Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூளை - இருக்கிறதே ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2013 | , ,


அதிரைக்கும் ஆட்டு மூளைக்கும் ஆதிகாலத்து உறவுன்னு நான் சொல்லவில்லை என்றால், சும்மாவா இருந்துடுவீங்க ? ஆட்டு மூளை வறுவல், பொரியல், பெரட்டல், ஆட்டு மூளை ஆம்புலேட், மூளை  சூப் கடைகளை நமது ஊரில் மூலைக்கு மூலை  பார்த்த நாம் இப்போ சற்று வித்தியாசமாக!!! மனித மூளையை பற்றி பார்ப்போம்.

கழுவிப் போடும் ஒரு சட்டை உலர்வதற்கு பத்து நிமிஷம், ஆனால் பத்துப் சட்டை உலர்த்த எத்தனை நிமிஷம் ஆகும் என்பது போன்ற கணக்குகள் போடுவதும். தாளிப்பு வாசத்தை வைத்து அது இறைச்சி ஆணம், கோழி ஆணம்  என்று சொல்வது,  இவை அனைத்துக்கும் மூலக் காரணம்   அந்த  இரண்டு எழுத்து சொல்லான ‘மூளை’தான்  இப்படி   எல்லாம் அதிரைநிருபரில் எழுத சொல்வதும் அதே வகை  மூளைதான்.

பல ஆயிரம் வருஷமா  நமக்கு இருப்பது ஒரே  சைஸ் மூளைதான். இதைக் கொண்டு குதிரையை பிடித்து, பழகி அதன் மீது சவாரி செய்தோம் (இப்போ குதிரை வண்டியை கண்ணு மாசிக்கும் காணோம்). வண்டிகளுக்கு இரண்டு / நான்கு சக்கரங்கள் கண்டு பிடித்ததும் அதே மூளைதான். அதற்கு அடுத்து ஆடுகளை பழக்கினோம் அப்படியே அதனைக் கூட ஆட்டைய போடுவற்கும் பழகினோம். மாடுகளைப் பழக்கினோம், மாட்டுக் கறிக்கும் விற்பதற்கும் மசாலா தடவுவதையும் பார்த்தோம் இவை அனைத்தையும் செய்வது அதே மனித மூளைதான்.

திறந்து  பார்த்தால் ஒண்ணரை கிலோ எடை கொண்ட இந்த மூளைதான் இத்தனை வேலைகளையும் செய்கின்றது. இது மனிதனின் மிக முக்கியமான  உருப்படி. மூளையைப் பாதுகாக்கவே இறைவன் மிக நேர்த்தியாக மண்டை ஓடு படைத்து அதன் உள்ளே இந்த மூளையை மிக  பாதுகாப்பாக வைத்துள்ளான் (சுப்ஹானல்லாஹ்!).

ஆரம்பத்தில் மனிதன்  நம்பவில்லை.மூளைதான் இத்தனை காரியங்களையும் செய்கின்றது என்று, அரிஸ்டாட்டில் சொன்னார்  "இதயத்தில்தான் இருக்கிறது அனைத்து விசயங்களும் ‘மூளை’ - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மட்டுமே” என்றார். அந்த காலத்தில் (அப்போ  அந்த அளவுக்குத்தான் (அவர்களுக்கு) மூளை வேலை செய்துள்ளது).

இன்னும் சொல்லப் போனால் இந்த காலத்திலும் மூளையைப் பற்றிய முழு அறிவு  நமக்கு இல்லை.தற்போது  நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் (எல்லாத்துக்கும் இப்போ கம்ப்யூட்டர் தேவையா போய்விட்டது) உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவருகிறோம். ஆனால், இன்னும் ஏராளமாக பாக்கி  இருக்கு என்பதையும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிக  அதிசயம் என்றால் அது   மனித மூளைதான் (அப்போ அந்த ஏழு அதிசயத்தில் இந்த மூளை கணக்கில் வரதா? ) அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள் உள்ளன. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு தனித்தனியாக இருக்கிறது. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடமாட்டம் (பவர் கட்  இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்)  நம் சிந்தனை! மனிதன்  உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கும் (வட மாநிலங்களில் இருந்தெல்லாம் மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது).

இப்போ உள்ள கம்ப்யூட்டருடன் ஒப்பிட்டால் நம்ம மூளை ரொம்பவே  நிதானம். கம்ப்யூட்டருக்கு இதுகொடுவா மீன் ஆணம், இது கத்தரிக்காய் போட்ட கனவா பெரட்டல், என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியாது. இவை எல்லாவற்றையும் விட இதற்கு மனைவி, மக்கள் கிடையாது. குறிப்பாக பாஸ்போர்ட் கிடையாது (பாஸ் வோர்ட் இருக்கு). இந்த மூளை எப்படியான ஆச்சரியம் என்பதை  அறிந்து கொள்வதற்கு முன் மூளையின் மேல் அமைப்பு, அதன் சைஸ் இவற்றைத்ப் பற்றி கொஞ்சம்  தெரிந்து கொள்வோம்.

ஒரு மனிதனுக்கு சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ எடை இருக்கிறது மூளை அளவுகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது (இங்கையே பிரச்னைகள் தொடங்குகிறது) பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு இதை கேட்டதும் பெண்கள் கோபித்துக் கொள்ள கூடாது குறைவு என்பது அளவில் மட்டும்தான் அறிவில் அல்ல ஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொன்னால்  அது அறிவு பூர்வமான தகவலே அல்ல.

தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது  ஆனால்  மூளை அளவுக்கும்  உடல் அளவுக்கும்   உள்ள உறவு மிக முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். (தலைகனம்தான் கேள்விபட்டுள்ளோம் மூளைக்கனம் இப்போதான் விளங்குது). ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். இதனால்தான் நம்ம ஊரில் உயரம் குறைவானவர்களுக்கு நிரந்தரமாக ஒரு பழமொழி அது நம்ம ஆளுங்க வைத்ததார்களோ !??

மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல வளர்கின்றது இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்து வரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச. ஐட்டங்களை உள் அடக்கியது.

முன் மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன. (என்ன முடிவு அங்கே இருந்தாலும் முதலில் இது போன்ற வாயில் நுழையாமல் பெயர் வைப்பதற்கு ஒரு முடிவு கட்டணும்)

பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா (கொஞ்சம் நிதானமா படிங்க இல்லாட்டி முன் மூளை நிதானம் இழந்துவிடும்) இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனித்தனியா பிரித்து சூப் போட்டுருவோம்.

முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாக லேசா  நோண்டி பார்ப்போம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.

இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும்(பலாப்பழம் ரேஞ்சுக்கு பிரிக்கிறாங்க) பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பெயர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.

இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் (ஆள் காலி என்பது நிச்சயம்) ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன (அதையும் விட்டு வைக்கவில்லை எண்ணி பார்த்துட்டங்க). அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் தான் பிரமிப்பு! ஒரு கன இன்ஞ்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள் உள்ளன. சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி மிகுந்த பகுதியான இடமா இது இருக்கு.

நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ஞ்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும்  அதில் பின்னி பிணைந்துள்ளது இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் (அது சென்னையில் அல்லவா இருக்கு) இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கின்றோம்... கவிதை எழுதுகின்றோம், படிக்கட்டுகள் கட்டு(எழுது)கின்றோம், வரைகிறோம், பாடுகிறோம், பேசும்படத்தை பேசவைக்கிறோம், பொருளாதார கட்டுரைகள் இவை அனைத்தும் இங்குதான் உதிக்கின்றன.

இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் மட்டும்தான் சொல்ல  முடிகிறது. கொஞ்சங்க் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ஞ்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.

குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்கின்றது மேலும் மூளையில் எந்தவித மடிப்புக்களும் இல்லாமல் இருக்கின்றது வயது ஆக ஆக மூளையில் சமாச்சாரங்கள் ஏற ஏற மடிப்புக்கள் விளங்க ஆரம்பிக்கின்றது 

புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாம் என்று மூளை சம்பந்தாட்ட ஆராய்ச்சியாளர்கள்   கருதுகின்றார்கள்.

வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு (தினத்தந்தி செய்தியில் வரும் ஆசாமி அல்ல) கை  கால்  வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக அதை வெட்டிவிட்டார்கள். அந்த ஆசாமிக்கு குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன. நல்ல குணம் போய் கெட்ட குணங்கள் வந்தன இது போன்ற ஆராய்சிகள் எதை காட்டுகின்றது என்றால் இறைவன் படைப்பில் மனிதன் குறுக்கிட்டால் அது பல விபரிதங்களை சந்திக்க வேண்டி வரும் என்பதை மனிதர்களுக்கு உணர்த்துகின்றது.

Sஹமீது

14 Responses So Far:

அதிரை சித்திக் said...

உனக்கு மூளை இருக்கா...என்று தவறு செய்யும் மாணவனை
பார்த்து கேட்கும் வாத்தியார் படிக்க வேண்டிய ஆக்கம் ...
சகோ சாகுல் ..நல்ல பல தகவல்களை...தருகிறீர்கள்
வாழத்துக்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

மூளையின் வடிவத்தை நன்றாக உற்றுக் கவனித்தால் “சுஜூது” செய்து அல்லாஹ்வைப் புகழ்வது போல் தெரிகின்றது அல்லவா?

நினைவாற்றலை மூளைக்குள் வளர்க்க உதவும் உணவுகள்:

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுத் தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளைச் சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளைக் கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மூளைச் சோர்வைத் தடுக்கும்
அன்றாடம் வீட்டுச் சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்புக் காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்

அக்ரூட், திராட்சை
அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்தத் திராட்சைப் பழத்தைத் தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்குச் சுறுசுறுப்பு
நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரைத் தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்களும் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரைச் சாறில் ஊற வைத்துக் காய வைத்துப் பொடிச் செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

பசலைக்கீரை
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நெல்லிக்காய்
மாணவர்கள் நெல்லிக்காய்த் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வைத் தெளிவாகும்.
நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விஞ்ஞானியாக்காவுக்கு மூளை ரொம்ப ஜாஸ்தி!
(அதிலும் அடைப்புக்குறிக்குள் நக்கல்+நகைச்சுவையுடன்)
அப்ப மூளைச்சலவை ப்ரைன்ட் வாஷ் எங்கே பண்ணுராங்க?
--------------------------------------------------------------------------------------------------------

ரபியுள் அவ்வல் 29
ஹிஜ்ரி 1434

அப்துல்மாலிக் said...

நம்ம மூளைக்கேயுரிய குசும்போடு மூளையை பற்றி சொன்ன விதம் அருமை காக்கா

Unknown said...

Assalamu Alaikkum

Detailed nice article on brain.

We may have to reflect that from a single cell inside the mother's womb multiplying itself to a full human child(animal child) with internal system of organs(nervous system including the brain) and external body structure.

And also its amazing to think how a single cell has all the information itself to grow into each part of the body with exact proportion of size and shape, and its functions.

Science has no clear explanation about this but to realize God Almighty's power to create. There are things Allah Subhanah Wathaala created beyond the depth of an atom, which seems nothingness to human perceptions and understanding for now.

Thanks and best regards,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னிடம்...

வேலைக்கு சேர்ந்த புதிதில் (இங்கே) முதலாளி சொல்லக் கேட்டது "அவருக்கு மூளையில்லை"... (1)

சில வருடங்கள் கழித்து சொன்னது... அவருக்கு கொஞ்சமாவது மூளை இருக்கு"... (2)

இன்னும் சில வருடங்கள் கழித்து சொன்னது..."மாஷா அல்லாஹ் ! அற்புதமான மூளை !...." (3)

சமீபத்தில் சொல்வது.... அவரிடமே கேள், அவனுக்கு எல்லாமே தெரியும்... நிறைய மூளை இருக்கு அவரிடம்" (4)

--------------------------

1. அவர் சேர்ந்த புதிதில் எல்லாம் தெரிந்தவரைப் போன்று வகுப்பெடுக்க முயன்றார்...

2.முடிவை கேட்டு கேட்டு எடுத்தார், சீக்கிரம் எந்த வேலையையும் அப்ரூவல் செய்ய மாட்டார்...

3. எந்த வேலையையும் பாராட்ட மாட்டார், குறை காண்பதற்கு குஸ்தி போடுவார், முதலாளி சூடாக இருக்கிறார் என்றால் இவர் விறகு கட்டையை பிடித்துக் கொண்டிருப்பார்...

4. முதலாளியே சொன்னாலும், அவர் சொல்வதுதான் சரி என்று வாதிடுவார் அதற்காக எந்தச் சூழலையும் உருவாக்குவார்....

இப்போ புரிந்திருக்குமே... !!!

அவர்(ருக்கு) = பொது மேலாளர் என்று மனதில் நினைத்துக் கொண்டால் சரியாகிவிடும்

sabeer.abushahruk said...

மூளையைப் படம் வரைந்து பாகங்களைக் குறித்ததுபோல் சொல்வது விளங்குகிறது.

ட்டென் த்துக்கு வகுப்பெடுத்தா பசங்க ட்டென் அவுட் ஆஃப் ட்டென் வாங்கிடுவாங்க.

பரீட்ச்சைக்குப் படிக்கும் உணர்வு வராமல் பத்திரிகைப் படிக்கும் சுவாரஸ்யம் எழுத்தாளரின் வெற்றி.

வாழ்த்துகள்.

Ebrahim Ansari said...

தமிழ் நாட்டின் தென் கோடி மூலையிலிருந்து கொண்டு ( தூத்துக்குடி) மூளை பற்றிய இந்த ஆக்கம் அருமை.

ZAKIR HUSSAIN said...

ஏதோ சூப் கடை சமாச்சாரமாக இருந்தாலும் சூப்பர்தான்.

ZAKIR HUSSAIN said...

ஒரு முறை செமினாரில் பாடம் நடத்துபவர் இடது பக்க மூளை / வலது பக்க மூளையின் செயல் பாடுகளை விளக்கிக்கொண்டிருந்தார். பொருமை இழந்த ஒருவன் உடனே செமினார் ஹாலை விட்டு வெளியேறினான். பாடம் நடத்தியவர் கேட்டார் ' எங்கு போகிறாய்...பாதியில் எழுந்து??' என கேட்டவுடன் . எனக்கு வலது / இடது மூளை எல்லாம் தெரியாது. என் மூளையை உபயோகப்படுத்தினேன்...வெளியேறுகிறேன். அவ்வளவுதான். !!!

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு நண்பன் சாவன்னா, super
மூளை பற்றிய செய்திகள் வியக்கத்தக்கவைகளாக உள்ளன. இதுவே இப்படியென்றால் கோடானு கோடி ஜீவராசிகளைப் படைத்து அண்ட சராசரங்களையும் ஆளக்கூடிய வல்லவனின் பேரறிவும் ஆற்றலும் என்னவென்று சொல்வது.
அது சரி உள்ளம், மனசு என்று சொல்கிறார்களே அது எதைக்குறிக்கிறது? மூளையையா அல்லது இதயத்தையா?

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஒரு ஹதீஸ் ஒன்று உள்ளது அது என்னவெனில் நம் உடம்பில் ஒரு சதைத்துண்டு உள்ளது அது சீராகிவிட்டல் உடல் முழுதும் சீராகிவிடும் அது கெட்டுவிட்டால் உடல் முழுவதும் கெட்டுவிடும் அதுதான் இதயம் என்று கூறப்படுகிறது.
எது சரியோ?
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Yasir said...

அல்லாஹூ அக்பர் என்ன ஒரு வியப்பான படைப்பு,மூளையைப்பற்றி முத்தான தகவல்கள்....நல்லா எழுதியிருக்கீங்க காக்கா

//நிரந்தரமாக ஒரு பழமொழி அது நம்ம ஆளுங்க வைத்ததார்களோ !?// அது என்ன பழமொழி

KALAM SHAICK ABDUL KADER said...

////நிரந்தரமாக ஒரு பழமொழி அது நம்ம ஆளுங்க வைத்ததார்களோ !?// அது என்ன பழமொழி\\

“நெட்டையரை நம்பினாலும் குட்டையரை நம்பாதே” அது தானே?

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு