Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மானிடம் 14

அதிரைநிருபர் | January 26, 2011 | , , ,

சுட்டெரிக்கும் கோடையில்
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ ,மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?

---அப்துல் ரஹ்மான்
----harmys

14 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மூளை ஓர் மூலையில் இருப்பதனாலா ?
மனசு மணங்களை வெண்றிட மார்தட்டுகிறதோ !?

அருமை தம்பி அப்துல் ரஹ்மான் !

abdur rahman said...

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?
மிகவும் அருமையான வரிகள்.
காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் இந்த வரி உணர்த்துகிறது

sabeer.abushahruk said...

ரொம்ப அழகாக புனையப்பட்டிருக்கிறது இந்த கவிதை. மிகவும் நியாயமான அதே சமயம் உண்மையான கவலை தெளிவாகத் தொணிக்கிறது.

ஒரு ரிதம் கூட ரம்மியமாக இழையோடுகிறது.

மனசும் மூளையும் ஒரு சேர எண்ணியபோது மானுடம் வசந்தமென திகழ்ந்த்து. தற்காலத்தில் அப்துர்ரஹ்மான் சொல்வதுபோல தனித்தனியே எண்ணத்துவங்கி சுயநலமே பிரதானமாகப் போய்விட்டது.

சிந்திக்கத்தூண்டும் ஆக்கம். வாழ்த்துகள் தம்பி.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மூளை செயலைத்தூண்டுவது, மனமோ சேவையை தூண்டுவது. மூளை சுயனலம் மிக்கது,பொதுவாய் மனம் பொது நலமும் கொண்டது. மூளையின் செயலும்,மனதின் செயலும் ஒருங்கே பெற்றவர்களே நல்லவர்கள். கூறுகெட்ட மூளையின் முகதிரையை கிழித்ததும்,மனத்திரையின் உள்ளே நல் எண்ணம் இருப்பதும் உணர்த்தப்பட்ட விதம் அருமையோ அருமை. அப்துற்றஹ்மான் இயற்றிய கவிதையிலேயே இதுவே தலையாய கவிதை அதற்காக என் பாரட்டு கிரீடம் அணிவிக்கிறேன்.
முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம்?
என்று கேள்வி கேட்டு மனிதாபிமானத்தின் விலையென்ன என்ற அபிமானம் கேட்ட ரஹ்மானிடம் நான் கேட்பதெல்லாம் இது போல் கவிதை நித்தம் நீ படைத்திடனும் என்பதே!

Unknown said...

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் மானிடம் பற்றி அழகான படபிடிப்பு!
அப்துர் ரஹ்மான் காக்கா உங்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ள கவித்திறனையும் மனிதாபிமானத்தை கவிவரிகள் சொல்கிறது.காக்கா இன்னும் தொடருங்கள்.

ZAKIR HUSSAIN said...

To Bro Harmy,


//முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?//

பணம் சம்பாதிக்க இந்த உலகம் கற்றுத்தரும்...வாழ்வதற்கு பெரியவர்கள்தான் கற்றுத்தர வேண்டும் என்ற உண்மை நம்மிடமிருந்து விலகிப்போனதால்..மனத்தோடு சேராத மூலை உருவானது.

மரணமும், வறுமையும், நோயும் இந்த நிஜ உலகத்தின் ட்ரைலர் சினிமா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அருமை சகோதரர் அப்துல் ரஹ்மான், மனிதபிமானம் விலைப்போனதா? காணாமல் போனதா?

அங்கே இங்கே இன்று தேடினாலும் இறுதியில் மனதுக்கு மூளைக்கும் ஒற்றுமை ஏற்படுத்த ஒரே வழி முறையானது இஸ்லாமிய வாழ்க்கையே.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
அருமையான சிந்தனை கவிதை

மூளை என்னதான் சிந்தித்தாலும் முடிவுகள் மனதில் இருந்து வந்தால்
அது எப்போதும்
நல்ல முடிவாக இருக்கும்

ஆனால் தற்போதைய கால சூழ்நிலையில் முடிவுகள் அனைத்தும் மூளையில் இருந்தே வருகின்றன
மனம் ஒரு மூலையில் முடங்கி விட்டது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மனசு / மனம் என்றால் = இதயம் பேசுகிறது அப்படித்தானே ?

சிலரிடம் இது இல்லையாமே !? - மெய்யா ?

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
//மனசு / மனம் என்றால் = இதயம் பேசுகிறது அப்படித்தானே ?

சிலரிடம் இது இல்லையாமே !? - மெய்யா ?//


அஸ்ஸலாமு அழைக்கும்
சிலரிடம் உள்ளது
பலரிடம் இல்லை
என்பது தான் உண்மை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சிலரிடம் உள்ளது
பலரிடம் இல்லை
என்பது தான் உண்மை//

அலைக்குமுஸ் சலாம் (Sஹாமீத் காக்கா),

ஒருவேளை அவர்களின் இதயங்களி பறி கொடுத்து விட்டார்களா ? அல்லது திருடப்பட்டுவிட்டதா ? அல்லது இருப்பதை பதுக்கி வைத்திருக்கின்றனரா ?

இப்படியும் சிலர் : "என் இதயம் என்னவளிடம்" ஆக என்னிடம் ஒன்றுமில்லையென்று !

அப்படின்னா "என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்" சொல்றாய்ங்களே ? இதற்கு முன்னர் இதயம் காயாக இருந்ததா ?

இது கவிதை மேடையாதலால் இப்படிச் சொல்லிட்டேன்..

என் இதயத்தில் குடில் கட்டியிருப்பவர்களே.. பொருத்தருள்க !

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

//என் இதயத்தில் குடில் கட்டியிருப்பவர்களே.. பொருத்தருள்க !//

அஸ்ஸலாமு அழைக்கும்

நாம் நெட்டில் குடில் கட்டி
இதயத்தில்
மாளிகை
கட்டிகொண்டுள்ளோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நாம் நெட்டில் குடில் கட்டி
இதயத்தில்
மாளிகை
கட்டிகொண்டுள்ளோம்//

அங்கே தொட்டில் கட்டி ஊஞ்சலாட காத்திருக்கும் கலக்கும் கவிஞர்களே உங்கள் யாவரின் காதில் விழவில்லையா ?

Unknown said...

அசலாமு அழைக்கும் ..................
அபு இபுராஹிம் ,சபீர்,ஹமீது ,ஜாகிர் ஆகிய காக்காமார்களுக்கும் ,
சகோ தாஜுதீன் ,அப்துல் ரஹ்மான் ,தஸ்தகீர் ஆகியோர்ருக்கும் ,தம்பி ஹிதாயாதுல்லாவிர்க்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு