மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தன்மைகள் என்ற அருமையான பதிவைக் கண்டதும் அதிரைநிருபரில் சென்றவருடம் ஜனவரி 26 அன்று சிறகு வரிகளால் வருடும் மென்மைக் கவிதை வடிக்கும் சகோதரர் அப்துல் ரஹ்மான் எழுதிய கவிதையை நினைவூட்டலாக இங்கே மீள்பதிவு செய்கிறோம்...
- அதிரைநிருபர் குழு
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........
அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ ,மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....
வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?
-அப்துல் ரஹ்மான்
-harmys
23 Responses So Far:
அன்பின் நண்பர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அப்துல் ரஹ்மான் அவர்களின் மீள் பதிவாக வெளியிடப்பட்டுள்ள கவிதை மனதை மிகவும் பாதித்துவிட்டது.
இதோ இன்னொரு கவிதை எழுதியவர் யார் என்று நான் குறிக்கதவறிவிட்டேன்.
இந்த கவிதையும் மனிதனின் மன வக்கிரங்களை சொல்கிறது. உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அது இதுதான்.
அங்கீகரிக்கப்படாத ஆடம்பரத்தின்
விரயங்களை
முட்புதரென வளர்த்துக் கொள்கின்றீர்
வெயில் சாட்டையடிக்கும் முதுகுகளில்
பெருகும்
வியர்வை வெள்ளத்தில்
மூழ்கும் வாழ்வின் மீட்பிற்காக
நீளும் கடைசிநேரக் கைகளைக் கூட
புறந்தள்ளிப் போகின்றீர்
அடித்துக் கொல்லும் வறுமையின்
கனத்த தடிகளைத் தகர்த்து
ஒரு துளிர் தளிர்க்க
ஒரு கை நீரள்ளி
ஊற்றத் தயங்குகின்றீர்
கூரைகளற்ற குடிசைகளின்
உணவற்ற பாத்திரங்களில்
நிரம்பியிருக்கும்
பழந்தண்ணீரில் வாழும்
மனித வடிவங்களை
பார்க்கும் கண்ணற்றீர்
பசிப்பாதையில்
நடந்து நடந்து வருத்தமுற்ற
பாதங்களுக்கு
நிழல்தர
கள்ளிச்செடியாகவேணும்
இல்லாமல் போனீர்
துயருரும் மனிதனை விடுத்து
கண்ணில்லா கடவுளுக்கு
எண்ணில்லா காசு தரும் உங்களுக்கு
மனிதர் என்று
பெயருமுண்டோ சொல்லீர்
- யாரோ.
வஸ்ஸலாம்.
இபுராஹீம் அன்சாரி.
மனம் பண்பட்டால் - பிறர்
மனம் புண்படாமல் வாழலாம்
மனதைப் பணடுத்தவே
மஹ்மூத் நபி (ஸல்)
மண்மீது அவதரித்தார்கள்
புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம்
பொய்யுலகி னாசையிலே மூழ்கிப் போனோம்
மனிதமானம் என்னவென்றுத் தெரியாக் காயம்
மலையேறிப் போனதிங்கு மனித நேயம்
“வண்ணத்துப்பூச்சி” கவிதையிலேயே அப்துற்றஹ்மானின் எண்ணத்தின் மென்மையினை உணர்ந்தேன். அக்கவிதையினைப் படித்த நினவலைகள் ஓயாமல் இருந்ததனால், என்னுடன் பணியாற்றும் தோழரின் மகளுடையப் பள்ளிகூடத்தில் ஆங்கிலக் கவிதைப் போட்டிக்கு என்னிடம் ஒரு poem எழுதிக் கேட்ட நேரத்தில் உடனே BUTTERFLY என்ற தலைப்பில் POEM எழுதிக் கொடுத்தேன்; அந்த அளவுக்கு மனதை வருடும் சிறகு வரிகள் அப்துற்றஹ்மானின் கவிதைகள்!
//மனதைப் பணடுத்தவே// தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்
மனதைப் பண்படுத்தவே என்றுத் திருத்தி வாசிக்கவும்
சூப்பரு! அதுராமான்.
மனித நேயம் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு அருமையான கவி வடிப்பு.
மனமும் மூளையும் ஒருங்கிணைந்து முன்புபோல் போற்றத்தக்க மனிதத் தன்மையுடன் வாழ்வோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நல்ல கருத்து எழுதச் சொல்லுகிறது மூளை உடனே எழுதச் சொல்லுகிறது.
ஆனால் எழுத முடியவில்லை காரணம் சகோ.அப்துர்ரஹ்மான் மீள் பதிவை பார்த்ததும் பாதித்தது மனம்.
மூளையும் மனமும் ஒருங்கிணைந்து செயல் பட மனிதத்தன்மையை உணர்ந்திடுவோம். நபி வழியில் வாழ்ந்திடுவோம்
மூளைக்கும் மனதுக்குமிடையே நடக்கும் போராட்டத்தை வாழ்கையின் ஓட்டத்துலே சொல்லப்பட்டகவிதை அருமை, மீள் பதிவானாலும் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி...
அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர் ரஹ்மானிடம் மானிடம் பற்றி கேட்டாள் அதை செயலிலும் , கவியிலும் காட்டிடுவதில் ( ந)வல்லவர்!மானிடம் தேடித்தேடி அலைந்தாலும் இமான் இருக்கும் இடமே மனிதாபிமானம் இருக்கும். வேலையின் சுழலில் மூழ்கியிர்ந்த என்னை ரஹ்மானின் மானிடம் தேடல் இங்கே இழுத்துவந்து கருத்திட வைத்தது.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!அதிரை நிருபர் என்னும் அறிவுக்கடலில் கால் நனைக்காது போனாலே அறிவில் சில இழந்தது போலாகிவிடுகிறது.
என்ன(டா)ப்பா !! கிரவ்ன்(னு):
ஆளையேக் கானோம் !?
பதில் தா(டா)ப்பா !
கவிதையும் கரு மாதிரியே ! அதோடு லெ.மு.செ.(அ) சொன்ன மாதிரி மூளை கேட்கச் சொல்லுது மனசும் தேடுது(டா)ப்பா !
அஸ்ஸலாமு அலைக்கும்.
// என்ன(டா)ப்பா !! கிரவ்ன்(னு):
ஆளையேக் கானோம் !? //
கவிதை விசயத்தில் அ.நி. வாசகர்களை அரள வைத்த ( அர அல ) வுக்கு அரண்டு போய் இருக்கலாம் கிரவ்ன் .
மனித இனத்தின் அவலங்களைப் பற்றி பலர் கவலைப்பட்டாலும் அப்துர் ரஹ்மானால் மட்டுமே
அழகாக
கவலைப்பட முடியும்.
வாழ்த்துகள் ஹார்மீஸ்.
//வேலையின் சுழலில் மூழ்கியிர்ந்த என்னை ரஹ்மானின் மானிடம் தேடல் இங்கே இழுத்துவந்து கருத்திட வைத்தது//
அப்துர்ரஹ்மானின் தூண்டிலுக்கு நன்றி. இப்பதான் அப்பாடான்னு இருக்கு. நலம்தானே?
//பசிப்பாதையில்
நடந்து நடந்து வருத்தமுற்ற
பாதங்களுக்கு
நிழல்தர
கள்ளிச்செடியாகவேணும்
இல்லாமல் போனீர்//
கள்ளிப்பழம் தின்ற ஞாபகம் வருகிறது. பசிப்பாதை ஒரு வித்தியாசமான வார்த்தை.
பகிர்வுக்கு நன்றி இ.அன்சாரி காக்கா.
யாசிர்/அபு இபுறாஹிம்/தாஜுதேன்,
ஜபல் அலியிலிருந்து வந்தாச்சா?
உள்ளூர்க்காரரின் நெடுஞ்சாலை:
முன்னால் சென்ற வாகனத்தை
முந்த வேண்டியிருந்தது
சாந்தப் பார்வையைச்
சற்றே உயர்த்தி
உக்கிரமாய் இருமுறை
மேல்நோக்கி
கண்சிமிட்டிப் பார்த்தேன்
எருமைமேல் மாழையென
எந்தவித சலனமு மின்றி
சென்றது அந்த வண்டி
உள்ளூர்க்காரர்போலும்
செந்நிற எனது
இடது மினுக்கள்களை சிமிட்டிக்கொண்டே
அதிவேகத் தடத்திற்கு மாறி
முன்சென்று
வலது மினுக்களோடு
மிதவேகத் தடத்திற்கு
மீண்டு வந்தேன்
ஏனோ
தோற்றுவிட்டத் தொணியோடு
அதே வண்டி
அலறிக்கொண்டே
தாறுமாறாக
மெதுவானத் தடவழி
அதிவேக உந்துதலோடு
என்னைக்
கடந்து சென்றது
உள்ளூர்க்காரர்தானோ?!
தொடர்ந்த பயணத்தில்
நெடுஞ்சாலையில்
பலர்
சிவப்பு விழிகளை
சிமிட்டிக்கொண்டு நிற்க
அதே அவர்
உடைந்து உருக்குலைந்து
எண்ணெய்விட்டு அழுதுகொண்டிருந்தார்
உள்ளூர்க்காரரேதான்!!!
sabeer.abushahruk சொன்னது…
//வேலையின் சுழலில் மூழ்கியிர்ந்த என்னை ரஹ்மானின் மானிடம் தேடல் இங்கே இழுத்துவந்து கருத்திட வைத்தது//
அப்துர்ரஹ்மானின் தூண்டிலுக்கு நன்றி. இப்பதான் அப்பாடான்னு இருக்கு. நலம்தானே?
------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நலம் நலமறிய ஆவல்( ஏக்கம்).
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
மீள் பதிவுக்கும் ,கருதிர்ற்கும் நன்றி .........
வாழ்கையில் சோதனைகளையும் ,அவமானங்களையும் ,அனைத்திலும்
தோல்விய மட்டும் தன் சர்ச்சைக்குரிய நடவடிக்கையால் சந்தித்து இறைவனிடம்
சென்றடைந்த என் தந்தையிடம் .....
இந்த கவிதையில் சொல்லப்பட்ட அணைத்து நல்ல மன குணங்கள் என் தந்தையிடம் இறுதிவரை
இருந்ததை நான் வியந்து பார்த்ததுண்டு ........அதன் தாக்கம் தான் இந்த கவிதை
அல்லாஹ் போதுமானவன்
//இந்த கவிதையில் சொல்லப்பட்ட அணைத்து நல்ல மன குணங்கள் என் தந்தையிடம் இறுதிவரை
இருந்ததை நான் வியந்து பார்த்ததுண்டு ........அதன் தாக்கம் தான் இந்த கவிதை//
நெகிழ வைத்தது... !
விழியோரம் கசியும் ஈரத்தை அறியாமலே துடைத்தேன் !
//எருமைமேல் மாழையென
எந்தவித சலனமு மின்றி
சென்றது அந்த வண்டி
உள்ளூர்க்காரர்போலும்///
கவிக் காக்கா, வூட்டு போற வழி நெடுகிலும் கவிதை எழுத உதவிய அந்த உள்ளூர்காரர் உறவுக்காரராக இருக்கப்போறாரு !
மண்ணின் மைந்தர்கள் எவ்வளவோ தேவலை காக்கா, ஆனா தன்னோட ஆட்சியாளரை தோல்பட்டையிலும் முதுகிலும் சுட்ட நாட்டுக்கு காரனுவோ இருக்காய்ங்களே....
அது ஏன் காக்கா ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்தா மட்டும் மானிடம் மல்லுக்கட்டுகிறது !
இதுநாள் வரைக்கும் அதுதான் என்னான்னு தெரியலை !
//தொடர்ந்த பயணத்தில்
நெடுஞ்சாலையில்
பலர்
சிவப்பு விழிகளை
சிமிட்டிக்கொண்டு நிற்க
அதே அவர்
உடைந்து உருக்குலைந்து
எண்ணெய்விட்டு அழுதுகொண்டிருந்தார்
உள்ளூர்க்காரரேதான்!!!//
ஓ இதுதான் முன்னுக்கு பின் முரணா ?
கிரவுனும் சேர்ந்து விட்டதால் [ வந்து விட்டதால் ] இனிமேல் தமிழின் ஆட்சி அதிகமாக இருக்கும்.
ஹார்மியின் கவிதைக்கு நாளை எழுதுவோம் கருத்து...
மீள் பதிவானாலும், படிக்க படிக்க தெவிட்டாத கவிதை...மனதில் குதுகலத்தை உண்டாக்கும் வரிகள்
//முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?//
Brain always analyses reason, மனம் தான் தர்மம் செய்யும்
/முன்னால் சென்ற வாகனத்தை
முந்த வேண்டியிருந்தது.... /// தினமும் எமிரேட்ஸ் ரோடில் நான் அனுபவித்து வரும் வேதனையை கவிதையாய் வடித்து இருக்கின்றீகள் காக்கா.......இரண்டு நாள் முன்னர் கூட உள்ளுர்காரர் 200km வேகத்தில் பறந்த கார்....இரும்புவேலியில் மோதி அதிலயே மோனோ ரயில் போல பயணம் செய்து....லேண்ட் குருஷர்....கிரஷர்ல போட்ட கருங்கல் போல சுக்கு நூறாகி...அவருடைய “ரிஸ்ஜ்க்கை” அவரே முறித்து கொண்டார்
நண்பன் அப்துல்ரஹ்மானுக்கு,
உயிருடன் இருக்கும் சமயம் உன் வாப்பா பற்றி சொல்லமறந்த சேதி
அவர்கள் மரணித்தபின் இப்படி கவியாய் மலர்ந்து நிற்கிறது.
வாழ்த்துக்கள்.
இக்கவிவரிகளை படித்ததும்
மூளை அப்துல்ரஹ்மானை நேரில் காண தூண்டுகிறது
நேருக்கு நேர் காணவே தூண்டுகிறது ஆனால்
மனமோ எனக்கும் அவனுக்கும் இருக்கும் தூரத்தை கணக்கிட்டு ஏனப்பா உனக்கு வேண்டாத ஆசை என்று சொல்லி அமைதிபடுத்திவிடுகிறது.
(அதாவது மூளைக்கும், மனசுக்கும் ஒன்றுக்கொன்று கோஆப்பரேசன் இல்லை என சொல்லவந்தேன்)
Post a Comment