

இஸ்லாத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதற்காகக் காவல்துறையினரால் 'லஷ்கரே தொய்பா தீவிரவாதி' எனப் பொய்ப்பட்டம் சூட்டப்பட்டு, தன் நண்பர்கள் மூவரோடு சுட்டுக் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் உட்பட நால்வரும் "குற்றமற்ற அப்பாவிகள்" எனக் கடந்த 19.11.2011இல் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

"தீவிரவாதியின் தந்தை என என்னை இனிமேல் எவனும் குறிப்பிட முடியாது" என்று ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை கூறியிருக்கிறார். தவ்ஃபீக் வெளிவரும் நாளில் இவ்வாறு கூறுவதற்குத் தவ்ஃபீக்கின் தந்தைக்கு வாய்க்காமல் போனது.

தன்னைப் படைத்தவனின் அருளில், நாட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் தவ்ஃபீக்.

தன்னை உறுதியாக நம்புபவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட்டதில்லை.

"தவ்ஃபீக் குற்றமற்றவன்" என்ற முத்திரையோடு வெளிவர முதல் வேலையாக நாம் அனைவரும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். அடுத்தடுத்து ஆகவேண்டியவற்றைப் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தன்னை உறுதியாக நம்புபவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட்டதில்லை.

"தவ்ஃபீக் குற்றமற்றவன்" என்ற முத்திரையோடு வெளிவர முதல் வேலையாக நாம் அனைவரும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். அடுத்தடுத்து ஆகவேண்டியவற்றைப் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ். ///

அப்படியே ஆகட்டும் இன்ஷா அல்லாஹ்....

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனித நேயம் ஒன்றை மட்டுமே கருதி விசாரணை முறையாக நடைபெற்று குற்றமற்றவன் என்ற நிலையில் விடுதலையாகிட துஆ செய்வோம்.
அந்நிலையில் இட்டுக்கட்டிய ஊடகங்கள் அனைத்தும் தற்கொலை செய்து கொள்ளட்டும்.

அபூ சுஹைமா said...

முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சி வலைகளிலிருந்து அல்லாஹ் நம்மை விடுவிப்பானாக என்று பிரார்த்தனை செய்வதுடன் ஊடகங்களில் நாமும் காலூன்ற முயன்று வருவோம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//தன்னைப் படைத்தவனின் அருளில், நாட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் தவ்ஃபீக்.//

உண்மையான செய்தி.

இன்ஷா அல்லாஹ்,எல்லாமும் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் தான் என்று நீதிமன்றத்தால் காவல்துறை குட்டுபட போகிறது.நிரபராதியாக சகோதரன் வெளியே வருவான்.அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

Anonymous said...

மனித நேயம் ஒன்றை மட்டுமே கருதி விசாரணை முறையாக நடைபெற்று குற்றமற்றவன் என்ற நிலையில் விடுதலையாகிட துஆ செய்வோம்.
இன்ஷா அல்லாஹ்....

அப்துல்மாலிக் said...

குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வர வெகுநாளில்லை, இன்ஷா அல்லாஹ்

மீடியா என்ற பவர் தன் கையில் இருக்கு என்பதற்காக எப்படி வேணும்னாலும் எழுதலாம் என்று திரியும் பிணந்திண்ணிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

அபூ சுஹைமா said...

எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்.... http://adiraixpress.blogspot.com/2011/11/blog-post_5168.html

Adirai Iqbal said...

இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் வரும் . இதற்க்கெல்லாம் கட்டாயம் இந்த அரசும் பத்திரிகை துறையினரும் பதில் சொல்லியாக வேண்டிய காலம் கண்டிப்பாக வரும் . முதலில் நாம் நல்ல வலிமையான ஊடகத்தை அமைக்கவேண்டும் .அது கண்டிப்பாக வெகுஜன ஊடகமாக இருக்கவேண்டும் . இல்லையேல் பல உண்மைகள் மக்கள் மன்றத்தில் மறைக்கப்பட்டுவிடும் .

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//ஒவ்வொரு இயக்கத்திற்கும் இவன் அவனை குறை சொல்லவும் அவன் இவனை குறை சொல்லவுமே நேரம் சரியில்லை. எப்படி சமூகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றது. இவற்றையெல்லாம் சரி செய்யாமல் இவன் தீவிரவாதி அவன் தீவிரவாதி என்று சொன்னாம் எப்படி எதிர்கொள்வது.....முதலில் நம்சமுகத்தில் விழிப்புணர்வு வரவேண்டும். ஒருகை ஓசை ஜெயிதடாக சரித்திரம் இல்லை. இரண்டு கைகள் வேண்டும். நம் இயக்கங்கள் ஒன்றாக இருந்து குரல் கொடுத்தால் எதிர்காலம். இல்லையென்றால்......!//

உலக மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய சமுதாயம் தடம் மாறி சென்று கொண்டிருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகளை உலகில் பல பாகத்திலும் அதன் விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் தன் திருமறையில் மனித ஜின் இனத்தை தன்னை வணங்குவதற்காகவே படைத்ததாக கூறுகின்றான். அதற்காக அவனது தூதரையும் நமக்கு வழிகாட்டியகவும் அனுப்பியுள்ளான். நாம் அதனை உணர்ந்து நம்மை சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.

சமுதாய நலன் என்று கூறிக்கொண்டு தினமும் எத்தனை இயக்கங்கள் அமைப்புக்கள் தோன்றிகொண்டு இருக்கின்ற்ன- சமுதாய ஒற்றுமை என்று பேசும் இவர்கள் மட்டும் ஏன் பிரிந்து கிடக்கிறார்கள் ?

நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். முதலில் நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபடவேண்டும். முன்னுதாரணமாக நமதூரில் உள்ள அனைத்து அமைப்புக்களும் பிரிந்து கிடக்காமல் ஈகோ பார்க்காமல் அனைவரும் முஸ்லிம்களென்ற அடிபடையில் ஒன்று சேரட்டும். இது பிற ஊர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கட்டும்.

இன்ஷா அல்லாஹ் இவ்வாறு நாம் ஒன்றினைந்து இருந்தால் அல்லாஹ்வைதவிர நம்மை வேறு யாரும் ஒன்றும் செய்யமுடியாது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு